Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல் நடன்ஸ் அணுசக்தி நிலையம் |கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 21 Mar 2026, 4:54 pm 2 min read தெஹ்ரான்: ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எதிரிகளுக்கு தலைசுற்ற வகை்கும் அடியை கொடுத்ததாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறிய நிலையில், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மிதும் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இது ஈரானின் 70-வது தொடர் தாக்குதல் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அச்சுறுத்தல்: ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து மேலும் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ராஸ் அல் கைமா துறைமுக நகரை நொறுக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. பஹ்ரைன் மீது தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகளை பஹ்ரைனின் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன. பிப்.28 முதல் இதுவரை மொத்தம் 143 ஏவுகணைகளையும், 242 ஆளில்லா விமானங்களையும் அழித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏவப்பட்ட அதிக அளவிலான ஆளில்லா விமானத் தாக்குதல்களை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மூன்று மணி நேரத்துக்குள் 38 ஆளில்லா விமானங்களைக் கொண்ட ஒரு வலுவான தாக்குதல் உட்பட 47 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபிய படைகள் தெரிவித்துள்ளன. குவைத் ஆலை மீது தாக்குதல்: குவைத்தின் மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கெண்ட மிகப் பெரிய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் போர் இன்று 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த போர் காரணமாக ஈரானில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 204 குழந்தைகள் உட்பட 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல்
  3. எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும் ஈரானிய ஏவுகணைகள்! Mar 21, 2026 - 07:30 PM சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது. "இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல்... ஈரானிய ஏவுகணைகளின் எல்லை எதிரி முன்னதாகக் கணித்ததை விட அதிகமானது என்பதை இது குறிக்கிறது" என்று அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது. இந்தத் தளத்தின் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், எனினும் இதனால் தமது தளத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்காவினால் 'ஐரிஸ் டெனா' (Iris Dena) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்தத் தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn0e3zp2000s356pvato46ti
  4. ‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு ‘அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க தயார்’ ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி மயிலோன் Updated on: 21 Mar 2026, 4:32 pm 2 min read தெஹ்ரான்: “நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். நவ்ரூஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று வெளியிட்ட தனது செய்தியில், “இந்தப் பகுதியில் அமைதியின்மையை நாங்கள் விரும்பவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம். எந்தவொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து நாங்கள் எந்த வகையிலும் சிந்திக்கவில்லை. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை நாங்கள் துளியும் விரும்பவில்லை. இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாமே தீர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். இந்தப் பிராந்திய நாடுகளுக்கான செய்தி இது: இந்தப் பகுதியில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஈரானே காரணம் என்ற ஒரு கதையை உங்கள் சொந்த மக்களிடம் பரப்ப ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் நிலவும் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை, இனப்படுகொலைச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நமது நாட்டின் உன்னத மக்களுக்கு, நமது உன்னத தலைவரின் வீரமரணத்துக்காகவும், இந்த தேசத்தின் அர்ப்பணிப்புள்ள சேவகர்களுக்காகவும் எனது இரங்கலைத் தெரிவிப்பது அவசியமாகக் கருதுகிறேன். நாங்கள் அண்டை முஸ்லிம் நாடுகளுடன் மோதலை நாடுவதில்லை. நாங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் போரைத் விரும்பவில்லை; அவர்கள் எங்கள் சகோதரர்கள். நமக்குள் உருவாகியுள்ள பிளவுகள், முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு துரோக எதிரியின் செயல். நாம் அனைத்து மனக்கசப்புகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து பாடுபட வேண்டும். ஈரானைச் சூழ்ந்துள்ள எங்கள் அன்பான அண்டை நாடுகளே, நீங்கள் எங்கள் சகோதரர்கள். நமது உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு தவறான புரிதல்களுக்கும் அல்லது பாதிப்புகளுக்கும், இந்த வேறுபாடுகளை நீக்க இறைவன் உதவ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அன்பானவர்களே, உங்களுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளிடையே ஓர் இஸ்லாமியப் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். அது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை. நம் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளை ஒருங்கிணைக்க, நாம் ஒன்றிணைந்து 'மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை' ஒன்றை உருவாக்கலாம். ஒருவருக்கொருவர் சண்டையிட நமக்கு உரிமை இல்லை. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நமது எதிரிகள் நமக்காக அமைத்துள்ள கண்ணிகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது" என்று அவர் கூறினார். ‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
  5. அத தெரண நேற்று வந்த தகவல்களையே வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி அப்படியே போட்டுவிட்டு, புதிய தகவல் வெளியானதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இலங்ககை தமிழ் / முஸ்லிம் ஊடகங்கள் எல்லாம், பொலிஸார் தரும் அறிக்கைகளையே செய்திகளாக தருபவை. கொஞ்சம் கூட நிருபர்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தோ, ஆராய்ந்தோ செய்திகளை வெளியிடுபவை அல்ல. கடும் சோம்பேறிக் கூட்டங்கள் இவர்கள். இவர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் பல மடங்கு மேல்.
  6. ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:37 PM நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுவது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/241567
  7. கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்! தோஹா: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ஒரு சகோதர முஸ்லிம் நாடான ஈரானிடமிருந்து, அதுவும் இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய வேதனை மிகுந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முடியும். இந்தத் தாக்குதலில் கத்தாரில் சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!
  8. என்னண்டாலும் சட்டுபுட்டெண்டு சண்டையை முடிக்கச் சொல்லுங்க அண்ணை! வெக்கை ஏறிக்கொண்டு போகுது, மின்சாரம் தடைப்பட்டால் எங்கேயும் தண்ணிக்கை தான் போயிருக்கவேணும்!
  9. ஒரு பக்கத்தால் பச்சைக் கொடி காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் காலாட்படைகளை உள்ளே அனுப்பப் போகிறார்கள்.
  10. 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:41 PM நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இதுவரை 5,789 பொலிஸ் அதிகாரிகள் உயிர்நீத்துள்ளனர். இதில் கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்தத்தின் போது மாத்திரம் 2,598 அதிகாரிகள் வீரமரணமடைந்துள்ளனர். அதேநேரம், யுத்த காலப்பகுதியில் மற்றும் கடமையின் போது காயமடைந்து ஊனமுற்ற நிலையில் 2,575 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபரால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241565
  11. வாசிக்கவே தலையை சுத்துது. எப்படி இதையெல்லாம் தயாரிப்பது? பாராட்டுக்கள்.
  12. இனி வேற பெயரில வித்தால் வாங்குவார்கள் என நினைக்கிறேன்!
  13. Today
  14. இந்த பயங்கரவாத அமெரிக்கனுக்கு ஈரானில் தான் இறுதி சடங்கு 😇
  15. மற்றவர்களை மட்டந்தட்ட இது ஒரு மனோவியல் தாக்குதல், நிர்வாகம் நல்ல உடந்தை 🤣
  16. ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்! - “ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” - ஈரான் இராணுவம் எச்சரிக்கை 21 Mar, 2026 | 04:36 PM ஈரான் மீது வான்வழியாக தாக்குதல் நடத்திவந்த நிலையில், தரை வழித் தாக்குதல் நடத்தவும் சாத்தியமுண்டு என அமெரிக்கா மறைமுகமாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக “ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை (21) ஈரான் வழங்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது. ஈரான் மண்ணில் தரைவழித் தாக்குதல் நடத்துவதென்பது எமது சிவப்பு கோட்டினை மீறுவதாக அமையும். அவ்வாறு மீறித் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் ஆச்சரியமான பதிலடி கொடுப்பது போல, இந்த விஷயத்திலும் அதேபோன்ற ஆச்சரியங்களை மீண்டும் காட்டுவோம்” என ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எங்களுடைய எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்கினால், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் செயலிழந்து போகும். இந்த முறை நாங்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதி ட்ரம்ப், இந்த விஷயத்தில் ஏதேனும் தவறு செய்தால், அவருக்கு ஆச்சரியம் ஒன்றை நாங்கள் காட்டுவோம் என்றும் ஈரான் இராணுவம் அதன் அறிக்கையின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/241583
  17. காணாமல் போன யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு Mar 21, 2026 - 04:50 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன விரிவுரையாளரின் மகளும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பொலிஸார் இருவரையும் மீட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. விரிவுரையாளரைத் தான் கொலை செய்து, அவரது சடலத்தைத் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக அந்த இளைஞன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சந்தேகநபர் அடையாளப்படுத்திய இடத்திற்கு விரைந்த பொலிஸார், விரிவுரையாளரின் சடலத்தை மீட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn087ds3000k356pyhmb962t
  18. இரானுக்கு முழு உரிமை இருக்கிறது, எங்கும் எதிரியை தாக்க. பொது இடம் எனும் பொது, அங்கு எதிரியின் நிலை (உ.ம். 1 படைச்சிப்பாய் கூட) இருந்தால் தாக்கலாம். இதை மேற்கும் செய்வது. இஸ்ரேல் செய்கிறது. முன்பு மேற்கிற்கு இருந்த நிலையான எவரையும் தாக்கும் போது, அந்த இடத்தில் மட்டுமே எதிர்ப்பு வரும், வரவேண்டும் என்ற தன்தகுதி (entitled) எதிர்பார்ப்பு இப்போதும் மேற்கிடம் இருக்கிறது. இதனால் தான், Diego Garcia ஐ இரான் தாக்கியதை UK கண்டித்து இருப்பது.
  19. ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம் டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பலும் சிக்கியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வர வேண்டிய 24 ஆயில் டேங்கர் மற்றும் காஸ் டேங்கர் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கி யானுடன் பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இந்தியாவுக்கு சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் வழக்கமான பாதையில் வராமல் ஈரானின் லார்க் தீவைச் சுற்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இந்த வழியாக வந்தால் ஈரான் கடற்படை இந்திய கப்பலின் அடையாளத்தை நேரடியாக பார்த்து உறுதி செய்ய முடியும். இந்த பாதுகாப்பான வழித்தடத்தில் இந்தியாவின் 22 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரவுள்ளதாக கடல்சார் தரவு மற்றும் உளவு நிறுவனம் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (எல்எல்ஐ) தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்
  20. 5´000 அமெரிக்க வீரர்களும் ஈரானில் இருந்து திரும்பிப் போகும் போது, ⚰️ பெரிய சூட்கேசில் போகிறார்கள். 😂 🤣
  21. ஐபிஎல் 2026இலிருந்து கரன், எலிஸ் விலகினர் ; ஆரம்பப் போட்டிகளில் ஸ்டாக், ஹேஸ்ல்வூட் பேர்கசன் இல்லை Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 04:22 PM (நெவில் அன்தனி) கிரிக்கெட் உலகில் 'மினி ரி20 உலகக் கிண்ணம்' என கருதப்படும் இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் பல வீரர்கள் உபாதைகளால் அவதிபடுகின்றனர். இந்நிலையில் உபாதைக்குள்ளான இரண்டு வீரர்கள் முழுமையாக விளையாடமாட்டார்கள் எனவும் இன்னும் சிலர் பணிச் சுமை ஆரம்பப் போட்டிகளில் விளையாட்டுவது சந்தேகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரனின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இந்த வருடம் அவர் தனது புதிய அணியான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடவிருந்தார். மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியிலேயே கடைசியாக கரன் விளையாடி இருந்தார். அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேதன் ஸும் ஐபிஎல் இல் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது நேதன் எலிஸ் உபாதைக்குள்ளானார். அவரது தொடைப்பகுதியில் ஏற்கனவே இருந்துவந்த உபாதை மேலும் மோசம் அடைந்துள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க, அடுத்துவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கவனத்தில் கொண்டு தங்களது முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச் சுமையை குறைப்பது குறித்து கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக மிச்செல் ஸ்டாக் (டெல்ஹி கெப்பிட்டல்ஸ்), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)ஆகிய இருவரும் பெரும்பாலும் ஆரம்ப ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கருதப்படுகிறது. நியூஸிலாந்து வீரர் லொக்கி பேர்கசனும் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெறுகிறார். https://www.virakesari.lk/article/241482
  22. “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின் மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானிய மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்துவர வேண்டும் என விளாடிமிர் புதின் வாழ்த்தினார். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானுக்கான ரஷ்ய உதவிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் படுகுழியில் தள்ளி, ஒரு பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக புதின் குற்றம்சாட்டி இருந்தார். ஈரானின் உச்சத் தலைவர் வஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஈரானில் ஆட்சியில் இருந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா, பதவியில் இருந்து 1979-ல் அகற்றப்பட்டார். அது முதல் ரஷ்யா, ஈரானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. எனினும், தற்போதைய போர் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரானுக்கு ரஷ்யா எவ்வித உதவியும் வழங்கவில்லை என ஈரானிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஈரான் போர் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தப் போர் ரஷ்யாவுக்கு சாதகமானதாகவும் அமைந்தது கவனிக்கத்தக்கது. “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
  23. ஏதிர் பார்த்த ஓன்று பகிரங்கமாக சாவால் விட்டுள்ளார்கள்😇.
  24. யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொ*லை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது. இக்கொ*லைச் சடலம் யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்ற விரிவுரையாளரே இவ்வாறு படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். கொ*லை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது தாயையும் (விரிவுரையாளர்) தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் யாரோ வெளியேறியதற்கான தடயங்களும், வெட்டப்பட்ட தலைமுடிகளும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமையும் QR குறியீடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சி.சி.ரி.வி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், நேற்று திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் (மருமகன்), 19 வயதுடைய அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது செய்தனர். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியாரான விரிவுரையாளரைத் தான் கழுத்து நெரித்துக் கொ*லை செய்ததாக மருமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், சடலத்தைத் தனங்கிளப்பு – அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நீண்ட தேடுதலின் பின்னர் விரிவுரையாளரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ளதால், பதில் நீதவான் சடலத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இக்கொ*லைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1469515

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.