Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைச் சபையினை தமிழர்கள் எவ்வாறு கையாளப்போகின்றார்கள் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஒரு அரசென்ற வகையில், தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் ஊடாக, மற்றயை நாடுகளை நோக்கி வேலைத் திட்டங்களை சிறிலங்கா மேற்கொண்டு வருகின்றது.

இத்தகைய சமனற்ற நிலையில், தமிழர்களின் செயற்பாடுகள், இதனை சமப்படுத்துகின்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கனேடிய தமிழ் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களினால், ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, கடந்தாண்டு மனித உரிமை சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை சிறிலங்கா தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு அவசியம் சபைக்கு இருக்கின்றது.

நம்பத்தகுந்த இராஜதந்திர வட்டார தகவல்களின் படி, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கவை மையப்படுத்தி தீர்மானம் ஒரு வருவற்கான நிலை இருக்கின்றது.

சுயாதீனமான சர்வதேச விசாரணை குறித்தான சிந்தனையும், சிறிலங்காவுக்கு மேலதிக காலக் கொடுப்பை வழங்குவதற்கான சிந்தனையும் இருப்பதான நிலை காணப்படுகின்றதென பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நலன்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாடுகளும் காய்களை நகர்த்துகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளில், 26 ஆசிய – ஆபிரிக்க நாடுகளுக்கு, பெரும்பாலாக நலன்கள் அற்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வி.உருத்திரகுமாரன் தமிழர் தரப்பு செய்பாடுகளின் கவனம், குறித்த ஆபிரிக்க – ஆசிய நாடுகள் நோக்கியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எஞ்சியிருக்கின்ற மேற்கத்தேய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள தமிழர்கள், உள்ளக அழுத்தத்தை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில், சிறிலங்கா மீது அதிகரித்து வரும் அமெரிக்காவின் அழுத்தம் குறித்து கருத்துரைத்த பிரதம் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மனித உரிமைச் சபையில் வரவிருக்கின்ற தீர்மானத்துக்கு முன்னோடியாகவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருப்பதோடு , நலன்கள் சார்ந்தே மேற்கத்தேய நாடுகள் இருக்கின்ற நிலையில், தீர்மானத்தை சமப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே, சிறிலங்கா அரச தரப்பை, அமெரிக்கா அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் ஒன்று வருவதற்கான வாய்புக்கள் தென்படுகின்ற நிலையில் , அது எவ்வளது காத்திரமானதாக இருக்கப்போகின்றது என்பதே, இன்றைய கேள்வியாக உள்ளதென தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஒன்றுபட்ட தமிழர்களின் முன்னெடுப்புகள், பெரும் தீச்சுவலையாக கொளுந்துவிட்டு, சிங்களத்தின் கபடம், ஜெனீவாவில் அழிந்து போக, திட்சங்கற்பம் பூணுவோம் என தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/2012/02/07/38991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.