24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் இணயத்தின் லோகோ(LOGO) சின்னம்
அது ஏனைய வலைத்தளங்களுக்கு மட்டுமே... யாழ் ஒரு கருத்துக்களம் (forum) ... செய்தி வலைத்தளங்களிலிருந்து இது வேறுபட்டது. மேலும் இணையவன் கூறுவதும் சரியே
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குர்துக்கள் படையெடுப்பை தொடங்கிவிட்டனர். முஸ்லீம் பயங்கரவாதம் தணிக்கப்படும்... 🥹 வாழ்த்துக்கள் .....
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் எது இழிவு? அவர்கள் செய்வதை , அதன் யதார்த்தத்தை கருத்தில் எடுத்து. சொல்கிறேன். ( மேட்ற்கு, யுஸ், இஸ்ரேல் விவிலியாக் கிருமிகளின் நோக்கம் அந்த சமூகத்தைஅழித்து, கோறையாகி. நொண்டியாக்கி. உள்நாட்டு கலவரம், குழப்பம், யுதவிளிம்பில் வைத்து. வளங்களை சூறையாடி , தமது கட்டுபட்டில், சரணடையும் நிதி அமைப்பு, எந்த சொந்த பாதுகாப்பும் அற்ற அம்மணமாநிலையை உருவாக்கி, பொம்மை கோறை நிர்வாகத்தை கொண்டுவர்வதும் , இஸ்ரேல் எப்போதும் தக்க கூடிய நிலையிலும், இரான் ஒருபோதுமே திருப்பி அடிக்க முடியாத நிலையிலும் ,வைத்த காட்டுவது தாம் செய்தது மனிதகுல நன்மைக்கும், தாம் International do-gooders, உள்ளிருந்து அரிக்கும் கிருமிகள். ) இதை இப்போது வெளிப்படையாகவே அமெரிக்கா சொல்கிறது - death, destruction ... குர்திஸ் கிளர்ச்சி ... டிரம்ப் 'பொம்மையை நான் தான் தெரிய வேண்டும, நியமிக்க வேண்டும்' இரான் அதன் எல்லைகள் மட்டும் நின்று அதை பாதுக்காக்கிறது - கிருமி வேலை, நோக்கம் அல்ல.- Today
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
1999´ல் சங்கீதா - விஜய் கல்யாணம் நடந்திச்சி. 2000 ஆண்டு அப்பிடி இந்த போட்டோ எனக்கு வெளிநாட்டில இருக்கிற நண்பர் மூலமா கிடச்சிது. ஶ்ரீலங்கால இருக்கும் போது இருந்து-நான் வெளிநாடு வந்தா பிறகும் இத எடுத்துட்டு தான் வந்தேன். இப்ப வரை என்கிட்ட தான் இருக்கு. இப்ப தான் இந்த internet la download எல்லாம் பண்ணலாம். அப்போ அப்பிடி இல்ல கமரால படம் படிச்சி film roll, negative எண்டு ஒரு process இருக்கு. எல்லாரும் news paper cutting தான் அப்போ வச்சிருந்தாங்கள் என்கிட்ட போட்டோவாவே இருந்திச்சி. Future la internet வரும் இதெல்லாம் ஈஸியா கிடைக்கும்னு எல்லாம் தெரியாது அதானால கவனமாக வச்சிருந்தன். கடைசியா என்னாச்சின்னு பாத்திங்கன்னா நீ போட்டோவ தானே வச்சிருக்க நான் திரிஷாவையே வச்சிருக்கன் எண்டு சொல்லிட்டு போய்டடான். Jermain Jma- ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் Published By: Vishnu 06 Mar, 2026 | 08:18 PM சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
ஈரானிய கப்பலை நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள். டிரம்ப் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது? சீலரத்ன தேரர் கேள்வி. Ceylon Focus News- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் புதுடெல்லி: ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து வான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கத்தீப்சாதே, “ஈரானும் இந்தியாவும் ஒரே நாகரிக வேர்களைக் கொண்டவை. நாம் இந்தோ-பாரசீக கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கலாச்சார-நாகரிக பாரம்பரியத்துடன் இணங்கும் வகையில், ஈரான்-இந்தியா உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். தற்போது ஈரானின் முக்கிய முன்னுரிமை தாக்குதல் நடத்தும் எதிரிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. அவர்கள் ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய தரப்புடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “ஆம். இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். மற்றவர்களுடனும் சிறிய உரையாடலை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் முக்கியமானது என்னவென்றால், அனைவரும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் அதே வேளையில், சர்வதேச சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துவது என்பது கூடாது. துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த கொடூரங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அமெரிக்கர்கள் மற்றொரு நாட்டின் தலைவரை கொலை செய்துள்ளனர். இது ஒரு புதிய வழக்கமாக மாறினால், உலகில் எந்த நாடும் மற்ற நாடுகளுடன் இயல்பான தூதரக உறவுகளை பேண முடியாது.” என தெரிவித்தார். அமெரிக்க தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கிய சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “இது மிகவும் துயரமான, வருத்தமான சம்பவம். அந்த கப்பல் எங்கள் இந்திய நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு சர்வதேச பயிற்சியில் கலந்து கொள்ள வந்தது. அது ஒரு விழாக்கால நிகழ்வாக இருந்தது. கப்பலில் ஆயுதங்களும் இல்லை, சரக்குகளும் இல்லை. இந்த சம்பவம் மிகவும் வருத்தமானது. அந்த பயிற்சியில் கலந்து கொண்ட பல இளம் ஈரான் கடற்படையினர் உயிரிழந்தனர். இதை செய்தவர்களுக்கு நாங்கள் நிச்சயம் தண்டனை அளிப்போம்.” என கூறினார். மேலும் அவர், “எங்கள் நாடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது என்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இது நடக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஏன் தாக்குதலை தொடங்கினார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்வியை அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டால், அவர்கள் எந்த மக்களிடம் பேசுகிறார்கள் என்பதற்கேற்ப வேறு வேறு பதில்களை வழங்குவார்கள். இது அதிகார அரசியல். அதோடு, ‘அகண்ட இஸ்ரேல்’ என்ற மாயக் கற்பனை காரணமாகவே இது தொடங்கப்பட்டது. எங்களுக்கு இது எதிர்ப்புக்கான போராட்டமாகும். வரலாற்றுக்காகவும், இந்த பிராந்தியத்துக்காகவும், உலகுக்காகவும், சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்காகவும், நெறிமுறைகளுக்காகவும் நடக்கும் போராட்டம் இது. நாங்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவோம். இது வரலாற்றில் பதிவாகும். கட்டுப்பாடற்ற, பொறுப்பற்ற செயல்கள் ஈரானுக்கு எதிராக நடைபெறுவதால் ஈரான் மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நிறுத்தப்படும் தருணத்தில் இந்தப் பிராந்தியத்தில் புதிய மாற்றம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா ஈரான் என்ற நாட்டின் இருப்பை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ‘அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம்’ என்று இஸ்ரேலியர்கள் பல பத்தாண்டுகளாக வாக்குறுதியாக அளித்து வருகின்றனர். எனவே பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என தெரிவித்துள்ளார். “கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
வல்லரசுகளின் போர் 'வெற்றி & தோல்வி' பற்றிய செய்திகள் வரலாற்றில் பதியப்படும் போது நான்கு பக்கமும் கடலாலும், கடனாலும் சூழப்பட்ட 'இலங்கை' என்ற ஒரு குட்டி தேசத்தின் மிகப்பெரிய இதயம் பற்றியும் எழுதப்படும். ❤️ முதலில் வந்த கப்பல்(தாக்கி அழிக்கப்பட்ட) பற்றி உளவுத் தகவல் கொடுத்ததில் இலங்கைக்குத் துளி கூட சம்பந்தம் இல்லை என்றால் "தோழரின்' ஆட்சியில் இலங்கை என்ற குட்டி நாடு இதயத்தில் ஈரத்துடன் நடந்து கொண்டது" என்று வரலாறு எழுதிச் செல்லும். Lingathasan Ramalingam Sornalingam- சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது 06 Mar, 2026 | 05:55 PM சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை கதிரவேளி, கோட்பே, கோகிலாய், மூதூர், நோர்வே தீவு மற்றும் மன்னார் தால்பாடு மற்றும் இரணைதீவு ஆகியவற்றின் தெற்கு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த 19 பேரும் பிடிபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் 19 பேரும், புல்முடை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, வாழைச்சேனை, கோட்பே, மூதூர், கிண்ணியா மற்றும் மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் முலன்காவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கடைசிப் பட்டியலும் வந்திட்டுது. 14 பேர். அந்தப் பதின்னாலு பேர். ஆடுறா ராமா ஆடுடா!!- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்தியாவுக்கு.... ஈரான் கப்பலை காப்பாற்ற வக்கில்லை. அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்து விட்டு, பாய்மரக் கப்பலை வைத்து படம் காட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.- மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது
மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 05:06 PM மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என். கெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரையின் பேரில், மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான தலைமையிலான பொலிஸ் குழு விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் போது பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது- 'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மோதியை ராகுல் காந்தி விமர்சித்தது ஏன்? பட மூலாதாரம்,Getty Images ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது பற்றிய அமெரிக்காவின் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எதிர்வினையாற்றியுள்ளார். சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தைப் பராமரிக்க, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது இது குறித்து ராகுல் எக்ஸ் தளத்தில் தன் கருத்தைப் பதிவிட்ட ராகுல் காந்தி, "நமது வெளியுறவுக் கொள்கையானது நமது வரலாறு, புவியியல் இருப்பிடம் மற்றும் நமது விழுமியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அது உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார். மேலும், "இன்று நாம் காண்பது ஒரு கொள்கை அல்ல. இது ஒரு சமரசம் செய்துகொண்ட தனிநபரின் சுரண்டலால் ஏற்பட்ட விளைவு" என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 11 அன்று மக்களவையில் ஆற்றிய உரையைப் பகிர்ந்து ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார். அன்று ராகுல் காந்தி பேசுகையில், "யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும், யாரிடமிருந்து வாங்கக்கூடாது என்று அமெரிக்கா நமக்குச் சொல்லும். நாம் ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டுமா அல்லது இரானிடமிருந்து வாங்க வேண்டுமா என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும். ஆனால் நமது பிரதமர் தீர்மானிக்க மாட்டார்" என்று கூறியிருந்தார்." ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மோதியை ராகுல் காந்தி விமர்சித்தது ஏன்?- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஐ.என்.எஸ் தரங்கினி: இலங்கை கடற்படையினருக்குப் பாய்மர கப்பல் பயிற்சி! 06 Mar, 2026 | 04:11 PM அபிலாஷனி லெட்சுமன் இந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான 'ஐ.என்.எஸ் தரங்கினி' பாய்மரக்கப்பல், தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய - இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் கடந்த 27 ஆம் திகதி முதல் மார்ச் 02 வரையிலான தனது முதற்கட்ட விஜயத்தை மேற்கொண்டு, அங்கிருந்து இலங்கை கடற்படை வீரர்களுக்கான கடல்வழிப் பயிற்சியுடன் மார்ச் 06 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்த 'ஐ.என்.எஸ் தரங்கினி' பாய்மரக் கப்பாலானது எதிர்வரும் 09 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். "எப்போதும் உற்சாகத்துடன்" (Always Spirited) என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி, 1997 ஆம் ஆண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இக்கப்பல் கடந்த 28 ஆண்டுகளாக கடற்படை வீரர்களுக்குச் சிறந்த பயிற்சித் தளமாக விளங்கி வருகிறது. இக்கப்பல் ஏனைய நவீன போர்க்கப்பல்களைப் போலன்றி, முழுமையாக பாய்மரங்களின் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாய்மரங்கள் காற்றைப் பிடித்து கப்பலை முன்னோக்கிச் செலுத்துகின்றன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கப்பலின் அதிகாரிகள்: "இயற்கை நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதையும், அந்தச் சூழலுக்கு ஏற்ப நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பயிற்சி வீரர்களுக்குக் கற்பிப்பதே எமது முக்கிய நோக்கம். நவீன தொழில்நுட்பங்களான தானியங்கி வழிசெலுத்தி கருவி (Autopilot) அல்லது நிலைப்படுத்தல் கருவி (Stabilizers) ஏதுமின்றி, கைகளால் நேரடியாகக் கப்பலை இயக்கும் சவாலான பயிற்சியை இங்கே வழங்குகிறோம்." நவீன மின்னணு வசதிகள் இன்றி, இன்றும் பாரம்பரியமான மரத்தாலான 'சுக்கான்' (Wheel) மூலமே இக்கப்பல் செலுத்தப்படுகிறது. இந்தச் சக்கரத்தைக் கையாண்டு கப்பலை வழிநடத்தும் மாலுமி 'குவார்ட்டர் மாஸ்டர்' (Quartermaster) என்று அழைக்கப்படுகிறார். அத்துடன், கப்பலின் ஒவ்வொரு பாய்மரத்தையும் இயக்குவதற்கு நூற்றுக்கணக்கான கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வரிசையில் உள்ள கயிறுகள் மட்டுமே சுமார் 20 மீட்டர் நீளம் கொண்டவை. பாய்மரங்களை விரிப்பதற்கும் மடிப்பதற்கும் தனித்தனியாகக் கயிறுகள் பயன்படுத்தப்படுவதுடன், ஒவ்வொரு கயிறும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செயல்படுகிறது. கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல், மார்ச் 2 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்தது. அங்கிருந்து கொழும்பு நோக்கிய 4 நாள் கடல் பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிப் பயிற்சி மாணவர்கள் மற்றும் கடற்படைப் பயிற்சி மாணவர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பாய்மரங்களை அமைத்தல் (Sail Setting) பாய்மரக் கம்பங்களில் ஏறுதல் (Manning the Mast) கடலில் கண்காணிப்புப் பணிகள் (Lookout Duties) எஞ்சின் அறை பராமரிப்பு (Engine Room Watchkeeping) போன்ற நுணுக்கமான பயிற்சிகள் இலங்கைப் படையினருக்கு வழங்கப்பட்டதாகக் கப்பலின் பயிற்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கப்பல் மூன்று பிரதான பாய்மரக் கம்பங்களைக் கொண்டது. அவை முறையே முன் பாய்மரக் கம்பம், முதன்மை பாய்மரக் கம்பம் மற்றும் பின்புற பாய்மரக் கம்பம் என அழைக்கப்படுகின்றன. இதில் பின்புறக் கம்பத்தில் உள்ள விசேட பாய்மரங்கள் 'ஸ்பான்கர்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. பிரபலமான ஸ்காட்டிஷ் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இக்கப்பல், 2003-2004 காலப்பகுதியில் உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்து “உலகைச் சுற்றி வந்த சாதனை ” (Circumnavigation) சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கப்பலில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்த முதன்மை சீமான்ஷிப் பயிற்றுவிப்பாளர் (Seamanship Instructor) அமித் குமார் சிங், வீரர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்: "பயிற்சிப் பெறுபவர்களின் பாதுகாப்பே எமது முக்கிய நோக்கம். 'தவழ்ந்து, நடந்து, பின் ஓடுதல்' என்ற படிமுறைப் பயிற்சியையே நாங்கள் பின்பற்றுகிறோம். அதாவது முதலில் கோட்பாட்டு ரீதியாகவும், பின்னர் நடைமுறை ரீதியாகவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன." பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் என நான்கு புள்ளிகளையும் கம்பத்தில் நிலையாகப் பதித்து ஏறும் இந்த விசேட முறை, விபத்துக்களைத் தவிர்க்கப் பெரிதும் உதவுகிறது. இதில் வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து, ஒவ்வொரு அடியிலும் கொக்கிகளை மாட்டி மிகுந்த பாதுகாப்புடன் ஏறுகின்றனர். தினமும் காலையில் மஸ்ட் ட்ரில் எனப்படும் இந்தப் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம், வீரர்கள் உயரமான பகுதிகளில் அச்சமின்றிச் செயல்படப் பழகுகின்றனர். நவீன வசதிகள் ஏதுமின்றி இயற்கைக் காற்றை மட்டுமே நம்பி இயங்கும் இக்கப்பல், பல நேரங்களில் சவால்களை எதிர்கொள்கிறது. திருகோணமலையிலிருந்து கொழும்பு வரும் வழியில் காற்றின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால், கப்பல் மிக மெதுவாகவே நகர்ந்துள்ளது. கப்பலின் நீளம்: 55 மீட்டர்கள் அகலம்: 8.5 மீட்டர்கள் வேகம்: காற்று குறைவாக இருக்கும் போது, கப்பல் ஒரு மணித்தியாலத்திற்கு 1 முதல் 3 கடல் மைல் வேகம் (Knots) வரை மெதுவாக நகரும். 1 கடல் மைல் வேகம் என்பது ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 1.8 கிலோமீட்டர் தூரமாகும். காற்றின் திசைக்கு ஏற்ப பாய்மரங்களைச் சரியாகத் திருப்பி, அதிகபட்சக் காற்றைப் பிடிப்பதன் மூலமே கப்பலைச் செலுத்த முடியும் என அதிகாரிகள் விளக்கினர். ஐ.என்.எஸ் தரங்கினியில் பொதுவாக 30 நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றுவதுடன், பயிற்சியாளர்களையும் சேர்த்து மொத்தம் 61 பேர் வரை பயணிக்க முடியும். தற்காப்பு நோக்கத்திற்காக சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகள் (Small arms - 5.56 mm) போன்ற அடிப்படை ஆயுதத் தளவாடங்களும் கப்பலில் வைக்கப்பட்டுள்ளன. பாய்மரங்களை இயக்குவது மட்டுமன்றி, ஒரு மாலுமிக்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் மற்றும் கடலில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் திறன்களையும் இலங்கை கடற்படையினருக்கு இக்கப்பல் கற்றுக் கொடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஐ.என்.எஸ் தரங்கினி: இலங்கை கடற்படையினருக்குப் பாய்மர கப்பல் பயிற்சி!- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 124 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற இலங்கையின் வரலாற்றுக் நாளாகமம்களில் உள்ள சில புராணக்கதைகள் மற்றும் இலங்கைக்கு புத்த மதத்தின் வருகை ஆகியவை தமிழ்நாட்டுடன் அதிக அளவிலும், கேரளா மற்றும் ஆந்திராவுடன் குறைந்த அளவிலும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்பதைக் காண்கிறோம். புவியியல் காரணமாக கட்டாயம் ஆந்திரா கேரளாவை விட பெரிய பங்கைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதேபோல, பழங்கால சிங்கள மக்கள், பொதுவாக, தங்கள் வடக்கு அண்டை நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருந்திருக்க வேண்டும். வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் நாட்டுப்புறக் கதைகளின் செல்வாக்கையும், இலங்கைக்கு பௌத்தம் பரவியதையும் காட்ட, இரண்டு முன்னணி தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றிய மிகச் சுருக்கமான விவரிப்பைக் கொடுக்க வேண்டியது இன்று அவசியம் ஆகிறது. சிலப்பதிகாரம் மத ரீதியாக நடுநிலையானதாகக் கருதப்பட்டாலும், மணிமேகலை காவியம் ஒரு முழுமையான பௌத்தக் கதை ஆகும். சிலப்பதிகார காவியத்தின் முன்னுரையில், கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் கஜபாகு (Gajabahu) ஆடித் திங்கலில் (கிறிஸ்தவ நாட்காட்டியில் ஜூலை - ஆகஸ்ட்) பத்தினி தேவியின் (கண்ணகி) கதையைக் கேள்விப்பட்டு, காணிக்கைகளை வழங்கி, பத்தினி தேவியை கௌரவிக்கும் வகையில் விழாக்களை நடத்தினார் என்றும் இதனால், நல்ல மழை பெய்து, இலங்கை செழிப்பாக மாறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் பெரகரா விழா மற்றும் ஆடிவேல் விழாவின் [Perahera festival and the Aadivel festival] மிகப் பழைய வடிவமாக அல்லது அதன் பண்டைய விழாவாக இருக்க வேண்டும். மன்னன் கஜபாகு, ஒரு வெற்றி பெற்ற மன்னராகக் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்தக் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தென்னிந்திய மன்னரான சேரன் செங்குட்டுவனுடன் நட்புறவைக் கொண்ட இலங்கையின் சுதந்திர மன்னராகக் குறிப்பிடப்படுகிறார். ஒரு காலத்தில் பரந்து விரிந்த சேர இராச்சியத்தின் எச்சம் இன்றைய கேரளம் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, முன்னுரையில் உள்ள வசனங்கள் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அர்த்தத்தின் சுருக்கம் ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. "அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று" அதனைக் கேட்டு, கடலை அகழாகவுடைய [கடலால் சூழ்ந்த] இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித் திங்களிலே, தனது நகரின்கண் விழாச் செய்தலை, ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை குறை வின்றி நிலைபெறுதலானே, பல வளங்களும் நிறைந்து, பொய்யாத விளை வினையுடைய நாடாயிற்று அவனது நாடு என்கிறது மேலே உள்ள இந்தப் பாடல். சிலப்பதிகாரக் காவியத்தின் முதன்மை நாயகி கண்ணகியாக இருந்தாலும், ஒரு நேர்த்தியான நடன அழகியான மாதவி, ஒரு நடன பெண் குலத்தைச் சேர்ந்தவராக, ஒரு கணிகை மகளாக [nautch] இருந்தாலும், சமமான தகுதி கொண்ட நாயகியாகவும் கருதப்படலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவள். கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. கண்ணகியின் கணவரான கோவலன், மன்னனின் முன் மாதவியின் முதல் நடன அறிமுகவிழா நாளில், மாதவியின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கி, தனது செல்வம் அனைத்தையும் மாதவியின் தாயாரிடம் இழந்தார். பின்னர் மாதவியுடன் ஏற்பட்ட ஒரு அற்பமான பிரச்சினையில், கோவலன் கண்ணகியின் வீட்டிற்குத் திரும்பினான். நடனமும் நடன சமூகமும் அந்த காலத்தில் சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன என்பது வரலாறு. கண்ணகி ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதுடன், சிலப்பதிகார காவியத்தின் ஆசிரியர் அவளுடைய செழிப்பான வாழ்க்கையை 'பூமாதேவி கண்ணகியின் சிறிய அழகான கால்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.' என்று விவரிப்பதில் இருந்து இலகுவாக அறிந்து கொள்ளலாம். Part: 124 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The chronicles of Ceylon; the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya, indicate that the some of the legends in the chronicles, and the arrival of Buddhism to Lanka have close connection with the Tamil Nadu to a greater extent and to Kerala and Andhra to a lesser extent. Andhra should have played a larger role than Kerala because of the geography. Sinhalese people of yore, in general, must have had a very healthy relationship with their northern neighbours. It is necessary to give a very brief account of the two foremost Tamil Epics Silappathikaram and Mannimeghalai to show the influence of Tamil folklores in the chronicles and the spread of Buddhism to Lanka. The Epic Silappathikaram can be considered religiously neutral, but the Epic Mannimeghalai is a fully fledged Buddhist narrative. Silappathikaram: It is mentioned in the prologue, kind of introductory summary at the beginning, of this epic that the king Kajavahu (Gajabahu) of Lanka (Illanagai in Tamil) which is surrounded by sea heard of the story of the Goddess Pattini (Kannaki) and gave offerings and took festivals on her honour in the month of July, (July-August in the Christian Calendar) and it rained well and Lanka became prosperous. This must be the ancient most record of the Perahera festival and the Aadivel festival that take place usually about or during the months of July-August each year in Ceylon. The king Kajavahu is mentioned not as a conquered king, but as an independent king of Lanka with amicable relationship with the most powerful South Indian king of that time, Cheran Seng Kudduvan. The remnant of the once extensive Chera Kingdom is the present day Kerala. The verses in the prologue, as mentioned above, are given below in Tamil. The summary of the meaning is already given above. "அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று" "On hearing this Gajabahu of Ceylon encircled by sea, built a shrine for the Lady of Chastity where daily sacrifices were performed. Thinking that she would remove the distress [ of his land], He also instructed annual festivals commencing with the month Adi [July - August]; Then the rain came to stay, and increased the fertility of the land, So as to produce unfailing crops" [The Silappathikaram, Transilation by V R Ramachandra Dikshitar, M. A., 1939] The prime heroine of the Epic Silappathikaram is Kannaki, but Madhavi, who is an accomplished elegant dancing beauty, can also be considered a heroine of equal merit though born a nautch. Kovalan, the husband of Kannaki, got entranced with Madhavi on the day of her first dancing inauguration in front of the king. He stayed with Madhavi, and lost all his wealth to Madhavi’s mother. Then on a trivial issue with Madhavi, Kovalan returned home to Kannaki. The dancing and the dancing community were then an integral part of the community. Kannaki was from a wealthy merchant family, and the author of the epic describes her opulent life thus; the lady earth never knew Kannaki’s small beautiful feet. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 125 தொடரும் / Will follow துளி/DROP: 2076 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124 https://www.facebook.com/groups/978753388866632/posts/34156313217350555/?- ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
பா.ரவீந்திரன் அவர்கள் Champagne (sipping) Socialist ஆக இருப்பதை விடுத்து கொஞ்சம் இரு பக்கமும் சாராத நிபுணர்கள் வெளியிடும் அறிக்கைகள் தகவல்களையும் வாசிக்க வேண்டும். 90% யுரேனியத்தைச் செறிவாக்கினால் சிறிய ரக, ஏவுகணை காவிச் செல்லக் கூடிய (tactical) அணுவாயுதம் செய்யலாம். ஆனால், 60% செறிவாக்கிய யுரேனியத்தின் பெருமளவினைப் பாவித்து சற்றுப் பெரிய அணுவாயுதம் செய்யலாம். ஈரான், 60% செறிவாக்கிய யுரேனியத்தை நீண்ட காலமாகச் சேமித்து வருகிறது என்பது பல்வேறு தரப்புகளாலும் உறுதியான தரவு. ஈரானே இதை மறுக்கவில்லை என்பது இன்னொரு முக்கியமான தரவு! சிவிலியன் அணுசக்தியை உருவாக்க 60% யுரேனியம் அவசியமில்லை, அது 20% இலும் குறைவான செறிவாக்கலில் சாத்தியமாகும் விடயம், என்பது இன்னொரு தரவு. அப்படியானால் "ஏன் 60% யுரேனியம் செறிவாக்கல்?" என்ற கேள்விக்கு "ஈரான் அணுவாயுதம் தயாரிக்க முயல்கிறது" என்பது தான் யாரும் ஊகிக்கக் கூடிய பதில். "இஸ்ரேலை அழிப்போம்!" என்ற கொள்கை, யேமனின் ஹூத்திகள், லெபனானின் ஹிஸ்புல்லாக்கள், பலஸ்தீனத்தின் அரை டசன் உதிரி ஆயுதக் குழுக்கள் போன்றவற்றிற்கு ஆதரவு தரும் ஒரு நாடுஅணுவாயுதம் தயாரித்தால், அது எங்கள் எல்லோருக்கும் தான் ஆப்பு! இதனால் Champagne socialists இற்கும் கூட அழிவு தான் முடிவாகும்! "வாசிப்பில்லாத கோஷங்கள் நிறைந்த எழுத்து" முகநூலுக்குப் பொருந்தலாம்😎!- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் - இந்தியா என்ன செய்திருக்க முடியும்? பட மூலாதாரம்,US Department of Defense via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், 2026 மார்ச் 4 அன்று இலங்கை கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா'வை மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் ஜுகல் புரோகித் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது. பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது. இதுவரை 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் 'டெனா'. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர். இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் செய்தி வெளியான பிறகு, சில கேள்விகள் எழுந்துள்ளன. இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா? இதன் பொருள் இந்தப் போர் இப்போது இந்தியாவிற்கு இன்னும் நெருக்கமாக வருகிறதா? இது தொடர்பாக இந்தியா என்ன செய்ய முடியும்? இரானியப் போர்க்கப்பலின் பாதுகாப்புக்கு இந்தியாவுக்கு எந்த வகையிலும் பொறுப்பு இருந்ததா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தாக்குதல் பற்றி தெரிந்தது என்ன? இரானியப் போர்க்கப்பலை மூழ்கடிக்க 'மார்க் 48' நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது போர்க்கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்தும் ஏவ முடியும். அமெரிக்கக் கடற்படையின் கூற்றுப்படி, அவர்களின் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இந்த மார்க் 48 நீர்மூழ்கி ஏவுகணைகள் உள்ளன. அமெரிக்கக் கடற்படை கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த வகை நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இதன் புதிய பதிப்பின் எடை சுமார் 1700 கிலோ கிராம் ஆகும். இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தக் கேள்விக்கு மார்ச் 2 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமெரிக்க விமானப்படை ஜெனரல் டான் கேன் பதிலளித்திருந்தார்,"முழு பிராந்தியத்திலும் உலகம் முழுவதிலும் எங்களது நடவடிக்கைகள் தொடரும்." இந்த வார்த்தைகள் அமெரிக்காவின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா? பிபிசி சிங்களத்தின் செய்தியின்படி, இந்தப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடம் தெற்கு இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல்கள் (சுமார் 35 கிலோமீட்டர்) தொலைவில் இருந்ததாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பட மூலாதாரம்,Ishara S. KODIKARA/AFP via Getty Images கடல்சார் மற்றும் சர்வதேச வர்த்தக சட்ட நிபுணரான மூத்த வழக்கறிஞர் ராகுல் நரிச்சானியா, பிபிசி ஹிந்தியிடம், "எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 12 கடல் மைல்கள் வரையிலான பகுதி 'பிராந்திய கடல் பகுதி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அங்கு நடக்கும் எந்தவொரு சம்பவமும் நிலத்தில் நடந்தது போலவே கருதப்படும், மேலும் சட்ட விதிகளும் அவ்வாறே பொருந்தும். இதற்கு அப்பால், 200 கடல் மைல்கள் வரையிலான பகுதி 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' ஆகும். இங்கே நாட்டுக்கு எண்ணெய்-எரிவாயு, மீன்பிடித்தல் போன்றவற்றில் சில வணிக உரிமைகள் கிடைக்கும். ஆனால் இந்தப் பகுதி பிராந்திய கடல் பகுதி போன்றது அல்ல," என்றார். "இப்போது, இந்தச் சம்பவம் இலங்கையின் பகுதியில் நடந்திருந்தால், அந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு. உதாரணமாக, இந்தக் கப்பல் மூழ்கியதால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருந்தாலோ, அல்லது மற்ற கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டாலோ, அல்லது இலங்கையின் வணிக நலன்கள் பாதிக்கப்பட்டாலோ, இலங்கை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்." இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி ரியர் அட்மிரல் சுதீர் பிள்ளை, "அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த மோதலைத் தொடங்கியது சட்டபூர்வமானதா அல்லது அரசியல் ரீதியாகச் சரியானதா என்பது தனித்த மற்றும் விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் போர் தொடங்கிய பிறகு, திறந்த கடலில் அமெரிக்காவின் எதிரி போர் கப்பல் (இரான்) இருந்தால் அது ஒரு சட்டபூர்வமான ராணுவ இலக்காக கருதப்படும்'' என்றார். பட மூலாதாரம்,AP படக்குறிப்பு,இரானியக் கப்பல் டெனா அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடத்தின்படியும், மார்ச் 4 அன்று ஜெனரல் டான் கேன் அளித்த தகவலின்படியும், 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களில் ஒன்றாகும். பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே இரான் சுற்றியுள்ள பகுதிகளில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய அரபிக் கடலிலும் காணப்பட்டன. அமெரிக்கக் கடற்படை தனது துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தவிர வளைகுடா நாடுகளையும் குறிவைத்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சி காணப்படுவதாக எங்களுடன் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர். இலங்கை அருகே நடந்ததையும் அந்தச் சூழலிலேயே பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். இந்தத் தாக்குதல் குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதையும், அமெரிக்கா தான் எடுத்த இந்த நடவடிக்கைக்காகப் வருத்தப்படும் என்று அவர் கூறியுள்ளதையும் புரிந்துகொள்வது அவசியமாகும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்க இந்தியா சட்டப்பூர்வமாக என்ன செய்திருக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. இந்தியா என்ன செய்திருக்க முடியும்? இரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கையுடன் இணைந்து தானும் பல உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்தியக் கடற்படை மார்ச் 5 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அட்மிரல் சுதீர் பிள்ளை கருத்தின்படி, இந்தச் சூழலில் இந்தியா அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்கச் சட்டப்பூர்வமாக எதையும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அப்படிச் செய்திருந்தால் இந்தியாவே இந்த மோதலில் ஒரு தரப்பாகக் கருதப்பட்டிருக்கும். "அந்தக் கப்பல் இந்தியப் பிராந்திய கடல் எல்லைக்குள் அல்லது இந்தியத் துறைமுகத்தில் இருந்திருந்தால், இந்தியாவின் நடுநிலைத்தன்மை காரணமாக அதற்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும், மேலும் எந்தவொரு தரப்பும் அங்குத் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்காது. ஆனால் கப்பல் நமது எல்லைக்குள்ளும் இல்லை, நமது துறைமுகத்திலும் இல்லை எனும் போது, கடற்படை போர் விதிகளின்படி போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் அதை ஒரு ராணுவ இலக்காகக் கருதலாம். இந்தியா அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தால், அது மோதலில் இந்தியா ஒரு பக்கம் சேருவதாகப் பார்க்கப்பட்டிருக்கும்." நாங்கள் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் நடந்த கடற்ப்படை பயிற்சிக்குப் பிறகு, அந்தப் போர்க்கப்பலின் பாதுகாப்பு என்பது அந்த நாடு மற்றும் அந்தக் கப்பலின் சொந்தப் பொறுப்பாகும். தூதரக ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது மற்றும் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் - இந்தியா என்ன செய்திருக்க முடியும்?- ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்படுவதை எங்களால் ஏற்க முடியாது - ட்ரம்ப் 06 Mar, 2026 | 12:14 PM அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமேனி புதிய உயர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், புதிய உயர் தலைவராக அவரை ஏற்றுக்கொள்ள எங்களால் முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அலி காமேனியின் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இந்த விடயத்தில் ஈரானியர்கள் தனது நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், காமேனியின் மகன் மிகவும் இலகுவாக கையாளப்படக்கூடியவர். அவரை ஈரான் உயர் தலைவராக தெரிவு செய்வது, அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும். எனவே, ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனியை ஏற்க முடியாது. வெனிசுவெலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபடவேண்டும். ஈரானில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டுவரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம். ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகம் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார். ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்படுவதை எங்களால் ஏற்க முடியாது - ட்ரம்ப்- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
“எங்கள் வீரர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்” - இங்கிலாந்து கேப்டன் ப்ரூக் | T20 WC 2026 இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 ரன்களில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் சதம் விளாசி இருந்தார். 254 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் விரட்டியது. தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு ஓவரிலும் பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே விளாசுவதில் மும்முரமாக இருந்தனர். இதில் வில் ஜேக்ஸ் மற்றும் சாம் கரன் உடன் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் பெத்தேல். 20 ஆட்டத்துக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் கூறியதாவது: “முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என கணித்தோம். ஆனால், கள சூழல் அப்படி அமையவில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். இந்த தொடரிலும், இந்த ஆட்டத்திலும் நாங்கள் விளையாடிய விதத்தை எண்ணி பெருமை கொள்கிறோம். இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் கேட்ச்சை விட்டு தவறு செய்துவிட்டேன். ‘Catches win Matches’ என சொல்வதுண்டு. இன்று எங்களது நாளாக அமையவில்லை. இந்த ஆட்டத்தில் எங்கள் அணியின் ஜேக்கப் பெத்தேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் பார்வையை அவர் ஈர்த்துள்ளார். 250+ ரன்கள் இலக்கை விரட்டும் போது வேறொரு அணியாக இருந்திருந்தால் நிச்சயம் சுருண்டிருக்கும். ஆனால், ஆட்டம் முழுவதும் எங்களது இருப்பை வெளிப்படுத்தினோம். இலக்கை எட்டுவதில் மும்முரமாக இருந்தோம். ஆட்டத்தின் முடிவு வேறு விதமாக அமைந்த காரணத்தால் இறுதியில் அது முடியாமல் போனது” என்றார். “எங்கள் வீரர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்” - இங்கிலாந்து கேப்டன் ப்ரூக் | T20 WC 2026- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம் உறுதி": ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 09:35 AM ஈரானியப் புரட்சிகர காவல்படை, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமானதும் இறுதியானதுமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானியப் படையினர் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானியப் படைகளுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியுள்ளார்: "ஈரானியப் புரட்சிகர காவல்படை மற்றும் பொலிஸார் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எமது பக்கம் நின்றால், உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்." "நீங்கள் தொடர்ந்து போராடினால் கொல்லப்படுவது உறுதி. உங்களது மரணம் நிச்சயமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதனைப் பார்க்க விரும்பவில்லை. எனவே, உங்கள் நாட்டை மீண்டும் மீட்டெடுக்க இதுவே சரியான தருணம்." இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள ஈரானிய இராஜதந்திரிகள் தமது பதவிகளைத் துறந்துவிட்டு, அரசியல் தஞ்சம் கோருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். "சிறந்த எதிர்காலம் மற்றும் பாரிய ஆற்றல் கொண்ட ஒரு புதிய ஈரானை உருவாக்குவதற்கு எமக்கு உதவுங்கள். ஈரானிய இராஜதந்திரிகள் எமது பக்கத்தில் இணைந்து இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஈரானியப் படைகளுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானை நோக்கி அமெரிக்க ஆதரவுப் படைகள் முன்னேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த "சரணடைதல் அல்லது மரணம்" என்ற எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம் உறுதி": ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை- சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி
அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்து - இரண்டு விமானிகள் உயிரிழப்பு புதுடெல்லி: அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த Sukhoi-30 MKI போர் விமானம் வியாழக்கிழமை ஜோர்ஹாட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என்று இந்திய விமானப்படை (IAF) வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது. “சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் அனுஜ், புர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்துகிறது. உயிரிழந்த விமானிகளுக்கு இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறோம்,” என்று இந்திய விமானப்படையின் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகோய்-30 MKI போர் விமானம் இரண்டு இருக்கைகள் கொண்டது. பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நீண்ட தூர போர் விமானம் இது. ரஷ்யாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Sukhoi நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய விமானப்படைக்காக HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் உரிமம் பெறப்பட்டு இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய விமானப்படை தற்போது 260-க்கும் மேற்பட்ட சுகோய்-30 MKI போர் விமானங்களை இயக்கி வருகிறது. இதற்கு முன்பு 2024 ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் 2023 ஜனவரியில் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஒரு சுகோய்-30 விமானமும் விபத்துக்குள்ளானது. அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்து - இரண்டு விமானிகள் உயிரிழப்பு- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
இலங்கை அருகே மற்றொரு இரான் போர்க்கப்பலில் பிரச்னை - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Supplied படக்குறிப்பு,இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் கெல்லி என்ஜி மற்றும் பிபிசி சிங்கள சேவை 6 மார்ச் 2026, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற அந்த இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது. பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார். அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது. 'எந்தப் பக்கமும் சாயப் போவதில்லை'- இலங்கை இரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் நிலையில், எந்தப் பக்கமும் சாயப்போவதில்லை என்று கூறி தங்களது நடுநிலைமையை இலங்கை வலியுறுத்தியுள்ளது. "எங்களது நிலைப்பாடு என்பது எங்களது மனிதாபிமான விழுமியங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில் எங்களது நடுநிலைமையைப் பாதுகாப்பதாகும்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "சர்வதேச உடன்படிக்கைகளுக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எங்களது நாட்டின் நற்பெயர் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மனித உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலும் இதில் இலங்கை தலையிட்டது" என்று அவர் வியாழக்கிழமை கூறினார். பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் (81 கி.மீ) தொலைவில் ஐஆர்ஐஎஸ் தேனா (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புதன்கிழமை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததைத் தொடர்ந்து இலங்கை அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. சுமார் 180 பணியாளர்களைக் கொண்டிருந்த அந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-இல் பங்கேற்றது. ஐரிஸ் தேனா மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், மத்திய கிழக்கு மோதலின் ஒரு தீவிரப் போக்கைக் குறிக்கிறது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று விவரித்ததுடன், இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா 'நிச்சயம் வருந்தும்' என்றும் கூறினார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், இது அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு ஓர் உதாரணம் என்று பாராட்டியதுடன், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் எதிரிக் கப்பல் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை" என்றும் கூறினார். 1945-க்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எதிரிக் கப்பலை இந்த வழியில் மூழ்கடிப்பது இதுவே முதல் முறை என்றாலும், பிரிட்டனும் பாகிஸ்தானும் அதற்குப் பிறகு டார்பிடோக்களைப் பயன்படுத்தி கப்பல்களை மூழ்கடித்துள்ளன. இலங்கையின் அணிசேரா கொள்கை கடந்த வார இறுதியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து அழிக்கப்பட்ட சுமார் 20 இரானிய கடற்படைக் கப்பல்களில் ஐஆர்ஐஎஸ் தேனாவும் ஒன்றாகும். வியாழக்கிழமை, இரானின் ஐஆர்ஐஎஸ் புஷெர் போர்க்கப்பல் இயந்திரக் கோளாறு இருப்பதாகக் கூறி துறைமுகத்திற்குள் வர இலங்கையிடம் அனுமதி கோரியது. அந்தக் கப்பல் நாட்டின் முக்கிய வணிகத் துறைமுகமான கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருந்தபோதிலும், இறுதியில் திரிகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட திஸாநாயக்க அனுமதி அளித்தார். அந்தக் கப்பல் கொழும்பில் நிறுத்தப்பட்டிருந்தால், நாட்டின் கடல்சார் தொழில் 'பாதிப்புக்குள்ளாகும்' அபாயம் இருந்ததாகவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பிபிசி சிங்களத்திடம் தெரிவித்துள்ளது. பிபிசி சிங்களத்திடம் பேசிய அதன் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத், "அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்களை வெலிசறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லும் பணி தொடங்கியுள்ளதாகத்" தெரிவித்தார். இந்தக் கப்பலில் 208 பேர் இருந்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் தெரிவித்தார். வியாழக்கிழமை நிலவரப்படி, இலங்கை கடற்படை காணாமல் போன ஐஆர்ஐஎஸ் தேனா கப்பலின் பணியாளர்களைத் தனது கடல் பகுதியில் தொடர்ந்து தேடி வருகிறது. ஐஆர்ஐஎஸ் தேனாவிலிருந்து உயிர் தப்பிய 32 பேர் தற்போது இலங்கையின் காலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக அணிசேராக் கொள்கையைப் பேணி வருகிறது. இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கை வலுவான பொருளாதார மற்றும் ராஜிய உறவுகளைக் கொண்டுள்ளது. இலங்கை இரானிடமிருந்து 250 மில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை வாங்கியிருந்ததுடன், அதற்கான தொகையை மாதந்தோறும் தேயிலை ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தி வருகிறது. மறுபுறம், அமெரிக்கா இலங்கையின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான முதன்மை ஏற்றுமதிச் சந்தையாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இலங்கை அருகே மற்றொரு இரான் போர்க்கப்பலில் பிரச்னை - என்ன நடக்கிறது?- ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை
ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை பாரதி ஆனந்த் Updated on: 05 Mar 2026, 7:03 pm 4 min read போர் என்றாலே பேரழிவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதை மேற்கொள்ளும் நாடாக இருக்கட்டும் அல்லது இலக்காகும் நாடாக இருக்கட்டும், இரண்டுக்குமே பாதிப்பே மிஞ்சும். ஆனாலும் போர்கள் ஓய்வதில்லை. அதுவும் சமீப ஆண்டுகளாக போர்கள் மலிந்து வருகின்றன. மாறிவரும் காலச்சூழலில் பல போர்கள் ‘அதிகார அரசியல்’ காய்நகர்த்தலாகவே இருக்கின்றன. இவற்றை முடிவு செய்வதில் உலகின் சூப்பர் பவர் நாடுகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. எந்த நாட்டில் எந்த ஆட்சி நிலவினால் தங்களுக்கு சாதகமானதை சாதித்துக் கொள்ளலாம் என்ற அளவில் உத்திகளை வகுத்து, தான் ‘டிக்’ செய்த நாடுகளை பேரத்தில், அழுத்தத்தில் படியவைக்க முயற்சித்து, அதற்கு பலன் இல்லாதபோது நேரடியாகவோ அல்லது யாரையேனும் தூண்டிவிட்டோ போர் நடத்திக் குளிர் காய்கின்றன சூப்பர் பவர் நாடுகள். இராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டையே சல்லடை போட்டு சலித்துத் தேடிய அமெரிக்கா, சதாம் ஹுசைன் கைது, மரண தண்டனைக்குப் பின்னர் எதுவும் கிடைக்கவில்லை என வடிவேலு ‘எம்ப்டி பாக்கெட்டை’ காட்டியதுபோல் கைவிரித்துவிட்டுச் சென்றது. அந்தப் பேரழிவின் பிடியிலிருந்து இராக் இன்னமும் முழுமையாக மீளவில்லை. இப்போது அதே குற்றச்சாட்டோடு ஈரான் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்க, இதற்கு இஸ்ரேலையும் கூட்டுச் சேர்த்துள்ளது. கூடவே, ஈரான் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர், அதை நாங்கள் அமைக்க உதவி செய்கிறோம் என்ற அடையாளத்தை வேறு போர் மீது போர்த்தியுள்ளது அமெரிக்கா. இதை ‘ரெஜிம் கொலாப்ஸ் ஸ்ட்ரேடஜி’ (regime collapse strategy) எனப்படும் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் உத்தியாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலின் அதிகார அரசியலுக்காக தொடரப்பட்ட இந்தப் போர் வளைகுடா நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ, இன்று (மார்ச் 5-ல்) அசர்பைஜான் வரை போரின் பாதிப்பு நீண்டுள்ளது. கடந்த மாதம் அசர்பைஜான் - அமெரிக்கா இடையே பிராந்திய பாதுகாப்பு, எரிசக்தி சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஈரான் அந்த நாட்டின் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவான நாடுகளையும் தாக்கி வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் இருக்கிறது. போரை ஆரம்பித்துவிட்டது என்னவோ அமெரிக்கா, இஸ்ரேல்தான் . ஆனால் அதன் பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சீனாவின் எதிர்ப்பு: ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை ஆரம்பத்தில் ‘லேசாக’ பதிவு செய்தது சீனா. அந்நாட்டின் அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டச் செய்தியில், “ஈரான் மீதான தாக்குதல் ஐ.நா. சாசனத்தின் மீதான வெளிப்படையான அத்துமீறல். சர்வதேச உறவுகளை கட்டமைக்கும் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து திட்டமிட்ட விலகல்” என்று விமர்சித்துள்ளது. இருப்பினும், இதைத் தாண்டி பெரியளவிலான கண்டனக் குரல்களையோ, இல்லை ஈரானுக்கு தங்களது ஆதரவையோ வெளிப்படையாகவும் விரைந்தும் தெரிவிக்கவில்லை. எனினும், இந்தப் போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா இன்று அறிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறும்போது, “அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் உட்பட வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களுடன் சீன அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடியுள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தை, சீனா ஆதரிக்கும். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்சிப்பதில் மற்ற வளைகுடா நாடுகளையும் சீனா ஆதரிக்கும்” என்றார் அவர். முன்னதாக, கடந்த ஜனவரியில் வெனிசுலா நாட்டுத் தலைவர் நிகோலஸ் மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்கு சீனா தனது கடும் கண்டனங்களை தெரிவித்தது. ‘உலகத்தின் போலீஸ்காரன் / நீதிபதி’ போல் எந்தவொரு நாடும் செயல்படக் கூடாது’ என்று அப்போது அமெரிக்காவை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் சீனா இப்போது ஈரான் விவகாரத்தில் கண்டனத்தை தாண்டி என்ன மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, அதனால் சீனாவுக்கு ஆதாயமா, பாதிப்பா என்பன போன்ற விஷயங்களை பகுப்பாய்வு செய்வது அவசியமாகிறது. பெய்டோ செயற்கைக்கோள் இடஞ்சுட்டி தொழில்நுட்பத்தின் மாதிரியை காட்சிப்படுத்திய சீனா ஈரானுக்கு ‘பெய்டோ’ (BeiDou) என்ற செயற்கைக்கோள் இடஞ்சுட்டி அமைப்பு தொழில்நுட்பத்தை சீனா கொடுத்துள்ளது. இது அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் ஜிபிஎஸ்-க்கு சவால் விடக் கூடிய தொழில்நுட்பம் என்று கூறப்படுகிறது. கடந்த 2025-ல் ஈரான் - இஸ்ரேல் இடையே நடந்த 12 நாட்கள் போரில், ஜிபிஎஸ் முடக்கம் ஈரான் மக்களுக்கும், ராணுவத்துக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜிபிஎஸ் சேவையை டீஅக்டிவேட் செய்துவிட்டு ‘பெய்டோ’ சேவைக்கு மாறியுள்ளது ஈரான். இது ஈரான் ராணுவத்துக்கு வலு சேர்த்துள்ளது. அமெரிக்க ராணுவ பலத்தை கண்காணிக்க இந்த தொழில்நுட்பம் ஈரானுக்கு பேருதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் மோதல் என்பது சீனாவுக்கு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக் கூடியது. சீனாவுக்கு மிக முக்கிய எண்ணெய் வள ஆதாரம் ஈரான் தான். 2025-ம் ஆண்டில் மட்டும் ஈரானில் இருந்து 520 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் பெற்றுள்ளது. இந்நிலையில், ஈரான் மோதலால் எண்ணெய் இறக்குமதியில் சீனா என்ன மாதிரியான சிக்கலை சந்திக்கும் என்பது இன்னும் சில காலத்தில் முழுமையாகத் தெரியவரும். என்றாலும், ஹார்முஸ் நீர்நிலையின் முடக்கம் ஏற்கெனவே எண்ணெய் ஏற்றுமதி ரீதியிலான சிக்கல்களைக் காட்ட ஆரம்பித்திவிட்டது. இது சீனாவில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்தச் சூழலில் ஈரான் மீதான தாக்குதலில் சீனாவின் நிலைப்பாட்டைவிட, இந்தப் போரில் இருந்து சீனா எந்தவிதமான நீண்டகால ஆதாயங்களை அடையக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தப் போர் சீனா தன்னை அமெரிக்காவுக்கு எதிரான உலகளாவிய சமநிலையாக நிலைநிறுத்திக் கொள்ள உதவும் என்றே கணிக்கப்படுகிறது. அண்மைக் காலமாகவே அமெரிக்காவை நட்பு நாடாகக் கருதுவதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்த கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. கடந்த 3 மூன்று மாதங்களில் இந்தப் போக்கு இன்னும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. அதை நிரூபிப்பதுபோலவே இப்போது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியதற்காக தாக்குதலுக்கு உள்ளாகும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் அமைந்துள்ளன. மேலும் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் அமெரிக்கா மீது வைத்துள்ள பாதுகாப்பு ரீதியிலான நம்பிக்கைகளையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அதேவேளையில், அமெரிக்காவும் தனது வெளியுறவுக் கொள்கையின் பார்வைக் குவியலை ஐரோப்பா, மத்திய கிழக்கில் இருந்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு மாற்றி சீனாவுக்கு கடுமையான சவாலை முன்வைக்க நீண்டகாலமாகவே விரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணியில் ஈரான் போரின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று சிலரும், இந்தப் போர் நீண்டு கொண்டே செல்லலாம் என்று சிலரும் கணிக்கின்றனர். அதனால், இப்போதைக்கு தனது வெளியுறவுக் கொள்கைகளை ஆசியாவை மையப்படுத்தி முன்னெடுக்கும் அமெரிக்காவின் வாய்ப்பும் தள்ளிப்போகலாம் என்பது சீனாவின் கணிப்பு மட்டுமல்ல, அதற்கு ஆதாயமும் கூட. ஏற்கெனவே 2000-களில் ஆரம்ப காலத்திலேயே மத்திய கிழக்கில் இராக் மீதான போர், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக முன்னெடுத்த போர் என்று ஒரு தசம காலத்துக்கும் மேலாக தொலைத்துவிட்டது அமெரிக்கா. இதனால், சீனா தனது ஆதிக்கத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ஈரானில் அமெரிக்கா நீண்ட கால போரை மேற்கொண்டால், அதன் ராணுவ பலம் குறைவதோடு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, ஆசியாவில் சீனா தன்னை வலுவான பிராந்திய உத்தியாளராக மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பை தோதாக்கிக் கொடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. சர்வதேச உறவுகளில் முக்கியத்துவம், ஆசிய பிராந்தியத்தில் வலுவான இடம் தாண்டி ஈரான் போர் மூலம் சீனா அறுவடை செய்யக் கூடிய இன்னொரு நீண்ட கால பலனும் இருக்கிறது. ஈரான் போர் மூலம் அமெரிக்க, இஸ்ரேலிய ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியை முன்னெடுப்பதும், குறிப்பாக புதிய ட்ரோன்கள் பற்றி தெரிந்துகொள்ளவும், போர் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியான களம் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்து, ஈரான் போரால் சீனாவுக்கு ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்பு என்பது குறுகிய காலத்துக்கானதாகவும், காலப்போக்கில் சீனா தனது ஆதிக்கத்தை ஆசியா மற்றும் பிற நாடுகளில் அதிகரிக்க முக்கியமான அடித்தளமாக அமைவது என்பது நீண்ட காலத்துக்கான ஆதாயமாகவும் இருக்கக் கூடும் என சர்வதேச உறவுகள் பற்றி ஆராயும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை- தமிழனின் சிற்பக் கலை.
புலி வாயில் சிக்கிய வீரன் உயிருடன் மீண்டு வருவானா..ரெல் மீ ? (கிராபிக்ஸ் உதவியுடன் ) காஞ்சிபுரம் - அத்திவரதர் கோயில் - ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.