Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : அம்மான்னா சும்மா இல்லடா!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலுவலகம் முடிந்து வீடு வந்த போது, அம்மா வாசலில். பார்சல் ஒன்று வந்திருக்கு என்று சிரித்தார்! புத்தகங்கள் தான். அதனால் தான் அந்த நமுட்டுச்சிரிப்பு. உடைத்தோம்! டிஸ்கவரி புக் ஷாப்பில் இருந்து, நம்ம சவால் சிறுகதை போட்டி பரிசு. என்னடா ஒரு மாசம் ஆயிட்டுதே, வந்து சேரலையே என்று கவலை. ஆதி, பரிசிலிடம் tracking number கேட்டு தொல்லைப்படுத்தவும் இஷடமில்லை. பார்த்து, ஏமாந்து, ஏதலித்து இறுதியில் here you go...

ஆவலுடன் ஒவ்வொரு புத்தகமாய் வாசம் பார்த்தேன்.

2012-01-31%25252018.11.19_thumb%25255B9%25255D.jpg?imgmax=800

கி.ராஜநாராயணனின் “கரிசல் காட்டு கடுதாசி”

நிலாரசிகனின் “வெயில் தின்ற மழை”

பாஸ்கர் சக்தியின் “கனக துர்கா”

கலாப்ரியாவின் உருள் பெருந்தேர்

பிரபஞ்சனின் “தாழப் பறக்காத பரத்தையர் கொடி”

இவற்றோடு வாழ்த்துச்செய்தியும் இன்னொரு கவிதையாய்! கரிசல் காட்டு கடுதாசி கடந்த முறை ஆன்லைனில் வாங்க நினைத்து இறுதிநேரத்தில் “Revolution 2020” க்கு மாறியிருந்தேன். இப்போது இவர்கள். Things destined to happen.

ஆதிக்கும் பரிசிலுக்கும், நடுவர்களுக்கும், உடான்ஸ் திரட்டிக்கும், டிஸ்கவரி புக் பலஸுக்கும் நன்றிகள். புத்தகங்களை எனக்கு கிடைத்த பரிசாக பார்க்கமுடியவில்லை. என் தளத்தை மழைக்கு ஒதுங்கும் சமயத்தில் பார்த்து இவனுக்கு நாலு புத்தகம் அனுப்பி வாசிக்க வைக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. என் பதிவுகள் இவர்களை சென்று அடையும் காலம் எப்போதாவது வரலாம். வராமலும் போகலாம். எழுத ஆரம்பித்தபோது, நான் ஓரளவுக்கேனும் எழுதுகிறேனே, ஏன் கவனிக்கப்படவில்லை என்று நினைப்பதுண்டு! நோபல், புலிட்சர் பரிசுகளை அள்ளிக்கொண்ட “Disgrace” நாவலை தற்செயலாக வாசிக்கும் வாய்ப்பு. முடிக்கும் தருவாயில் ட்ரெயின் ஸ்டேஷனுக்கு வந்து விட்டது. ஸ்டேஷன் வாங்கில் இருந்து அரைமணிநேரம் கிடு கிடுவென வாசித்து விட்டு, வேகமாக வீடு வந்தேன். நேராக பாத்ரூமிக்கு போய் கண்ணாடியில் பார்த்தேன்.

இனியும் எழுதுவ நீயி?

காறித்துப்பலாம் தான். அதை உங்களிடம் விட்டுவிடுகிறேன். இல்லை இது தாண்டா எழுத்து என்று ஆதியும் பரிசிலும் காட்டுவது போல இப்படி புத்தகங்கள் அனுப்பலாம். அப்படித்தான் மயூரதன் “The Namesake” அறிமுகப்படுத்த அதற்கு பின் நான் என்ன ஆனேன் என்பது இங்கே! ஸோ திட்டுங்கள், குட்டுங்கள். எதுவானாலும் நான் இருகரம்!

வாசிக்கவேண்டும். அதில் குறைவில்லை. பின்னேரம் அம்மாவும் நானும் எங்கள் குட்டி லைப்ரரிக்கு முன்னே உட்கார்ந்து பேசும்போது, என் பாட்டி சாகும் வரை வாசித்துக்கொண்டே இருந்தார் என்ற ஒரு புது விஷயம் சொன்னார். எனக்கு பாட்டியை தெரியாது. அம்மாவுக்கு கறி அடுப்பில் இருந்து இறங்கிய மறுகணமே “சுஜாதா குறுநாவல்கள்” கையில். லைப்ரரியில் இருக்கும் தமிழ் புத்தகங்கள் எல்லாம் முடித்துவிட்டார். “உங்கள் ஸ்பீட் எனக்கு வராது. வேணுமெண்டா இங்கிலீஷ் புக்ஸ் வாசியுங்க” என்றேன் நக்கலாக. “அதெல்லாம் சரிவராது. ஸ்லோவாக தான் வாசிக்கவேண்டும். சனியன் புரியவும் மாட்டுது” என்றார் சீரியஸாக. மலைத்துப்போனேன். அவரின் அந்த பதிலுக்குள் அது முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. ட்ரை பண்ணினால் முடியும் என்ற நம்பிக்கையும் கூட. இத்தனைக்கும் அம்மா வாசிக்கும் புத்தகங்களுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்கமாட்டார். அண்மையில் தான் கடல்புறா வாசித்துவிட்டு ஒரே ஒரு வரி சொன்னார்.

“அடச்சே… முடிந்துவிட்டதே”

அன்ரன் பாலசிங்கத்தின் “போரும் சமாதானமும்” மட்டும் ஏனோ சீண்ட மாட்டார். வியாழ மாற்றத்திலும் அரசியல் வேண்டாம். சும்மாவே நீ இரண்டும் கெட்டானா எழுதுவ. பகிடிய பகிடியா எடுக்கமாட்டினம் என்றும் அட்வைஸ் சொன்னார். மனமில்லாமல் தான் இந்த வாரம் எழுதினேன். கடைசியில் பார்த்ததால் எனக்கு மிகவும் திருப்தி தந்தவியாழ மாற்றம் இது தான். வியாழ மாற்றத்தில், அதுவும் satire ஆக இலக்கியம் எழுதுவேன் என்பதெல்லாம் சான்சே இல்லை. அம்மா வாசித்துவிட்டு “இது தாண்டா வேணும். கம்பரையும் காளமேகத்தையும் இப்படியும் அறிமுகப்படுத்தலாம்” என்று சொல்ல, “எப்படி காளமேகம் உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டேன். “அது நான் கேட்கவேண்டிய கேள்வி” என்றார்!! Dangerous அம்மா!

03_thumb%25255B9%25255D.jpg?imgmax=800

இந்தப்படம், அக்கா ஒருவரின் திருமணம். எனக்கு ஞாபகம் இல்லை. அக்காவின் மகள், ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்து, இப்போது டாக்டர். திருமணம் முடித்தபோது போக முடியாமல் நான் ஆஸியில். பார்த்ததே ஒருமுறை தான். படத்தை ஸ்கான் பண்ணி ஈமெயில் பண்ணினாள். ஆச்சரியம். 1984 ம் ஆண்டு. அம்மாவும், பெரியம்மாவும் மற்றவர்களும் என்ன பேசியிருக்கலாம்?

ஸ்டீவ் ஜாப்ஸ் க்கும் வாஸ்னியாக்க்கும் சண்டையாமே?

அவங்க தான் பிரெண்ட்ஸ் ஆச்சே?

இல்லையாம். Apple2 க்கு எதிர்காலம் இல்லை என்று ஸ்டீவ் ஜாப்ஸ் Macintosh என்று ஒரு புது ப்ராஜெக்ட் செய்யிறாரம்!

என்ன ஸ்பெசல் அதுல?

கமாண்ட் ஒண்டும் அடிக்க தேவையில்லையாம். எல்லாமே டிவி மாதிரி க்ராபிக்கலா இருக்குமாம். மௌஸ் என்று ஒரு இன்புட் டிவைஸ் கூட இருக்காம். மேசையில் வச்சு அசைச்சா ஸ்க்ரீன்ல ஓடுமாம்!

பில் கேட்ஸ் கூட ப்ராஜெக்ட்ல இருக்காராம். டபிள் ஹீரோ சப்ஜெக்ட், நினைத்தாலே இனிக்குதில்ல!!?

இன்டரஸ்டிங்…. ஆர்டர் ஒன்று இப்பவே குடுக்கணும்.

நம்ம மனிசங்களுக்கு தெரிஞ்சா?

சுத்திடலாம், பையனுக்கு டிவி கேம் என்று சொன்னா அவுக டபிள் ஓகே!

கற்பனை தான், எப்படி ஒரு intellectual skill ஐ நாங்கள் வேஸ்ட் பண்ணியிருக்கிறோம் யோசியுங்கள். என் அம்மா என்றில்லை, கேதாவுடன் பேசும்போதும் பலவிஷயங்கள் புரிந்தது. எங்கள் அம்மாமார் தங்கள் பிள்ளைகளை நச்சரிப்பதில் உள்ள அரசியல் இது. தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குள் இருக்கும் ஒரு அழகிய உணர்வுகளை, இலக்கியத்தை, intellectuality ஐ புதைத்துவிட்டோம். அவளும் தானே போய் இலகுவாக புதைந்தும் கொள்கிறாள். கணையாழியின் கடைச்சிப்பக்கம் again. 1988ம் ஆண்டு. “தமிழர் திருமணம்” என்ற புத்தகத்தில் பெண்களுக்கு அறிவுரையாம்.

“தாலிகட்டிய கணவனே தெய்வமாக, தவறாமல், அவன் சொல்லும் வழி நிற்கவேணும். மாமியார் நாத்திகளை மகிழ்விக்கவேணும், மாறு சொல்லாமல் அவர் சொல் கேட்கவேணும். கணவனார் கோபிக்க ஒன்றும் சொல்லாதே. காட்டேரி போல அவன் முன்னே நில்லாதே. ஒன்றுக்கு பல சொற்கள் பேசி எதிர்க்காதே. ஒட்டாரஞ்செய்து பாய்ப்போட்டு படுக்காதே. அடியென்று மடியில் கை பிடித்து இழுக்காதே! என்னேரமும் செல்லைப்போல் அரிக்காதே! வெட்கங் கெடப் பிறர் முன் நகைத்து வைக்காதே. பத்ரகாளியை போல் தலைவிரிக்காதே”

முடிக்கும்போது இது “தமிழர் திருமணம்” இல்லை “பெண்ணடிமையின் வரலாறு’ என்று punch வைத்திருப்பார். எல்லாவற்றிலும் லிபரலாக இருந்தால் குடும்பத்துக்கு நல்லதில்லை என்று நம்ம பசங்க சொல்லுவாங்க. That’s exactly the point!!

Periyar_with_Rajaji_thumb.jpg?imgmax=800“நீ மட்டும் என்ன ஒஸ்தியா” என்று ஒரு பராசக்தி லாயர் கிளம்பலாம். அது தான் இஷ்ஷு. நான் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லையே. நானும் யாழ்ப்பாணம் தான் பாஸ்! எங்களுக்கு பெரியார் கூட இல்லை! புலிகள் காலத்தில் அநேகம் பேர் வாலைச்சுருட்டிக்கொண்டு இருந்தாலும், புலிகள் அந்த மாற்றத்தை ஒரு வித அடக்குமுறையால் ஏற்படுத்த முயன்றனரே ஒழிய ஒரு சமூக மாற்றத்துக்கான campaign ஆக செய்யவில்லை. செய்யவும் முடியாது. அவர்கள் concentration அதுவும் கிடையாது. கம்பன் கழகம் போன்றவை இலக்கியம் வளர்த்தன. ஆனால் சமூகப்புரட்சி என்பது ஜீரோ தான். ஏன் திராவிடக்கழகத்தின் தாக்கம் ஈழத்தில் இல்லை என்றால், அது கொண்டுவரக்கூடிய சமூக மாற்றத்தை யாழ்ப்பாணத்து “அறிவாளிகளுக்கு” ஏலவே உணரக்கூடியதாக இருந்திருக்கலாம். முளையிலேயே ஓட்ட நறுக்கி விட்டார்கள்!! அண்மையில் ஒரு பட்டிமன்றம். மேடையில் என்னையும் கேதாரசர்மாவையும் ஒப்பிடும்போது பெரியாரும் ராஜாஜியும் ஒரே மேடையில் என்று ஒரு சின்ன நக்கல் வைத்தேன்! அதற்கு ராஜாஜி மாத்திரமே சிரித்தான். அது தான் யாழ்ப்பாணம்!

நான் அதிகம் அம்மா சென்டிமென்ட் இல்லாத ஆள். “பத்துமாசம் சுமந்த மாட்டர்”, “அம்மான்னா சும்மா இல்லடா” என்ற ஸ்டீரியோடைப் பாசமழையில் நனைந்து தும்மல் பிடிப்பதில்லை. 2002ம் ஆண்டு சக்தி FM இல் அழைத்துவந்த அறிவிப்பாளர் நிகழ்ச்சி செய்தேன். முதல் பாடல் “ஜனனி ஜனனி” போடலாம் என்றேன். குணாவுக்கு அவசரத்துக்கு சீடி கிடைக்கவில்லை. வேறு பாடல் சொல்லுங்க என்றார். உடனே “அம்மா என்றழைக்காத” சொன்னேன். அம்மான்னா உங்களுக்கு அவ்வளவு இஷ்டமா? என்று ஒரு பெர்சனல் கேள்வி கேட்டார். நான் சொன்ன காரணம் அந்த “கல்யாணி” ராஜாவின் favorite ராகம். “ஜனனி ஜனனி”யில் ஆரம்பித்து அம்மா என்றழைக்காத வரை ராஜாவுக்கு சமயம் கிடைத்தபோது எல்லாம் கல்யாணி தான். அம்மா பாசமும் கல்யாணியும் so related to ராஜா என்று நினைக்கிறேன். அது தான் அவருக்கு எப்போதும் “காற்றில் வரும் கீதம்”! அதற்கு தான் என்றேன். குணா ரசிக்கவில்லை! அவருக்கு நிகழ்ச்சிக்கு more sentimental ஆன பதில் தேவையாய் இருந்தது.

அம்மாவை அம்மாவாக கொண்டாடுவதால், அவளுக்குள் இருக்கும் ஒரு நண்பியை இழந்து விடுகிறோம். அப்பாமார் எல்லாம் வீட்டுக்குள் எதற்கு நண்பர்கள் என்று நினைத்திருக்கலாம். அம்மா மாருக்கும் “அவர் அப்படித்தான்”! பிள்ளைகளும் நட்பை சகோதரர்களிடம் தேடுவார்களே ஒழிய ஒரு தலைமுறை முன்னாலே தேடமாட்டார்கள். அதனால் தான் அம்மாவை அம்மாவாக கொண்டாடவேண்டாம் என்று சொல்கிறேன். Let her be yet another lady in your home. நண்பன் பீட்டர்(நிஜம் தான், பீட்டர் கிடையாது!) தன் அம்மாவின் பேர்த்டேக்கு வாங்கிக்கொடுத்த பரிசு ஒரு external hard drive. காதலிக்கு வாங்கிக்கொடுத்தது class10 32G SD Card! அம்மாவினுடையது capacity அதிகம் தான். But still external இல்லையா?

அடடா அம்மாவின் பேர்த்டே மறந்துவிட்டது … காதலி?

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன். என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் .. சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே!!!

a18361a17-1_thumb%25255B6%25255D.jpg?imgmax=800அம்மா சென்டிமென்ட் ஜெனடிக்கலாக வருவதா அல்லது sociological element ஆ என்பது தெரியவில்லை. கைகேயி முதல் ஜெயலலிதா வரை அம்மா என்றால் உடனே காலில் விழுகிறோம். இதில் இருக்கும் psychology என்ன? என்று டாக்டர் பாலமுருகன் நெக்ஸ்ட் டைம் விசிட் பண்ணும் போது சொல்லலாம். சிலவேளை அம்மாவின் புட்டுக்காக அவன் கட்சியும் மாறலாம். பார்ப்போம். emotions apart, அம்மா மேல் வரும் பாசம், எங்களுக்கு ஊட்டப்பட்ட ஒன்று என்று நினைக்கிறேன். ரஜனி நாலு முழ நனைந்த வேட்டியில் அண்ட்ராயர் தெரிய கோயிலில் பிரதிஷ்டை அடிக்கும் போதும், கமல் நானாக நானில்லை தாயே என்று அழும்போதும் எங்களுக்கும் கண்கள் கலங்குகிறது. சண் டிவி பையன்களுக்கு அம்மா எப்போதுமே தப்பு செய்ததில்லை. அம்மா இறந்த போது கண்கள் சிவக்க சபதம் இட்ட அதே ரஜனி, அநியாயம் செய்த சத்தியராஜூடன் “ஆமாமாக்கண்ணு சௌக்கியம் தான்” சொல்லும்போது இது என்ன லாஜிக் என்றும் புரியவில்லை. எங்களை இலகுவாக அம்மா சென்டிமெண்டில் கட்டிப்போடலாம். நாங்கள் வேறு, பெண்ணை மதிக்கும் சமூகம் என்று மார் தட்டவேண்டும் இல்லையா. அம்மாவும் பெண் தெய்வங்களும் போதும்! கையெடுத்துக்கும்பிடுகிறோமே! வெள்ளைக்காரன் செய்ய முடியுமா?

இப்படி சொல்கிறேன் என்பதற்காக, “உனக்கு அம்மா பாசமே இல்லையா?”, “என்ன ஆம்பிளை நீ” என்ற கம்மெண்டை சப்மிட் பண்ணினால் “தயவு செய்து இப்பதிவை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்” என்று எப்படி popup வர வைப்பது? java script இருக்குதா? பாசம் என்ற விஷயம் ஆதாரமானது. அது எக்ஸ்ப்ரெஸ் செய்யவேண்டிய விஷயமே இல்லை என்கிறேன் நான். அப்படி செய்தாலும் அது சின்ன huddling அல்லது, சமைக்கும் போது கூட நின்று வெட்டிக்கொடுக்கும் வெங்காயமே ஒழிய facebook status இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த மாதிரி over the top status க்கு இருபது likes ஈசியாக கிடைக்கும், சென்டிமென்ட் ஒரு காரணம். மற்றது, நாமளும் அம்மாவை லவ்வுறோம்ல!

அடக்கடவுளே. ஆதிக்கும் பரிசிலுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்து, புத்தக வாசிப்புக்கு போய், கடைசியில் அம்மா என் கொல்லைபுறத்துக்காதலியாக போய்விட்டார். “ஜனனி ஜனனி” சீடி இன்றைக்கும் கிடைக்கவில்லை!!

திருப்பி வாசித்தேன் .. கொஞ்சம் அப்படாக்கர் தனம் இருக்குதோ? சொல்லுங்கள்!!

http://www.padalay.c...og-post_05.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.