Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்யப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படடுள்ளார்!

Featured Replies

தங்காலைச் சம்பவம்: ரஸ்யப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படடுள்ளார்! - ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு!!

தங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜை குராம் ஸமான் ஷேய்குடன் கூடவிருந்த ரஸ்யப் பெண் விக்டோரியா அலெக்ஷாந்துவானா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படடுள்ளதாக ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

நத்தார் தினத்தன்று தங்காலை சுற்றுலா விடுதி ஒன்றில் பிரித்தானிய பிரஜை குராம் ஸமான் ஷேய்க் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது 23 வயதான ரஸ்ய தோழி விக்டோரியா அலெக்ஷாந்துவானா தாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சிறிலங்கா பொலிஸார் சென்ற போது விக்டோரியா அலெக்ஷாந்துவானா நிர்வாணமாகக் கிடந்ததாகவும், அவர் காயமடைந்த நிலையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்hளர்.

அத்துடன், இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒன்றின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தான் இதனைக் குறிப்பிடுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கும், இச்சம்பவம் குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்பாலியல் வன்முறைச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் முயற்சித்துள்ளதாக பசில் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, பாலியல் வன்முறைச் சம்பவம் குறித்து ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை எனவும், இறுதி மருத்துவ அறிக்கையின் பின்னரே இது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் எனவும் சிறிலங்கா பொலிஸாரின் குரல்தரவல்ல அதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விக்டோரியா அலெக்ஷாந்துவானா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவ செலவுகளை சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தங்காலை பிரதேசசபைத் தலைவர் சம்பத் விதான பத்திரன கொலைச் சம்பவத்துக்கு முன்னர் குறிப்பிட்ட பிரித்தானியப் பிரஜையுடனும், அவருடனிருந்த ரஷ்ய பெண்ணிடமும் மோதலில் ஈடுபட்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பி.பி.சி.க்குத் தெரிவித்திருந்ததுடன், இவர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f67c3d0b-e596-4f4e-802b-c119e102d616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.