Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர் Published By: Vishnu 26 Mar, 2026 | 05:06 AM மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிவிட்டது" என்றும், உலகம் தற்போது "ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்" உள்ளது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே "சரியான நேரம்" என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "இராணுவ மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான நேரம் வரவில்லை, மாறாக இராஜதந்திரத் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டத்தை முழுமையாக மதித்து, அமைதியைக் கொண்டுவரப் பாடுபட வேண்டும்," என்று பொதுச்செயலாளர் கூறினார். https://www.virakesari.lk/article/241931
  3. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலின் தாக்குதல்கள் தொடரும் - அமெரிக்கா Mar 26, 2026 - 08:36 AM ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களுக்காக, 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி போர்க்கப்பல் பிராந்திய கடல் எல்லைகளிலிருந்து தனது வான்வழி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. குறித்த போர்க்கப்பலைக் குறிவைத்துத் தாம் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதன் காரணமாகக் கப்பலின் நிலையை மாற்ற வேண்டியிருந்தது என்றும் ஈரான் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் தமது நடவடிக்கைகளுக்கு எவ்விதத் தடையுமில்லை என்றும், திட்டமிட்டபடி ஈரானிய இலக்குகள் மீது போர்க்கப்பலிலிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmn6vs4gx0017356p3d7xdm5s
  4. மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரண வழக்கு - 17 நாட்கள் கடந்தும் போராட்டம் நடைபெறுவது ஏன்? படக்குறிப்பு,ஆகாஷ் டெலிசன் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடம் தரலாம். மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர்கள் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து 17வது நாளாக குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே "இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை "ஆகாஷ் உடலைப் பெற்றுக்கொண்டு கண்ணியமாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன? வழக்கின் பின்னணி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் மார்ச் 6ம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர். பட்டாகத்தி மற்றும் அரிவாளால் இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை பிடிக்க முயன்றபோது ஆகாஷ் "மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதனால் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது", என காவல்துறையினரின் அறிக்கை கூறுகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகாஷ் குடும்பத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு இடையே மார்ச் 9ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவலர்கள் பணியிடை நீக்கம் ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த 13ம் தேதி சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி உட்பட 11 காவல்துறையினருக்கு சிபிசிஐடி கடந்தவாரம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. மானாமதுரை டிஎஸ்பி ராஜா, ஆயய்வாளர்கள் திலீபன் (திருப்புவனம்), குமாரவேல் பாண்டியன் (மானாமதுரை), உதவி ஆய்வாளர் குகன், ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்.பியின் தனிப்பிரிவு எஸ்.ஐ முத்துராஜா, ஏட்டு முனீஸ் குமார் ஆகிய 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில் ஒருசிலர் மட்டும் ஆஜராகவில்லை. உடலை வாங்க மறுப்பது ஏன்? படக்குறிப்பு,உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் கொலை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட காவலர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து கடந்த 17 நாட்களாக ஆகாஷ் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்யவும், தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை முழுமையாக பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இது வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது," மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன், உடலை வைத்து போராட்டம் நடத்துவது, சமீப காலத்தில் ஒரு வழக்கமாக உள்ளது விசாரணை அதிகாரிக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் பெற்றோரிடம் பேசி, ஆகாஷ் உடலைப் பெற்றுக்கொண்டு கண்ணியமாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்" நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் மனுதாரர் செல்வகுமார், ஆகாஷ் வழக்கிற்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒருவர் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் லெனின். இவர் ஆகாஷ் மரணம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். முன்னதாக ஆகாஷ் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வழக்கில் "ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய" மார்ச் 13ம் தேதி நீதிபதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் தமது மரணத்திற்கு முன்பாக அளித்த வாக்குமூலத்தில் தன் மீதான தாக்குதல்கள் குறித்து கூறியதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. ஆகாஷ் டெலிசன் பிரேத பரிசோதனை அறிக்கை மதுரை அரசு மருத்துவமனையில் நடத்திய பிரேதப் பரிசோதனையில், ஆகாஷ் டெலிசன் உடலில் மொத்தம் 28 வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது பதிவாகியுள்ளது. மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் , வலது காலின் நடுப்பகுதியில் உள்ள எலும்புகள் முறிந்திருந்ததாகவும், அந்த பகுதியில் தசை, நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்து 45 செ.மீ × 12 செ.மீ அளவில் ரத்தம் உறைந்த காயம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கை, முழங்கை, முழங்கால் மற்றும் தொடைப் பகுதிகளில் பல இடங்களில் சிவப்பு நிற சிராய்ப்புகள் மற்றும் கீறல்கள் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உட்புற பரிசோதனையில் மூளையின் முன்பகுதியில் ரத்தக் கசிவு மற்றும் புள்ளி வடிவ ரத்தக் கசிவுகள் காணப்பட்டன. நுரையீரல் மற்றும் இதயம் வீங்கிய நிலையில் இருந்ததாகவும் பதிவாகியுள்ளது. மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட ஊசி தழும்புகள் மற்றும் காயங்களும் முழங்கை மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் காணப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனினும், உயிரிழப்பிற்கான இறுதி காரணம் குறித்து இன்னும் முடிவு தெரிவிக்கப்படவில்லை. இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் திசுப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்காக இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இரத்த மாதிரிகள் மதுரை மண்டல அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முழு பிரேதப் பரிசோதனை நிகழ்வும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உடலை வாங்க போவதில்லை" "எனது மகனின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களை கைது செய்யும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் உடலை வாங்கப் போவதில்லை" என கூறுகிறார் உயிரிழந்த ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன். ஆகாஷை கைது செய்யும் முயற்சியின் போது அவர் தவறி விழுந்ததாக போலீசார் கூறுவதில் உண்மை இல்லை எனக் கூறுகிறார் ராஜேஷ் கண்ணன். ஆகாஷை காவல் துறையினர்தான் அழைத்துச் சென்றார்கள் என கூறும் அவர்,'ஆகாஷ் உடன் பிடித்துச் செல்லப்பட்ட ஆகாஷ் நண்பன் சொல்லிதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது' தெரிய வந்தது என்றும் தெரிவித்தார். "காவல் நிலையத்திலிருந்து திடீரென என்னை தொடர்பு கொண்ட போலீஸ் ஒருவர், 'உங்க மகனுக்கு ஒரு ஆடை எடுத்துக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு வாங்க' என கூறினார். " என்கிறார் ராஜேஷ். இதனையடுத்து ராஜேஷ் , அவரது மனைவி ஆனந்தி, காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக உள்ள ராஜேஷின் சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகிய நால்வரும் காரில் மதுரை அரசு மருத்துவமனை நோக்கி சென்றதாகக் கூறுகிறார். இதனிடையே மானாமதுரை டிஎஸ்பி ராஜா தங்களை , வேறு இடத்திற்கு அழைத்து பணம் தந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் ராஜேஷ். ஆனால் இதுபற்றிய கேள்விகளுக்கு காவல்துறை பதிலளிக்கவில்லை. அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த போதுதான் "உங்கள் மகன் இறந்த செய்தி தெரியாதா" என காவலர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக கூறுகிறார் ராஜேஷ் கண்ணன். "மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சென்று பார்த்த போது ஆகாஷ் கால் உடைக்கப்பட்டு, கால் எலும்பு உடைந்து வெளியே தெரிந்தது. ஒருவேளை ஆகாஷ் உயிர் பிழைத்திருந்தாலும் அந்த கால்களை வைத்து நடக்க முடியாது, அந்த அளவு கொடூரமாக தாக்கி இருந்ததை நான் பார்த்தேன்." என்கிறார் அவர். "தனிப்படை போலீசார் உட்பட 16 பேர் ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையவர்கள். எனவே அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய வேண்டும். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க போவதில்லை" என ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணா தெரிவித்தார். மகன் இறந்து 17 நாட்கள் ஆகியும் இறுதிச் சடங்கு செய்யாமல் இருப்பது மனவேதனையை தந்தாலும் தன் மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என கூறுகிறார், ஆகாஷின் தாய் ஆனந்தி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், "எனது மகன் என்னிடம் தொலைபேசியில் பேசும் போது போலீசார் அழைத்துச் சென்று சித்திரவதை செய்து காலுக்கு இடையில் கற்களை வைத்து காலை உடைத்தாக சொன்னான். அது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது." என்றார். மகன் இறந்து 17 நாட்கள் ஆகியும் இறுதி சடங்கு செய்யாததால் மன வேதனையின் உச்சத்தில் உள்ளதாக அவர் கூறுகிறார். "ஆனாலும், கொலை செய்தவர்களை கைது செய்யாமல் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தாலும் அவன் ஆத்மா சாந்தி அடையாது. அடித்துக் கொலை செய்த காவலர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என ஆகாஷின் தாய் ஆனந்தி கேட்டுக்கொண்டார். படக்குறிப்பு,லெனின் சமூக செயற்பாட்டாளர் லெனின் பேசுகையில்,"பிணையில் வெளியே வர முடியாத எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை ஏன் காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை?" என கேள்வியெழுப்பினார். திருப்புவனம் அஜித் குமார் காவல் மரணம், சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் உள்ளிட்டவற்றில் வழக்குப் பதிவு செய்த மறுநாளே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் இதுவரை சம்பந்தப்பட்ட காவலர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்புகிறார். காவல்துறை கூறுவது என்ன? இது குறித்து ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, "ஆகாஷ் உயிரிழப்பு தொடர்பாக காவலர்கள் சிலர் பணியிடை நீக்கம் மற்றும் ஒரு சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளதால் காவல்துறையால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது" என்றார். பிரச்னைகளைப் பேசுவோம் - 2 உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா? இது தொடர்பாக உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பிபிசியுடன் பகிருங்கள். உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாளுடன் பகிரப்படாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e7w0nzyv2o
  5. இந்தச் சண்டையாலை…. அங்காலை உக்ரேன்காரன் தனக்கு ஆயுதப் பற்றாக்குறையாக இருக்குது என்று.. கண் கலங்குகின்றான். 😂 தம்பர் அதுகும்… செய்யக் கூடிய கிறுக்குப் பயல்.
  6. ஆபிரகாம் லிங்கனுக்கு… ஈரானில் வைத்துத்தான், “ஈமக்கிரியை” நடக்கப் போகுது போலுள்ளது. 😂
  7. எனக்கு இன்னும் பதில் வரவில்லை. 😂 @உடையார் சொல்ல கூச்சப்படுகிறார் போலுள்ளது. 🤣
  8. 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள் adminMarch 25, 2026 யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். 43 வீதிகள் புனரமைப்பு. வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை சிவா கட்டடத்தாரர் ஒப்பந்த அடிப்படையில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தனர். 570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள் வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரர் , வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை பூர்த்தி செய்தது கடந்த 13ஆம் திகதியே. அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரமைப்புக்கு 76 நாட்கள் எடுத்திருந்த நிலையிலும் , வீதியின் புனரமைப்பில் திருப்தி இல்லை என அயலவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ,நேற்றைய தினம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் வீதி புனரமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் கூட்டத்தில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிக்காக டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் ,பிரதேச செயலருடன் அது தொடர்பில் பல்வேறு தடவைகள் தொடர்பு கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படாதமை குறித்து தெரிவித்து வந்தேன். அவரும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் பொங்கலுக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் அவை எவையும் நடைபெறவில்லை. அதேநேரம் மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது. வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி ,வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்திடம் கோரிக்கை வைத்தேன். அதேநேரம் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன். அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது , என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர். பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர். அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ,ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர். தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர். 76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை. எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்தார். அதனை அடுத்து வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மீள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் எனவும் , வீதிகளின் தரம் தொடர்பில் மீள் சோதனை செய்யப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது . https://globaltamilnews.net/2026/231009/
  9. இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு Mar 26, 2026 - 06:57 AM சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் ஐசிசிபிஆர் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாகக் கருதக்கூடாது என அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmn6sdgqp0012356p3x3hkfhd
  10. USS ஆபிரகாம் லிங்கன் மீது ஈரான் ஏவுகணையை வீசியது Published By: Vishnu 26 Mar, 2026 | 04:21 AM அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை குறிவைத்து ஈரானிய இராணுவம் ஒரு குரூஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கப்பல் தனது ஏவுகணை வரம்பிற்குள் நுழைந்தால் தாக்கப்படும் என்று ஈரானிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. https://www.virakesari.lk/article/241929
  11. பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இருக்காது துறை சார் வல்லுநர்களாக இருக்க வேண்டும் adminMarch 25, 2026 நீண்ட பாரம்பரியத்தை கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்றைக்கு 12 பீடங்களை கொண்டு விளங்கும் பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. இலங்கையில் அதிகூடிய பீடங்களை கொண்ட பல்கலைக்கழகமாக யாழ்ப்பாண பல்கலை கழகமே காணப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் தற்போது 14ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தை தாங்கிய வழிநடத்தி சென்ற அத்தனை துணைவேந்தர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவர்களின் பணிகளை தொடர்ந்து வரும் காலங்களில் முன்னெடுத்து செல்வேன். அத்துடன் புதிதாகவும் பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்க திட்டங்களை வைத்துள்ளேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சமூகத்தோடு இணைந்து இருக்க வேண்டும். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் சமூகத்துடன் இணைத்து தமது பங்களிப்பை செய்ய வேண்டும். சர்வதேச ரீதியாகவும், இலங்கை ரீதியாகவும் எமது பல்கலைக்கழத்தை தரப்படுத்தலில் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் , பீடாதிபதிகள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் எல்லோருடனும் இணைந்து செயற்படுவோம் புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பட்டதாரிகள் வெறும் பட்டத்தை வைத்து அரச வேலை தேடுபவர்களாக இருக்காது , தமது துறை சார்ந்து சிறப்பாக செயற்பட கூடியவர்களாக மாற வேண்டும். அதற்காக அவர்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழக மட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , தொழில் முயற்சிகளை முன்னெடுக்க கூடிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி அவர்கள் ஊடாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிப்பை வழங்க வைக்க வேண்டும். அறிவுத்திறன், ஆராய்ச்சி மற்றும் சமூக பொறுப்பு என்பவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் எமது சமூகத்தில் அக்கறையுள்ள அனைத்து துறை சார் வல்லுனர்களையும் எம்முடன் இணைந்து பயணிப்போம். அதற்கான எதிர்கால திட்டங்கள் என்னிடம் உண்டு அதனை நோக்கி நாம் பயணிப்போம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231019/
  12. எனக்கு மட்டும் என்ன? அங்கு என் அலுவலை மட்டும் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருந்தன். வந்த உடனை உண் கையால் பால்தேனீர் குடித்து எத்தனை நாளாச்சு. சோறுகறி வடிவாச் சாப்பிட்டு எத்தனை நாள் என்று சொல்லியே என்னைக் கொண்டு மனிசனும் மகளும் வேலை வாங்குகின்றனர். 😂 தொடர்ந்தும் எனக்கு எழுதி ஊக்கம் தருவதற்கும் படங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா. சாப்பாடுதானே முக்கியம் 😃
  13. சுரேஷ் சலே மீண்டும் சிஐடியிடம் ஒப்படைப்பு Mar 26, 2026 - 10:34 AM கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், வைத்தியசாலை அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அவர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றின் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். https://adaderanatamil.lk/news/cmn70bd27001c356pt8sho7f6
  14. ஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் பல்லப் கோஷ், அறிவியல் செய்தியாளர் மற்றும் ஆலிசன் ஃபிரான்சிஸ், மூத்த அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. இந்தப் பயணம், 'ஆர்டெமிஸ் 2' என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 10 நாட்கள் நீடிக்கும். இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், இதற்கு முன் எந்தவொரு மனிதரும் சென்றிராத அளவுக்கு விண்வெளியின் ஆழத்துக்குப் பயணம் செய்வார்கள். அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிக்கு, இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கும். ஆர்டெமிஸ் 2 எப்போது விண்ணில் ஏவப்படும்? ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் இந்தப் பயணம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த பயணங்கள் தாமதமாயின. 2024 டிசம்பரில், அந்த மாத இறுதிக்குள் ஏவ வேண்டும் என்று நாசா காலக்கெடு நிர்ணயித்தது. 'வெட் டிரஸ் ஒத்திகை' எனப்படும் ஒரு சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஏவுதல் ரத்து செய்யப்பட்டது. ஏவுதள கோபுரத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான இணைப்பில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்ததே இதற்குக் காரணமாக அமைந்தது. அதேபோல, ஹீலியம் வாயுக் கசிவு கண்டறியப்பட்டதால், மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த முயற்சியும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இந்தக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாமதத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு ஏற்ற வகையில், நிலவு விண்வெளியில் சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். அதன் காரணமாக, ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சுமார் ஒரு வாரம் மட்டுமே ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்பு அமைகிறது. அந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு, சுமார் மூன்று வாரங்களுக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான வாய்ப்புகள் ஏதும் அமைவதில்லை. ஆர்டெமிஸ் குழு நிலவுப் பயணத்தின்போது என்ன செய்வார்கள்? ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் பயணிக்கப் போகும் குழுவில் நான்கு பேர் உள்ளனர். அந்தக் குழுவில் நாசா தளபதி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோரும், கனேடிய விண்வெளி மையத்தைச் சேர்ந்த இரண்டாவது திட்ட நிபுணரான ஜெரிமி ஹன்செனும் இருப்பார்கள். நாசாவின் பிரமாண்டமான எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் பயணிக்கும் முதல் பயணமாக இது அமைகிறது. விண்கலம் பாதுகாப்பாக சுற்றுப்பாதையை அடைந்தவுடன், ஓரியன் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். எதிர்கால நிலவு தரையிறக்கங்களுக்காக விண்கலத்தை வழிநடத்துவதற்கும் சீரமைப்பதற்கும் பயிற்சி செய்ய, விண்கலத்தை புவியின் சுற்றுப்பாதையில் குழுவினரே சுயமாக இயக்குவதும் இதில் அடங்கும். பின்னர் அவர்கள் ஓரியன் விண்கலத்தை பரிசோதிப்பதற்காக, நிலவையும் தாண்டி, விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குப் பயணிப்பார்கள். எளிதாகக் கூறுவதெனில், விண்கலத்தில் உள்ள காற்றையும் நீரையும் வழங்கும் உயிர் ஆதரவு அமைப்பு, உந்துவிசை, மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் அமைப்பு, திசையை அறிந்து பாதுகாப்பாகப் பயணிக்க உதவும் வழிசெலுத்தல் அமைப்பு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பதைச் சோதிப்பார்கள். விண்வெளி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுபவர்களாகவும் செயல்பட்டு, விண்வெளியின் நெடுந்தூரப் பகுதியில் இருந்து தரவுகளையும் படங்களையும் பூமிக்கு அனுப்புவார்கள். மேலும் ஈர்ப்பு விசையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் அவர்கள் பணிபுரிவார்கள். பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கும் பகுதியைவிட கதிர்வீச்சு அளவுகள் அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பான அளவிலேயே இருக்கும். பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியே ஒரு சீரற்ற பயணத்தை மேற்கொண்டு, பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் தரையிறங்குவார்கள். ஆர்டெமிஸ் 2 நிலவில் தரையிறங்குமா? இல்லை. 2028இல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 4 திட்டத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதற்கு முன்னதாக, நாசா 2027இல் ஆர்டெமிஸ் 3 என்ற மற்றொரு மனிதர்கள் பயணிக்கும் சோதனைப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஓரியன் விண்கலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைவதை ஒத்திகை பார்க்கவும், புதிய விண்வெளி உடைகள் சரியான நேரத்தில் தயாராக இருந்தால் அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் முடியும். ஆர்டெமிஸ் திட்டத்திற்காக, ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்கலம் என இரண்டு வர்த்தகத் தரையிறங்கிகளை நாசா தேர்வு செய்துள்ளது. எந்தெந்த விண்கலங்கள் எந்தெந்த திட்டங்களில் பயன்படுத்தப்படும் என்பது திட்டம் தொடங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும். ஆர்டெமிஸ் 4 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்தை நோக்கிச் செல்வார்கள். அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்கள் தொடர்ந்து தங்குவதற்கான திறனை மேம்படுத்தும் நோக்கில், 2028இன் பிற்பகுதியில் ஆர்டெமிஸ் 5 திட்டத்தின் மூலம் மற்றொரு நிலவுப் பயணத்தையும் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். அதோடு, ஆர்டெமிஸ் பயணங்கள், நிலவைச் சுற்றி வரக்கூடிய ஒரு சிறிய விண்வெளி நிலையமான கேட்வேவை உருவாக்கும். அதைத் தொடர்ந்து, பல நிலவுத் தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் தொகுதிகள் சேர்க்கப்படுதல், நிலவின் மேற்பரப்பை ஆராயப் புதிய ரோபோ ரோவர்கள் அனுப்பப்படுதல் ஆகிய செயல்பாடுகள் நடைபெறும். மேலும் பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் இணையக்கூடும். இதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் நிலவிலும் அதைச் சுற்றியும் வாழ்ந்து பணியாற்றுவார்கள். கடைசி நிலவுப் பயணம் எப்போது நடைபெற்றது? மனிதர்கள் கடைசியாக அப்பல்லோ 17 திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணித்தார்கள். அது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கி, அதே மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது. அப்பல்லோ திட்டத்தின்போது 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர். அமெரிக்கா முதன்முதலில், 1960களில் சோவியத் யூனியனை தோற்கடித்து தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் நிலவுக்குச் சென்றது. அந்த இலக்கு அடையப்பட்டவுடன், எதிர்கால நிலவுப் பயணங்களுக்கான நிதி குறைந்ததோடு, அரசியல் ஆர்வமும் மக்களின் ஈடுபாடும் குறைந்தன. ஆர்டெமிஸ் திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால் இந்த முறை, புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட கால இருப்புக்கு உகந்த வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப பிற நாடுகள் திட்டமிட்டுள்ளனவா? நிலவில் 2030களில் மனிதர்களைத் தரையிறக்க வேண்டுமென்ற லட்சியத்தை வேறு பல நாடுகளும் கொண்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிற்கால ஆர்டெமிஸ் திட்டங்களில் இணையவுள்ளனர். அதோடு ஜப்பானும் தனக்கான இடங்களைப் பெற்றுள்ளது. சீனா நிலவுக்கு வீரர்களை அனுப்பத் தனது சொந்த விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் நாடாகத் தரையிறங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி, 2030 முதல் 2035ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு ஒரு சிறிய தளத்தை அமைப்பது குறித்து தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால் உண்மையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாக அமையலாம். ரஷ்யா தற்போது சர்வதேச தடைகள், போதிய நிதியின்மை, தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவும் ஒரு நாள் தனது சொந்த விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பத்கைக் காண வேண்டுமென்ற லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரோ சுமார் 2040ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டுமென்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா, பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால், விண்வெளியின் தொலைதூரப் பகுதிகளுக்கு மனிதர்களை அனுப்பி, அதற்கு அடுத்தபடியாக நிலவையும் அடைய விரும்புகிறது. கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் மற்றும் எமிலி செல்வதுரை - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v6r11yk09o
  15. அமெரிக்காவில் அணுகுண்டின் ஆழி ஜனாதிபதியின் ஒருவர் கையில் மட்டுமே தங்கியுள்ளதுதான், மேற்கு நாடுகள் சிலவும் வட கொரியாவிலும் இதே நிலைதான், ஒரு மனநிலை சமநிலையில் இல்லாதவரிடம் இப்படி ஒரு பொறுப்பு போனது ஒரு ஆபத்தானதுதான். ஆனால் இனி ஒருவரும் அணுவாயுதத்தினை பாவிக்கமாட்டார்கள் என நம்புகிறேன், நிச்சயமாக அமெரிக்க அதிபர் அவ்வாறு செய்யமாட்டார் என நம்புகிறேன்.
  16. நாட்டில் 5,000 பேர் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில்: விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை! Published By: Digital Desk 1 26 Mar, 2026 | 11:09 AM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆண்டொன்றுக்கு சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் கருத்து தெரிவிக்கையில், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சிறுநீரக நோய்க்கான பிரதான காரணங்களாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமே காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆரம்பக்கட்டப் பரிசோதனைகள் இன்மையால், பல நோயாளர்கள் இந்நோயின் இறுதிக்கட்டத்தை எட்டிய பின்னரே தமக்கு நோய் இருப்பதை கண்டறிகின்றனர். சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீரக செயலிழப்பு அபாயத்தைக் குறைத்து நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241949
  17. அண்ணை, அவருடைய பெயர் தங்கவேல் மாணிக்கதேவர்! ஒரு மாற்றுத்திறனாளி.(போலியோவால் இரண்டு கால்களும் பாதிப்பு) நிலம் வாங்குவது விற்பது சம்பந்தமான துறையில் நிபுணத்துவம் உடையவர், அவர் எழுத்தியதை வைத்துப் பார்க்கையில் நியாயமான மனிதர்.
  18. மிகவும் இளம் வயதிலேயே அரசியலில் இறங்கியுள்ளார். எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.
  19. Today
  20. அமெரிக்கர்கள் தோல்வியைத் தாங்க மாட்டார்கள். அதிலும் விசேடமாக ரம் எவருடைய சொல்லையும் கேட்காமல் ஒத்தைக் காலில் நின்று பட்டனை அழுத்துவார். படைகள் வந்து சேரும்வரை தயாரிப்புக்கள் தயாராகும் வரை பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேறும்.
  21. .. விடுங்க பாஸ் ... ஆளான சரத் பொன்சேகாவுக்கே வாக்கு போடச்சொல்லி மேடையேறி முழங்கிய தமிழ் அரசியல் தலீவர்களை கொண்ட கூட்டம் நாங்கள்.
  22. சபகார் பகுதியில் குண்டு வீச்சு நடாத்திய F - 18 விமானம் சுடப்பட்டதாக செய்தி வருகின்றது, அதனை பென்டகன் மறுத்துள்ளது, இருப்பினும் மேலே கூறிய சபகார் மற்றும் கொனராக் பகுதியில் தரையிறக்க சாத்தியம் பற்றிய விடயத்தினை உறுதிப்படுத்துவது போல உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.