stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் Mar 8, 2026 - 11:02 AM தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது. அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்
-
நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு
இனி இப்படியான குண்டு வெடிப்புகள் உலகம் எங்கும் நடக்கும். என்று எதிர்பார்க்கலாம்.
-
இன்று சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை 06 Mar, 2026 | 04:58 PM பெண்களின் சம உரிமைகள், நீதி மற்றும் கௌரவம் என்பவற்றுக்காகத் தொடரும் போராட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் என்பது பெரும் குறியீட்டுருவான முக்கியத்துவத்தினை வகிக்கின்றது. இந்த வருட சர்வதேச மகளிர் தினத்துக்கான ஐக்கிய நாடுகள் தொனிப்பொருள், ‘உரிமைகள், நீதி, நடவடிக்கை, சகல பெண்களுக்காகவும் சிறுமிகளுக்காகவும்’ என்பதாகும். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினைப் புதுப்பிக்கும் ஒரு நாளாகவே பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் இந்த நாளைக் கருதுகின்றோம். இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் வகிபாத்திரம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தினை வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, 2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவாக்க மேம்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கின்றது. அரசியலமைப்புப் பேரவையினதும் பாராளுமன்றப் பெண்கள் குழுவினதும் விதப்புரைகளின் அடிப்படையில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டனர். ஒரு சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பரந்த அதிகாரங்கள் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு ஆணையாக வழங்கப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் பற்றிய மீறுகையினை விசாரித்துப் புலனாய்வு செய்வதற்கான தத்துவம் முதற்கொண்டு, மத்தியஸ்தத்தின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின் உரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுவதற்காகவும் பெண்களின் உரிமைகள் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அரச நிறுவனங்கள் மாத்திரமன்றி தனிநபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இயைந்தொழுகுவதைக் கண்காணித்து மதிப்பிடுவதற்காகவும் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் பற்றிய ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்குதல் வரை இந்தத் தத்துவதங்கள் பரவிக் காணப்படுகின்றன. 2004ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டம் மற்றும் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஆகியன நாடு முழுவதுமுள்ள பெண்கள் உரிமைகள் கூட்டுக்களதும் அமைப்புக்களதும் தசாப்த கால போராட்டங்களினதும் அயரா முயற்சியினதும் உச்சபட்ச விளைவே என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 2025 செப்டெம்பரில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஆணைக்குழுவுக்கென சுயாதீனமானஅலுவலக வளவுகள் இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை போன்ற பல சவால்களுக்குப் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஆணைக்குழுவின் முதலாவது தவிசாளர் நியமிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே அவர் அண்மையில் அப்பதவியினை இராஜினாமா செய்தமையும் இச்சவால்களுள் உள்ளடங்குகின்றது. சம்பந்தப்பட்ட சகல பங்கீடு பாட்டாளர்களினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் இச்சவால்கள் தீர்க்கப்படவேண்டியுள்ள நிலையில், கடந்த மாதங்களில் எமக்கு எண்ணற்ற வழிகளில் உதவிய அனைவரினதும் அந்த உதவிகளை நாம் ஆழமான மெச்சுதலுடன் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த நாட்டின் பெண்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன என்பதுடன் இச்சவால்கள் பின்வருவனவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவை அல்ல. பெண்களைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தல், பொருளாதார வலுவூட்டலின்மை, பாகுபாடு மிக்க சட்டக் கட்டமைப்புக்களாலும் நிறுவனக் கட்டமைப்புக்களாலும் ஏற்படும் முழுமையான அநீதிகளுக்குப் பெண்கள் உட்படல், அரசியல் பதவிகளிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்கள் போதியளவு இடம்பெறாமை, ஒரு பால்நிலையினருக்கு மாத்திரம் அதிக தாக்கம் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புறுநிலைகள். எனவே, சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பவற்றினை உறுதிப்படுத்த பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினால் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன.Politics இந்த பின்னணியை கருத்தில்கொண்டு, கடுமையான வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், பணியாளர்களும் பொருத்தமான அலுவலக வளவுகளும் இல்லாதிருக்கையிலும் எம்மால் இனியும் மௌனம் காக்க முடியாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். எனவே, பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதான செயற்பாடுகளில் சிலவற்றினை பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு தொடங்கும். அவற்றுள் உள்ளடங்குபவை: ⦁ பெண்களின் உரிமைகள் தொடர்பான, 2024ஆம் ஆண்டின் பெண்கள் வலுவூட்டல் சட்டம் தொடர்பான பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், நியமங்கள் மற்றும் தராதரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தகவல்களைப் பரப்பவும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல். ⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கும் ஆய்வினைப் பொறுப்பேற்று அறிவினைப் பரப்புதல். ⦁ பின்வருவன தொடர்பாக அரசாங்கத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கும் விதப்புரைகளை வழங்குதல்:அ) உள்நாட்டுச் சட்டங்களும் கொள்கைகளும் நிர்வாக நடைமுறைகளும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆ) பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் தேவைப்படும் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நிர்வாகப் பணிப்புரைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கல். ⦁ பெண்களின் உரிமைகள் பற்றிய உத்தேசச் சட்டவாக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றின் தாக்கத்தினை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்களுக்கு விதப்புரைகளை வழங்குதல். ⦁ பெண்களின் உரிமைகளைப் பாதிக்கும் முக்கியமான விடயங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகப் பகிரங்கக் கூற்றுக்களை வெளியிடுதல். ⦁ பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பொதுவான கொள்கைகளையும் நடைமுறைகளையும் போஷிப்பதற்காக அரச நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற செயற்படுனர்களுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் இணைந்து செயற்படுதல். மேலும் ⦁ பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் தொடர்பாக ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்கல். பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் காரணமாக பெண்களின் உரிமைகள் மீறுகை தொடர்பாக விசாரித்துப் புலனாய்வு செய்யும் முக்கியமானதும் இன்றியமையாததுமான செயற்பாட்டினைப் பொறுப்பேற்பதற்கு ஆணைக்குழுவுக்குத் தற்போது இயலாமலிருக்கின்றது. பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, விசாரித்துப் புலனாய்வு செய்யும் அதன் செயற்பாடுகளின் அதீத முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்வதுடன், நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஆணைக்குழுவினை இயங்கவைப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதற்காக முனைப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. முடிவாக, நீதியில் நிலவும் இடைவெளியினை நிரப்பவும், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறையினையும் பாகுபாட்டினையும் இல்லாதொழிப்பதற்கும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்தவும் எம்முடன் கூட்டாகப் பணியாற்ற நாம் சகல அரச நிறுவனங்களையும் அரச சார்பற்ற செயற்படுனர்களையும் சிவில் சமூகத்தினையும் பொதுமக்களையும் அழைக்கின்றோம். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு சுயாதீனமானதும் சட்ட ரீதியானதுமான நிறுவனப் பொறிமுறையினைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் பெண்கள் உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தசாப்த காலப் போராட்டத்தினை நாம் கௌரவிக்கின்றோம். Beaches & Islands ஆணையாளர்கள் என்ற ரீதியில், இலங்கையிலுள்ள சகல பெண்களுக்காகவும் சமமான உரிமைகளையும் கௌவரத்தினையும் நீதியினையும் பற்றிப்பிடிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சாத்தியமான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினை நாம் மீளுறுதிப்படுத்துகின்றோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் : பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அறிக்கை
-
நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு
நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 09:49 AM நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு நுழைவாயிலையே இந்த வெடிப்புத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளது. கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸ் கட்டளை அதிகாரி மைக்கேல் டெல்மர் தெரிவித்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்லோ பொலிஸார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய பொலிஸார் தூதரகத்தைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கும் மத்திய கிழக்கு போருக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! Mar 8, 2026 - 08:50 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது "உண்மை வாக்குறுதி" நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது. குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான 'அரிப்ஜான்' (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
-
109 ஆவது பொன் அணிகளின் சமர்
புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 10:58 AM இலங்கையின் வட பகுதியில் பிரசித்திபெற்ற பாடாசலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் அணிக்கும் வட்டுகோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர் இம் மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னணி இணைப்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதுடன் இந்த வருடம் வட்டக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் சமர் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், டோக்கியோ சிமென்ட் நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன. இந்தப் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது யாழ்ப்பாணம் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், பலவிதமான இடையூறுகளுக்கும் மத்தியில் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருவதாகவும் இந்த இரண்டு பாடசாலைகளும் நட்பில் பிணைந்திருப்பதாகவும் கூறினர். பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியம் ரி20 கிரிக்கெட் போட்டியும் நடைபெறும். இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளினதும் உறவுகளும் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க, வட பகுதியில் பொன் அணிகளின் சமருக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக டயலொக் ஆசிஆட்டா பிரதிநிதி தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன. புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை
-
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கட்டுரை தகவல் சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் இவ்வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கியது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிப்ரவரி 23ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது. இந்நிலையில் மார்ச் 7 அன்று நீதிபதி சுந்தரராஜன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை பெற்று தந்த ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜிஷா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் குற்றம் நடந்த நேரம் இரவாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த தகவல்கள் மட்டுமல்லாமல் குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்தோம்.'' என்றார். ''அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்கள் பெறப்பட்டது. டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது முதல் குற்றம் செய்து விட்டு தப்பி சென்றது வரையிலான 22 சிசிடிவி காட்சி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு பழைய வழக்குகள் உள்ளன. அவர்கள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட முதல் வழக்கு இதுதான். பாதிக்கப்பட்ட பெண் குறித்து பரப்பபட்ட தவறான பிம்பங்களை சட்டரீதியாகவும் உடைத்துள்ளோம்" என்று கூறினார். "எதிர்தரப்பில் அந்த நேரத்தில் ஏன் பாதிக்கப்பட்ட பெண் அங்கு வந்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இரவு 10:45 மணிக்கு மட்டுமல்ல, நள்ளிரவு 2 மணிக்கு கூட பெண் அங்கு செல்லலாம். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கு வரவில்லை என்ற வாதத்தையும் முன்வைத்தனர். அதற்கும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது." என்றார். படக்குறிப்பு,ஜிஷா கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரி முடிவுகள் துல்லியமாகத் திரட்டப்பட்டது. நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். சிறைக்கு அழைத்து சென்ற போது குற்றவாளிகளில் ஒருவர் மீசையை முறுக்கிக் கொண்டு சைகை காண்பித்து சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்ட பெண் பயப்பட தேவை இல்லை. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கோவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குற்றச் செயல்கள் என்பது ஓர் அசாதாரண மனநிலை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் வெளியே வர முடியாது. பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை" என்றார். விசாரணை அதிகாரி கூறுவது என்ன? இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான காவல் ஆய்வாளர் அர்ஜுன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "மொத்தம் 60 காவல்துறையினர் இந்த வழக்கில் பணியாற்றினர். இந்த வழக்கில் பல்வேறு சவால்களை சந்தித்தோம். குற்றம் நிகழ்த்தப்பட்டு எங்களுக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணை காலை வரை தேடும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அந்த பெண்ணின் உடையை முதலில் கைப்பற்றிய போது அவரை உயிருடன் மீட்டுவிடுவோமா என்ற கவலை இருந்தது. பின்னர் குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில்அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து அவர் உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வந்த பின்னர் அவரிடம் புகார் பெறப்பட்டது. அதேபோல் குற்றவாளிகளை உறுதி செய்து பிடிக்க செல்லும் போது பதுங்கியிருந்த அவர்கள் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்தாலும், குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு வலுவான ஆதாரங்களை திரட்டி ஒரு மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததும் கடும் சவாலாக இருந்தது. இதுபோன்ற குற்றங்கள் புகார்களாக அளிக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் துணிச்சலாக இதை செய்கின்றனர். இந்த தீர்ப்பு அதுபோன்ற குற்றவாளிகளுக்கு பாடமாக இருக்கும். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இதை அணுக வேண்டும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நிராயுதபாணிக் கப்பல் என்ற தகவலை மறுத்தது அமெரிக்கா Mar 8, 2026 - 07:52 AM இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. குறித்த கப்பலானது ஆயுத மோதல் சட்டத்தின் கீழ் ஒரு செல்லுபடியாகும் இராணுவ இலக்காகும். எனவே, அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுளளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmh4fgqo0006356pjsispg9y
-
இன்று சர்வதேச மகளிர் தினம்
இன்று சர்வதேச மகளிர் தினம் Mar 8, 2026 - 06:55 AM பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச தினமாக முன்மொழியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. பின்னர் 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகப் பெயரிடப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தில் பிரதானமாக மூன்று நிறங்கள் பயன்படுத்தப்படுவதுடன், அது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களால் பிரதிபலிக்கப்படுகிறது. ஊதா நிறம் நீதி மற்றும் கௌரவத்தையும், பச்சை நிறம் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது. அதேபோன்று வெள்ளை நிறம் தூய்மையை அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினம்
-
ஈரான் மீதான தாக்குதல் - பாரிய எதிர்ப்புப் பேரணி
இலண்டனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கிப் பாரிய எதிர்ப்புப் பேரணி Mar 7, 2026 - 11:33 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் கலந்துகொண்டுள்ள பலர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தப் போராட்டமானது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒன்றல்ல என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலண்டனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கிப் பாரிய எதிர்ப்புப் பேரணி
-
டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி
டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி Published By: Digital Desk 1 08 Mar, 2026 | 08:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பயணத்தை அடுத்து, கட்சிக்குள் நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரில்வின் சில்வா, தனது பயணம் தொடர்பான விவரங்களைக் கட்சியினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் இறுதியில், மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உடனடியாகத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் முதற்படியாக, இன்று ஞாயிற்றுகிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பெண்கள் தினக் கொண்டாட்டப் பேரணி, மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பியின் களம் இறங்கும் ஆரம்பப் புள்ளியாக அமைய உள்ளது. கடந்த சில காலங்களாக மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி தலைமையகம் மட்டுமன்றி, இந்தியாவிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என இந்தியாவிற்கும் ஏனைய தரப்பினருக்கும் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய செல்வாக்கு 20 வீதம் - 30 வீதம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளியாகும் கருத்துக்களால் கட்சித் தலைமை கவலையடைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவுகளின் போது பெலவத்தைக்குத் தெரியாத இந்த அதிர்வு, இப்போது நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்களால் உணரத் தொடங்கியுள்ளது. இதனைச் சரிசெய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 6-7 மாத காலப்பகுதிக்குள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றவும், பின்னடைவைச் சந்தித்துள்ள துறைகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, 'திருடர்களைப் பிடிக்கும்' பணிகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த அனைத்து நகர்வுகளும் இறுதியாக மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியே அமையப்போகிறது. எவ்வாறாயினும் மார்ச் 8 கொழும்பு மகளிர் பேரணி, ஜே.வி.பியின் பலத்தைக் காட்டும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி
- Today
-
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்
விகாரை கட்டுவதுதானே தேசிய பாதுகாப்பு? காணிகளை விடுவித்தால் எப்படி விகாரைகள் கட்டமுடியும்!
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
பேசாமல் இலங்கையில் இவர்களுக்கு பீ ஆர் கொடுத்து ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையில் சேர்த்துவிடலாமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இப்போ கணிக்க கஸ்டம். சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன். மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன். வெறும் ஊகம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுதான் அவர்களுக்கு மிக அழுத்தத்தைக் குடுக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டி இந்தியாவிற்கு சார்பான ஒரு பக்க போட்டியாக இருக்கும் என அனைத்து இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் முன்னால் வீரர்களும் கூறுகிறார்கள். இப்பவே வெற்றியினை கொண்டாடுகிறார்கள், போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடுமோ என கருதுகிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மிஞ்சி மிஞ்சி போனா 10% வாக்குகள் பெறுவார்களா? தற்போதய சூழ்நிலை எந்தளவு வாக்கு வீத சரிவினை ஏற்படுத்தும் 2% ? (10-2 = 8), கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதே அளவு வாக்குதான் விழுந்த்தது என நினைக்கிறேன்(8%).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
நீங்கள் பிழைக்க தெரிந்த ஆள், பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொண்டு எங்களை இத்து போன கூட்டணியில் இணைத்துவிடப்பார்க்கிறீர்கள், தமிழ்நாட்டு வழக்கில் சொன்னால் உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா, அன்ட்ரேமார்க்கும் இல்லை உங்க காட்டிலை மழைதான்.🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன். தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது…. இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன். வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது. பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂 - உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.