Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது Jan 9, 2026 - 11:25 AM கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குறித்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாகம் சந்தைக்கு அருகில், மற்றும் வேறு இரண்டு இடங்களில் 'கந்தரோடை விகாரை' என திசை காட்டும் பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது. அத்தோடு சுன்னாகம் சந்தைக்கு அருகில் 'கந்தரோடை விகாரை' என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்த இடத்தில் தற்போது, சுன்னாகம் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும் எனவும் அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk6gp7gx03ppo29nrozm8p06
  3. Today
  4. சிறீலங்காவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகார கும்பலின் தலைவனோடு (ராஜபக்ச குடும்பத்தின் அடியாள்) இணைந்து அட்டூழியங்களை செய்த இந்த நபரை சிறையில் அடைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . ஆனால் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகவே அநுரகுமார அரசும் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இதே குற்றத்தை வேறு ஒரு சாதாரண தமிழ் பொதுமகன் செய்திருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து என்னவெல்லாம் செய்து விசாரணை செய்திருப்பார்கள். Kunalan Karunagaran is with தமிழ் அரசுக் கட்சி தீவகம்
  5. இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Jan 10, 2026 - 03:37 PM நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார். "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் கொள்கைக் கட்டமைப்பை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது. இந்நிகழ்வில் மேலதிக கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் திருமதி இவெட் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்: "எமது நாட்டில் அத்தகையதொரு உறுதியான நிலையை உருவாக்க எம்மால் இதுவரை முடியவில்லை. எனவே, அரசாங்கம் தலையிட்டு தனியார்த் துறையையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தற்போது நாம் ஆங்காங்கே சில விடயங்களைச் செய்கிறோம். அதனாலும் பல நல்ல விடயங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து, எம்மால் நன்கு நிர்வகிக்கக்கூடியதாகவும், பின்த் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமைத்துக்கொண்டால், இதனை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். அரசாங்கத் தரப்பில் அந்தச் செயல்திட்டத்திற்கு இரண்டு குழுக்களை அல்லது ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது போன்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைத்துள்ளோம்." https://adaderanatamil.lk/news/cmk855hb903r6o29n9yzzk7g0
  6. அப்போ, எதிர்க்கட்சிகள் கூவுவதுபோல் இது அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து பிணை வழங்கியிருக்கிறது. பிணை மட்டுந்தான் விடுதலையல்ல. அரசியல் செய்வார்கள், சவால் விடுவார்கள், கொலை, கொள்ளை, எல்லா குற்றங்களும் செய்வார்கள், கைது, விசாரணை என்று வந்துவிட்டால்; இல்லாத நோயெல்லாம் வந்து வைத்தியசாலையில் படுத்து விடுவார்கள். அவசரசிகிச்சை, சத்திரசிகிச்சை என்று சிபாரிசு வேற. பிணையில் வந்தவுடன் மீண்டும் விறுவிறுப்பான அரசியலை, விட்ட இடத்திலிருந்து தொடருவார்கள். இவருக்காக வாதாடிய சட்டத்தரணி சாலிய பிரீஸ் சொல்லி இவரை பிணை எடுத்த விடயம், முன்பு சிறையில் தாக்கியதால் இவருக்கு ஞாபக மறதி, ஒழுங்காக காதுகேக்காது, பார்வைக்கோளாறு, நீரிழிழிவு இன்னும் பல்வேறு நோய்கள் இருப்பதாக அடுக்கி, இவரால் திருப்பி கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, அதற்குரிய எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை, சிறையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது, அதனாலேயே அரசாங்கம் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்களை அளித்திருக்கிறது என்று சொல்லி பிணை பெற்று கொடுத்துள்ளார். சொன்னவர் ஒரு வைத்தியரல்ல, இவருக்காக ஆஜரான சட்டத்தரணி. இவரோ தனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்சித்திரவதைப்படிருக்கிறார்கள்,அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், பல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி இறந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகளால் பலவகை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் நீதிபதிகளும் குரலெழுப்பியதுமில்லை, இரக்கம் காட்டியதுமில்லை, பிணை வழங்கியதுமில்லை. எதிலும் பாரபட்ஷம். இவரது சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக தலைவனிடம் கைமாறியிருக்கிறது. மிகுதிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தவறியிருக்கிறார். அதுக்கு என்ன நடந்தது என மறந்துவிட்டாராம். அதை தான் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஞாபக மறதியாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படும்வரை அவர் அரசியல் செய்திருக்கிறார், அன்று எதை சொன்னேனோ அதையே இன்றுவரை சொல்லி வருகிறேன் என்று வேறு அடிக்கடி ஞாபகமூட்டுகிறார். அன்று சொன்னது எதுவென இன்றுவரை ஞாபகமிருக்கிறது, தொடர்ந்தும் தடையின்றி அரசியல் செய்வேன் என்கிறார், இத்தனை வியாதிகள் உள்ளவரால் எப்படி அரசியல் செய்ய முடியும்? அதைவிட இராணுவ புலனாய்வாளரால் இவருக்கு வழங்கப்படாத முப்பத்தொன்பது துப்பாக்கிகளை திரும்ப கையளித்துள்ளாராம். அவை எங்கிருந்து இவருக்கு கிடைத்தன? யாரை கொலை செய்து இவற்றை அபகரித்தார்? புலிகளையா? இராணுவத்தினரையா? விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்!
  7. தனிய உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை அண்ணை. எல்லோரும் சேர்ந்து உதவிகள் செய்வார்கள் என நம்புகிறேன். தொடக்கத்தில் எவ்வாறு பணிகளை தொடங்குவது என்ற நிலையில் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். மிக்க நன்றி அண்ணா. இதில் உள்ள யாழ் யாழிணையம், யாழ்ப்பாணம், யாழ் இசைக் கருவி மூன்றையும் குறித்தாலும் எம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் யாழிணையத்தை கௌரவப்படுத்தவே இணைத்தேன். இது தவறாக இருப்பின் நிர்வாகிகள் தெரியப்படுத்தினால் நீக்கி விடலாம். @மோகன், @நிழலி, @இணையவன் அண்ணாக்கள், உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். Whatsapp Business Appல் வெளிநாட்டில் இருந்து யாராவது குழுவை ஆரம்பித்து நாற்சந்தியில் குழு இணைப்பை பகிர்ந்தால் விரும்பிய உறவுகள் இணைந்து கொள்வார்கள். பயனாளிகளின் தனியுரிமையையும், உறவுகளின் தனியுரிமையும் பாதுகாக்கும் பொருட்டு குழு இருந்தால் தகவல்கள்(படங்கள், குறுங்காணொளிகள்) பகிர்வது இலகுவாக இருக்கும்.
  8. தீவூப்பகுதியில் காணாமல் போன ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் அவலக் குரல்களும் இவரது அரசியல் பற்றி சொல்லும் என்று நினைக்கிறேன்.
  9. வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 03:43 PM டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. சவுதி பிரதிநிதிகள் குழுவில் சிரேஷ்ட நிபுணர் முஹமட் அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சின் செயலாளர் கபில பெரேராவும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை, டித்வா புயலின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சவுதி அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது. சவுதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கை முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக, டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சவுதி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. திட்ட செயல்படுத்தல் மற்றும் காலக்கெடு குறித்த மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235669
  10. இன்னும் போட்டுத் தள்ள வேண்டிய தமிழர்கள் நிறைய உள்ளார்கள் என... ஓட்டுக் குழுத் தலைவன் "டக்கி" சொல்கிறார் போலுள்ளது. இவர் அரசுடன் ஒட்டி உறவாடிய சமயம்... 20 ஆயுதங்களுக்கு மேல் அன்பளிப்பாக பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான்... சிங்கள பாதாளக் குழுவினருக்கு இவரால், கொடுக்கப் பட்டுள்ளது. மிகுதிக்கு அலுவல் பார்க்கப் போகுது... டக்கி.
  11. வடக்கு மாகாணத்தை ஊடறுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை! 10 Jan, 2026 | 03:37 PM வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது என என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது இன்று சனிக்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப்பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியை மையம் கொண்டுள்ளது. இந்த சாளைப் பகுதி புவியியல் ரீதியாகவும் காலநிலையியல் ரீதியாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய பகுதி. அண்மித்த காலங்களில் குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் உருவாகிய பல காற்றுச் சுழற்சிகள்( தாழமுக்கம்,/ காற்றழுத்த தாழ்வு நிலை/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்) இந்த பகுதியினூடகவே வட மாகாணத்தினுள் பிரவேசித்துள்ளன. இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது. மிதமான மழை கிடைத்தாலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இது ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்க காரணமாக அமையக்கூடும். வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். அதே வேளை இந்தக் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் போது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235686 தற்போது மேற்கு கரையை கடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
  12. ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் 'ஸம-லிங்கிக' சர்ச்சை: விளக்கமில்லாத குழப்பம்! 🖊️எழுத்து: M.L.M. மன்சூர் (கண்டி) இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸம - லிங்கிக' என்பது. தன்பாலீர்ப்பை (Homosexuality) குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சிங்களச் சொல் அது. ஆண்கள் பெண்களை மோகிப்பதும், பெண்கள் ஆண்களை மோகிப்பதும் (எதிர்ப்பாலீர்ப்பு - Hetero sexual) இயல்பானது என்பதும், ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது என்பதும் பொதுச் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதி. ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உயிரியல் ரீதியான யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது. சமயக் கிரந்தங்கள் கூட வரலாற்றில் அத்தகைய கூட்டத்தினரின் இருப்பு குறித்து (எதிர்மறையாக) குறிப்பிட்டிருக்கின்றன. இந்து சமயத்தில் மாற்றுப் பாலீர்ப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளன (உதாரணம்: தமிழ் நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூவாகத் திருவிழா). அந்த மாற்றுப் பாலீர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து. அவர் மட்டுமல்ல இலங்கையின் பெரும்போக்கு அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியமான தலைவர்கள், முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள். பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்கள் தேசிய பெருவாழ்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் (Inclusion) என்ற கருத்தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே பாலியல் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கும் ஆண்டு ஆறு ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மொடியூளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. 'ஹரிணி ஒரு லெஸ்பியனாக' இருந்து வருவதனால் LGBTQA கலாச்சாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்' என்பது அவர் மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. தான் ஒரு லெஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாக கூறியிருக்கவில்லை (அவரை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பவர்கள் பலரும் 'அவர் அப்படியானவர் அல்ல' என்று தான் சொல்கிறார்கள்). அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட - பிரதம மந்திரிக்கு இருந்து வரக்கடிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் - அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வர முடியாது. சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' என ஹரிணி திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்பும், ராஜபக்ச முகாமைச் சேர்ந்த ஒரு சில முன்னணி பிக்குகளும், சில அரச எதிர்ப்பு யூடிபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு தலைப்பு (Sensitive Topic) தொடர்பான விவாதமும், உரையாடலும் பிழையான நபர்களின் கைகளுக்கு போனால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தச் சம்பவம். "உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்" என்று பிரதமருக்கு புத்திமதி சொல்கிறார் அரசியல் கோமாளியான பத்தரமுல்லே சீலரத்ன தேரர். ‘பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது‘ என்பது அவருடைய வாதம். "ஹரிணி நோநா, நீங்கள் ஏன் இந்த ஆபாச இணையதளத்தை ஆரம்பித்தீர்கள்" என்று அவர் கேட்பது அடுத்த அபத்தம். ஹரிணி மீது கல்லெறிந்திருக்கும் (ராஜபக்ச முகாமைச் சேர்ந்த) மற்றைய இரு பிக்குகள் பலங்கொட கஸப்ப தேரர் மற்றும் 'மிகிந்தலே ஹாமிதுருவோ' என பிரபல்யமடைந்திருக்கும் வளவாஹெங்குனவெவே தர்மரதன தேரர். மிகிந்தலே தேரரின் கருத்துக்கள் முகம் சுளிக்க வைப்பவை. ஒரு துறவி கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டிய சொற்பிரயோகங்கள். தன்பால் புணர்ச்சி ஆர்வலர்களான ஆண்களையும், பெண்களையும் குறிப்பதற்கென சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களை அவர் நன்கு ரசித்து, பொருத்தமான உடல் மொழியுடன் விளக்கிக் கூறுகிறார் (எஸ் பொ வின் சிறுகதை ஒன்றில் 'Gay' ஆட்களைக் குறிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் பேச்சு வழக்குச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது). மறுபுறம், எதனை இயற்கைக்கு மாறானதென கூறி அவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்களோ அந்த வழக்கம் நீண்ட காலமாக இலங்கை சமூகத்தில் நிலவி வருகிறது என்பதற்கான அத்தாட்சி இந்த ஹாமிதுரு பயன்படுத்தியிருக்கும் 'சொல்லகராதி'! 'கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்' என இத்தேரர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் சுதத்த திலகசிரி போன்ற ஒரு சில (அரச சார்பு) யூடிபர்கள் சமய ஸ்தாபனங்களுக்குள் - குறிப்பாக பன்சல வளாகங்களுக்குள் - இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வரும் அதே நபர்கள் இன்று Homosexuality க்கு எதிராக உரத்துக் குரலெழுப்புவது பெரும் நகைமுரண் என்கிறார்கள். 'ஹரிணி போன்றவர்களின் கொடிய கரங்களிலிருந்து' இலங்கை சிறுவர் சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்று தொண்டை கிழியக் கத்துபவர்கள், 'பாடசாலைகளில் பாலியல் கல்வி கூடாது' என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் எளிதில் மறந்துவிடும் ஒரு விடயம் இருந்து வருகிறது. 'பாடசாலைகளில் பாலியல் கல்வி என்பது சிறுபிள்ளைகளுக்கு உடலுறவில் ஈடுபடும் விதத்தை சொல்லிக் கொடுக்கும் அசிங்கமான காரியம்' என இந்தப் பிக்குகளையும் உள்ளிட்ட பலர் நினைக்கிறார்கள். இலங்கையில் அண்மைக் காலத்தில் துரித வேகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை / சுரண்டலை தடுப்பதற்கான ஒரு வழியாக பிள்ளைகளுக்கு குறைபட்சம் Good Touch, Bad Touch போன்றவை குறித்து அறிவூட்டி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பிள்ளைப் பருவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இங்கு உதாசீனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது வாய்த்திருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் ஹரிணிக்கு எதிராக பல பெண் புத்திஜீவிகளும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். (பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ராதிகா குமாரசுவாமி, எம் ஏ சுமந்திரன் ஆகியோரையும் உள்ளிட்ட) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் 58 பேரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கை "பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவதூறுப் பிரச்சாரம் ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்கும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபணை செயற்பாடுகள் தொடர்பான தார்மீக வரம்புகளை" மீறிச் சென்றிருக்கும் விடயத்தை சுட்டிக் காட்டுவதுடன், "அந்த வன்மப் பிரச்சாரம்" உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. சி பி டி சில்வாவையும் உள்ளிட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி யுஎன்பி நிகழ்த்திய ஒரு அரசியல் சூழ்ச்சியின் விளைவாக 1964 டிசம்பர் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான SLFP/LSSP/CP கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனையடுத்து 1965 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் யுஎன்பி முன்வைத்த முதன்மை பிரச்சார சுலோகம் - கம்யூனிஸ எதிர்ப்பு. என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற நாத்திக மார்க்சிஸ்ட்களிடமிருந்து பௌத்த மதத்தையும், சிங்கள பௌத்த கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு பிரச்சார உத்தி. இதற்கென நாடெங்கிலும் 'ஸங்க ஸபாக்கள்' ஏற்பாடு செய்யப்பட்டன. அதாவது புத்த பிக்குகள் மட்டும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் பிரச்சாரக் கூட்டங்கள். அப்போதைய நட்சத்திர பேச்சாளர்களான பல முன்னணி தேரர்கள் அக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்கள். அவர்களில் ஒருவர் தல்பாவில சீலவங்ச தேரர். அவருடைய பேசுபொருள் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகம் தொடர்பானது. மேடைகள் தோறும் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று முதல் பக்கத்தை விரித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளிப்பது அவருடைய வழக்கம். அந்தப் பாடப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஒரு குடும்பத்தைக் காட்டும் மூன்று படங்கள் இருந்தன. முதல் படம் மகன் - Nimal; இரண்டாவது படம் மகள் - Manel மூன்றாவது படம் அப்பா - Perera. இந்தப் படங்களை எடுத்துக்காட்டி, அந்தத் தேரர் நிரூபிக்க முயன்ற விடயம் N M Perera தனது பெயரை பிரபல்யப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக இந்தக் காரியத்தை செய்திருக்கிறார் என்பது (இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அந்தப் பெருமகனார் யு என் பி முன்னெடுத்த அந்த மலினமான பிரச்சார உத்தியை பார்த்து உடலின் எந்தப் பாகத்தால் சிரித்திருப்பார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை). இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது இலங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்கு சிறுபிள்ளைத் தனமான பிரச்சாரங்களை சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விதத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது. 'வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது' என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து தல்பாவில சீலவங்ச தேரர் செய்த அதே அபத்தமான பிரச்சாரத்தை இப்பொழுது ஆறாம் ஆண்டு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து பத்தரமுல்லே சீலரத்ன தேரர் செய்து கொண்டிருக்கிறார். 'பௌத்த மதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் மத வெறுப்பு (நிராகமிக்க) பேர்வழிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற அதே பழைய துருப்புச் சீட்டு. கூட்டு எதிர்கட்சி என்ற வெட்கம் கெட்ட லேபளில் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இப்பொழுது தமது புதிய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டிருக்கும் நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், சரத் வீரசேகர, பலங்கொட கசப்ப, ஞானசார, இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ கும்பல் முன்வைக்கும் புளித்துப் போன துருப்புச் சீட்டு. 2022 அறகலய மக்கள் எழுச்சியுடன் இணைந்த விதத்தில் இலங்கை சமூகத்துக்குள்- - குறிப்பாக சிங்கள சமூகத்திற்குள் படிப்படியாக நிகழ்ந்து வரும் வலி மிகுந்த ஒரு நிலைமாற்றமே இப்பொழுது ஒரு அரசியல் நெருக்கடியாக வெடித்திருக்கிறது. அந்தச் சமூக பரிமாணத்தை உதாசீனம் செய்து விட்டு, வெறுமனே அரசாங்க கட்சி - எதிர்க் கட்சி என்ற அரசியல் அணுகுமுறைக்கூடாக மட்டும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. "தாழ்ந்த சாதிக்காரன் ராஜாவாக வந்தால் அந்த நாடு ஒருபோதும் உருப்பட முடியாது" என்று தீவிர ராஜபக்ச ஆதரவாளரான சிரி சமந்தபத்த தேரர் கூறியிருப்பதும், தலதா கண்காட்சியின் போது 'இது வரையில் மன்னர்களின் அனுசரணையின் கீழ் இடம்பெற்ற புனித தந்த தாதுக்களின் கண்காட்சி இப்பொழுது முதல் தடவையாக அரசவை கோமாளியின் (அந்தரேயின்) அனுசரணையின் கீழ் இடமபெறுகிறது' என ஞானசார தேரர் கூறியதும் வெறும் உளறல்கள் அல்ல. விளங்கிக் கொள்ளக் கூடியவர்களுக்கு ஒரு பூடகமான செய்தியை முன்வைக்கும் வன்மம் கலந்த கூற்றுக்கள் அவை. அரச எதிர்ப்பு சிங்கள யூடிபர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் சொல் 'மாளிமா டோபிகள்' என்பது. என்பிபி அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவி, அதனை தூய்மைப்படுத்துபவர்கள் என்ற கருத்தில் அப்படிச் சொன்னாலும் 'Dhobies' என்ற சொல் ஒவ்வொரு தடவையும் மிகவும் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. அநுரகுமாரவைப் போல ஹரிணியை அவருடைய குடும்பப் பின்னணியின் அடிப்படையில் இழிவுபடுத்த முடியாது. காலி அத்மீமன அமரசூரிய வளவ்வ என்ற பெரிய வீட்டின் உயர் குடி செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பள்ளிப் படிப்பை கொழும்பிலும், பல்கலைக்கழக படிப்பை வெளிநாடுகளிலும் மேற்கொண்டவர். அதனால் அவர் மீது அவதூறு பொழிவதற்கு வேறு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும். பார்வையாளர்களின் ஆர்வத்தை பெருமளவுக்குத் தூண்டக் கூடிய ஒரு ஆயுதம் அவருடைய பாலியல் வாழ்க்கை தொடர்பான புனைவுகள். 'அவருடைய காதலி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்' என்ற மேலதிக தகவலை வழங்குவதன் மூலம் மேலும் பார்வையாளர்களை ஈர்த்துக் கொள்ள முடியும். சிங்கள சமூக ஊடகங்களில் அந்தப் புனைவுகள் தான் இப்பொழுது மிகவும் அசிங்/கமான விதத்தில் அரங்கேறி வருகின்றன. 1960 ஜூலை மாதம் சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கை பிரதமராக (உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன்) பதவியேற்ற சந்தர்ப்பத்தில் " பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி அமரும் கதிரையை ஒவ்வொரு மாதமும் கழுவி, துப்புரவு செய்ய வேண்டி நேரிடும்" என்ற விதத்தில் பிரேமதாச போன்றவர்கள் தெரிவித்த அதே விதத்திலான அநாகரிகமான கருத்துக்களே இப்பொழுது ஹரிணியை இலக்கு வைத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அநுர - ஹரிணி தலைமையிலான அரசாங்கம் குறைகள் எதுவும் அற்ற, சர்வ சம்பூர்ணமான ஒரு அரசாங்கமாக இருந்து வருகிறது என்று எவரும் சொல்ல முடியாது. அது கடந்த 15 மாத காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கடும் தடுமாற்ற நிலைளை எதிர்கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. பல தடவைகள் முக்கியமான அமைச்சர்கள் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு துளியும் பொருத்தமற்ற விதத்தில் ஆணவமாக பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள்; குற்றங்கள் அல்ல. எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குரிய தருணம் இன்னமும் வரவில்லை (It is too early). அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாக தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாக தோற்க்கடிக்கப்பட வேண்டும். தன்னை மதச்சார்பற்ற ஒரு கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் SJB போன்ற கட்சிகள் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால இலங்கைக்கு பெரும் ஆபத்தாக அமையக் கூடிய மேற்படி சக்திகளை எதிர்கொண்டு, அவற்றை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதனை வெளிப்படையாக கூறவும் வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலை கைவிடுவதற்கான தருணம் இப்பொழுது வந்திருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே என் பி பி க்கு எதிரான வலுவான ஒரு மாற்று அணியாக களமிறங்குவதற்கான தார்மீக உரிமை SJB க்குக் கிடைக்கும். 📌அதிகம் பகிருங்கள்! https://www.facebook.com/share/p/1AF66tytrG/?mibextid=wwXIfr
  13. இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I) 9 Jan 2026, 7:14 AM ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும் ருக்மிணி எஸ் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World Population Prospects, 2024 Revision), இந்தியத் தரவுகளுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) மக்கள்தொகை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். பகுதி Iஇல், தற்போதுள்ள நிலைமையையும், கவனிக்கப்படாமல்போனதாக நாங்கள் கருதும் முக்கியமான அண்மைக்காலத் தரவுகளையும் விவரிக்கத் தேவையான தரவுகளை வழங்குகிறோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தியா ஒருபுறம் தனித்துவமானதாகவும் மற்றொரு புறம் உலகளாவிய போக்கின் அங்கமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள், அவை தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் விதங்கள் ஆகியவை பற்றிய தரவுகளை ஆராய்கிறோம். மக்கள் தொகை விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முக்கியமான ஆறு திருப்புமுனைகளைக் கண்டுள்ளது. இவை உலகளாவிய மக்கள்தொகையியல், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள். 1. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுதல் 2020களின் தொடக்கத்தில், இந்தியா சீனாவை விஞ்சி 1.4 பில்லியன் மக்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் ஐயம் இல்லை. மேலும் பல தசாப்தங்களுக்கு அது அவ்வாறே தொடரும். 2060களின் தொடக்கத்தில் உச்சத்தை அடையும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை தொடர்பான கணிப்புகள் அதிகபட்சமாக 2100வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கட்டத்தைத் தாண்டியும் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர பெரிய நாடுகளும் வளர்ந்துவருகின்றன. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 2030க்குள் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியின் வேகம் ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது. நம்பகமான, ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த ஆரம்ப ஆண்டுகளில், அதாவது இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் 1950களின் தொடக்கத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துவந்தது. அதே காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு சுமார் 1.75 சதவீதம் வளர்ந்துவந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்தது. 1980களிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020க்குள், இந்தியாவின் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்போது இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மக்களைச் சேர்த்துவந்தது. பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் குறைவான மக்களையே சேர்த்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில், இந்தியா மக்கள்தொகையைக் கூட்டுவதை 2060க்குள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் மொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கும். மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் குறைவு நாடு முழுவதும் நிகழ்கிறது. இருப்பினும், இப்படிக் குறைவதில் இரண்டு வேறுபட்ட வேகங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளமானவையாக இருந்துவருகின்றன. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் விளைவாகத் தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும், ஏழ்மையான, குறைந்த வளர்ச்சியடைந்த கிழக்கு, வடக்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் 1970கள்வரை ஒரே மாதிரியாகவே இருந்தன. 1980களிலிருந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகிறது. உதாரணமாக, இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1970களில் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. இந்தியாவின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான, கிழக்கில் உள்ள கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள பிகாரில், வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2010களின் பிற்பகுதியில்தான் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறையத் தொடங்கியது. கேரளத்தில் மக்கள்தொகை இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிகாரில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகையில் அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்பதே இதன் பொருள். 2011முதல் 2036வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். (இந்தத் தொடரின் பகுதி III இந்தப் பிளவை இன்னும் விரிவாக விவாதிக்கிறது.) 2. கருவுறும் எண்ணிக்கை மக்கள்தொகையைப் ‘பதிலீடு செய்யும் விகிதத்திற்குக்’ கீழே குறைதல் பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சிதான் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் இந்த வேகக் குறைவுக்குக் காரணம். மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்க வாய்ப்புள்ள குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. நாடுகள் வளரும்போதும் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்போது கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்கு. ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றால், அந்த நாடு “மக்கள் தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” (replacement fertility) என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தத் தம்பதியினர் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இதனால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும் என்பதே பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல் என்பதன் பொருள். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் முக்கியமான மைல்கல். பதிலீடுசெய்யும் நிலைக்குக் கீழே கருவுறுதல் குறைந்தால், மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில் அதிகமாக இருந்த இந்தியாவின் TFR பிறகு வேகமாகக் குறைந்து, சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியத் தரவுகளின்படி, இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவைவிடக் கிராமப்புற இந்தியாவில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது; கிராமப்புற இந்தியாவிலும், கருவுறுதல் இப்போது பதிலீட்டு விகிதத்தை நெருங்கிவிட்டது. கருவுறுதல் எல்லா இடங்களிலும் குறைந்தாலும், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தெற்கு, மேற்கு மாநிலங்களில் TFR பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. இந்த மாநிலங்களில், கருவுறுதல் நிலைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போலவே குறைவாக உள்ளன. உதாரணமாக, மும்பையைத் தலைநகராகக் கொண்ட மேற்கு மாநிலமான மகாராஷ்டிரத்தின் கருவுறுதல் விகிதம் நார்வேயைவிடக் குறைவாக உள்ளது. (இந்தத் தொடரின் பகுதி II கருவுறுதல் விவாதத்தை இன்னும் விரிவாக ஆராய்கிறது.) வரலாற்று ரீதியாக அதிகக் கருவுறுதலைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் கருவுறுதல் குறைந்துள்ளது. கருவுறுதலில் இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மாநிலமான பிகாரிலும்கூட TFR இப்போது ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளுக்கும் குறைவாகவே உள்ளது. எனினும், வடக்கு, தெற்கு மாநிலங்களின் கருவுறுதல் விகிதங்களில் உள்ள இந்தத் தொடர்ச்சியான இடைவெளி இந்திய அரசியலில் முக்கியமானதொரு வேறுபாடாகும். கிராமப்புற பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் TFR இப்போதும் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கூடுதலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில்கூட TFR இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. 3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைதல் பிறப்பு விகிதங்கள் இவ்வளவு தீவிரமாகக் குறைந்ததன் விளைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2000களின் முற்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 29 மில்லியன் குழந்தைகள் என்னும் உச்சநிலையை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியது. இந்தியாவின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவிலும் ஒப்பீட்டளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருள். 1960களின் முற்பகுதியில், இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். 2025க்குள் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்திய மாநிலங்களின் சமூக-பொருளாதார, மக்கள்தொகை நிலவரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்துவருகிறது. இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் தாமதமாகக் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும், மொத்த மக்கள்தொகையில் அவற்றின் பங்கிலும், குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே குழந்தைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துவருகிறது. 4. மக்கள் தொகையின் சாளரத்தை மூடுதல் பொருளாதார நிபுணரும் மக்கள்தொகையியலாளருமான டேவிட் இ. ப்ளூமும் அவரது இணை ஆசிரியர்களும் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், “மக்கள்தொகையின் பலன்” (demographic dividend) என்ற சொல்லாடலை உருவாக்கினார்கள். ஆய்வுத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய கட்டுரை இது. சரியான கொள்கைகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கத்தை இந்தச் சொல்லாடல் குறிக்கிறது. இந்தச் சொல்லாடல் இந்தியாவின் இளைஞர் மக்கள்தொகை தொடர்பில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஐரோப்பிய, வட அமெரிக்க, கிழக்காசிய நாடுகளைவிட இந்தியாவை மிகவும் இளைய நாடாக ஆக்குகிறது.எடுத்துக்காட்டாக, சராசரி அமெரிக்கர் அல்லது சீனரைவிடச் சராசரி இந்தியர் பத்தாண்டுகளுக்கும் மேல் இளையவராக இருக்கிறார். இருப்பினும், மக்கள்தொகையின் இந்தச் சாளரம் இந்தியாவில் இப்போது மூடப்பட்டுவருகிறது. மக்கள்தொகை மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி “உழைக்கும் வயதுடையவர்கள்” என்று வரையறுக்கப்படும் 15-64 வயதுக்குட்பட்ட இந்தியர்களின் பங்கு, ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணிப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உச்சத்தை அடையவிருக்கிறது. இது மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடந்த காலத்தை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது: தனது உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக் குழுமத்திலிருந்து திட்டமிடப்பட்ட “பலனை” இந்தியாவால் பெற்றெடுக்க முடிந்ததா? அடுத்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சார்ந்திருப்போரின் விகிதம் என்பது மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கூர்ந்து கவனித்துவரும் முக்கியக் காரணி. உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம்தான் சார்ந்திருப்போரின் விகிதம். இந்த விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள் அல்லது நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் மீது அதிக நிதிச்சுமை இருக்கும். சார்ந்திருப்போருக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால் அரசின் நிதிச்சுமையும் கூடுதலாக இருக்கும். இந்தியாவின் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை, சுருங்கிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக, நாட்டின் சார்ந்திருப்போரின் விகிதம் குறைந்துள்ளது. 2026க்குள், இந்தியாவின் சார்ந்திருப்போரின் விகிதம் 543ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு 1,000 பேருக்கும் 543 குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள். இந்திய மக்களின் வயது தொடர்ந்து அதிகமாகும்போது, சார்ந்திருப்போரின் விகிதம் மீண்டும் உயரத் தொடங்கும். இந்த முறை வளர்ந்துவரும் முதியோர் மக்கள்தொகையால் இது நிகழும். ஆனால் இது சீரற்ற முறையில் பரவும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் பிறப்பு விகிதங்கள் குறைவதால், அவற்றின் சார்ந்திருப்போரின் விகிதங்கள் குறையும். ஏனெனில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்து, சார்ந்திருப்போரை ஆதரிப்பதற்கான கூடுதல் திறன் உருவாகியிருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களில், அவற்றின் மக்களுக்கு வயதாகி, அவற்றின் பணியாளர்கள் சுருங்கும்போது, சார்ந்திருப்போரின் விகிதங்களும் அதற்கேற்ப உயரும். 5. தொற்றுநோயியல் மாற்றம் உலகம் முழுவதும், காலப்போக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் எதனால் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் இறக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் (WHO) இறப்புக்கான காரணங்களை மூன்று பரந்த வகைகளாகப் பிரிக்கிறது: (i) தொற்று நோய்கள், பேறுகாலப் பிரச்சினைகள், பிறப்புக்குப் பிந்தைய சிக்கல்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு – மலேரியா போன்ற கிருமிகளால் பரவும் நோய்கள், கர்ப்பம், பிரசவம், பிறந்த்தும் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். (ii) தொற்றா நோய்கள் – இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவையும், நேரடித் தொடர்பு, காற்று அல்லது நோய்க்கிருமிகள் மூலம் பரவாத பிற நோய்கள் ஆகியவை இதில் அடங்கும். (iii) காயங்கள் – இதில் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும். ஒரு குழுவினர் புவியியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ குறைந்த வருமானம், மோசமான ஊட்டச்சத்து, சுத்தமான சுற்றுச்சூழல் இன்மை, சுகாதாரம் பேணுவதற்கான வாய்ப்பு குறைவாக இருத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இருக்கும்போது, தொற்று நோய்களும் பிரசவத்தை ஒட்டி நடக்கும் அசம்பாவிதங்களுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தக் குழுக்கள் பணக்காரர்களாகி வயதாகும்போது, இந்த காரணங்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க முடியும்; அவை குறைந்துவிடுகின்றன. இதன் விளைவாக, இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கு ஒப்பீட்டளவில் உயரத் தொடங்குகிறது. இந்தியா இந்த மாற்றத்தின் நடுவில் உள்ளது. இது பொது சுகாதாரத்தில் தொற்றுநோயியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதான இறப்புக்கான காரணங்கள் தொற்று நோய்கள், பிரசவம் தொடர்பான நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறுகின்றன. பேறுகால வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து ஏற்படும் இறப்புகள் பெருமளவு குறைதல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளமான மாநிலங்கள் இந்தத் தொற்றுநோயியல் மாற்றத்தில் மேலும் முன்னேறியுள்ளன; அங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இறப்புகளுக்குத் தொற்றாத நோய்கள் காரணமாகிவிட்டன. ஏழ்மையான மாநிலங்களிலோ மிக அண்மைக் காலத்தில்தான் தொற்றுநோயியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இன்றும் தொற்று நோய்களே காரணமாக இருக்கின்றன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான இறப்புகளுக்கு மட்டுமே தொற்று நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றாத நோய்கள் இப்போது இந்தியாவின் குறைந்த, அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இரண்டிலுமே மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேலாகக் காரணமாகின்றன. ஆனால் தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பின் அளவு பணக்கார மாநிலங்களில் கணிசமாக அதிகமாக உள்ளது. 6. உயரும் இறப்பு விகிதம் 1950கள் முதல் 2000களின் முற்பகுதிவரை இந்தியா தனது இறப்பு விகிதத்தில் (மக்கள் தொகைக்கு விகிதாசாரமாக ஆண்டுதோறும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை) சீரான வீழ்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ஆயுட்காலம் காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. 1970இல் ஆயுட்காலம் 50 வயதுக்குக் குறைவாக இருந்தது. இன்று 70க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த 1970களில், இந்திய ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிட அதிகமாக இருந்தது. 1980களின் முற்பகுதியில் இந்த நிலை தலைகீழாக மாறியது. 2010களின் பிற்பகுதியில் பிறந்த ஒரு பெண் குழந்தை, அதே ஆண்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தையைவிடக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதிக காலம் வாழும் என்று எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் உயிருக்கான ஆபத்துகள் பெரிதும் முறையில் குறைக்கப்பட்டதே இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம். 2025இல் இந்தியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் கைக்குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் குழந்தைகளும் இறக்கும் அபாயம் பெருமளவு குறைந்துள்ளது. 1950களில், இந்தியாவில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இப்போது ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் பத்து இறப்புகளில் ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளன. குழந்தை இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய முன்னேற்றங்களின் விளைவாக, இந்தியாவில் இறப்பின் அபாயம் ஒப்பீட்டளவில் முதியோர் குழுக்களுக்கு மாறிவருகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் குழந்தை இறப்பு அபாயம் முதிய வயதில் இறக்கும் அபாயத்தைவிட அதிகமாக உள்ளது. பணக்கார மாநிலங்களில், இறப்புக்கான அபாயம் குழந்தைகளைக் காட்டிலும் முதியோரிடத்தில் அதிகமாகியிருக்கிறது. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது ஐந்தாகக் குறைந்துள்ளது. (அதாவது, ஓராண்டில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் இறந்துபோகின்றன.) இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. கேரளம்தான் இப்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான இறப்பு அபாயத்தைக் காட்டிலும் ஒரு குழந்தைக்கான இறப்பு அபாயம் குறைவாக இருக்கும் முதல் மாநிலமாகும். பெரும்பாலான வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்தினருக்கு இருக்கும் தீவிர அபாயத்தைக் கேரளம் நீக்கிவிட்டது. ஆனால் நாடு முழுவதும் வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் இறப்பு விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. 1950களிலிருந்து சீராகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த இறப்பு விகிதம் (Crude Death Rate – CDR) – மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை – கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்தது. 2023க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு CDR திரும்பியது. ஆனால் 2024இலிலிருந்து, இந்தியாவின் CDR உயரும் என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார அளவில் அல்லாமல் முழுமையான எண்ணிக்கையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் இறப்புகளின் எண்ணிக்கை 2010களிலிருந்து அதிகரித்துவருகிறது. முடிவும் தரவு எச்சரிக்கைகளும் இந்த ஆறு போக்குகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது நாடு ஒரு சிக்கலான தருணத்தில் இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள்தொகை முழுமையான எண்ணிக்கையில் இன்னும் வளர்ந்துகொண்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு விரைவில் குறையத் தொடங்கும். உலகம் உணர்ந்துகொண்டிருப்பதைவிட வேகமாகக் கருவுறுதல் குறைந்துவருகிறது. இந்தியாவிற்குள்ளும் இந்த மாற்றத்தின் அளவை ஒரு சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தை மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவருகிறது. மக்கள்தொகையால் கிடைக்கும் பலனுக்கான சாளரம் (உழைக்கும் வயதிலுள்ள மக்கள்தொகையால் கிடைக்கும் பலன்) மூடிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு வயதாகும்போது இறப்பு விகிதங்கள் உயரும். இந்தப் போக்குகள் அனைத்தும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களின் மாறுபட்ட யதார்த்தங்களால் மேலும் நுணுக்கமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இந்தியக் கல்வித்துறை, ஊடகங்கள் அல்லது அரசியல் ஆகிய களங்களில் நடக்கும் பொது விவாதம் மாறியுள்ள இந்த யதார்த்தங்களுடன் இணைந்து பயணிக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் குறைவது முக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், “மக்கள்தொகை வெடிப்பு” தொடர்பான விவாதமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு மாநிலங்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது: மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பொது சுகாதார முன்னுரிமைகள், வயதான மக்கள்தொகை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு, சந்தை சார்ந்த தீர்வுகளின் தேவை, உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முன்பே நடந்திருக்க வேண்டிய விவாதம் ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தனி. இந்தத் தொடர் மூலம் நாங்கள் முதலில் தரவுகளைப் பொது வெளிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவிற்கான மக்கள்தொகைத் தரவுகள் சில கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாததால், 2011க்குப் பிந்தைய தரவுகள் இந்தியாவின் பதிவாளர் ஜெனரலால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளிலிருந்து வருகின்றன. இந்த மதிப்பீடுகள் அடிப்படை ஆண்டிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, அவற்றின் நம்பகத்தன்மை குறைந்துபோவதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. நேரடியான தரவுகள் இல்லாததால் இறப்பு பற்றிய தரவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இறப்பும் பதிவுசெய்யப்பட்டு, அதன் காரணத்தை ஒரு சுகாதார நிபுணர் உறுதிப்படுத்துவதே இறப்பைக் கணக்கிடுவதற்கு மிகவும் நேரடியான வழி. இந்தியாவைப் போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எல்லா இடங்களிலும் சீரான முறையில் இதைச் செய்வது சாத்தியமில்லை. அனைத்து இறப்புகளும் சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஏழ்மையான மாநிலங்களில் இறப்புப் பதிவு விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளிகளை நிரப்ப, இந்தியாவில் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System – SRS) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, முந்தைய ஆண்டில் அந்த வீட்டில் நடந்த இறப்புகள் குறித்து விசாரித்து, தேசிய இறப்பு குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். எங்கள் பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தரவை நம்பியே உள்ளன. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் இறப்புத் தரவுகளில் அமைப்புரீதியான சிக்கல்களும் உள்ளன. தரவு மூலங்களையும் மூலத் தரவுகளையும் தீவிரமாக அலசி, அதை எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக்கொண்டு இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் பற்றிய உரையாடலைக் கணிசமாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘தரவு இந்தியா’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் https://minnambalam.com/indias-population-problems-part-1/
  14. அப்படியா! தந்தை செல்வாவும் கடைசி காலத்தில் முதுமையால் கஷரப்பட்டே இறந்தார். இறுதியில் 40 நாள் ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தே உயிர்விட்டார். அவருக்கும் உங்கள் தியறி பொருந்துமா? அதை போல கடைசிக்காலத்தில் நோயின் தாக்கத்தால் கஷரப்பட்டு இறந்த பலரை எமது வாழ்வில் நடைமுறையில் காண்கிறோம். அவர்கள் எல்லோருக்கும் உங்கள் தியறி பொருந்துமா அல்லது நீங்கள் செலெக்ற் பண்ணுபவர்களுக்கு மட்டும் பொருந்துமா? யார் யாருக்கு இந்த தியறி பொருந்தும் என்று தீர்மானிப்பதற்கு கடவுளால் உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு authority வழங்கப்பட்டுள்ளதா? இது உங்களுக்கான கேள்வி மட்டும் அல்ல இப்படி உங்களைப்போல் புசத்தும் எல்லோருக்குமான கேள்வியும் கூட.
  15. அனேகமாக இறப்புவரும் இறுதிநேரத்தில் மனிதர்கள் தாங்கள் புரிந்த தவறுகளை வெளியிட்டு, தங்கள் மனதிற்கென்றாலும் அமைதியைத் தேடுவதை அறிந்துள்ளோம். சோனியா தேடினாரா.? அவருக்கு மனம் என்று ஒன்று உள்ளதா.??🤔
  16. தகுமோ… இது முறையோ! sudumanal கிரீன்லாந்து விவகாரம் image: axious. co 1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது. ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும். “ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார். ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது. டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது. இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம். இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது. எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை. image:npr. org கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை. இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset). அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ravindran.pa 08012026 https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
  17. ஓம் என்ன செய்வது ஈழ தமிழர்கள் இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைத்ததை கண்ணீரோடு இலங்கையில் அறுவடை செய்தார்கள் அவர்களில் வெளிநாடு வந்தவர்கள் 45 வயதில் கான்சர் 50 வயதில் ஹாட் அற்றாக் இறப்பு என்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள் 🙄
  18. காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு. சனி, 10 ஜனவரி 2026 06:30 AM காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது https://jaffnazone.com/news/54120
  19. கனடாவில் கனரக வாகனம் மோதி - இலங்கை பெண் உயிரிழப்பு! ஜனவரி 09, 2026 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35) உயிரிழந்துள்ளார். இன்று(09.01.2026) காலை Etobicoke Dixon வீதியில் வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.battinatham.com/2026/01/blog-post_634.html
  20. மனதை விட்டு மறையாத ஓவியம் ரமணி நினைவாஞ்சலி ------------------------- 1972 ஆம் ஆண்டு என ஞாபகம் எழுத்தாளர் டானியலின் பஞ்சமர் நாவல் வெளிவருகிறது. பலரை ஒரு உலுப்பு உலுப்பிவிட்ட நாவல் அது’ பேசாமல் இருந்த ஒருசாரார் அதில் பேசினர், அந்த நூல் வெளியீட்டுக்கு டானியல் என்னை யாழ்ப்பாணம் அழைத்திருந்தார், அப்போது நான் கொழும்பில் வசித்துக் கொண்டிருந்தேன், அப்படிச்சென்றபோது டானியலின் ஸ்ரார் கரேஜில் நான் சந்தித்த ஒரு இளஞைர்தான் புதுவை இரத்தினதுரை, திருநெல்வேலியில் அதன் வெளியீட்டை ஒழுங்கு செய்தவர் புதுவை இரத்தினதுரை டானியலின் அபிமானி அப்போதுதான் அவரது காலம் சிவக்கிறது எனும் கவிதை நூல் வந்த காலம் என நினைக்கிறேன் பஞ்சமரின் அட்டைப்படம் வித்தியாசமாக இருந்தது பஞ்சமர் ஒருவரின் உடல் மொழி வெளிப்பட அது வரையப்ட்டிருந்த்து அந்த உடலினுள் அடக்க ஒடுக்கமும் காணப்பட்டது அதற்குள்ளால் மீறி எழுந்த அடக்குமுறைக்கு எதிரான ஒரு ஓர்மமும் காணப்பட்டது சமூக உணர்வுள்ள ஓர் ஓவியக் கலைஞனின் பார்வை அது அந்தப் அட்டைப்பத்தை வரைந்தவர் ஓவியர் ரமணி எனும் இளம் ஓவியர் என அறிந்தேன் ரமணியை நான் அறிந்த கதை இது ரமணி என் மதிப்புக்குரிய ஒருவர் ஆனார் ரமணியின் தொடர்பும் ஏற்படுகிறது ஏற்படக் காலாக இருந்தவர் டானியல் 1976 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வருகிறேன் கொழும்பில் கல்வி டிப்ளமோ கோர்ஸ் முடித்த கையோடு எனக்கு யாழ்ப்பாண த்திற்கு மாறுதல் கிடைக்கிறது மனைவி ஏற்கனவே மகனோடு அங்கு சென்று விட்டாள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக நான் ஆசிரியராக மாற்றலாகி யாழ்ப் பாணக் கல்வி அலுவ லகம் செல்கிறேன் நகரில் உள்ள பாடசாலைகள் எல்லாம் பட்டதாரிகள் நிரம்பி வழிகிறார்கள் எந்த பாடசாலையிலும் இடம் கிடைக்க வில்லை ஒரே ஒரு இடம் இருக்கிறது ஒஸ்மானியா கல்லூரி அங்கு செல்லுங்கள் என்று நியமனக் கடிதம் தரப்படுகிறது ஒஸ்மானியாக் கல்லூரி செல்கிறேன் அதிபர் ஹமீம் அதிபர் அறையில் நியமனக் கடிதத்தைக் கொடுத்து உத்தியோகம் ஏற்கும் சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியர் அறைக்குச் செல்கின்றேன் பலர் இருக்கிறார்கள் பேராயிரவர் பெயர் , ஞாபகம் வருகிறது. அவர்களோடு பத்மநாதன் , கவிதாயினி சிவரமணியின் அப்பா சிவான ந்தன் இன்னும் பல இஸ்லாமிய அசிரிய ர்கள் தமிழ் ஆசிரியரக்ள் தெரிந்த முகம் ஒன்றும் தென்படுகிறது ஏற்கனவே நான் அறிந்திருந்த ரமணி அவர்கள் வாருங்கள் வாருங்கள் என்று வாஞ்சையோடு வரவேற்கிறார் அங்கே அவர் ஓவிய ஆசிரியராக இருக்கிறார் நான்கு வருடங்கள் அவருடன் அங்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது ஓரளவு முன்னரேயே அறிந்திருந்த ரமணி இப்போது மிக நெருக்கமாகி விடுகிறார் நாலு வருடங்கள் தினமும் அருகே இருந்து உறவாடி உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காலங்கள் ஞாபகம் வருகின்றன யாழ்ப்பாண வாழ்வில் மிக அருமையான காலங்கள் ஓஸ்மானியாக் கல்லுரியில் கற்பித்த அந்தக் காலஙக்ள் அக்காலத்தில் சிறுகதை நாவல் எழுதுவோர் கைலாசபதியிடம் ஒரு முன்னுரை வாங்குவதைப் பெறுமதியாகக் கருதினார்கள் . அதேபோல பல எழுத்தாளர்கள் ரமணி யிடம் ஒரு அட்டைப்படம் வாங்குவதையும் பெறுமதியாக க் கருதினார்கள் அவர் டானியல், செங்கை ஆழியான், தெணியான், போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கெல்லாம் படம் வரைந்தவர் அந்த அட்டைப் படங்களில் ல் வரும் கோடுகள் ரமணியின் அடையாளம். அவர் அட்டையில் வரையும் உருவங்களும் அவற்றின் பரிமாணங்களும் அவர் வரையும் நடனமிடும் எழுத்துக்களும் இந்த ஓவியம் ரமணியின் ஓவியம் என்பதை உடனே காட்டி விடும் மல்லிகை ஜீவாவின் ஆஸ்தான ஓவியர் போல அவர் அன்று செய்ற்பட்ட தாக ஞாபகம் அந்த காலத்திலேயே தான் நான் சங்காரம் நாடகம் போடுகிறேன் அந்த நாடகத்திலே ஒரு கட்டம் வருகிறது மனிதர் விலங்கோடு வேட்டையாடும் கட்டம் மிருக ங்களுக் க்கான வேட முகங்களைத் தயாரித்து எனக்கு தந்தவர் ரமணி அவர்கள் அந்த நாடகத்துக்கான உடை அமைப்பை நான் திட்டமிட்ட போது அவற்றை கோடுகளில்ல் வரைந்து காட்டி அதற்கான ஆலோசனைகளை வழங்கியவர் ரமணி அவர் வரைந்த ஸ்கெட்சுகளை நான் அரசையாவிடம் காட்ட அதனை அடிப்படையாக வைத்து சங்காரம் நாடகத்தில் வரும் இன மத சாதி வர்க்க அரக்ரக்ளுக்கான உடை தயாரித்தவர் அரசையா சங்காரம் நாடக் உருவாக்கலில் ரமணிக்கும் மிகுந்த பங்குண்டு அந்த நாடகத்தில் நான் தொழிலாளர் தலைவன் பாத்திரம் ஏற்று ஆடிப்பாடி நடித்தேன் அந்த நாடகம் பார்க்க வந்த அவர் என்னை அணைத்துக்கொண்டதும் பின்னர் நாம் அதுபற்றி ஆசிரிய அறையில் உரையாடியமையும் ஞாபகம் வ்ருகிற து எவ்வளவோ பேசுவோம் எல்லாம் பேசுவோம் அரசியல் இலக்கியம் ஓவியம் நாடகம் சமூகம் என அவ்வுரையாடல் விரியும் அவ்ர் ஒரு பரந்த வாசகரும் கூட மிக மிக மென்மையாக பேசுவர் அவர் முகமும் பேசும் பின்னால் நான் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகிய பின்னரும் அந்த நட்பு தொடர்ந்தது அவர் உரையாடும் பாணி வித்தியாசமானது அது அவருக்கே உரியது அவர் வரையும் சித்திரங்களில் அவர் தெரிவார் அது அவருக்கான கோடுகளும் கோலங்களும் ரமணி ஸ்டைல் அதுதான் என்பது அது காட்டிக்கொடு காட்டிவிடும் பின்னால் அவர் அவர் பல ஓவியங்கள் வரைந்தார் புகழ் பெற்ற சிலைகளைச் செய்தார் புகழ் பெற்றவ்ரானார் அந்தச் சிலைகளில் அவர் வாழ்கிறார் இருவரும் 80 வயது தாண்டி விட்டோம் நான் இறக்கு முன்னர் சிலரை கண்டு பேச வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எனக்கு எழுவதுண்டு அதில் முக்கியமானவராக இருந்தவர் ரமணி அவர்கள் பேசாமலேயே சென்று விட்டார் இப்படிக் காணமலேயே பேசாமலேயே சென்று விடுவோர் அதிகம் நேற்றுத்தான் மதிப்பிற்குரிய பெரியவர் பஞ்சலிங்கத்தைப் பற்றி ஒரு பதிவிட்டேன் இன்று அன்பிற்குரிய ரமணி பற்ற எழுத வேண்டியது ஆயிற்று எழுத இன்னும் நான் இருந்துகொண்டிருக்கிறேன் இது துயரா மகிழ்ச்சியா என யோசிக்கிறேன் துயரமும் சோகமும் மகிழ்வும் கலந்த ஒரு மனோநிலையில் நண்பரை நினைக்கிறேன் நண்பரே சென்று வருக உங்கள் நினைவு நெஞ்சில் அழியாது நிலைத்து நிற்கும் அவர் அட்டை ஓவியங்கள் சிலவற்றை நண்பர் முகநூலில் பதிந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள் -பேராசிரியர் சி. மௌனகுரு
  21. ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்! 10 Jan, 2026 | 02:05 PM கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://web.facebook.com/profile.php?id=61567246753629 https://www.virakesari.lk/article/235661
  22. என்ன செய்வது? இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைப்பதை முதுமையில் கண்ணீரோடுதான் அறுவடை செய்யவேண்டியிருக்கிறது. "ஏழை அழுத கண்ணீர் ஏழுதலைமுறைக்கும்." என்பார்கள். "ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாளை ஒத்தது." என்றும் சொல்வார்கள். "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."
  23. “அப்பன் குதிருக்குள் இல்லை” அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.