Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேமதாச நோர்வேயை நாடினார்

Featured Replies

புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த பிரேமதாச நோர்வேயை நாடினார்

விடுதலைப் புலிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச நோர்வேயின் உதவியை நாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தோற்றுப் போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 1990 ஜூனில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நோர்வேயின் உதவியை பிரேமதாச நாடியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையில் நீண்டகாலம் வசித்த நோர்வேயின் அரசியல்வாதியான ஆர்னே பியோரொவ்வை, அப்போதைய இலங்கை வெளிவிவ கார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் சந்தித்துப் பேசியிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் சார்பிலேயே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். போர்க் கைதிகள் தொடர்பாக நோர்வேயின் ஆதரவுடன் ஜெனீவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் ஒரு இரகசிய சந்திப்பை மேற்கொண்ட போதும், அதில் எதிர்பார்க்கப்பட்ட எந்த முடிவும் எட்டப் படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளத.

உண்மையில் இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வெளி யேறிய பின்னர் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே சேவையாற்றியதாகவும் இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. பின்னர் சந்திரிக்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கடைப் பிடிக்கப்பட்ட போது, கனடா, நெதர்லாந்தை உள்ளடக்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தலைமையேற்க நோர்வேக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தான இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 1995 ஏப்ரலில் இந்தப் போர் நிறுத்தம் முடிந்து போன பின்னரும் இலங்கை அரசின் முக்கிய அதிகாரிகளும், ஆலோச கர்களும் நோர்வேயின் தலையீட்டை வலியுறுத்தி வந்துள்ளனர். நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ஜெகான் பெரேரா, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1999 இல் கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக நடத்தப்பட்ட பரஸ்பர கலந்துரையாடலை அடுத்து நோர்வே தெரிவு செய்யப் பட்டது. ஏற்றுக் கொள்ளத்தக்க மூன்றாவது தரப்புகள் பற்றி விளக்கமளிக்குமாறும் அத்தகைய ஐந்து நாடுகளின் பட்டியலை தயாரித்து வழங்குமாறும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளிடம் கேட்டுக் கொண்டார். புலிகள் வழங்கிய அந்தப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் இருந்தது. அதன் பின்னர் சந்திரிக்கா குமாரதுங்க நோர்வேயை தெரிவு செய்தார்.

லக்ஸ்மன் கதிர்காமருடனும், ஜி.எல்.பீரி சுடனும் நோர்வேஜியர்கள் 1999இல் பல இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டனர். இவற்றில் பெரும்பாலானவை சுவிற்சர்லாந்தில் நடைபெற்றன. சந்திரிகா குமாரதுங்கவுடன் கூட இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றதாகவும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே வேளை 1990 ஜூன் இரண்டாவது வாரத்தில் போர் வெடித்த பின்னர், நோர்வேயின் தலையீட்டின் கீழ் புலிகளுடன் பேச்சு நடத்தும் எந்த முயற்சியிலும் பிரேமதாச ஈடுபடவில்லை என்று அரசியல் வட்டா ரங்களை மேற்கொள்காட்டி தி ஐலண்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.valampuri...ws.php?ID=25161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.