Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்ககள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற வேண்டும்! - ஸ்டீபன் ராட்னர்

Featured Replies

போர்க்குற்றங்ககள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற வேண்டும்! - நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீபன் ராட்னர் மீண்டும் வலியுறுத்தல்!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பேராசிரியர் ஸ்டீபன் ராட்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை நடத்துவதன் மூலமே, இலங்கையில் சமாதானத்தையும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனவும் ஸ்டீவன் ராட்னர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இராஜதந்திரிகள் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளின் அவசியம் குறித்து அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை சர்வதேச சமூகத்தின் ஒருபகுதி வலியுறுத்தி வரும் நிலையிலேயே இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் இடம்பெறறதாக தெரிய வருகின்றது.

இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பெர்லெய்ன், கனேடிய நிரந்தரப் பிரதிநிதி எலிஸா கொல்பேர்க், பிரித்தானிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் கொடஹாம், நோர்வேஜிய நிரந்தரப் பிரதிநிதி ஸ்டீபன் கொங்ஸ்ராட், பிரான்ஸ் நிரந்தரப் பிரதிநிதி ஜீன் - பப்ஸ்ரி மத்தி, ஜேர்மனின் நிரந்தரப் பிரதிநிதி ஹான்ஸ் சூமேச்சர், அவுஸ்திரேலிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் வூல்கொட், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மேரி அஞ்சலா சப்பியா, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளரின் செயலகப் பிரதிநிதி றொரி மொங்ரோவன், சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்ரர், ஆசிய அமைப்பின் பிரதிநிதி பூஜா பட்டேல், மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி பிலிப்பி டாம், சர்வதேச நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி அலெக்ஸ் கொன்டே, சர்வதேச உலக நோக்கின் பிரதிநிதி பெரிஸ் கைன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் தாருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் எல்லாவிதமான சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=c4490634-1e55-4b80-9285-05307c9c0cf5

  • தொடங்கியவர்

கென்ய அரசியல் வாதிகள் மீது சர்வதேச நீதிமன்றம் குற்றப் பத்திரிகை

கென்யாவில் 2007 அதிபர் தேர்தலை அடுத்து நடந்த இன மோதல்களின்போது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அந்நாட்டின் நான்கு அரசியல் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கென்யாவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்த உஹுரு கென்யாட்டா, வில்லியம் ருடோ ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் அடங்குவர். தேர்தல் முடிவு தொடர்பாக இனக்குழுக்கள் இடையே வன்முறைகளை தூண்டிவிட்டார்கள், மோதல்கள் நடக்க வழிசெய்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கென்யாவில் 1992ல் பலகட்சி அரசியல் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அங்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் இனக் குழுக்கள் இடையிலான வன்முறை அரங்கேறுவதுண்டு. ஆனால் 2007 தேர்தலின் பின்னர் அங்கு நடந்த வன்முறை வெறியாட்டம் என்பது முன்பில்லாத மிகப் பெரிய அளவில் இருந்தது. அந்த மோதல்களில் குறைந்தபட்சம் 1200 பேர் உயிரிழந்திருந்தனர். சுமார் மூன்றரை லட்சம் பேர் இடம்பெயர நேர்ந்தது. இந்த வன்முறைகளுக்காக கென்யாவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

கென்யாவில் குற்றவாளிகள் தொடர்ந்தும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கும் ஒரு நிலையை முடிவுக்கு கொண்டுவரவும், எதிர்காலத்தில் அந்நாட்டில் தேர்தல்கள் அமைதிகரமாக நடைபெறவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தித்தின் நடவடிக்கைகள் உதவும் என கென்ய மக்கள் பலர் நம்புகின்றனர்.

http://www.alaikal.com/news/?p=94736

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.