Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் எனப்பிரித்து வெவ்வேறு சிறைகளில் அடைப்பு!!! தமிழ்நாடா!? இல்லை சிங்கள நாடா!? – ம.செந்தமிழ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

akathikal1.jpg

யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் இருந்து நேற்று படகு மூலம் புறப்பட்டு இராமேஸ்வரம் சென்ற எட்டுப்பேரை இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் கடலில் வைத்து கைது செய்து கோட்டைப்பட்டின காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில் அறந்தாங்கி நீதிமன்றத்தால் இந்திய கடவுச்சீட்டு சட்டம் 1920 இன் 3வது பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக எமது செய்தியாளர் தெரிவிக்கையில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது கடவுச்சீட்டு சட்டத்தை காரணம் காட்டி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆண்களை திருச்சி சிறையிலும் பெண்களை தஞ்சாவூர் மகளீர் சிறையிலும் சிறுவர்களை புதுக்கோட்டை சீர்திருத்தப் பள்ளியிலும் சிறைவைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் மூன்று குழந்தைகள் என தஞ்சம் கேட்டு வந்த ஈழத்தமிழர்களை சிறையிலடைத்து ராஜபக்சேவின் எண்ணத்தை தமிழகத்தில் நிறைவேற்றியுள்ளது கொலைவெறி பிடித்த சோனியா தலைமையிலான இந்திய அரசு.

இந்த பேரதிர்ச்சியான செய்தியை கேட்டவுடன் உள்ளமெல்லாம் பதறியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தப்பித்தவர்களில் ஆண்களையும் இளைஞர்களையும் யுவதிகளையும் தனியாகப் பிரித்து வதைமுகாமிற்கு அனுப்பிவிட்டு பெண்களை தனியிடத்திலும் குழந்தைகளை வேறொரு இடத்திலுமாக சிறைவைத்து தாயையும் பிள்ளையையும் பிரித்து கொடூரத் தாண்டவம் ஆடிய சிங்களன் ராஜபக்சே அரசின் இனத்துரோக செயற்பாட்டிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

சிங்களத்தின் தமிழின அழிப்பு போர் எல்லைகடந்து இன்று தமிழகம் வரை விரிவாக்கம் அடைந்துள்ளதற்கு அன்றும் இன்றும் சிங்கள அரசிற்கு துணைபோகும் இந்திய அரசுதான் காரணம் என்பதனை சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இதில் வேதனை என்னவென்றாள் இந்த செய்தி அறிந்தவுடனேயே இப்படித்தான் நடக்கும் என்பதனை நாம் ஊகித்து செய்தியாக்கியும் இன்று தொடர்ந்து மேலதிக தகவல்களை பெற்று வழங்கியிருந்தோம். நாம் அச்சப்பட்டவாறே நகழ்வுகள் நடந்தேறிவிட்டது. இத்தனைக்கும் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் ஈழ ஆதரவுத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் எந்தத் தலைவர்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்பதுதான். அதிலும் வேதனை என்னவென்றால் இவர்களிற்கு இந்த செய்தி தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

அறந்தாங்கி நீதிமன்றத்தில் பணியாற்றும் தன்மானத் தமிழர்களாக விளங்கும் சில வழக்கறிஞர்களது முயற்சியில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள தமிழக வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில்… தமிழக வரலாற்றில் இதுவரைகாலமும் இல்லாதவகையில் ஈழத்தமிழர்கள் மீது போடப்பட்ட அதி பயங்கரமான வழக்கு இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டப்பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்கு பிரிவின்படி 5ஆண்டு சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரொக்கப்பிணையும் குறைந்தபட்ச தண்டனையாக கிடைக்க வாய்ப்பிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க மத்திய அரசின் தூண்டுதலினால்தான் இதுவரைகாலமும் இல்லாத வகையில் இவ்வளவு தீவிரம் காட்டப்பட்டு இந்த வழக்குப்பிரிவின் கீழ் கைது செய்து அதுவும் தனித்தனியாகப்பிரித்து சிறைவைக்கப்பட்டடுள்ளதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் சோனியா தலைமையிலான இந்திய மத்திய அரசு தெரிவிப்பது இந்தியாவிற்குள் நுழைந்தால் தனிமைச்சிறைதான் பரிசாக கிடைக்கும் என்பதே. இந்த கடுமையான நடவடிக்கை மூலம் ஈழத்தில் இருந்து தொடர்ந்து ஏதிலிகளாக தமிழர்களை வரவிடாமல் தடுத்து சிங்கள அரசை காப்பாற்றுவதற்கு ஆகும்.

சிறிலங்காவில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறி அனைத்துலக நாடுகள் ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கையில் தமிழகத்திற்கு தஞ்சம்கோரி ஈழத்தமிழர்கள் வருவது அந்த நிலையினை மீளாய்வு செய்யவும் சிங்களத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் கூடும் என்பதாலேயே இத்தனை கரிசனை கொண்டு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய மத்திய அரசு.

தமிழகத்தில் தற்போது ஆட்சிசெய்துவரும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்திய மத்திய அரசிற்கு எதிரான தளத்தில் இருந்து ஆட்சி செய்வதால் அவரிற்கு நெருக்கடிகள் கொடுத்துவருகின்றது. முல்லைப் பெரியாறு பிரச்சினையினை இந்த அடிப்படையில்தான் கிளப்பிவிட்டுள்ளது. தற்போது ஈழத்தமிழர்களிற்கு எதிராக அதுவும் தமிழகத்தில் இவ்வாறான அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளதன் மூலம் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

உடனடியாக தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள தலைவர்களும் இந்த விடையத்தில் தலையிட்டு தீர்வைக்கண்டு இன்னல்களை போக்கி தஞ்சம் தேடிவந்த தொப்புள்கொடி உறவுகளை காப்பாற்ற வேண்டும் என்று உலகத்தமிழர்களின் சார்பாக ஈழதேசம் இணையம் கேட்டுக் கொள்கின்றது. இந்த விடையத்தில் தமிழகத் தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையினை கிளப்பிவிட்டு புலிவாலைப்பிடித்த கதையாக மூச்சுத்திணறிவரும் காங்கிரசு அரசு இந்த விடையத்தை வைத்து திசைதிருப்ப முயலலாம். அதனால் தமிழர்களின் வாழ்வுரிமையினை கேள்விக்குள்ளாக்கும் விடையங்களான தமிழக மீனவர்கள் பிரச்சினை கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினை முல்லைப்பெரியாறு பிரச்சினை என்பவற்றை மறந்துவிடாது இந்தவிடையத்தையும் கையிலெடுத்து போராட வேண்டும்.

தமிழகம் தமிழ்நாடா!? இல்லை சிங்கள நாடா!? என்ற அய்யப்பாடடை போக்கி தமிழகம் தமிழ்நாடுதான் என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது தமிழக அரசினதும் தலைவர்களினதும் தலையாய கடமையாகும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ்(06-01-2012)

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.