stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்
விகாரை கட்டுவதுதானே தேசிய பாதுகாப்பு? காணிகளை விடுவித்தால் எப்படி விகாரைகள் கட்டமுடியும்!
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
பேசாமல் இலங்கையில் இவர்களுக்கு பீ ஆர் கொடுத்து ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையில் சேர்த்துவிடலாமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இப்போ கணிக்க கஸ்டம். சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன். மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன். வெறும் ஊகம்.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுதான் அவர்களுக்கு மிக அழுத்தத்தைக் குடுக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டி இந்தியாவிற்கு சார்பான ஒரு பக்க போட்டியாக இருக்கும் என அனைத்து இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் முன்னால் வீரர்களும் கூறுகிறார்கள். இப்பவே வெற்றியினை கொண்டாடுகிறார்கள், போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடுமோ என கருதுகிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மிஞ்சி மிஞ்சி போனா 10% வாக்குகள் பெறுவார்களா? தற்போதய சூழ்நிலை எந்தளவு வாக்கு வீத சரிவினை ஏற்படுத்தும் 2% ? (10-2 = 8), கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதே அளவு வாக்குதான் விழுந்த்தது என நினைக்கிறேன்(8%).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
நீங்கள் பிழைக்க தெரிந்த ஆள், பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொண்டு எங்களை இத்து போன கூட்டணியில் இணைத்துவிடப்பார்க்கிறீர்கள், தமிழ்நாட்டு வழக்கில் சொன்னால் உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா, அன்ட்ரேமார்க்கும் இல்லை உங்க காட்டிலை மழைதான்.🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன். தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது…. இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன். வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது. பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இந்த விவகாரம் (விஜயின் குடும்ப விவகாரம்) த வெ க இனை தேர்தலில் பாதிக்கும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்து என்ன?- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஓம்…ஆனால் ஈராக், சிரியா, லிபியா போல ஆகக்கூடாது. அதுதான் எனது ஒரே யோசனை.- Yesterday
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய முன்னால் வீரர்கள் இந்தியா இப்போட்டியில் மிக இலகுவாக வென்றுவிடும் என கூறியுள்ளனர், இந்தியணியின் நம்பிக்கை உயர்வாகவுள்ளது. இவ்வாறான கருத்துக்களை பார்க்கும் போது இன்றைய இறுதி போட்டி ஒரு பக்க சார்பான (இந்திய) போட்டியாக மாறவாய்ப்புள்ளது போல காணப்படுகிறது. நியுசிலாந்து பார்வையாளர்களை ஏமாற்றி விடக்கூடாது, ஒரு தரமான கடும் போட்டியினை இந்தியாவிற்கு வழங்கவேண்டும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை. இதோ ஆதாரங்கள் இலங்கை vLexRATNAMMA v. RASIAH. இரெட்ணம்மா எதிர் இராசையா என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு - தாலி கட்டி இந்து முறை படி செய்த திருமணம், பதியப்படாவிடிலும், தம்பதிகள் கணவன்-மனைவியாக ஊரறிய வாழ்ந்திருப்பின் சட்ட வலுவுடையது என்கிறது. ஆனால் பொது விவாக சட்டதின் அடிப்படை கூறுகளான, தகாத உறவு, சிறார் மணம் போன்றவற்றை மீறும் எந்த கலாச்சார திருமணத்துக்கும் நீதி மன்றம் சட்ட வலு கொடுக்காது. மேலதிக தகவல்கள் கீழே. https://www.scribd.com/document/591706099/2-චාරිත-ර-නුකුල-විවාහය இந்தியா “சப்தபடி” எனும் 7 சம்பிரதாயங்களை பூர்த்தி செய்யும் இந்து திருமணம் சட்டபூர்வமானது எனவும், இதை நிரூபிக்க பதிவு தேவையில்லை ஆனால் விரும்பினால் அதையும் செய்யலாம் என இந்திய இந்து திருமண சட்டம் 1955 சொல்கிறது. Bhatt & Joshi AssociatesValidity of Hindu Marriage Customs and Rites Under Indian...Explore the legal validity of Hindu marriage customs under Indian law and the importance of ceremonial compliance.- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
நெத்தன்யாகுவின் குடும்பம் புளோரிடாவில் உள்ளதாக கூறுகிறார்கள், உண்மை நிலவரம் தெரியாது. இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றி பற்றிய செய்திகள் பரவலாக ஊடக தரப்பில் வெளிச்சம் போட்டுக்காட்டும் விகிதத்துடன் ஒப்பிடும் போது போர் நீடிக்கும் கால அளவுகளை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே உள்ளது, ஆனால் போர் வெற்றி ஈட்டப்படும் வரை தொடர நினைத்தால் அது அனுமனின் வால் போல நீண்டு போகும் அதனால் எந்த இலாபமு ஏற்படாது நட்டமே ஏற்படும். அதனால் ஈரான் அணுகுண்டு ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது (முன்பும் இவ்வாறே கூறினார்கள்), கமேனி கொல்லப்பட்டுவிட்டார், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டது (ஈரானிடம் தாக்குதலை நிறுத்த சொல்லி விட்டு) என கூறி போரினை முடித்து வைக்கலாம்.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நல்லது ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் 😄- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அண்ட புழுகு, ஆகாச புழுகு, இது ஏஐ புழுகு… இந்திய படையை இலங்கையில் இறக்கி இந்திய தூதரகத்துக்கு அல்வா தீத்திய சிறி அண்ணைக்கே வீபூதி அடிச்சிட்டியே பரமா😂. வந்த கையோட, நீலங்கரை வீட்டில் உள்ளே போக விஜை அனுமதி மறுப்பு. அதில் எனக்கு சரிபாதி உண்டு. சென்னையில் இருக்க வீடில்லாமல் தவிக்கிறேன் என ஒரு மேலதிக மனுவை கோர்ட்டுக்கு தட்டி விட்டுள்ளார் சங்கீதா அண்ணி. அண்ணை @குமாரசாமி என்ன சத்தத்த காணோம்?- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
நிதிக்கடத்தலலின் பின்னணியில் முன்னால் புலனாய்வாளர்கள் உள்ளது ஒரு வகை சதித்திட்டத்தின் பங்காக இருக்கலாம், கங்கேரி மீது ஒரு தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் அல்லது அதன் அரச தேர்தலில் செய்யப்படும் இடையூறுகளாகவும் இருக்கலாம். ட்ருஸ்பா எண்ணெய் வழங்கி உக்கிரேன் பிரிவில் எந்த வித சேதமும் காணப்படவில்லை என்பதனை செய்மதி பட மூலம் காட்டுகிறது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறமையினை மீறும் செயல்களில் தொடர்ச்சியாக உக்கிரேன் ஈடுபடுகின்றது, முதலில் இந்த எண்ணெய் வழங்கி மீது தாக்கிய போது செலன்ஸ்கி கருத்துக்கள் என்பன ஒரு திட்டமிடாத எதிர்வினையாற்றும் நடவடிக்கையாகவும், ஒரு நீண்டகால இராஜதந்திர சிக்கலை உருவாக்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது. உலக ஒழுங்கு மாற்றம் இப்போது ஆதரவாக உள்ள சக்திகள் நாளை கை கழுவி விடும் நிலை ஏற்படலாம் எனும் நிலையில், தற்போது நிகழ்த்தும் சில செயல்கள், கருத்துக்கள் நீண்ட கால நோக்கில் உக்கிரேனுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் சில மாற்றங்களை ஐரோப்பாவில் ஏற்படுத்த தொடங்கிவிட்டததிற்கான ஆரம்ப கட்ட மாற்றங்கள் தெரிய தொடங்கி விட்டது, தற்போதய நிலையில் எவ்வளவு காலம் மத்திய கிழக்கு நிலை நீடிக்கும் என தெரியாத நிலையில், சில தடாலடி அரசியல் கொள்கை மாற்றம் ஐரோப்பாவில் நிகழலாம்.- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
ஆம். ஒரு ஏவுகணையின் விலை சும்மா இலகுவாக குறிப்பிட்டு இது சாதாரணமானது, இதை விட விலை கூடிய ஆபத்தான ஆயுதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று கணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணுஆயுதத்தை பாவிப்போமென மிரட்டுகிறார்கள், பொது மக்களின் உழைப்பில், அந்த மக்களை, அவர்களின் சீவியகால உழைப்பை, கனவை அழிக்கிறார்கள். இதனால் இவர்கள் காணும் பயன் என்ன? உலகம், மக்கள் இருந்தாற்தானே இவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்ட முடியும். அணுகுண்டை பாவிப்போம் என்று எதிரியை மிரட்டுவார்களே அன்றி பாவிக்க மாட்டார்கள். நெதன்யாகு தலைமறைவு என்றும் சொல்கிறார்கள். உலக நாடுகள் சேர்ந்து ட்ரம்ப், நெதன்யாகுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை ஈரான் தோற்றாலும் ட்ரம்ப் ஈரானால் அழிக்கப்படுவார் அல்லது இந்தப்போரை வலிந்து ஈரான் மீது திணித்ததற்காக வருந்துவார் தவறான முடிவை எடுத்து விட்டொமேயென. மனித குலத்திற்கு எதிரான சாத்தான்கள் களை எடுக்கப்படவேண்டும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இறுதிப் போட்டி நடைபெறப் போகும் வேளை, களம் இவ்வளவு அமைதியாக் கிடக்கு. ஒருத்தருக்கும் இரண்டு நாடுகளையும் பிடிக்காதோ.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஜனாதிபதி மன்னிப்பு தவறுதலாக கேட்டுள்ளார் - தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது ஈரானிய இராணுவ தலைமை. சுப்ரீம் லீடரும் இல்லை, 88 முல்லாக்களுக்குள் பிடுங்குபாடு, ஜனாதிபதிக்கு ஒரு மதிப்பும் இல்லை, இராஊவ தளபதிகளே நேரடியாக பவரை கையில் எடுத்துள்ளார்கள். - உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.