Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயும் அமெரிக்காவும் அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vikramabahu_Karunaratne150C.jpg

யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் நோர்வேயும் அமெரிக்காவும் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும். இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு முதன் முறையாக விண்ணப்பித்தும், அனுதாபரீதியிலாவது அதிகப்படியான வாக்குகள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. 47 அதிகப்படியான வாக்குகளை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு நாட்டிற்குள் இல்லாததால் 27 வாக்குகளே இலங்கைக்கு கிடைத்துள்ளன எனவும் அரசாங்கத்தின் பாவத்திற்கு நாடும் மக்களும் தலைகுனிந்துள்ளனர் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51958&category=TamilNews&language=tamil

இது ஒரு தவறான கருத்து,இந்தியா செய்த சதியால் ஒரே நாளில் பல இலட்சம் உயிர் காவு போனது யாருக்கும் வேதனைதான்.இதை எவராலும் யீரணிக்க முடியாது.இப்படி நடந்த அவர்களின் அவலசாவு தான் இன்றைய நிலைக்கு காரணம்.இதன் பின்ணணியில் முழுமூச்சாக உழைத்த பிரபல தமிழ் அமைச்சரரும் இலங்கையில் வகைதொகையின்றி பினாமிகளின் பெயர்களில் சொத்து குவித்து வைத்திருக்கும் ப.சிதம்பரத்தை ஒருவழி பண்ணுங்கள்!அந்த ஆட்சியை வழிபண்ணுங்கள்! இனிமேல் இந்தியாவில் இந்தபெயரில் ஒருகட்சி இருக்கவேகூடாது.இதுதான் இறந்த உயிர்களுக்கு சமர்பணம்.இன் நிலையில் இந்தியாவை வளரவிடாது தோலுரித்து காட்டபட்டுள்ளது.இனிமேல் தமிழர் பிரச்சனையில் எப்படி தீர்வு வந்தாலும் இந்தியாவின் ஆலோசனை தேவைப்படாது என்பதும் கோடிடபட்டுள்ளது.இது ஒரு பெரிய பரிணாம வளர்ச்சிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.