Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடுக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் குரலாக Silenced Voices ஆவணப்படம் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பெப்ரவரி 7-12ம் திகதி வரை நடைபெற்றிருக்கிறது ( Human Rights Human Wrongs Documentary Film Festival)மனித முறைகேடுகள் மனித உரிமைகள் ஆவணப்படத் திரைப்பட விழா.

Silenced-Voices.jpg

நோர்வேயின் Fritt Ord Foundation எனும் அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இந்த விழாவில், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட கதைக்களத்துடன் கூடிய பெரும்பாலான ஆவணத் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.

இந்த விழாவில், பெப்ரவரி 9 மற்றும் 12 ந்திகதிகளில், Silenced Voices எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. (Tales of Sri Lankan Journalists in Exile) நாடுகடந்த இலங்கை ஊடகவியலாளர்களின் ஒடுக்கப்பட்ட குரல்கள் என்ற தொனிப்பொருளில், தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் படம், விழாவில் கலந்து கொண்டிருந்த பலதரப்பட்டவர்களது கவனத்தையும் பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது.

வன்னி நிலப்பரப்பில் நடந்த பெரும் யுத்தத்தில், மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல் நடவடிக்கைகளை ஆதாரப்படுத்தும் ஆவணங்களை, தகவல்களை, வெளியுலகுக்கு கொண்டு வந்த ஊடகவியலாளர்கள், எதிர்கொண்ட பிரச்சனைகள், உயிரச்சங்கள், என்பன குறித்து பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம்.

அந்தப் பிரச்சனைகளை எதிர் கொண்டு, இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள், பஷானா அபேவர்த்தன (ஹிரு வீக்லி பத்திரிகையின் முன்னாள் எழுத்தாசிரியர்) அவரது மனைவி ஷர்மிலா லோகேஸ்வரன், சோனாலி விக்ரமதுங்க, யுத்த காலத்தில் சிரமங்களின் மத்தியிலும் செய்திகளை வெளிக் கொணர்ந்த தமிழ் ஊடகவியலாளர் லோகீசன் ஆகியோர் ஆவணப்படத்தின் காதாபாத்திரங்களாக இருந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, ஆவணப்படத்திற்கான சிறப்பு என்பதற்கும் அப்பால், அவர்களது தொடர்ச்சியான உண்மை உழைப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்தார் இந்தப் படத்தினை, குறித்த விழாவில் பார்வையிட்டிருந்த ஆர்வலர் ஒருவர்.

http://bit.ly/Aqt8YJ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.