Jump to content

போரினால் பாதிக்கப்பட்ட பலர் வாழ, ஒரு முறை உதவுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

ஒரு காலையும், கையையும் இழந்த ஒருவருக்கும், அங்கவீனமான அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தம்மையும் உறவினரையும் தமது உழைப்பில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஐந்து பெண்களுக்கும், உதவி தேவையாக இருக்கிறது. இவர்களுக்கு சிறு தொழில் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. சிறிய தென்னந்தோட்டத்தில் வரும் வருமானமும், கோழி வளர்ப்பும் இவர்களுக்கு சாத்தியமான தொழில்களாக இருக்கின்றன. தேவையான பணத்தின் அளவு பற்றி இன்னமும் கணக்கிடவில்லை. உங்களால் உதவ முடியுமானால் தொடர்பு கொள்ளுங்கள். பணஉதவி மட்டுமல்ல, தொழில்துறை சார்பான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது முதல், தொழில்நுட்ப அறிவு, தொழிலை நட்டமடையாமல் வருமானம் வரக்கூடிய வகையில் நடத்துவதற்கு உதவுதல், போன்றவற்றில் பங்களிப்பு செய்ய முடிந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.

நாம் கொடுக்கும் பண உதவி மீள செலுத்தப்பட்டு, அங்குள்ள தேவையான மற்றவர்களுக்கும் உதவும் வகையிலான ஏற்பாட்டிலேயே இந்த உதவிகள் செய்யப்படுகின்றன. நீங்கள் ஒரு முறை ஒருவருக்கு செய்யும் உதவி, அங்கு தேவையான பலருக்கும் மீளவும் மீளவும் பயன்படவுள்ளது. தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.

மின்னஞ்சல் (s.suba@tgte.org) மூலம் அல்லது தொலைபேசி (1 (781) 492-2212)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.