stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிங்கள அதிபர்களான சந்திரிக்கா மாமி மற்றும் மகிந்த மாமாவுடன் பீலஸ்தீன தலைவர் யாசிர் அராஃவத் 1997 https://www.bbc.com/sinhala/news/story/2004/11/041111_arafat_srilanka
-
என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (3).jpg
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (2).jpg
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (1).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (3).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (2).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (1).jpg
-
Sri Lankan muslims atrocities
-
asdsaw2.png
-
ltte boat.png
-
Othiyamalai massacre.jpg
-
kalmunai batticaloa pogrom by muslims.png
-
during split accord.jpg
-
Chempianpatru o1 nov 2008 (1).jpg
-
alampil fgb targetted 2008.jpg
-
alampil fake boat attack, 2008.jpg
-
ஆனந்தபுரத்தில் கிருஸ்ணன் கோவிலுக்கு அண்மையாக, 2009இல் மருத்துவ பிரிவின் மருத்துவமனை இயங்கியபோது விமான தாக்குதலுக்கு இலக்கா ஓரிடம்.jpg
-
ananthapuram.jpg
-
Chundikulam 2009 .jpg
-
MV Horizon of the Sea Tigers' Special Regiment.jpg
-
ltteboats.jpg
-
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 27-11-2007
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 19 02.12.1990 கரிகாலனின் லாண்ட்குறோசர் கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தது. அங்குள்ள தேவாலயத்தின் முன்றலிலே தான் கூட்டம் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்தனர். திரு தம்பிராசா அவர்கள் தலை மையில் கூட்டம் ஆரம்பமாகியது. உரை நிகழ்த்தியவர்களில் அனேகர் குமரப்பாவையே ஞாபகப்படுத்தினர். ஏனெனில் அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குமரப்பாவைத் தெரியும். திரு. கரிகாலன் அவர்கள் உரையாற்றும்போது “இன்றையநாள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். இந்திய ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய வல்லாதிக்க பூதம் எம்மை படுகொலை செய்த நாள்” என்று குறிப் பிட்டு இந்திய அரசின் தந்தி ரங்களுக்கு பலியாகாமல் எவ்வாறு போராட்டத்தை புலிகள் முன்னெடுத்துச் சென்றனர் என்பதை விளக்கினார். தொடர்ந்து தற்போதைய நிலைபற்றி அவர் பேசுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 11 பொலிஸ்நிலையங்களையும் 7 இராணுவ முகாம் களையும் தாக்கி வெற்றி பெறும் அளவுக்கு போராட் டத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம். போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பே இச்சாதனைகளுக்கு மூலகாரணம். எனவே சிறிலங்கா அரசு பெருமளவில் இராணுவத்தை குவித்துமக்களைப்படுகொலை செய்து அகதிகளாக அலையச் செய்வதன்மூலம் மக்களை எம்மிடமிருந்து அன்னியப்படுத்தி போராட்டத்தை முறியடிக்கலாம் எனக்கனவு காண்கிறது. ஆதலால் நாம் எந்தச்சூழ்நிலையிலும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இந்திய இராணுவத்துடன் நாம் நடத்திய போரில் 2000 சிப்பாய் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய போரில் 1500 சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் கால்களை இழந்துள்ளனர். இந்நிகழ்வுகளெல்லாம் போராட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. தமிழீழத்தை மீட்டெடுக்கும் படிக்கற்கள்இச்சாதனைகள்' என்று பேசினார். அடுத்து திரு. நியூட்டன்பேசினார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள சிரேஷ்ட போராளிகளில் ஒருவர் இவர். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்குச் சென்ற இவர் தொடர்ச்சியாக அப்பகுதியிலேயே விடுதலைக்காக தீவிரமாக உழைத்துவருபவர். “குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் மரணம் இயக்கத்தின் தன்மானத்திற்கு எடுத்துக்காட்டு. அவர்கள்பிடிபடும் போது ஆயுதம் இருந்தது. சயனைட் இருந்தது. அவர்கள் அப்போதே சண்டை பிடித்திருக்கலாம். சயனைட் அருந்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை இந்திய அரசு காப்பாற்றுமென நம்பினர். கடைசியில் இந்தியாவின் நம்பிக்கைத் துரோகத்தினாலேயே அவர்கள் சயனைட் அருந்த நேரிட்டது. பிற்பகல் 5 மணிக்கு சாகப்போகிறோம் என்பது நண்பகல் 12 மணிக்கே அவர்களுக்குத் தெரியும். எமதுபிராந்தியத் தளபதிகள் எதிரியின் முன்னால் கைகட்டி நின்று மறுமொழி சொல்லக் கூடாது என்பதற்காகவே சயனைட் அருந்தினார்கள் அந்த குமரப்பா வளர்த்த போராளிகளே இன்று மட்டக்களப்பில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது, யாழ்ப்பாணம் மாதிரி இங்கு ஏன் கொண்டுவர முடியாது? என சிலர் கருதலாம். அங்குள்ள புவியியல் நிலைமை வேறு இங்குள்ள நிலைமை வேறு. மட்டக்களப்பு போராளிகள் போராடத் தெரியாதவர்கள் அல்ல. உண்மையில் தமிழீழப் போராட்டத்தில் மட்டக்களப்பிலேயே கூடுதலான ஆயுதங்கள் எதிரிகளிடமிருந்து கைப் பற்றப்பட்டன. இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கின்றதென்றால் மட்டக்களப்புப் போராளிகளும் தான் அதில் பங்காளிகள். அவர்களும் அங்கு போராடியிருக்கிறார்கள். கோட்டையை மீட்டெடுக்க உதவிய ஆயுதங்களில் கணிசமானவை மட்டக்களப்பில் பெறப்பட்டவைதான். வெள்ளம் வராமல் ஒரு அணைக்கட்டை கட்டுகிறோம் அந்த அணைக்கட்டில் ஒரு இடத்தில் வெடிப்பு ஏற்பட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். அதே போன்ற நிலைமைதான் மட்டக்களப்பிலும் ஏற்பட்டது. நாளை, வியட்னாம் நிலைமை போல இங்கும் உரு வாகலாம். நாளாந்த வேலை களைக்கவனித்துக் கொண்டு இருப்பார்கள் மக்கள்: இராணுவம் வந்தவுடன் சண்டை செய்வார்கள். பின்னர் தங்கள் வேலைகளைக் கவனிப்பார்கள். அந்த நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பேசினார். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு இராணுவ அட்டூழியங்களுக்குப் பின்னரும் எதற்கும் அஞ்சாமல் இவ்வளவு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று. போரா ளிகளுடன் மிகவும் அன்னியோன்னியமாக நடந்து கொண்டார்கள் மக்கள். அங்கிருந்து புறப்பட்டோம். மகிழடித்தீவுச் சந்தியை அடைந்தோம். ஏற்கெனவே எனக்குப் பழக்கமான பலர் அங்கே காணப்பட்டனர். அவர்களில் கணிசமானோர் எழுவான்கரைக் கிராமமான ஆரைப்பற்றை என்ற கிராமத்தைச் சேர்த்தவர்கள். சூரியன் உதிக்கும் திசையில் உள்ள கிராமங்கள் எழுவான்கரை என அழைக்கப்படும். கடலுக்கும் வாவிக்கும் இடையில் உள்ள கிராமங்கள் இவை. சூரியன் மறையும் திசையில் உள்ள கிராமங்கள் படுவான் கரை என அழைக்கப்படும். வாவிக்கு மேற்குப் பக்கமாக உள்ள கிராமங்கள் இவை. ஆரைப்பற்றை கிராமத்தில் இராணுவமுகாம் இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் ஆற்றைக் கடந்து படுவான் கரைக்கு வந்துள்ளனர். ஆற்றுக்கு அப்பால் மனைவி, குழந்தைகள். இவர்கள் ஆற் றங்கரையை அண்டிய மகிழடிச்தீவுச் சந்தியில், அனைவரும் ஆற்றங்கரையையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர். குடும்பங்கள் சிதறிய நிலையில் அவர்கள். நாங்களும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். சாதாரணமாக எப்போதும் ஐந்து தோணிகளாவது ஆற்றில் தென்படும். சிலர் மீன் பிடித்துக்கொண்டிருப்பர். எழுவான்கரைக்கும் படுவான்கரைக்குமிடையில் போக்கு வரத்து நடந்துகொண்டிருக்கும். ஆனால் இப்போதோ எவருமே காணப்படவில்லை. ஆற்றைப்பார்த்தேன். ஓடிக் கொண்டிருந்தது தண்ணீராகத் தெரியவில்லை. பிரிந்திருக்கும் குடும்பத்தினரின் கண்ணீராகவே எனக்குத் தெரிந்தது. (தொடரும்)
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 19 30-11-1990 விசுவுடன்போய்க் கொண்டிருக்கையில் திரும்பிப்பார்த்தேன்: ஒரேவெளி முன்னாலும் வெளி. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஒரே வெளிக்குள்ளாலேயே சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் புதுவையண்ணா யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வல்லை வெளியைப் பார்த்துவிட்டு “வல்லை வெளி தாண்டிப் போகுமோ’?" என்றுபாடினார். இந்த வெளியைப் பார்த்தால் தான் உண்மையான வெளி எதுஎன்பது தெரியும் என்றேன். அப்போது யோகன் "அது வல்லை வெளி. இது வானவெளி'' என்றார். யாழ்ப் பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று கொஞ்சக் காலம் போராடி விட்டுத் திரும்பிய ஒரு போராளியிடம் மட்டக்களப்பைப் பற்றிக் கூறச்சொன்னபோது “மட்டக்களப்பில் ஓடினால் வெளி, விழுந்தால் வெடி” என்று கூறியது ஞாபகத்துக்குவந்தது. 1987 ஆம் ஆண்டுவரை சயனைட் மூலம் வீரமரணமடைந்த போராளிகளின் தொகை மட்டக்களப்பில் தான் கூடுதலாக இருந்தது. ஏனெனில் அங்குள்ள இயற்கையமைப்பு பெரும் பாலும் வெளிகள் உள்ள பிரதேசமாக இருப்பதால் போராளிகளுக்குச்சாதகமாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலுமதில் தாண்டினால் ஒரு போராளியைப்பிடிக்க முடியாது. அங்குள்ள நிலைமை அப்படியல்ல; இதனாலேயே சயனைட் அருந்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன. இலுக்குவட்டை, தீலிவட்டை என்னும் இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தோம். இங்குள்ள அகதிகள் பெரும்பாலும் கிழான் சந்திவெளிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள், சட்டக்கண்டன் முன்மாரி என்னும் இடத்தில் பொம்மர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்தும் இருவர் படுகாயமடைந்துமிருந்தனர். பெரியதம்பி சண்முகம் என்பது குடும்பத் தலைவரின் பெயர். இலுப்பையடி முன்மாரி என்னுமிடத்தை பார்த்தோம் அங்கும் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கியி ருந்தனர். முறக்கொட்டாஞ்சேனை முகாமுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 35 வயதான ஒரு குழந்தைக்குத் தகப்பனான தம்பிப்பிள்ளை கந்தசாமியின் மனைவி, சித்தாண்டிக்கோயில் முகாமில் கைது செய்யப்பட்ட துரைசிங்கம் என்பவரின் தாய் என்பவர்களைச் சந்தித் தோம். “முறக்கொட்டாஞ் சேனை முகாமில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டவர்கள்?” என்று கேட்டேன். “முதல் தரம் 6, அடுத்ததரம் 15, அடுத்த தரம் 36, அந்த முப்பத்தாறு பேரில் தான் தனது மகனும் ஒருவர் என்று சொன்னார் தாய். "தலையாட்டி மூலமாகவா கைது செய்யப் பட்டனர்?” என்று கேட்டேன். "இல்லை ஒரு சைசான ஆளைப் பார்த்து ஏற்றினார்கள்" என்று சொன்னார்கள். நற்குணம் உதயகுமார் ஆகிய இருபிள்ளைகளை சித்தாண்டிக்கோயில் அகதி முகாமில் பறி கொடுத்த தாயையும் சந்தித்தோம். புஷ்பராணி என்பது அவரது பெயர். “இவர்கள் கைது செய்யப்பட்ட போது முகாமுக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்?” என்று கேட்டேன். “செஞ்சிலுவைச்சங்கம் தான்” என்றார்கள். இப்போது அவர்கள் உங்கள் பிள்ளைகளின் விடுதலை சம்பந்தமாக என்ன சொல்கிறார்கள்? என்று கேட்டேன். எழுதித்தருவதுமட்டும்தான் உங்களது வேலை. விடுதலை சம்பந்தமான விஷயம் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள் என்றார். எவ்வளவு அலட்சியமான பதில். தமது பொறுப்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தான் இவர்கள் உள்ளனர். இப்படிக் கைது செய்யப்பட்டவர்களை யாராவது போய்ப் பார்க்க முடியுமா? என்று கேட் டேன் இதுவரை கைது செய்யப்பட்ட எவரையுமே பார்க்க முடியவில்லை என்றார். அப்படியே பெருமாவெளிக் கட்டு என்னும் இடத்தை அடைந்தோம். அங்கே நான்கு சின்னத்தடி நட்டு இரண்டு பனைவடலி ஓலையால் வேயப் பட்டிருந்த ஒரு குடிசையைக் கண்டேன். விளையாட்டுக்காக சிறுபிள்ளை கள் அமைக்கும் கொட்டில்தான் அது. அதற்குள் ஒருதாய் இரு குழந்தைகளை அணைத்தபடி இருந்தாள். இப்படியான நிலைமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய நான் அந்தத் தாயை அணுகி இதுதான் உங்கட வீடா' என்று கேட்டேன். இல்லை. நாங்கள் அந்த மரத்தடியிலதான் கிடக்கிறம். இது வேற ஆக்கள் இருக்கிறது. நாங்கள் வெயிலுக்காக வந்திருக்கிறம் என்றார் அவர். நான் நினைப்பதைவிட மோசமான நிலை. அங்கிருந்த இன்னொருவரைச் சந்தித்தேன். அவருடன் உரையாடினேன். உங்க பெயர் என்ன? காளிக்குட்டி ஆறுமுகம். எந்த இடம்? வீரமுனை. வீரமுனையைவிட்டு ஏன் இங்கு வந்தீர்கள்? வீரமுனையில் 300பேரை இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் கைது செய்து கொண்டு போனார்கள். வெட்டிக்கொல்கிறார்கள், அதனால் தான் இங்கு வந்திருக்கிறோம். வீரமுனையில் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள்? அங்குள்ள சிந்தாத்துரைப் பிள்ளையார் கோயிலில். இதில் உங்களது உறவினர்களும் இருக்கிறார்களா? எனது தம்பிமார் மூவர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது பெயர், வயது? உலக நாதன் 30வயது. யோகராசா 28வயது, நவரட்ணம் 26வயது. இவர்கள் திருமணமானவர்களா? உலகநாதன் மட்டும் திருமணமானவர். இவருக்கு ஒரு பெண்குழந்தையும் இரண்டு ஆண்குழந்தைகளும் உண்டு. நீங்கள் மட்டக்களப் புக்கு வந்து எவ்வளவு காலம்? 3மாதம். இவ்வளவு நாட்களும் எங்கேயிருந்தீர்கள்? சித்தாண்டிக் கோயிலில் அகதி முகாமில். அங்கே சாப்பாடு, வசதிகள் எப்படி? 3 மாத காலத்துக்கு 13கிலோ மாவும், 6கிலோ அரிசியும் எமது குடும் பத்துக்கு தந்துள்ளார்கள். வேறெதுவும் கிடைக்கவில்லை. கொண்டு வந்த பொருள்களையெல்லாம் விற்று உடுத்த உடுப்புடன் இருக்கிறோம். தற்போது வீரமுனை நிலைமை என்ன மாதிரி? கிராமத்தில் ஒருவருமே இல்லை: அங்கு முஸ்லிம் அதிகாரம்தான் இருக்கிறது. அதனால் இராணுவம் தமிழர்கள் மீது வெறியாட்டம் ஆடுகிறது. அந்தப் பகுதியில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்? முந்நூறு பேருக்குமேல் பெண்கள் குழந்தைகளைக் கூடவெட்டிக் கிணற்றில் போட்டிருக்கிறார்கள். உடற்கட்டுள்ள ஆண்கள், கல்வியறிவு மிக்கவர்கள். எல்லோரையும் தெரிந்தெடுத்துக் கொல்கிறார்கள். இங்கே நிலைமை என்ன மாதிரி? சாப் பாடு இல்லை. மருந்து இல்லை நோயினால் குழந்தைகள் அவஸ் தைப்படுகிறார்கள். இப்போது வீரமுனை நிலைமை பற்றி அறிந்தீர்களா? கட்டடத்தை உடைத்து ஜன்னல், கதவு போன்றவற்றை முஸ்லிம் ஊர் காவல்படையினர் கொண்டு போகிறார்கள் என்றார் அவர். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம். கரிகாலனின் அலுவலகம் சென் றோம். அங்கு ஒரு தகப்பன் தமது மகளுடன் வந்திருந்தார். "தம்பி! இது என்ட மகள். இவள் நல்லாப்படிப்பாள். எவ்வளவோ கஷ்டப்பட்டு இவளைப் படிப்பிச்சன், ஆனா இப்பபோராட ஆக்கள் வேணும். அதால இவளை உங்களிட்ட ஒப்படைக்கிறேன் போராட்டம் முடியிறபோது இவள் உயிரோட இருந்தால் இவளைப் படிப்பிச்சுப் போடோணும்" என்றார். பொதுவாகளே தகப்பன்மார் பெண்பிள்ளைகளில் தான் கூடிய பாசம் வைத்திருப்பார்கள். பெண்பிள்ளையையே இப்படி ஒப்படைக்க ஒரு தகப்பன்முன் வருகிறார் என்றால்... இது தான் மட்டக்களப்புமண்ணின் மகிமை. படிப்பைக் காரணம் காட்டி பிள்ளைகளைப் பிரித்தெடுக்கும் எமதுசமூக அமைப்புடன் ஒப்பிடுவதே தவறு. (தொடரும்)
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 27-11-2007
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இலங்கையிலுள்ள உறவுகள் அவுஸ்ரேலியா எவ்வளவு போகுது என கேட்டால் வங்கியில் 204 என்பார்கள், அதாவது ஒரு அவுஸ்ரேலிய நாணயம் 204 இலங்கை நாணய பெறுமதி கொண்டது. எந்த ஒரு நாணயத்தின் மதிப்பும் தனிய கணிக்கப்படுவதில்லை அதனுடன் இன்னொரு நாணயத்தின் பெறுமதியுடன் இணைத்து கணிக்கப்படுகிறது. குறித்த இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் இடம்பெறும் போது அந்த வர்த்தகங்களின் பெறு பேறாக வர்த்தக நிரம்பல் அல்லது வர்த்தக நிலுவை ஏற்படும், வர்த்தக நிலுவை ஏற்பட்டால் குறித்த நாடு தனது நாணயத்தினை விற்று நிலுவையினை செலுத்த வேண்டும் அதனால் குறித்த நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும், அதனால் குறித்த நாணய வீழ்ச்சி அடைந்த நாட்டின் ஒரு பொருள் அதிக நாணய பெறுமதி கொண்ட வர்த்தக பங்காளி நாட்டின் குறித்த ஒரு பொருளின் விலையுடன் ஒப்பிடும் போது விலை மலிவாக காணப்பட விலை குறைவானமையால் நாணய பெறுமதி அதிகம் கொண்ட்ட நாட்டினர் அவர்களின் பொருளை வாங்குவார்கள், அப்படி வாங்கும் போது தற்போது வர்த்தக நிலுவையிலிருந்து வர்த்தக நிரம்பல் ஏற்படும், இப்படி குறித்த நாடுகளுக்கிடையே இயல்பாக சமநிலையாகும் (automatic stabilizer) தன்மை கொண்டது Free float. ஆனால் இந்தியா போன்ற முகாமைத்துவ மிதக்கவிடப்பட்ட (Managed float) நாணயக்கொள்கையினை கடைப்பிடிக்கும் நாடுகள் தமது உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காகவும் வேறு பிற காரணங்களுக்காவும் வலிந்து நாணய பெறுமதியினை கட்டுப்படுத்துவர்.
-
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு
இந்த மனிசன்தான் ஏதாவது…..?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை இரண்டு வகையானவை. Free float . Managed float இலங்கை மற்றும் பல மேற்கு நாடுகள் முதலாவது மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கையினையும், இந்தியா போன்ற சில ஆசிய நாடுகள் இரண்டாவது மிதக்கவிடப்பட்ட கொள்கையினை பின்பற்றுகின்றன. Managed float இனை Dirty float என ஏன் அழைக்கிறார்கள்?
- Today
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ? எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் . பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
உரிமை உள்ளவர்கள் இலங்கை அருகில் உள்ளது சிங்களவர்கள் கிந்தி பாட்டை ரசித்து கொண்டாடுவார்களே தவிர நம்பி நம்ம வடகிழக்கு தமிழர்களின் கண்மூடித்தனமாய் விசுவாசம் போல் ஏமாற மாட்டார்கள் தங்களின் இந்திய அரசியலில் மிக தெளிவாய் இருப்பார்கள் . உதாரணத்துக்கு இந்திய அரசின் உசுபேத்தளில் நம்மவர் திருகொணோஸ்வரருக்கு மிகபெரிய காண்டா மணி இங்கிலாந்தில் வைத்து செய்து அங்கு கொண்டு சென்றார்கள் கடைசியில் சிங்கள அரசு மறுப்பு தெரிவிக்க கொண்டு போன மணி சேமிப்பு கிடங்கில் கிடக்கு . இப்படி டெல்லியின் இயலாமை வெள்ளிடைமலை.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
ஊரிலை நல்லதண்ணி கிணத்துக்காரன் கையில் திடீர் என்று பணம் கிடைத்தால் என்ன செய்வான் ? நாலு பக்கமும் சுவர் இரண்டு ஆள் உயரத்துக்கு வைத்து அந்த நல்ல தண்ணியை தான் மட்டுமே அனுபவித்து கொண்டாடுவான் . அப்படி ஆகா ஓகோ எனும் அளவுக்கு சிங்களம் பெரும் பணக்காரனா மாற கனிம மலை வெட்டுபவர்கள் விடுவார்களா ?- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த அடிப்படை ஆய்வு முறையிலான வர்த்தகத்தினை பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் வர்த்தக முறைமையினை பயன்படுத்த உள்ளேன் (எந்த வித காப்புரிமைகளையும் மீறாத வகையில், அவ்வாறு காப்ப்புரிமை மீறல்கள் காணப்படும் பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டுமாறு கள உறவுகளிடம் கேட்டுக்கொள்கிறேன், அதனை உடனடியாக நீக்க). உங்கள் ஆக்கபூர்வ பங்களிப்பினை வழங்கவும்.- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுவரை 4286 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது - ஹர்ஷன சூரியப்பெரும 19 Dec, 2025 | 06:07 PM (எம்.மனோசித்ரா) 'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுரையில் 4286 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் 3400 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது அந்த தொகை 4286 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 13.8 மில்லியன் டொலராகும். இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பொருள் மற்றும் சேவை ஒத்துழைப்புகளுக்கு அப்பால் கிடைக்கப் பெற்றதாகும். இதுவரையில் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உதவிகள் பொருட்களாகவும், சேவையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 43 நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. இதேவேளை ஸ்ரீலங்கள் எயாலைன்ஸ் கடன் மறுசீரமைப்பிற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/233842- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
போரினை நிறுத்தி சமாதானமாக சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை, அதற்கான காரணமாக நான் கருதுவது அந்தந்த நாடுகளின் அரச தலைமைகளின் தோல்விகளை திசை திருப்ப அவர்கள் இந்த மோதலை பயன்படுத்துகிறார்கள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). ஒரு நாட்டின் பற்றாக்குறை பாதிட்டின் அளவு 3% மேல் இருந்தால் அந்த நாடு பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகும் நாடாகும் என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாதீட்டு பற்றாக்குறை 3% இற்குள் இருக்க வேண்டும் எனும் நியதியினை உருவாக்கியிருக்ககூடும் (இதனை பற்றி ஆழமாக தெரியவில்லை, ஆர்வமுமில்லை). ஜேர்மனியின் பாதீட்டு பற்றாக்குறை 2025 இல் 3.1% என கூறப்படுகின்றது ஆனால் 2026 இல் 4% - 5% வரை பாதீட்டு பற்றாக்குறை ஏற்படலாம் என கூறப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இசைவாக செயற்படுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயங்களை கண்டும் காணாது விடலாம் எனும் முயற்சியாக இருக்கலாம். போரினால் ஏற்படும் இலாபம் ஒரு குறுகிய இலாபம், அதனை அரசியல்வாதிகள் தமது பதவிக்காலத்தினை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகிறார்கள், ஒரு நீண்டகால நோக்கில் ஜேர்மனிக்கு மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே இந்த போர் ஒரு தேவையற்ற இழப்பான போர், இந்த உலகிற்கும் தான், தமது குறுகிய கால இலாபங்களிற்காக சாதாரண மக்களை கவர்வதற்காக கூறப்படும் கதைகளால் ஈர்க்கப்பட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இந்த அரசியல்வாதிகளின் மக்களாதரவினை பாருங்கள். https://yougov.co.uk/politics/articles/53597-how-popular-are-national-leaders-in-europe-november-2025- மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு 19 Dec, 2025 | 02:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்) மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (19) பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. எமது கொள்கை பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை அமைத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதிய அரசியலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இது தொடர்பான காலப்பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும். அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 2017/17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய எல்லை நிர்ணயம் தொடர்பிலும், தேர்தல் தொகுதிகள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும். இதுவரையில் எல்லை நிர்ணய நடவடிக்கை முடிவடையாத காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இதனால் இதில் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். 2026ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான குழுவொன்றுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான சட்டவரைபுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/233835- தமிழக முதல்வரை சந்தித்த இலங்கை பிரதியமைச்சர் பிரதீப்
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சந்திப்பு Published By: Vishnu 19 Dec, 2025 | 10:27 PM இலங்கை மற்றும் தமிழ்நாட்டு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பின் போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதியமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது. மலையக மக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்து தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும் என முதல்வர் உறுதியளித்தார். கடந்த 27ஆம் திகதி வீசிய தித்வா புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவும், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக தமிழக அரசின் குறுகிய கால மற்றும் நீண்டகால ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலையக மக்களுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமைக்காக தமிழக முதல்வர் இலங்கை அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233882- 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரை 47,703 பேர் கைது! 19 Dec, 2025 | 04:40 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 47703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இதுவரை 48085 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 276 கிலோ 374 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 1002 கிலோ 923 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 05 கிலோ 736 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 1411 கிலோ 936 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2899514 கஞ்சா செடிகளும், 65 கிலோ 836 கிராம் குஷ் போதைப்பொருளும், 40 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 101201 போதை மாத்திரைகளும், 17 கிலோ 571 கிராம் 861 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 86 கிலோ 373 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 1130 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233860- வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்
வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் 19 டிசம்பர் 2025, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்? தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76,755 தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832 தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2. 77 கோடி ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி மூன்றாம் பாலினம்: 7,191 மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம் பட மூலாதாரம்,TNelectionsCEO சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூரில் என்ன நிலவரம்? அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, 1,19,489 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர், 1,08,360 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 3,99,159 வாக்காளர்கள் குடிபெயர்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர், 23,202 வாக்காளர்கள் இரட்டைப் பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோலவே, விருதுநகர் மாவட்டத்தில், 1,89,964 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் வரைவுப் பட்டியலைப் பொருத்தவரை, 20,98,561 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், 2.06 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 29,62,449 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன. இதேபோல, ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 23% பெயர்கள் நீக்கம் தூத்துக்குடியில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான கணக்கின்படி, அம்மாவட்டத்தில் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 12,54,525 வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், 1,39,587 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில், 3,24,894 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவுப் பட்டியலில் தற்போது 16,09,553 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 23% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் மணிஷ் நாரணவரே வெளியிட்ட வரைவுப் பட்டியலின்படி, தற்போது 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் 18,81,144 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை மதுரையில், 23,69,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 3.80 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,03,917 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், 81,515 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,கோப்புப் படம் தொடங்கியது எப்போது? இந்தியாவில், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இரண்டு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. வரைவுப் பட்டியலில் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் மூன்று முறை சென்று விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே வரைவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25171yzy9o- அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 19 Dec, 2025 | 05:38 PM அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டத்தால் இனி அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ் க்றீன் கார்ட் விசா திட்டத்தை இடைநிறுத்த அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) உத்தரவிட்டுள்ளார். அத்துடன் “நெவ்ஸ் வாலண்டே போன்ற கொடூரமான நபர் நம் நாட்டுக்குள் வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது” என்றும் நோயம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக பன்முகத்தன்மை விசா லொட்டரி திட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த ட்ரம்ப். அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதிபட அறிவித்திருக்கிறார். https://www.virakesari.lk/article/233868- இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி
IMF கொடுத்தா அமெரிக்கா கொடுத்த மாதிரியே.- 19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் Published By: Vishnu 19 Dec, 2025 | 07:58 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் விளையாட்டுத்துறை நகரில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முன்னாள் சம்பியன்களான இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன. துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று நடைபெற்ற 20 ஓவர்களாக மட்டுப்படுத்தபட்ட முதலாவது அரை இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வெற்றிகொண்டது. அப் போட்டியில் ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தன. துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் அப்துல் சுப்ஹானின் 4 விக்கெட் குவியல், சமீர் மின்ஹாஸ் குவித்த அரைச் சதம் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. சீரற்ற காலநிலை காரணமாக இந்த இரண்டு போட்டிகளிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இலங்கை - இந்திய அரை இறுதி முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இப் போட்டி 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதால் அதிரடியைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த இலங்கை இளையோர் அணியினர் ஆரம்பத்திலிருந்தே ஓட்டங்களை வேகமாகக் குவித்த வண்ணம் இருந்தனர். துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 42 ஓட்டங்களையும் அணித் தலைவர் விமத் தின்சார 32 ஓட்டங்களையும் செத்மிக்க செனவிரட்ன 30 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்திய இளையோர் அணியின் ஆரம்பம் மோசமாக இருந்தது. அதிரடி ஆட்டக்காரர்களான அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே (7), வைபவ் சூரயவன்ஷி (9) ஆகிய இருவரையும் முதல் நான்கு ஓவர்களுக்குள் விமத் நிம்சார ஆட்டம் இழக்கச் செய்தார். ஆனால், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 87 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றி அடையச் செய்தனர். விஹான் மல்ஹோத்ரா 61 ஓட்டங்களுடனும் ஆரோன் ஜோர்ஜ் 58 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் விமத் நிம்சார 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் - பங்களாதேஷ் அரை இறுதி இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 26.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சமியுன் பசிர் 33 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் 20 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களைத் தொடவில்லை. பந்துவீச்சில் அப்துல் சுப்ஹான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுசெய்பா அஹ்சான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதலாவது ஓவரிலேய ஹம்ஸா ஸஹூர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (1 - 1) ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் சமீர் மின்ஹாஸ், உஸ்மான் கான் (27) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமடையச் செய்தனர். தொடர்ந்து சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹூசெய்ன் ஆகிய இருவரும் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். சமீர் மின்ஹாஸ் 69 ஓட்டங்களுடனும் அஹ்மத் ஹுசெய்ன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். https://www.virakesari.lk/article/233875- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 67 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 67 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அசோக மன்னனின் தலைமையில், இரண்டாம் புத்தமத சபைக்கு நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது சபை நடந்தது. மூன்று பௌத்த சபைகளும் தேரவாத பௌத்தம் மற்றும் பல்வேறு பிரிவுகளைப் பற்றியவை. அசோகனின் தந்தையான பிந்துசாரனுக்கு நூற்றியொரு பெருமைமிக்க பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் எல்லோரிலும் வீரத்திலும், பலத்திலும், புகழிலும், அதிசய சக்திகளிலும் சிறந்தவனான அசோகன் என்பவன் விளங்கினான். பல்வேறு தாய்மார்களுக்குப் பிறந்த தொண்ணுாற்றி ஒன்பது சகோதரர்களையும் கொன்றபோது, அனைத்து ஜம்புத் தீவின் [Jambudvīpa] மீது பிரிக்கப்படாத இறையாண்மையை வென்றார் என்று 5-20 கூறுகிறது. ஜம்புத் தீவு என்பது உள்ளூர் மக்களாலும் அருகில் உள்ள இலங்கை போன்ற தீவு மக்களாலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஒரு பெயராகும். இதனால், அசோகா மன்னன் ஆரம்பத்தில் பொல்லாத அசோகன் என்று அழைக்கப்பட்டான். அதிகாரம் 5 - 189 பார்க்கவும். அது, அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர். பின்னல் அவனுடைய பக்திச் செயல்களின் காரணமாக அவன் தர்ம அசோகன் எனப் பெயர் பெற்றன் என்கிறது. அதாவது பௌத்தத்தைத் தழுவுவதற்கு முன்பு ஒருவர் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அந்த நபர் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட தருணத்தில் அனைத்து பாவங்களும் கழுவப்படுகின்றன என்பதை இங்கு காண்கிறோம். என்றாலும் இங்கு நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக இந்த தர்க்கம் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, இலங்கை காலவரிசை வரலாறு அல்லது காலக்கோவையில் பல்வேறு இடங்களில் இந்த தர்க்கம் மீண்டும் மீண்டும் வருவதையும் காண்கிறோம்? துட்டகாமினி & எல்லாளன் கதைக்கு போனோம் என்றால், இதற்கு இணையான தர்க்கத்தை அங்கு மீண்டும் காணலாம். இங்கு துட்ட என்பது "கீழ்ப்படியாமை" என்பதைக் குறிக்கிறது. மகாவம்சத்தில், துட்டகாமினி இலங்கையை ஒரே பௌத்த ஆட்சியின் கீழ் இணைக்க தமிழ் மன்னன் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார். எல்லாளன் ஒரு நியாயமான மற்றும் நேர்மையான ஆட்சியாளராக இருந்த போதிலும், ஒரு இந்து என்பதால், இதை ஒரு நீதியான போராக வரலாற்றாசிரியர்கள் வடிவமைத்தனர். ஒரு கடுமையான போரில் வயதில் மிகவும் மூத்த எல்லாளனை தோற்கடித்த பின்னர், துட்டகாமினி இரத்தம் சிந்தியதற்காக மிகவும் வருந்தினார், குறிப்பாக ஒரு நீதியுள்ள அரசன் எல்லாளன் உட்பட ஏராளமான மக்களைக் கொன்றதால். பௌத்த துறவிகள் துட்டகாமினிக்கு ஆறுதல் கூறி, பௌத்த மதத்திற்கு சேவை செய்த அவரது நடவடிக்கைகள் நியாயமானவை என்று கூறினர். துட்டகாமினி உண்மையில் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றார் என்று மகாவம்சம் கூறுகிறது - அவர் கொன்ற "உண்மையான" நபர்கள் ஆன்மீக வளர்ச்சியை அடைந்தவர்கள் மட்டுமே, மீதமுள்ளவர்கள் "வெறும் நம்பிக்கையற்றவர்கள்" அதாவது இந்துக்கள். (அவர்களின் மரணம் குறைவான தார்மீக எடையைக் குறிக்கிறது). இதைத் தொடர்ந்து, அவர் ருவன்வெலிசாய ஸ்தூபியை நிர்மாணித்தல் உட்பட பல புண்ணிய செயல்களில் ஈடுபட்டார், பௌத்தத்தைத் தழுவுவதும் அதன் பிரச்சாரத்திற்காக உழைப்பதும் கடந்த கால தவறுகளில் ஒன்றைத் தூய்மைப்படுத்துகிறது என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்படி பல உதாரணங்கள் காட்டலாம். புகழ் பெற்ற அசோகன் பிரிவினையற்ற அரசுரிமையை அடைந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு, பாடலிபுத்திர நகரத்தில் தன்னை மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். முடிசூட்டிக் கொண்ட பிறகு அவனுடைய ஆணை நேரடியாக ஆகாயத்திலும் பாதாளத்திலும் கூட ஒரு யோசனை அளவுக்குப் பரந்திருந்தது. நாள் தோறும் தேவர்கள் அனோதத [Anotatta] ஏரியிலிருந்து எட்டு மனிதச் சுமை நீர் கொண்டு வரு வார்கள். அரசன் அதைத் தன்னுடைய குடி மக்களுக்குக் கொடுப்பான். இமாலயத்திலிருந்து தேவர்கள் பல ஆயிரம் பேர்களுக்குப் போதுமான நாகக் கொடியின் குச்சிகளைப் பல் துலக்கக் கொண்டு தருவார்கள். நிறத்தாலும் மணத்தாலும் சுவையாலும் நிறைவுற்ற, உடல் நலனுக்கு உகந்த மாம்பழம் முதலான கனிகளையும் அங்கேயிருந்து கொண்டு வருவார்கள். மாருத தேவதைகள் பஞ்சவர்ணத்தாலான உடைகளையும், [ஐந்து வண்ண ஆடைகளையும்] துடைப்பக்குட்டைகளுக்கான [napkins] மஞ்சள் பொருளையும், சந்திரகாந்த ஏரியிலிருந்து தேவ பானத்தையும் [celestial drink from the Chaddanta-lake] கொண்டு வந்தார்கள். நாக நாட்டிலிருந்து நாகர்கள் மல்லிகை மலர் போன்றதும் இழை தெரியாததுமான உயர்ந்த ஆடைகளையும், தெய்விகத் தாமரை மலர்களையும், சாந்து வகைகளையும் கொண்டு வருவார்கள். கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த [Chaddanta-lake] ஏரியிலிருந்து தொண்ணுாருயிரம் வண்டி பாரம் நெல் மணிகளைக் கொண்டு வந்தன. சுண்டெலிகள் இந்த நெல்மணிகளை உமி நீக்கித் தவிடு போக்கி நொறுங்காமல் சுத்தமான அரிசியாகச் செய்தன. அதைக்கொண்டு அரச குடும்பத்தினருக்கு உணவளிக்கப்பட்டது. தேனீக்கள் இடைவிடாது அவனுக்காகத் தேனைச் சேகரித்துத் தந்தன. பட்டறைகளில் கரடிகள் சம்மட்டி அடித்தன. ஒயிலும் இனிய குரலும் படைத்த காரவிகப் பறவைகள் வந்து அரசனுக்கு இன்னிசை அளித்தன. தான் அரசனுனதும் அசோகன் தன் தாய் வயிற்றில் பிறந்த தம்பியான தீசனை ராஜப் பிரதிநிதியாக நியமித்தான். பத்திமானான அசோகனின் பட்டாபிஷேகம் இங்கு முடிகிறது. என்று 5 - 22 தொடக்கம் 33 வரை மகாவம்சம் கூறுகிறது. பொதுவாக, அதிசயமான நிகழ்வுகள், யாரோ ஒருவரின் சில நல்ல செயல்களைப் பாராட்டும் வகையில், தெய்வீக செயல்களால் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. அசோகனால் சுமார் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கொல்லப்பட்ட பின்பும், இவ்வளவு அதிசயமான நிகழ்வுகளால், தெய்வீக ஆசீர்வாதத்துடன், அசோகன் கௌரவிக்கப்பட்டார் என்பதை அறியும் பொழுது, ஆச்சரியப்படாமல் யாராவது ஒருவர் இருப்பாரா? ஆனால் இருந்துள்ளது? அது தான் மகாநாம தேரரின் எழுத்தாற்றல்! மேலும், தீபவம்சத்தின்படி தேவநம்பியதிஸ்ஸரின் முடிசூட்டு விழாவின் போதும் இதே போன்ற அதிசயங்கள் நடந்தது தெரிய வருகின்றன. தீபவம்சம் 11 - 14 முதல் 24 வரை பார்க்கவும். அந்த மன்னனின் (அதாவது அசோகனின்) பதினேழு வருடங்களும், அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களும் கழிந்தபோது, குளிர்காலத்தின் இரண்டாவது மாதத்தில், புனிதமான ஆசாஹா நட்சத்திரக் கூட்டத்தின் கீழ் [under the most auspicious Nakkhatta of Asāḷhā], தேவானம்பியதிஸ்ஸ தம்பபாணியின் (இலங்கை) ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். சாட்டா மலையின் [Chāta mountain] அடிவாரத்தில், மூன்று குறிப்பிடத்தக்க மூங்கில் கம்புகள் காணப்பட்டன - முதலாவது - தங்க கொடியுடன் வெள்ளி போன்ற வெண்மையாக பளபளக்கிறது, இரண்டாவது - பல்வேறு வண்ணங்களில் மலர் போன்ற உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மூன்றாவது - பறவைகள் மற்றும் விலங்குகளை, அவற்றின் இயற்கையான சாயல்களில் காட்டுகிறது. மேலும் குதிரை முத்து, யானை முத்து, தேர் முத்து [horse pearl, elephant pearl, chariot pearl] மற்றும் பிற உட்பட எட்டு வகையான அரிய முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது முடிசூட்டு விழாவின் ஆடம்பரத்தால் ஈர்க்கப்பட்ட மலைப்பகுதி மற்றும் கடல் மக்கள் இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை ஏழு நாட்களுக்குள் மன்னரிடம் கொண்டு வந்தனர். அரிய மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தேவானம்பியதிஸ்ஸ, ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், உன்னதமானதாகவும் உணர்ந்து, தனது நேர்மையான செயல்களின் வெகுமதிகளாகக் அவ்வற்றைக் கண்டார். இந்த பொக்கிஷங்களைப் பெறுவதற்குத் தகுதியுடையவர், தனது அன்புக்குரியவர்களில்-தன் பெற்றோரா, உடன்பிறந்தவர்களா, உறவினர்களா அல்லது நண்பர்களா, யார் என்று அவர் ஆச்சரியப்பட்டார். பின்னர் இளவரசர் அசோகனை நினைவு கூர்ந்தார் என்கிறது. Part: 67 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The Third Council took place one hundred and eighteen years after the Second Buddhist Council under the aegis of the king Asoka. All the three Buddhist Councils are about the Theravada Buddhism, and various sects. It is stated here that Bindusara, Asoka’s father, had one hundred and one glorious sons, and Asoka killed ninety nine of them, his half brothers, 5-20 [He, when he had slain his 20 ninety-nine brothers born of different mothers, won the undivided sovereignty over all Jambudlpa.] The King Asoka was initially known as wicked Asoka, 5 - 189, [189 Dhammasoka might be converted. Candasoka (the wicked Asoka) was he called in earlier times, by reason of his evil deeds ;] and then became Dhammasoka, 5 - 190 [he was known as Dhammasoka (the pious Asoka) afterwards because of his pious deeds]. This hidden logic, as stated elsewhere, is running throughout the Lanka chronicles: However bad one might be prior to embracing the Buddhism, all the sin are washed off the moment that person embraced the Buddhist Faith. Asoka assumed the power by killing some or all of his brothers, consolidated his hold over the country, and then formally consecrated four years after assuming the power. That means he was a confirmed murderer when he was consecrated, but quite a lot of miraculous things happened on his coronation; see 5 – 24 to 33 [22 Four years after the famous (Asoka) had won for himself the undivided sovereignty he consecrated himself as king in 23 the city Pataliputta. Straightway after his consecration his command spread so far as a yojana (upward) into the air and downward into the (depths of the) earth. 24 Day by day did the devas bring eight men's loads of water of (the lake) Anotatta ; the king dealt it out to his people. 25 From the Himalaya did the devas bring for cleansing the teeth twigs of naga-creeper, enough for many thousands, 26 healthful fruits, myrobalan and terminalia and mango fruits from the same place, perfect in colour, smell, and 27 taste. The spirits of the air brought garments of five colours, and yellow stuff for napkins, and also celestial drink 28 from the Chaddanta-lake. Out of the naga-kingdom the nagas (brought) stuff, coloured like the jasmine-blossom and without a seam, and celestial lotus-flowers and colly rium and 29 unguents; parrots brought daily from the Chaddanta-lake 30 ninety thousand waggon-loads of rice. Mice converted this rice, unbroken, into grains without husk or powder, and 31 therewith was meal provided for the royal family. Perpetually did honey-bees prepare honey for him, and in the forges bears 32 swung the hammers. Karavika-birds, graceful and sweet 33 of voice, came and made delightful music for the king. And being consecrated king, Asoka raised his youngest brother Tissa, son of his own mother, to the office of vice-regent. Here ends the Consecration of the pious Asoka ]. Usually miraculous happenings, it is believed, are by divine acts in appreciation of some meritorious work by someone. One may wonder whether the murder of his brothers to the tune of about one hundred by Asoka had the divine blessings to be honoured with such miraculous happenings! Coincidentally, similar wondrous things happened during the coronation of Devanampiyatissa as per the Dipavamsa; see 11 – 14 to 24 [14. When seventeen years of that king (that is, Asoka) and six months of the next year had elapsed, in the second month of the winter season, under the most auspicious Nakkhatta of Asāḷhā, Devānampiya was installed in the kingdom of Tambapaṇṇi. 15. At the foot of the Chāta mountain three bamboo poles were to be found. (The first was) white like silver; its creeper shone like gold. 16-17. There was also (the second), the flower pole, (whereon most beautiful,) delightful (figures) like the shapes of flowers (presented themselves), dark blue, yellow, red, pure white, and black; and so also (the third), the bird-pole on which birds (appeared), each with its natural colours, and also quadrupeds. 18. The eight descriptions of pearls (also presented themselves), viz. the horse pearl, the elephant pearl, the chariot pearl, the myrobalan pearl, the bracelet pearl, the signet pearl, the Kakubha pearl, the Sadisa (Pākatika?) pearl. 19. When Devānampiya had succeeded to the throne, (the people,) moved by the splendour of his coronation, brought the three kinds of gems from the Malaya country, the three bamboo poles from the foot of the Chāta hill, and the eight kinds of pearls from the sea-shore. 20. Great crowds brought in the space of seven days, in consequence of Devānampiya’s merit, the gems which were produced in Malaya and which were worthy of a king. 21. When the king saw these costly, precious treasures, the unequalled, incomparable, wonderful, rare treasures, 22-23. he spoke with a heart full of joy: “I am high-born, noble, the chief of men; such is the reward of my righteous deeds; look at the treasures I have gained, which are worth many lacs and are produced in consequence of my merit. Who is worthy to receive the donation of these treasures, ] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 68 தொடரும் / Will follow துளி/DROP: 1945 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 67 https://www.facebook.com/groups/978753388866632/posts/32906137132368176/?- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
3ஆவது ஆஷஸ் டெஸ்டில் பலம்வாய்ந்த நிலையில் அவுஸ்திரேலியா; மற்றொரு தோல்வியை நோக்கி இங்கிலாந்து? Published By: Vishnu 19 Dec, 2025 | 06:14 PM (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் அலெக்ஸ் கேரியும் பின்னர் ட்ரவிஸ் ஹெட்டும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா 356 ஓட்டங்களால் முன்னிலை பெற்று பலமான நிலையில் இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முறையே 2 நாட்களிலும் 4 நாட்களிலும் தோல்வி அடைந்த இங்கிலாந்து மற்றொரு தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 371 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 85 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலும் 73 ஓட்டங்களைப் பெற்று கடைசி இரண்டு விக்கெட்களை இழந்தது. தமது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் தனது 118ஆவது டெஸ்டில் 37ஆவது அரைச் சதத்தைப் பெற்றதுடன் ஜொவ்ரா ஆர்ச்சர் தனது 18ஆவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பெற்றார். பென் ஸ்டாக்ஸ் 198 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களையும் ஜொவ்ரா ஆச்சர் 105 பந்துகளை எதிர்கொண்டு 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத சதம், அலெக்ஸ் கேரி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் பலமான நிலையில் இருக்கிறது. அலெக்ஸ் கேரி மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ஆஷஸ் தொடரில் இரண்டாவது சதத்தைக் குவித்தார். 196 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த அலெக்ஸ் கேரி இரண்டாவது இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். வெள்ள நிவாரண பொருட்கள் ட்ரவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களை விட உஸ்மான் கவாஜா 40 ஓட்டங்களைப் பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 271 - 4 விக். (ட்ரவிஸ் ஹெட் 142 ஆ.இ., அலெக்ஸ் கேரி 52 ஆ.இ., உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 59 - 2 விக்.) https://www.virakesari.lk/article/233870 - தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.