24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)
-
உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை
உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை Dec 30, 2025 - 04:24 PM உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகக் கடுமையாக உழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாகப் பாதிக்கப்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து மத்துகமவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. மத்துகம, பெலவத்தை பகுதியைச் சேர்ந்த இசுரி கௌசல்யா மீகஹபொல என்ற இந்த மாணவி, மத்துகம அதிகாரம் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். தனது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவருக்கு, தற்போது மிகப்பெரிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. அவர் 'லுகேமியா' (Leukemia) எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், இந்தத் திடீர் நோய் நிலைமை காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. இந்த மாணவியின் சிகிச்சைக்கு உதவ அல்லது அவருக்குத் தோள் கொடுக்க விரும்பும் எவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்: 072 8441 223 078 3953 506 https://adaderanatamil.lk/news/cmjsgzk5n03aro29nbnzw7dq4
-
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம் Dec 30, 2025 - 03:47 PM தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjsfo5dg03ano29n4ncre58i
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன். ( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)
-
முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!
முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!! 30 Dec, 2025 | 10:02 AM முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234717
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ம்ம்ம்… ஒரு பிரதேச சபை உறுபினர்க்கு இப்படி மினக்கெடுவார்களா? பார்ப்போம்.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது. புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது. தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது. பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது. ஆனால்…. இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி. ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்… வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர். #வரலாறு முக்கியம்
-
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா?
- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
அண்ணே, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களமோ?! https://np.gov.lk/information-officers-and-designated-officers-department-of-road-development/ https://rda.gov.lk/index.php?lang=ta- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஆளை மடக்க ஒரு கூட்டு முயற்சியாகவும் இருந்திருக்கலாம்.- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
வாழ்த்துக்கள். அது என்ன நைட் பட்டம்? பல்கலைக்கழகம் போனவர்கள் மாத்திரம் பதிலளிக்கவும்.- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
பொறுத்திருந்து பார்ப்போம். சுமன் ஆதாரவாளர் எண்டால் இருக்கு கச்சேரி😂- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
யாருடைய ஆளாக இருந்தாலும் தமிழரசுக்கட்சி ஆள் என்றால் சுமந்திரனிடமிருந்து ஆளை வெளியே போடும் கடிதம் வந்திருக்கும். எனவே இது வேறுகட்சி ஆட்களாகவும் இருக்கலாம்.- 'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
ப்ரோ…. ஜோக் எண்டு நினைச்சு உண்மையை சொல்லி போட்டியள். ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் கம்யூனிசம், பலஸ்தீன ஆதரவு என்ற வெத்து வேலைகளில் நாம் இறங்கியதன் பலனை கடைசிவரை அனுபவித்தோம். இல்லாமல் அப்போதே ஒரு அதி வலதுசாரி போக்கை எடுத்து இருந்தால் - நமக்கு சில நண்பர்களாவது மிஞ்சி இருப்பார்கள்.- Today
- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
வாட் ப்ரோ…. வெரி ராங் ப்ரோ- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
சுமன் குரூப்போ, சிறி குரூப்போ எண்டும் சொன்னால்தானே எந்த வகையில் கருத்து எழுத வேண்டும் என தீர்மானிக்க முடியும்😂. சுமன் குரூப் இல்லை எண்டால் - திரியை கடந்து போகும் எண்ணத்தில் உள்ளோர் எல்லாம் பாவம் எல்லோ😂.- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
இவர் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் - 1985 சீனியர் பிரிபெக்ட். ஜொனியன்ஸ் எல்லாரும் ஒருக்கா கொலர தூக்கி விட்டு கொள்ளவும்😂.- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஆள் எந்த கட்சியாம்?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@புலவர் ஐயா ஓமெண்டால் சரி! ஐயாவை இந்தப் பக்கம் காணோம்!- கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 29 Dec, 2025 | 02:49 PM தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை ஏற்படுத்தி, தமிழகத்தின் நிகரற்ற அரசியல் சக்தியாக திகழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த குரு பூஜையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி பேரணியாக வருகை தந்து அவருக்கு குருபூஜை செய்தனர். இந்த தருணத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஜி கே வாசன், எல் . முருகன் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றி கேப்டன் விஜயகாந்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் இந்நிகழ்வில் பங்கு பற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/234667- கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம் அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. "யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான். அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள். ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது. 'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான். 'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான். முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை. யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள். அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள். சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும் சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ? தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க? அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது. ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான். அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள். மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும் நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள். ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான். "நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி. “வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்: "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!] இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும். யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று. ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்! ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?- இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம் 30 Dec, 2025 | 03:51 PM மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து நான்கு இலட்சம் கியுபிக் மண் அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன. அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார். https://www.virakesari.lk/article/234753- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
நான் நேற்று.... ரணில், கேகலிய ரம்புக்வெல மாதிரி, கைது செய்யப் பட்டவுடன் டக்ளஸ்ஏன், மருத்துவ மனைக்கு செல்லவில்லை என நினைத்து சந்தோசப் பட்டேன். அந்தத் சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. வைத்தியசாலையில் ஜாலியாக போய்... டக்கி, படுத்து விட்டது. பார்க்கப் போனால்.... பிள்ளையான் மட்டும்தான், உடல் ஆரோக்கியமான மனிதன் போலுள்ளது. மறியலுக்குப் போன நாளில் இருந்து, மாதக் கணக்கில் வைத்திய சாலைப் பக்கமே போகாமல், கம்பிக்குப் பின்னால் இருந்து களி தின்று கொண்டு இருக்கின்றார். இல்லாவிடில்... பிள்ளையானுக்கு, வைத்தியசாலையில் போய் படுத்திருந்தால் விசேட கவனிப்பு இருக்கும் என்று ஒருவரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ. என்ன இருந்தாலும்... பிள்ளையானுக்கு, கெட்டித்தனம் காணாது. 😂 - மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.