stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் adminMarch 24, 2026 யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலர் வழங்கினார். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட செயலரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/230940/
-
வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி
வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி adminMarch 24, 2026 வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள், பிரதேச விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் (tenders) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த உள்ளக விளையாட்டரங்கில் மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு கரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் இணைந்து சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230931/
-
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில்
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில் adminMarch 24, 2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் உணவு சமைத்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்திற்கு சுற்றுலா சென்ற மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறி, அதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மதுபோதையில் இருந்ததுடன், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அவர்கள் உத்தியோகபூர்வ வாகனத்தை தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறை திணைக்கள மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/230924/
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அது அதற்கு முந்திய பதிவில் நீங்கள் கள்ளனுக்கு முட்டு கொடுத்ததால் வந்த எதிர்வினை.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால் Published By: Vishnu 24 Mar, 2026 | 05:19 AM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. முடிந்தால் கைது செய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன். சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி பகிரங்கப்படுத்துவதற்கு உதய கம்மன்பில மார்ச் 27 ஆம் திகதி வெளியில் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நான் இதுவரை காலமும் எந்த மோசடி மற்றும் துர்நடத்தைகளிலும் ஈடுபடவில்லை.அரசுக்கு சொந்தமான ஒரு பேனை கூட வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ஆகவே முடிந்தால் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்யுங்கள் என்று அமைச்சரவை பேச்சாளருக்கு சவால்விடுக்கிறேன். இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறேன். என்னை கைது செய்வதற்கு இதுவரையில் 06 முறை முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் தற்போதும் அரசாங்கம் அதே முயற்சியை தொடர்கிறது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் என்னை கைது செய்வதற்கும் முயற்சிக்கப்படுகிறது. பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு கூட இதுவரையில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்கும், அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதற்கும் அவரது வீட்டாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இப்ராஹிமிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோர் அரச மரியாதையளித்து கவனித்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ரமழான் பண்டிகையின் போது இப்ராஹிமின் குடும்பத்தாரின் அனுசரணையுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் இருந்த அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் இருந்து பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரியாணி விடயத்தை நான் செவிவழி கதையாக சொல்லவில்லை.நாமல் அத்தநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகததர் 2020.12.18 ஆம் திகதியன்று குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சத்தியமளித்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் '108' ஆவது பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரியாணி விடயத்தை மறுக்கும் ஆளும் தரப்பினர் அறிக்கையில் 108 ஆவது பக்கத்தை புரட்டிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பயங்கரவாதிகளுக்கு அரச மரியாதை வழங்கப்படுகின்ற நிலையில், இராணுவ அதிகாரிகள் அரசியல் நோக்கங்களுக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நான் உள்ளே இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மார்ச் 31 ஆம் திகதி புத்தகம் வெளியாகும். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார். இலங்கையில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்களுக்கு எவ்வித்திலும் சட்டபாதுகாப்பு கிடையாது. ' சொனிக், சொனிக்' என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள், இஸ்லாமிய அடிப்படைவாதியை போன்று சென்று தகவல் திரட்டிய புலனாய்வு அதிகாரியாவார்.Beaches & Islands சொனிக், சொனிக் என்பது யார் என்ற இரகசியத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதானி சானி அபேசேகர வெளிப்படுத்துகிறார். இந்த செயற்பாடு அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறைச்செல்லக் கூடிய குற்றமாகும்.ஆனால் இலங்கையில் சானி அபேசேகரவுக்கு பதிலாக, சொனிக், சொனிக் சிறைச்சென்றுள்ளார்.Beaches & Islands சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். இதனால் தான் அரசாங்கம் தற்போது கலக்கமடைந்து என்மீது பழிசுமத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/241783
-
இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான கூறுகளைப் புரிந்துகொள்ள இவ்விஜயம் உதவும் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா
இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான கூறுகளைப் புரிந்துகொள்ள இவ்விஜயம் உதவும் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா Published By: Vishnu 24 Mar, 2026 | 03:24 AM (நா.தனுஜா) பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டை வந்தடைந்தார். அரசாங்கம், தனியார் துறையினர் மற்றும் உள்ளுர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய கூறுகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி நேற்றைய தினம் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் மஸாட்டோ கன்டாவை தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நேற்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர், பின்னர் கொழும்பில் தனியார் துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்றார். அதேவேளை செவ்வாய்க்கிழமை (24) மஸாட்டோ கன்டா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதன் ஓரங்கமாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பலங்கந்த பகுதிக்குச் சென்று, அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடி, சேதங்கள் தொடர்பான நேரடி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் அவர்கள் உத்தேசித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பொருளாதார மீட்சி, அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் என்பன தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். இலங்கைக்கான இவ்விஜயம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மஸாட்டோ கன்டா, இலங்கை முகங்கொடுத்திருந்த நெருக்கடி நிலையை சமாளித்து, மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு முக்கியமான தருணத்திலேயே தான் இவ்விஜயத்தை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தனியார் துறையை மையப்படுத்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும் இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241779
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
'IRIS Dena“ கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை : ஈரான் தூதுவர் வெளியிட்ட அறிவிப்பு அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்ததற்கு இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றி தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 2026 பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது. இஸ்லாமியக் குடியரசின் தலைவர் படுகொலை அந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியது. மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மற்றும் இஸ்லாமியக் குடியரசின் தலைவரை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்தமை உள்ளிட்ட சிவில் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் இதில் அடங்கும். பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது. சர்வதேச சட்டங்களின்படி, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 15.1 ஆவது பிரிவின் கீழ் ஈரான் தனது "தற்காப்பு உரிமையைப்" பயன்படுத்தியது. 'Milan 2026' கடற்படைப் பயிற்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 'IRIS Dena' என்ற ஈரானியக் கப்பல், இலங்கை கடற்பரப்புக்கு அருகில் வைத்துத் தாக்கப்பட்டது. 104 மாலுமிகள் உயிரிழப்பு இதில் ஆயுதமற்ற 104 மாலுமிகள் உயிரிழந்ததுடன், போர்க்களத்திலிருந்து 1,100 கடல் மைல் தொலைவிலிருந்த இந்தக் கப்பலைத் தாக்கியதை அமெரிக்க ஜனாதிபதி ஒரு "பொழுதுபோக்கு" என வர்ணித்தமை மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல். ஈரான் போரை விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கும். ஹோர்முஸ் நீரிணை ஈரானிய கடற்பரப்பிற்குள் ஒரு "போர் வலயமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது நீரிணை மூடப்பட்டதைக் குறிக்காது, மாறாக "எதிரி நாடுகளின் கப்பல்களுக்கான" அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது” என தெரிவித்தார். https://ibctamil.com/article/iris-dena-sunk-by-torpedo-attack-by-us-in-sl-water-1774261943
-
கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை
கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையானது கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். தற்போதைய நிலையை அவர் மிகவும் பாரதூரமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970களில் ஏற்பட்ட இரண்டு பாரிய எண்ணெய் அதிர்ச்சிகளின் அளவையும் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலகம் ஒரு நாளைக்கு சுமார் 5 மில்லியன் பரல் எண்ணெயை இழந்தது. இரண்டும் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் பரல்கள். ஆனால் இன்று நாம் ஒரு நாளைக்கு 11 மில்லியன் பரல்களை இழந்துள்ளோம். இது அந்த இரண்டு பெரிய எண்ணெய் அதிர்ச்சிகளையும் விட அதிகம். உலகப் பொருளாதாரம் இப்போது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் எந்த நாடும் இதிலிருந்து தப்ப முடியாது. நிலைமையை விரைவில் சுமூகமாக முடிக்க உலகளாவிய முயற்சிகள் தேவை என குறிப்பிட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஆசிய பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவினால் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும். இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெட்ரோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிபொருள் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். https://tamilwin.com/article/fuel-prices-likely-to-increase-significantly-1774238934?itm_source=article
-
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்? பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு,ஐஆர்என்எஸ்எஸ் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மார்ச் 13, 2026. ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் செயலிழந்தது. இது, இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாட்டை முடக்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது. கூடுதல் செயற்கைக்கோள் ஒன்றை ஏவி சமாளிக்க முடியாமா என விஞ்ஞானிகள் யோசனை செய்துவருகிறார்கள். ஆனால் இவை தற்காலிகத் தீர்வாக தான் அமைய முடியும். செயற்கைக்கோள் கூட்டமைப்பைப் பயன்படுத்தி ஜிபிஎஸ் போன்ற இருப்பிட அடையாளம் காணுதல் மற்றும் செல்லும் இடத்துக்கு வழிகாட்டும் சேவையை வழங்கக் குறைந்தபட்சம் நான்கு செயற்கைக்கோள்கள் தேவை. ஆனால், 2013 முதல் ஏவப்பட்ட மொத்தம் 11 செயற்கைக்கோள்களில், ஏப்ரல் 2014-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1பி, ஏப்ரல் 2018-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எல், மற்றும் மே 2023-ல் ஏவப்பட்ட என்விஎஸ்-01 (இரண்டாம் தலைமுறை நாவிக் தொடரின் முதல் செயற்கைக்கோள்) ஆகிய மூன்று மட்டுமே தற்போது செயல்படுகின்றன. செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வழிகாட்டும் அமைப்பு (கோப்புப் படம்) வழிகாட்டும் செயற்கைக்கோள்கள் நவீன காலத்துக் கலங்கரை விளக்கங்கள். ஒளிக்கற்றையை அனுப்புவதற்குப் பதிலாக, இவை தொடர்ந்து நேரக் குறியீடுகளையும் (timestamp) தங்களது இருப்பிடத்தையும் பதிவாக கொண்ட சமிக்ஞைகளை ஒலிபரப்புகின்றன. நம் கைப்பேசி அல்லது ஜிபிஆர்எஸ் அலைவாங்கி இந்தச் சமிக்ஞைகளைப் பிடித்து, ஒவ்வொன்றும் வந்து சேர எடுத்துக்கொண்ட நேரத்தை அளவிடுகிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால், பயண நேரத்தில் உள்ள சிறிய வேறுபாடு கூடத் தூரமாக மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு சமிக்ஞை உங்களை அடையச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அந்தச் செயற்கைக்கோள் தூரத்தில் இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் கருவி கணக்கிட்டுக் கொள்கிறது. குறைந்தது மூன்று செயற்கைக்கோள்களிலிருந்து கிடைக்கும் தூரத் தகவல்களை வைத்து, முக்கோணவழி- அளவீடு (Triangulation) எனும் தத்துவத்தை கொண்டு இருப்பிடத்தை துல்லியமாக கணிப்பு செய்கிறது. மூன்று நண்பர்கள் உள்ள இடம் நமக்கு துல்லியமாக தெரியும். அவர்கள் மூவரும் தங்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கணித்து கூறுகிறார்கள். இப்போது அந்த மூவரின் இடத்திலிருந்து அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தொலைவை ஆரமாக கொண்ட வட்டத்தை வரையலாம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் மூன்று வட்டங்களும் சந்திக்கும் புள்ளி தான் உங்கள் இருப்பிடம். அந்தச் சந்திப்புப் புள்ளிதான் உங்கள் அட்சரேகை, தீர்க்கரேகை, தரைப்பரப்பிலிருந்து உங்கள் உயரம். வழிகாட்டும் செயற்கைக்கோள்களும் அதே முறையைத்தான் பயன்படுத்துகின்றன. அவை அளவுகோல் கொண்டு அளவதற்குப் பதிலாக, சமிக்ஞை பயண நேரத்தை அளந்து தூரத்தைக் கணக்கிடுகின்றன. முக்கோணவழி- அளவீடு செய்ய கோட்பாட்டில், மூன்று செயற்கைக்கோள்களின் சமிக்ஞைகள் போதுமானவைதான். ஆனால், நான்காவது செயற்கைக்கோள் மிக அவசியம். ஏனெனில், நம் கைப்பேசியின் கடிகாரம், செயற்கைக்கோள்களில் உள்ள அணுக் கடிகாரங்களைப் போல் துல்லியமானது அல்ல. அந்தக் கடிகாரப் பிழையைச் சரிசெய்வதற்கே நான்காவது சமிக்ஞை தேவைப்படுகிறது. இப்போது மூன்று செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்குவதால், நாவிக் அமைப்பு சரியாகச் செயல்படாமல் தடுமாறுகிறது. சொந்தக்காலில் நிற்க வேண்டும் பட மூலாதாரம்,X/ISRO கார்கில் போரின் முக்கிய கட்டத்தில், அமெரிக்கா ஜிபிஎஸ் தரவுகளைப் பகிர மறுத்ததோடு, வேண்டுமென்றே ஜிபிஎஸ் சமிக்ஞைகளில் குழப்பத்தை உருவாக்கியது. இது இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்குப் பெரும் தடையாக அமைந்தது. அதேபோல், ஒரு முக்கிய ஏவுகணைச் சோதனையின் போதும், துல்லியமான ஜிபிஎஸ் சேவைகள் துண்டிக்கப்பட்டுச் சோதனை பாதிக்கப்பட்டது. இந்த அனுபவங்களே, சொந்தமான ஒரு பிராந்திய வழிகாட்டுதல் மற்றும் இருப்பிடக் கணிப்பு அமைப்பை உருவாக்க இந்தியாவைத் தூண்டியது. இஸ்ரோ இந்தச் சவாலை ஏற்று ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தை உருவாக்கியது. நான்கு செயற்கைக்கோள்கள் குறைந்தபட்சத் தேவை என்றாலும் தொடர்ச்சியான 24 மணி நேர சேவை தர கூடுதல் செயற்கைக்கோள்கள் அவசியம். எனவே இந்தியாவை சுற்றி உள்ள பிராந்திய பகுதியில் சேவை வழங்க ஏழு செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. ஆனால், முக்கியமான அணுக் கடிகாரங்களுக்கு வெளிநாட்டு வணிக நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது நான்கு உலகளாவிய வழிகாட்டும் அமைப்புகள் (GNSS) உள்ளன. அமெரிக்காவின் ஜிபிஎஸ் 30-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சேவை வழங்குகிறது. ரஷ்யாவின் குளோனாஸ் (GLONASS) 24-க்கும் மேற்பட்ட இயங்கும் செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ (Galileo) அமைப்பு 30-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன், டெசிமீட்டர் அளவுக்குத் துல்லியமான சேவையை வழங்குகிறது. சீனாவின் பெய்டோவ் (Beidou) உலகளாவிய அமைப்புக்கு 30 செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. தற்போது 35-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்தியாவின் நாவிக் தவிர, ஜப்பானின் QZSS என்பதும் ஒரு பிராந்திய வழிகாட்டும் அமைப்பாகும். அணுக் கடிகாரம் பட மூலாதாரம்,X/ISRO ஒவ்வொரு வழிகாட்டும் செயற்கைக்கோளின் இதயமாக செயல்படுவது அதில் உள்ள அணுக் கடிகாரம். விநாடிகள் உருண்டு செல்வதன் மூலம் நேரம் அளக்கப்படாமல், அணுக்களின் இயற்கையான அதிர்வுகளின் மூலம் அளக்கப்படுகிறது. வழக்கமான குவார்ட்ஸ் கடிகாரங்கள் சில நாட்களில் ஒரு விநாடி தவறக்கூடும். ஆனால் அணுக் கடிகாரங்கள் மிகத் துல்லியமானவை. அவை சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு விநாடி கூடுதலாகவோ குறைவாகவோ பிழைபடும். வானத்திலிருந்து நம் கைப்பேசிக்குச் சமிக்ஞை வர எடுத்துக் கொள்ளும் நேரத்தை துல்லியமாக அளவிட இந்தக் கடிகாரம் உதவும். ஒரு சிறிய பிழை, ஒரு விநாடியின் பத்து லட்சம் பங்கில் ஒரு பங்கு தவறினால், நமது இருப்பிடம் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் தவறாகக் கணக்கிடப்பட்டுவிடும். துல்லியமாக செயல்படும் கடிகாரம் இல்லையென்றால், வழிகாட்டுதலும் இல்லை. அதனால்தான் செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடிகாரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு இஸ்ரோ செயற்கைக்கோளிலும் மூன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஒன்று செயலிழந்தால், மற்றவை பொறுப்பேற்றுக் கொள்ளும். இப்படித்தான் அமைப்பு தொடர்ந்து இயங்கும். இஸ்ரோவால் செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவ முடிந்தது. ஆனால், முக்கியமான அணுக் கடிகாரத்தை உருவாக்குவது சவாலாக இருந்தது. பிராந்திய அளவிலான வழிகாட்டும் அமைப்பை விரைவாகச் செயல்படுத்த, இந்தியா அணுக் கடிகாரங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. அணுக் கடிகார நெருக்கடி பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு,ஐஆர்என்எஸ்எஸ் (கோப்புப் படம்) முதல் நாவிக் செயற்கைக்கோள்கள் சுவிஸ் நாட்டு ரூபிடியம் கடிகாரங்களைக் கொண்டிருந்தன. ஸ்பெக்ராடைம் (SpectraTime) நிறுவனத்திடமிருந்து இந்த கடிகாரங்கள் வாங்கப்பட்டன. இந்த கடிகாரங்கள் முறையாக இயங்கவில்லை; சிக்கல்கள் ஏற்பட்டன. ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 1சி, 1டி, 1இ, 1ஜி, 1எஃப் ஆகிய செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்ட இறக்குமதி செய்யபப்ட்ட கடிகாரங்கள் திடீர், திடீரென செயலிழந்தன. இவற்றில் ஐந்து செயற்கைக்கோள்களில், மூன்று கடிகாரங்களுமே பழுதுபட்டன. மற்றவற்றில், ஒன்று அல்லது இரண்டு கடிகாரங்கள் செயலிழந்து, செயற்கைக்கோளின் ஆயுட்காலம் குறைந்தது. இந்தியா மட்டும் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் சிலவற்றிலும் இதே போன்ற செயலிழப்புகள் ஏற்பட்டன. ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) 2017-இல் இந்தத் தோல்விகளுக்கான காரணத்தை ஆய்வு செய்தது. தரைசார் சோதனையின் போது ஏற்பட்ட குறுக்கு மின்சுற்றுகளே (short circuits) காரணம் என்று கண்டறியப்பட்டது. துல்லியமான நேர அளவீடுதான் வழிகாட்டும் அமைப்புக்கும் அடித்தளம். அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போல இந்த தொடர் பழுதுகள் இஸ்ரோவின் திட்டத்தை செயலிழக்க வைத்துள்ளன. சீனா வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட வகை இறக்குமதி கடிகாரங்களை முதலில் பயன்படுத்தினார்கள். பின்னர் விரைவில் தாமே சொந்தமாக அணுக்கடிகாரங்களை உருவாக்கத் தொடங்கினர். இறக்குமதியை நிறுத்தினர். இந்தியா தனது சொந்த வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி இயக்க வேண்டுமெனில், தானே சொந்தமான அணுக் கடிகாரங்களை உருவாக்கியே ஆக வேண்டும். தனது காலில் நிற்கவேண்டும். எனவே சொந்த ரூபிடியம் கடிகாரத்தை உருவாக்கும் பணி 2010-களின் நடுப்பகுதியில் தொடங்கியது. 2022-23-க்குள், இந்திய ரூபிடியம் அணுக் கடிகாரத் தரநிலை (iRAFS) முழுமையாகத் தகுதி பெற்றது. இன்று, புதிய என்விஎஸ் தொடர் செயற்கைக்கோள்கள் இந்தச் சொந்தக் கடிகாரங்களைக் கொண்டு செல்கின்றன. தற்போது ஒரு செயற்கைக்கோளில் இந்திய அணுக்கடிகாரம் உள்ளது; அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தன்னிறைவு வழிகாட்டும் செயற்கைக்கோளை உருவாக்க தொழில்நுட்பப் பணியாளர்களின் உழைப்பு அவசியம். நிதியும் முக்கியம். கடந்த காலங்களில் ஆழ்வெளித் திட்டங்கள், நிலா மற்றும் செவ்வாய்க்கான பயணங்கள், மனித விண்வெளிப் பயணங்கள், வணிகச் செயற்கைக்கோள் ஏவுதல்கள், புதிய தலைமுறை ஏவூர்திகளின் மேம்பாடு என இஸ்ரோவின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் பணிகளின் பட்டியல் காரணமாக பணிச்சுமை விரிவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கையில் அதற்கேற்ற அதிகரிப்பு இல்லை. நிதியும் போதுமான அளவில் இல்லை. எனவே புதிய வழிகாட்டும் செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணி எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. தன்னிறைவு இல்லையென்றால் இந்தியா சிக்கலில் சிக்கிக்கொள்ளும் என்பதை சமீபத்திய உலக நிகழ்வுகள் பட்டவர்த்தனமாக காட்டுகின்றன. எனவே இந்தியாவின் சொந்தச் செயற்கைக்கோள் வழி இருப்பிட மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஒரு ஆடம்பரமல்ல; வளர்ந்து வரும் சர்வதேசச் சூழலில் இது இன்றியமையாததாகிறது. 'தன்னிறைவு' என்ற கொள்கை காலாவதியான கருத்து அல்ல; இன்றைய கட்டாயத் தேவையாகிவிட்டது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz67j359695o
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
அமெரிக்கா: டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு! Published By: Digital Desk 1 24 Mar, 2026 | 08:13 AM (இணையத்தள செய்திப் பிரிவு) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (23) பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பலத்த வெடிப்பைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீ பரவியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ட் ஆர்தரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே இருக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளை டெக்சாஸ் மாநில போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு நகர முதல்வர் மற்றும் அவசர முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த சுத்திகரிப்பு நிலையமானது அமெரிக்காவின் மிகப்பெரிய நிலையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 360,000 பெரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/241790
-
கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து: சுமார் 110 பேர் பலியாகியிருலாம் என அச்சம்
கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்து ; 34 பேர் உயிரிழப்பு; 77 பேர் மீட்பு! Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 08:54 AM கொலம்பியாவின் தெற்கு அமேசான் பிராந்தியத்தில் 125 பேருடன் பயணித்த இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து பெரு எல்லையிலுள்ள புடுமாயோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான 'லொக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130' ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானத்தில் 114 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட மொத்தம் 125 பேர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 77 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 40 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. விமானம் அடர்ந்த மழைக்காடுகளுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, மெதுவாகத் தரைநோக்கி இறங்கி விழுந்து நொருங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், காயமடைந்த இராணுவ வீரர்களைத் தமது மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் சென்று காப்பாற்றும் காட்சிகள் பலரது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கொலம்பியா 1960-களிலிருந்து இந்த சி-130 ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது. இராணுவத்தை நவீனமயப்படுத்தும் தனது திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோரை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ அனுல்போ சான்செஸ் விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/241792
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
ஈரான் மீதான தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 24 Mar, 2026 | 11:43 AM ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து முறியடிப்போம் என அவர் கூறியுள்ளார். அத்துடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவோம் என நெதன்யாகு மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் ஆதரவால் ஈரானுடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து இராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று திங்கட்கிழமை (23) அறிவித்திருந்தார். அதனையடுத்து, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் மறுத்து, ஈரானின் மிரட்டலுக்கு ட்ரம்ப் அடிபணிந்துவிட்டதாகவும் கூறியிருந்தது. இந்நிலையிலேயே நெதன்யாகு ஈரானுடனான போர் தொடரும் என அறிவிப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/241807
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
ஈரான்காரன்… அமெரிக்க வரை போயிட்டான் போலுள்ளது. 😂 தம்பருக்கு இது தேவையா. 🤡 கெத்து காட்டப் போய், அவன் வீட்டு வாசல்லை வந்து நிற்கிறான். 🤣
- Today
-
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..!
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! இன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் வெறுமனே ஒரு பிராந்திய போராகவோ, அல்லது ஈரான் மீதான போராகவோ மட்டுப்படுத்தி பார்க்கக்கூடாது. இதனை வரலாற்று பகை உணர்வுகளின் வெளிப்பாடாகவும், பொருளியல் ஆளுகைக்கான போராகவும், உலகளாவிய மேலான்மைக்கான போராகவும் பார்க்கப்பட வேண்டும். மத்திய கிழக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது 2500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பகைமையை கொண்டதாக பார்க்கப்படுகிறது. இது பாரசீகத்தின் சக்கரவர்த்தி டாரியஸிற்கு பின் வந்த ஷேர்சீஸும் (Xerxes) கிரேக்கத்தின் மீது மேற்கொண்ட பெரும் படையப்புடன் ஆரம்பமானது. எனவே அரசியல், பொருளிள், வரலாற்று அடிப்படையிலேயே இன்றைய மத்திய கிழக்கு யுத்தத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலமே அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். மத்திய கிழக்கு எனப்படுவது மொரோக்கோவில் இருந்து ஈரான் வரையான வட ஆப்பிரிக்க பகுதியும், மேற்காசியாவும், அதனோடு இணைந்த மத்திய ஐரோ-ஆசிய பகுதியையும் உள்ளடக்கி மூன்று கண்டங்களை இணைக்கின்ற அராபிய-பாரசீக பண்பாட்டை கொண்ட நிலப் பகுதியையே மத்திய கிழக்கு என மேற்குலகத்தவர் குறிக்கின்றனர். இந்தப்பகுதி இஸ்லாமிய நிலப்பகுதி என்று பார்க்கப்படுகின்றது. இந்தப் பகுதியை இராணுவ நோக்கு நிலையில் ஆய்வாளர்கள் பச்சை என குறியீட்டு பெயரால் அழைக்கின்றனர். அதே நேரத்தில் மேற்குலகத்தினை வெள்ளை என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கின்றனர். இவ்வாறே கிழக்காசியாவில் சீனா உள்ளிட்ட மஞ்சள் நிற மக்களைக் கொண்ட பகுதியினரை மஞ்சள் என அழைக்கின்றனர். அதே நேரத்தில் கம்யூனிச கொள்கை கொண்ட ரஷ்யாப் பகுதியையும் கம்யூனிச கொள்கையுடைய நாடுகளையும் சிகப்பு என அழைக்கின்றனர். மொசப்பதோமியா நாகரிகத்தின் பிரிவு மனிதகுல வரலாற்றில் மத்திய கிழக்கு என்பது நாகரீகத்தை உலகுக்கு கடத்திய ஒரு நிலம். 3500 ஆண்டுகால மிகப் பழமையான நைல் நதி நாகரிகம் மொசப்பதோமியா நாகரிகம் தோன்றிய இந்நிலப் பகுதியின் மக்கள் வாழ்க்கை முறையும், நாகரீகமும் தனித்துவமானது. உலகின் முதலாவது பேரரசான ஆக்காட் பேரரசு பாரசீகத்தை மையப்படுத்தியே தோன்றியது. பாரசீகம் எனப்படுவது ஈரான்,ஈராக் மற்றும் துருக்கி சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. மத்தியகிழக்கு நிலத்தில் தான் இயேசு கிறிஸ்துவின் பைபிளும், யூதர்களின் தோராவும், இஸ்லாமியர்களின் குர்கான் என்னும் தத்துவங்கள் தோன்றின. இந்த மூன்று தத்துவங்களும் வேறுபட்டவையாக இருப்பினும் இப்போது தோராவும், பைபிளும் ஓர் அணியில் சேர்ந்துள்ளன. எதிரணியில் குர்ஆனும் நிலையடுத்துள்ளது. இந்த பின்னணியில் மத்திய கிழக்கில் தோன்றிய மூன்று தத்துவங்களான தோராவும் அல்குர்ஆனும் பைபிளும் மோதும் தத்துவார்த்த போர்க்களமாக இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியும் பாரசீகப் பகுதியும் விளங்குகிறது. சிலுவையில் அறைந்து கொலை முதலாவது சிலுவையில் அறைந்து கொலை செய்யும் தண்டனை முறை பற்றி முதலாவது வரலாற்றாசிரியரான ஹெரோடோடஸால் அவர்களின் பதிவேட்டில் உள்ள வரலாற்று நிகழ்வை இங்கு நியாபகப்படுத்த வேண்டியது அவசியமானது. பண்டைய கிரேக்கத்தின் சமோஸின் தலைவனான பொலிகிரேட்ஸ், கிமு 522- இல் பாரசீகர்களால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது சடலம் சிலுவையில் அறையப்பட்டது. இவரே உலகின் வரலாற்றில் முதலாவதாக சிலுவையில் அறையப்பட்ட மேற்குலகத்தவராவார். அந்தப் பகையின் வன்மத்தை வரலாற்று ரீதியாக இருதரப்பினரும் காவி செல்கின்றனர் என்பதனை இன்றைய யுத்தத்தின் அழிவுகளில் இருந்து காண முடிகிறது. முதலாவது பாரிய கிரேக்க-பாரசீகப் போரின்போது கண்டம்விட்டு கண்டம் கடந்த படையெடுப்பாக கி.மு 490 இல் ஒன்றரை லட்சம் பாரசீக படைகளுடன் படையெடுப்பு நிகழ்ந்தது. அந்தப் போரில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் படைகளுக்கும் இடையே மராத்தான் போர் நடந்தது. ஏதென்ஸிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) தொலைவில் உள்ள மாரத்தான் கடற்கரையில் பாரசீகப் படைகளை அதிகமாக எண்ணிக்கையில் இருந்த கிரேக்க நகர அரசுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கிய ஏதெனியர்கள் தோற்கடித்தனர். கிமு 480- இல், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீகப் படையெடுப்பின் போது, ஸ்பார்டன் மன்னன் லியோனிடாஸின் கீழ் ஒரு சிறிய கிரேக்கப் படை வீரர்கள் 300பேரும் கிரேக்கத்தில் உள்ள தெர்மோபைலே கணவாய் 4 மைல்கள் நீளமுள்ள பகுதியில் பாரசீகர்கள் கிரேக்கத்துக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தி சண்டையிட்டு மரணித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் "கிரேக்கத்தின் பெண்களே உங்களை பாதுகாப்பதற்கு 300 சிங்கங்கள் இங்கே உறங்குகின்றன" என்ற வாசகம் இன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை மேற்குலகத்தவர்களுக்கும் மத்திய கிழக்குக்குமான பகையின் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன. உலகின் முதலாவது வரலாற்று ஆசிரியரான ஹெரடோட்டஸ் தனது " The Histories " என்ற தனது வரலாற்று நூலில் (கிமு 425) கிரேக்க-பாரசீகப் போர்களின் நீண்ட கணக்கு எனக் குறிப்பிடுகின்றார். சிலுவை யுத்தம் பின் நாளில் கிபி 1092 தொடக்கம் கிபி 1172 வரையான காலத்தில் கிறிஸ்தவர்களின் புனித தளமான ஜெருசலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக ஐரோப்பியர்கள் தொடர்ந்து 200 ஆண்டுகள் ஒன்பது தடவைகள் நீண்ட யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அது சிலுவை யுத்தம் என அழைக்கப்படுகிறது. இதை மத்திய கிழக்குக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான கடும் பகைமையின் வெளிப்பாடு, எனினும் ஐரோப்பியர்களால் அன்று ஜெருசலத்தை கைப்பற்ற முடியவில்லை. அராபிய நிலத்தில் இஸ்லாமியர்கள் படைக் கட்டுமானத்துடன் தத்துவார்த்த ரீதியிலும் எழுச்சியுடன் வெற்றி அடைந்திருந்த நிலையில் மேற்குலகத்தினரால் இஸ்லாமியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அராபிய நிலத்திலிருந்து தொடர்ந்து இஸ்லாமியர்கள் தமது அரசை விஸ்தரித்து கிழக்கு ரோமப் பேரரசின் தலைநகரான கென்ஸ்டாண்டிநோபிள்(இஸ்தான்புல்) ஓட்டோமான் துருக்கியர்களினால் கிபி 1453-இல் கைப்பற்றப்பட்டது. இது ஐரோப்பியர்களுக்கு இஸ்லாமியர்களால் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி. பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம் “தங்கக் கொம்பு” என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இருகரைகளிலும் அமைந்துள்ள கென்ஸ்டாண்டிநோபில் நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. இந்த நகரம் தான் மேற்குக் கிழக்கு வாணிபத்தின் தரைவழி பாதையும்கூட ஐரோப்பியர்களின் கிழக்கு நாடுகளுக்கான தரைவழிப் பாதை இதன் மூலம் தடுக்கப்பட்டது. ஓட்டோமான் துருக்கிய இஸ்லாமியர்கள் கைப்பற்றியதும் பைசாந்தியப் பேரரசை ஓர் இஸ்லாமிய பேரரசாக ஐரோப்பிய நிலத்துக்குள் மாற்றிவிட்டனர். இது இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் நிகழ்த்திய ஓர் அரசியல் புவியியல் மாற்றமாகும். பேரரசுவாதத்தின் விளைவுகள் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா மீதான படையெடுப்பாக 1453 ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள் கொன்ஸ்தாந்ததிநோபிளை (இன்றைய இஸ்தான்புல்) கைப்பற்றியதை அடுத்து கிழக்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பியர்களிடையே ஒரு பெரும் அரசியல் அறிவியல், அரசியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியது. அந்த அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு நாடுகாண் பயணங்களை மேற்கொள்ள வைத்தது. அதனால் உலகளாவிய புதிய குடியேற்றவாத நாடுகள் தோன்றின. ஐரோப்பாவில் பெரும் இராணுவ வளர்ச்சி ஏற்பட்டது. இது ஆசியக் கண்டத்திற்கும் பரவியது. இந்த பெரும் இராணுவ வளர்ச்சி பேரரசவாத ஆசையினை ஒவ்வொரு நாடுகளிலும் தோற்றுவித்தது. இன்றைய அரசியல் பொருளியல் அறிவியல் உலகம் என்பது பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் விளைவினால் தோற்றுவிக்கப்பட்டது. இவ் ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியின் பரவலின் பிரதிபலிப்பாக இன்றைய உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்றைய உலக ஒழுங்கு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட இராணுவ, அரசியல், பொருளியல் விளைவுகளின் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்காக இன்று தோற்றம் பெற்றுள்ளது. ஐரோப்பாவில் ஏற்பட்ட பேரரசவாத அவா மனிதகுலத்துக்கு எதிரான பெரும் இனவழிப்புகளுக்கும், குரூரமான வஞ்சக அரசியலுக்கும் வழி வகுத்தது. இந்த வஞ்சகமான மனித தர்மத்துக்கு முரணான பேரரசுவாதம் அரசியல் கோட்பாடாகவும், அரசியல் நெறி முறையாகவும் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. இத்தகைய அரசியல் கோட்பாடுகளில் இருந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. இங்கே நீதிக்கும் நேர்மைக்கும் மனித தர்மத்துக்கு இடம் கிடையாது. அனைத்தும் அந்தந்த நாடுகளுடைய தேசிய அபிலாசைகளும், நலன்கள் சார்ந்தே நீதி வரையறுக்கப்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியப் பேரரசு உருவாக்கம் இவ்வாறு தான் கிபி 6ஆம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு இன்று அரேபியா, வடஆபிரிக்கா, பாரசீகம் உட்பட அரபுலகம் எனப்படும் 26 நாடுகளையும் தெற்கு ,தென் கிழக்கு ஆசியாவில் ப்ரூணை, மலேசியா, இந்தோனேசியா, வங்காள தேசம், மலேசியா, மாலதீவுகள் உள்ளிட்ட 48 இஸ்லாமிய நாடுகளை தோற்றுவித்திருக்கிறது. தரைசார் பேரரசாக விஸ்தரிப்பை செய்து மத்தியகிழக்கில் 26 இஸ்லாமிய நாடுகளும் உள்ளடக்கி 53 கோடி இஸ்லாமியர்களையும், இந்தப் பிராந்தியத்துக்கு வெளியே 135 கோடி இஸ்லாமியர்களையும் தோற்றவித்தள்ளார்கள். உலகில் உள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் 48 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். 43 நாடுகளில் இஸ்லாமிய சட்டமே நடைமுறையில் உள்ளது. உலக சனத் தொகையில் 24.9% இஸ்லாமியர்களாக உள்ளனர். இதனை நபிகள் நாயகம் அவர்களின் அரசியல் புவியியல் மூலோபாயம் எனக் குறிப்பிடலாம். எனினும் இவர்களின் பிராந்தியத்தின் கடற் பகுதிகூட இவர்களின் கையில் இல்லை. வாஸ்கோடகாமா கண்டுபிடித்த புதிய கடல் பாதைகள் மத்திய கிழக்கை முற்றுகையிட்டு கடந்த 500 ஆண்டுகளாக இன்றுவரை இஸ்ராமியர்களை இந்தப் பிராந்தியத்துக்குள் சிறைப்பிடித்துள்ளார்கள் என்று சொல்லுவதே சாலப்பொருந்தும். ஆயினும் இஸ்லாமியர்கள் மத கோட்பாட்டின் அடிப்படையிலான இனப்பெருக்க விகிதத்தில் உயர் நிலையில் இருப்பதனால் உலக மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் தொகை வேகமாக அதிகரித்துச் செல்கிறது. அந்த மக்கள் பலத்தைக் கொண்டு அவர்கள் தங்களுக்குள் ஒரு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) 1969 இல் நிறுவப்பட்டது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இன்று 57 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. அவற்றில் 56 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. இவற்றில் 48 நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாகும். இதனை மேற்குலத்தவர்கள் இன்று அச்சத்துடனேயே நோக்குகின்றனர். விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மத்திய கிழக்கு நாடுகளின் ஐரோப்பா மீதான எதிர் நடவடிக்கைகள், ராணுவ படைக்கட்டுமானங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப கட்டுமான, இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இணைவு முன்னெடுப்புகள், பொருளியல் மேம்பாடு, யுத்தம் என்பவற்றை உற்று நோக்கினால் அவை வரலாற்று ரீதியாக எப்போதும் ஐரோப்பியர்களுக்கே நலனை விளைவித்துள்ளது. அத்துடன், அதனை தமக்கு சாதகமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அவர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறி இருக்கிறார்கள் அவர்களிடம் உள்ள முன்னேற்றகரமான விஞ்ஞான தொழில்நுட்பம் என்பது எதிரிகளை அனைத்து வகைகளிலும் தோற்கடிக்க கூடிய வல்லமை கொண்டுள்ளதாக உள்ளது. அத்தகைய தொழில்நுட்பத்தை வரலாற்று ரீதியான பகை நிலத்தில் அதாவது மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதுவும் நவீன தொழில்நுட்பத்தையோ அதிலும் குறிப்பாக அணுத்து தொழில்நுட்பத்தை பெற்று விடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக உள்ளனர். மத்திய கிழக்கில் ஈரான் அணு தொழில்நுட்பத்தை பெற்று விட்டால் மத்திய கிழக்கில் இஸ்லாமியத்துக்கு எதிராகச் செருகப்பட்ட ஆப்பாகிய இஸ்ரேல் என்ற தேசம் அந்த நிலத்தில் இருக்க முடியாது என்பதையும் மேற்குலகத்தவர் நன்கு அறிவார்கள். ஆகவே தான் பச்சைக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொள்வதற்கு மூன்று பரிமாணங்களை கொண்ட தான் தந்துரோபாயங்களை கையாள்கின்றனர். 1) மத்திய கிழக்கின் இஸ்லாமிய உணர்வுக்குரிய பலஸ்தீனப் பகுதியில் அடிக்கடி நிலத்தை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தொடர்ந்து ஒரு போர்பதட்ட சூழலில் வைத்திருப்பதன் ஊடாக இஸ்லாமியர்களின் பொருளியல் அறிவியல் விருத்திக்கு தடங்கல்களை ஏற்படுத்துவது. 2) பச்சைக்கும் பச்சைக்கியமான முரண்பாடுகளை தோற்றுவிப்பது அதாவது நயத்தாலும், பயத்தாலும் மத்திய கிழக்கு நாடுகளை தனது பொருளாதார மற்றும் ராஜரீக உறவுகளின் ஊடாக வெள்ளை அணியில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையிலான யுத்தத்தை தோற்றுவிப்பது. 3) விஞ்ஞான தொழில்நுட்ப யுத்தத்தை நடத்துவது. மத்திய கிழக்கு நாடுகள் அணு தொழில்நுட்ப வல்லமையைப் பெற்று விடாமல் தடுப்பதற்காக நேரடியான அழித்தொழிப்பு தாக்குதல் தாக்குதல்களை விஞ்ஞானிகள் மீதும் படத்துறை தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மீதும் நடத்திப் படுகொலை செய்தல். அமெரிக்காவின் திட்டம் இதுதானா? இத்தகைய முப்பரிமாண உள்ளடக்கத்தைக் கொண்ட தான் போர் வியூகத்தையே அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரானில் ஒரு நேரடியான தரைவழி யுத்தத்தை ஆரம்பித்தால் ஈரானில் வாழ்கின்ற எட்டு கோடி பாரசீகர்களினதும் கடும் எதிர்ப்பைச் சம்பாதிப்பது மாத்திரமல்ல மத்திய கிழக்கின் வாழ்கின்ற 53 கோடி இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும், ஆப்பிரிக்க, தெற்கு-தென் கிழக்காசிய நாடுகளில் வாழ்கின்ற 153 கோடி இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும் என்பதனால் ஈரானில் ஒருபோதும் ஒரு தரைவழிப்போர் நடத்துவதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது. ஆயினும் இந்தத் தாக்குதல்களில் ஈரான் எடுக்கின்ற கடும் போக்கு ஈரானுக்கு அதன் வளர்ச்சியின் 20 வருடம் பின்னோக்கி தள்ளுவதாக அமையலாம். இந்த யுத்தத்தை ஈரானியர்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டு செல்லவே விரும்புகின்றனர். மத்திய கிழக்கில் ஒரு நீடித்த போருக்கு அமெரிக்கா செல்வதாக இருந்தால் அது அதனுடைய உலகம் தழுவிய மேலாண்மையை இழக்கும் நிலையயையே ஏற்படும். ஆகவே தான் அமெரிக்கா தனது அரசியல் பொருளியல் மேலாண்மை நலன்களை தொடர்ந்து பேணவும், அடையவும் ஈரான் மீது படைவீரர்களைத் தரையிறக்கம் செய்யாமல் விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வான்வழியூடான சீரழிப்பு யுத்த முறைமையை கையாண்டு காலத்துக்கு காலம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி ஈரானின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை தடுத்து வருகிறது. இன்றைய யுத்தம் என்பது வெறும் படை வீரர்களின் எண்ணிக்கையிலோ, படைக்கல எண்ணிக்கையிலும் தீர்மானிக்கப்படுவதல்ல. அது முற்றிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் மட்டுமே போரின் வெற்றிகள் தோல்விகள் நிர்ணயம் பெறுகின்றன. ஆகவே தொழில்நுட்பத்தின் அதிலும் குறிப்பாக ராணுவ தளபாடத் தொழில்நுட்பத்தின் பரவலை தடுப்பதற்கான யுத்தமாகவே இந்த யுத்தம் முதலாவது கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். பரவலை தடுத்து விட்டால் ராணுவ மேலாதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்கவும் உலக ஒழுங்காய் தீர்மானிக்கும் சக்தியாக தொடர்ந்து நிலைக்க முடியும். மத்திய கிழக்கிலும் ஈரானிலும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களும் யுத்தங்களும் வெறுமனே மூல வளங்களை பெறுவதற்கான யுத்தமாகவோ அல்லது மேலெழுந்த வாரியாக அரசியல் ராணுவ ஆய்வுகளில் குறிப்பிடப்படுகின்ற சதிக்கோட்பாட்டு(Conspiracy theory) விளக்கத்தை மாத்திரம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு சதிக் கோட்பாடு சதி என்று கூறுவோமேயானால் மத்திய கிழக்கின் அரசியல் தத்துவார்த்த விளக்கம் போதாமையையே வெளிப்படுத்தும். எனவே அதிலிருந்து மேலும் பல படிகள் முன்னேறி விரிவான ஒரு பரந்த பார்வைக்கூடாக இதனை உற்று நோக்கினால் மத்திய கிழக்கில் நடைபெறுவது சீரழிப்பு யுத்தம் முறை என வரையறுப்பது தான் பொருத்தமானது. பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 22 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/reason-for-the-us-airstrike-1774192355
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் Published By: Vishnu 24 Mar, 2026 | 03:36 AM மத்திய கிழக்கில் போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தாலும், ஈரானிய ஆட்சி முழுமையாகக் கவிழ்க்கப்படும் வரை போரை நிறுத்தக்கூடாது என்று இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் வலியுறுத்துகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் நேரத்தில், அரசாங்கம் உள்நாட்டுச் சட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறி, அவர் இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகள் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்கள், உலகளாவிய சந்தைகளையும் விமானப் பயணத்தையும் ஏற்கனவே கடுமையாகப் பாதித்துள்ளன. https://www.virakesari.lk/article/241781
-
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 18 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. முன்னதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் புருஜெர்டி இத்தகைய கட்டணம் குறித்துக் குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகம் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மின் கட்டமைப்புகள் 48 மணி நேரத்திற்குள் இந்த நீர்வழியைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இக்கட்டான சூழலில், கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளே தவிர, அவை ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீர்வழியைச் சுற்றி நிலவும் இராஜதந்திரப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானின் இந்த விளக்கம் சர்வதேசச் சந்தையில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...!
-
கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து: சுமார் 110 பேர் பலியாகியிருலாம் என அச்சம்
கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து: சுமார் 110 பேர் பலியாகியிருலாம் என அச்சம் Published By: Vishnu 23 Mar, 2026 | 10:27 PM கொலம்பியா வான்படைக்கு சொந்தமான Lockheed C-130 Hercules போக்குவரத்து விமானம், புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் இரண்டு முழு இராணுவ படைத்தளங்கள் உட்பட சுமார் 100 இராணுவத்தினர் பயணம் செய்ததாக ஆரம்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன. விமானம் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமப்புறப் பகுதியில் வீழ்ந்துள்ளதாகவும், தற்போது மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்த முழுமையான விபரங்களும், பயணிகள் பட்டியலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/241775
-
வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி
எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு Mar 24, 2026 - 06:40 AM - 0 அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசியலமைப்புச் சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த வழிகாட்டல் ஆலோசனைகள் நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக அரச அலுவலகங்களின் பணியாளர் போக்குவரத்து மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்திற்காக அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் வலுசக்தியை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்குப் (Air Conditioners) பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும் அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்களில் மின்தூக்கி (Lift) பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் அந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி (Online) ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்யுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் எனவும், தேசிய வலுசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண வேண்டும் எனவும் அந்த வழிகாட்டல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmn3x48eq0003356pjpeohu05
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம்🤣
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு Mar 24, 2026 - 08:08 AM டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆயினும், காற்றின் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn409ioz0008356psfp6ghcv
-
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு - ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கடும் கண்டனம் Published By: Vishnu 24 Mar, 2026 | 03:17 AM (நா.தனுஜா) கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இச்செயல் கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மேமாதம் அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சேதப்படுத்தப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்தின் புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இந்நடவடிக்கை குறித்துக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையையும் கோபத்தையும் அளிக்கிறது. இந்த நினைவகம், உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். அத்தோடு கனடாவைத் தமது தாயகமாகக்கொண்டு வாழும் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாகும்' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை 'ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் உறுப்பினர் என்ற ரீதியில், தெற்காசியாவுக்கு வெளியே மிகப்பெரும் எண்ணிக்கையில் வாழும் துடிப்புமிக்க மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது தொகுதி மக்களையும், ஒன்ராரியோ முழுவதும் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் பொறுத்தமட்டில் இந்த சிதைப்பு நடவடிக்கை என்பது கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும். ஒன்ராரியோவில் வெறுப்புணர்வுக்கும் இனவழிப்பு மறுப்புக்கும் இடமில்லை. தமிழர் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், தமது உறவுகளை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமைக்கு மதிப்பளிப்பதிலும் நாம் உறுதியாக நிற்போம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241778
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
சரியாகச் சொன்னீர்கள். உண்மையில் எதிர்காலத்தில் உலகம் எங்கும்… விமான நிலையம், பஸ் நிலையம், பல் பொருள் அங்காடிகள், மற்றும் பெருமளவு மக்கள் கூடும் விழாக்கள் என்று… தொடர் குண்டு வெடிப்புகள். நடக்க சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அந்தக் கடைசி வரி… மிக அருமை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இன்னும் கப்பல்களும் ஆளணிகளும் உரிய இடத்திற்குப் போகவில்லை என்று நினைக்கிறேன். வெகிசூலாவிலும் இதே நடந்தது. சிஐஏ யின் வேலை முடியுமட்டும் பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தார்கள்.
- Yesterday
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஈரானில் மத ஆட்சிக்கு எதிரானவர்கள் கூட இந்தப்போரில் அனிஞாயமாக கொல்லப்பட்டுள்ளனர், அழிவை சந்தித்துள்ளனர், ஆட்சி முறையை காரணம் காட்டியே எதிரிகள் நாட்டை சூறையாடவும் அழிவுகளுக்கும் வழி வகுத்தன. ஆகவே இரானிய ஆட்சியாளர்கள் இதனை மனதிற்கொண்டு தங்கள் கடும் போக்கை தளர்த்தி, மாற்றி அனைத்து அரபு நாடுகளையும் அணைத்து ஒன்றிணைந்த பலமான சக்தியாக இயங்க முன்வரவேண்டும். இதுவே எதிர்கால வளமான ஈரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சிறந்தது!
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
சீனாவை நம்பினால், இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பிலிப்பைன்ஸ், இலங்கை எல்லா நாட்டிலிருந்தும் வந்த ஊழியர்கள் பெட்டி படுக்கையுடன் நாடு திரும்ப வேண்டிய நிலைதான் வரும், அமெரிக்காவே மேல்😄, அயலவர்களை நிம்மதியாக இருக்கவிட்டால்