Jump to content

About This Club

இணையத்தில் வலைவீசிப் பிடித்தவையில் பிடித்தவை!
  1. What's new in this club
  2. prompt 1980களில் யாழ்பாணம் நெல்லியடி வீதியில் மழை தூறிக்கொண்டிருக்கும்வேளை மாட்டுவண்டிகள் நிரையாகச் செல்கின்றன
  3. Prompt தமிழில் - உருவியது எங்கே என்று ஞாபகமில்லை! செம்பருத்தி இதழ்போல சிவந்த சுருக்கங்கள்கொண்ட உதடுகளும், காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக. அவளுடைய உடலின் மணம், ஆடையின் தொடுகை, மூச்சின் அலைவு என்னை அடைந்தது. அவள் கைகளின் மென்மயிர். கண்விழித்து அவை கனவென உணர்ந்தபின்னரும் அந்த உணர்வு நீடித்தது. சிலசமயங்களில் மெய்யாகவே அவள் வந்தாள் என்றே என் நினைவு பதியவைத்துக்கொண்டது.
  4. Prompt ஆங்கிலத்தில் App: Bing Image Creator a tamil girl around 18 years old in blue saree looking confident and sporting a big smile at a sandy beach. waves are seen in the background. also a sivan temple is in on the landscape
  5. செங்கோட்டைசிங்கம் படத்தில், KV மகாதேவன் இசையில், TMS, ஜிக்கி இனிமையாக பாடிய, மருதகாசியின் வரிகள்.
  6. Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன் சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. December 29, 2021 “அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது. நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது. வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்! – இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம். முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார். இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது. சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை! கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார். விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான். அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள். காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர். மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன. பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை. உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்! படம் நெற்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்👍🏾 https://www.vinavu.com/2021/12/29/dont-look-up-netflix-movie-rajasangeethan/
  7. மெட்ராஸ் கஃபே!: யாருக்காக யாரால் எடுக்கப்பட்ட படம்? 26 August, 2013, சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 1990களில் ஈழப் போர் பின்னணியையும் ராஜீவ் காந்தி படுகொலையையும் மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. எல்.டி.டி.ஈ. என்பதற்கு பதிலாக எல்.டி.எஃப், பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன். இப்படி ஒவ்வொரு தளபதிகளுக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. மெட்ராஸ் கஃபே என்பது ஓர் உணவு விடுதி. ராஜீவ்வை கொல்ல சதியில் ஈடுபடுபவர்கள் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒரு நாடு. அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி குரல் கதை சொல்கிறது. இந்தியாவை பாதிக்கும் ஒரு ரகசிய திட்டத்தை கண்டறிவதற்காக யாழ்ப்பாணம் செல்லும் ஒரு இந்திய அரசாங்கத்தின் உளவாளியின் கதைதான் மெட்ராஸ் கஃபே. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் இந்திய அமைதிப்படையை ஈழத்து மக்களை காக்க வந்தவர்களாகவும் இந்தப் படம் சித்தரிப்பதாகச் சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது போட்டி அமைப்புகளுக்குமான முரண்பாடுகள், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்வது என பயணம் செய்யும் இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் ஈழப் பிரச்சினையை சித்தரிப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். "அப்படி ஒரு பார்வையை ஒருவர் முன்வைக்கக்கூடாதா? அந்தப் படத்தை அதற்காக தடை செய்ய வேண்டுமா? இது கருத்து சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?' என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கருத்து சுதந்திரத்திற்கும் வரலாற்றை திரிப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக் கிறது. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்கள் மீதான சர்ச்சையிலும் இதே பிரச்சினைகள்தான் எழுந்தன. நாம் கருத்துரிமை சார்ந்த விஷ யங்களையும் பொய்யான வரலாற்றுடன் ஆபத்தான நோக்கங்களுடன் எடுக்கப்படும் கலைப்படைப்புகளையும் எப்படிப் பிரித்தறிவது என்பது தான் இப்போதுள்ள முக்கியமான பிரச்சினை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தையும் அதன் பேரழிவுகளையும் மறைத்துவிட்டு அமெரிக்க ராணுவத்தினரை மனிதாபிமானிகளாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மட்டுமே பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் விஸ்வரூபம் படத்திற்கு நிகரானதுதான் மெட்ராஸ் கஃபே படமும். அமெரிக்க ராணுவத்திற்கு பதில் இந்திய ராணுவம். ஆப்கானிஸ்தானிற்கு பதில் ஈழம். அல்கொய்தாவிற்கு பதில் எல்.டி.டி.ஈ. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுபோன்ற படங்கள் இந்தியாவில் ஏன் தொடர்ச்சியாக எடுக்கப்படுகின்றன? உலகெங்கும் உள்ள மக்களுடைய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கங்களின் பார்வையில் எடுக்கப்படும் இந்தப் படங்களின் நோக்கம் என்ன? போராட்டங்களை ஒடுக்குகிற, அரசாங்கத்திற்கு சாதகமான உளவியல் பார்வையை மக்களிடம் உருவாக்குவதா? அல்லது அந்த போராட்டங்களின்மீதான ஒடுக்குமுறைகளை அரசியல்ரீதியாக நியாயப்படுத்துவதா? தொடர்ந்து பயங்கரவாதம் தொடர்பாக எடுக்கப்படும் பிரம்மாண்டமான படங்கள் மிகப்பெரிய ரகசிய நிதியுதவியுடன் செயல்படும் ஒரு பிரச்சார இயக்கத்தின் பகுதியாகவே பார்க்க முடிகிறது. யாரெல்லாம் இந்தப் பிரச்சார இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இந்தப் பிரச்சார படங்களின் நோக்கங்கள் வெளிப்படையானவை. ஜான் ஆப்ரஹாம் இலங்கை அதிபரை போய் சந்தித்ததாக பல செய்திகள் கூறுகின்றன. இந்த இடத்தில் ராஜபக்சேவின் பிரச்சார யுக்தியைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டும். ஒரு காலத்தில் பத்திரிகை, வானொலி, இணையம் என விடுதலைப்புலிகள் மிகப்பெரிய ஊடகக் கட்டமைப்பை உருவாக்கி நடத்திவந்தனர். இவற்றை முறியடிக்க ராஜ பக்சே 2000-ன் பிற்பகுதியில் பெரும் நிதிச்செலவில் ஊடகப் பிரச்சாரங்களுக்கான திட்டங்களை உருவாக்கினார். அதில் ஒன்று, இந்தியாவில் தனது அரசாங்கத்திற்கு சார்பான, ஈழப்போராட்டத்திற்கெதிரான பிரச் சார வேலைகளைச் செய்வது. இறுதிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கை தூதரகத்தின் வழியாகவும் இடைத் தரகர்கள் வழியாகவும் ஏராளமான பணம் ஊடகத்துறைக்குள் பட்டுவாடா செய்யப்பட் டது. சில பிரபலமான ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு வெகு தீவிரமாக நடத்தியதற்கு பின்புலத்தில் இந்தப் பணம் இருந்தது. இன்னொருபுறம் இந்திய உளவுத் துறையும் புலிகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கம் அளித்தது. தமிழகத்தில் பணம் பெற்ற சிலர் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஒன்று பத்திரிகை முதலாளிகளையே விலைக்கு வாங்குவது, அல்லது வேலை செய்யும் பத்திரிகையாளரை விலைக்கு வாங்குவது என்கிற ரீதியில் இலங்கை அரசு வெகு தீவிரமாக செயல்பட்டது. இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்திய அரசாங்கத்தை இலங்கைக்கெதிராக செயல்பட வலியுறுத்தும் குரல்கள் தமிழகத் தில் வலிமை பெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டங்கள் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முள்ளிவாய்க்கால் படுகொலையின் காயங்கள் காங்கிரஸின்மீது தீராத வெறுப்பை தமிழக மக்களிடம் ஏற் படுத்தியிருக்கிறது. இலங்கையில் நடை பெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்கிற போராட்டம் தமிழகத்தில் இப்போதே தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களினுடைய இந்த எதிர்ப்பு மனநிலையை மழுங்கடிக்கவும் பொதுவாக இந்திய மக்களிடம் காங்கிரஸ் அரசின் ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்தவும் இதுபோன்ற படங்கள் எடுக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதுபோன்ற படங்கள் இந்திய அரசு, இலங்கை அரசு இரண்டுக்குமே மிகவும் உவப்பு அளிக்கக்கூடியவையே. இதில் துயரமான ஒரு விஷயம் என்னவெனில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையோ அவர்கள் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகளையோ இந்தியாவில் இருக்கும் ஏனைய மக்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவோ அதன் குறைந்தபட்ச கருணையோகூட காட்டவில்லை என்பதுதான். விடுதலைப்புலிகள் என்றால் அவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்கிற ஒரே அடிப்படையில் மட்டுமே தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். 1987இல் இந்திய அமைதிப் படை ஈழமண்ணில் நடத்திய கோரத்தாண்டவங்களைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. முள்ளிவாய்க் காலில் லட்சக்கணக்கான மக்கள் எப்படி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இலங்கை இன்று உலகிலேயே மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நாடு என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இந்திய அரசாங்கம் இலங்கையின் இனவெறி அரசாங்கத்திற்கு எத்தகைய ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்த ஏனைய இந்தியாவின் குருட்டுப் பார்வையைத்தான் இந்தப் படத்தின் இயக்குநரும் ஈழப்பிரச்சினைகளின்பால் வெளிப்படுத்து கிறார். இந்திய அமைதிப் படையின் வன்முறைகளையோ, முள்ளிவாய்க்கால் படுகொலைகளோ கண்கொண்டு பார்ப்பதற்கு அவரது கலை சுதந்திரம் அவரை அனுமதிப்பதில்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் ஈழத் தமிழர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதைப்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. ராஜீவ் காந்தி கொலையில் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களைப் பற்றி நடந்து வரும் விவாதங்களை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. இப்படித்தான் ஈழத்தமிழர்களுடைய வரலாறு இந்த உலகத்திற்குச் சொல்லப்படுகிறது. நம் முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி, நம் முன் நிகழ்ந்த ஒரு கொடூரமான மானுட அழிவைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒடுக்குமுறையாளர்களுக்கு சாதகமான ஒரே ஒரு அரசியல் கோணத்தை மட்டும் கையாளும் ஒரு படத்தை நாம் கலைப்படைப்பு என்று அழைக்க வேண்டுமா அல்லது பிரச்சார படைப்பு என்று அழைக்க வேண்டுமா? சென்சார் போர்டு அனுமதி அளித்த ஒரு படத்தின்மீது தடை போடுவது தவறு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நமது சென்சார் போர்டின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானதாகி எவ்வளவோ காலமாகிவிட்டது. அவை உண்மையில் அரசாங்கத்தின் கருவிகளாக இருக்கின்றனவேயொழிய அவற்றிற்கென்று சுதந்திரமான செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள், தணிக்கைக்குழு மற்றும் அரசாங்கத்தின் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் "குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஆணிவேர்', "தேன்கூடு' போன்ற படங்கள் சென்சாரைக் கடந்து வரவே முடியவில்லை. "காற்றுக் கென்ன வேலி' படத்தை இங்கே திரையிட முடியவில்லை. இவ்வாறு ஈழப் போராட்டம் மற்றும் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக, அரசாங்கத்திற்கு உவப்பில்லாத எந்தக் கருத்தையும் இங்கே ஒரு திரைப்படமாக்க முடியாது. இந்தப் படங்கள் அனுமதிக்கப்பட்டு மக்களிடம் காட்டப்பட்டிருந்தால் நாம் மெட்ராஸ் கஃபே படத்திற்காக கருத்துச் சுதந்திரத்தின் பொருட்டு போராடலாம். ஆனால் இங்கே கருத்து சுதந்திரம் என்பது ஒருவழிப் பாதையாக இருக்கிறது. அதிகார சக்திகளின் நலன்களை பாதுகாக்கும், அவர்களது நோக்கங்களை பிரச்சாரம் செய்யும் "துப்பாக்கி', "விஸ்வரூபம்', "மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு சமூகக் குழுக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் நேரடியாக ஒடுக்குமுறையில் ஈடுபடும் �காற்றுக்கென்ன வேலி� போன்ற படங்களைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இப்போதுகூட அரசாங்க அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்ட "தலைவா' படம் குறித்து கருத்துச் சுதந்திரம் சார்ந்த எந்த போராட் டமும் திரைத்துறையினரிடம் இருந்துகூட எழவில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டும்தான் கண்ணீர் விட்டு அழுதார். இதே படத்திற்கு ஏதேனும் ஒரு சமூகக் குழுவிடம் இருந்து அழுத்தம் வந்திருந்தால் இந்நேரம் பெரும் கூக்குரல்கள் எழுந்திருக்கும். ஒவ்வொன்றிற்கும் தடை கேட்பது என்பது பொதுவாக அரசாங்கத்தின் அதிகாரத்தை எல்லையற்று பெருகச் செய்வதற்கு இடமளிக்கும் என்பது உண்மைதான். இது காலப்போக்கில் ஒவ்வொரு அறிவு சார்ந்த, கலைசார்ந்த செயல்பாடுகளிலும் அரசு தலையிடுவதற்கான உரிமையை வலிமைப்படுத்தப் போவது நிச்சயம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் விடுதலைப் புலி களை பயங்கரவாதிகள் என்று சொன்ன தமிழக முதல் வரிடமே இப்போது புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லும் படத்திற்கு தடை விதியுங்கள் என்று கேட்பது தான். இந்திய அரசாங்கம் புலிகளின்மீது விதித்திருக்கும் தடையை இன்றும் நீடித்திருக்கிறது. இந்த அமைப்புக்குள் நின்றுதான் நாம் புலிகளுக்கெதிரான ஒரு படத்தை தடை செய்யுமாறு கோருகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் பாடான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு ஒரு தெளிவான அரசியல் நோக்கம் இருக்கிறது. அரசியல், அரசியலால் எதிர்க்கப்படுவது என்பது தவிர்க்க முடியாதது. - மனுஸ்யபுத்திரன் நக்கீரன் https://www.paristamil.com/tamilnews/view-news-MjkwMDM4MzY4.htm கடந்த வார இறுதியில் நெற்ஃபிளிக்ஸில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தில் காட்டப்பட்டமாதிரி பல முடிச்சுக்களும், சிக்கல்களுமாகவா அந்த “துன்பியல் சம்பவம்” நடந்தது?🤔
  8. “ஜியாங் ரோங்” இன் ‘’ஓநாய் குலசின்னம்’’ November 4, 2021 — அகரன் — அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி கலிபோர்னிய வறட்சி பற்றிய விபரணத்தை வெளியிட்டது. அங்கு ஒர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல்போய்விட்டது. அப்பகுதி மக்கள் பெற்றோல் பங்கில் 15 டொலர் கட்டி வாரத்தில் குளிக்கிறார்கள். ஒரு வயதான பெண்மணி கடந்த மாதம் 1000 டாலருக்கு தண்ணீர் வேண்டினேன் என்று கலங்கினார். அங்கு 2018இல் நீர் நிறைந்திருந்த ஏரியில் சிறுகோடுபோல தண்ணீர் இருக்கிறது. உலகின் வல்லரசு ஒன்றின் நிலத்தில் நடக்கும் கோரமான நிலை இது. அண்மையில் உலக நாடுகளின் சூழல் விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ‘’மனித நடவடிக்கைகள் ஆபத்தான நோயை பூமிக்கு வழங்கிவிட்டன. காலம் பிந்திவிட்டது. கடந்த பத்தாண்டுகளின் புவி வெப்பநிலை ஏற்றம் ஆபத்தின் கூக்குரல்’’ என்றது. கரியமில வாயுவை கட்டுப்படுத்த நாடுகள் கூட்டம்விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்சீனா ஹைதரசன் குண்டை பரிசோதித்திருக்கிறது. மோசமான அதிகார வெறி இந்த பூமியை அழிப்பதை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆபத்தானவன்தான். இப்படியான ஒரு நாளில்தான் ‘’ஓநாய் குலசின்னம்’’ என்ற நாவலை படித்தேன். இந்த நாவல் ஜியாங் ரோங் என்பவரால் சீனமொழியில் 2004இல் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் படித்த திரு வெற்றிமாறன் இதை வெளியிடவே அதிர்வு என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தி சி.மோகன் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2012இல் தமிழில் வெளியாகியது. இச்சேதியே இந்த நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இதை படித்ததும் வளர்ச்சி என்ற சொல்லே வெறுப்பை தந்தது. இயற்கையை சிதைத்துவிட்டு எதை நாம் வளர்க்கப்போகிறோம்?அழிவையும், மரணங்களையும்தானே? ** நாவல் மையங்கொள்வது மொங்கோலிய புல்வெளிகள் பற்றியது. சீன மறுமலர்ச்சியில் மாவோ கிராமங்களை வளர்க்க மாணவர்களை எங்கும் அனுப்புகிறார். அப்படித்தான் மொங்கோலிய புல்வெளி ஓலான் புலாக்கிற்கும் சீன மாணவர்கள் வருகிறார்கள். அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். அதில் ஒரு மாணவன் ஜென்சின். அவனுக்கு அந்த மக்கள் வாழ்வு பிடித்துப்போகிறது. மொங்கோலிய புல்வெளிகளின் உண்மையான ராஜா ஓநாய்கள்தான். ஓநாய்கள் தங்கள் மந்தைகளை கொன்றாலும், புல்வெளி நிலைத்திருக்க ஓநாய்கள்அவசியம் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். ஓநாய்களுக்கும் கடவுளுக்கும் தொடர்பிருப்பதாகஅவர்கள் கருதுகிறார்கள். ஓநாய்கள் ஊளைஇடும்போது அவை வானத்தைப்பார்த்து கடவுளிடம் முறையிடுகின்றன. அதைப்பார்த்தே மனிதனும் வானத்தைப் பார்த்து வணங்க கற்றுக்கொண்டான் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு காலத்தில் பத்தாயிரம் மான்கள் கூட்டமாக அந்தப்புல்வெளியில் புல்மேயும். மான்களின் உயிர்ப்பெருக்கத்தை சமநிலையில் வைத்திருப்பவை ஓநாய்கள். அதைவிட எலிகள், ஒரான்குட்டான்கள், முயல்கள் என்று எல்லாவற்றையும் இயற்கை சமநிலை பேணி நிலைக்க வைத்திருப்பவை ஓநாய்கள். இறந்த விலங்குகளில் இருந்து கிருமிகள் வெளியேறாமல் எலும்புகளைத்தவிர எல்லாவற்றையும் உண்பதால் புல்வெளி சுத்தமாக இருக்கும். ஓணாய்கள் தங்கள் உடமையை தாக்கினாலும் அவற்றை மொங்கோலிய புல்வெளி மக்கள் குலதெய்வமாகவே பார்த்தார்கள். இதைவிட ஓநாய்களின் சிறப்பியல்புகள் ஜென்னை வியப்பில் நிறுத்துகின்றன. தம் உணவுத்தேவைக்கு அதிகமாக அவை உயிர்களை கொல்லாதவை. யுத்ததந்திரங்களில் அவற்றை அடிக்க யாருமில்லை. தமக்கு சாதகமான நிலை வருமட்டும் பதுங்கி இருப்பவை. இரவில் பெரும் தாக்குதலை நடத்ததலைமை ஓநாயின் கட்டளைப்படி நகர்வதோடு தாக்குதலுக்கான புலனாய்வு நடவடிக்கையைக்கூட இரகசியமாக பல நாட்களின் முன்னே செய்பவை. மொங்கோலிய குதிரைகளின் வேகம் அதிகரித்ததற்கு ஓணாய்களே காரணம். இந்த நிலத்திலிருந்து செங்கிஸ்கான் என்ற மாபெரும் மனிதபோர் அலையை இந்த ஓநாய்களே ஏற்படுத்திஇருக்கும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் ஓநாய் குகையில் ஓர் ஓநாய் குட்டியை எடுத்து ஜென் வளர்க்கிறான். ஒரு குழந்தையை தாய் வளர்ப்பதுபோல அவன் அக்கறை காட்டுகிறான். ஓநாய் வளர்க்க பல இடையூறுகள் வருகின்றன. நாய்களோடு சேர்த்து வளர்த்தாலும் அது ஓநாயாகவே வளர்கிறது. அதன் தனித்தன்மையை எந்த நிலையிலும் அது இழக்கவில்லை. இப்படியான நிலையில் /ஓநாய்கள் மந்தைகளைகொல்கின்றன. உற்பத்தியை பெருக்க விவசாய நிலமாக அவற்றை மாற்ற அரசு முயற்சிக்கிறது. /எல்லாவற்றுக்கும் ஓநாய்களை அழிக்க வேண்டும் என்று அதிகாரவர்க்கம் முடிவெடுக்கிறது. புல்வெளி முதியவர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறது. ஓநாய்களை இராணுவம் சுட்டுக்கொல்கிறது. சீனர்கள் வருகிறார்கள். விவசாயம் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு நடந்த வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. ஓநாய்கள் இல்லாததால் எலிகள் பெருகி நிலமெங்கும் ஓட்டைபோட்டு வளைகள் வருகிறது. குதிரைகள் அந்த ஓட்டைகளில் கால்விட்டு கால் முறிகிறது. ஓநாய்களை அடுத்து மான்கள் வேட்டை நடக்கிறது. வெறும் 20 ஆண்டுகளில் புல்வெளிபாலை நிலம்போல் மாறுகிறது. அங்கு விவசாயம்கூடசெய்ய நீரற்றுப்போகிறது. ஆற்றில் மணல் மட்டும் அடையாளமாக கிடக்கிறது. இப்போது அந்த மண்வெளியில் இருந்து மணல்புயல் சீனாவின் பீஜிங் ஐ அடிக்கடி தாக்குகிறது. நாவலின் இறுதியில் வளர்த்த ஓநாயை தன்கையாலே கொல்லவேண்டி ஏற்படுகிறது. தன் குழந்தையை கொன்றதுபோல ஜென் துடிக்கின்றான். இந்த நாவலில் புல்வெளியின் ஆன்மா போன்ற ஓர் முதியவர் வருகிறார் அவர் பில்ஜி. ஜென்னை தன் மகன்போல கருதி அந்த வாழ்வைகற்றுக் கொடுக்கிறார். அவர் புல் வெளிபற்றி கூறும் வார்த்தைகள் அதிர்வை தருபவை. « இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றயவை சிறிய உயிர். புல்லை தின்னும் ஜீவன்கள் இறைச்சி தின்னும் உயிர்களைவிட மோசமானவை. மான்களைவிட புல் இரக்கத்துக்குரியவை. மான்களுக்கு தாகம் எடுத்தால் அவை நதியை தேட முடியும். குளிர் எடுத்தால் மலையில் இதமான இடத்துக்கு நகரமுடியும். புல்? அது பெரிய உயிர். அதன் வேர்கள் அழமற்றவை. அதனால் ஓட முடியாது. எவரும் அவற்றின்மீது ஏறி மிதிக்கலாம், உண்ணலாம். அவை பூப்பதில்லை. தம் விதைகளை அவற்றால் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புற்களைவிட வேறேதும் இரக்கத்திற்குரியதல்ல » புல்வெளியை அழித்த சீனா இன்று அதன் பெறுபேற்றை அனுபவிக்கிறது. ஏரல் என்ற கடலை சோவியத் தின்றதையும், பாலைவனத்தை இன்று மெல்வதையும் பார்க்கிறோம். அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல்! அந்த அரசாங்கமே காட்டை எரித்து விவசாய நிலத்தை ஏற்படுத்துகிறது. எல்லாம் வளர்ச்சிக்காக!!! இன்று வல்லமை நாடுகளிடம் 17000 அணுகுண்டுகள் சட்டப்படி இருக்கின்றன. அதைவிட வலிமைகூடிய நைடரஜன் குண்டுகள் வலம்வருகின்றன. இவை எல்லாம் எங்கு பயன்படுத்த காத்திருக்கின்றன ? அதற்கு முதல் ஒரு கேள்வி. பூமியில் நீரும், பிராணவாயுவும் இல்லாதபோது எந்த நாடு இருக்கும்?! யார் யாரை எதிர்ப்பார்கள்? « ஓநாய்கள் தம் பசியை மீறி உயிரை கொல்லாது, பிள்ளைத்தாச்சி விலங்கை கொல்லாது பிறந்த குட்டிகளை உண்ணாது» மனிதனைவிட எவ்வளவு மேலானவை?!! ‘’ஓணாய் குல சின்னம்’’ இந்த நூற்றாண்டின் அவசிய நாவல்!! https://arangamnews.com/?p=6700
  9. ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் – இராயகிரி சங்கர் October 16, 2021 1981ல் எழுதப்பட்ட நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். எழுத்தாளன் மீது பெரும் பித்துக்கொண்ட வாசகன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் புனைவு. ஜோசஃப் ஜேம்ஸ் என்கிற மலையாள எழுத்தாளனை வாசிக்க நேர்ந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளத்துடிக்கும் பாலு என்கிற இளைஞனின் பரவசத்துடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. பாலுவின் பார்வையின் ஊடாக .ஜே.ஜே. வின் மொத்த வாழ்க்கையும் நாவலில் குறிப்புகளாக, நினைவோடை உத்தியில் பிறரின் சொற்களாக, ஜே.ஜே.வே எழுதிய நாட்குறிப்புகளாக விரிகிறது. வெளியாகி கிட்டத்தட்ட முப்பந்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதற்குமுன் இந்த நாவலின் பேசுபொருள் என்ன என்பதும், அறிமுக வாசகர்கள் எதிர்கொள்ள இருக்கும் தடைகள் எவை என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். இந்நாவல் நடக்கும் காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து முடிந்து பொன்னுலகம் வாய்க்கும் என்று நம்பி ஏமாந்து, மனித மனத்தின் பேராசைகளால் தியாகங்கள், லட்சியவாதங்கள் துார்ந்து போயிருந்த காலம். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவ்வெற்றிடத்தை நிரப்பும் என்று ஏகமனதாக அறிவுஜீவிகள் நம்பி, பெரும் ஊக்கத்தோடு அவர்களை இயங்கச்செய்திருந்த காலமும்கூட. இலக்கியத்தில் கலை கலைக்காக என்றும், கலை மக்களுக்காக என்றும் தனித்தனி அலைகள் குமுறிக்கொண்டிருந்த காலம். முன் மாதிரிகள் ஏதும் இந்நாவலின் வடிவத்திற்கு தமிழில் இல்லை. கலைஞனின் தேடலில் விழைந்த வடிவம். கூறுமுறையும் முன்னர் அனுபவப்படாதது. இதுவே ஆரம்ப வாசகர்களிடம் இந்நாவல் ஒருவித அந்நியத்தன்மை கொள்ள காரணமாக அமைகிறது. ஜே.ஜே. இடதுசாரி சிந்தனைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவன். நாளடைவில் தோழர்களிடம் தத்துவம் அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்த்த ஒரு உபாயமாக மாறிப்போனதைக்கண்டு கலங்கி, அவற்றில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவன். இது அப்போதைய காலகட்டத்தில் பரவலாக நிழந்த உண்மை. சுந்தர ராமசாமியே ஆரம்பத்தில் முற்போக்குக் கதைகள் எழுதியவர்தான். தண்ணீர், கோவில்காளையும் உழவுமாடும் போன்ற கதைகள் அக்காலத்தியவை. அதன்பின் ஸ்டாலினிய நிர்வாகத்தினால் மனம்நொந்து அக்கிருந்து வெளியேறுகிறார். ஏழைப்பங்காளிகளின் உலகத்தை சமத்காரமாக ரத்தமும் சதையுமாக எழுதிப் பேரும் புகழும் பெற்றுவரும் முல்லைக்கல் மாதவன் நாயர் மீது ஜே. ஜே. வைக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் முக்கியமானவை. முல்லைக்கல் நாயர் ஒரு போலி என்ற ஜே.ஜேயின் அவதானிப்பு கடும் விமர்சனமாக உருவெடுக்கிறது. எழுதுவதும் வாழ்வதும் வெவ்வேறாக இருக்கும்போது புரட்சியாளன் பிம்பத்தை முல்லைக்கல்லுக்கு அளிக்க ஜே.ஜே. ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையைக் காணும் வேட்கை, அதை எழுத்தில் பதிவுசெய்யத்துடித்த வேகம் என்று தன் செயல்களால் தொடர்ந்து எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்கிறான் ஜே.ஜே. தன்னுடைய மொழியான மலையாள இலக்கிய உலகத்தின் மீது அவன் காட்டும் சமரசமற்ற கறாரான விமர்சனம் அவனுக்கு அளிப்பது புறக்கணிப்பையும் பரம்பரையாகத் தொடர வாய்ப்புள்ள பகைகளையும். பாலு ஜே.ஜேயை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நுால்தான் இந்நாவல். தொடர்கதைகளும் நெடுங்கதைகளும் பரவலாக எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நாவலின் வடிவம் அளித்த அந்நியத்தன்மை இன்றும் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதில் வாசக ஊகங்களுக்கான இடைவெளி ஏராளம். காலம் முன்பின்னாக ஊஞ்சலாடி குதிக்கிறது. ஜே.ஜே. என்கிற எழுத்தாளன் தமிழில் உள்ளவன் என்றும் ஒரு கற்பனைக்காக புதுமைப்பித்தன் என்றும் கொண்டு மலையாள இலக்கிய உலகத்தின் மீது ஜே.ஜே.கொட்டும் விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகம் சார்ந்தவை என்றும் கற்பனை செய்துகொண்டால் இந்நாவலின் முக்கியமான பரிமாணம் பிடிபடும். மொத்த நாவலும் சிந்திக்கும் மனிதர்களின் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்களை முன்னிறுத்துகிறது. போலிகளைக்கண்டு கொந்தளிக்கிறது. துவேசம்கொள்கிறது. ஏளனம்செய்து சபையில் இருந்து விரட்டி அடிக்கிறது. சிந்தனை என்ற பெயரில் நடக்கும் மொண்ணைத்தனங்களை செவிட்டில் அறைந்து அது சிந்தனை அல்ல சிந்தனைப் போலி என்று உரக்கச் சொல்கிறது. மேலும் பொதுவுடைமை தத்துவத்தை பாவித்தவர்கள் குறித்த துல்லியமான விமர்சனம் நாவலில் பெரும்பாலான இடங்களில் வருகிறது. எண்பதுகளில் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், நம் அறிவுலகக் சீரழிவுகள் எவை என்பதையும் விமர்சனப்பூர்வமாக பதிவுசெய்துள்ளது என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். இரண்டாவதாக தமிழ்ச்சமூகத்தின் மீது சுந்தர ராமசாமிக்கு இருந்த விமர்சனங்கள். அவை இன்றும் மாறாமல் தொடரந்து கொண்டிருக்கின்றன. வணிக எழுத்தின் மீது சு.ரா.விற்கு இருந்த எண்ணம் இந்நாவலில் ஓரிடத்தில் பதிவாகியுள்ளது. ”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புக்களை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள்” என்று அது வெளிப்படுகிறது. அக்கவலை “சீதபேதியில் தமிழ் சீதபேதி என்றும், வேசைத்தனத்தில் தமிழ்வேசைத்தனம் என்றும் உண்டா? என்று சினங்கொள்கிறது. சு.ரா.வின் பாலயத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது என்பதை ”நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது என் மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே.ஜே. தமிழ் நாவல்களில் அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா தொடர்கதைகள் ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் சீட்டு யாருக்கு விழும், கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால்.” என்று வர்ணிக்கிறார். ஆன்மீக வாதிகளிடம் அவருக்கு ஏற்படும் அவநம்பிக்கை துரதிருஷ்டவசமானது. நாராயணகுருவின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவரை சந்தித்து கொஞ்ச நாட்கள் அவரோடு தங்க நேரிடுகிறது பாலுவுக்கு. விரைவிலேயே அவரின் நம்பிக்கைகளால் ஒன்றும் இம்மண்ணில் விளையப்போவதில்லை என்று சோர்வுற்று விலகிச்செல்கிறார். ஆயினும் அவரைப்போன்ற லட்சியவாதிகளின், சந்நியாசிகளின் அத்தனை உழைப்பும் ஏன் வீணாகிப்போகிறது என்ற துக்கம் அவரை வாட்டுகிறது. பாலு ஜே.ஜே.யைச் சந்திக்க எழுத்தாளர் மாநாட்டுக்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவரின் நாவல்கள் குறித்து ஜே.ஜே. சொல்லும் வரிகள் அங்கதம் நிரம்பியவை. ”கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குடடியை அவளைத்துரத்திய அரசர்களிடமிருந்தும். முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால் , சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையில் இருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும்”, “பாவம் திருச்சூர், கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் லாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய் மேகக் கூட்டங்களிடையே புரண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு சூரியனைப் பின்னங்காலால் உதைத்துதள்ளி, கிரகங்களை முட்டிக்குப்புறச் சாய்த்து சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்து சேருகின்றன.” என்கிறான். அதைவிட உச்சபட்ச அங்கதம். ஜே.ஜே.பாலுவைச் சந்தித்த உடன் கேட்கும் கேள்வி. ”சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”. இந்நாவலின் சில தருணங்களை ஜெயமோகன் கைப்பற்றி பின்தொடரும் நிழலின் குரல் என்ற பெரிய நாவலாக எழுதியிருக்கிறார். முல்லைக்கல் மாதவன் நாயரிடம் ஜே.ஜே.யைப்பற்றி விவரிக்கும் அரவிந்தாட்ச மேனன் ஆல்பெர்ட் என்கிற இடதுசாரி தொழிற்சங்க வாதி ஒருவரைப்பற்றி சொல்கிறார். தனியாளாக மலைக்காட்டில் சங்கங்களை ஏற்படுத்தியவன் என்றும் பின்னாளில் கார் பங்களா நிலம் என்று ஒரு குட்டி முதலாளியாக தன்னை நிறுவிக்கொண்டவன் என்றும் வருகிறது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பு பகுதியில் ஒரு வரியில் ட்ராட்ஸ்கி ட்ராட்ஸ்கி என்று மாணவர்கள் புலம்பிக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்களத்தை ஜெயமோகன் இந்நாவலின் வரிகளில் இருந்தும் அதன்பின் அவருக்கு ஏற்பட்ட தொழிற்சங்க அனுபவங்களில் இருந்தும் எழுதியிருக்கலாம். அந்நாவலும் இந்நாவலைப்போன்ற வடிவ ஒற்றுமை கொண்டுள்ளது என்பது இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. உண்மையான கலைவெளிப்பாட்டின் இயல்பு என்ன என்பதற்கு நாவலில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்பு உதாரணமாக அமைகிறது. அது ஜே.ஜே. டயரிக்குறிப்பாக வருகிறது. “முல்லைக்கல் உன் எழுத்தை நான் மனத்தால் வெறுக்கிறேன். மாட்டுக்குச்சொறிந்து கொடு அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்துகொடுக்காதே…லுாக்கோசின் மகள் ஏலியம்மாவின் வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. ஏலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத்திறந்து பார்த்தபோது கம்பிகள் தானாக அதிர்ந்துகொண்டிருந்தன. மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பை மரச்சுத்தியலால் அறைந்துகொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம்.” நாவலில் அநேகம் இடங்கள் கவிதைவரிகளாக கவித்துவம் கொண்டிருக்கின்றன. சம்பத் காணும் கனவு அதன் வரலாற்றுப்பின்புலம், கரும்புள்ளிகளாத்தெரிந்து யானை உருப்பெற்று மீண்டும் கரும்புள்ளிகளாக யானை மறையும் மாயத்தோற்றம். சம்பத் காணும் பரவசமான சூரிய உதயம் என்று நாவல் முழுதும் சிந்தனையின் பாய்ச்சலையும் கலைவெளிப்பாட்டையும் காணலாம். படைப்பு மொழியோ சன்னதம் வந்து வேட்டைக்கு ஏகும் சாமியாடியுடையது. மந்திரங்கள் போன்று இந்நாவல் வெளிவந்த காலங்களில் சிலவரிகள் இலக்கிய வாசகர்களால் ஓதப்பட்டு வந்தன. அவற்றில் சில ”எனது குடி தற்காலிகத் தற்கொலை – நான் உயிர்வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன”” ”மூலதனம் இல்லாமல் முதலாளி ஆக இன்று இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் , மற்றொன்று பாஷை. பாஷை என்பது மொழி மூலம் மக்களின் உணர்ச்சியை, முக்கியமாக மேடைகளில் துாண்டுவதற்கான ஆற்றல். மக்களின் மனத்தேவைகளைப் பெரும் மாளிகைகளாக எழுப்பி அவர்கள் முன் காட்டும் காரியம்.” ”சஞ்சலமின்றி முடிவெடுப்பது. சரியோ தவறோ அதன்பின் அதில் ஆழ்ந்து விடுவது. அதன்பின் எதிர்நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல் இருப்பது. உயர்வோ தாழ்வோ இவை நிம்மதியானவை. மனநிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறது போலிருக்கிறது” ”பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப்பார்க்கும்போது வேட்டைநாய் வெகுதுாரம் போயிருக்கும்.” ”ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்” தமிழ்ச் சமூகத்தின் போலித்தனத்தின் மேல், சிந்தனைச்சோம்பல் மேல் சுந்தர ராமசாமிக்கு இருந்த எண்ணங்கள்தான் இந்நாவலாக உருப்பெற்றுள்ளது. தமிழில் இதுபோன்று தன் உடல்முழுக்க சிந்தனையின் முத்திரைகள் கொண்ட வேறொரு நாவல் இல்லை. அது ஒன்றே இந்நாவலின் பேரழகு. https://mayir.in/essays/rayakirisankar/1788/
  10. அக்டோபர் 9, சர்வதேச புரட்சியாளன் சே குவேராவின் நினைவு தினம் – பேரா. எஸ். மோகனா உலகின் எங்கு ஏகாதிபத்தியம் என்றாலும் எழும் சே ”உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” – சே .. “உண்மையில் நான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவன் மேலும் கியூபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவைச் சேர்ந்தவன், ஆசியாவைச் சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவைச் சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்”… எர்னெஸ்டோ சே குவேரா எந்த நாட்டின் விடுதலைக்கு என் உயிர் தயார்.. சே “நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல, நான் ஒரு அர்ஜென்டிணன், ஒரு கியூபன், அதே சமயம் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேச பக்தனாகவும் உணர்கிறேன். யாருடைய வேண்டுகோளும் இன்றி, இதில் எந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்”… சே . புரட்சியாளன் எர்னெஸ்டோ சே குவரா, மருத்துவர் வரலாற்று நாயகன், நமக்கெல்லாம் ஆதர்ச புருஷராகவும், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாகவும் உள்ள, நம்மால் செல்லமாக சே என்று அன்போடும் தோழமையோடும் அழைக்கப்படும் சேவின் பெயர், எர்னஸ்டோ சே குவேரா. எர்னஸ்டோ சே குவேராவின் வீரம் செறிந்த புரட்சிக் குரல் ஒலிக்க என்றும் நம்மிடையே வாழ்கின்ற சேவின் நினைவு தினம் அக்டோபர் 9 , (Ernesto “Che” Guevara June 14,1928 – October 9, 1967). புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவரா அர்ஜெண்டினாவின் மார்க்சிய புரட்சியாளர், மருத்துவர், ஒரு கட்டுரையாளர், அறிவுஜீவி, கொரில்லாப் போராளி & ராணுவ புரட்சியாளர். கியூபாவின் புரட்சியில், ஜனநாயக அமைப்பில் சேவின் பங்கு ஏராளம், சே என்ற அர்ஜெண்டினா பேருக்கு நண்பர்/ தோழர் என்று பொருளாம். சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்.. போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். கியூபப் புரட்சியின் முக்கிய கதாநாயகன். தாயிடம் அன்பு பொழிந்த சே தன் சிறுவயதில் தாயிடம் ஏராளமான அன்பு வைத்திருந்தவர். தாயிடம் மிகவும் நெருக்கம் உள்ளவராகவும் இருந்தார். நோய்வாய்ப்பட்டதால் அதிகமாகப் புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார். புத்தகம் படிப்பதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் எர்னஸ்டோ சே. ஆஸ்துமாவின் அழுத்தத்தினால் 9 வயதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர் சே. எனவே அன்னைக்குச் சேயின் மேல் அதீத அன்பு. வீட்டிலேயே தாயின் கவனிப்பில் படித்தார் சே. 2 & 3வது வகுப்புகள் மட்டுமே முறையாகப் பள்ளிக்கூடத்தில் கற்றார். சிறுவயதில் போர் செய்தி சேகரிப்பு சேவின் 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு போர்ச்செய்திகள் சேகரித்தார். அப்போது சே சிறுவயதிலேயே போர் தொடர்பான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார் எர்னெஸ்டோ. அங்கிருந்து துவங்கியதுதான் எர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் அரிச்சுவடி.. அது முதல் சேவை இந்த அலை சமூகத்தின் அவலங்களைத் தேட வைத்தது. ஆஸ்துமாவும், ரக்பி விளையாட்டும் இளம் வயதில் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு. மோட்டார் சைக்கிள் பயணமும், புரட்சியும் தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் நண்பருடன் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையிலிருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்தார். இதற்காகத் தீர்வுகளை யோசித்த சே “பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்குப் புரட்சி மூலமே தீர்வு காணமுடியும்” என நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாத்தமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது. இயற்கை ஈடுபாடும் பயணம், கவிதையும் சே-வின் மனம் மக்களின் பாதிப்பில் மூழ்கினாலும் மனம் சில சமயம் இயற்கையுடன் கொஞ்சியது. எர்னெஸ்டோவும், ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக பறந்தது. மனம் அவர்களை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என எர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் எர்னெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே எர்னெஸ்டோ காற்றில் மிதப்பார். சே மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது, எடுத்த குறிப்புக்களை வைத்து “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூல் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக அது தேர்வு செய்யப்பட்டது. புரட்சியின் குரல் சே தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து போராட்டங்களையும், போர்களையும் இடைவிடாமல் சந்தித்து வெற்றிகண்ட அயர்விலா போராளி சே..! சே என்ற ஒரு சொல் ஒரு தனி மனிதரைக் குறிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும், அடிமைப்பட்ட மக்களின் மனசாட்சி அது..! அனைத்து உலக மக்களின் புரட்சியின், போராளியின் சின்னம் சே..! சேகுவேரா பிறப்பால் ஒரு அர்ஜென்டினராக இருந்தாலும் கியூபாவின் விடுதலைக்காக தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 1959 ல் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இங்கு சேவுக்கு பெரிய பதவிகள் தரப்பட்டன. ஆனால் அதற்குப் பின் பொலிவியாவில் போராட்டம் நடப்பதாக அறிந்து கியூபாவை விட்டு, அனைத்துப் பதவிகளையும் துறந்து, 1965 ல் தனியாளாக கியூபாவை விட்டு வெளியேறி பொலிவியா சென்றார். அங்கே அடர்ந்த காட்டினூடே படைகளைத் திரட்டினார். சமரசமில்ல போராளி சே யின் கொலை கொரில்லா போர் பற்றி எர்னெஸ்டோ பல நூல்கள் எழுதியுள்ளார். சமரசமில்லாத போராளி சே. பொலிவியாவில் கொரில்லாப் போரின் போது காலிலும் தொழிலும் குண்டு பட்டு அவதிப்பட்டார் எர்னஸ்டோ. ஆனால் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையின்போது சே கைது செய்யப்படுகிறார். பொலிவிய இராணுவத்தின் அதிகாரியான மரியா டெரான் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் எர்னெஸ்டோ சே குவாராவை அக்டோபர் 9-1967 இல் சுட்டுக் கொல்கிறான். அதற்கு முன்பே, அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவனும் சே -வைக் கொல்ல ஆணை பிறப்பிக்கிறான். இதானால் மரியா டெரான் ஆணவமும், அதிகார வெறியும் கொண்டு, தன் பிறந்த நாளில் அருந்தியிருந்த மதுவின் போதையில் எர்னெஸ்டோ சே குவாராவை சுட்டுக் கொல்கிறான். மரணிப்பு நிரூபிக்க மணிக்கட்டுக்கள் துண்டாடல் தன் நெஞ்சில் சுடப்படுவதற்கு முன், டெரானைப் பார்த்து அனல் கக்கும் வார்த்தைகளைக் கக்குகிறார் சே. என்னை நீ சுடப்போகிறாய் என்று தெரியும், சுடு குள்ள நரியே ..! நீ ஓர் ஆண்மகனைக் கொல்லப் போகிறாய் என்றதுதான் தாமதம், உடனே சே -வின் உடல் துப்பாக்கி குண்டுகளால் சல்லடைத் துளையாக்கப்பட்டது. உடலை சின்னாபின்னமாக சிதைக்கின்றனர் ராணுவத்தினர். சே -வுடன் இன்னும் 6 புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர். சே கொல்லப்பட்டதை , வெளி உலகுக்குச் சொல்ல, நிஜமாகவே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய, அவரின் கை ரேகைகளைப் பதிக்க ஏர்னஸ்டோவின் கைகளை மணிக்கட்டுடன் வெட்டி கொண்டு போகின்றனர் பாவிகள். எழுந்து நின்று சுடச்சொன்ன சே பின்னர் எர்னெஸ்டோவின் கைகள் கியூபா அரசுக்கு வந்து சேர்ந்தன. உடலினை இராணுவம் விமானத்தின் ஊடு தளத்தில் புதைத்தது. சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்ற போராளி, அஞ்சா நெஞ்சர் எர்னெஸ்டோ. தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். (காலில் அப்போது குண்டடிபட்டிருந்தது) கொன்றவன் வாக்கு மூலம் & எலும்புகள கண்டுபிடிப்பு சே குவேராவின் இறப்பு பற்றி பின்னர் 1997 ம் ஆண்டு, அமெரிக்க உளவாளி ரோட்ரிக், உத்தரவிட்ட பிராடோ மற்றும் கொலை செய்த மரியா டெரான் வாக்கு மூலம் அளித்தனர். 30 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் புதைக்கப் பட்டிருந்த எர்னஸ்டோவின் புதைவிடம் தோண்டப்பட்டது. புதை பொருள் ஆய்வாளர்களால் விமான ஊடு பாதையிலிருந்து எடுத்த அந்த 7 எலும்புகளும் இனம் காணப்பட்டன. 1967 ம் ஆண்டு, அக்டோபர் 10 ம் நாள் எழுதிய பிரேத சோதனையின் குறிப்புகளிலிருந்தும், வெட்டி எடுத்து வைத்திருந்த மணிக்கட்டுடன் கூடிய கைகளிலிருந்தும், கிடைத்த தடயங்களான மணிக்கட்டின் அமைப்பு, பற்களின் அமைப்பு, துப்பாக்கி சூட்டின் தழும்புகள் ஆகியவற்றைக் கொண்டு ஏழு பேரின் எலும்புகளும் அடையாளம் காணப்பட்டன. தேசிய எல்லைகளை உடைத்த சர்வதேச புரட்சியாளர்கள் என அவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரியாதை செய்யப்பட சே வின் எலும்புகள் 1997 ல் சேவின் எலும்புகளுக்கு மரியாதை செலுத்தும் மக்கள் புரட்சியாளர்களின் எலும்புகள் இராணுவ மரியாதையுடன் 1997 , ஜுலை 2 ம் நாள் பொலிவியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் வருகிறது. 30௦ ஆண்டுகள் கழிந்த பின் பொலிவியாவின் ஹவான புரட்சி மாளிகையின், சர்வதேச புரட்சியாளர்களின் எலும்புகள் மரக் கலசத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 40 லட்சம் மக்களின் கண்ணீர் அன்பளிப்புகளுடன் , அவர்கள் சாந்தா கிளாரா என்ற இடத்தில் கல்லறையில் வைக்கப்பட்டனர். அமைக்கப்பட்டது. நினைவுச் சின்னம் அக்டோபர் 17 ம் நாள் அந்த இடத்தில் அவர்களது நினைவுச் சின்னம் கியூபாவில் நிறுவப்பட்டது. அந்த இடம்தான் கியூபாவில் எர்னெஸ்டோ போரிட்ட கியூபாவின் போர்க் கொத்தளம். அவன் வென்ற இடம். சே வெற்றி பெற்ற இடத்திலேயே இன்று மீளா ஆழ்துயிலில் இருக்கிறார். துப்பாக்கி குண்டின் முன்னே சே யின் கவிதை பிடலுக்கு துப்பாக்கி குண்டுகள் நெஞ்சைத் துளைக்க வந்தபோது, எர்னெஸ்டோ சொன்ன கவிதை பிடலுக்கு ஒரு பாடல் என்று.: “எம் வழியில் ஈய ரவை குறுக்கிடுமேயானால் நாம் கேட்பதெல்லாம் எமது கொரில்லா எலும்புகளை மூட, அமெரிக்கக் வரலாற்றுத் திசை வழியில் கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி வேறெதுவும் வேண்டேன்”. இன்று புரட்சிப் பூவின் நினைவு நாள். அவருக்காக இந்த கட்டுரை. மோகனா. https://bookday.in/october-9-is-the-anniversary-of-the-international-revolutionary-che-guevara-prof-s-mohana/
  11. களிறன்ன நறுமாமலர் – ஜெயமோகனின் இரவு: கா.சிவா – அகழ் எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை போன்ற பெருநாவல்களையும் வெண்முரசு என்ற பெயரில் 26 நாவல்கள் கொண்ட தொகுதியையும் படைத்துள்ளார். பிரமாண்டமான இவற்றின் நிழலில், அவர் எழுதிய சிறு நாவல்களான ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், அனல் காற்று, இரவு, உலோகம் போன்றவை மறைந்து கிடக்கின்றன. இவை மட்டுமல்லாமல் குறு நாவல்களும் சிறுகதைகளும் தனியாக குவிந்துள்ளன. இவற்றுள் கன்னியாகுமரி, அனல் காற்று, இரவு மூன்றும் மனிதர்களுக்குள் காமத்தினால் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் மனதில் உண்டாகும் உலைதல்கள், கொந்தளிப்புகளை பேசுபொருளாகக் கொண்டவை. இவற்றுள் இரவு முதன்மையான நாவலாகும். எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாய் சுட்டிக் காட்டி வெம்மையின் மொழியில் பேசும் பகல் தந்தையைப் போல. பகலை முழுக்க அறியமுடிவதால் சற்று விலக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலானவற்றை மறைத்து தேவையானதை மட்டும் காட்டி, தண்மையான மொழியில் பேசும் இரவு தாய் போல. இதை முழுவதுமாய் அறியமுடியாததாலேயே அணுக்கமானதாகவும் பிரியத்திற்குரியதாகவும் உள்ளது. பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்களில் ஒன்றை மட்டுமே பகலில் காணமுடிகிறது. ஆனால், இரவில் அளவிட முடியாத தொலைவுகளில் இருக்கும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் காணமுடிகிறது. இப்படி பகலுக்கில்லாத இரவின் தனித்துவ சிறப்புகள் பலபல. அவற்றுள் இரவு நாவலும் ஒன்று. மனிதர்கள் அனைவருமே இரவு வாழ்வை அறிந்தவர்கள்தான். பகலின் வெம்மையை தணித்துக் கொள்ள, பகலின் ஓட்டத்திலிருந்து ஓய்வு கொள்ள, பகலின் கொந்தளிப்புகளை ஆற்றிக்கொள்ள இரவு தேவைப்படுகிறது. ஆறுதல் கொள்ள இரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் பலர் பகலையே எதிர் கொள்கிறார்கள். இரவில் துளிர்க்கும் இன்பத்தை சுவைக்காத எவரும் இப்புவியில் இல்லை. ஆனால், இரவு வாழ்க்கை திணிக்கப்பட்ட காவலர்கள், பாதுகாவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், மென்பொருள் பணியாளர்கள் போன்ற சிலரைத் தவிர பிறருக்கு இரவில் மட்டும் வாழ்வதைப் பற்றி ஒருபோதும் எண்ணம் எழுவதில்லை. கடமைக்கென இல்லாமல் இயல்பான இரவு வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறது இந்நாவல். சென்னையில் பெரும் வருமானம் ஈட்டும் ஆடிட்டர் சரவணன் ஒரு மாதம் தனிமையிலிருந்து பணியாற்றுவதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தை ஒட்டிய காயல்களுக்கு அருகில் அமைந்த இடத்திற்குச் செல்கிறான். அங்கே, அண்டை வீடு இரவில் களியாட்டங்களுடனும் பகலில் தூங்கி வழிந்து கொண்டிருப்பதையும் கண்டு, ஓர் ஆர்வத்தினால் மறுநாள் இரவு அங்கு செல்கிறான். அங்கிருப்பவர்கள் அவனைப் பார்த்தவுடனேயே அன்புடன் வரவேற்று தங்களில் ஒருவனாக உணர வைக்கிறார்கள். இரவுலாவிகளாக வாழும் அவர்களுடைய இனிமையும் உற்சாகமும் அதீதமாக உடைய வாழ்வை, புதிதாக பள்ளிக்கு செல்லும் இளம் பிள்ளையின் ஆர்வத்துடன் பார்க்கிறான். இதுவரை உணராத அந்த வாழ்வின் மாயத்தால் ஈர்க்கப்படும் சரவணன் அவ்வாழ்வில் நீடித்தானா வெளியேறினானா என்பதை நாவல் இரவுக்கேயுரிய நளின மொழியில் கூறுகிறது. அருமையான வாசிப்பனுபவத்தைத் தரும் இந்நாவலின் கதையை கூறி அவ்வின்பத்தைக் குலைக்காமல், அதன் சிறப்புகள் என நான் எண்ணுபவற்றை மட்டும் கூறுகிறேன். விஜயன் மேனன் – கமலா தம்பதிகள் மட்டுமே இரவின் இனிமையை உணர்ந்து அதற்குள் வந்தவர்கள். நீலிமா, மஜீத், பிரசண்டானந்தா, முகர்ஜி, தாமஸ் போன்றவர்களெல்லாம் பகலில் வாழமுடியாமல் இரவு வாழ்க்கைக்கு வந்தவர்கள். இரவு வாழ்க்கைக்குள் வந்தவுடன் தேனில் சிக்கிய சிற்றுயிரென அதன் இனிமையிலிருந்து வெளியேற முடியாதவர்களாகிறார்கள். இரவின் கொந்தளிப்பும் பரவசமும் துயரும் உச்சத்திலேயே உள்ள வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சாக்த வழிமுறைகளை கடைபிடிக்கும் பிரசண்டானந்தா சீடர்களுடன் இரவுக்கு ஏற்ற மாதிரி தனது ஆசிரமத்தில் வழிபாடுகளை நடத்துகிறார். பாதிரியார் தாமஸ் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வருபவர்களுக்காக இரவு பிரார்த்தணை நடத்துகிறார். பெரும் துயரத்தால் உண்டான அதிர்ச்சியில் மூளை நரம்பில் பிரச்சனை ஏற்பட்டதால், பகலைக் காண முடியாமலான நீலிமா இரவு வாழ்க்கைக்குள் வருகிறாள். இவளுக்காக இவளுடைய அப்பாவும். இவர்களின் வாழ்க்கை முறை கற்பனை என்று ஒரு கணமும் எண்ணமெழுந்திடாத வகையில் இயல்பாக காட்டப்பட்டுள்ளது. சரவணனை நீலிமா பாலைமணல் நீரை ஈர்த்துக் கொள்வதுபோல ஏந்திக் கொள்கிறாள். சரவணனை முதலில் கவர்வதும், தொடர்ந்து அவளை நோக்கி அவனை ஈர்ப்பதும் அவளின் மனமல்ல உடல்தான். இரவின் மயக்கும் பூடகத் தன்மையுடன் அவளும் இருப்பதனாலேயே இவன் மனம் ஏனென்றே புரியாமல் அவளை நோக்கியே அலைவுறுகிறது. அவள் நடத்தைகள் ஒருவித அசௌகரியத்தை அளித்தாலும், பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அவள் கூறினாலும் கடுமணத்தின் மேல் உண்டாகும் பிரியம்போல சரவணனின் மனம் அவளை நோக்கியே செல்கிறது. தன் புதிர்த்தன்மையாலேயே விலக்கவும் ஈர்க்கவும் செய்யும் இரவின் ஒரு குறியீடு போலவே நீலிமா பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இரவுதான் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான பொழுது என்பதை பல்வேறு தர்க்கப்பூர்வமான காட்சிகளினால் விவரிக்கிறது நாவல். காணும் காட்சிகளில் வெளிப்படும் அழகு, தண்மையான வெளி, மென்மையான ஒளி, உற்சாகமான மனநிலை எல்லாம் இரவில்தானே அமைந்துள்ளது. மனிதனின் அத்தனை கலை வடிவங்களும் இரவில் நிகழ்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதையும் யாராலும் மறுக்கமுடியாது. ஆசிரியரின் பெரும்பாலான கதைகளில் வாசகர்கள் தங்களின் உணர்வால் சிந்தனையால் முன்சென்று உணர்வற்கான இடைவெளி இருக்கும். ஆனால் இந்நாவலில் ஒரு அத்தியாயத்தில் வாசகனின் தர்க்க மனம் ஏற்காதவாறு ஒரு சம்பவம் நிகழும். அடுத்த அத்தியாயங்களில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பதை தர்க்கப்பூர்வமாக விவரிக்கப் பட்டிருக்கும். உதாரணமாக சரவணனை முதல் முறையாக பார்த்தவுடனேயே நீலிமா காதல் கொள்வதாக காட்டப்பட்டிருக்கும். இதை வாசித்தவுடன் இதென்ன திரைப்படக் காட்சிபோல பெரும் கற்பனையாக உள்ளதே எனத் தோன்றும். சில அத்தியாயங்களுக்குப் பிறகு வாசிப்பவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இதற்கான விளக்கம் இருக்கும். ஒரு நிர்வாண சடங்கு முறையைக் கண்டவுடன் சரவணன் மயங்கி விழுகிறான். ஏன் இது நிகழ்கிறது என்பதற்கான பதில் அடுத்த அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டிருக்கும். பொதுவாக இம்மாதிரியானவற்றை வாசகனே உய்த்துணருமாறு விடுபவர் இதில் விவரிப்பதற்கு காரணம், தவறான ஒன்றை எண்ணிக் கொள்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால்தான் என நான் கருதுகிறேன். இரவில் மட்டும் மீன் பிடிக்கும் தோமா, பெரியச்சன் பாத்திரங்கள் மூலம் பொருளீட்டுவதற்காக இரவு வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும் அறிய முடிகிறது. அம்மீனவர்களுக்கு உணவு அளிக்கும் கடைக்காரர்களும் இரவுலாவிகள்தான். ஆனால் இவர்களெல்லாம் பெரும் பரவசம் ஏதுமின்றி, பெரும் கலைக்கோவிலினுள் அதன் சிற்பத்தையோ மரபையோ அறியாது கடமைக்கென பணியாற்றும் அதிகாரிகள் போல, விதிக்கப்பட்டதெனவே இரவு வாழ்வை வாழ்கிறார்கள். மீனவர்களுடன் சிறு படகில் காயல் வழியாக கடலுக்குள் செல்லும் சரவணன் சுற்றிலும் விளக்கொளி இல்லாத இருளில், தொலைவில் வானில் சுடரும் விண்மீன்களையும் கடலில் பிரதிபலிக்கும் அவற்றின் ஒளியையும் கண்டு இயற்கையின் பிரமாண்ட அழகையும் விரிவையும் உணர்கிறான். இதனால், பெரும் மனவெழுச்சியடைந்து இரவு வாழ்க்கையை விட்டு விலகுவதென எடுத்த முடிவை கைவிடுகிறான். இக்காட்சி இரு பேரிலக்கிய காட்சிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. ஒன்று, லேய் தல்ஸ்தாயின் “போரும் அமைதியும் ” நாவலில் நீல வானின் பின்னணியில் நெப்போலியனைக் காணும் போது மனிதர்களின் இருப்பும், அவன் லட்சியமும், வாழ்வும் எத்தனை சிறியது என பிரின்ஸ் ஆண்ட்ரூஸ் அடையும் தரிசனம். மற்றொன்று, பியோதர் தஸ்தவேஸ்கியின் “கரமோசவ் சகோதரர்கள்” நாவலில் அல்யோஷா, முதியவர் ஸோசிமாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவந்ததால் உண்டான மன சஞ்சலத்துடன் இருக்கும்போது, கருநீல வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்டு உள்ளெழுச்சியுடன் மனமுறுகி பூமியை முத்தமிட்டு உலகிலுள்ள அனைவரையும் மன்னிக்கவும், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் விரும்பும் இடம். இம்மூன்று காட்சிகளையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது பெரும் மனயெழுச்சி உண்டாகிறது. அதே நேரத்தில், சூழ்ந்து, விரிந்திருக்கும் ஒளிர் வானத்தை பார்க்காமல் வாழும் மனிதர்கள்தான் குறுகிய மனதுடன் வாழ்கிறார்களோ, அதனைக் கண்டால் மனம் விரிந்துவிடுவார்களோ என்றும் எண்ணம் தோன்றுகிறது. நாவல், சரவணனின் எண்ணவோட்டங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் இரு அத்தியாயங்களில் இரவை பற்றிய அவன் எண்ணங்கள் பொதுவான மன நிலையுடன் ஒரு தட்டையான பார்வையாகவே உள்ளது. பிறகு மெல்ல மெல்ல அவ்வாழ்க்கைக்குள் நுழையும்போது, அவன் பார்வையும் எண்ணவோட்டமும் இரவின் நுணுக்கமான செதுக்குகளையும் உணரும் அளவிற்கு கூர் கொள்வதைக் காட்டி அவனின் பரிணாமத்தைச் சுட்டுகிறது. வாசிப்பவர்களின் உள்ளமும் அதில் தோய்கிறது. மேனன் இரவை அறியும் கணம் ஒரு கவித்துவ தருணமாக உள்ளது. மரநாயின் மரகதக்கல் போன்ற பசும் விழிகள் அவரை இரவின் அற்புதத்திற்குள் இழுக்கிறது. கொன்னைப் பூக்குவியலில் செய்யப்பட்டது போன்ற சிறுத்தையின் மீசை முடிகளில் தண்ணீர்த்துளி ஜொலித்ததை கண்டவுடன் மேனனின் இரவுக்கான அகவிழிகள் திறக்கின்றன. சரவணனின் அகவிழி திறக்கும் கணமும் பெரும் தரிசனம் போலவே காட்டப்பட்டுள்ளது. இதுவரை வானத்தை சாவகாசமாய் பார்த்தேயிராதவன் பார்க்க ஆரம்பிக்கிறான். பல்லாயிரம் விழிகளென சூழ்ந்து, விண்மீன்கள் இவனை பார்க்கின்றன. அவையும் சில கணங்களில் உணர்வுகள் வெளிப்படும் மிருகங்களின் விழிகளாக தெரிய ஆரம்பிக்கின்றன. அவை இரவின் விழிகளேதான். இந்தப் பார்வை மூலம் மேனன் மற்றும் சரவணனின் அகவிழிகள் திறப்பதாக ஓர் எண்ணம் எழுந்தாலும் இரவு தன்னை இவர்களுக்கு காட்டி உள்ளிழுக்கிறது என்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இந்நாவலை உவமைகளாலேயே கட்டமைத்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு உவமைகளையும் வாசித்து அதை கற்பனையில் காண்பது பேரனுபவமாக உள்ளது. உதாரணமாக இரவு வாழ்க்கைக்கு பழகியபின் சரவணன் பகலைக் காணும் காட்சி. //அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்பு நீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது // மேலும் ஒரு திகைக்க வைக்கும் உவமை “தூங்கும் மிருகம் ஒன்றின் உடல் வழியாக ஊர்ந்து செல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி”. இன்னும் ஒரு புதுமையான உவமை “ஜெட் விமானத்தின் பின் பக்கம் நெருப்பு உமிழும் உக்கிரமான இயந்திரம் போல என் இலக்குகள் என்னை ஒவ்வொரு கணமும் தூக்கிச் சென்று கொண்டிருந்தன”. இவற்றைப் போன்ற உவமைகள்தான் வாசிப்பவரை நாவலுக்குள்ளேயே லயித்திருக்கச் செய்கின்றன. ஜெயமோகன் எழுதி, இப்போது வெளிவந்துள்ள “பத்து லட்சம் காலடிகள்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஔசேபச்சன் கதைகளுக்கு சுவைகூட்டும் உரையாடல்களுக்கு முன்னோடியான தொடக்கம் இந்நாவலில் உள்ளது. நாயருக்கும் தாமஸுக்குமான உரையாடலின் போது //இந்த நாயர்கள் அடிப்படையில் போலீஸ்காரர்கள். அதாவது படைவீரர்கள். அவர்கள் தத்துவஞானிகளாக இருக்கலாம். கலைஞர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். ஒரு லார்ஜ் உள்ளே போனால் எல்லா நாயரும் படைநாயர்தான். அதன் பிறகு லெ·ப்ட் ரைட் மட்டும்தான் மண்டைக்குள் இருக்கும்// என்று தாமஸ் கூறுவதும், அதற்கு நாயர் //இவனோட பிஷப்புக்கு ஒரு நான்கு லார்ஜ் ஊற்றிக்கொடுத்துப்பாரு. சங்ஙனாச்சேரியிலே அவன் அப்பூப்பன் பரட்டுக்காட்டு தோமாச்சன் வாத்து மேய்க்கிறப்ப சொல்ற எல்லா கெட்டவார்த்தையும் அவன் வாயிலேயும் வரும்//. எல்லா மதத்தவரும் பிற மதத்தினருடன் எத்தனை இணக்கமாக இருந்திருந்தால் இத்தனை உரிமையோடு பேசிக் கொண்டிருக்கமுடியும் என்ற எண்ணத்துடன் பெருமூச்சு எழுகிறது. ஜெயமோகன், யட்சிகளை மையமாக வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்நூலை யட்சி நாவல் என்றும் சொல்லலாம். கமலா மற்றும் நீலிமாவின் பாத்திரங்கள் யட்சிகளைப் போலவே படைக்கப்பட்டுள்ளன. பகலில் பெண்களாயிருப்பவர்கள் இரவில் யட்சிகளாகிறார்கள் என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. நள்ளிரவில் ஆம்பல் குளத்தருகே புழக்கமின்றி இருக்கும் யட்சி கோவிலும், அதன் அருகே அரவம் சூழ பூத்திருக்கும் நிஷாகந்தி மலரை பறித்து வரும் நீலிமாவைப் பற்றிய சித்தரிப்பும், கொடுங்கல்லூர் ஆலய வழிபாட்டைக் கூறும் காட்சியும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது. அந்த வாழ்வுக்குள்ளேயே இருப்பவர்கள் இதற்கு மேல் அடுத்து என்ன என உந்தும் மனதிற்கு செவிகொடுப்பதன் மூலம், உள்ளிழுத்து அழிக்கும் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் புதிதாக நுழையும் சரவணன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீருக்குள் இறங்குபவனைப் போல எப்போதும் திரும்புவதற்கான ஒரு கதவை திறந்து வைத்தபடியே உள்நுழைகிறான். சற்று விலகி நின்று ஐயத்துடனேயே அணுகுகிறான். இதனால் அவர்கள் போல உக்கிரத்துடன் சென்று மாட்டிக் கொள்ளாமலும் மேல்மட்டத்திலேயே நின்று தவிக்காமலும் அவ்வாழ்வில் திளைக்கிறான். அவ்வாழ்வினால் ஏற்படக் கூடிய இன்னல்களை லாவகமாகத் தவிர்த்து இனிமையாக வாழத் தொடங்குகிறான். இயல்பாக செல்லும் கதை சட்டென ஒரு உச்சத்தை அடைந்துவிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை மனம் ஏற்கத் தயங்குகிறது. எல்லாச் சம்பவங்களுக்கும் விளக்கமிருக்கையில் பலரின் வாழ்வைப் பாதிக்கும் முதன்மையான திருப்பத்திற்கு விளக்கம் சரிவர அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. மேலும், இரவுலாவிகளாய் இருப்பவர்கள் பகலில் சந்திப்பதாக கூறப்படுவது சற்று முரணாகவும் படுகிறது. ஆனால் வாசித்து முடித்தபின் நாவலைப்பற்றி எண்ணினால் மேனன் மற்றும் சரவணன் இரவு வாழ்க்கையில் அடைந்த பரவச கணங்கள் மட்டுமே மனதில் இனிமையாக நீடிக்கிறது. இதற்கு காரணம், நாவலின் கட்டமைப்பில் அந்த பரவசக் காட்சிகள் நேரடியாக காட்டப்பட்டுள்ளதும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் மற்றொருவரின் கூற்றாக அமைந்துள்ளதும்தான். இரவின் சிறப்பான கூறுகளில் ஒன்றான தேவையானதின் மீது மட்டும் ஒளி பாய்ச்சி பார்த்துக் கொள்ளலாம் என்பதை சுட்டும் வண்ணம் முக்கியத்துவம் எனத் தான் கருதுவதை மட்டும் காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர். இந்த இலக்கிய நாவலை சுவாரசியமான த்ரில்லராக ஜெயமோகன் எழுதியுள்ளார். இதைப் போன்றே இவரின் “உலோகம்” நாவலும் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் வாழ்வு முறையின் பல்வேறு சாத்தியங்களை காட்டுவதிலும், நிகர் வாழ்வனுபவத்தைத் தருவதிலும் “இரவு” நாவல் வேறுபட்டு முன்நிற்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக பகலில் விழித்து வாழ்ந்து பழகிய முன்னோர்களைக் கொண்ட வாசகனின் உள்ளத்தில் இரவு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டுமென்ற விழைவை, அந்த இனிமையை சுவைத்துவிட வேண்டுமென்ற பேராவலை ஒரு கணமேனும் ஏற்படுத்திவிடுவது இந்நாவலின் வெற்றியாகும். ஆனால் அந்த எண்ணத்தை இரண்டு காரணிகள் தடுக்கின்றன. ஒன்று உக்கிரமான இன்ப வாழ்வை உணர்த்தபின் எளிய அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியாதென்பது. மற்றொன்று, பெரும் பணம் சேமிப்பிலிருக்க வேண்டுமென்பது. ஒரே இரவில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள இந்நாவலை வாசிப்பதற்கு முன் மனதில் இருந்த மர்மமான, அழகான, தண்மையான இரவைப்பற்றிய சித்திரம் வாசித்து முடித்தபின் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதுவரை சாதாரண கல்லென எண்ணிப் புழங்கிக் கொண்டிருந்த ஒன்றின் மீது ஒளியைப் பாய்ச்சி, அது இதுவரை காணாத பலவித வணணங்களாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி அதனை வைரமென உணரவைப்பதைப் போல இரவின் பல பரிமானங்களைக் காட்டுகிறார் ஆசிரியர். இருளுக்குள் உறைந்திருக்கும் பிரமாண்ட விஷ்ணு சிலையை காண்பதற்காக காட்டப்படும் தீபம், இன்னும் பல மடங்கு பெரியதாக,அரூபமானதாக, எண்ணும் போதெல்லாம் பரவசத்தை தருவதாக மனதுள் நிலைக்க வைப்பதைப் போல இந்நாவல் மூலம் இரவை விளக்க முற்படுவதான பாவனையில் அதனை பரவசமாக எண்ணித் திளைக்குமாறு வாசகர் மனதில் பெரும் படிமமாக உறையவைக்கிறார் ஜெயமோகன். பொதுவாக விமர்சனக் கட்டுரைகள் நூலை இயந்திரத்தின் பாகங்களை பிரித்து பரப்பி வைத்து இப்பாகங்கள் இதனுடன் இணைகிறது. இப்பாகத்தின் சிறப்பு இது. இவை இணைவதன் பயன் இவை என விளக்குவதாகவோ அல்லது படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதாகவோ இருக்கும். ஆனால், அழுத்தினாலே கசங்கி கன்றிவிடும், மெல்லிய கடுமணம் வீசும் வெண்மையான மென் நிஷாகந்தி மலர் போன்ற இரவு நாவலை அவ்வாறு பிரித்து ஆராய என் மனம் ஒப்பவில்லை. அது என் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளையும் அது தொட்ட நினைவுகளையும் மட்டுமே கூறியுள்ளேன். விமர்சனத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக ஒன்று… “மிருகங்களிலேயே யானையை பழக்குவதுதான் மிகமிக எளிமையானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிட முடியாத மிருகமும் யானைதான்” என்று இரவை வரையறுக்க முயலும் ஒரு கூற்று இந்நாவலில் உள்ளது. இது “இரவு” நாவலுக்கும் பொருந்தும். வாசிக்க எளிமையான நாவல்தான் இது. ஆனால் ஒரு போதும் முழுமையாக வாசித்துவிடவும் முடியாது. கா. சிவா கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். https://akazhonline.com/?p=3533
  12. ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை ராஜேஷ் சந்திரா ஆகஸ்ட் 22, 2021 ராஜேஷ் சந்திரா “கொடும்பாவி” என்ற வார்த்தையோடுதான் இலங்கை இனப் பிரச்னை எனக்கு அறிமுகமானது. பள்ளிப் பாடங்கள் படித்துக்கொண்டிருந்த ஒரு மாலையில் தெருவில் வழக்கத்துக்கு அதிகமான சத்தம் கேட்க வெளியே வந்தால் எதையோ எரித்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று கேட்க ஒரு அண்ணன் ஆவேசமாக “ஜெயவர்தனேவின் கொடும்பாவியை எரிக்கிறோம்” என்று கூவினார். அதற்கு அடுத்த வாரம் இலங்கையில் நடந்த கலவரத்தைக் கண்டித்து ஒரு வாரம் விடுமுறை விடடார்கள். மாணவர்கள் விவஸ்தையில்லாமல் விடுமுறைக்காக சந்தோஷமாகக் கைத்தட்டினோம். ( இன்று ஃபேஸ்புக்கில் மரண செய்திகளுக்கு லைக் போடுகிறார்கள். பரிணாம வளர்ச்சி அடையவில்லை.) 2000-களில் தமிழ் வலைப்பதிவுகளில் மிக உணர்வுபூர்வமாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் இலங்கை. இயக்கங்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற இரு வண்ணங்கள் மட்டுமே பூசப்படும். இயக்க எதிர் நிலை எடுப்போரின் சாதி, பெற்றோர் கற்பு ஆகியவை விமர்சையாக விவாதிக்கப்படும். இவர்களில் பலருக்கு இதன் முழுப் பரிமாணமும் தெரியாது. யாரோ சொன்னார்கள் என்று இவர்களும் கோஷ்டிக் கானத்தில் சேர்வார்கள். கிடைக்காதது உண்மை நிலவரம். அதனால் எதிலும் சேராமல் மவுனம் காத்தாலும் இலங்கை நண்பர்கள் கிடைத்தார்கள் . அவர்கள் வழியே சில தெளிவுகள் கிடைத்தாலும் இன்றும் இயக்க வரலாறுகள் மர்மமானவையே (அதிலும் LTTE பற்றிய உண்மைகள் இன்னும் குறைவு). இந்த நிலையில் ஷோபாசக்தியின் படைப்புகள் அறிமுகமாயின. முதல் நாவலான “கொரில்லா” முதன் முறையாகப் படிக்கும்போது அதன் இலங்கைத் தமிழைவிட நேர்கோட்டில் செல்லாத நாவல் அமைப்பு குழப்பியது. என்றாலும் கதாசிரியரின் சவாலை ஏற்று அதனுள் புகுந்தபோது அங்கதம் கலந்த வாழ்க்கைக் குறிப்புகள் ஷோபாசக்தி எழுதியவைகளைப் படிக்க வைத்தன (வைத்துக் கொண்டிருக்கின்றன). “கொரில்லா” நாவல் 1970-90-களில் ஈழத்தில் நடந்த பல உண்மை சம்பவங்கள் வழியே பல உண்மை மற்றும் கற்பனைக் கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறது. முதல் பாகத்தில் யாக்கோப் அந்தோணிதாசன் (ஷோபாசக்தியின் பாதிப்புள்ள பாத்திரம் ) அடைக்கலம் வேண்டி ஃப்ரெஞ்சு அதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுதுகிறார். முதலில் இந்திய அமைதிப் படையினரால் இயக்கத் தொடர்பு உள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டு (இயக்கத் தோழர்களுக்கு விளம்பரத்தட்டி எழுதியதால்), உதைபடுகிறார் . அவர்கள் இலங்கையை விட்டு நீங்கியபின் LTTE கைது செய்கிறது (அவர் சக போராளிகளைக் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்). விடுதலை ஆனபின் இப்போது போரில் இலங்கை ராணுவத்தின் கொடுமை (போராளி என்ற சந்தேகம்). கொழும்பில் கைது செய்யப்பட்டு, பின் ஒரு தமிழ் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்து போலி பாஸ்போர்ட்டில் ஃப்ரான்ஸில் அடைக்கலம். இரண்டாம் பாகத்தில் ரொக்கிராஜ், குஞ்சன்வயல் என்ற கிராமத்தில் அறிமுகமாகிறான். இவன் தந்தையிடம் அடிவாங்கிய ஒரு போலீஸ் அதிகாரி அவருக்கு வைத்த பெயர் கொரில்லா. அதனால் ரொக்கிராஜுக்கும் அந்தப் பெயர். அவனும், அவன் தங்கையும் தந்தையின் அடாவடியை வெறுக்கிறார்கள். ஒரு நாள் வீட்டில் சொல்லாமல் ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்கிறான். அவனுக்கு இயக்கம் வைத்த பெயர் சஞ்சய் (அவன் பக்கத்தில் நின்றவனுக்கு ராஜீவ்…இது இந்திரா இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்த காலம்). இந்தப் பெயரை வைத்து அவன் தந்தை போகிறபோக்கில் அடிக்கும் ஒரு வசனம் கவனமாகப் படிப்பவர்களுக்குப் புரியும். பயிற்சியை முடித்தவுடன் இயக்கம் அவன் கிராமத்துக்கே காவலுக்கு அனுப்புகிறது. தயக்கத்துடனே வருகிறான். அவன் அஞ்சிய மாதிரியே தந்தையோடு மோதல் ஏற்படுகிறது. இதனிடையில் இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவரை இவனும், தோழனும் தாக்கிவிடுகிறார்கள். அதில் ஏற்பட்ட கசப்பில் இயக்கத்திலிருந்து விலக, அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டு இயக்கச் சிறையில் சில நாட்கள் செலவிடுகிறான். பிறகு கொழும்பில் வேலை செய்வதோடு முடிகிறது. மூன்றாம் பாகம் ஃப்ரான்ஸில் அந்தோணிதாசன் தோழர் ஒருவரின் பார்வையில் கதை தொடர்கிறது. கம்யூனிசம், கிறிஸ்தவம், சற்று வசதியுள்ள இலங்கைத் தமிழர் லொக்கா என்ற தனிநாயகம் என்று நூலறுந்த பட்டமாக அந்தோணிதாசன் வாழ்க்கை அலைந்து ஒரு கொலைக்கான விசாரணையில் உண்மையில் அவர் யார் என்பதோடு முடிகிறது. கதைக்களம் இந்தியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் புதியது. இதற்கு முன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதியிருக்கலாம். ஆனால் தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று படித்தவர்களுக்கு ஷோபாசக்தி கதைகூறும் முறையும், நிகழ்வுகளை ஒரு அலட்சிய பாவனையில், பகடியுடன் பயங்கரவாதத்தை எழுதும் முறையும் தொந்திரவு செய்யும். அவரின் அரசியல் சாய்வுகளை நான் பேசப் போவதில்லை. ஒரு கதாசிரியராகவே இங்கு அவரின் படைப்புகளைப் பேசமுடியும். (ஆனால் படைப்புகளே அரசியல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்). கதை 1970-90-களின் ஈழத்து வரலாறோடு பின்னிப் படர்ந்திருக்கிறது. இலங்கை ராணுவமும், இயக்கமும் மக்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள நடக்கும் அரசியல் போட்டியாகவும், இரு தரப்பும் பயங்கரவாதத்தை தயக்கமில்லாமல் பிரயோகிக்கவும் செய்கின்றன. இவர்களின் ஊடாக ஒரு தனி மனிதனின் இருத்தலை நாவல் காட்ட முயல்கிறது. இதில் ரொக்கிராஜோடு இணையாமல் சில நிகழ்வுகள் புகைப்படங்களாக வந்து போகின்றன. உதாரணமாக, குமுதினி படகுப் படுகொலைகள், அவன் தங்கை பிரின்சி நடத்தும் தற்கொலைத் தாக்குதல், அவன் அத்தை முறையாக வேண்டிய ஜெயசீலி, சபாலிங்கம் கொலை (இவர் LTTE-க்கு எதிரான புத்தகம் ஒன்றை எழுதியதால் 1994-ல் கொல்லப்படடார்), நாவலின் பல கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்போதே எவ்வாறு இறந்தார்கள் என்ற குறிப்புகளுடன் வருவது போன்றவற்றை சொல்லலாம். ஒரு வகையில் ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்ந்து, விலகி, அதன் போக்கை அவதானிப்பதாக இந்த சம்பவங்கள் அமைகின்றன. ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன. அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது. உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான். இது ரொக்கிராஜுவின் இயக்கப் பேரோடு பொருத்தினால் வரும் அர்த்தமே வேறு. தன் தந்தையை இயக்கத் தோழர்களோடு கைது செய்ய வரும் இடத்தில் தந்தை பயமே இல்லாமல் ஆயுதத்தோடு வர , இவர்கள் பயந்து பின்வாங்கி ரொக்கிராஜ் திடீரென்று தன் நண்பனிடம் “அந்த கிரனேடை எடுத்து அடி” என்று கத்த, இப்போது கொரில்லா பின் வாங்குகிறான். கண்ணிவெடியாகப் புதைக்கப்பட்டிருந்த சிலிண்டரை கொரில்லா திருடி விற்று காசு பார்க்க, இயக்கம் மகனை உதைக்கும் இடம். நாவலில் இரண்டு இடங்களில் மட்டும் கேள்விகள் எழுந்தன. 1) பிரின்சி-யின் இந்திய அமைதிப்படையின் மீதான தற்கொலைத் தாக்குதல். ஷோபா இது நடந்த அடுத்த மாதம் அமைதிப்படை இந்தியா திரும்பினர் என்று சொல்கிறார். மேலும் பிரின்சியின் இயக்கப் பெயரையும் அடிக்குறிப்பில் தருகிறார். எனக்குத் தெரிந்த வரையில் பெண் கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதல் LTTE இயக்கத்தின் பெயரால் அப்போது நடக்கவில்லை. அப்படியே அது இயக்கத் தூண்டுதல் இல்லாமல், தனி ஆள் தாக்குதலாக இருந்திருந்தாலும் இந்தியப் பத்திரிக்கைகள் இதைப் பேசியிருக்கும். 2) குமுதினி படுகொலை நடந்தபின் உடல்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல LTTE இயக்கம் உதவியது என்று கதையில் வருகிறது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று டிசே தமிழன் பதிவு ஓன்றில் தெரிகிறது (https://www.blogger.com/comment.g?blogID=9143217&postID=110731808470277070). இந்தப் புள்ளி ஒரு சந்தேகம் மட்டுமே. எனக்கு இதன் முழு விவரம் கிடைக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் கொரில்லா-வின் பங்கு என்ன? கதை ஒரு இன அழிப்பின் ஆவணம், அதை எழுதியவரும் அந்த வரலாறில் தன் இளம் பருவத்தைக் கழித்தவருமாக இருப்பதால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இன்று தமிழ் இலக்கிய உலகில் ஷோபாசக்திக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது, அவரின் நிஜ வாழ்வு அரசியல் பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம். ஆனால் அதை மட்டும் பார்த்து அவரின் இலக்கியப் படைப்புகளை இழக்க முடியாது. இலங்கை இனப்போரின் இறுதியைக் கண்ட அனைவருக்கும் நாவலில் வரும் ஒரு இடம் எழுத்தாளனின் கணிப்பு எவ்வளவு சரியானது என்று காட்டும் : குமுதினிபடுகொலைக்கு எதிர்த் தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரைக் கொன்று கணக்குப்பார்க்கும்போது ரொக்கிராஜ் தன்னையும் மீறி “அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ? இதுகணக்குப் பார்க்கிற காரியமில்லை.” கொரில்லா – ஷோபாசக்தி பதிப்பாளர்: அடையாளம் / கறுப்புப் பிரதிகள் பக்கங்கள்: 200 https://www.commonfolks.in/books/d/guerilla https://solvanam.com/2021/08/22/ஷோபா-சக்தியின்-கொரில்லா/
  13. ‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை — அகரன் — தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த அவசியமான ஒரு நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பொதுவாகவே ஒரு பேயைக் கண்ட பயத்தைத் தருவதுண்டு. ஆனால் இந்நூல் ஒரு இனிமையான அனுபவம். தேனில் கலந்து வேப்பெண்ணை மருந்து குடிப்பதுபோல.. நாவல் வடிவில் 15 வயது தொட்டு வாழ்வின் கதவுவரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’ மிக எளிய அறிமுகம். உலக அளவில் 50 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்று கருதப்படுகிறது. (உனக்கெப்படித்தெரியும்? ஒரு பிரஞ்சுக்காரர் ஒருவரிடமும் உறுதிப்படுத்தினேன். அவர் இதை வாசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது) தமிழ் உலகில் இன்று பணம் சம்பாதிக்கும் பாடத்திட்டங்கள் நோய்போல் நீடிப்பதால் அடர்ந்த அறிவுத்தேடல்கள் அழிந்துகொண்டருப்பது அருவருக்கத்தக்க மனித நீட்சி. *** ஐ.நாவுக்காக லெபனானில் பணியாற்ற செல்ல இருந்த நோர்வே நாட்டு இராணுவ ஜெனரல் தன் மகளுக்கு ஒரு தத்துவப்புத்தகம் வாங்க புத்தகக்கடைக்குப் போகிறார். அங்கு தனது 14 வயது மகள் இந்த உலகை புரிந்துகொள்ளத்தக்க ஒரு தத்துவ நூலும் கிடைக்கவில்லை. லெபனானில் இருந்து தன் மகளுக்கு சோஃபி என்ற அவளது வயதுடைய கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். இறுதியில் பணிமுடிந்து வீடு வரும்போது மகள் பள்ளியில் படிக்கவே முடியாத தத்துவங்களை தந்தை மூலம் கற்றுவிட்டிருக்கிறாள். இளம் பிள்ளைகளின் மனநிலையிலே நாவல் கேள்விகளால் நகர்கிறது. நாமும் சோஃபியின் உலகில் வாழ்ந்துவிடுகிறோம். *** இந்த உலகம், பூமி, வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன? என்ற கேள்வி ஒலிம்பிக்கில் யார் அதிகம் தங்கப்பதக்கம் வென்றார்கள்? என்பதைவிட முக்கியமானது. புராணக்கதைகள் தத்துவங்களை விதைத்தன. நம் சமூகம் மூடநம்பிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டது. ஸ்கண்டிநேவிய புராணக்கதைகளுக்கும் இந்திய புராணக்கதைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிரபஞ்சத்தின் தூசிபோன்ற ஒருகோளில் வாழும் உயிர்த்தூசியான மனிதன் யார்? எப்படி வந்தான்? ஏன் சாகின்றான்? ஆன்மாவின் முடிவிடம் எது? கடவுளைப் படைத்தது யார்? இந்த உயிர்க்கோள் நீளுமா? இன்று உயிர்கோளின் கிருமி (மனிதன்) அதையே சம்மட்டியால் அடிக்கிறான். அழிவு யார் கையில்? மனிதப் பரிணாமம் 4.6 கோடி வயதுப் பூமியில் எத்தனை காலம்? இப்படிக் கேள்விகளால் உலகின் 2500 வருடங்கள் சிந்தித்த தத்துவ மேதைகளின் பதில்களை இந்த நூல் உங்களுக்குத்தரும். 2500 ஆண்டுகளின் முன் வாழ்ந்த சாக்கிரட்டீஸ் தத்துவத்தின் முழு வரலாற்றுக்கும் புதிரான ஆளுமை. ‘’தனக்கு தெரியாது என்று எவனுக்குத் தெரிகிறதோ அவனே விவேகமானவன்’’ என்று நிரூபித்தவர். ஆனால் ஒரு சொல்கூட எழுதவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஜரோப்பிய தத்துவவியலின் அடிப்படையே அவர்தான். சாக்கிரட்டீஸ், யேசு இருவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்கள் காலத்தில். ஆனால் இன்று? இடைக்காலம் :- மதங்களை வைத்து மனிதரை பூச்சாண்டி காட்டிய காலம். மறுமலர்ச்சிக்காலம் :- தெய்கார்த், ஸ்பினோசா, லாக், கியூம், பார்க்கிலி, என்று முன்னர் கிரேக்கத் தத்துவவாதிகளின் பாதையில் தனித்தனியே தத்துவத்தை வளர்த்தெடுத்தனர். அறிவொளிக்காலம் :- காண்ட், ஹெகல், ரூசோ கீர்க்ககாட், மார்க்ஸ், டார்வின், ஃப்ராய்ட் என்று எண்ணற்ற தத்துவப் பேரரசர்களால் பூச்சாண்டிகள் மொத்தமும் விரட்டப்பட்டு அறிவின் கண்கொண்ட பார்வை பரவியது. ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மூன்று தேசங்களும் அறிவியலில் உச்சங்கொள்ள அறிவொளிக்கால தத்துவவாதிகளே காரணம். இன்றயகாலம் :- இயந்திரவியல், சூழலியலை படுகொலை செய்து ஆபத்தான உயிரியாக மனிதன் நிற்கிறான். உயிர்க்கோளத்திற்கு ஆபத்தில்லாத வாழ்வைக் கட்டமைக்க தத்துவ பேரறிஞனுக்கான தேவையில் நிற்கிறது 17000 அணுகுண்டுகளை வைத்திருக்கிற மனிதம். அந்த ஒப்பற்ற தத்துவத்தை நீங்களும் படைக்கலாம். நீங்கள் செவ்வாய்க்கு போவதைவிட முக்கியமானது தத்துவவியல். அவசரப்படாமல் அவசியம் சோஃபியின் உலகத்தை படியுங்கள். *** சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்லோ சென்றிருந்தேன். அந்த அமைதியும், அழகும் கொண்ட நகரில் ஒரு புத்தகக்கடையை கண்டேன். அழகாக இருந்தது. அங்கு தமிழ்ப்புத்தகம் இருக்காது என்பதை தெரிந்தும் அந்த அழகை அனுபவிக்க நுழைந்தேன். புத்தகங்கள் அழகிய இருக்கைகளில் வைத்திருந்தார்கள். அரச இருக்கைபோன்ற ஒன்றில் இந்த ‘சோபியின் உலகம்’ என்ற புத்தகம் இருந்தது. உள்ளே பார்த்தேன் ஒரு படமும் இல்லை. அந்தப் புத்தகத்தை தமிழில் வாசிக்க கிடைத்ததும் அதிசயம். அண்மைக்காலத்தில் உலகின் நல்ல படைப்புக்களை தமிழில் எந்த எதிர்பார்ப்புமற்று தமிழை மட்டும் வாசிக்கக்கூடிய என்னைப்போன்றவர்களுக்காக மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்?. கடந்த ஆண்டு வெளியாகிய ’குமிழி‘யின் ஆசிரியர் திரு ரவி அவர்களே எளிய நடையில் ஒரு முழுமையான தத்துவ நூல் வெளியாகி இருக்கிறது என்றார். அந்த நூல் சென்னையில் இருந்து கொரோனாவின் அனுமதியுடன் வந்து சேர்ந்தபோதுதான் அது ஒஸ்லோவில் கையில் எடுத்துப்பார்த்துவிட்டு ‘வாய்ப்பே இல்லை’ என்று வைத்துவிட்டு வந்த நூல் என்பது தெரிந்தது. சில ஆழ்மனப்படிமங்கள் எப்படியும் சாத்தியமாகிவிடுமோ என்னவோ? « நான் ஒன்றைப் பார்த்தால் நம்புவேன் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனால், பார்ப்பதையும் நீங்கள் நம்பாதீர்கள் » -கான்ற்- பகுத்தறிவும், கல்வி அறிவும் பரவலாக நடைமுறையில் வந்துவிட்டால் மனித குலம் மாபெரும் வளர்ச்சி அடையும். -அறிவொளிக்கால அறிஞர்கள்- https://arangamnews.com/?p=4692
  14. பட்டக்காடு நாவலை முன்வைத்து சிறந்த தத்துவவாதியான Nassim Nicholas Taleb தனது ‘The Bed of Procrustes’ நூலில் “What we call fiction is, when you look deep, much less fictional than nonfiction; but it is usually less imaginative” என்ற கருத்தைப்பதிவிடுகிறார். இது ‘பட்டக்காடு’ எனும் படைப்பின் மீதான் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக கொள்ள முடியும். நாவல் என்பதை இவ்வாறுதான் வரைய வேண்டும் என்று ஓர் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. ஆனால் நாவலானது எவ்வாறான குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட முடியும்.ஓர் வாசகனின் ஒற்றைப்படையான கருத்தியலை மாத்திரம் கொண்டு ஓர் நாவலை இலக்கியத்தரமற்றதாக கண்ணை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிடவும் முடியாதல்லவா. அமல்ராஜ் பிரான்சிஸின் ‘பட்டக்காடு’ zero degree பதிப்பகத்தால் வெளியிட்டிருக்கின்ற 2020இன் முக்கியமானதோர் நாவல். இதை நான் குறிப்பிடக்காரணம் இல்லாமலில்லை. இன்றைய சூழலில் ஓர் படைப்பு எந்த பதிப்பகத்தில் வெளியாகிறது என்பது கூட சில சமயங்களில் அதை அடுத்த கட்ட மார்கட்டிங் லெவலிற்கு கொண்டு சென்று விடும். ஒரு வகையில் இலகுவில் அது வாசகர்களை அடைந்துவிடும் என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயம். ஒரு படைப்பை எந்தப்புள்ளி நாவலாக மாற்றுகிறது என்பது மிகவும் முக்கியமானதொன்று. எல்லா படைப்பாளிகளாலும் ஓர் நாவலை இலகுவில் கட்டமைத்துவிட முடியாது.நாவல் கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ தன்னுள் பொதித்திருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. (இரண்டாவது நிபந்தனையை பிறகு கூறுகிறேன்) அந்த வகையில் பட்டக்காடு நாவல் அந்நிபந்தனையைப் பூர்த்தி செய்திராமல் இல்லை. காதல்,கடல்,நாடு, நட்பு என்ற பல கருத்தாடல்களின் இடைவெட்டுத்தான் இந்நாவல். இதில் எழுத்தாளர் கூறவந்த விடயங்கள், அதை அவர் கூறிமுடித்த மொடியூலேசன் மற்றும் அதை பிரஸ்தாபிக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தையும் பற்றியெல்லாம் பேசேவண்டியுருக்கிறது. முதலில் கடல். ஒரு நாவலுக்குள் ஓர் தலைப்பு சார்ந்து நாம் நிறையவே தகவல்களை உட்புகுத்த முடியும் ஆனால் ஓர் சிறிய கோட்டிற்கு அப்பால் அது வாசகனை திகட்ட வைத்துவிடும். அது நாவலுக்கான வாசகனின் பிரேமத்தை குறைத்துவிடும் வல்லமை கொண்ட அதேவேளை தனியாள் வேறுபாடும் கொண்டது.ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,மொண்டகோமெரியின் ‘தி சோல் ஒப் என் ஒக்டோபஸ்’ என்று நாம் அறிந்த படைப்புகளுக்கும் அது பொருந்திப்போகிறது. ஆனால் எப்போது பொதுத்தன்மையிலிருந்து விலகி வேறுபட்ட உரையாடல் தளத்திற்கு நாவல்கள் வாசகனை கூட்டிச்செல்வதானது அது பற்றிய உரையாடலுக்கான காரணமாய் அமைந்து விடுகிறது.பட்டக்காட்டை பொறுத்தவரையில் ;ஓர் தொடராக பத்திரிகையில் வாராந்தம் வெளியான கதையொன்றை எப்படி நாவலாக மாற்றுவது என்பதை சரியாகத்தான் பெரும்பாலான இடங்களில் செய்து முடித்திருக்கிறார்.கடலும் அது சார் பட்டக்காடு மக்களின் உணவுமுறையைக்கூட சலிக்காமல்தான் சில பகுதிகளில் தந்திருக்கிறார் என்று சொல்ல முடியும். இதுவரை நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும்; அங்கதச்சுவையை தனியே வைத்துவிட்டு வெறுமனே நாவலை பார்த்துவிட முடியாது என்பது. அது எழுத்தாளரின் இயல்புத்தன்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அந்தோனியுடனான மதனின் உரையாடல்களை செதுக்குவதில் உள்ள நிலையும் அந்த தொகையில் அடங்கிப்போய்விடும். இப்போதும் நாங்கள் நண்பர்களுடனான எதிர்வினைகளை இவ்வாறே கட்டமைத்துக்கொள்வதால் இளையவரை அது கவரும் உத்தியாக நாவலுக்கு அது பலம் சேர்த்து விடுகிறது. அந்தோனிதான் பரம்பொருளாக இருந்து மதனுக்கு பல இடங்களிலும் புத்தியுரைப்பது hamlet & horatio ஐ ஞாபகப்படுத்திச்சென்றது. கயல் என்ற பாத்திரத்தை ஆரம்பத்தில் அமல்ராஜ் அவர்கள் வடிவமைத்தருக்கும் விதம் மெச்சத்தக்கதாயினும் கதையின் கிளைமெக்ஸ் சற்று மிகைப்படுத்தலான மனோநிலையை வழங்கவல்லது. ஆணின் காதலின் போதான மூளைக்குடைச்சல்களையும் கிறுக்குத்தனங்களையும் அவர் வரைந்த விதம் சிறப்பு. கயலை ஓர் போராளியாக காட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே அந்த பாத்திரத்தை bold ஆனதோர் வகையறாவில் படைத்தாரா இல்லை அது எதேர்ச்சையாக நகர்ந்ததா என்ற கேள்வி எனக்குள் உண்டு. உதாரணமாக, //கயல் தொடர்பில் என்னை எப்பொழுதுமே ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்றால் அது அவளுடைய தைரியம்தான். புற உலக அச்சுறுத்தல்களால் அவளுடைய ஓட்டத்தை ஒருபோதுமே தடுக்கமுடியாது. தன் சுயநிலைப்பாடு சார்ந்து இறுதிவரை தைரியமாகப் போராடும் ஒரு பெருங்குணம் படைத்த பெண் அவள். எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனத்தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. கயலுக்கு அது பெருங்கொடையாக அருளப்பட்டிருக்கிறது.// நிவேதாவுக்கும் இது பொருந்தும்.எழுத்தாளரை சிறந்த கதைசொல்லியாக இது உருமாற்றியிருக்கிறது. எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்சிஸ் நாவலின் அடிப்படையிலேயே போர் இழையோடியிருந்தாலும் நேரடியாக எதிர்கொண்ட துன்பவியலை அடிநாதமாக இல்லாமல், போரானது வன்னிக்கு வெளியே நெஞ்சின் உரத்தையும் நேச உறவுகளையும் எவ்வாறு தாக்கியது என்றுதான் பேசி முடித்திருப்பார். இயக்கங்கள் சார்புநிலை விடயங்களில் கருதுக்களை பதிவு செய்திருப்பினும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபாடுடற்ற மனோநிலையை அந்தோனியும் ஜோசப் மாஸ்டரும் கூட வெளிப்படுத்தித்தான் இருப்பார்கள். போர் சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பற்றி எவ்வளவோ பேசியாயிற்று என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இரண்டாவது நிபந்தனைதான் வாசகர் பார்வையில் நாவல் எப்படியானது என்பது. அந்தவகையில் பல பாசிடிவ் கருத்துகளை காணமுடிகிறது.மேலும் உண்மைக்கும் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகளை காணக்கூடியதாக இருக்கிறது. நாவலில் பிரஞ்சை, எதிர்வினை, வியாகூலம் போன்ற சொற்களின் repetition குறைக்கப்பபட்டிருந்தால் இன்னும் சில தாள்களை மிச்சப்படுத்தக்கூடியதாய் இருந்திருக்கும். ‘பட்டக்காடு’ வாசித்து உரையாடப்படவேண்டிய நாவல். – ஷாதிர் https://vanemmagazine.com/பட்டக்காடு-நாவலை-முன்வ/
  15. The Two Popes இளங்கோ-டிசே Tuesday, February 25, 2020 படத்தில் தலைப்பைப் போல இது இரண்டு போப்புகளைப் பற்றியபடம். மரபுவாதியான ஜேர்மனியப் போப் பெனடிக்கிற்கும், மறுமலர்ச்சியைக் கொண்டுவர விரும்பும் ஆர்ஜெண்டீனிய போப்பிரான்ஸிற்கும் இடையிலான உறவையும், முரணையும் இந்தப் படம்முழுவதும் நாங்கள் பார்க்கின்றோம். போப் பெனடிக் போப்பாக இருக்கும் கடைசிக்காலங்களில்கார்டினலாக இருக்கும் பிரான்ஸில் ஆர்ஜெண்டினாவிலிருந்துதனது பதவியை இராஜினாமாய்ச் செய்வதற்காக ரோமுக்குவருகின்றார்.அப்போது போப் பெனடிக் வத்திக்கானில் நடக்கும்சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றார். மரபுவாதியானபெனடிக் ஒருவகையில் சமகால உலகை விட்டுவிலகிப்போய்க்கொண்டிருப்பவர். ஏற்கனவே இருந்த போப்புக்கள்வகுத்த வழிமுறையில் பாதை தவறாது பயணித்துக்கொண்டிருப்பவர். கத்தோலிக்க மதத்திற்குள், தேவலாயங்களுக்குள் பல சர்ச்சைகள்வெடிக்கத் தொடங்கின்றன. தற்பால்உறவுகள், பாலியல் வன்முறைகள், இலஞ்சம் எல்லாம் வத்திகானைச்சுற்றிச் சுழல்கின்றன. பாவமன்னிப்பைவழங்கிவிட்டால் எல்லாம்யதார்த்தத்திற்கு வந்துவிடும் என போப்பெனடிக் நம்புகின்றார். கார்டினல்பிரான்ஸிலோ தேவாலயங்கள்பாவத்தின் கறைகளைப் பற்றிஅக்கறைப்படுகின்றதே தவிர, அதுஏற்படுத்தும் காயங்களைப் பற்றிக்கவலைப்படுவதில்லை என்று மறுத்துப் பேசுகிறார். மேலும் தவறைச்செய்தவர்க்கு பாவமன்னிப்பை வழங்குவதன் மூலம் பாவத்தைச்செய்தவர் நிம்மதி அடைகின்றார். ஆனால் அவரால் பாவம்இழைக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைப் பற்றி தேவாலயம்கவலைப்படுகின்றதா என்கின்ற முக்கிய கேள்வியை எழும்புகின்றார். முரண் உரையாடல்களினால் இவர்கள் இருவருக்கும் இடையில்நட்பு ஏற்படுகின்றது. மரபுவாதியான போப் பெனடிக் நல்லதொருபியானோ வாசிப்பாளர் என்பதையும், பீடில்ஸின் இரசிகர்என்பதையும் கார்டினல் பிரான்ஸில்வெளிக்கொண்ர்ந்துவிடுகின்றார். இந்தத் தடைகள் எதுவும்கார்டினல் பிரான்ஸிற்கு இருப்பதில்லை. டாங்கோ ஆடுபவராக, உதைபந்தாட்டத்தை தன்னை மறந்து இரசிப்பவராக, வறியமக்களிடையே இறங்கி வேலை செய்பவராக அவர் இருக்கின்றார் . ஆனால் அவருக்கும் ஒரு இருண்ட காலம் என்பதை நாம்இத்திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் பார்க்கின்றோம். 1970களில் ஆர்ஜெண்டீனா ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குள்போகின்றது. இடதுசாரிகள், அரசவிழ்ப்பாளர்கள் மட்டுமின்றி, பாதிரிமார்களையும் கொடுங்கோல் ஜனாதிபதியின் இராணுவம்வேட்டையாடத் தொடங்குகின்றது. பல்வேறு தேவாலயங்கள்பைபிளை சற்று ஒதுக்கிவைத்து மார்க்கிசம் பற்றியும், புரட்சிபற்றியும் பேசத் தொடங்குகின்றன. பாதர் பிரான்ஸில் தனதுநண்பர்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு அரசுடன் இரகசியமாகப்பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார். அந்தப் பொழுதுகளில்பாதர் பிரான்ஸின் இரண்டு பாதிரித்தோழர்கள் கடத்தப்படும்போது, பிரான்ஸிசே இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தவர் எனக்குற்றஞ்சாட்டப்படுகின்றார். இந்தப் பொழுதிலேயே அவரதுகாதலியாகவும், பிறகு தோழியாகவும் மாறியவரை, கொடுங்கோல்ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்த காரணத்தால்பிரான்ஸிஸ்ல் இழக்கின்றார். இவ்வாறு குற்றஞ்சாட்டல்களுக்கும், இழப்புகளுக்கும் இடையில்ஆர்ஜெண்டீனா சர்வாதிகாரத்திலிருந்து ஒருமாதிரி விடுபடுகின்றது. வத்திகானின் பேச்சை இந்தக் காலங்களில் கேட்கவில்லையெனஒதுக்குப்புறமான மலைக்கிராமத்துக்கு எல்லாப் பதவியும்பறிக்கப்பட்டு, பிரான்ஸில் சேவைக்காக அனுப்பப்படுகின்றார். அங்கிருக்கும் மக்களோடு பழகி, அவர்களுக்கு பாவமன்னிப்புவழங்குவதுடன், தன்னையும் மாற்றிக்கொள்ளும் பிரான்ஸிஸ்மீண்டும் ஆர்ஜெண்டீனா மக்களின் நன்மதிப்புக்கு உள்ளாகின்றார். பின்னர் வத்திகானால் கார்டினாலாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதே காலகட்டத்தில் 2013ல், பல்வேறு சர்ச்சைகளால் தனதுவயதைக் காரணங்காட்டி போப் பெனடிக் தனது பதவியைஇராஜினாமாய்ச் செய்யும்போது, அடுத்த போப்பாக, கார்டினல்பிரான்ஸிஸ் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அப்போது ஓரிடத்தில்போப் பிரான்ஸில் பெனடிக்கை நோக்கிச் சொல்வார், நீங்கள்பாரத்தை இறக்கிவைத்துவிட்டீர்கள், நான் இனிச் சுமக்கவேண்டிஇருக்கின்றது' என்று. பில்லியன்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவரான ஒருபோப்பின் பதவி என்பது மிகக் கடினமான ஒன்றுதான். போப் பெனடிக் தனதுபதவியைத்துறக்கப்போகின்றேன் என்றுசொல்லும்போது பிரான்ஸிஸ்அவரை ஓரிடத்தில் தடுப்பார். அப்போது போப் பெனடிக்சொல்வார், கடவுளின்குரலைக் கேட்கமுடியாதஎன்னால் இந்தப் பதவியில்தொடர்ந்து இருக்கமுடியாது என்று. அந்தக் கடவுளின் குரலைபிறகு போப்பாக வந்த பிரான்ஸிஸால் கேட்கமுடிந்ததா என்பதுநமக்குத் தெரியாவிட்டாலும், அவர் ஏழைமக்களைத்தேடிப்போவதிலும், அவர்களோடு சாதாரணமாகப் பேசுவதன்மூலமாகவும் கடவுளின் குரலைக் கேட்கமுடியும் என நம்புவதாகபோப் பிரான்ஸின் பாத்திரத்தினூடாக அறிந்துகொள்கின்றோம்.. இந்தத் திரைப்படம் நீண்டகாலமாக வத்திகான் மீதும், பாதிரிமார்கள் மீதும் வைக்கப்படும் முக்கிய எந்தக் குற்றச்சாட்டைநோக்கியும் நகரவில்லை என்பதை, அப்படி நகர்வதற்குஇடமிருந்தும் அங்கு போகவில்லை என்பதை ஒரு குறையாகத்தான்சொல்லவேண்டும். ஆனால் வத்திகானில் மாற்றங்களைக்கொண்டுவர முயலும் ஒரு போப்பை நாம் இங்கே காண்கின்றோம். மரபுவாதியாக இருந்தாலும் இன்னொரு போப்பையும் அவரின்குறைபாடுகளுடன் சரி ஒருபக்கமாய் இப்படி இருந்துவிட்டுப்போகட்டுமென ஆறுதல்கொள்கின்றோம். அதிலும் மனம் உடைந்துபோய் இருக்கும் போப் பெனடிக்கிற்கு, கார்டினல் பாவமன்னிப்பைவழங்கி ஆசிர்வதிக்கும் இடம் அவ்வளவு நெகிழ்வானது. இறுதியில் இந்தத் திரைப்படத்தில் இன்னாளும், முந்தியதுமானபோப்புக்கள் இருவரும் 2014ல் நடக்கும் ஆர்ஜெண்டீனா- ஜேர்மனிஉதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் காட்சிகள்சுவாரசியமானது.. ஒருவகையில் இந்தத் திரைப்படம்போப்புக்களையும் சாதாரண மனிதர்களாக்கி நம்மைப் பார்க்கவைக்கின்றது. அவர்கள் அதிகாரம் நிரம்பியவர்களோ, திருவுருவாக்க வேண்டியவர்களோ அல்ல, இரத்தமும் சதையுமானநம்மைப்போலவே தவறுகளை விடக்கூடியவர்களும், மனம்வருந்தக்கூடியவர்களுமே என்ற நிலைக்கு இறுதியில்வந்தடைகின்றோம். அதுவே மதங்களையும், போப்புக்களையும் சற்று விலத்திப் பார்க்கும்என்னைப் போன்றவர்களுக்கு அவசியமான புள்ளியெனநினைக்கின்றேன். ஆக, நாங்கள் எவருக்கும் உயர்ந்தவர்களுமல்ல, தாழ்ந்தவர்களுமல்ல என்ற புள்ளியை வந்தடைகின்றோம்.. ................................................ (Dec 21, 2019) http://djthamilan.blogspot.com/2020/02/the-two-popes.html
  16. மிதவை நாடகம் – கோகுல் பிரசாத் by Gokul Prasad உச்சக்காட்சியைத் தவிர்த்து ஆதி முதல் அந்தம் வரை கதையை எழுதி வைப்பது ஒரு வகை. அதற்கு விக்கிப்பீடியாவும் தமிழும் தெரிந்தால் போதுமானது. படம் பார்க்கும் போது இன்ன இன்ன உணர்ச்சிகளும் சிந்தனைகளும் தோன்றின என எழுதுவது இன்னொன்று. சிந்தனைகள் கூட அல்ல, எண்ணச் சிதறல்கள். அவை அந்தப் படத்திலிருந்து பெற்றுக் கொண்டவையாகவோ நமது நனவிலியின் கூட்டுத் தொடர்ச்சியாகவோ கூட இருக்கலாம். கதையல்ல, காட்சித்துளிகளின் (shots) ஒருங்கிணைவே திரைப்படம். நிகழ்வுகளின் (incidents) தொகுப்பாக ஒரு திரைப்படத்தை அணுகுவதைக் காட்டிலும் தருணங்களின் (moments) மோதல்களாக அறிந்துணர்வதே தரமான அனுபவத்தை அளிக்கும். ஒரு சிறந்த படைப்பைக் குறித்து உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது தான். ஆனால் அதில் இருந்து பெற்றுக் கொண்ட உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தர்க்க ஒழுங்குடன் ஆராயலாம் அல்லது பரிபூரணத்தை நெருங்கி விடத் துடிக்கும் உன்னத கலைச்செயல்பாட்டில் அமிழ்ந்து கரைந்தும் போகலாம். ஒரு நல்ல விமர்சனத்தில் சிந்தனையும் உணர்ச்சியும் ஒன்றை ஒன்று நிகர் செய்பவை என்பது குறித்த தெளிவிருக்கும். சுருக்கமாக, படம் தந்த நிறைவை மொழியின் துணை கொண்டு மீட்டெடுத்தலே விமர்சனச் செயல்பாடு. கலையை பொருத்தமட்டில் நிறைவு என்பது சிதறடிப்பு. நோவா பவ்ம்பாக் (Noah Baumbach) இயக்கிய அமெரிக்கத் திரைப்படம். 2012இல் வெளியானது என்றாலும் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டது. ஒரு பெண்ணின் Quarter life Crisis குறித்த பொய்யான பிதற்றல்கள் மற்றும் பாவனைகள் ஏதுமின்றி அசலாய் எடுத்து வைத்திருக்கிறார்கள். இளமை நழுவியவாறு இருக்க கனவுகளைத் தடுமாற்றங்களுடன் துரத்திக் கொண்டிருப்பவளின் அல்லாட்டம் படம் முழுக்கத் தளும்புகிறது. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதே என இருபதுகளின் முடிவில் தொடங்கும் பதற்றத்தை எவராலும் எதனாலும் தணித்து வைக்க முடிவதில்லை. எதைச் செய்தாலும் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும் திருப்தியின்மை தீராத உளச்சோர்வை தர வல்லது. நம்முடைய இலட்சியமும் கனவுகளும் வாழ்வுடனான சமரசத்திற்கு இணங்கி உயிரின் அலை ஓய்ந்து ஒழியும் காலம். வெகுளித்தனங்களின் இடத்தை துளி இடமில்லாது பொறுப்புகள் நிரப்பிக் கொள்கின்றன. பறத்தலுக்கான யத்தனங்கள் அத்தனையும் சிறிய வட்டத்திற்குள் அடைக்கப்படுகின்றன. கற்பனைகளின் மன விரிவைப் புரிந்து கொள்ளாத சுற்றமும் நட்பும் அவற்றை வெறும் கற்பிதங்கள் எனக் கேலி செய்யும் போது நமது நம்பிக்கைகளில் தத்தளிப்பு உண்டாகிறது. ‘இது போதும்’ என்பவர்களையும் நிறைவின்றி அலைபவர்கள் நெருக்கித் தள்ளுகிறார்கள். போதும் என்பது தேக்கம் தான் என்பவர்கள் சரியாகத் தான் சொல்கிறார்களா எனச் சந்தேகமாக உள்ளது. படத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எதிலாவது முழுமை கிடைத்து விடாதா எனும் நப்பாசையினால் தான் ஏதேதோ விஷயங்களை மனிதர்கள் முயன்றபடியே இருக்கிறார்கள். ‘செட்டில்’ ஆகி விட்ட மயக்கத்தில் உழல்பவர்களுக்கு எத்தகைய மாயங்கள் புரிந்தாலும் இந்த வாழ்க்கை குறைபாடுடையது எனும் அறிதல் பீதியூட்டக் கூடியது. அதனாலேயே நவீன வாழ்வின் விரைவுக்கு தம்மை ஒப்புக்கொடுக்காமல் ஓர் இறகு போல மிதந்து வருபவர்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள். இறகின் அலைக்கழிப்புகள் சாதாரணமானதல்ல. அது அசைந்தாடி அடங்கி ஆசுவாசம் கொள்ளும் நிலமும் நிரந்தரமற்றது என்கிற பட்சத்தில் மனம் விழுந்தால் எல்லாம் சரிந்து புதையும் நிலை. இழந்தவை ஏற்படுத்தும் மன உளைச்சலை விட இழக்கப் போகிறோம் எனும் தன்னுணர்வு தரும் நடுக்கம் தாள முடியாதது. இருக்கின்ற ஒரே பற்றுகோளும் கை நழுவிப் போகும் பதற்றத்தில் கொப்பளித்து பீறிடும் அழுத்தம் மண்டைக்குள் ஓராயிரம் கடப்பாரைகளை சொருகுகிறது. முட்டுச்சந்தில் தடுமாறி நிற்கிறவனை இழுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் அம்மணமாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதாவது அமைந்து விடுவது தான். அது இளமையில் வேண்டாம் என்பது மட்டுமே நம்முடைய பிரார்த்தனையாக இருக்க முடியும். படத்தில் வழக்கமான காதல் இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரியத்தில் தோய்ந்த இலயிப்பு மின்னுகிறது. ஃபிரான்செஸும் சோஃபியும் அர்த்தப்பூர்வ சிநேகத்துடன் ஒருவரை ஒருவர் கண்டு கண்களை விலக்கிக் கொள்ளும் தருணங்களில் அவ்வளவு உயிர்ப்பு! ஒரு பார்வையில் நமக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரே சட்டகத்தினுள் அடைபட்டுக் கிடக்கும் இருவரும் அவர்களுக்கிடையேயான மன விலக்கத்திற்குப் பின்னர் தனித்தனி ஃபிரேம்களில் காட்டப்படுகிறார்கள். அந்த விலகலில் வெளிப்படும் நுட்பமும் உணர்வுப் பரிமாற்றங்களும் சமீபத்தில் பார்த்திராதது. அப்போதும் ஃபிரான்செஸ் எவர் மீதும் குற்றஞ்சாட்டுவதில்லை. மனிதர்கள் இப்படித்தான் என்கிற சலிப்பு கூட ஏற்படாத பரிசுத்தம். அவளது சிரிப்பூட்டும் முயற்சிகளுக்குப் பின்னால் எப்போதும் மென்சோகம் மந்தகாசப் புன்னகையுடன் நம்மை ஆரத்தழுவிக் கொள்ள காத்திருக்கிறது. இந்தப் படம் வாழ்வின் அர்த்தமின்மையை காரணமாகக் காட்டி அதன் மீது பழிகள் சுமத்தி தப்பித்துக் கொள்வதில்லை. மாறாக, ஓயாது அனலடிக்கும் விதியுடனான சமரில் நிழலை அரவணைத்து எழுகிறது. பெரிய பெரிய கனவுகள் முன் நிதர்சனத்தின் போதாமையை உணர்ந்தவாறு உள்ளுக்குள் வெப்பத்தைச் சுமந்தலையும் மனிதர்களின் மாதிரி வடிவம் ஃபிரான்செஸ் ஹா! கிரேட்டாவின் (Greta Gerwig) கதாபாத்திரத்தை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதை ஆச்சரியத்துடனேயே கவனித்துக் கொண்டிருந்தேன். எதிலும் பிணைத்துக் கொள்வது குறித்து அலட்டிக் கொள்ளாத இந்தத் தலைமுறை ஆட்களின் மனப்பான்மையை சரியாகத் தொட்டிருந்தார்கள். அது வெறும் பாவனை தான் என்பதால் விலகுந்தோறும் நெருங்கி வரும் விந்தையையும் உள்ளடக்கி இருந்தது. தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் முன்பு ஃபிரான்செஸால் தன்னை மறந்து ஆட முடிகிறது. மார்ஸல் ப்ரூஸ்ட்டின் நாவலை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக பாரீஸுக்கு கிளம்பிச் செல்லும் அவளது இலகுவான மனதின் விசையை பொறாமையுடன் தான் உணர்ந்தேன். அவள் விரும்பியது பாரீஸில் நடக்கவில்லை. தெருக்களில் இலக்கின்றி அலைந்து விட்டு சோர்வுடன் நியூ யார்க் திரும்பிய வேளையில் தாமதமாக ஒலிக்கும் எதிர்பார்த்திருந்த அழைப்பும் அதை உணர்ச்சியின்றி ஃபிரான்செஸ் எதிர்கொள்ளும் விதமும் தூக்கமற்ற இரவுகளின் விவரிக்க இயலாத வெறுமை. பின்னணியில் Every 1’s a winner பாடல் ஒலிக்க தனது கையாலாகத்தனத்தையும் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தையும் எதிர்கொள்ளத் தெரியாமல் செயலிழந்த பற்று அட்டையை வைத்துக் கொண்டு அவள் அங்குமிங்கும் ஓடும் பதைபதைப்பை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே திரண்டு வரக்கூடிய ஒரு காவிய சோகம் நியூயார்க் நகர வீதிகளில் உசாவுகிறது. அவளுக்கு இறுதியில் கிட்டியது வெற்றியா தோல்வியா என்பது அவரவர் நிலைப்பாடுகளைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் கொண்டதை விட்டு இம்மியும் விலகாத கதை. இனி நெடுங்காலம் திரும்ப முடியாது என்பதை உணர்ந்து எங்கோ விடைபெற்றுக் கிளம்புகையில் மனசில் கவியும் துக்கம் இந்தப் படம். http://tamizhini.co.in/2018/07/09/மிதவை-நாடகம்-கோகுல்-பிரச-2/
  17. ஆண்டவன் கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடம் ஓடும் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்" நடிப்பு : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , தேவிகா
  18. வட்டத்துக்குள் சதுரம். 1978 ஆம் ஆண்டில் வெளி வந்த ஒரு அருமையான திரைப்படம் இயக்கம்: S P முத்துராமன் இசை: இளையராஜா பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம் பாடியது: B S சசிரேகா, S ஜானகி இளையராஜா ஐயாவின் ஆரம்ப கால கட்டத்தில் உருவான இந்த பாடல் வெகுவாக மறந்து போன பாடல். ஆனால் கேட்டு பாருங்கள். இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்..!!! அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்..!!! கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்..!!! மனம்போல் வாழ்வோம் துணை நீ ____________________________________ ஓடுது ரயில் பாரு மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே, மாமரம் பூ பூத்தது விளையாடுது காடெங்கும் புதுவாசம் பறந்தோடுது, பார்த்தது எல்லாம் பரவசமாக புதுமைகள் கண்டோம் என்நாளுமே இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நான். காற்றினில் ஒளியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கொரு கிளை போல் துனை நீயம்மா..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== ஓடமும் நீரின்றி ஓடாதம்மா..! நீ செல்லும் வழி நானே வருவேனம்மா.! தோழமை உறவுக்கு நீ சொல்லும் மொழி நானே சேர்ப்பேனம்மா.!!! உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் என்நாளுமே..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே..!!! ============================== ராமனின் குகனாக நான் பார்க்கிறேன்..!!! மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்..!!! இருமனம் அன்பாலே ஒன்றானது, நேரத்திலே உள்ளம் பன்பாடுது, பறவைகள் போலே பறந்திடுவோமே..!!! மகிழ்வுடன் வாழ்ந்தோம் என்நாளுமே..!!! இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே....... இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்......
  19. பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . ! உலக சினிமா, சினிமா May 11, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) -Directed by Guillermo del Toro போர் தொடர்பான திரைப்படங்கள், பெரும்பாலும் உறக்கமற்ற இரவுகளிலே நம்மைக் கொண்டு செல்லும். அப்படியானதொரு, நிறம் மங்கியிருந்த விடியல் பொழுதொன்றை தான் ஒஃபிலியாவும்(Ofelia) எனக்கு வழங்கியிருந்தாள். வன்முறைகள் எவ்வளவு நிகழ்ந்தாலும், சலனப்படாத கலைஞர்கள்(!) பலரைக் காண்கிறோம். நந்தினி, ஹாசினி போன்ற சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டாலும், அனிதாக்கள் மரணித்தாலும், மலக்குழிகளில் இறக்கி மக்களைக் கொன்றாலும், எவ்வித சலனமும் இல்லாமல், கைகள் நிரம்ப மலர்களைக் கொண்டு செல்லும் வண்ணதாசன் போன்ற கவிஞர்களையும்(!) நம் கண் முன்னே காண்கிறோம். ஆனால், போருக்குப் பின், அமைதியான ஈரான் என்ற ஒன்றை என்னால், படம் எடுக்க இயலாது என்ற குர்திஷ் இயக்குனர் பாமென் கோபாடி(Bahman Ghopadi)யின், Turtles Can Fly என்ற திரைப்படம் பல நிம்மதியற்ற நாட்களை எனக்கு வழங்கியிருக்கின்றது. அதிகாரத்தினை நிலைநாட்டும் போரில், பெண்கள், சிறுமிகள் எப்பொழுதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். நம் கண்ணெதிரே ஈழப்போரில், பெண்போராளிகளும் கூட பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். போரில் மட்டுமில்லை; திருமணத்திற்கு பின்பு, தனது வாழ்க்கைத்துணையை பாலியல் வன்கொடுமை செய்வது இந்தியா உட்பட பல நாடுகளில் சட்டப்படி குற்றமல்ல. இது பெண்களைத் தனது உடமைப் பொருளாக பாவிக்கும் ஆணாதிக்க சமூகத்தின் வழக்கம். பெண்களை குடும்ப உறவிலும், வெறும் பிள்ளை பெற்று வளர்க்கும் கருவியாகவும், பாலியல் தேவைகளுக்காகவும், குடும்ப வேலைகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இரத்தவழி உறவே, அதுவும் ஆணே, தனது உடமைப்பொருளுக்கு வாரிசாக வர வேண்டும் என்னும் ஆணாதிக்கப்போக்கே, பெண்களை கீழே தள்ளி, தனது வாரிசை மேலே உயர்த்துகின்றது. ஒஃபிலியாவின் தாயும் இங்கே வெறும் பிள்ளை பெறும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறாள். அவள் உடல்நலம் குறித்து சிறிதும் அக்கறைகொள்ளாமல், தனக்கு பிறப்பது ஆண் குழந்தையே; அதுவும் தந்தையின் அருகிலேயே பிறக்க வேண்டும் என ஒஃபிலியாவின் தாயை நெடுந்தொலைவு பயணித்து வரவழைக்கிறார் கேப்டன் விடல். அந்த மாற்றுத்தந்தையை(step father) தந்தை என சொல்லவும் மறுக்கிறாள் ஒஃபிலியா. போர், இறந்த தனது தந்தை, கருவுற்றதினால் பயணித்து உடல் நலமற்ற தனது தாய், அதிகாரமிக்க தனது மாற்றுத் தந்தை என தன்னைச் சுற்றிலுமான நிகழ் உலகிலிருந்து தன்னை சிறிது சிறிதாக விடுவித்து குழந்தைகளுக்கான விசித்திரக்கதைகளுக்குள் நுழைகிறாள் ஒஃபிலியா. தனது தனிமை, பயம், விரக்தி, வெறுப்பு என எல்லாவற்றுக்குமாய்ச் சேர்த்து பானை(pan or faun) அணைத்துக்கொள்கிறாள். தனது தாயின் கருவறையின் உள்ள ஒரு குழந்தையே, தனது தாய்க்கு பெரும் உடல்நலக்குறைவினை ஏற்படுத்துவதை ஒஃபிலியா உணர்கிறாள். தன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வான சாவியை மரத்தின் வயிற்றில் இருந்து பெறுகிறாள். அடிமரத்தில், பெண்ணுறுப்பின் வடிவினை ஒத்ததொரு வடிவில் தொடங்கும் வழியில் நுழைந்து மரத்தினுள் வாழும் பெருந்தவளையினை அழித்து, அதனிடமிருந்த அச்சாவியினைப் பெறுகிறாள். புரட்சியாளர்களுக்கு மெர்சடீஸ் உதவுவதை அறிந்த ஒஃபிலியா, அது குறித்து வெளியே பகிர்ந்துகொள்ளாமல் இரகசியம் காக்கிறாள். ஃபலான்ஜிஸ்ட்டான தன்னுடைய மாற்றுத்தந்தையை, அவருடைய ஆணாதிக்கத்தை, அதிகாரப்போக்கை அடியோடு வெறுக்கிறாள். போர், அதிகாரம், பிரசவம் எனும் பெயரில் தாயின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை என தன்னைச் சுற்றிலுமான உலகில் வாழ்ந்துகொண்டே, தன்னை விசித்திரக்கதைகளுடனும் பிணைத்துக்கொள்கிறாள். ஒரு புறம் மேஜை முழுவதும் பழரசமும், பழங்களும் கண்ணைக்கவரும் பொழுதில், மறுபுறம் குழந்தைகளைக் கொன்று தின்னும் அவ்வுருவம் அருகே குவிந்துகிடக்கும் குழந்தைகளின் செருப்புகளைக் காணும் பொழுதில், இச்சமூகம் குழந்தைகள் மீது எப்பெரும் வன்முறையை நிகழ்த்திவருகிறது என்பதினை ஒஃபிலியா உணரவைக்கிறாள். இந்தக் கொடூரங்களிலிருந்து விலகி, ஒஃபிலியா இளவரசியாகிறாள். – நிலவுமொழி. http://maattru.com/pans-labyrinth/
  20. அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். கவிதை தொகுப்புக்கள், கட்டுரைகள், குறும்படம், ‘ஆகுதி’ அமைப்பின் வழியே இலக்கியச் செயல்பாடுகள் என முனைப்புடன் இயங்கி வருகிறார். பதின்பருவத்தில், பதினாறு- பதினேழு வயதில், விழுமியங்கள் நிலைபெறும் காலத்தில், பெரும் அலைகழிப்புகளையும் துக்கத்தையும் அகரமுதல்வன் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறார். இடப்பெயர்வுகளும், மரணங்களும், துயரங்களும் சூழ்ந்த வாழ்வு. இவை அவருடைய படைப்புலகில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்? அவருடைய முந்தைய தொகுப்புக்கள் வாசித்திராத சூழலில் ‘குக்கூ’ சிறுகதை கூடுகைக்காக அவருடைய அண்மைய தொகுப்பான ‘பான் கீ மூனின் ருவாண்டா’ தொகுப்பை வாசித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘பான் கீ மூனின் ருவாண்டா’ பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. ‘பான் கீ மூனின் ருவாண்டா’ எனும் பேரில் ஒரு கதை தொகுப்பில் இல்லாதபோதும், சர்வதேச சமூகம் ஈழ இனப் படுகொலைக்கு மவுன சாட்சியமாக இருந்தது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க இந்த தலைப்பை தேர்ந்துள்ளார். எல்லோரையும் பொறுப்பேற்கச் சொல்கிறார். உங்கள் கரங்களில் குருதிக்கறை உள்ளது பாருங்கள், என நினைவூட்டுகிறார். அகரமுதல்வன் எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன் அரசியல் தரப்பை பிரகடனப்படுத்திவிட்டுதான் படைப்புகளுக்குள் செல்கிறார். தனது வலைப்பக்கத்தில் “ஆயுத சத்தங்கள் அற்று அழிக்கப்படும் இனத்தின் நிதர்சனமாக இனத்தின் தேசிய வாழ்வை வலியுறுத்தும் படைப்புக்களை உருவாக்கி கொள்வதனால் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை உடைத்தெறியும் சக்தி என் எழுத்துக்களுக்கு இருக்கிறது” என்று எழுதுகிறார். தொகுப்பில், கதைகளைப் பற்றி விமர்சனபூர்வமாக சில கருத்துக்கள் கொண்ட அபிலாஷின் முன்னுரை இடம்பெற்றுள்ளது. அகரமுதல்வனின் கவிதைகளில் பெண்ணுடல் ஈழ மண்ணுக்கான ஒரு உருவகம், என அவர் குறிப்பிடுகிறார். அகரமுதல்வனின் புனைவுலகில் என்னை மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆகச் சிறந்த பலம் என நான் கருதுவது, அவருடைய மொழி. கவிஞன் என்பதால் இயல்பாக மொழியை வளைக்க அவரால் முடிகிறது. “துயிலின் மேடையில் குளம்படிகள் பற்றிய குதிரைகளை இளம் அகதி சவாரி செய்தான்” (பெயர்), ”மேகங்களைப் பிரித்து நிலவைக் களவாடும் சூரத்தனம் நிறைந்தது” (பெயர்) “ஆன்மா களைந்து கிடுகுகளால் மேயப்பட்ட வெற்றுப் பெட்டிகளாயிருந்தன”, “அரக்கனின் கையில் அடைபட்ட பாம்பைப் போல மூச்சைத் திணறினாள்” (கள்ளு). சில நேரங்களில் மொழிரீதியான தாவலின் வழியாக கதைக்கு கூடுதல் மடிப்புகளை அளிக்கிறார். “மரணத்திற்கு பழக்கப்பட்ட ஒரு மாமிசக் காலத்தின் சுவட்டைப் போலிருந்தது அந்தக் கடைத்தெரு”, “சதா சிரித்துக்கொண்டே நம்மைத் தின்று பெருக்கும் யுத்தத்தின் வயிற்றைத்தான் நாம் இனி பூமி எனப் போகிறோம்” (தாழம்பூ). அகரமுதல்வனின் இத்தொகுதியின் கதைகளை மூன்றாக வகுக்கலாம். போருக்கு பிந்தைய காலகட்ட வாழ்வை சொல்லும் கதைகள்- ‘பெயர்’, ‘தந்தம்’. போரின் ஊடாக சாமானியரின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘முயல்சுருக்கு கண்கள்’, ‘இவன்’, ‘கள்ளு’, ‘தீபாவளி’. போராளிகளின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘சங்கிலியன் படை’, ‘தாழம்பூ’, ‘கரைசேராத மகள்’, ‘குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்’. அகரமுதல்வனின் கதைகளில் ஒருவித வாழ்க்கைச் சரிதைத் தன்மை கொண்ட கதைகள் என “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” “கள்ளு” “தீபாவளி” “இவன்” “கரைசேராத மகள்” ஆகிய கதைகளை அடையாளப்படுத்தலாம். இக்கதைகள் தொய்வின்றி வாசிக்க முடிந்தன. குறுநாவல்களாக, நாவல்களாக விரித்து எழுதத்தக்கவை. அச்சமூட்டும் இருள் நிறைந்த கதைகளில் “முயல்சுருக்கு கண்கள்” மட்டுமே இத்தொகுதியில் சின்ன சிரிப்புடன், நேர்மறையாக முடியும் கதை. இந்தக் கதையில் புற விவரணைகள், காடும் உடும்பு வேட்டை பகுதிகளும் காட்சிகளாக மனதில் நிற்கின்றன. நேரடியாக போரோ வன்முறையோ இல்லாத கதை, போருக்கு அப்பாலான யதார்த்த வாழ்வை சித்தரிக்கிறது. அதே வேளையில் போர் ஒரு பின்புலமாக சன்னமாக கோடிட்டு காட்டப்படுகிறது. ஆதவியின் தந்தை காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரப்படுகிறது. கிழவர், நாடும் காடும் பறிபோகிறது, என இயக்கத்திடம் முறையிடுகிறார். உடும்பை வேட்டையாட முயலுடன் சென்றவனின் கதை. இந்தக் கதையின் வடிவத்தை தொடர்ந்து கூர்தீட்டி எழுதும்போது மேலான கலைத்தன்மையை அகரமுதல்வனின் கதைகள் அடையக்கூடும். இக்கதையில் சிக்கல் இல்லாமல் இல்லை. மொழிரீதியாக ‘உவமைக் குவியலை’ அளிக்கிறார். அகரமுதல்வன் பயன்படுத்தும் சில உவமைகளில் அவருடைய மரபிலக்கிய தேர்ச்சி புலப்படுகிறது. சில உவமைகள் ரசிக்கச் செய்தாலும், அவை அதீதமாகி வாசிப்பைக் குலைக்கின்றன. சிறுகதை கவிதைக்கு நெருக்கமான வடிவத்தில் இன்று எழுதப்படுகின்றது என்பது என்னவோ உண்மை. அது கவிதையின் மவுனத்தையும், தரிசனத்தையும், வாசக இடைவெளியையும் கைக்கொள்ள வேண்டும். “பெயர்” புலம்பெயர் வாழ்வின் அடையாளச் சிக்கலை சொல்லும் கதை. ஈழத்திலிருந்து தப்பி சென்னைக்கு வருகிறான், தன்னை மறைத்துக்கொண்ட ‘இளம் அகதி’. அவனை அழைத்துச் செல்லும் வாகனக்காரர் பெயர் கேட்டபோது கண் கலங்குகிறான். அவர் சென்ற பிறகு ‘இளம் அகதியின் சிரிப்பு அமுங்கி அமுங்கி அந்த அறையில் எழுந்தது,’ எனும் இடம் இக்கதையில் எனக்கு முக்கியமான இடமாகப் பட்டது. தன் அடையாளத்தை அவன் அஞ்சி மறைக்கவில்லை. அதில் ஒரு சிறு விளையாட்டும் சேர்ந்திருக்கிறது. திரளில் தன்னை அமிழ்த்திக் கொள்ள முயல்பவர்களாகவே இருக்கிறார்கள் ‘இளம் அகதியும்’ ‘அகதியானவளும்’. சாதாரணமாக பணி காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கும் அகதிகளுக்குமான வேறுபாடு என்பது கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் உள்ளது. பெயர்ந்தவர்கள் கடந்த காலத்தை மறக்க முயல்கிறார்கள். அகதிகள் அதை இறுகப் பற்றி தங்களுக்குள் பாதுகாக்க விழைகிறார்கள். ஒருவகையில் அவர்களுடைய இறுதி பற்றுகோல் நினைவுகளே. நினைவுகளின் கடந்த காலங்களுக்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான ஊசலாட்டத்தால் நிறைந்தது அவ்வாழ்வு. ‘தீபாவளி’ உணர்ச்சிகரமான சித்தரிப்பால் மனதைப் பதறச் செய்த கதை. பதினான்கு முறை தன் வாழ்வில் இடம் பெயர்ந்தவன் கதிர்காமன். இந்திய அமைதிப் படை நிகழ்த்திய குண்டு வெடிப்பில் தன் மனைவியையும் மகளையும் இழக்கிறான். ‘சந்திரா இந்திரா’ என தன் மகளுக்கு பெயரிடுகிறார். ‘குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்’ கதையிலும் ‘எம்.ஜி.ஆர்’ மீதான ஈழ மக்களின் பிணைப்பு வெளிப்படுகிறது. இந்திய அமைதிப் படையின் தாக்குதலின் விளைவாக நேரும் பிஞ்சுக் குழந்தை இந்திராவின் மரணம் வெகுவாக அமைதியிழக்கச் செய்கிறது. தொகுப்பின் இறுதி கதையில் வருவது போல “உலகின் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை. உணர்ச்சிகளால் சற்று அமைதியிழக்கச் செய்த மற்றொரு கதை என “கரை சேராத மகளை” சொல்லலாம். சாதனாவின் தோற்றம் மனதை தொந்திரவு செய்கிறது. கால்களற்ற, பார்வையற்ற ரத்தக் கன்று போலிருந்தாள். அவளை அந்நிலையில் விட்டுவிட்டு அவளுடைய அன்னை பூ ராணியும் இறந்துவிடுகிறாள். “தந்தம்” மற்றும் “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” ஆகிய தொகுப்பின் கடைசி இரு கதைகள் வழுக்கிக்கொண்டு செல்கின்றன. “தந்தம்” துரோகத்தின் கதை. போருக்கு பிந்தைய நெருக்கடிகளை சொல்கிறது. ராணுவத்துடன் இணைந்து முன்னாள் புலிகளை காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சித்திரத்தை அளிக்கிறார். தெளிவத்தை ஜோசெப் ‘குடைநிழல்’ இத்தகைய தலையாட்டியின் செயல்பாடுகளை மிகக் கூர்மையாக சொல்லும். “குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்” மனித வெடிகுண்டுகளாக மாறி கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. சன்னமான அங்கதம் சம்பவங்களுடன் இழையோடுகிறது. பல கதாபாத்திரங்களும், கலைந்த வடிவமும் கொண்டிருக்கிறது. நாவலாக விரித்தெடுக்கும் வாய்ப்பு கொண்ட களமும்கூட. கதை சொல்லும் முறை கைவரப்பெற்ற கதை என இதை குறிப்பிடலாம். “கள்ளு” ஒரு பெண்ணின் மூன்று காதலர்களைப் பற்றிய வாழ்க்கைச் சரிதை கதை. இதில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘கண்டி வீரன்’. தன்னை புலி என்று சொல்லிக்கொண்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர் என அவரை கிண்டல் செய்கிறார். வேகமாக வழுக்கிச் செல்லும் கதையின் முடிவில் “தாய் நாடுமில்லை, தாய்களுக்கு முலையுமில்லை. யுத்தம் எல்லாவற்றையும் சபித்துவிட்டது” எனும் வரி வலுவாக வெளிப்பட்டது. “சங்கிலியன் படை” கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நெருங்கியவன் தவறிழைக்கும்போது நீதியை நிலை நாட்ட முடிவெடுப்பவன். பின்புலம் வேறென்றாலும் இக்கதையின் உணர்வு நிலை நமக்கு பழகியதாக உள்ளது. “இவன்” திருடனுக்கு மீட்சி அளிக்கும் கதை. யூகிக்கத்தக்க’ கதையின் முடிவு. தொகுதியின் பலவீனமான கதைகளில் ஒன்று. “தாழம்பூ” கதையும் தேய்வழக்காகிப் போன பேசுபொருளைச் சொல்கிறது. எனினும் இக்கதைகளுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. சில மனிதர்களின் நினைவுகளை எழுதுவதன் வழியே மட்டுமே கடந்து செல்லமுடியும். அல்லது அவர்களை நிரந்தரமாக நினைவில் நிறுத்த முடியும். இது சென்ற ஆண்டு விருது வழங்கப்பட்ட மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் நாவல் குறித்து நான் எழுதியது அகரமுதல்வனின் படைப்புலகிற்கும் பொருந்தும் என தோன்றுகிறது. “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” இப்படியான தேவைகள் ஈழ எழுத்திற்கும் இருப்பதாகவே எண்ணுகிறேன். அகரமுதல்வனின் கதைகளில் சுய மைதுனமும், காமமும் பல தருணங்களில் வருகின்றன. அவை பெரும்பாலும் சிறிய மனக் கிளர்ச்சிகளுக்கு அப்பால் எதையும் அளிக்கவில்லை. ஆனால் இந்த பயன்பாட்டிற்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமா என்று இரண்டாம் வாசிப்பில் யோசனை வந்தது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 வின்ஸ்டன் ஸ்மித் – ஜூலியா உறவை எண்ணிக் கொண்டேன். ‘பெரியண்ணனின்’ கண்களுக்கு புலப்படாமல் என்ன செய்தாலும், செய்ய முயன்றாலும் அது கலகம் எனக் கருதியவர்கள். மிக இயல்பான உந்துதலால் நிகழும் கலவிகூட ஒடுக்கப்பட்ட சூழலில் அதிகாரத்திற்கு எதிரான கலகமாக இருக்கக்கூடும். அவ்வகையான வாசிப்பை அகரமுதல்வனின் கதைகளுக்கு அளிக்க முடியுமா என்று பரிசீலித்து பார்க்கலாம். “பெயர்” கதையில் அவர்களின் விடுதலை உணர்வும் இளைப்பாறுதலும் தெளிவாகவே வெளிப்படுகிறது. “அகதிகள் புணரும் ரகசியத்தை விடியும் இரவும் பார்த்துவிடக் கூடாது” இரண்டு கதைகளில், ‘இந்தக் கதை இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்’, ‘ஏழு நிமிடங்களில் முடிந்து விடும்’, என்றெல்லாம் எழுதுவது ஒரு யுத்தி என்றால், அது துருத்தலாக இருக்கிறது. “மேலும் ’ஈழ ஆதரவு – ஈழ எதிர்ப்பு’ எனும் இருமையை ஒரு கறுப்புக் கண்ணாடியைப் போன்று இக்கதைகள் அணிந்திருக்கின்றன” என்றும் அபிலாஷ் எழுதி இருக்கிறார். அது எனக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் வாழ்க்கைச் சரிதை தன்மையுடைவையே. வழமையாக நாம் பழகிவரும் வடிவமான சிறுகதைக்கான இறுக்கமோ கச்சிதமோ அவற்றில் இல்லை. எனினும் புதிய வகைமாதிரியான கதைசொல்லலை நோக்கி செல்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். மேற்கில் வரலாற்று நிகழ்வுகளை ‘கதையாடல்’ (narrative) முறையில் எழுத பத்திரிக்கைத்துறையில் பயிற்றுவிக்கிறார்கள். அவ்வகையிலான முயற்சிகளாக கருதப்படும்போது, இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த தொகுப்பு என்னுள் சில ஆழமான கேள்விகளை எழுப்பியது. எனது வாசிப்புக்கு சவாலாக இருந்தது, அதன் எல்லையை சோதிப்பதாகவும் இருந்தது. காரணம் எனது இலக்கிய நம்பிக்கைகள், வழிமுறைகள் மற்றும் தேவைகள் வேறானவை. வேறு வகையான இலக்கிய படைப்புகளும் இருக்க முடியும், அவை கொண்டாடப்பட முடியும், என்பதை கிரகித்துக்கொள்ள சிரமமாக இருந்தது. எல்லைகளைக் கடப்பதே வாசகனின் கடமை. எதையாவது தவற விடுகிறேனா என்று திரும்ப திரும்ப இக்கதைகளை வாசித்தேன். இறுதிவரை கட்டுரையை திருத்திக்கொண்டே இருந்தேன். ஒரு கதை அல்லது கதையாசிரியர் புதிதாக எதையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. நவீன இலக்கிய வாசகனாக கருத்தியல் பிரதிகளின் மீது எனக்கொரு மன விலக்கம் உண்டு. நவீன இலக்கியம் என்று நான் நம்பும் ஒன்றின் இயல்புகளில் முக்கியமானது, அதற்கு தம்மவர் அயலவர் எனும் இருமையை கடந்து ஒட்டுமொத்த மானுடத்தை நோக்கி விரியும் குரல் இருக்க வேண்டும். குணா கவியழகனின் “அப்பால் ஒரு நிலம்” நாவல் முழுவதும் ஈழப் போராளிகளின் உளவுப் பிரிவின் கதையை சொல்கிறது. வீர வழிபாடு, வழமையான பெண் பாத்திர வார்ப்புக்கள் என்று பயணித்து, நாவலின் இறுதியில் சிங்கள சிப்பாயை தன்னைப் போன்ற ஒரு காதலனாக அடையாளம் காணும் புள்ளியில் நாவல் உச்சம் அடைகிறது. அது நடைமுறை நோக்கில் முட்டாள்தனம்தான், அவனுடைய உயிரையே காவு வாங்கிவிடுகிறது. ஆனாலும் அதில் நம்மவர் அயலவர் இருமைக்கு அப்பால் ஒரு தாவல் நிகழ்கிறது. அதவே அந்நாவலை மேலான பிரதியாக ஆக்குகிறது. அகரமுதல்வன் அவர் அறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுகிறார். ஒரு இலக்கிய பிரதியின் பெறுமதி என்பது அது வெளிப்படுத்தும் உண்மைத்தன்மை மட்டும் சார்ந்ததா? ‘உண்மையை’ அப்பட்டமாக சொல்வதால் ஒரு பிரதி மேலான இலக்கிய பிரதியாகிவிட முடியுமா? பத்திரிக்கைச் செய்திகள் வழியாக அறிந்ததைக் காட்டிலும் மேலதிகமாக கதை என்ன அளிக்கிறது? அறக் கேள்வியாக, தத்துவ விவாதமாக விரிகிறதா? அகரமுதல்வனின் பாத்திரங்களுக்கு தங்கள் கருத்தியல் சார்ந்து எந்த அறக் குழப்பமும் இல்லை. மனித குண்டுகளாக வெடித்து சிதறும்போதும்கூட “உலகில் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்ல முடிகிறது. துரோகிகளும், ஒழுக்கமற்றவர்களும், திருடர்களும் மட்டுமே, அவர்கள் அப்படிப்பட்டவர்கள், அதற்காக தண்டிக்கப்பட்டவர்கள், என்பதாலேயே இயக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதான ஒற்றைப்படை சித்திரம் கதைகளில் காணக் கிடைக்கிறது (‘கள்ளு’, ‘சங்கிலியன் படை’). கலை எல்லாவிதமான ஒற்றைப்படையாக்கத்திற்கும் (stereotyping) எதிரானது என்பது என் நம்பிக்கை. எங்குமே மானுட அகச்சிக்கல்கள், அற நெருக்கடிகள் வெளிப்படவில்லை என தோன்றுகிறது. தலையாட்டியின், கைகாட்டியின் உளம் என்னவாக இருக்கும்? அவனுடைய நெருக்கடிகள் எத்தகையதாக இருக்கும்? துருவப்படுத்தலுக்கு அப்பால் கதை மாந்தர்களின் சிக்கல்ளின் பல அடுக்குகளை, தரப்புகளை பேச வேண்டும். வாழ்க்கை எங்குமே இத்தனை எளிதாக இருமுனைகொள்ளவில்லை எனும்போது அதைப் பற்றி பேசும் இலக்கியமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பு. மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கத்தை காட்டுவதே இலக்கியம் என்பதாக ஜெயமோகன் எழுதி இருப்பார். ‘கண்டி வீரன்’ (ஷோபா), ‘தமிழினி’ ஆகியோர் பற்றிய குறிப்பு கதைகளில் காணக் கிடைக்கிறது. கருத்தியல் ரீதியான விலக்கம் கொண்டோரை விமரிசிக்கும் போக்கு எப்போதும் உள்ளதுதான், ஷோபாவே முத்துலிங்கத்திற்கு அப்படிச் செய்த முன்மாதிரி உள்ளது, என்றாலும் எனக்கு அது உறுத்தலாக இருந்தது. மேலும் கருத்தியலை ஒரு படைப்பாளி கையில் எடுத்தால் தன் மொத்த படைப்பூக்கத்தையும் அதை காபந்து செய்வதற்கே பயன்படுத்துவான் என்றொரு ஐயமும் எனக்குண்டு. கதைகளின் மீதான விமர்சனம் கருத்தியலின் மீதான விமர்சனங்கள் அல்ல. பெரும்பாலான கதைகள் என்னை ஈர்க்காமல் போனதற்கு அவருடைய கருத்தியல் சார்புதான் காரணமா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்வேன். ஒரு அன்னை போர்க் காலத்தில் தன்னை வன்புணர்ந்த சிங்களச் சிப்பாயை தன் மகளுக்கு முதன்முறையாக தந்தையென அடையாளம் காட்டும் அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகளை’ விடக் கூர்மையான அரசியல் கதையை ஈழ பின்புலத்தில் நான் வாசித்ததில்லை. அ. முத்துலிங்கம் அரசியலற்ற எழுத்தாளர் என பலரால் நிராகரிக்கப்படுகிறார் என்பது வேறு விஷயம். பல கதைகளில் தேய்வழக்காகிப் போன உணர்வுகளை எழுதுவதன் மூலம் தீவிரம் நீர்த்துவிடுகிறது. நம்மை அசைத்துப் பார்க்கும் புதிய சித்திரங்கள் ஏதுமில்லை. பெண்களின் சித்தரிப்புகள் வீரமும் ஈரமும் நிறைந்த அன்னை அல்லது பேதை என்பதற்கு அப்பால் வேறு வகையில் விரியவில்லை (ஓரளவிற்கான விதிவிலக்கு- ‘பெயர்’). இவை என் ரசனை உருவாகிவந்த பின்புலத்தில் எனக்கிருக்கும் எதிர்பார்ப்புகள். எவ்வகையிலும் இறுதி தீர்ப்பல்ல. ஏனெனில் இவை அதீதமாகவும், தேவையற்றதாகவும் பிறருக்கு இருக்கலாம். புனைவை அளக்கும் உறுதியான அளவை ஏதும் என்னிடம் இல்லை. அகரமுதல்வனின் இத்தொகுதி கதைகள் எனக்கான கதைகள் இல்லை என்பதே என் தரப்பு, அவை கதைகளே அல்ல என்பதல்ல. ஹெரால்ட் ப்ளூம் சொல்வது போல் “இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை” எனும் நம்பிக்கை எனக்கும் உண்டு. அதே சமயம், கருத்தியலையும்கூட மேம்பட்ட கலைத்திறனால் கொண்டு சேர்க்க முடியும் என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை. நல்ல வாசிப்பும், மொழியும், வாழ்வனுபவங்களும் கொண்ட அகரமுதல்வன் தனது எல்லைகளை உடைத்து மேலும் பல கதைகளை எழுதுவார் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. https://padhaakai.com/2018/07/10/on-ban-ki-moonin-rwanda/
  21.  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.