Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் படையினரால் நிறுத்தப்பட்டது

Featured Replies

காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் படையினரால் நிறுத்தப்பட்டது

கடத்தல் - காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி யாழ்பாணத்தில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் சிறிலங்கா படையினரின் அழுத்தங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இன்று (17-01-2012) காலை 10 மணியளவில் யாழ் பேருந்து நிலையம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு கொழும்பில் இருந்து சென்ற நாம் இலங்கையர் அமைப்பாளர்களை சிறிலங்கா படையினர் வவுனியாவிலும் ஓமந்தையிலும் தடுத்தி நிறுத்தியுள்ளமையாலேயே இந்த ஆர்பாட்டம் நடைபெறவில்லை என அறியமுடிகின்றது.

இது குறித்து Naatham-Tamil News Circle செய்திச் சேவையின் வவுனியா செய்தியாளர் தெரிவிக்கையில்:

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் புதிதாக சோதனைச் சாவடியமைத்து யாழ்ப்பாணம் சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து வைத்தததுடன் சோதனைகளையும் நடத்தினர்.

இதன்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் ஆதரவாளர்கள் மற்றும் நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்கள் பயணித்த பேரூந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வந்த அனைத்து வாகனங்களும் கனகராஜன்குளம் மற்றும் புளியங்குளம் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டது. காலையில் இருந்து மாலைவரை போக்குவரத்து சீராக இடம்பெறாமையினால் பலரும் தமது பயணத்தை நிறுத்தி மீள திரும்பி சென்றதுடன் சிலர் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியேற்பட்டது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணம் செல்லவிருந்தவர்கள் இரவு 7 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பியனுப்பப்பட்டதாக நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க கடந்த 40 நாட்களில் வெள்ளை வான்கடத்தல்களால் எண்மர் காணாமல் போயுள்ளனர். கடந்த சில வருடங்களில் வடக்கு கிழக்கில் மட்டும் 500

பேர் வரை காணமல் போயிருப்பதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிலேமரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மட்டும் 500 பேர் 2005-2009 ஆண்டு காலப்பகுதியில் காணமல் போயுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f888d08b-b305-4bba-aa72-2f969765f6cd

தொடர்புபட்ட செய்தி:

ஆர்ப்பாட்டத்துக்காக யாழ். சென்றவர்கள் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் தடுத்து நிறுத்தம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.