Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழ் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கி நாட்டுக்கு அழைக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hemmer-04-150x150.gif

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றை பிரித்தானியாவில் சட்ட விதிமுறைக்கு அப்பால் தடுத்து வைத்தமைக்காக பிரித்தானிய உள்நாட்டுச் செயலாளர் 37 ஆயிரம் பவுண்களைக் குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பி வாழ அனுமதிக்கபபட வேண்டும் என்றும் பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும் என்று பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இலங்கைக் குடும்பம் முன்னர் வடக்கு லண்டனில் வசித்து வந்தநிலையில், அந்த குடும்பத்தினர் சட்டரீதியற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்றனர்.

இது தொடர்பாக வழக்கு பிரித்தானிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதன்போது குறித்த குடும்பத்துக்கு பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் 37ஆயிரம் பவுண்ஸை நட்டஈடாக வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகை எதிர்வரும் 28 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. நீதிபதி Justice Cranston இன் தீர்ப்பின்படி குறித்த இலங்கை குடும்பத்தின் தலைவரான கணவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவரின் மனைவி 14 மற்றும் 23 வயதுகளை கொண்ட அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் பிரித்தானியாவுக்கு திரும்ப உரித்துடையவர்களாவர்.

இந்தக் குடும்பத்தினர் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் பிரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

http://www.tamilthai...newsite/?p=1215

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.