Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் பெற்றவர்கள் என்ன பணக்காரர்களா? தனியார் மருத்துவமனைகள் முதல் கோவில்கள் மற்றும் பல இடங்களில் பணம் பறிக்கும் செயற்பாடுகள். https://www.facebook.com/reel/889326097465245
  3. ஒரு விசயம் எழுத நினைத்தேன்😂😂😂. யாழ் என்பதால் சுய தணிக்கை😂.
  4. கிரைமியா ரஸ்யாவினது என்பதை உக்ரேன் ஏற்பதும் இதன் அங்கமாக அமையலாம். இப்படி ஒரு டீல் வந்தால் எல்லோருக்கும் நல்லம் என்பது நான் எப்போதும் விரும்பியது. இதற்கு வாய்புண்டு. வருமானம் வந்தால்தானே வருமான வரி😂.
  5. மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை! Published By: Vishnu 20 Mar, 2026 | 07:24 PM (இணையத்தள செய்திப் பிரிவு) போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, 'மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய் பகுதியில் உப்பளத்தை அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியின்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டுடன் தொடர்பபுடைய , ஆவணங்களையும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார். உப்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்திற்குள் தனியார் காணிகளும் மேய்ச்சல் தரையும் உள்ளடங்குவதாக நில அளவைத் திணைக்களத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவிடம், சர்ச்சைக்குரிய வகையில் காணிகள் கைமாற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/241514
  6. ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!
  7. ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா பிபிசி வெரிஃபை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது. கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும். இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது. எந்தெந்த கப்பல்கள் சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும். ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன. இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும். நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் திட்டம் என்ன? அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார் அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார். கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார். "தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது". "அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார். ''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.'' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள் மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை. மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது. அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை. கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன. "வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார். இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார். "அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள் நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான் டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார். "மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார். நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது. "இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ். ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன. இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. "அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம் கிராபிக்ஸ் : டாம் ஷீல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203r13d2rzo
  8. தம்பர் & மக்கர் பிரைவேட் லிமிடெட் 😂 Politics makes strange bedfellows என்பார்கள். உக்ரேன் ஈயூ மெம்பர் ஒரு போதும் நேட்டோவில் இணையாது டொன்பாஸ் இராணுவம் நீக்கப்பட்ட சுயாட்சி அலகு (ரஸ்ய ஆளுகை) அல்லது இரெட்டை இறைமை அலகு (dual sovereignty) - பெயரளவில். மரியுபோல் மீண்டும் உக்ரேனிடம் ரஸ்ய ஏரி வாயு மீண்டும் சந்தைக்கு இப்படி ஒரு டீலுக்கு தம்பரை வெட்டி விட்டு, ஐரோப்பா போகக்கூடும்.
  9. என்னுடைய இரத்த உறவினர் (அவருக்கும் எனக்கும் ஒரே "பிளட் குறூப்", அப்ப இரத்த உறவினர் தானே?) ஒருவர் வட கொரியாவின் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரைப் றைற்றர் திருத்துபவராக இருக்கிறார். அவர் மூலம் தான் நான் தலைவன் கிம் பற்றிய சகல தகவல்களையும் பெற்று இங்கே பகிர்கிறேன் . இதை வாய் (oral) மூலம் நான் பெற்றுக் கொண்ட தகவல் என்று சொல்லக் கொஞ்சம் கூச்சமாகத் தான் கிடக்குது, என்றாலும் oral ஐ எண்டு oral தானே சொல்லலாம்😎?
  10. எண்ணெய்க்கு ரசியாவை நோக்கி படையெடுக்கிறார்களாம். முன்னரைப் போல மலிவு விலை இல்லையாம்.
  11. ஜோர்ஜ் புஸ் உட்பட்ட பல அமரிக்க ஜனாதிபதிகள் போக விரும்பாத சந்து ஹோர்மூஸ்/ஈரான். இராணுவ ஆய்வாளர்கள் கூட சொல்லி உள்ளார்களாம் தரை படையை இறக்காமல் ஹோர்மூசை பாதுகாக்க முடியாது. தரைபடையை இறக்கினால் அது நிரந்தர யுத்தமாக மாறும் என. ஹோர்மூசை அமரிக்காவல் திறக்க முடியாது போனால் - அரபு நாடுகள் ஈரானுடன் ஒத்து போவதை தவிர வேறு வழியில்லை. கியூபாவை தம்பர் தன் வசமாக்கினால் கூட, வளைகுடாவில் மேலே சொன்னது போல் ஒரு அடி விழுந்தால் - அதை கியூபா வெற்றி ஈடு செய்யாது.
  12. கியூபாவைப் பிடித்து அதை சரி செய்ய முனைகிறார். அதுவும் சரிவராது போல. ரசியா கியூபாவுக்கு உதவி செய்கிறது. Tax செய்து முடிந்துதோ? எல்லோருக்கும் வழமையைவிட கூட வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதன் முழுவிபரம் தெரியவில்லை.
  13. அண்ணை, வாசிக்காட்டியும் நடைப்பயிற்சியை விடாதீங்க.
  14. தம்பரை போல தம்மையும் கொண்டுபோய் ஹோர்மூஸ் சந்தில் சாணி அடி வாங்க வைத்து விட்டு, சமர் நேரம் உக்ரேனில் உள்ளே இறங்கி அடிக்கலாம் என செத்த கிளி கணக்கு போட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் தம்பர் போல் புட்டினின் பொக்கற்றுக்குள் இல்லை என்பதால் ஐரோப்பா, யூகே கழண்டு கொண்டன. இதனால் வீழ்ந்து கொண்டிருந்த ஸ்டாமரின் மக்கள் ஆதரவு கூட ஆரம்பித்த்துள்ளது. மக்ரோன், மேர்சுக்கும் இப்படித்தான் என நினைக்கிறேன்.
  15. உலக முடிவு மலைத் தொடரில் 'செல்பி' எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி பாதுகாக்க மீட்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 10:56 AM நுவரெலியாவில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்ற போது சுமார் 50 அடி உயரமுள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தார். வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கீழே விழுந்த மாணவி மரக் கிளை ஒன்றில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை கண்டு கொண்ட ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, கிளையில் தொங்கிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு அருகிலிருந்த பாறையில் அமர்த்தியுள்ளார். பின்னர் பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவு இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணி நேர மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்கா முகாமையாளர் மஞ்சுள மொனரதென்ன தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241437
  16. 🤣ஈலோன் மஸ்க்கும் ட்ரம்பும் டோஜி-DOGE மூலம் சிக்கனமாகச் சேமித்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தந்த மூவாயிரம் டொலர் இலாபச் செக்கே இன்னும் செலவழித்து முடியவில்லை! இதற்கிடையில் இந்த எண்ணை ஏற்றுமதி இலாபத்தையும் ட்ரம்ப் எங்களுக்குத் தந்தால், கடவுளே எங்க கொண்டே நாங்கள் காசைக் கட்டி வைக்கிறது😂?
  17. “ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி டெல் அவிவ்: “ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும். இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?. அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார். அதிபர் ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம். இந்தப் போரில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது. ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு அதிபர் ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். “ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி
  18. தற்காலிக இலாபம். ஹோர்மூசை திறக்க அமரிக்கா வளைகுடாவில் இருந்து வெளி ஏற வேண்டும்…. யுவானில் எண்ணை வர்தகம் ஆரம்பம்… தய்வான் இழப்பு… இப்படி நடந்தால் பாரிய நீண்டகால நட்டமும், 1ம் நாடு என்ற நிலை இழப்பும் கிடைக்கும். நான் தம்பர் புட்டினின் ஏஜெண்ட் என ஒரு சதிகொள்கைகை காவி திரிவது தெரிந்திருக்கும். நேட்டோ/அமெரிக்காவினது நலன் பாதுகாப்பது தம்பரின் திட்டம் இல்லை என தெரிந்து கொண்டே - கனடா ஐரோப்பா இவ்வளவு உக்கிரமாக எதிர்கிறார்கள் என நினைக்கிறேன். தம்பர் பதவி விலக முன் நேட்டோவில் இருந்து அமெரிக்காவை வெளியே எடுக்க கூடும். அடுத்த நவம்பரில் வரும் மிட்டேர்மில் காங்கிரஸ் ஆதரவு குறையும் என்பதால் இப்போதே சிலதை செய்ய அவசரப்படுகிறார்.
  19. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் Mar 20, 2026 - 07:42 PM செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது. சர்வதேச ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையிலும் நாம் உறுதியளித்த போதிலும், மனிதப் புதைகுழி விசாரணைகளை நாம் முன்னெடுக்கவில்லை என நீதி அமைச்சரின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் அரசியல் இயக்கம் நாங்கள். உண்மையில் செய்த விடயங்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் செய்தவற்றைத் தெரிந்துகொண்டே விமர்சனம் செய்வதுதான் தவறானது. 1999ஆம் ஆண்டில்தான் இந்தப் புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து 2024 வரை 25 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 25 வருட காலப்பகுதியிலும் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டன. 2015 முதல் 2019 வரையான அரசாங்கத்தின் கீழ், தமிழ் அரசுக்கட்சி மற்றும் அதன் தலைவர்களான சுமந்திரன் போன்றோர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுக்கு விசேட செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் இருந்தது. அப்பகுதியின் பணிகளுக்காகப் பெருமளவு நிதியும் வழங்கப்பட்டது. அதில் நாம் தவறு காணவில்லை. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஏன் செம்மணி புதைகுழி மறந்து போனது? நாம் 2024 செப்டம்பரில் அதிகாரத்தைப் பொறுப்பேற்றோம். பாராளுமன்றப் பெரும்பான்மையை நவம்பரில் பெற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரையிலான இந்த 17 மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 239 ஆகும். இவ்வளவு பணிகளைச் செய்யும் அரசாங்கத்தின் மீதே தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி அமைந்துள்ள தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரே உள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை நாம் அறிவோம். ஆராய்ந்துள்ளோம். இதனை விசாரணை செய்வதற்கு எமக்கு மக்கள் ஆணை உள்ளது. இது மாத்திரமல்ல, மாத்தளை புதைகுழி குறித்தும் நாம் விசாரணை செய்கிறோம். நீதித்துறை பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டும் போது அதற்கு காலம் எடுக்கும். ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmyza50h0008356p2030uayd
  20. வாழ்க்கை முடிந்து விடாதவரை ஓக்கே. அண்ணனுக்கே 60+
  21. சொந்தக் காசில், தனக்குத் தானே... சூனியம் வைத்த கதையாக போச்சுது. சுவிசில வைத்த நேச நாடுகளுக்கு வைத்து சூட்டில் விலகி நிற்கிறார்கள்.
  22. சொந்தக் காசில், தனக்குத் தானே... சூனியம் வைத்த கதையாக போச்சுது. 😂
  23. சிலவேளை பணக்கார நாடாக வரவும் சந்தர்ப்பம் உண்டு. அமெரிக்க எண்ணெய காஸ் அமோக ஏற்றுமதி நடக்குது. விலையும் ஏத்தி விட்டிருக்கு. போரில் கொஞ்சம் போனாலும் மிகுதி லாபம் தானே?
  24. ஓ…வேலையை முடிச்சு கொண்டு வாங்கோ.
  25. எனக்கென்னமோ இது அமெரிக்காவை தோற்க வைக்க எண்டு தம்பர் தேர்ந்து எடுத்து போன சண்டை போல தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.