Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எல்லாருக்கும் தெரியுமா, உங்களை போல் சில பேருக்கு மட்டும் தெரியுமா???
  3. நீங்கள் பதிந்த கருத்து, எனக்குத் தெரிகின்றது.
  4. கருத்து மற்றவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்பது தான் பிரச்சனை...
  5. இ இந்த கருத்து யார் கண்களுக்காவது புலப்பட்டதா??? எனக்கு சந்தேகமாக உள்ளது... அந்த திரியை‌ திறந்து தரவில்லை என்றாலும் பரவாயில்லை... இந்த கருத்து தெரிகிறதா இல்லையா என்பதற்கு ஆம் இல்லை என்று பதில் அளியுங்கள் போதும்... கருத்துக்களும் பிரச்சனைகளும்..
  6. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிச்சவன்டா ஹாஹாஹாஹாஹா….. ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு சங்கு போல சுடச்சுட வெளுத்து வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு….. ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா……அண்ணா….. சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார் எதையும் தாங்கும் இதயம் கொண்டு அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா ஆண் : ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து….. ஆண் : உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது பரம்பரை ரத்தம் உடம்பிலதான் அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான் கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா ஆண் : காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால் வாலை நறுக்குமடா ........! --- நான் செத்துப் பொழச்சவன்டா ---
  7. மணமேடை மலர்களுடன் தீபம் . ......... ஸ்ரீ காந்த் & சாரதா ....... படம் : ஞானஒளி.
  8. யாழ்கள ஜேர்மன்/சுவிஸ் நிருபரிடம் இருந்து மேலும் தகவல்களை எதிர்பார்கிறோம்🙏
  9. Today
  10. சமாதான ஜனாதிபதி 😂😂😂 தம்பருக்கு ஒரு நல்ல ஆலோசனை… பேசாமல் வெக்கத்தை கக்கத்துக்க வச்சுகொண்டு, உக்ரேனிடம், டிரோன் எதிர்ப்பு, 2வது பெரிய 😂😂😂 இராணுவத்தை எப்படி ஓட விட்டு அடிப்பது என்பதை பற்றி கோமாளி😂😂😂 செலன்ஸ்கியிடம் ஆலோசனை, உதவி கோரினால், சண்டையில் சுளுவாய் வெல்லலாம். ஆனால்…உதவி கேட்க போகும் போது கோர்ட் சூட் போட்டு போக வேணும் சென்ஸ்சிக்கு நன்றி சொல்ல வேண்டும் புஹா ஹா ஹா 😂
  11. காலை 5 மணிக்கு நடந்த சம்பவம் போல் தெரிகின்றது. வேலைக்குப் போன ஆட்களாக இருக்கலாம்.
  12. தலைவா… வந்துட்டியா? இவனுகள் எல்லாம் உன்னை டீமில சேர்கிறானுகளே இல்ல தலைவா… ஜப்பானுக்கு ஒரு ரொக்கெட் அனுப்பி இருருக்கியாம் தலவா… இப்ப இவங்களுக்கு தெரியும் நாங்க யார் எண்டு 😂 என்ன இருந்தாலும் செம்பளவத்தின் பேரன் அல்லவா😂 முடிந்தால் தம்பர் ல கைவையுங்கோ பார்க்கலாம் 😂
  13. காத்தான்குடி தலிபான்களுக்கு... ஈரானில் இருந்து ஆயுதங்கள் வந்து இறங்கி உள்ளது போலுள்ளது.
  14. அப்படியா. நான் பிழையாக வாசித்துள்ளேன். நன்றி. இந்தளவு குறைந்த வீரர் எனில் அது இந்த தீவுக்குத்தான் என நினைக்கிறேன்.
  15. இவர்... தனக்குத்தானே தீ வைத்தார் என்று, எந்த ஊடகத்திலும் வரவில்லை. மேலுள்ள செய்தியில் கூட... "குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர்" தீ ... வைத்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மை எது என்று தெரியவில்லை. அதே நேரம் அந்த பேரூந்தில் பயணித்த, வேறு தமிழ்ப் பெண் ஒருவரும் தீகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக சில செய்திகளில் உள்ளது.
  16. எடப்ஸ் 2017-2021 வரைதான், 4 வருடம் மட்டுமே முதல்வர். எந்த தேர்தலிலும் இன்னும் இவர் தலைமையில் கட்சி/கூட்டணி வெல்லவில்லை. ஐயோ பாவத்த.. சீமானுக்கு கூட தலைவர் பெயரை பயன்படுத்துவது காரணமாக எமோஷனலா முட்டு கொடுப்பது புரிந்துகொள்ள கூடியது… சசியின்கால், ஜெயிம் டயர் ரில் எல்லாம் விழுந்து முதலமைச்சர் ஆன, “கூவத்தூரில்” “ஒருங்கிணைப்பு” செய்து ஆட்சியை பிடித்த எடப்பாடி மாமாவுகெல்லாம் முட்டு கொடுப்பது காலக்கொடுமை😂. கண்மூடித்தனமாக ஒன்றை (திமுக) எதிர்க்க வேண்டும் என்ற முடிவில் பலர் வாழ்க்கையில் இப்படித்தான் கடைசியில் முட்டு சந்தில் போய் நிற்பார்கள். இன்னொரு அண்ணை புட்டினுக்கு முட்டு கொடுக்க போய், கடைசியில் புலிகள் விடயத்தில் இந்தியா செய்தது சரியே எண்டு ஒரு முட்டு சந்தில் வந்து நிண்டார்😂. இதுவும் அப்படி ஒரு முட்டுச்சந்தே.
  17. ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! Mar 14, 2026 - 03:58 PM ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரை இலக்கு வைத்தால், அமெரிக்கா 'கடுமையான பழிவாங்கலுக்கு' முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, ஈரானிய தூதுவர் காசெம் ஜலாலி, தஹ்ரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மொஜ்தபா காமெனியை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மொஜ்தபாவின் தந்தையான அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஈரானிய மக்கள் "இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்குவதை" எதிர்பார்ப்பதாக ஜலாலி மேலும் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmq6l92y000e356pbllwi7oj
  18. அன்று அவர் தவழ்ந்து.. முதல் அமைச்சராக பதவி பெற்று இருக்காவிடில், அடுத்த சில மாதங்களில், அரசியலில் இருந்தே காணாமல் போயிருப்பார். அதன் பின் அவர் இரண்டு முறை முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்தது ஒரு சாதனைதான். அரசியலில் அதிரடி முடிவை எடுப்பவர்கள்... உயர் பதவிக்கு சென்ற வரலாறுகள் பல. அதில் இதுவும் ஒன்று. அம்புட்டுத்தான். 😂
  19. மத மூடத்தனங்களில் சிக்கி, ஒவ்வொரு பெளர்ணமிக்கும் விடுமுறை கொடுத்து, உலகில் அதிக விடுமுறை உள்ள நாடாகி, பொருளாதாரத்தில் பிந்தங்கி நிற்கும் முட்டாள் தேசம் இலங்கை. இப்போ அதில் சில முட்டாள்தனங்களை புதிய அரசு கைவிட முயல்கிறது. அதன் ஒரு அங்கம்தான் இந்த குழுவை புதுப்பிக்காமை. இதை எதிர்த்துத்தான் பிக்குகள் விகாரையில் கூடுகிறார்கள். இலங்கை அரசாங்கம் செய்யும் இனகுரோதம் உட்பட்ட மட வேலைகள் எதையும் யாழ்களம் செய்வதில்லை, எதிர்க்கும், தடுக்கும் என்பது - யாழ்களத்தின் 28 வருட பெருமை மிகு பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சம். வாழ்த்துக்கள் நிர்வாகம்.
  20. காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான மர்மப்பொருள் கரையொதுங்கியது: பொதுமக்கள் ஆர்வம்! 14 Mar, 2026 | 04:08 PM மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை கரையொதுங்கியுள்ள இந்த மர்மப்பொருள், சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்டதாகக் காணப்படுகிறது. இது முழுமையாக 'ரெஜிபோம்' (மென்புடைப்பு மீள்மம்) எனப்படும் ஒருவகை இலகுவான பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் கரையில் தரைதட்டும்போது அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடும்போது, கப்பலின் மேலோட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தடுப்பாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படும் இப்பொருளைப் பார்வையிடுவதற்காகப் பெருமளவிலான பொதுமக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/240951
  21. அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை Mar 14, 2026 - 02:25 PM பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது. வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது 'அதிக அவதானம்' செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmq3aokq000b356p1wq6hcdn
  22. ஈரானின் எண்ணை வளத்தில் 90% இங்கே இருந்து வருகிறதாம். இதில் எண்ணை எடுக்கும் தொழில்சார் கட்டமைப்பை உடைத்து விட்டால் அதை மீள கட்டி எழுப்பவே 5-10 வருடம் தேவைப்படுமாம். அதுவும் ஈரான் மீதுள்ள பொருளாதார கெடுபிடிகளின் மத்தியில், இதை அழித்து விட்டால் கிட்டதட்ட ஈரான் இனி ஆயில் ஏற்றுமதி (களவாக கூட) பண்ண முடியாது போகுமாம். இப்போ உள்ள கட்டமைப்பு 60/70 களில் BP கட்டியதாம். ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை அச்சுறுத்தினால், நாம் இதை கையில் எடுப்போம் என அமெரிக்கா மிரட்டுவதாக படுகிறது. கள்ளமாக கிடைக்கும் எண்ணை வருவாய் இல்லை என்றால் ஈரானின் ஆயுத வல்லமையும் கூட கேள்வி குறியாகும். இதை அழிக்காமல் விட்டு வைத்து, பேச்சுக்கான கதவை அமரிக்கா திறந்து வைக்கிறது. ஆனால் 45 கிலோ 60% செறிவாக்கபட்ட யுரேனியத்கை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாக இருக்கும் என நினைக்கிறேன். அது ஈரானுக்கு சாத்தியமில்லை. 20,000 தரை இறங்கும் துருப்புக்களை கொண்ட தரையிறக்கி கப்பலை அமெரிக்கா வளைகுடா அனுப்புகிறது. இந்த தீவு அல்லது தெஹ்ரானில் இறங்க என நினைக்கிறேன். தெஹ்ரானில் கடல் இல்லை. எனவே இந்த தீவுதான் இலக்காக இருக்கும். நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை அவ்வளவு இலகுவில் விசேட படைகள் மூலம் எடுக்க முடியாது. ஏதோ ஒருவகையில் பேசித்தான் எடுக்க வேண்டும். அந்த பேச்சுக்கான துருப்புசீட்டில் ஒன்றே இந்த தீவு.
  23. போர்க்கப்பல் மீதான தாக்குதல் - பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான் Mar 14, 2026 - 02:05 PM ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmmq2lsov000a356p76whnj2i
  24. ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம் 14 Mar, 2026 | 01:00 PM ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்திய தாக்குதல் சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் 5 விமானங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை, அவை தற்போது பழுதுபார்க்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 6 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஈரான் தன் தாக்குதலால் விமானம் வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் எதிரிகளின் தாக்குதலால் அல்ல, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா எதிர்வரும் நாட்களில் ஈரான் மீது கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். மேலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய தளமாக விளங்கும் கார்க் தீவு மீது இன்று நடைபெற்ற தாக்குதலில் அங்கு உள்ள இராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/240938
  25. காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார். நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர். https://athavannews.com/2026/1468417
  26. சீமானே திராவிட கட்சி ஜெயலலிதாவுக்கு தான் வாக்கு கேட்டிருக்கின்றார் அப்போதே தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில் அனைத்தும் திராவிடம் தான் என்பது இப்போது நாம் தமிழர் காளியம்மாள் தவழும் திராவிட தமிழனை தலைவராக ஏற்றிருக்கின்றார் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.