Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள் அரசியலை செய்வதில்லை

Featured Replies

'எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை. ஐதேகவுடன் எமக்கு கடும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதுபற்றி மறைப்பதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஐதேகவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக எமது பொது எதிரியான இந்த மக்கள் விரோத மஹிந்த அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாடுகளை என்னால் ஒருபோதும் எடுக்க முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டுகளை வாங்கிகொண்டு மேயர் முஸம்மில் ஹாஜியாரின் கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு என்னால் துணை போக முடியாது. இந்த அரசியல் முதிர்ச்சியும், நேர்மையும் என்னிடம் இருக்கின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மேயர் முஸம்மில், பிரதி மேயர் டைடஸ் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஜமமு குழுத்தலைவர் வேலணை வேணியன் உட்பட கட்சியின் ஆறு மாநகரசபை உறுப்பினர்களும், அனைத்து ஐதேக உறுப்பினர்களும் இணைந்து கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் விசேட உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:

கொழும்பு மாநகரசபையின் கடந்த நிதிக்குழு கூட்டத்தில் நடந்தது துரதிஷ்டவஷமானது. சில ஐதேகவினர்; அரசிற்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்கள். இது முகத்துடன் கோபித்துகொண்டு மூக்கை வெட்டிக்கொள்ளும் வேலையாகும். இது தவறு. நான் எவருக்கும் அஞ்சி அரசியல் செய்யும் கோழை இல்லை. எனது நிலைப்பாடுகளை எவரது முகத்திற்கு முன்னாலும் எடுத்து சொல்லும் வல்லமை எனக்கு இருக்கிறது. இங்கே ஐதேக தலைவர் அமர்ந்து இருக்கிறார். நான் சிங்களத்தில்தான் பேசுகிறேன்.

இங்கே மறைத்து பேசுவதற்கு எதுவும் கிடையாது. கடந்த பொது தேர்தலின் பின்னர் ஐதேகவுடன் எங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு தீர்க்கமானது. உண்மையில் எங்கள் கட்சி இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐதேகவை பழி வாங்கி இருக்கலாம். அந்த அளவிற்கு எமக்கு ஐதேகவுடன் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் நாம் அதை செய்யவில்லை. ஐதேகவை பழி தீர்க்கப்போகிறேன் என்று சொல்லி அரசாங்கத்திகு ஆதரவாக செயற்பட்டு எமது கொள்கைகளுக்கும், மக்களுக்கும் நாம் துரோகம் செய்யவில்லை. ஐதேகவுடனான முரண்பாடு என்பது வேறு, அரசுடனான முரண்பாடு என்பது வேறு. இரண்டும் வௌ;வேறு பிரச்சினைகள். இரண்டையும் போட்டு குழப்பி, தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, கோமாளி அரசியல் செய்பவன் நான் அல்ல.

முழு நாட்டையும் வெற்றிபெற்ற அரசாங்கத்திற்கு கொழும்பை வெற்றி பெற முடியாமல் போனது பெரும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் அவர்கள் கொழும்பு மாநகரசபையில் மேயர் முஸம்மிலின் நிர்வாகத்தை சீர்குலைத்து விசேட ஆணையாளர் ஆட்சியை கொண்டு வர சதி செய்கிறார்கள். இதற்கு உங்களில் எவராவது துணை போனால், நீங்கள் அனைவரும் கூண்டோடு வீட்டுக்கு போக வேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அங்கத்தவர்கள் கட்சி மாறி வாக்களிப்பதும், கட்சி மாறுவதும் இலங்கை அரசியலில் சகஜம். அது உங்கள் கட்சியிலும் நடந்தது. எங்கள் கட்சியிலும் நடந்தது. ஜேவிபி, கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிலும் நடந்தது. கட்சிகளை மாற்றிக்கொள்ள யாருக்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் கட்டி வைக்க முடியாது. யார் போனாலும் நான் அலட்டிக்கொள்வது இல்லை. இப்போது இருப்பவர்கள் போனாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் யார் போனாலும் அல்லது புதிதாக எவர் வந்தாலும் எனது கொள்கைகள் மாறவில்லை. கொழும்பு மாவட்ட மக்கள், குறிப்பாக கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் என்னை நம்புகிறார்கள். நான் மக்களை நம்புகிறேன். ஆகவே எவருக்கும் என்னுடனும், கட்சியுடனும் இருக்கும்வரைக்கும்தான் மரியாதை.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது மேயர் முஸம்மிலும், நானும் கூட வேட்பாளர்கள் என்ற முறையில் சண்டை போட்டுக்கொண்டோம். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் நலன் கருதி புரிந்துணர்வுடன் செயல்படுகிறோம். இது ஜனநாயகவாதிகளின் இலட்சணம். ஆனால் சில அரசியல்வாதிகள் என்னைப்பற்றி எக்கச்சக்க குரோதத்துடன் பேசுகிறார்கள். இவர்களுக்கு என் மீது எக்கச்சக்க கொலை-வெறி. 'வை திஸ் கொலைவெறி' என எனக்கு தெரியவில்லை. பைத்தியம் பிடித்துள்ள இவர்களுக்கு வைத்தியம் செய்ய எனக்கு நேரமும் இல்லை.

யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் இந்த மஹிந்த அரசாங்கத்தில் இருந்துவிட்டு, தேர்தல் சமயத்தில் இதொகாவிலிருந்து ஐதேகவிற்கு புதிதாக வந்து சேர்ந்த தேசிய பட்டியல் எம்பி யோகராஜன் பெரிய கதைகள் பேசினார். தேர்தல் முடிந்தவுடன் மனோ கணேசன் அலரி மாளிகைக்கு சென்று அரசாங்கத்துடன் இணைந்து பதவி பிரமாணம் எடுக்க போகிறார் என்று பிரச்சாரம் செய்தார். ஐதேகவிற்கு மனோ கணேசனின் ஆதரவு தேவை இல்லை என்று தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை எழுதி அனுப்பினார். இப்போது அவரது தலைவர் என் பக்கத்தில் இதோ அமர்ந்து இருக்கிறார். ஆனால் அந்த சீடரைதான் இங்கே காணோம்.

உண்மையில் கொழும்பு மாவட்ட ஐதேக எம்பி மோகன்லால் கிரேரோ என்பவர்தான் இந்த தேர்தலுக்கு பிறகு அலரி மாளிகைக்கு சென்று ஏதோ கல்வித்துறை கண்காணிப்பு மந்திரி என்று பதவி பிரமாணம் செய்துள்ளார். நான் இருந்த இடத்தில் இருந்தபடி ஐதேகவின் ஒரே ஒரு மாநகரசபை ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றேன். அந்த ஆதரவை ஐதேக தலைவரும், மேயரும் எழுத்து மூலமாக எம்மிடம் கோரினார்கள். நாம் வழங்குகிறோம். எமது ஆதரவின் முக்கியம் நிர்வாகம் நடத்தும் மேயர் முஸம்மிலுக்கு தெரியும். கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியை எவராலும் அழிக்க முடியாது என்பதை இதன் பிறகாவது இந்த கொலைவெறிக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே முரண்பாடுகள் இருக்கலாம். அதை பேசி தீர்த்து கொள்ளுங்கள். அதற்காக சொந்த வீட்டையே நெருப்பு வைத்து கொளுத்த முயற்சி செய்யாதீர்கள். சொந்த வீடு என்பது தாய் வீடு. அரசியலில் ஒரு அங்கீகாரத்தையும், பதவியையும் பெற்றுத்தந்த தாய் வீட்டையே கொளுத்திவிட்டால் பிறகு காட்டிற்கு சென்றுதான் வாழ வேண்டிவரும்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.