24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கே....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லாம் அரசியல் சிங்கள அரசியல் வாதிகள் 2004ம் ஆண்டு முரளிதரனுக்கு எதிராக அறிக்கை விட்டவை முரளி வன்னிக்கு வந்து அங்கு உள்ள தமிழ் மக்களை சந்திச்சு விட்டு ஊடகத்துக்கு பேட்டி கொடுக்க சிங்களம் போர் கொடி முரளிதரனுக்கு எதிராக தூக்கினவை தமிழன் என்ர உனர்வு இருந்த படியால் தான் தமிழ் நாட்டு பெண்ண திருமணம் செய்தார்............... 2009க்கு பிட்பாடு முரளிதரனின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்க வில்லை..............மகிந்தா கும்பல் இவரை வைத்து எதை சொல்ல விரும்புகினமோ அதை முரளிதரன் சரியாக செய்தார்............அதோட சிறு வெறுப்பு இவர் மேல் ஆனால் இப்போது வாய் திறப்பதில்லை தானும் தன்ட பாடும்.........................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நூற்றுக்கு நூறு உண்மை இவரின் சாதனையை இனி யாராலும் முடியாது.................இவர் இலங்கை அணிக்காக விளையாடின போது கூடுதலான விளையாட்டை பார்த்து இருக்கிறேன்........ ஆனாலும் இவர் தன்னை ஒரு தமிழனாக காட்டிக் கொள்ள கொஞ்சம் பின்னடித்தார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்தக் காலத்தில் அடிச்சுப் பிடிச்சு பினலுக்கு வந்து பல வாட்டி தோத்த அணி என்றால் அது இலங்கை அணியாகத் தான் இருக்க முடியும் பல வாட்டி ஆசிய கப் தூக்கி விட்டினம் இரண்டு முறை உலக கோப்பை வென்று விட்டினம்................ பழைய இலங்கை அணிய மாதிரி இனி பார்க்க முடியாது.............பல ஜாம்பவாங்களின் ஓய்வோட இலங்கை அணி படுத்து விட்டது................. இப்பத்த இலங்கை வீரர்கள் சரியான கட்டை உயரம் இல்லை...............அனுபவமும் சுத்தமாய் இல்லை...............இன்று இங்லாந் இலங்கையை சின்ன ஸ்கோர் அடிச்சே மடக்கி விட்டினம்..............இந்த உலக கோப்பையில் இவர்கள் பலமான அணிகளிடம் அடி வேண்டுவது உறுதி............... மலை போல் இருந்த அணி இப்போது பல்லு இல்லாத பாம்பு போல் ஆகி விட்டது ஹா ஹா............... மார்கேட்டில் கீரை விக்க விட்டால் தான் இவங்கள் ஒழுங்காய் விளையாடுவாங்கள்..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் முதல் தரப் போட்டிகளில் தமிழ் யூனியனுக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவர் அவ்வளவாக சோபிக்கவில்லை. தமிழனாக, இருமடங்கு சோபிக்க வேண்டும். அப்போதான், கண்ணில் படுவார். நான் நினைக்கிறேன், அவரின் அனுபவம் கூட, அவர் நன்றாக சோபிப்பார் என்று. பார்ப்போம்.
-
சிரிக்கலாம் வாங்க
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர்கள் எப்போதும் இப்பிடித்தான். சும்மா போக்குக் காட்டுவினம். பிறகு வந்து அடி அடி என்று அடிப்பினம்.- 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!
சிறீ லங்காவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு இப்படியொரு விசாரணையா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் வெற்றி பெற வாழ்த்துகள் ........! 😀- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த நேரத்தில் இலங்கை வளர்ந்துவரும் அணி. எல்லா திறமையாளர்களையும் உள்வாங்கியிருந்தனர். ஒவ்வொருவரும் நெருப்பு. அத்தோடு டேவ் வட்மோரும் ஒரு காரணம். அவர்தான் பயிற்சியாளர். அணியைக் கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர். அர்ஜுன ரணதுங்க, யார் பேச்சையும் கேக்கமாட்டேன் என்று இருந்தவர். எல்லாம் சேர்ந்து முரளிக்கு பாதை அமைத்துக் குடுத்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவர் இல்லாமல் அணி இல்லை என்று ஆகியது- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரீட்சைகள் திணைக்களத்து ஆணையாளர் அவர்களே, சோதனையை சில நாட்கள் அல்லது மணித்தியாலங்களுக்கு பிற்போட முடியாதா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாருங்கள் கிருபன். போட்டியில் கலந்துகிட்டதில் மகிழ்ச்சி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்.. @நியாயம் , @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நூற்றுக்கு நூறு உண்மை இவரின் சாதனையை இனி யாராலும் முடியாது.................இவர் இலங்கை அணிக்காக விளையாடின போது கூடுதலான விளையாட்டை பார்த்து இருக்கிறேன்................. இவர் விளையாடின காலத்தில் மற்ற வீரர்களுடன் சேர்த்து இலங்கை அணி மிகவும் பலமான அணியாக இருந்தது இப்பத்தை இலங்கை அணி வீரர்களுக்கு பெரிய அனுபவமும் இல்லை திறமையும் இல்லை ஏனோ தானோ என விளையாடுகினம்..................சொந்த நாட்டில் இந்த உலக கோப்பையில் மற்ற அணிகளிடம் வேண்டி கட்டப் போகினம்...........................- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன். சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம். அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார். சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார். "சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் நானும் குதித்துள்ளேன் 😄 # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NED முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS Select WI Select WI Select SA Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG Select NZ Select NZ NZ PAK Select PAK PAK SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), PAK SA SA 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UAE 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Dewald Brevis 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Nawaz 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tilak Varma 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது. இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
றிவேர்சில் சென்ற ரக்ரரில் சிக்கிய பெண். மயிரிழையில் தப்பிய குழந்தை. அரியவகைப் பனிச்சிறுத்தைகள். பராகிளைடிங் விபத்து, ஏரியில் விழுந்த காட்சி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தவிர்க்கவியலாத திறமையாளர் என்பதும் ஒரு காரணம் அண்ணா.- கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.- சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை - அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம் 03 Feb, 2026 | 04:50 PM (நா.தனுஜா) கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை. எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல' எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 'கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது' எனவும் அவர் விசனம் வெளியிட்டார். அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார். அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். 'அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல. அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன. ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/237733- ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்?
ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 31 நிமிடங்களுக்கு முன்னர் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார். ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் பேசுகையில், "அந்த கட்டுரையில் நரவனே, தன்னுடைய நினைவுக்குறிப்பான அப்புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஐந்து வரிகளை மட்டும் வாசிக்க நான் விரும்புகிறேன்." என தெரிவித்தார். வெளியாகாத புத்தகம் ஒன்றின் பகுதிகளை எப்படி வாசிக்கலாம் எனக்கூறி பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆளும்கட்சியினரை பார்த்து ராகுல் காந்தி, "பயங்கரவாத்கத்தை எதிர்த்து சண்டையிடுவதாக அவர்கள் (ஆளுங்கட்சியினர்) கூறுகின்றனர், ஆனால் ஒருவர் கூறிய மேற்கோள் குறித்து அஞ்சுகின்றனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவர்களை பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை வாசிக்க அனுமதிக்கட்டும்." என்றார். ஊடக செய்திகளின்படி, ராகுல் காந்தி குறிப்பிட்ட அப்புத்தகம் 2024ம் ஆண்டு விற்பனைக்கு தயாராக இருந்தது. ஆனால், அப்புத்தகம் குறித்து இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான செய்தியில், அப்புத்தகம் மீதான விசாரணை முடியும் வரை அதன் பகுதிகளையோ அல்லது மின்னணு பிரதிகளையோ யாருக்கும் வழங்கக் கூடாது என அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் சில மட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகவும், அப்போதிருந்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஜெனரல் நரவனே ராணுவத் தளபதியானார். யார் இந்த மனோஜ் முகுந்த் நரவனே? ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பணியாற்றினார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டம் மற்றும் கல்வான்பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா பத்தற்றத்தை எதிர்கொண்ட காலகட்டத்தில் அவர் இந்திய ராணுவத்தை வழிநடத்தினார். புனேவின் கியான் பிரபோதினி பள்ளியில் மனோஜ் நரவனே ஆரம்ப கல்வி பெற்றார். அதன்பின் இந்திய ராணுவத்தில் அதிகாரியானார். போர்க்களத்தைத் தாண்டி கல்வி மீதும் அவருக்கு நாட்டம் இருந்தது. அவர் இந்தோரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக இயல் பிரிவில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். அவருடைய தந்தை முகுந்த் நரவனே விமானப் படை அதிகாரியாக இருந்தவர். மனோஜ் நரவனேவின் மனைவி ஓர் ஆசிரியர். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 2020ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் ஜெனரல் நரவனேவின் ராணுவப் பணியில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில், "2020ம் ஆண்டு ஜூன் மாதம் ரோந்துப் புள்ளி 14-ல் (Patrolling Point) பதற்றம் உச்சகட்டத்தை அடைந்ததாக, அதிகாரபூர்வ ராணுவ பதிவுகள் மற்றும் ராணுவம் வழங்கிய முந்தைய தகவல்கள் கூறுகின்றன. மோதல் தடுப்பு மண்டலத்திலிருந்து (buffer zone) தங்கள் கூடாரங்களை நீக்குவதற்கு சீன ராணுவம் மறுத்தது. கர்னல் சந்தோஷ் பாபுவால் வழிநடத்தப்பட்ட இந்திய துருப்புகள், சீன ராணுவத்தை தடுத்து நிறுத்த நகர்ந்தபோது, வன்முறை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரல் நரவனே இந்தியாவின் உத்தியில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இந்திய ராணுவம் தற்காத்துக்கொள்ளும் கொள்கையை மட்டுமே கடைபிடித்தது (defensive policy), ஆனால் நரவனே அச்சுறுத்தல் சமயங்களில் எதிரிகளை தாக்கும் கொள்கையை கடைபிடிக்குமாறு (offensive defence) செய்தார். அந்த செய்தியில், "நரவனே கைலாஷ் மலைத்தொடரில் இந்திய டாங்கிகளை நிறுத்துமாறு செய்தார், இது சீன ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது. 2020ம் ஆண்டு ஜூன் 16 இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்ததால், அந்நாள் தன்னுடைய பணியில் 'சோகமான நாள்' என நரவனே விவரித்தார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டில் வெளியான புத்தகத்தின் பகுதிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் நரவனே ஆட்சிக் காலத்தில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின்படி, "2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலை இப்புத்தகம் விவரிக்கிறது. அதில், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் அக்னிபத் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான உரையாடலும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடிஐ செய்தி முகமை அப்புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டதாக அச்செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 31 அன்று மாலை நடந்த சம்பவங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இந்த சம்பவம் குறித்த கட்டுரை கேரவன் இதழில் வெளியாகியுள்ளது. அப்புத்தகத்தின் சில பகுதிகள் குறித்து கேரவன் இதழில் வெளியான பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாசிக்க நினைத்தார். அதன்பின், ஆகஸ்ட் 31 மாலை என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ள கேரவன் கட்டுரையின் பக்கங்களை காங்கிரஸ் கட்சி தன் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தது. நரவனேவின் சாதனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். லண்டன் ஸ்பீக்கர்ஸ் பியூரோ அமைப்பின்படி (முன்னணி பேச்சாளர் முகமை), நரவனேவின் பணி காலத்தில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முயற்சியின் கீழ், பல முக்கிய ஆயுத கொள்முதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது, இந்திய ராணுவம் ஆயுதங்களை சொந்தமாக தயாரிக்கவும் வெளிநாட்டு ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் ஊக்கமளித்தது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்கள் பயிற்சி பெற அனுமதித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் நரவனே, இது ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய படியாக கருதப்படுகிறது. ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். இலங்கையில் ஆபரேஷன் பவான் நடவடிக்கையின்போது அங்கு நிறுத்தப்பட்ட இந்திய அமைதிப்படையின் ஒரு உறுப்பினராகவும் ஜெனரல் நரவனே இருந்தார். மேலும் மியான்மர் தூதரகத்திலும் மூன்றாண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். நரவனே பலமுறை தன் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் படைப்பிரிவை வழிநடத்தியதற்காக சேனா பதக்கம், நாகாலாந்தில் அசாம் ரைஃபிள் (வடக்கு) பிரிவின் ஐஜியாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம், அதிநவீன தாக்குதல் படைப்பிரிவான ஸ்டிரைக் கார்ப்ஸை (Strike Corps) வழிநடத்தியதற்காக அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் ராணுவப் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக பணியாற்றியதற்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை அவர் வென்றுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkj6nj310o- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நிறைய போராட்டத்தின் பின்பே முரளி உள்வாங்கப்பட்டார்.- வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7- ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml6lu35004seo29nn817abfi - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.