Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரானால் தாக்கப்பட்டதா அமெரிக்க போர் விமானம்? Published By: Vishnu 20 Mar, 2026 | 06:24 AM ஈரான் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்க F-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. ஈரான் தாக்குதல் என நம்பப்படும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க F-35 ரக போர் விமானம் ஒன்று, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக, இவ்விவகாரம் குறித்து அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ரக விமானம் "ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது" அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹாக்கின்ஸ் தெரிவித்தார். "விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியின் உடல்நிலை சீராக உள்ளது," என்று ஹாக்கின்ஸ் மேலும் கூறினார். "இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது." பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய போரில், ஈரான் ஒரு அமெரிக்க விமானத்தைத் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இந்த மோதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் F-35 ரக விமானங்களைப் பயன்படுத்துகின்றன; இந்த விமானங்களின் விலை 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். https://www.virakesari.lk/article/241415
  3. அவுஸ்ரேலிய இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகளை வெளிக்கொணர முற்பட்ட ஒரு ஊடகவியலாளரரது கணனி பொருள்கள் என்பனவற்றினை கைப்பற்றி பாரிய நெருக்கடி கொடுத்திருந்தும் அந்த விடயத்தினை அவர் பலத்த சிரமத்திற்கும் மத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தார், ஆனால் மக்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த காணொளி பார்ப்பதற்கு கடினமாக இருக்கும், சாதாரண மக்களை விலங்குகள் வேட்டையாடுவது போல வேட்டையாடுவார்கள், ஆனால் அது ஏனோ மக்களால் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை, அதற்குள் ஒரு கூட்டம் தேசிய வீரர்களை காப்போம் என கையெழுத்து வேட்டை வேறு நடத்தினார்கள்.
  4. யாழ். பல்கலைக்கழக கறுப்புக் கொடி விவகாரம் : மூன்று மாணவர்களிடம் ஐந்து மணி நேர விசாரணை 20 Mar, 2026 | 09:59 AM சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13ஆம் திகதி திகதியிடப்பட்டு, 16ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து, வருமாறு கூறப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை (19) காலை 09.30 மணிக்கு மாணவர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241428
  5. பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை 20 Mar, 2026 | 09:57 AM (எம்.நியூட்டன்) பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/241426
  6. ஓம் கிம்முக்கு மூக்கை பொத்தினால், வாயை ஆவென்று திறக்க தெரியாதவர். சிலவேளை சிறிமா சொல்லிய - பாண் இல்லாவிட்டால், ஏன் கேக் இல்லையா, சாப்பிட முடியாதா என்று சொன்னது - மேற்கி நிறுவன நினைவில் ஓடி இருக்கலாம். (மேற்கு கோர்த்து விளையாவதில் கில்லாடிகள் என்பதை அப்பாவியான சிந்தனை அறியவில்லை போலும்) ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நம்பலாம் சிறிமா முழுதாக இலங்கைதீவு வாழ்க்கை, கண்டி இராச்சிய ரத்வத்தை குடும்பத்தை சேர்ந்தவர் - ஆகவே ஒரே சூழலில் இருக்கும் போது பாண் / கேக்கின் அருமை தன்மை தெரியவில்லை என்று.
  7. அத தெரண கருத்துப்படங்கள்.
  8. ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப் பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சியுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது டிரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்தார். இரு தலைவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்துக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. செய்தியாளர் சந்திப்பில், அதிபர் டிரம்ப்பிடம், 'தாக்குதலுக்கு முன்பு, அது குறித்து ஜப்பான் போன்ற தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏன் தெரிவிக்கவில்லை?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஒன்று, நாங்கள் அதிக சமிக்ஞைகளை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது, மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம். நாங்கள் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். இத்தகைய ஆச்சரியங்கள் குறித்து ஜப்பானை விட நன்றாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள், சரியா?" என்று கூறினார். இதற்கிடையில், டிரம்ப் பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) குறித்தும் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது. ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்
  9. இரஸ்சியாவின் பாதீட்டில் பாதுகாப்பிற்கான செலவீடுகள் ஆண்டிற்கு 150 பில்லியனுக்குள் இருப்பதாக நினைவுள்ளது. இரஸ்சிய போர் அமெரிக்க மற்றும் மேற்கு தரப்பினை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளதாலேயே தற்போதய ஈரான் போர் ஒரு நெருக்கடி நிலையினை எட்டி உள்ளது. பெரும்பாலும் சோவியத் யூனியன் கால ஆயுதங்களை நவீன மேற்கின் ஆயுதங்களுக்கெதிராக பயன்படுத்துவதால் இரஸ்சியாவின் தாக்குதல் போர் மேற்கின் தற்காப்பு போரினை விட மலிவாக உள்ளது. இரஸ்சியாவின் மலிவான ஒரு குறூஸ் ஏவுகணைக்கெதிராக விலை அதிகமுள்ள ஒரு பட்ரியாட் ஒன்றுக்கு மேலான ஏவுகணையினை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. போர் ஒரு புறமும் பொருளாதார தடை ஒரு புறமுமாக இரண்டு முனைகளை எதிர்கொள்வதற்காக சூழ்நிலையிற்கேற்ப தகவமைக்கும் உத்தியினை கையாளுகிறார்கள், அதற்காக அதி நவீன செலவு கூடிய ஆயுதங்களில் செலவிடாமல் சோவியத்கால பழய அவர்களது தேர்ச்சி பெற்ற அடிப்படையான ஆயுதங்களில் முதலிடுகிறார்கள், அவர்கள் அதனால் தமது சுடு திறனை பல மடங்கு அதிகரிக்கின்றார்கள், போர் மனித குலத்தின் பழமையான நோய், அதன் அடிப்படை மிக சிம்பிளானது, அதனாலேயெ அவர்கள் தமது அடிப்படை உத்தியினை சிம்பிளாக வைத்துள்ளார்கள் (அடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு சேதமென்றால் அடி வாங்கினவர்களின் நிலை?). இதனையே சமச்சீரற்ற தேய்மான போர் என கூறுகிறார்கள். விலை மலிவான ஆட்லறி செல்களை அவர்கள் அதிகளவில் உற்பத்தி செய்கிறார்கள் அது ஒட்டு மொத்த உலக உற்பத்தியினை விட அதிகமாக உள்ளது ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக கைமார்ஸ் போன்ற சிக்கலான, உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட, விலை உயர்வான உற்பத்திகளில் மேற்கு முயற்சிக்கின்றது. இந்த வேறுபாடு களத்தில் பிரதிபலிக்கின்றது, அத்துடன் கடன் அளவில் கட்டுப்பாடாக இருப்பதும் அதிக வித்தியாசத்தினை இரண்டு தரப்பிற்குமிடையே உருவாக்குகிறது. இரு தரப்பில் எந்த தரப்பு போரினை தொடர முடியாத நிலை ஏற்படுகிறதோ அப்போது போர் முடிவிற்கு வரும், சமகால நிகழ்வுகளை பார்க்கும் போது அதிக பட்சமாக இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவுக்கு வரும், அதிக பட்சம் அடுத்த ஆண்டின் ஆரம்பம், ஆனால் இந்த போரின் முடிவில் நேரடியாக போரிட்ட இரு தரப்பிற்கும் மிக மோசமான நட்டமே எஞ்சும்.
  10. இந்த பாசம் எப்படி உள்நுழைந்தது? இப்படியான மிருகங்களை பழக்கி வைத்திருந்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லலாம். மெல்போன் விமானநிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை செய்ய வேண்டும்.
  11. உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி 20 Mar, 2026 | 10:21 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் யுத்தச் சூழல் காரணமாகக் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த உலகச் சந்தை மசகு எண்ணெய் விலைகள், இன்று வெள்ளிக்கிழமை (20) காலை நிலவரப்படி கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை 105.82 அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று இதன் விலை 115 டொலர் வரம்பைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.43 டொலர்கள் வரை குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 100 டொலர்களைக் கடந்திருந்தது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் நீடித்த போதிலும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சில சாதகமான மாற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை குறித்த முன்னறிவிப்புகள் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு, உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி ஓரளவு சாதகமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241422
  12. மழையால் போட்டி ரத்தானால் யாருக்கு கிண்ணம்? புதிய விதிகள் Mar 20, 2026 - 08:52 AM இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சி செய்யப்படும். அதுவும் சாத்தியமில்லையெனில், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படலாம். ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த ஆட்டம் ரத்து செய்யப்படும். அப்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இறுதிப்போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் நடைபெறும். அதிலும் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி செம்பியனாக அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஐ.பி.எல் வரலாற்றில் இவ்வாறான சந்தர்ப்பம் இடம்பெற்றதில்லை. https://adaderanatamil.lk/news/cmmybtwtu0006356prn2t5oy3
  13. ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,Getty Images இரான் மீதான போர் குறித்து நேற்று (மார்ச் 19) உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எவ்வளவு காலம் தேவையோ அதுவரை போர் நடக்கும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார். இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஆயுதக் கிடங்கு, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் ஏவுகணை பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற அணுசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட, இரானில் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வரும் அனைத்து விஷயங்களையும் நெதன்யாகு பட்டியலிட்டார். “இரானியத் தொழில்துறையை இதற்கு முன்பு நாம் தாக்காத வகையில் அழித்து வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, அதை நாம் செய்யப்போகிறோம்” என்றும் அவர் கூறினார். “இஸ்ரேல் தான் அமெரிக்காவை இரானுடனான மோதலுக்குள் இழுத்துச் சென்றது என்ற ‘போலிச் செய்தியை’ தான் அகற்ற விரும்புவதாக” நெதன்யாகு கூறினார். "அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவரிடம் போய் சொல்ல முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை," என்று அவர் கூறினார். “டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார்" என்றும் அவர் தெரிவித்தார். ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
  14. ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கோப்புப் படம் உலக நாடுகள் ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்த இரானுக்கு சுங்க கட்டணம் மற்றும் வரிகள் செலுத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக இரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமயே ரஃபீ தெரிவித்துள்ளார். கப்பல்களின் பயணம், எரிபொருள் மற்றும் உணவுப் போக்குவரத்துக்கு ஹோர்மூஸ் நீரிணை பாதுகாப்பான பாதையாக பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்த கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். இஸ்னா செய்தி முகமையின் வெளியான செய்தியின்படி, இரான் தலைநகரில் உள்ள வலியசர் சதுக்கத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருந்தார். "நமது எதிரிகளின் முந்தைய சௌகரியங்களை அவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். அவர்களால் இந்த யதார்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை." என்றார். ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை
  15. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் - நிஹால் செனவிரத்ன Published By: Vishnu 20 Mar, 2026 | 05:57 AM (செ. கவிஷனா) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலவரத்தால் தற்போது சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை 1 கிலோகிராமுக்கு 2 முதல் 3 ரூபா வரை அதிகரித்துள்ளது. போர்ச் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வருவதற்கு மேலதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மொத்த விலையில் கிலோவுக்கு சுமார் 10 ரூபா குறைந்துள்ளது. தற்போதைய சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைக்க முயற்சிக்கக் கூடாது. இந்த சூழலையும் சமாளிக்க முடியும். அத்துடன் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை. இலங்கைக்கு தேவையான நெத்தலி கருவாட்டில் சுமார் 60 சதவீதம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த சந்தை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் அவற்றை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியும். மேலும், தற்போது ரின் மீன் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியில், போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால், மீண்டும் ரின் மீன் இறக்குமதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படாவிட்டால், பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றார். https://www.virakesari.lk/article/241413
  16. ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு Published By: Vishnu 20 Mar, 2026 | 05:34 AM (எம்.மனோசித்ரா) ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட தொழிநுட்ப சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய தற்போது 55 000க்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் 1919 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். கியூ.ஆர். குறியீட்டுடன், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணா இரட்டை எண்ணா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இனி எரிபொருள் விநியோகிக்கப்படும். பெரும்பாலான இடங்களில் எரிபொருளுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளன. விநியோகத்தர்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித தடையும் இல்லை. அத்தோடு ஏப்ரல் மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான விண்ணப்ப படிவமொன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டால் எவ்வித இடையூறுகளும் இன்றி எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/241409
  17. லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு! ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் குறித்த வாக்குமூலம் குறித்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாந்த தயாநந்த இவ்வாறு கருத்து தெரிவித்தார், இன்றைய வழக்கின் போது நானும் அங்கிருந்தேன். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இன்று நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் பிரமாண பத்திரத்தை கையளித்திருந்தார்கள். அவரை கைது செய்ததோ அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதோ சம்பந்தமாக எங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அவரிடம் மேற்கொள்ள விசாரணை முறை தொடர்பில் தான் பிரச்சனை இருக்கிறது. அவர் பிராண பத்திரத்தில் கூறியிருக்கிறார் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் என்னிடம் இதில் சம்பந்தப்ட்டுள்ள அரசியல் வாதிகளின் பெயர்களை கூற சொல்லி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட மரண பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, என் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். என்னை யார் என்று தெரியுமா என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இவரை மிரட்டியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிபதியிடம் தெரிவித்தார். அவரை மிக மோசமாக அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருந்து வாக்கு மூலங்களை பெற்றிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பல அரசியல் வாதிகளின் பெயர்கள் இதனுடாக வெளிவரும். காரணம் இவருக்கு மரண பயத்தை காட்டி இவரிடம் இரு பெயர்களை சொல்ல வைத்திருக்கிறார்கள். லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நீதியதியிடம் கூறுகிறார்கள் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானப் பரிவர்த்தனையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இவர் தெரிவித்ததாக மறுபுறம் இவர் கூறுகிறார் உண்மைகள் என்னால் விருப்பத்துடன் கூறப்படவில்லை என்னை அச்சுறுத்தி என்னிடம் வாக்குமூலத்தை பெற்றதாக இது ஒரு மோசமான நிலை அவர் கூறியது உண்மையா என்பதை விசாரணை செய்ய வேண்டும். என தெரிவித்தார். https://athavannews.com/2026/1469270
  18. உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி. நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ,ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்து, அம் மாணவியை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் கோரினார். அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார். https://athavannews.com/2026/1469276
  19. அந்த ஆமிக்காரர்தான்.... இப்ப "யூனிபோர்மை" கழட்டி வைத்து விட்டு, சிவில் உடையிலும், காவி உடையிலும் வந்திருக்கின்றார்கள். 😂 🤣
  20. இரானில் மூன்று பேருக்கு பொது வெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் பட மூலாதாரம்,FARS ஜனவரி மாதம் இரானில் நிகழ்ந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரானிய நீதித்துறையுடன் தொடர்புடைய மீஸான் செய்தி முகமை, இந்த மூன்று பேரும் பாதுகாப்பு வீரர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கிறது. மெஹ்தி காசெமி, சாலேஹ் முகம்மதி மற்றும் சயீத் தாவூதி ஆகிய 3 பேர், 'கொலை' மற்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சார்பில் செயல்பட்டார்கள்' என்ற குற்றத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரானின் கோம் பகுதியில் கைதிகளின் வழக்கறிஞர்கள் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் மூன்று பேரின் மரண தண்டனையும் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டதாக மீஸான் செய்தி முகமை தெரிவிக்கிறது. இரானில் மூன்று பேருக்கு பொது வெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
  21. 130 விட அதிகரிக்கலாம் என கருதுகிறேன், பல கட்டுமானங்கள் இரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக அழிக்கிறார்கள், போர் உடனேயே முடிவிற்Kஉ வந்தாலும் 5 மாதங்களுக்கு மேலாகும் நிலமையினை பழைய நிலைக்கு மீள பெற என ஒருவர் வானொலியில் பேசினார். இந்தியாவின் இராஜதந்திரம் என கூறி இரண்டு கப்பலினை இந்தியா தருவித்தது பற்றி சில செய்தியாளர்கள், இந்தியா யுவானில் கட்டணம் செலுத்தியே அதனை பெற்று கொண்டதாக கூறுகிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணவீக்கம் அதிகரிப்பிற்கெதிராக வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். பணவீக்கம் மிகையான பணமும் குறைவான பொருளும் காணப்படுவதால் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது, அதனை கட்டுப்படுத்துவதற்கு ஒர் கருவியாக வட்டி விகிதம் பயன்படுத்துவார்கள்.
  22. கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்! கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார். தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றார். இப்தார் நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு தொழுகையில் அவர் கலந்து கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டார். நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவுசெய்து அதை நம்பாதீர்கள். எல்லாம்வல்ல இறைவனின் அருளால் நாம் நினைச்ச டார்கெட்டை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லது நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார். தமிழகத்தில் எந்த கூட்டணியை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற பேச்சுகள் பல வாரங்களாக ஓடிக் கொண்டு இருந்தன. அதிலும் கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டில்லி சென்ற போதும் கூட அதிமுக பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தான் பேச்சுகள் பரவிக்கிடந்தன. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாது, மற்ற கட்சிகள் மத்தியிலும் தவெக மீது ஒரு சந்தேக கண்ணோட்டமே காணப்பட்டது. இதுபற்றி விஜய் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்தன. இப்போது, ‘கூட்டணி தொடர்பான அனைத்து பேச்சுகளும் வதந்தி, நம்பாதீர்கள், நம் தலைமையில் தான் ஆட்சி’ என்று அவராகவே அறிவித்து விட்டதால், 234 தொகுதிகளிலும் தவெக தனித்துதான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. https://athavannews.com/2026/1469143
  23. வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்! ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானி உயிர் தப்பி, தற்போது சீரான நிலையில் உள்ளார். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அந்த விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய மோதலின் போது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றை தெஹ்ரான் தாக்குவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இந்தக் கூற்றை வொஷிங்டன் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஈரானியத் தாக்குதல் என்று நம்பப்படும் ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானம் ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தரையிறங்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியும் சீரான நிலையில் உள்ளார் என்று கூறிய அவர், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய விடயம் F-35 லைட்னிங் II என்பது சாதாரண போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் வான் சக்தியின் முதுகெலும்பாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும் பரவலாகக் கருதப்படுகிறது. ஒரு விமானத்துக்கு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 19க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படும் அல்லது ஆர்டர் செய்யப்பட்ட F-35, உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும். இது மறைந்திருந்து தாக்கும் திறன், மேம்பட்ட உணர்விகள் மற்றும் வலையமைப்புப் போர் திறன்களை ஒருங்கிணைத்து, வான்வழிப் போர் நடத்தப்படும் விதத்தை அடியோடு மாற்றியமைக்கிறது. இதன் பிரதான விடயம் மறைந்திருந்து தாக்கும் திறனாகும். இந்த விமானம் அதன் வடிவம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளக ஆயுதக் கிடங்குகள் மூலம் ரேடார் கண்டறிதலில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விமானத்தை கண்காணிப்பதையோ அல்லது குறிவைப்பதையோ மிகவும் கடினமாக்குகிறது. https://athavannews.com/2026/1469336
  24. Today
  25. படத்தில் எங்க ஆமிக்காரரை காண இல்லை? ஆமிக்காரர் தானே வடக்க்கில் வாழும் பெருன்பான்மை சிங்கள மக்கள்.
  26. எங்களுக்கு தெரியாத வட கொரியாவை பற்றி எங்களில் ஒருவர் விபரித்துள்ளார். வாசித்துவிட்டு சத்தம் போடாமல் போகவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.