Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக விசாரணைகளுக்கு அவசியமாம்! - ஐ.நா.விடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற சிறிலங்கா முயற்சி!

Featured Replies

உள்ளக விசாரணைகளுக்கு அவசியமாம்! - ஐ.நா.விடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற சிறிலங்கா முயற்சி!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் இருக்கின்ற ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, இப்போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் கையளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த ஆதாரங்களும், வாக்குமூலங்களும் அவசியமானவை என சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளுக்கு தடையாக அமையக் கூடாது என சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவோர், இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல மற்றும் எழுத்து மூலமான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் 20 ஆண்டுகளுக்கு வெளியிடக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் தொடர்பில் மிக உயர்ந்தபட்ச இரகசியம் பேணப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஆதாரங்கள் பெறப்பட்டதாலும், இவை பகிரங்கப்படுத்தப்பட்டால் சாட்சியம் வழங்கியவர்கள் உயிராபத்துக்கு உள்ளாகலாம் என்பதாலும், இந்த ஆதாரங்களை 20 ஆண்டுகளுக்கு வெளியிடக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவிடம் 2,300 பேர் 4,000 சாட்சியங்களை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த ஆதாரங்களும், வாக்குமூலங்களும் தேவை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையிடம் உள்ள இந்த ஆதாரங்களை அபகரிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=db0451bf-87e8-4cf7-98e7-9a2dd457416d

  • தொடங்கியவர்

Alleged war crimes:SL wants UN to lift embargo on evidence

The government expects the UN to lift an unprecedented 20-year embargo on both written and oral material in its hands pertaining to alleged war crimes committed by GoSL troops and the LTTE to help domestic investigations into complaints.

Authoritative sources told The Island that those sceptical of a domestic investigation process as recommended by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) should make available whatever evidence in their possession to facilitate inquiries.

A UN imposed embargo shouldn’t be an obstacle to Sri Lanka’s inquiry, ministerial sources said.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=42464

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.