Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமான நகர்வுகள் அவசியம்: கொழும்புக்கு அமெரிக்கா மீண்டும் அழுத்தம்

Featured Replies

மீள்நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமான நகர்வுகள் அவசியம்: கொழும்புக்கு அமெரிக்கா மீண்டும் அழுத்தம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் மோசமான மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்துமாறு சிறிலங்காவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைப் பாதுகாப்புச் செயலர் Robert M. Scher காலியில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து அமெரிக்கா தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறது என்பதை இம்முறை தனது சிறிலங்காப் பயணத்தின் போது தான் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருதரப்பு நலன்கள் மற்றும் கடற்படை சார்ந்த பாதுகாப்புக் கூட்டுச் செயற்பாடு குறித்து நான் சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளேன். அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் மக்களுடனான மீள்நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமானதும் முன்னேற்றகரமானதுமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை அமெரிக்கா கோருகின்றது என்பதை இச்சந்திப்பின்போது தெளிவுபடுத்த உள்ளேன்.

அத்தோடு இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிக அவசியமானது.

தமது நலன்களைப் பகிர்கின்ற சக்திகளுடனும் உறவைப் பேணும் அதேவேளை, மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் நிபந்தனை அடிப்படையிலும் உறவைப் பேணும் கொள்கை நெறியினை அமெரிக்கா பின்பற்றும் என்பதை ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இரண்டு கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. இவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாக இருப்பது அவசியமானது எனவும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைப் பாதுகாப்புச் செயலர் Robert M. Scher சுட்டிக்காட்டியுள்னமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை விரைவில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அவ் அறிக்கை எவ்வகையான பரிந்துரைகளை முன்வைக்கும் என்பதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை கொண்டுள்ளது.

இவ் அறிக்கை வெளியாவதற்கு முன்னான காலப்பகுதியில் இது தொடர்பான அழுத்தங்களை மேற்கு நாடுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=c61bc547-07f0-4213-8a23-add7bef690b8

  • தொடங்கியவர்

Remarks as Prepared to the Galle Dialogue, Sri Lanka By Robert M. Scher, Deputy Assistant Secretary of Defense for South and Southeast Asian Affairs : http://srilanka.usembassy.gov/sp-14nov11.html

உங்கள் கருத்துக்களை பதியுங்கள் , எனது கருத்து பதியப்பட்டுள்ளது :

The international community must be united in its criticism of Sri Lanka’s conduct in the north and east and that SL President Mahinda Rajapaksa would not be welcomed internationally unless conditions there improved.

Tamil people have been mistreated and are continuing to lack – across the board – fundamental freedoms, dignity, etc.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.