24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர்கள் இறுதிப் போட்டிக்குப் போகும் என்று ஞானும். கடைசியா கன பேருக்கு ஆப்புதான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முட்டை ஹா ஹா😄😛.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன இன்று உங்க காட்டில மழை போல. கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வலு உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் யாராவது இவரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் மூலம் சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுவதையாவது சுட்டிக் காட்டலாம்.
- Today
-
மீண்டும் பதவியேற்பேன்..! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் சிறீதரன் எம்.பி
அதுவரைக்கும் மிக்ஸர் சாப்பிடுங்கோ சேர்😂
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
இதன் வரலாறு அதிகம் தெரியாது. குறுகிய காலமே தொழிற்பட்டது. செயற்பாட்டளவில் சிறியது. 83 இற்கு பின்னர் தோன்றியது. 87 இற்கு முன்னரே கலைக்கப்பட்டது. ஆகவே தீர்மானிப்பது கடினம்; ஏனெனில் இதே போன்று மேலும் பல குறு இயக்கங்கள் தொழிற்பட்டிருந்தன. அதிஸ்ட லாப சீட்டு வித்ததும் இவர்கள் தான்
-
டிரம்பின் புதிய உலக ஒழுங்கில் இணையுமாறு ஐரோப்பாவிற்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார்.
இதில் ஆச்சரியம் இல்லை. இப்போது பெயரில் இருக்கும் விதிமுறை ஒழுங்கு (rule based order எப்படி செயற்படுத்தப்படுகிறது, அமுலாக்கப்படுகிறது என்பதை உத்தியோக பூர்வ ஒழுங்காக வரித்து கொள்வதையே டிரம்ப் நிர்வாகம் சொல்லுவது. ஆனால், இதில் ள்ள முங்கிய பிரச்சனை, அமெரிக்கா, மேற்றுகின் பாதுகாப்பு, ஏனையோர் பாதுகாப்புக்கு அற்று அல்லது குஉறைந்து அச்சுறுத்தலுக்கு, தாக்குதலலுக்கு, அழிவுக்கு உள்ளாகலாம் என்ற பிபிம்பத்தை கட்டி எழுப்புவதன் மூலம. அனால், ஐரோப்பிய வாலுகள் ஏற்கனவே அமசடக்கியாக இதில் இப்பொது பங்கு பற்றுகின்றனர். ஐரோப்பாவை , uk ஐ பொருளாதாரத்தை தவிர வேறு எந்த பெரிய, பிராந்திய அதிகார பீடங்களும் கணக்கில் எடுப்பது இல்லை. இரனே, இதை வெளிப்டையாக சொல்லி பரிவு கலந்த ஏளனம் செய்கிறது. பயிற்றுவிக்கபட்ட மந்திகள் என்று இரான் சொல்லாத குறை https://www.middleeasteye.net/news/irans-foreign-minister-calls-munich-security-conference-circus-amid-nuclear-tensions
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............. மழை வந்து இந்தப் போட்டியில் ஆக்டோபஸை காப்பாற்றி விட்டது போல..................🤣.
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
அண்ணை, வள்ளுவர் தந்த குறளை நன்றாக படித்திருக்கிறார்களோ! இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். "இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருக்குறள் (621) ஆகும். இதன் பொருள்: துன்பம் வரும்போது கலங்காமல், அதை கண்டு சிரித்து மகிழ்ந்து எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய மன தைரியத்தை விட, துன்பத்தை வெல்லக்கூடிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இது இடுக்கண் அழியாமை அதிகாரத்தைச் சேர்ந்தது.
-
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடி, கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடி - தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தகவல் சென்னை: “2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின் விவரம் வருமாறு: 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28 ஆம் ஆண்டில் 42964.61 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29 ஆம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும். 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 200 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பொருளாதாரம் மற்றும் நிதிநிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில், இது முறையே, 288 சதவீதம் மற்றும் 230 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம், 2003 இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கிற்குள் உள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2020-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 20:35 சதவீதம் ஆகும். எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஒன்றிய அரசின் திட்டமாக ஒப்பளிக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் கணக்குகளில் இடம்பெறவேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் மொத்த நிலுவைக் கடன்களில் உள்ளடங்கும். இக்கடன் தொகையை தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன் விகிதம் 20:12 ஆகவும், மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான கடன் தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன், 2027-28 ஆம் ஆண்டில் 25.30 சதவீதமாகவும், 2028-29 ஆம் ஆண்டில் 25.43 சதவீதமாகவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. https://www.hindutamil.in/news/tamilnadu/revenue-deficit-in-the-interim-budget-is-rs-48696-crore
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா டித்வா சூறாவளியால் மண்சரிவுக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பு விஜயம் 17 Feb, 2026 | 06:17 PM இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, டித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு இன்று (17) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். அனர்த்தத்தின்போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார். இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா குறிப்பிட்டார். தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238898
-
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம் Feb 17, 2026 - 05:45 PM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia
-
பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி
பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி 17 Feb, 2026 | 05:46 PM பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளமையால், தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்துக்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டுத் திரும்ப, இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில், அப்பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர், பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததையடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டது. ஆலயத்துக்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளபோதிலும், பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும், பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியேக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில், அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி, தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது, நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து, ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/238890
-
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
இடைக்கால பட்ஜெட்: ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர் அதிமுக உறுப்பினர்கள். “கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம், நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ஏந்தி வந்தனர். https://www.hindutamil.in/news/tamilnadu/aiadmk-assembly-members-mocks-tn-interim-budget-with-kathukuthu-vizha-invitation
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
படத்தில் எல்லோரும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். அழுகிற மாதிரி நின்றால்தானே… IMF இன்னும் நிறைய காசு கொடுப்பார்கள். ஒருவரும்… இந்த “ரெக்னிக்கை” முன்பே சொல்லிக் கொடுக்கவில்லையா.
-
இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Published By: Digital Desk 3 17 Feb, 2026 | 05:03 PM இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் Matsuo Takehiko, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata , ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் Fumihiko Kobayashi, ஜப்பான் அரசாங்கத்தினதும் அந்நாட்டின் தொழில்துறையையும் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குவர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட இந்நாட்டிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இந்த விசேட பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது. முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் (Export-Industrial Corridor) மூலம், முதன்மையாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட உற்பத்திகளுக்கான முதலீட்டை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு உள்ள அங்கீகாரம் அதிகரிக்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் முதலீடு தொடர்பில் இலங்கை குறித்து ஜப்பான் அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தின் ஆர்வம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/238882
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி Feb 17, 2026 - 07:13 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு விஜயத்தை இன்று (17) மேற்கொண்டுள்ளார். அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார். இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டார். தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmlqnifln0023356ny2r4eci4
-
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது. மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது. ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது. 19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் , தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,237 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். அப்போது. கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய ஒரு மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார். https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-government-interim-budget-2026-highlights
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
ட்றம்ப் ஐயா… சுத்துமாத்து சுமந்திரனிடம் ரியூசன் எடுப்பது நாலது. 😂
-
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?
காங்கிரசுக்கு…. வாக்கு வங்கி இப்பவும் உள்ளதா. இளைய தலைமுறை… காங்கிரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஈழத்து மருமகன்…. தளபதி விஜைக்கு, ஏழரைச் சனி... காங்கிரஸ் ரூபத்தில், பிடிக்க போகுது. 🤣
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
ரம் இன்னமும் 2020 தேர்தலில் நான் தான் வென்றேன். வாக்குகளை பெட்டிகளை மாற்றி ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார். அதோடு நிற்காமல் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜோர்ஜியா மாநிலத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போய்விட்டனர். இனி இதை ஏதாவது சுத்துமாத்து பண்ணி தான் வென்றதாக அறிவிக்க சொல்லுவாரோ தெரியவில்லை.
-
'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?
இஸ்லாமிய நேட்டோ அமைந்தாலும்… ஆயுதம் வாங்க… வெள்ளைக்காரன், சீனன், ரஷ்யனைத்தான் நம்பி இருக்க வேண்டும். 🥷 🧌 அவங்கள்… முட்டாள் சோனிகளை வைத்தே, கல்லாப் பெட்டியை நிரப்பி விடுவார்கள். 😂 🤣
-
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 Feb, 2026 | 06:28 PM அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும். கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும். அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும். இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உட்பட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைகிறது. கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகி 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரே ஒரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருந்தது. இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும். எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார். https://www.virakesari.lk/article/238900
-
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?
தளபதி விஜே காங்கிரசை எதிர்பார்த்திருக்கிறார்.