stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
நியூ யார்க் நகரில் உறைபனி - தாக்கத்தை உணர்த்தும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ப்ரூக்ளினில் குவிந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடுகின்றனர். கட்டுரை தகவல் குவாசி ஜியாம்ஃபி அசிடூ 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,சென்ட்ரல் பார்கில் குவிந்திருக்கும் பனியில் ஒருவர் சறுக்கி விளையாடுகிறார். நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்கில், 11 செமீ அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,நியூ யார்க் நகரின் ப்ரூக்ளினில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாகாணத்தின் மற்ற இடங்களில் 19 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Kena Betancur/Getty Images படக்குறிப்பு,சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியில் ஆர்வத்துடன் சறுக்கி விளையாடச் செல்லும் குழந்தைகள் பனிப்புயல் காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட கவுன்டிகளில் நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனியில் விளையாடிய மக்கள் பனி மனிதன் உருவத்தை உருவாக்கியுள்ளனர். சனிக்கிழமை, நியூ யார்க் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,பாதையில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட் அவேரின்படி, நாடு முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூடியுள்ள பனிப்பொழிவு சனிக்கிழமை அன்று நியூ யார்கின் மத்தியப் பகுதியான சிராக்யூஸிலிருந்து தென் கிழக்கு பகுதியான லாங் ஐலான்ட் வரை 15 செமீ முதல் 25 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,உறைந்திருக்கும் பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images படக்குறிப்பு,நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்கில் பனியால் சூழப்பட்ட குட்டையில் பறவைகள் கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கவுன்டியில் 22 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனிப்போர்வை போர்த்தியிருக்கும் நியூ யார்கின் சென்ட்ரல் பார்க் பனிப்புயல் தற்போது குறைந்திருந்தாலும் வெப்ப நிலை உறைய வைக்கும் நிலையிலும் சாலைகள் ஆபத்தான நிலையிலும் உள்ளன. பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images படக்குறிப்பு,பனியால் சூழப்பட்ட சென்ட்ரல் பூங்காவில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி வீடற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான கோட் ப்ளூ நியூ யார்க் செயல்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனி போர்த்திய சாலையில் நடந்து செல்லும் மக்கள். பட மூலாதாரம்,Getty Images இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vp1g5ky3o
-
சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது
சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது Published By: Vishnu 28 Dec, 2025 | 10:07 PM சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இவை இருக்கலாமா என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றன. https://www.virakesari.lk/article/234614
-
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சோமாலியர்கள் சோமாலிலாந்து என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரிப் போராடியபோது எடுக்கப்பட்டது. 28 டிசம்பர் 2025, 07:51 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை (Somaliland), தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சோமாலிலாந்துடன் ஒத்துழைப்பை உடனடியாக விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஒரு 'வரலாற்றுத் தருணம்' என்று சோமாலிலாந்து அதிபர் அப்துர்ரஹ்மான் முகமது அப்துல்லாஹி கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு காணொளியில், ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணைய சோமாலிலாந்து கொண்டுள்ள விருப்பம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தெரிவிக்கப் போவதாக நெதன்யாகு கூறினார். 2020-ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது கையெழுத்தான ஆபிரகாம் உடன்படிக்கையின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. இதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார். சோமாலிலாந்தும் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையத் தயாராக இருப்பதாக அப்துல்லாஹி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும், இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, சோமாலிலாந்தை அங்கீகரிக்கும் முடிவை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும், ஆனால் இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார். நியூயார்க் போஸ்ட் (New York Post) டிரம்பிடம் சோமாலிலாந்தை அங்கீகரிப்பீர்களா என்று கேட்டபோது, முதலில் "இல்லை, இன்னும் இல்லை" என்று கூறினார். ஆனால், பின்னர் தனது பதிலை "இல்லை" என்று மாற்றிக்கொண்டார். 'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார். சோமாலியாவிலிருந்து பிரிந்த அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத் தளம் அமையுமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "அது ஒன்றும் பெரிய விஷயமல்ல" என்று அவர் பதிலளித்தார். "எல்லாம் கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இதை ஆராய்வோம். நான் பலவற்றை கவனித்து எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கிறேன், அவை சரியானதாகவே முடிகின்றன," என்று டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,X/@netanyahu படக்குறிப்பு,சோமாலிலாந்து அதிபருடன் காணொளி அழைப்பு மூலம் நெதன்யாகு உரையாடுகிறார். சோமாலிலாந்து உருவானது எப்போது? சோமாலிலாந்து என்பது சோமாலியாவிலிருந்து பிரிந்து 1991 முதல் ஒரு தனி நாடாகச் செயல்பட்டு வரும் பிராந்தியமாகும். இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க சோமாலியா, துருக்கி மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் எகிப்து வெளியுறவு அமைச்சர் தனித்தனியாக தொலைபேசி மூலம் உரையாடினார். எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நான்கு நாடுகளும் சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்துள்ளன. இறையாண்மை கொண்ட நாடுகளின் சில பகுதிகளைத் தனி நாடுகளாக அங்கீகரிப்பது சர்வதேசச் சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் கீழ் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் காஸா போர் மற்றும் இரானுக்கு எதிரான மோதல் உள்ளிட்ட சமீபத்திய போர்கள் அதன் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளன. சோமாலிலாந்து, ஏடன் வளைகுடாவில் ஒரு மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது தனக்கென சொந்த நாணயம், பாஸ்போர்ட் மற்றும் காவல் படைகளைக் கொண்டுள்ளது. 1991-இல் முன்னாள் சர்வாதிகார ஜெனரல் சியாத் பாரேவுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு உருவான சோமாலிலாந்து, அன்றிலிருந்து பல தசாப்தங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் இந்தச் சுய-பிரகடன குடியரசு, சமீபத்திய ஆண்டுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து தொடர்பான பல பிராந்திய மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது. நான்கு புறமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட எத்தியோப்பியா, சோமாலிலாந்துடன் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி எத்தியோப்பியா துறைமுகம் மற்றும் ராணுவத் தளத்திற்காக சோமாலிலாந்தின் கடற்கரையின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுக்க இருந்தது. இது சோமாலியாவை ஆத்திரமடையச் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார். இஸ்ரேலின் இந்த முடிவு ஏன் முக்கியமானது? இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் வெள்ளிக்கிழமை அப்துல்லாஹியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து தொலைபேசியில் உரையாடினார். இதற்கிடையில், சோமாலியாவின் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இது தனது இறையாண்மை மீதான "திட்டமிட்ட தாக்குதல்" என்றும், "இஸ்ரேலால் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை" என்றும் அது கூறியுள்ளது. சோமாலியா தவிர, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருப்பினும், சோமாலிலாந்து துருக்கியின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. "துருக்கியின் எதிர்ப்பு கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. 34 ஆண்டுகளாக சோமாலியாவின் ஒரு பகுதியாக இல்லாத சோமாலிலாந்து குடியரசை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்து அதிபர் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முக்கிய நகரங்களில் நடக்கும் கொண்டாட்டங்கள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றன. சோமாலிலாந்து மக்களுக்கு மதிப்பளிக்குமாறு துருக்கியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அது கூறியுள்ளது. சோமாலிலாந்து பல ஆண்டுகளாகத் தூதரக அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் அப்துல்லாஹி எத்தியோப்பியா சென்றது உள்பட, சமீபகாலமாக அதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நிலவரப்படி சோமாலிலாந்து எந்த நாட்டிலிருந்தும் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றாலும், எத்தியோப்பியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் தூதரகத் தொடர்புகளைப் பேணி வருகிறது மற்றும் அந்த நாடுகளின் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது. முன்னணி அரபு ஊடகமான 'அல்-மானிட்டர்' (Al-Monitor) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கப் படைப் பிரிவின் (US AFRICOM) தலைவர் ஜெனரல் டாக்வின் ஆண்டர்சன் சோமாலிலாந்துக்குச் சென்று அப்துல்லாஹியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த உச்சிமாநாட்டில் சோமாலிலாந்து அதிகாரிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினர் என்று சோமாலிலாந்து வெளியுறவு அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது. சோமாலிலாந்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ராணுவத் தளம் இருப்பதாகத் தகவல்கள் உள்ளன. இருப்பினும், இதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டிபி வேர்ல்ட் நிறுவனத்திற்கு சோமாலிலாந்தின் பெர்பெரா நகரில் ஒரு துறைமுகம் இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தொடர்பு உள்ளதா? இஸ்ரேல் திடீரென சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்குப் பின்னால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிரிக்க விவகாரங்கள் நிபுணரும் ஆய்வாளருமான கேமரூன் ஹட்சன் எக்ஸ் தளத்தில், "பொதுவாக ரகசியமாகச் சொல்லப்படுவதை பிபி (நெதன்யாகு) வெளிப்படையாகக் கூறியுள்ளார். சோமாலிலாந்து அங்கீகாரத்தை ஆபிரகாம் உடன்படிக்கையுடன் இணைப்பதன் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் ஹார்ன் (சோமாலியா தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது) பகுதியை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்த நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செல்வாக்கையும் ஆதரவையும் இஸ்ரேல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று பதிவிட்டுள்ளார். 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்த முதல் நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகும். செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், 'ஆப்பிரிக்காவின் ஹார்ன்' பிராந்தியம் மூலோபாய ரீதியாக முக்கியமாகக் கருதப்படுகிறது. சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள்) ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்த இஸ்ரேல் முனைப்பு காட்டுகிறது. இது 2021-இல் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (African Union) பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் பல உறுப்பு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக 2023-இல் இந்த அந்தஸ்து இடைநீக்கம் செய்யப்பட்டது. அரபு லீக்கில் உறுப்பினராக இருப்பதால், சோமாலியாவுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லை. ஆனால் துருக்கிக்கு சோமாலிலாந்தின் தலைநகரான ஹர்கீசாவில் ஒரு தூதரகம் உள்ளது. இஸ்ரேலின் வியூகம் பட மூலாதாரம்,X/@netanyahu சோமாலிலாந்தை அங்கீகரிப்பதன் பின்னணியில் மூலோபாயக் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தனது எதிர்கால நடவடிக்கை உள்ளிட்ட பல மூலோபாய காரணங்களுக்காக செங்கடல் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு கூட்டாளிகள் தேவை" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கருத்து ஏமனில் உள்ள இரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. அதே அறிக்கையில், "அத்தகைய ஒத்துழைப்புக்கு சோமாலிலாந்து ஒரு சிறந்த நாடாகும், ஏனெனில் அது மோதல் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஒரு செயல்பாட்டுப் பகுதிக்கான அணுகலை இஸ்ரேலுக்கு வழங்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. அதே நேரத்தில், சோமாலிலாந்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாதது வெளிநாட்டுக் கடன்கள், உதவிகள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்குத் தடையாக உள்ளது. இதனால் அந்தப் பிராந்தியம் வறுமையில் சிக்கியுள்ளது. "சோமாலிலாந்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்திருப்பது ஒரு முக்கிய மூலோபாயப் பகுதிக்கு கதவைத் திறக்கிறது: பெர்பெரா துறைமுகத்திற்கு நேரடி அணுகல் கிடைப்பது, ஹூத்தி அச்சுறுத்தலுக்கு மத்தியில் செங்கடல் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இரான் செல்வாக்கை எதிர்கொள்வது," என்று புவிசார் அரசியல் எழுத்தாளர் வாலினா சக்ரோவா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெர்பெரா நகரில் பெரும் முதலீடு மற்றும் ராணுவ இருப்பைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டிரம்பின் நிர்வாகம் இதற்கு ஆதரவு அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2023இல் துருக்கிய அதிபராக எர்துவான் மீண்டும் தேர்வானதை சோமாலியா மக்கள் கொண்டாடியதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. இந்த அங்கீகாரம் துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலிய முன்னாள் அதிபர் முகமது ஃபர்மாஜோ கூறுகையில், "சர்வதேசச் சட்டத்தின்படி, சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இஸ்ரேல் மதிக்க வேண்டும். சோமாலியாவின் எந்தப் பகுதியையும் தனிநாடாக அங்கீகரிப்பது இந்தச் சட்டத்தை முழுமையாக மீறுவதாகும். சோமாலிலாந்து சோமாலியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி. இறையாண்மையைப் பாதுகாப்பதில் எங்கள் மக்கள் உறுதியுடன் இணைந்துள்ளனர்," என்றார். சோமாலியாவை உறுப்பினராக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் சோமாலிலாந்துக்கான எந்தவொரு அங்கீகாரத்தையும் நிராகரித்துள்ளது. "சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் கண்டம் முழுவதிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்," என்று அதன் தலைவர் மஹ்மூத் அலி யூசுப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், துருக்கி நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவரும், துருக்கிய எம்.பி.யுமான சி கானி டோருன், சோமாலிலாந்துக்கான தனி நாடு அங்கீகாரம் துருக்கிக்கு விழுந்த பெரிய அடி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சோமாலிலாந்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருப்பது கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகள் செங்கடல், ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா பிராந்தியம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மோதல்களையும் தூண்டும்," என்று பதிவிட்டுள்ளார். "துருக்கி 2011-ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் முதலீடு செய்து வருகிறது," என்று டோருன் கூறியுள்ளார். "துருக்கி, சோமாலியாவின் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ கூட்டாளியாகும். நான் தூதராக இருந்த காலத்தில் 2013-இல் தொடங்கப்பட்ட சோமாலியா-சோமாலிலாந்து பேச்சுவார்த்தைகள் ஒருங்கிணைப்பை நோக்கிய நடவடிக்கைகளை வலுப்படுத்தின." "இந்த முடிவு பிராந்திய சமநிலையை மாற்றும். துரதிர்ஷ்டவசமாக பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கும். மற்ற நாடுகள் இந்த முடிவை அங்கீகரிப்பதைத் தடுக்க பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் இணைந்து செயல்படக் கூடிய வகையிலான கொள்கையை துருக்கி அவசரமாகப் பின்பற்ற வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவின் இறையாண்மைக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 முதல் சோமாலிலாந்து ஒரு தனி பிரதேசமாக இருந்து வருகிறது, இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC), இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஓஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோமாலிலாந்தை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம். இது சோமாலியாவின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுகிறது. சோமாலியாவின் இறையாண்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (GCC) தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜிசிசி பொதுச் செயலாளர் ஜாசிம் முகமது அல்-புடாவி, இஸ்ரேலின் முடிவை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிசிசி பொதுச் செயலாளர் கூறுகையில், "இந்த அங்கீகாரம் ஆப்பிரிக்காவின் ஹார்ன் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது பதற்றங்களையும் புதிய மோதல்களையும் தூண்டும். இது பிராந்தியத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிரானது," என்றார். ஜிசிசியில் மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன - பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62dpx882vno
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்னைப்போல் ஒருவரா நீங்கள்?!🤪
-
காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார
காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார Published By: Vishnu 28 Dec, 2025 | 09:26 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொண்டார்கள். அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தித்வா சூறாவளி தாக்கத்தால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. நாட்டில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) அசாதாரண காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பாரிய அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. மழையுடனான காலநிலை மாத்திரமே நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுவது உண்மையா அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுவது உண்மையா, இது அரச நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாட்டையும், பரஸ்பர வேறுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/234613
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்கிலசாரின் வரலாற்றை விக்கி கலைக்களஞ்சியத்தில் வாசித்தேன். தலை சுற்றுதய்யா! தாயார் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியையாம். இவருக்கு ஆறு வயதிலேயே மறைந்துவிட்டார். டக்லசாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க இதுவே ஆரம்பம் போல் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் நானும் கலந்துகொள்கின்றேன் ஈழப்பிரியன். இவ்வளவு கேட்டாப்பிறகும் கலந்துகொள்ளாவிட்டால் இவ்வளவு காலமும் நான் எழுதிய சோதனைகளுக்கு மரியாதை இல்லாமல் போயிடும். 😁 எத்தனை சோதனைகள் படிக்காமல் போய் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகள் விளங்காமல் பதில் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகளை வாசிக்காமலே பதில் எழுதினோம். இதை செய்யமாட்டேனா என்ன!!
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம். இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ; இந்தியாவில் 08 பேர் கைது Published By: Digital Desk 3 28 Dec, 2025 | 02:50 PM இந்தியாவின், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அனகாப்பள்ளி மாவட்டம் நாதாவரம் பொலிஸார், உயர்தர சீலாவதி வகை கஞ்சாவை நர்சிபட்டினம் பகுதியில் இருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 08 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் அடங்குவார். ஆந்திர–ஒடிசா எல்லைப் பகுதிகளில் விளையும் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராக 28 வயதுடைய காடே ரேணுகா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மாவட்டம் சாந்தகாவிட்டி பகுதியைச் சேர்ந்த ரேணுகா, பயக்கராபேட்டை, நர்சிபட்டினம், சலூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், ‘லேடி டான்’ என அழைக்கப்பட்டுள்ளார். ரேணுகா மற்றும் அவரது நண்பரான சூர்யா கலிதாஸ், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக நர்சிபட்டினத்தில் வாடகை வீட்டில் தங்கி செயல்பட்டு வந்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஸ்ருகாவரம் கிராமம் அருகே கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விசாரணையில், ரேணுகா பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வாடகை வீடுகளை எடுத்து தனது கடத்தல் வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. அடூரி பிரசாத் என்பவரின் உதவியுடன், ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டா பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடமிருந்து கிலோக்கு இந்திய மதிப்பில் ரூ.5,000 வீதம் கஞ்சா வாங்கி வந்துள்ளார். சாரதிகளான மதன் குமார் மற்றும் நாக முத்து, கஞ்சா பொதிகளை ராஜாநகரம் நெடுஞ்சாலை சந்திப்புக்கு கொண்டு வந்து, அங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட கும்மபல் தமிழ்நாட்டில் சிறு பொட்டலங்களாகவும் கஞ்சா விற்பனை செய்துள்ளதோடு, மாநில அளவிலான கடத்தல்காரர்களுடன் உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இலங்கைக்கு கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/234586
-
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!
அப்படியானால் போன வாரம் சுமந்திரனைப் போட்டுத் தாக்க இங்கே கூட்டம் கூடிய கீழ் திரியில் இருப்பது போலிச் செய்தியா? "தடையுத்தரவு நீங்கியதால் நிர்மாணப் பணிகள் துரித கதியில்" என்கிறது கீழே இருக்கும் செய்தி. "நிதியை மாற்றி விட்டோம்" என்கிறார் அரச அதிபர். அங்கே சதிக்கதைகள் பின்னிய @வாத்தியார், புலவர், எங்கள் "சொல்லின் செல்வர்"😎 மருதங்கேணி ஆகியோர் இங்கே எதுவும் எழுத மாட்டார்கள் போல!
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
இயற்கையிலும் ஏதோ ஒரு ஏற்பாடு உள்ளதுபோல!
-
சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்
சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சாதனைகள், சர்ச்சைகள் என 2025-ல் நடந்த 10 முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே. இந்தியாவின் பெண்கள் உலகக் கோப்பை வெற்றி 50 ஓவர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. லீக் சுற்றில் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்திருந்த இந்திய அணி, அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்தது. 7 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் உலக சாதனை ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கலக்கிய இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா இந்தத் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார். 22 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், தொடரின் டாப் விக்கெட் டேக்கராகவும் தொடர்ந்தார். இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா, தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். பட மூலாதாரம்,Getty Images டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்னாப்ரிக்கா 1998-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பிறகு தென்னாப்ரிக்க அணியால் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியாமல் இருந்தது. அரையிறுதி, இறுதி என கடைசி கட்டம் வரை வந்தாலும், கடைசியில் தோற்றுவிடுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி. கடந்த 2 ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. கடினமான இலக்காகக் கருதப்பட்ட 282 ரன்களை, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக எதிர்பார்த்ததை விடவும் எளிதாகவே அடைந்தது தென்னாப்ரிக்கா. இன்னும் கூட பவுமாவின் தலைமையில் வெற்றிகரமான அணியாக டெஸ்ட் அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது தென்னாப்ரிக்கா. பட மூலாதாரம்,Getty Images ஆர்சிபி - முதல் கோப்பையும், அதன்பிறகான அசம்பாவிதமும் தென்னாப்ரிக்காவைப் போல் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸும் தங்களின் ஒரு கோப்பைக்காக வெகுகாலம் காத்திருந்தது. 17 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் சாம்பியன் ஆக முடியாமல் இருந்தது. ஆனால், 2025 சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணி. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வர என்ன காரணம்? ஆய்வில் புதிய தகவல் 'என் குடும்பத்தினர் தினசரி 7 கிராம் எடுக்கிறார்கள்' - தங்கம் உமிழும் இந்த பாகிஸ்தான் நதியில் என்ன நடக்கிறது? "அசைவம் இன்றி கந்தூரி உற்சவம்": திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரம் மீண்டும் சர்ச்சையாவது ஏன்? பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை End of அதிகம் படிக்கப்பட்டது ஏலத்தின்போது ஒட்டுமொத்தமாக அணியின் கட்டமைப்பை அவர்கள் மாற்ற, களத்தில் அது பெருமளவு அந்த அணிக்குக் கைகொடுத்தது. கோலியோடு சேர்த்து, ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா, குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் என ஒரு இந்திய 'கோர்' உருவாக்கப்பட்டது. முதல் முறையாக அணியை வழிநடத்திய பட்டிதாரும் சிறப்பாக செயல்பட, இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி கோப்பை வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாட ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால், மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட 11 பேர் இறந்தனர். அதோடு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா உலகின் பிரசித்தி பெற்ற டெஸ்ட் தொடராகக் கருதப்படும் ஆஷஸ், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளையுமே வென்று தொடரை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டீவ் ஸ்மித், கவாஜா என பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், அதில் ஒருசிலர் போட்டிகளில் விளையாட முடியாத நிலையிலும் ஆஸ்திரேலியா இந்தத் தொடரைக் கைப்பற்றியது. பட மூலாதாரம்,Getty Images பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளங்கியது. மேலும், 'பாஸ்பால்' அணுகுமுறையால் அவர்கள் அதிரடியாக ஆட முற்பட்ட விரைந்து ஆட்டமிழந்தது மீண்டும் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும், தொடரை இழந்த பிறகு, மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவின் படி, கடந்த 15 ஆண்டுகளில், 16 தோல்விகள் மற்றும் 2 டிராக்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா பட மூலாதாரம்,Getty Images 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெற்றது. இந்தத் தொடர் முழுவதுமே பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்தியா அங்கு விளையாட மறுத்ததால் இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபையில் நடந்தன. தொரின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. 2002 (இலங்கையுடன் சேர்ந்து கூட்டு சாம்பியன்), 2013க்குப் பிறகு இது இந்திய அணியின் மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாக அமைந்தது. மேலும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இது இந்தியாவின் முதல் ஐசிசி கோப்பை. விராட் கோலியின் 52வது ஒருநாள் சதம் பட மூலாதாரம்,Getty Images ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இந்திய வீரர் விராட் கோலி. முன்பு டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்திருந்தார். அதை ஒருநாள் போட்டிகளில் கோலி முறியடித்தார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த சாதனையைப் படைத்தார் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்ததால், கோலியின் செயல்பாடுகள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த அந்தத் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் ஃபார்மை நிரூபித்த அவர், சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அதுமட்டுமல்லாமல், அதற்கடுத்த போட்டியிலும் சதமடித்து, தன் ஒருநாள் போட்டி சத எண்ணிக்கையை 53 ஆக உயர்த்தியிருக்கிறார் கோலி. லாராவின் சாதனையை முறியடிக்காத வியான் முல்டர் பட மூலாதாரம்,Getty Images பலரும் சாதனை படைப்பதால், சாதனைகளை முறியடிப்பதால் பேசப்படுவார்கள். கோலியைப் போல். ஆனால், தென்னாப்ரிக்க வீரர் வியான் முல்டர் இந்த ஆண்டு ஒரு சாதனையை முறியடிக்காததற்காகப் பெருமளவு பேசப்பட்டார். கடந்த ஜூலை மாதம் புலவாயோவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அந்தப் போட்டியில் தென்னாப்ரிக்காவின் கேப்டனாக செயல்பட்டிருந்த வியான் முல்டர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்த அவர், பிரயன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் சாதனையை (400 ரன்கள்) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 367 ரன்கள் எடுத்திருந்தபோது, அணியின் இன்னிங்ஸையே டிக்ளேர் செய்தார். இந்த அதிர்ச்சிகரமான முடிவு பற்றிப் பின்னர் பேசிய அவர், "பிரயன் லாரா ஒரு ஜாம்பவான். அப்படியொரு வீரர் அந்த சாதனையை வைத்திருப்பதுதான் சிறப்பான விஷயம். இப்படியொரு சூழ்நிலை மீண்டும் வந்தால், நான் இதையேதான் அப்போதும் செய்வேன்" என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பார்வையற்றோர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா பட மூலாதாரம்,Getty Images பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்புவில் நடந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன்மூலம் மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் ஆனது. குரூப் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளையும் வென்றிருந்த இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளையுமே வென்று சாம்பியன் ஆனது இந்தியா. 14 வயதிலேயே வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி பட மூலாதாரம்,Getty Images 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி பெயர் வந்தபோதே அது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த 13 வயது சிறுவனை அப்போது 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத அவருக்கு, இரண்டாவது பாதியில் வாய்ப்பு கொடுத்தது ராயல்ஸ் அணி. அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சூர்யவன்ஷி, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஆடினார். தன் முதல் ஐபிஎல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், இரண்டாவது போட்டியில் சதமே அடித்தார். இதன்மூலம் இளம் வயதில் ஐபிஎல் சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதுமட்டுமல்லாமல், 35 பந்துகளிலேயே சதத்தை நிறைவு செய்து, ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார் அவர். அதோடு நின்றுவிடாமல் இந்தியா ஏ, பிகார் அணிகளுக்கும் தொடர்ச்சியாக சாதனை செயல்பாடுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றி பட மூலாதாரம்,Getty Images ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 20 ஓவர் ஃபாமர்ட்டில் நடந்த இந்தத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இது இந்தியாவுக்கு 9வது ஆசிய கோப்பை பட்டம். அதேபோல், இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா முதல் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் முழுவதுமே பல சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இந்தியாவில் நடக்கவிருப்பதாக இருந்த இந்தத் தொடர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அரசியல் பதற்றத்தின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், போட்டிகளின்போது பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்தனர். அதுமட்டுமல்லாமல், இரு நாட்டு வீரர்களுமே கொண்டாட்டங்களின்போது ஐசிசி ஒழுங்கு விதிமுறைகளை மீறினார்கள். இறுதியாக கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அரசின் அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து பெற இந்திய அணி மறுத்தது. கோப்பையை நக்வி தன்னோடு எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் தன்னை சந்தித்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் நக்வி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4genj0rgj4o
-
ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்
ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் Dec 28, 2025 - 09:43 PM இந்தியாவின் ஆந்திரா - ஒடிசா எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்களை இந்தியப் பொலிஸார் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் ஆந்திரப் பகுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் ஒருவரினால் இந்தக் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன், வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் கஞ்சாவை களஞ்சியப்படுத்தி வைத்து இவ்வாறு இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, குறித்த வீட்டிலிருந்து 74 கிலோ கிராம் கஞ்சா, கார் ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmjpxhnw8037qo29n9mtton6u
-
குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்
குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சுப் ரானா பிபிசி இந்திக்காக 28 டிசம்பர் 2025, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளுள் இதய நோயும் ஒன்று. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன. இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் அனைத்தும் நன்றாக உள்ளது என்பது தான் இதய ஆரோக்கியம் தொடர்பான பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த அனுமானம் சரியா என்கிற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது. கொலஸ்ட்ரால் தவிர வேறு எந்த அறிகுறிகள் மற்றும் காரணிகள் மாரடைப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்குகின்றன, குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். குளிர் காலத்தில் வரும் ஆபத்துகள் 2024-ஆம் ஆண்டு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் முதன்மை ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தீவிரமான குளிர்ந்த வானிலை மற்றும் திடீர் குளிர் அலை ஆகியவை மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வின்படி, குளிர்காலம் தொடங்கிய உடனே பெரிய ஆபத்து இல்லையென்றாலும் 2 - 6 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தரவுகள்படி, அதிக அளவிலான மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்புடைய மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டியே பதிவு செய்யப்படுகின்றன. குளிர், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உடல் சார்ந்த எதிர்வினை ஆகியவற்றின் கலவை இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் தருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வர என்ன காரணம்? ஆய்வில் புதிய தகவல் "அசைவம் இன்றி கந்தூரி உற்சவம்": திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரம் மீண்டும் சர்ச்சையாவது ஏன்? 'என் குடும்பத்தினர் தினசரி 7 கிராம் எடுக்கிறார்கள்' - தங்கம் உமிழும் இந்த பாகிஸ்தான் நதியில் என்ன நடக்கிறது? பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள் குளிர் காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பது ஏன் என்கிற கேள்வியை மேதாந்தா மூல்சந்த் ஹார்ட் சென்டரின் இணை இயக்குநரும் தலைமை பேராசிரியருமான தருண் குமாரிடம் முன்வைத்தோம். இதன் பின் நான்கு முதன்மையான காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "வானிலை குளிராக இருக்கிறபோது உடல் தன்னை இதமாக வைத்துக் கொள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சுருக்குகிறது. இது இதயத்தின் முக்கியமான ரத்த நாளங்களை சுருக்குகிறது. இதன் விளைவாக இதயத்திற்கு குறைவான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்கிறது." "குளிர்காலத்தில் குறைவாகவே வியர்க்கிறது, மக்கள் அதிகம் நகர்வதும் இல்லை. இது உடலில் பிளாஸ்மா அல்லது மொத்த ரத்த அளவை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விகிதத்தை அதிகரித்து இதயத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது," என்றார். குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் சிறிதளவு மெதுவாகும் என்று கூறும் அவர், "மக்கள் தங்களை அறியாமலே கலோரி அதிகமாக உள்ள கேரட் அல்வா, வெல்லம், வேர்க்கடலை, வறுத்த பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிடத் தொடங்குகின்றனர். கூடுதலாக அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்கின்றனர். இது உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது." "குளிர்காலம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் ரத்தம் கசியும் போக்கையும் அதிகரிக்கிறது. இந்தக் கசிவு இதயத்தின் நரம்புகளில் ஏற்பட்டால் நரம்பு அடைத்து மாரடைப்பும் ஏற்படலாம்.' என்று தெரிவித்தார். நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் இயக்குநரான மருத்துவர் சமீர் குப்தா பிபிசியிடம் கூறுகையில், "ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் சூப் அல்லது உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது. அதிக அளவிலான உப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் செயலிழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது." என்றார். குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எப்படி? பட மூலாதாரம்,Getty Images குளிர் காலத்தில் அதிக அளவிலான வறுத்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் இதயத்திற்கு ஆபத்தானது என்கிறார் சமீர் குப்தா. "உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் கூடுதல் எடை இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும். 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்," என்று தெரிவித்தார். பக்கோடா மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். "அதிக அளவில் உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய துடிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த புகையிலை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும்," என்றார். உடலில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளிகள் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் எனக் கூறும் அவர், நெஞ்சு வலி, சுவாசக் குறைபாடு அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த சிறிய அளவிலான மாற்றங்களால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றார். மாரடைப்பின் அறிகுறிகள் 2025-ஆம் ஆண்டு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இளைஞர்களிடம் நிகழும் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முதன்மை காரணியாக இருப்பது தெரியவந்தது. இதய பிரச்னையால் ஏற்படும் 85% மரணங்களுக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் மாரடைப்பே காரணமாக உள்ளது. "இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள், இளைஞர்களிடம் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மாரடைப்பு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதில் 25-30% மரணங்கள் 40 வயதுக்கும் குறைவானவர்களிடம் நிகழ்கிறது," என்கிறார் தருண் குமார். உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவதற்கு மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது. பட மூலாதாரம்,Getty Images நெஞ்சின் இடது பக்கம் அல்லது நடுப் பகுதியில் வலி, அழுத்தம், கனமான அல்லது எரிச்சல் உணர்வு மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகள். இந்த வலி வயிற்றின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு பரவலாம். இந்த வலி இடது கையின் மேல் பகுதிக்கும் பரவலாம். அத்துடன், பதற்றமாக உணர்வதும் தலைச்சுற்றல் மற்றும் சுவாசக் குறைபாடு ஏற்படுவதும் பொதுவான அறிகுறிகள் எனக் கூறும் தருண் குமார், இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்கிறார். "அனைவரும் நெஞ்சு வலியை அனுபவிக்க மாட்டார்கள். பலரும் சுவாசக் குறைபாட்டை உணர்வார்கள். சுயமாக இதனைக் கையாளாமல் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தாக அமையும்," என்கிறார் தருண் குமார். இதர காரணிகள் இதய நோய் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் கொலஸ்ட்ரால் அல்லாத இதர காரணிகளை சமீர் குப்தா விவரித்தார். ஏபிஓ பி அளவு (Apo B Level): இவை ஒவ்வொரு கெட்ட கொலஸ்ட்ரால் துகளிலும் இடம்பெற்றிருக்கும். ஏபிஓ பி ரத்தத்தில் உள்ள கெட்ட துகள்களின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிவித்து இதய நோய் ஆபத்து பற்றிய சிறப்பான கணிப்பை வழங்குகிறது. லிபோபுரோட்டீன் (எ) அளவுகள்: இது பிறப்பின் போதே தீர்மானிக்கப்படும் மரபணு அம்சம் மற்றும் இவற்றை பெரிதாக மாற்ற முடியாது. தெற்கு ஆசியாவில் வசிப்பவர்களிடம் (குறிப்பாக இந்தியர்களிடம்) இவை அதிக அளவில் காணப்படுகிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,Getty Images ஹீமோகுளோபின் ஏ1சி: இந்த ரத்தப் பரிசோதனை கடந்த 2-3 மாதங்களாக உள்ள சராசரி ரத்த சர்க்கரை அளவைத் தெரிவிக்கிறது. நீரழிவு நோயுடன் அதிக அளவிலான ரத்த சர்க்கரையும் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கிறது. இதய நோய் ஆபத்தை தீர்மானிப்பதற்கான சில முக்கியமான வரம்புகளையும் பரிசோதனைகளையும் தருண் குமார் குறிப்பிடுகிறார். இவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் நோய் பாதிப்பை முன்கூட்டியே எச்சரிக்க முடியும் என்கிறார். முக்கியமான வரம்புகள் என்ன? எடை மற்றும் பிஎம்ஐ: பிஎம்ஐ 18.5 - 24.9 என்கிற அளவில் இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு: எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) - 100 எம்ஜி/டிஎல் என்கிற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாக குறைக்கிறது. ஹெச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்): இவை 50 எம்ஜி/டிஎல் என்கிற அளவில் இருப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது. அதிக உணர்திறன் கொண்ட சி-ரியாக்டிவ் புரோட்டின்: இது உடலில் உள்ள ரத்தக்குழாய் வீக்கத்தைக் கணக்கிடுகிறது. கொலஸ்ட்ரால் அளவு இயல்பாக இருந்தாலும் ரத்தக்குழாய்களில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் முறிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இவை கடினமான உடற்பயிற்சி மற்றும் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் கசிவிற்கு வித்திடுகிறது. ஆபத்தைக் கணக்கிடும் வழிமுறை பட மூலாதாரம்,Getty Images ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர்: இது அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணக்கிடுகிறது. வயது, பாலினம், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற காரணிகள் இதில் கணக்கிடப்படுகின்றன. ரிஸ்க் 5 சதவிகித்தை விட அதிகரித்தால் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும். கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர்: இது சிடி ஸ்கேன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்கோர் பூஜ்ஜியத்தை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. இவை போக மேலும் சில பரிசோதனைகளையும் தருண் குமார் பரிந்துரைக்கிறார். "நீரழிவு அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தால் ஈசிஜி, எகோ மற்றும் டிஎம்டி (டிரெட்மில் பரிசோதனை) எடுத்துக் கொள்ள வேண்டும். டிஎம்டி பரிசோதனையில் நடக்கிற நிலையில் ஈசிஜி மேற்கொள்ளப்படுகிறது. இது பிரச்னையை முன்கூட்டியே கணிக்க உதவும்." என்றார். இளம் வயதிலிருந்தே கவனமாக இருப்பது முக்கியம் எனக் கூறும் அவர் 18-20 வயதிலே கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார். 30 - 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர், கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர் மற்றும் டிஎம்டி பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25ekj0n0po
-
யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!
பொறுங்கோ வைத்தியர் புள்ளி விபரங்களுடன் வரவார்.😆
- Today
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன். அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன் சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன் நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன். தினமுரசு நாளிதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா, மகேஸ்வரி வேலாயுதம் ஆகிய இருவரையும் வி*டுதலைப் பு*லிகள் செய்தது என்று கூறி, நாமே கொ*ன்றோம். அந்தக் கொ*லைகளுக்கு புலிகள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உலகிற்கு “புலிகள் செய்தார்கள்” என சொன்னோம் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களையும் எங்களில் சிலர் திட்டமிட்டு கொ*ன்றார்கள் அந்தக் கொ*லையில் தொடர்புடையவர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். சிலர் வெளியேறியிருக்கின்றார்கள் உதயன் நாளிதழ் மீது தாக்குதலையும் இராணுவமும், ஈபிடிபியும் சேர்ந்து செய்தார்கள். குறித்த தாக்குதலில் ராஜன், திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்தார்கள் இருவரும் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த Masterminds, யாரெல்லாம் தூண்டினார்களோ – எல்லோரும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். எந்தப் பயமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், வவுனியா எங்கும் பொதுமக்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபியினரால் தான் கடத்தப்பட்டார்கள். கொ*லை செய்யப்பட்டார்கள். சிறுமிகளும், மாணவர்களும் என பலர் காணாமலாக்கப்பட்டார்கள் ஈபிடிபி யின் சாவகச்சேரி அமைப்பாளர் சார்ள்ஸ் தான் இந்த ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இருந்த Operation lead. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற போது 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெ$டி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சு*ட்டு கொ*ன்று விட்டார்கள். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அ*டித்து சி*த்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர். யாரும் விசாரிக்கவில்லை. ஒரு கேள்வியும் இல்லை. ஏனெனில், எங்களை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் எங்களுடன் இருந்த 6 உறுப்பினர்கள், பு*லிகளுடன் இணைய முயன்றார்கள். அவர்களை வெ*ட்டிக் கொ*ன்றது யாரென்று தெரியுமா? எங்களுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி. அவரே வெ*ட்டிக் கொன்ற கத்தியுடன் வந்து, கூட்டம் நடத்தினார். முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா இந்தியாவில் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவே அவரை அழைத்து வந்தார். பின்பு அவர் மீண்டும் ஒலிபரப்பு சேவைக்கு சேரலாம் என்ற தகவல் வந்ததும், அவர் நமது சில இரகசியங்களை வெளியே சொல்லக் கூடும் என்ற பயத்தால் அவருக்கு மதுவில் ந*ஞ்சு கொடுத்தோம். அவரும் செ*த்து போனார். மலையகத்தை சேர்ந்த மோகன், விஜி, யாழில் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி – ஆகியோர் எங்களில் சிலருக்கு விரோதமாக நடந்ததால் நாமே அவர்களை கொ*ன்றோம். அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொ*சுக்கினோம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போட்டோம் அதே போல ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொ*லைகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான உத்தரவு – நம்முடைய முன்னாள் எம்.பி மதனராஜாவிடமிருந்து தான் வந்தது. பாதுகாப்பு அமைச்சகம் மாதாந்தம் எங்களுக்கு சம்பளத்தை அனுப்பியது. மஹிந்த ராஜபக்சே காலத்தில் எங்கள் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் எங்களுக்கு ரூபா 10,000 - ரூபா 15,000 வரையில் சம்பளம் வழங்கினார்கள். கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் ரூபா 3,000 வரை EPF/ETF சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் அடிப்படை வேதனம் கேட்ட சிலரை கூட டக்ளஸ் தேவானந்தா இல்லாமல் ஆக்கியுள்ளார் இவ்வாறு மிக நீண்ட ஆதாரங்களை ஈபிடிபி அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சு. பொன்னையா (சதா) என்பவர் திரு மைத்திரிபால சிறிசேன - திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்க காலத்தில் குறைபாடாக முன்வைத்திருந்தார் பின்னர் தற்போது ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பொலிஸ் தலைமையகம் முதல் பலவேறு தளங்களில் முறைப்பாடுகளாக வழங்கியிருக்கின்றார் எத்தகைய விசாரணைகளுக்கு அழைத்தால் சாட்சியம் அளிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார் ஆனால் இந்த குற்றச்செயல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதால் நல்லாட்சி ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் முறைப்பாட்டை ஏற்று கொள்ள தற்போது வரை தயாரில்லை இராணுவ ஒருங்கிணைப்பில் தான் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையிடப்பட்டு இருக்கின்றார்கள் என்பது பகிரங்கமாகி விடும் என்பதால் முறைப்பாட்டாளரை அலைக்கழிக்கின்றார்கள் குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களை வேட்டைடைய பாதுகாப்பு அமைச்சு மாதாந்தம் பணம் செலவளித்திருக்கின்றது என்கிற அசிங்கம் தெரியாமல் இருக்க நாடகமாடுகின்றார்கள் இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள் இது ஜே ஆர் ஜெயவர்த்தனே கால Technique https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02RU7NXS6p2mcYrfFgDxbkpz9kRa4FWrEvMrE6E7ZASKQzkEW62L7sHBK9ksWCTAB5l&id=100057588638936
-
ஜனாதிபதி இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்
அவசரகால சட்டம் மீண்டும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Published By: Vishnu 28 Dec, 2025 | 07:14 PM நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டின் இயல்பு நிலை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அவசரகால நிலைமையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234608
-
யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது!
யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது! 28 Dec, 2025 | 05:23 PM யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/234604
-
அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்
காங்கேசன்துறை கடற்கரையில் "அலையோடு உறவாடு" உணவு திருவிழா 28 Dec, 2025 | 04:41 PM வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் " அலையோடு உறவாடு " என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது. காங்கேசன்துறை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/234600
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி கிருபன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய அணியைத் தவிர பிற அணிகளின் விளையாட்டு வீரர்களை CricInfo இல் காணவில்லை. https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2025-26-1502138/squads எனவே விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப் போவதில்லை! அணிகளின் வீரர்களை முழுமையாக அறிவிக்கும்வரை திருத்தவும், மாற்றவும் திரியில் கோரிக்கை வைக்கப்பட்டால் அனுமதி உண்டு.
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 1,500 விமான சேவைகள் இரத்து ; நியூயோர்க்கில் அவசரநிலை பிரகடனம் 28 Dec, 2025 | 04:53 PM அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் குளிர்கால பனிப்புயலினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நியூயோர்க் நகரில் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி பொழிந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தாமதமாகியுள்ளதாகவும் விமான கண்காணிப்பு நிறுவனம் ஃப்ளைட் அவேர் (FlightAware) தெரிவித்துள்ளது. ஜோன் எப். கென்னடி, நியூவர்க் லிபர்டி, லாகார்டியா விமான நிலையங்கள் சமூக ஊடகங்களில் பனி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, மேலும் விமான சேவை பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளன. நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், எக்ஸ் தளத்தில், “நியூயோர்க் நகரமே, அந்த வெள்ளை பனி வருகிறது! எவ்வளவு பொழிந்தாலும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார். நகர விதிகளில் உப்பு தெளிப்பான் வாகனங்கள் மற்றும் பனி அகற்றும் இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்படும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 2022-ம் ஆண்டு நியூயோர்க் நகரில் கடைசியாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது சென்ட்ரல் பார்க் பகுதியில் 8 அடி உயரத்துக்கு பனி பொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கடும் குளிர் அலை அமெரிக்கா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென் பிரான்சிஸ்கோ மற்றும் ஆர்லாண்டோ நகரங்களிலும் போக்குவரத்து தாமதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை நியூவர்க் விமான நிலையத்தில் பனி பொழிய ஆரம்பித்தது. என்பிசி நியூஸ் தகவலின்படி, ஃப்ளோரிடா மாநில விமான நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன. இதற்கிடையே, யோசமைட்டி தேசிய பூங்கா அருகே உள்ள மாமத் மவுண்டன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், இரண்டு பனிச்சறுக்கு பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை முதல் 5 அடி-க்கும் அதிகமான பனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரீனோ நகரத்திற்கு அருகிலுள்ள மவுண்ட் ரோஸ் ஸ்கீ ரிசார்ட் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்ட ஒரு பின்நாட்டு பனிச்சறுக்கு வீரரை உள்ளூர் அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/234595
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை! Dec 28, 2025 - 05:05 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjpnkaqt037jo29n4q8lnw9s
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு Published By: Digital Desk 3 28 Dec, 2025 | 02:13 PM நீர்மூழ்கி கப்பலில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்துள்ளார். கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 03 மாநிலங்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 04 நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) கடலில் பயணம் செய்துள்ளார். கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாக்ஷீரில் இந்திய ஜனாதிபதியும், முப்படைகளின் உச்ச தலைவருமான திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும் பயணம் செய்துள்ளார். முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பின்னர் நீர்மூழ்கியில் பயணம் செய்த 2-வது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தான் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234585
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் Dec 28, 2025 - 02:42 PM எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர்கள் இன்று (28) முற்பகல் 11 மணியளவில் ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjpigzn8037eo29nvltwptz8