Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச குடும்பத்தினர் - அரசியல் சட்டத்திற்கும் மேலானவர்கள்

Featured Replies

[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:08 GMT ] [ நித்தியபாரதி ] MAHINDA_BROKEN.jpgஐரோப்பாவைப் பொறுத்தளவில் இவ்வாறானதொரு சூழலை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அண்மையில் ஐரோப்பாவில் உயர் தகைமையைக் கொண்ட இருவர் ஏமாற்று மற்றும் அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் அவர்கள் இதுவரை பெற்ற நன்மதிப்புக்கள் மற்றும் உயர்பட்டங்கள் என்பவற்றை இழந்துள்ளனர்.

இவ்வாறு Radio Netherlands Worldwide - RNW ஒலி, ஒளிபரப்பு நிறுவனத்தின் இணையததளத்தில் Dheera Sujan எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2010 டிசம்பர் மாதத்தில் இரு இளைய சட்டத்துறை மாணவர்கள் தமது பரீட்சைக்காக அமர்ந்திருந்தார்கள்.

இதில் ஒரு மாணவன் மண்டபம் நிறைந்த ஏனைய சட்டத்துறை மாணவர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறார். இந்தப் பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளரால் கண்காணிக்கப்பட்டனர். அதாவது இந்தப் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் தொலைபேசிகள், இலத்திரனியற் கருவிகள், மற்றும் ஏனைய ஏமாற்றும் வழிமுறைகளை உபயோகிக்கின்றனரா என்பதை பரீட்சை மேற்பார்வையாளர் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

மற்றைய மாணவன், குளிரூட்டி பொருத்தப்பட்டிருந்த தனி அறை ஒன்றிற்குள் கூட்டிச் செல்லப்பட்டார். இந்த அறைக்குள் இணையத் தொடர்புடன் கூடிய கணிணி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறிப்பிட்ட மாணவன் தொலைபேசியை பரீட்சை அறைக்குள் எடுத்துச் செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கும் மேலாக, இவரிற்கு பரீட்சையில் உதவுவதற்காக அல்லது அதற்கும் மேலாக பரீட்சையில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இவர் படித்த சட்டக் கல்லூரியைச் சேர்ந்த இரு ஆசிரியர்களும் குறித்த பரீட்சை அறையில் இருப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

ஐரோப்பாவைப் பொறுத்தளவில் இவ்வாறானதொரு சூழலை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அண்மையில் ஐரோப்பாவில் உயர் தகைமையைக் கொண்ட இருவர் ஏமாற்று மற்றும் அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் அவர்கள் இதுவரை பெற்ற நன்மதிப்புக்கள் மற்றும் உயர்பட்டங்கள் என்பவற்றை இழந்துள்ளனர். ஆனால் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிலங்காவில் இவ்வாறான எந்த நடவடிக்கைகளும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படுவதில்லை.

இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட மாணவன் வேறுயாருமில்லை. சிறிலங்காவைத் தற்போது ஆட்சி செய்யும் குடும்பத்தின் வாரிசும், தீர்மானம் எடுக்கின்ற அதிகாரமுள்ள இளவரசருமான நாமல் ராஜபக்சவே இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டாவது மாணவனாவார்.

முதலில் குறிப்பிடப்பட்ட மாணவன் டி.எம்.துசார ஜெயரத்ன ஆவார். நாமல் ராஜபக்ச பரீட்சை விதிமுறைகளை மீறியதற்கு எதிராக துசார ஜெயரத்ன எனற இச்சட்டக் கல்லூரி மாணவன் வழக்குத் தாக்கல் மேற்கொண்ட போது, சிறிலங்கா சட்டக் கல்லூரியிலிருந்து இவரது சட்டத்துறைப் பட்டத்திற்குத் தேவையான பரீட்சைத் தாள் ஒன்றும் நீக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அமைதியாக இருக்குமாறு துசாராவிற்குக் கட்டளை இடப்பட்டதுடன், அவருக்கு எதிராக கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருப்பதற்கு துசார விரும்பவில்லை.

இவர் இது தொடர்பாக சட்டக் கல்லூரிக்கு முறைப்பாட்டை வழங்கினர். அத்துடன் மனித உரிமைகள் ஆணையகம், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் என்பவற்றிற்கு இது தொடர்பாக விண்ணப்பங்களை வழங்கினார். பி.பி.சி சிங்கள சேவைக்கு துசார இது தொடர்பாக நேர்காணல் ஒன்றை வழங்கிய பின்னர், அது வரையில் நீடித்த நிலைமை உண்மையில் தலையிடியாக மாறத் தொடங்கியது.

அதிலிருந்து துசாராவிற்கு அச்சுறுத்தல் பாணியிலான பல தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்தன. இத் தொலைபேசி எண்கள் தொடர்பாக துசாரா ஆராய்ந்த போது அவை சிறிலங்கா காவற்துறைக்குச் சொந்தமான பல்வேறு நிலையான மற்றும் செல்லிடத் தொலைபேசிகளிலிருந்து வந்த அழைப்புக்கள் என உறுதிப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக துசார உரிய முறையில் காவற்துறையிடம் முறைப்பாடு செய்ய முயற்சித்தார். ஆனால் அவரது இந்த முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா காவற்துறையினர் மறுப்புத் தெரிவித்தனர். பின்னர் துசாராவின் வீட்டிற்கு வந்த சிறிலங்கா காவற்துறையினர் அவரிடம் ஒரு தொகுதி ஆவணங்களைக் காட்டி அதில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தினர்.

ஆனால் அவற்றை வாசிப்பதற்கான அனுமதியை அவர்கள் துசாராவிற்கு வழங்கவில்லை. அத்துடன் அவற்றில் கையெழுத்திடுமாறும் எச்சரிக்கை செய்ததுடன், அவ்வாறு கையெழுத்திடாவிட்டால் துசாராவின் வீட்டிற்கு வெளியே வெள்ளைக் கொடி தொங்க விடப்படும் எனவும் சீருடையில் வந்த அதிகாரிகள் அச்சுறுத்தினர். [வீடொன்றின் முன் வெள்ளைக் கொடி தொங்க விடப்பட்டால் அங்கோ மரணம் நிகழ்ந்துள்ளது என்பதைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய முறையாகும்]

துசாரா இரு தடவைகள் கடத்தப்பட்டுள்ளார். முதற் தடைவை 11 மணித்தியாலங்கள் வரை அவர் தடுத்துவைக்கப்பட்டார். துசாராவிற்கு உடல் ரீதியான துன்புறுத்தல்கள் முதற்தடைவ வழங்கப்படாத போதிலும், மருத்துவம் செய்யுமளவிற்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது தடவையாக, இவர் கடத்தப்பட்ட போது, கடத்தியவர்கள் அமைதியாக இருந்துவிடவில்லை. உடல் ரீதியாக துசாரா தாக்கப்பட்டார். இவர் கட்டியிருந்த சறம் அவிழ்ந்து விழும் அளவிற்கு அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. அதிலிருந்து இவரால் சரியாக நித்திரை கூடக் கொள்ள முடியாதுள்ளது.

இதேவேளையில், துசாராவின் தந்தையாரின் மூளையிலிருந்து இரு தடவைகள் இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவர் வாய் பேச முடியாதவராக உள்ளார். இவரது தாயார் ஏற்கனவே Parkinson நோயாளி ஆவார். இந்நிலையில் தான் வீட்டை விட்டு வேறிடம் போவது மிகச் சிறந்தது என துசாரா தீர்மானித்துக் கொண்டார். கடந்த ஏப்ரலிலிருந்து இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றார்.

இவரது அயலவர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் துசாரா தொடர்பாகத் தகவல்கள் கேட்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். "சிறிலங்காவில் உள்ள ஒவ்வொருவரும் அந்நாட்டு அரசாங்கத்தால் பீதியடைந்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக எந்தச் செயலையும் முன்னெடுக்க அவர்கள் துணியமாட்டார்கள்" என துசாரா தெரிவிக்கின்றார்.

துசாரா தற்போது மிகமோசமான, பாதி வாழ்க்கையே வாழ்கின்றார். பட்டதாரியாகவோ அல்லது தொழில் தேடுநராகவோ இவரால் வாழமுடியாதுள்ளது. இதை விட இவர் தனது குடும்பத்தைச் சென்று பார்வையிட முடியாதவராக உள்ளார். இவர் கற்ற கல்லூரி இவரை மீளவும் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் அவரால் அங்கும் செல்ல முடியாதுள்ளது.

இவர் தற்போது பாதுகாப்பாக நித்திரை கொள்வதற்கான தங்குமிடத்திற்கும், தன்னை உயிர் வாழ வைப்பதற்கான உணவைப் பெறுவதற்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும், மனித உரிமை ஆர்வலர்களிலும் தங்கியுள்ளார். 'நான் ஒரு பிச்சைக்காரன்' என துசாரா தெரிவிக்கின்றார்.

துன்புறுத்தல்கள் முடிவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் துசாரா தனது கதையை மீண்டும் மீண்டும் ஊடகங்களிடம் எடுத்துக் கூறுகின்றார். ஆனால் வல்லமை பொருந்திய கோலியாத்தை எதிர்த்து நிராயுதபாணியாக நின்ற டேவிட் என்ற சிறுவனைப் போல துசாராவை நினைக்காமல் இருப்பதென்பது மனதிற்கு கடினமானதாகும்.

அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவை குடும்ப அதிகார நாடாக மாற்றியுள்ளார். இவரது சகோதரர்கள் மற்றும் மகன்மார் பாதுகாப்பு, பொருளாதார முகாமைத்துவம் ஆகிய அமைச்சுக்களின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் ராஜபக்சக்களில் ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகராவும், ஏனையோர் இராணுவ மற்றும் கடற்படைகளின் அதி உயர் பதவிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவரது உறவினர்கள் தூதர்களாகவும், மாகாண சபை அரசியல்வாதிகளாகவும், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளைக் கட்டுப்படுத்துகின்ற உயர் வணிகர்களாகவும் உள்ளனர். அதிபரின் மூத்த மகனும், மேலே கூறப்பட்டவாறு பரீட்சையில் கலந்து கொண்டவருமான நாமல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஆனால் துசாரா இவர்களிற்கு வேறு பெயர்களைக் குறிப்பிடுகிறார். 'அவர்கள் குற்றவாளிகள், காடையர்கள்' என துசாரா கூறுகின்றார். "சிறிலங்காவில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டும் என நான் விரும்புவதால், இந்த நாட்டை விட்டு நான் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை" எனவும் துசாரா தெரிவித்துள்ளார்.

"இந்நாட்டின் அதிபர் விதிவிலக்கைக் கொண்டுள்ளார், ஆனால் அவரது மகன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது, இருந்தும் எனது விடயத்தில் நாமல் ராஜபக்சவும் பாதுகாக்கப்பட்டுள்ளார், ஆகவே இவர் காடையனாக இருப்பதை விட வேறொன்றாகவும் இருக்க முடியாது" எனவும் துசாரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.