stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பிடி ஒன்றுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியா, சிம்பாப்வே, இலங்கை ஒரே புள்ளிகள் பெறலாம். இலங்கையின் ஓட்ட விகிதம் மிகவும் கூட. தோற்பதை மிகவும் மோசமாகத் தோக்காட்டி சரி.
- Today
-
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது
ஏக்கிய ராஜ்ய சட்ட வரைபை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்து, வக்காலத்து வாங்கியவர் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப்பற்றற்ற பதில் பொதுச்செயலாளர். அது நடைமுறைப்படுத்தாவிடில் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டவர், அதை அனுரா நடைமுறைப்படுத்துவார், தனக்கு அழைப்பெடுப்பார் எனக்காத்திருந்தவர், இன்றுவரை தனக்கும் அழைப்பு வருமென்றே எல்லோரையும் பதவி நீக்கி கட்சியை அபகரித்து காத்திருக்கிறார். பதில் தலைவர் இப்படிச்சொல்கிறார். இந்தக்கட்சியில் ஆளுக்கொரு கொள்கை, நடைமுறை, பேச்சு, முடிவு. இதில பாரம்பரியக்கட்சி என்று கூவல் வேறு.
-
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
மொழிபெயர்ப்பு. 5 வருடத்தில் நிரந்தர வதிவுரிமை எடுத்த பின், குழந்தை பெற்றால் - இருவரும் உழைக்க தேவையில்லை, ஒருவர் உழைக்க மற்றவர் பிள்ளையை பார்க்க, சோசல் காசில் காலம் தள்ளலாம் என நினைத்தோம். இதில் சரி பிழை சொல்ல நான் வரவில்லை. ஆனால் இப்படியான திட்டமிட்ட சோசல் சுரண்டலால்தான் 5 வருடத்தில் இருந்து 10, 15 என யோசிக்கிறார்கள். ரிபோர்ம் பார்ட்டி அரசு அமைக்கின், பிரிதானிய பிரஜைகளுக்கு மட்டுமே சோசல் காசாம். நிரந்தர வதிவுடமை இருந்தாலும் கிடையாதாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படி ஒரு கெட்ட எண்ணமும் இல்லை😂 பாக்கிஸ்தான் இந்தியாவை வெண்டாலும் வெல்லலாம்….நான் வீட்டில் இருந்து வெளியேறுவது மட்டும் நடக்காது என்பது எழுதப்படாத விதி. கணிப்பு அப்படி😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எப்பிடியாவது.... என்னவாவது செய்து.... மேல வரலாம் என்று பாக்கிறியலோ. 😁
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
பிகு முதலாவது லெப்டினெண்ட் - சங்கர் முதலாவது கேணல் - கிட்டு முதலாவது பிரிகேடியர் - தமிழ்செல்வன் முதலாவது 2ம் லெப், கப்டன், மேஜர் ஆர் ஆர் என எவருக்கும் தெரியுமா? கப்டன் - பண்டிதர்?
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
முதலாம் லெப்ரினெண்ட்டை, லெப்ரினெட் என அழைத்தார்கள். அப்படி ஏதும் நான் அறியவில்லை. புலிகள்/தலைவர் அப்படி நினைத்திருந்தால் அப்போதே தரநிலைகளை அறிவிக்கும் வழக்கத்தை கைகொண்டிருக்க மாட்டார்கள். அனைத்து மாவீரரின் தியாகமும் ஒன்றே. ஆனால் ஒரு இராணுவத்தில் தரநிலை முக்கியமானது. இது உலகெங்கும் உள்ள வழமை. இது வீரர்களிடையே பாகுபாடு காட்டுவதாகாது. செல்லகிளி அம்மான்….. லெப். செல்லகிளி. மாலதி…. 2ம் லெப். மாலதி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கையுடன் தோற்றாலும் அவுஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு போவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிம்பாவே மிகுதியாக இருக்கும் 2 போடிகளிலிலும் (இலங்கை, அயர்லாந்து ) தோற்கவேண்டும். அவுஸ்திரேலியா ஓமனை வெல்லவேண்டும். அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாவே ஆகிய நாடுகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஒட்டவிகிதம் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் நாடு தெரிவு செய்யப்படும்.
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாயை அவிட்டு விடுங்க. முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
வணக்கம் கறுப்பி... மிக நீண்ட காலங்களுக்கு பிறகு உங்கள் பதிவை வாசிக்கிறேன். நலமாக இருக்குறீர்களா? 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படி நடந்தால் இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து( நேபாளத்தினை வென்றால்)ஒரே புள்ளிகள் இருக்கும். ஒட்ட விகித அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் நாடு தீர்மானிக்கப்படும். இதுவரை நடந்த போட்டிகளில் மேற்கிந்தியா தீவு, இந்தியா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந்து கனடாவுடன் தோற்றால் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாங்கள் ஏதாவது உதவி செய்யலாம் என்றால் சொல்லுங்க.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
முதலாம் லெப்ரினண்ட் தரம் புலிகள் அமைப்பு வழங்கியதாக நினைவு இல்லை. வீரவேங்கை, 2ம் லெப்ரினண்ட், லெப்ரினண்ட், கப்டன், மேஜர், லெப் கேணல் இவைதான் பொதுவானவை. கிட்டு அவர்கள் மாவீரரானபோது முதன் முதலாக கேணல் தரம் அறிவிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அவர்கள் மாவீரரான போது முதலால பிரிகேடியர் தரம் அறிவிக்கப்பட்டது என நினைக்கின்றேன். தரம் வழங்குவதில் பிரதேசவாரியாக வேறுபாடு காட்டப்பட்டது என மக்களிடையே அதிருப்தி காணப்பட்டது. இவ்வாறே தண்டனை பெற்ற போராளிகள் மாவீரர் ஆனபோது தரம் குறைத்து அறிவிக்கப்பட்டார்கள். ஊரில் வாழ்ந்த எமக்கு எமது நண்பர்கள், ஊரவர்கள், உறவினர், அயலவர், ஒன்றாக கற்றோர் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றியபோது அவர்கள் பங்குபற்றிய தாக்குதல்கள் பல மற்றும் அவர்களது பங்களிப்பு பற்றி அதிகம் தெரிய வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் மாவீரர் ஆகும்போது தரநிலைகளும் அறிவிக்கப்படும்போது அது எமக்குள் பல உரையாடல்களை நிகழ்த்தியது. விடுதலை புலிகள் அமைப்பே அழிந்துவிட்ட நிலையில் தமது இனத்திற்காக இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை தர நிலைகள் மூலம் வேறுபடுத்த தேவையில்லையோ என நினைக்கின்றேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாப்பம். நான் அவுஸ் போட்டியில் மேலே போகும் என கணித்தும் உள்ளேன். எனவே நாளைக்கு அவுஸ் வெண்டாலும் பின்னடிக்கு உதவும்😂. இத்தோட போட்டியை கான்சல் பண்ணி, யாரும் வெல்லவில்லை என அறிவித்தாலும் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுப்பர் 8 இறுதி சில மட்சுகளுக்கு புள்ளிகள் கணக்கிட நேரம் கிடைக்காது. தம்பர் ஈரானுக்கு அடிக்கிறாரோ இல்லையோ, நான் மத்திய கிழக்கில் நாலைந்து நாட்கள் நிற்பேன்! கூகிள் ஷீற் அப்பில் sort செய்யும் வசதியை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை!
-
நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன்
நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம்,மேற்சொன்ன சந்திப்பு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது இன்று 15ஆம் திகதி குடிமக்கள் சமூகங்களையும் கட்சிகளையும் ஒரு சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. ”எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படும் இடைக்கால வரைபை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்ப்பாக முன்வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதினால், அதனை எதிர்த்து தமிழ்த் தரப்பு ஒரே குரலில் சமஷ்டித் தீர்வை அதாவது கூட்டாட்சித் தீர்வை வலியுறுத்த வேண்டும் என்றும், அது தொடர்பான ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்காகவே அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15ஆம் திகதி,அதாவது இன்றைய சந்திப்பு இடம்பெறுவதும் சுவிற்சலாந்து தூதரகத்தின் சந்திப்பை தமிழரசுக் கட்சி ஆர்வத்தோடு அணுகாமைக்கு ஒரு காரணம் என்று தெரிகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சுவிற்சலாந்து அண்மை ஆண்டுகளாக அதிகம் ஆர்வம் காட்டிவருகிறது. இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான ராஜிய தொடர்புகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறான நல்லிணக்க முயற்சிகளில் தாம் ஈடுபடுவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாலாம் கட்ட ஈழப் போருக்கு முன்னரான நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியில், இப்பொழுது சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் புதிய முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது. சுவிற்சலாந் இதற்கு முன்னரும் இமாலயப் பிரகடனத்தின் பின்னணியில் நின்றது. மகா சங்கத்துக்கும் சில புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக அந்த பிரகடனம் உருவாக்கப்பட்டது. அது அடுத்தடுத்த கட்டத்துக்கு வளராத ஒரு முயற்சி. அதன்பின் சுவிற்சலாந்து கடந்த ஆண்டு அரசாங்கமும் உட்பட தமிழ் கட்சிகளை தனது நாட்டுக்கு அழைத்து இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் உரையாட வைத்தது. அந்த உரையாடல்களின் அடுத்தடுத்த கட்டமாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தமிழ் கட்சிகளை அழைத்து உரையாடியது. இந்த முயற்சிகளின் ஆகப்பிந்திய நகர்வாக இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சுவிற்சலாந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு,இமாலயப் பிரகடனம் போன்ற முயற்சிகளில் மட்டும் ஆர்வங் காட்டவில்லை. அதற்குமப்பால்,வடக்கிலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான உரையாடல்களுக்கும் நிதி அனுசரணை புரிந்து வருகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்திற்கும் சில செயற்பாடுகளுக்கு நிதி அனுசரனை புரிகிறது. இவ்வாறு கட்சிகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்புகளுக்கும் சுவிட்சர்லாந்து நிதி உதவிகளைச் செய்கிறது. நல்லிணக்கம்,சமாதானம் மனித உரிமைகள்,நிலைமாறு கால நீதி அல்லது பொறுப்பு கூறல் போன்ற வார்த்தைகள் கவர்ச்சியானவை. ஆனால் நவீன அரசியலில் அவை தெளிவான அரசியல்,ராஜதந்திர,பொருளாதார இலக்குகளைக் கொண்டவை. இவ்வாறான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பும் ஒழுங்குசெய்யப்பட்டது. அந்தச் சந்திப்பின் நோக்கம் இனப்பிரச்சினைக்கான பொதுவான ஒரு தீர்வை நோக்கி வருமாறு தமிழ் கட்சிகளை ஊக்குவிப்பது என்று விளங்கிக் கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தமக்கு என்ன வேண்டும் என்பதை ஏன் ஒரே குரலில் கூற முடியவில்லை? தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பு ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு தூதரக மட்டங்களில் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சிவில் சமூகங்கள் சந்தித்தபோது இது சுட்டிக்காட்டப்பட்டது. அப்பொழுது சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக்காட்டினர். 2015ல் நிலைமாறு கால நீதி செய்முறைகளின் கீழ் புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அங்கிருந்து தொடங்கி கோத்தபாயாவின் நிபுணர் குழு வரையிலுமான சுமார் 6 ஆண்டு ஆண்டு கால பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெவ்வேறு தரப்புகள் தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு முன்மொழிவை வெளியிட்டது. அது ஒரு சமஷ்டி முன்மொழிவு. அதன் பின் வடமாகாண சபை ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அதுவும் சமஸ்டி.தவிர வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனின் கட்சி ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அது சமஸ்டியை விட உயர்வான, கொன்பெடரேஷன் என்று அழைக்கப்படுகின்ற ஒரு தீர்வு. இவை தவிர புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்தன. இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக அந்த ஆறு ஆண்டுகாலப் பகுதியைக் கூறலாம். இவ்வாறு முன்வைக்கப்பட்ட எல்லா முன்மொழிவுகளிலும் ஒரு பொதுப் பண்பு இருந்தது. அது என்னவென்றால் அவை அனைத்தும் சமஷ்டிப் பண்பைக் கொண்டிருந்தவை என்பதுதான். இது சிவில் சமூகங்களால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்டார், நீங்கள் குறிப்பிடும் அத்தனை தீர்வு முன்மொழிவுகளையும் தமிழ்த் தரப்பு ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்திருந்து ஒரே ஆவணமாகக் கொடுத்ததா? என்று. இல்லை. கொடுக்கவில்லை. ஏன் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்றால், மேற்சொன்ன அனைத்து தீர்வு முயற்சிகளிலும் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. வட மாகாண சபையின் முன்மொழிவிலும் அது தமிழரசுக்கட்சியின் முன்னொளிவாக வைக்கப்படவில்லை. மாகாண சபையின் முன்மொழிவுதான். எனவே மேற்கண்ட அனைத்து தீர்வு முன்மொழிவுகளிலும் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. ஆனால் அப்போதைய யாப்புருவாக்க முயற்சிகளில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தோடு பங்காளியாகச் செயல்பட்டது. அப்பொழுது தமிழ் மக்கள் பேரவையில் காணப்பட்ட சில கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கொடியின் கீழ் யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் “எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைபானது மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளில் சொன்னால்,சிங்கள மக்களையும் பயமுறுத்தாத தமிழ் மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதைத்தான் இப்பொழுது கஜேந்திரக்குமார் கேள்விக்கு உள்ளாக்குகிறார். வெளிப்படைத் தன்மையற்ற அந்த இடைக்கால வரைபானது ஒற்றையாட்சிப் பண்பு மிக்கது என்று கஜன் குற்றச்சாட்டுகிறார். அதை சுமந்திரன் மறுக்கிறார். அந்த இடைக்கால வரைபை உருவாக்கியதில் ஜேவிபி,தமிழரசுக் கட்சி, புளட் ,டெலோ ஆகியவற்றுக்கும் பங்குண்டு. ஆனால் அண்மை மாதங்களாக தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசி வருகிறது. அதன் விளைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் தொகுத்துப் பார்த்தால் தெரிவது என்னவென்றால், தமிழ்த் தரப்பு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சிதான். எனவே இப்பொழுது தமிழ்த் தரப்பு ஏன் ஒருமித்த குரலில் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது. எல்லாருமே சமஸ்டியைத்தான் கேட்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தோடு இணைந்து அதாவது சிங்கள மக்களையும் பயமுறுத்தாமல் ஒரு தீர்வைக் கொண்டு வருவது என்றால் அது வெளிப்படையான சமஷ்டியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தமிழரசுக் கட்சி கருதுவதாகத் தெரிகிறது. இதை இன்னும் பிழிந்து சொன்னால்,சிங்களப் பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதுதான். இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல், தமிழ்த் தரப்பு போராடாமல். உள்நாட்டுக்குள்ளேயே கண்டுபிடிக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஷ்டியாக இருக்க முடியாது. இந்த இடத்தில்தான் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னமும் கண்காணிப்பும் அழுத்தமும் தேவைப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழ்த் தரப்பு போராடவில்லையென்றால், மூன்றாவது தரப்புகள் அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்றால் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது. இந்திய இலங்கை உடன்படிக்கை அதைத்தான் உணர்த்துகின்றது. ஆனால் 13ஆவது திருத்தம் சமஸ்ரியல்ல. எனவே தமிழ் சிங்கள முஸ்லிம், மலையக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வெளிப்படைத்தன்மை மிக்க எந்த ஒரு தீர்வும் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னம், அழுத்தம்,கண்காணிப்பு இல்லாமல் கிடைக்காது என்பதுதான் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் ஆகும். இப்பொழுது சுவிற்சலாந்து அப்படி ஒரு மூன்றாவது தரப்பாகச் செயல்படுமா? அதை இந்தியா ஆர்வத்தோடு பார்க்குமா? https://www.nillanthan.com/8140/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா பழைய அவுஸ்ரேலியா அணி கிடையாது..........அவேன்ட ஆதிக்கம் 2007உலக கோப்பையோட சரி அதுக்கு பிறக்கு மற்ற நாடுகள் அவைய முக்கியமான பல விளையாட்டில் வென்று இருக்கினம் இப்போது உள்ள அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சு சரி இல்லை நாதல் எலிஸ் இவரை தவிற மற்ற வீரர்களின் பந்து வீச்சு நம்பிக்கை தரும் படி இல்லை நாளை இலங்கை வெல்லக் கூடும் அப்படி வென்றால் உங்கட ஆத்தில் அடை மழை தான்.......................
-
இனித்திடும் இனிய தமிழே....!
Cheran Senguttuvan | Sivaji,Rajasulochana,SSR | kalaignar Karunanithi..........! 😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந்திடம் நாளைக்கு இத்தாலி வாங்கி கட்டப் போகினம் ஹா ஹா.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாதவூரன் வீட்டையே சுத்தி, சுத்தி நோட்டம் விடுறார்…. வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து எதிர் இத்தாலி இது அடிக்கடி உதை பநதாட்டத்தில் பார்க்கும் போட்டி. இப்போது துடுப்பந்தாட்டத்திலும். இத்தாலிக்கு ஏழு கிரகமும் ஒரு சேர அமைஞ்சா, இங்கிலாந்த ஓட விடலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணி அப்பிடி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை திங்கள் 16 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 22 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமீரகம் நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்குமா? 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 21 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவி நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 18 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் ஐந்து பேர் மாத்திரம் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். சிறிலங்கா கறுப்பி வாதவூரான் கிருபன் கோஷான் சே ரசோதரன் இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் கடமை புல்லரிக்க வைக்குது. 💥 அடிக்கடி 250 km போவீங்கள் போல. எப்போதும் கவனமாவே ஓடுங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் அல்வாயன்னுக்கு வாழ்த்துக்கள்..................