Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே - தமிழ் திரைப்பட விழா 2012

Featured Replies

நோர்வே - தமிழ் திரைப்பட விழா - 2012

முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா.

சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

Norway Tamil Film Festival - 2012

Date: 2012-04-25 at 12:00 pm

Address: -, Oslo, - Norway-

Norway Tamil Film Festival - 2012 Tamilar Awards

Tamil cinema today is a benchmark for several other film industries in India and this initiative we are sure will ensure the reach of Tamil films across the globe even among non-Tamil speaking people. This festival is an attempt to bring Tamil films in to the limelight. There are already festivals held across the world, such as Cannes, the Dubai Film festival and the South Asian Film festival.

But this is the first one dedicated to Tamil films.

Edited by akootha

  • தொடங்கியவர்

நார்வே தமிழ் திரைப்பட விழா 15 தமிழ்ப் படங்கள் தேர்வு

தமிழ் சினிமாவுக்கென்றே சர்வதேச அளவில் நடக்கும் நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் – 29-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வசீகரன் இசைக்கனவுகள், அபிராமி கேஷ் அண்ட் கேரி ஆதரவோடு, இம்முறை நார்வேயைச் சேர்ந்த அமைப்புகள் சில இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

இதுகுறித்து திரைப்பட விழா குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ள இந்த நார்வே தமிழ் திரைப்பட விழா குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இதில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தங்கள் படங்களை போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களுடைய படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள், திரைப்பட விழா குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து 15 படங்களை குளோரியா செல்வநாதன் (ஜெர்மனி) தலைமையிலான 7 பேர் கொண்ட நார்வே தமிழ் திரைப்பட விழா குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தேர்வாகியுள்ள படங்கள்:

நார்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2012

01.அழகர்சாமியின் குதிரை

02.வெங்காயம்

03.வாகை சூடவா

04.கோ

05.ஆரண்ய காண்டம்

06.தீராநதி – பிரான்ஸ்

07.எங்கேயும் எப்போதும்

08.போராளி

09.மயக்கம் என்ன

10.பாலை

11.உச்சிதனை முகர்ந்தால்

12.வர்ணம்

13.மகான் கணக்கு

14.ஸ்டார் 67 (Star 67 – கனடா)

15.நர்த்தகி

இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் குறித்த விவரம் வரும் 25.02.2012 அன்று வெளியாகும். இந்த விழாவில் தமிழர் விருதுக்கான போட்டியில் பங்குபெறாமல், விசேஷ பிரிவில் சுபாஷ் கலியன் இயக்கிய பாலம் கல்யாணசுந்தரத்தின் ஆவணப்படம், அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான பச்சைக்குடை போன்ற படங்கள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது. இந்த முயற்சி முழுமையான வெற்றியை அடைய, இந்தி சினிமாவின் உலகளாவிய வீச்சு மற்றும் வர்த்தகத்தை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா படைப்புகள் அமைய, தமிழ் சினிமாவின் அனைத்து படைப்பாளிகளையும், துணை நிற்குமாறு வேண்டுகிறோம்.

இந்த திரைப்பட விழா என்பது ஏதோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று எண்ணாமல், தமிழ் சினிமாவை கவுரவப்படுத்தும், உலக அளவுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் கருதி இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

http://www.alaikal.com/news/?p=95716

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.