stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது?
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த டிராக்கரின் கையில் தவறுதலாகப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இது எப்படி நடந்தது மற்றும் ஒரு சிங்கத்தை மயக்கமடையச் செய்ய எவ்வளவு மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது? இது மனிதர்கள் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? இந்த முழுச் சம்பவமும் நடந்தது எப்படி? பிபிசி குஜராத்தியின் ஹனிப் கோகர் ஜூனாகத்திலிருந்து வழங்கிய தகவலின்படி, விஸாவதரின் நாணி மோன்பாரி என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் சிங்கத்தினால் மக்களிடையே அச்சம் பரவியது பண்ணைப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளியான சைலேஷ்பாய் பர்கியின் சிவம் என்கிற நான்கு வயது மகனை, ஒரு பெண் சிங்கம் தாக்கியது. அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் சிங்கத்தை மீட்பதற்காக சாசனிலிருந்து ஒரு சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது. மீட்புக் குழுவில் விஸாவதர் வனச்சரக அதிகாரிகள், ஆர்.எஃப்.ஓ, மருத்துவர்களின் குழு மற்றும் டிராக்கர்கள் இடம்பெற்றிருந்தனர். பட மூலாதாரம்,Hanif Khokhar படக்குறிப்பு,ராம்ரத்தன் நாலா ஜூனாகத் வனப் பாதுகாவலர் முனைவர் ராம்ரத்தன் நாலா, "மீட்புப் பணியின் போது, பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியிலிருந்து மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், டிராக்கர் அஷ்ரப் பாய் சௌஹான் பெண் சிங்கத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார், துரதிர்ஷ்டவசமாக அந்த ஊசி சிங்கத்தின் மீது படுவதற்குப் பதிலாக டிராக்கரின் இடது கையில் குத்தியது," என்றார். "அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஷ்ரப் பாய் சௌஹான் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்," என்றார். சிங்கத்தை மீட்கும் முயற்சியின் போது டிராக்கர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், குஜராத் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது? பட மூலாதாரம்,Getty Images முனைவர் ராம்ரத்தன் நாலா கூறுகையில், "பெண் சிங்கத்தின் எடையானது ஒரு மனிதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். ஒரு மனிதனின் சராசரி எடை 70 கிலோ, ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் எடை 210 முதல் 250 கிலோ வரை இருக்கும். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்கான மருந்தின் அளவு அதன் எடையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு மனிதருக்கு இந்த அளவு மருந்து செலுத்தப்பட்டால், அது அவரைத் தீவிரமாகப் பாதிக்கும்," என்றார். பெண் சிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். "அந்த ஊழியர் வனத்துறையின் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தார், அவருக்கு காப்பீடு உள்ளது. அந்தப் பணம் அவரின் குடும்பத்துக்கு சென்றடையும் மற்றும் வனத்துறையினால் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்றார் முனைவர் ராம்ரத்தன் நாலா. இந்த நடவடிக்கையின்போது அந்தப் பெண் சிங்கம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyxz274y0o
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கிறேன்.
-
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில் Jan 9, 2026 - 07:43 AM கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk68s3r403pdo29n1e0bmg4g
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
1) முன்னோடிக்கான முதலாவது நன்கொடை ரூபா 100,080.02 சதம் 09/01/2026 கிடைக்கப்பெற்றது. நன்கொடையை அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி உறவே. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏 அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்
- Today
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தாய்லாந்தில் ஆட்சி மாற்றம், மக்கள் வீதிக்கு இறங்கிய நேரம் அங்கே நிண்டாவோ தெரியாது.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣 தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, பெயர் குறிப்பிடுவது நன்கொடையாளரின் விருப்பம். ஆனால் ஒவ்வொரு நன்கொடை கிடைத்ததும் அதை இங்கே வெளிப்படையாக பதிவது நல்லது. ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஒரு மலசலகூடம் புதிதாக அமைக்க/பூரணப்படுத்த(வட்டு.தெற்கு) அல்லது திருத்த(பொன்னாலை) நிதி முழுவதும் கிடைத்த பின் பணிக்குரிய நிதியை படிப்படியாக வழங்குவமா? இல்லை முதற்கட்டமாக 50000 ரூபாவை வங்கிக்கணக்கிற்கு வழங்கி வட்டு.தெற்கில் மலசலகூடக்குழி வெட்டத் தொடங்கச் சொல்லவா?
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்தியாவை கொஞ்சம் எச்சரித்த மாதிரியும் இருக்கும். இந்தியா பதறியடித்துக்கொண்டு ஓடி வரும், வந்துவிட்டது என்றும் செய்தி சொல்கிறது.
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
செவ்வாச்சியம்மன் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் முதலிய இயற்கைப் பொருள்கள் வழிபடப்பட்டன. சூலம், வேல், பிரம்பு, பொல்லு, பானை முதலான பொருட்களும் வழிபடு பொருட்களாக, தெய்வீகம் பொருந்தியவையாகக் கருதி (குறி வழிபாடு) வழிபடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆறுமுக நாவலரின் வருகையும் செவ்வியல் சைவ மீட்டுருவாக்கமும் சமஸ்கிருதமயமாதல், மேனிலையாக்கம் எனும் கருத்துநிலைகளின் வழி, பெருந்தெய்வ வழிபாட்டை நிகழ்த்தியமை சிறுதெய்வ வழிபாட்டை செல்வாக்கிழக்கச் செய்துவிட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சமஸ்கிருதமயமாதலுக்கு முழுமையாக உட்பட்டு சிறுதெய்வங்களைப் பெருந்தெய்வமாக்கி பெருமரபாகிய மேனிலையாக்கத்திற்கு உட்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டு வருகிறது. இக்கூற்று மேம்போக்காகப் பார்க்கும் போது உண்மை போலத் தோன்றினும் அது முழுமையான உண்மையல்ல என்பதை அண்மைக்கால ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. நாட்டாரியல் தளத்திலான ஆய்வுகள் ஈழத்தில் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இது உணர்த்தி நிற்கின்றது. செவ்வாச்சி அம்மன் ஈழத்தில் தமிழ்ச் சமூகம் வாழுமிடமெங்கும் தாய்த் தெய்வ வழிபாடான அம்மன் வழிபாடு மிகுந்து காணப்படுகின்றது. கண்ணகி, மாரி, முத்துமாரி, காளி, பத்திரகாளி, பேச்சி, பூசைக்கிழவி, கொத்தி, நீலி முதலான கிராமியப் பெண் தெய்வங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக செவ்வாச்சி அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. செவ்வாச்சி என்பது சிவலை நிறத்தை உடைய ஆச்சி, செவ்வாய்க்குரிய ஆச்சி, செவ்வாயில் பூசிக்கப்படுகின்றவள் எனப் பல பொருள் கொள்ளப்பட்டாலும் தெளிவான விளக்கம் சொல்லப்படவில்லை. பூச்சி என்பதே காலப்போக்கில் ஆச்சி என்று வந்திருக்கலாம். சிவந்த அல்லது நன்மைபுரிகின்ற ஒன்றாக இது கருதப்பட்டு இருக்கலாம். செவ்வாச்சி எனும் சொல்லுக்கான அர்த்தத்தைச் சரிவர அறிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு முதிர் பெண்ணாக சிறுகுடி வேளாளர் மரபினரால் வழிபடப்பட்டு வருவதை அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் பொலிகண்டி, கொற்றாவத்தை, சமரபாகு, வதிரி போன்ற இடங்களில் இவ்வழிபாடு இன்றும் நிகழ்த்தப்படுகின்றது. இது முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். ஆயிரம் கண்ணுடையாள் கண்ணகியின் பிறிதொரு வழிபாட்டுமுறையாகவும் இருக்கலாம். ஏனெனில் ஆறு ஆலயங்களில் செவ்வாச்சியின் குறியீடாக பல்துவாரங்களை உடையதான பானையே வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இலங்கையில் இவ்வழிபாடு முக்கியமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் திருத்தலத்தில் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் குலதெய்வமாகவே இருந்து வருகின்றது. இவ்வம்மனின் கோயில்கள் வீட்டு வளவினில் அமைந்துள்ளன. இப்போது சில கோயில்கள் தனித்து அறுக்கைப்படுத்தப்பட்டு நாற்புறமும் மதில்கள் கட்டப்பட்டு புனிதம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாவரும் வழிபாடியற்ற வழி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுவளவினில் தென்னோலைக் கிடுகுகளால் கூரை வேயப்பட்டு சுற்றி வர பனம் மட்டை வரியப்பட்டு, நிலம் பசும் சாணத்தால் மெழுகப்பட்டதாகக் கோயில்கள் அமைந்திருந்தன. அம்மன் உயர்ந்த கல்லின் மீது (பீடம்) வைக்கப்பட்டிருந்தது. கால ஓட்டத்தில் அவரவர் பொருளாதார, நம்பிக்கை வளர்ச்சிக்கு ஏற்ப சீமெந்துக் கட்டடங்கள் ஆக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் முன்மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாச்சி அம்மனுக்கு உருவம் எனத் தனியாக ஒன்று இல்லை. செவ்வாச்சி, குறித்த ஒரு பூச்சி உருவில் வைத்தே வழிபடப்படுகிறார். வண்ணத்துப்பூச்சியை ஒத்த வடிவத்தை உடைய பூச்சி அதுவாகும். சாம்பல், கருப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல வர்ணங்களில் காணப்படும் இப்பூச்சியின் இருபக்கச் இறகுகளிலும் கண்கள் போன்ற வடிவம் காணப்படும். தவிர இறகுகளில் சிறுசிறு புள்ளிகளும் காணப்படும். அதனைக் குறிப்பதாக துவாரமுடைய பானை வைத்து வழிபடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் குறித்த நிறத்தை உடைய குறித்த பூச்சிவகையே வரும் என்ற கருத்தை கோயில் உரிமையாளர்கள், பூசாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. கண் தெரியாத குருடுப் பூச்சி, காது இல்லாத பூச்சி, சிறகு சிதைந்த பூச்சி என இவை பலவாறு அமைகின்றன. எல்லாக் கோயில்களிலும் செவ்வாச்சி பூச்சியின் உருவமோ படமோ காணப்படுகிறது. நம்பிக்கைகள் செவ்வாச்சி அம்மன் நேரே வருவது இல்லை என்றும் பூச்சியின் ரூபத்தில் வருவாள் என்றும் அதுவே செவ்வாச்சிப் பூச்சி என்றும் மக்களிடையே நம்பிக்கை காணப்படுகின்றது. செவ்வாச்சிப் பூச்சி சிறிய ரூபத்தில் வந்தால் அவ்வீட்டில் அல்லது குறித்த நபருக்கு நன்மை நிகழும் என்றும் மத்திம அல்லது பெரிய பூச்சியாக வந்தால் துயரம் நிகழும் என்றும் மக்களிடையே இன்றும் நம்பிக்கை காணப்படுகின்றது. இவ்வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் வாழும் இடம் எங்கும் (வவுனியா தொட்டு கனடா வரை) இந்தப் பூச்சி இவ்வண்ணம் அவர்கள் கண் முன்னே தோன்றி நன்மை, தீமையை முன்கூட்டியே அறிவிப்பதாக கோயில் பூசாரிகள் குறிப்பிடுகிறார்கள். இதனால் இத்தெய்வம் ‘கண் கண்ட தெய்வம்’ என யாவராலும் சுட்டப்படுகின்றது. பூசை முறை செவ்வாச்சி அம்மனுக்கு எல்லா நாட்களும் விளக்கு வைக்கப்படுகின்றது. அதனை விரும்பியவர் யாரும் வைக்கலாம். அதுபோலவே பூ வைத்தல், கற்பூரம் காட்டல் முதலியனவும் யாவராலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வருடாந்த, விசேட தினங்களில் மட்டுமே பூசாரி பூசை செய்யும் வழக்கம் காணப்படுகிறது. பொலிகண்டி மேற்கில் உள்ள பழவத்தை எனும் இடத்தில் காணப்படும் கோயிலில் மாசி மாதத்தில் ஒரு செவ்வாய் வருடாந்தப் விசேட பூசையும், நாச்சிமார் கோயிலடி செவ்வாச்சியம்மன் கோயிலில் பங்குனி இரண்டாங் கிழமையும், ஏனைய கோவில்களில் ஆடிச் செவ்வாய் ஒன்றில் அவரவர் வசதிக்கேற்ப விசேட பூசையும் இடம்பெற்று வருகின்றன. செவ்வாச்சிக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையே அமைவதாக நம்பப்படுகிறது. இவை தவிர பொங்கல், சித்திரை வருடம், நவராத்திரி, தீபாவளி, போன்ற சிறப்பு நாள்களும் விசேட தினங்களாகக் கருதப்பட்டு சிறப்புப் பூசைகள் இடம்பெறுகின்றன. நேர்த்திக்கடன் வைத்தவர்கள் தமக்குகந்த நாளில் நேர்த்திக் கடனைத் தீர்ப்பர். பழவத்தை, பொலிகண்டி தெற்கு, சமரபாகு, வதிரி ஆகிய இடங்களில் உள்ள செவ்வாச்சி அம்மன் கோயில்களில் ஆண் பூசாரிகளும்; ஏனைய கோயில்களில் பெண் பூசாரிகளும் பூசை செய்து வருகின்றனர். தலையில் முழுகி, ஈரச்சேலையோடு பெண் பூசாரிகள் வருடாந்தப் பூசையை செய்யும் முறைமை இன்றும் காணப்படுகிறது. சமரபாகு செவ்வாச்சி கோயில் இவை யாவற்றிலும் வேறுபாடு உடையதாக உள்ளது. முன்பு மண்பானை வைத்து வழிபடப்பட்டாலும் தற்போது சில்வர் குடம் வைத்து வழிபடப்படுகிறது. பொதுவில் பானைக்கு பீடம் காணப்பட, இங்கு அடுப்பின் மீது குடம் வைக்கப்பட்டிருப்பதும் கோயிலுக்கு வெளியேயும் தனி அடுப்பு நிரந்தரமாக அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது அடுப்பு நாச்சியம்மன் வழிபாட்டை ஒத்ததாக அமைகின்றது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, ஆழியவளை, உடுத்துறை போன்ற இடங்களில் மீனவ மக்கள் பானை வைத்து அதனுள் நிறைவாக நெல்லையிட்டு சட்டியினால் மூடி பூசைக்கிழவி என்னும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். படையல் செவ்வாச்சியம்மன் கோயிலில், சமரபாகு கோயில் தவிர்ந்த ஏனையவற்றில் மரக்கறி உணவுப்படையல், மட்ச – மாமிசப் படையல், சாராயம், கள் முதலான படையல் முறைகள் காணப்படுகின்றன. சமரபாகு கோயிலில் சைவவுணவுப் படையல்முறை மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கோயில் உரிமையாளர் சிவஞானம் சரஸ்வதி தெரிவித்தார். செவ்வாச்சியம்மனுக்கான பொதுப்படையல், நெல்லுப் பொரியும் தானியங்களில் அவிக்கப்பட்ட பிடிக்கொழுக்கட்டையும் ஆகும். குறித்த பூசைத் தினத்தில் காலையில் அடுப்பை மூட்டி நெல் பொரிக்கப்பட்டு அவை அம்மன் இருக்கும் இடம் எங்கும் சுற்றி வீசப்படும். இது செவ்வாச்சிப்பூச்சியின் செட்டையில் இருக்கின்ற புள்ளிகளைக் குறிப்பெனவாகவே கொள்ளப்படுகின்றது. நெல்லைப் பொரித்து அம்மனைச் சுற்றிப் பரவியபின் அரிசிமாவைக் குழைத்து சாத்துக்கொழுக்கட்டை அவித்துப் படைப்பர். வளுந்து, கோவிலை அண்மித்திருக்கும் கிணற்றடி, மரத்தடி முதலான இடங்களில் வைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. தெய்வத்தின் முன்பு வாழையிலையைப் பரவி அதில் அக்காலப் பகுதியில் கிடைக்கும் மரக்கறிகளைப் படைப்பர். அவை இக்கோயிற் சூழலில் வாழும் மக்களின் விளைபொருட்களாக முன்பு இருந்தன. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, விவசாயத்தைச் சுருங்கச் செய்த அல்லது கைவிடச் செய்த காலம் தொட்டு மரக்கறிகள் சந்தைகளில் வாங்கிவரப்பட்டு தூயநீரில் கழுவிப் படைக்கப்படுகின்றன. கத்தரிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மரவள்ளிக்கிழங்கு, ஈரப்பலா, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டிக்காய், வெங்காயம், மிளகாய், கீரை, பசளிக் கீரை, தேசிக்காய் உள்ளிட்ட பல்வேறு மரக்கறிவகைகள் படைக்கப்படுகின்றன. இவற்றின் மீதும் நெல்லுப்பொரி தூவப்படும். இது புனிதமாக்கும் செயலாக இருக்கலாம். இதன்பின் வளுந்து வைக்கப்பட்டு மூன்று சிறங்கை அல்லது மூன்று சுண்டு என ஒற்றை இலக்கத்தில் குத்தரிசி இட்டு சோறு காய்ச்சப்படும். எவ்வளவு நேரம் சென்றாலும் சோறு ஆக்கப்பட்ட பின்புதான் படையல் வைக்கப்பட்ட மரக்கறிகளை எடுத்து, வெட்டிக் கறியாக்கும் வழக்கம் இன்றுவரை காணப்பட்டு வருகிறது. செவ்வாச்சியம்மனுக்கான படையலாக மிளகாய்த்தூள் இடப்பட்ட கறிவகைகள், மிளகாய்த்தூள் இடப்படாத வெள்ளைக் கறிவகைகள் என்பன படைக்கப்படுகின்றன. அப்பளம் உள்ளிட்ட பொரியல்களும் பசுநெய், தயிர் போன்றனவும் படைக்கப்படுகின்றன. அதன்பின் சாமை, தினை, வரகு, குரக்கன், பனமொடியல், நெல்லரிசி, கூப்பன்மா (கோதுமை மா) உள்ளிட்ட தானியங்களின் மாவை தனித்தனியாகக் குழைத்து (சில கோயில்களில் தேங்காய்ப் பூ, சீனி அல்லது சர்க்கரை போன்றவற்றையும் கலந்து) கையால் பிடித்து விரல்கள் பதிந்த பிடிக்கொழுக்கட்டை செய்து அதனை நீராவியில் அவித்துப் படைப்பர். இது முதலாம் மடை எனப்படுகிறது (பழவத்தை, திருமதி. தவராசா சாந்தகுணதேவி, வயது 67). செவ்வாச்சியம்மனுக்கான சிறப்பு உணவுப்பண்டமாக இக்கொழுக்கட்டையே எல்லாக் கோயில்களிலும் படைக்கப்படுகின்றது. இன்பிலன் செவ்வாச்சியம்மன் கோயிலில் பனங்கட்டிப்பாணி கலந்து கொழுக்கட்டை அவித்துப் படைக்கப்படுகின்றது (அப்புத்துரை இரகுநாதன், வயது 58). முதலாம் மடையில் ஆயிரம் மோதகம் அவித்துப் படைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது (திருமதி. கிருபாகரன் ரஜிதா, வயது 45, ஆண்டாவளை, கரணவாய்). பொங்கல் பொங்கப்படும். பலகாரங்கள் யாவும் படைக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொழுக்கட்டை, மோதகம் என்பனவற்றோடு உழுந்து வடை படைக்கப்படுகிறது. அதிலும் வடை படைப்போர் யாவரும் அதில் ஒரு மாலையினைக் கட்டி மூலத்திலிருக்கும் பானைக்கு மாலையாக இடுவர். செவ்வாச்சிக்கு பழப்படையல்களுள் பிரதானமாக வாழைப்பழமே படைக்கப்படுகிறது. சீப்புச்சீப்பாகக் வெட்டி, மூக்கு நாக்குத்தள்ளி (பழத்தின் முன்பகுதியை வெட்டி விடுதல்) படையலாக்குவர். அதேவேளை வருடாந்தம் பூசைக்காலத்தில் கிடைக்கக்கூடிய மா, பலா, விளாம்பழம், தோடம்பழம் போன்ற பழங்களையும் படைப்பர். பழங்களை வெட்டி தேன், நெய் கலந்து பஞ்சாமிர்தமாகப் படைக்கும் வழக்கமுண்டு, உடல் வெப்பத்தைத் தணிக்கச் சிறந்த பழச்சாறாக இது அமையும். இவ்வாலயங்களில் பலியிடும் வழக்கம் இல்லை. ஆனால் மட்ச – மாமிசப் படையல் படைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இவ்வழக்கம் இணுவில் பத்திரகாளி உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் காணப்படுகிறது. தெய்வத்துக்கு மரக்கறி (சைவம்) படையலிடும் இடங்களில் மட்ச – மாமிசப் படையல் இடுவது குறைவெனினும் செவ்வாச்சிக்கு இருபடையலும் இடும் வழக்கம் காணப்படுகிறது. செவ்வாச்சி அம்மனுக்கு காலை, மதியப் படையல்கள் நடைபெறுவது போல இரவு ஆறு மணிக்குப் பின்பே மட்ச – மாமிசப் படையல் நடைபெறும். ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி கறியாக்கப்பட்டுப் படைக்கப்படும். மாடு, முயல், பன்றி போன்றன தமக்குத் தெரியப் படைக்கப்படுவதில்லை எனக் கோயிலின் உரிமையாளர்கள் யாவரும் தெரிவித்தனர். அதேவேளை பலவகை மீன்கள் படைக்கப்படுகின்றன. மீன் தலையை சுட்டோ, பொரித்தோ படைப்பர். ஏனைய பகுதிகள் கறிக் குழம்பாக்கப்படுகின்றன. குறிப்பாக வாளைமீன் படையல் முதன்மை பெறுகிறது. மீன் பொரியல், சுட்ட கருவாடு என்பனவும் படைக்கப்படுகின்றன. சில கோயில்களில் சுறா வறை, திருக்கை வறை, நண்டு, இறால், கணவாய் போன்றனவும் படைக்கப்படுகின்றன. முன்பு தட்டுவத்தில் (பனையோலையால் முடையப்பட்ட தட்டு) தான் மட்சப்படையல் வைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் வாழையிலையிலிலும் பனையோலைப் பாயிலும் சோறு குவிக்கப்பட்டு சுற்றிவர, மட்ச – மாமிசப் பண்டங்களை நிறையுணவாக இடுவர். நடுவில் அவித்த கோழி முட்டைகள் இடப்பட்டிருக்கும். பூசை நிறைவுற்றபின் படைக்கப்பட்ட அத்தனை உணவிலிருந்தும் சிறிதளவு எடுக்கப்பட்டு இளநீர் கோம்பைக்குள் இடப்பட்டு அதனை முச்சந்தியிலோ நாற்சந்தியிலோ வைக்கும் வழக்கமும் உண்டு. சோற்றோடு இவை யாவும் குழைக்கப்பட்டு திரணை திரணையாக யாவர்க்கும் இறை பிரசாதமாக வழங்கப்படும். இம் மட்ச – மாமிசப் படையலோடு கள், கருப்பணி, சாராயம் என்பனவும் படைக்கப்படுகின்றன. செவ்வாச்சியை வழிபடும் மக்கள் குலத்தினர் முன்பு சீவல்தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட பள்ளர் சமூகத்தினராவர். தம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பனம் பொருட்களையும் சிறிது தூரத்தில் இருக்கும் கடலின் வழி பெறப்பட்ட கடலுணவையும், கால்நடைகளையும் தம் செம்பாட்டு நிலத்தில் விளையும் பொருட்களையும் செவ்வாச்சிக்குப் படையலாக இட்டு வந்தனர். கண்ணப்பர், காளத்தி நாதருக்குத் தான் தன் இனம் உண்ணும் உணவுகளையே உண்ணக் கொடுத்தமையை ஒத்த பண்பாட்டசைவே இதுவாகும். சமரபாகு செவ்வாச்சிக்கு 60 வருடங்களுக்கு மேல் சைவப்படையல் மட்டுமே படைக்கப்படுகிறது. நேர்த்திக்கடனும் படையலும் செவ்வாச்சியம்மனை வழிபடும் மக்கள், நோய் நொடி ஏற்படாதிருக்கவும், ஏற்பட்ட காலத்திலும், மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், இத்தெய்வத்தின் கோயிலில் நேர்த்தி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. துவாரமுள்ள பானையை வாங்கி வழங்குதல், ஆலயத்திற்கு தேவையான எண்ணை, கற்பூரம் முதலியவற்றை வழங்குதல், கட்டடம் கட்டல் முதலானவையும் இடம்பெறுகின்றன. தேங்காய் நேர்ந்து ஆலயத்திலேயே வைத்துவிட்டுச் செல்வர். நேர்ந்த விடயம் நிறைவேறியபின் ஆலயத்திற்கு வந்து அத்தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனைத் தீர்ப்பர். (1) குறித்த நபருக்கு அம்மாள் வருத்தம் வருமிடத்து செவ்வாச்சியிடம் நோய் நீக்கத்திற்காக நேருவர். நோய் நீங்கிய பின் மூலத்தில் உள்ள பானையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவர். பின்பு நீர்க்கஞ்சி காய்ச்சி அடியார்க்கு வழங்குவர். நீர்க்கஞ்சி என்பது குத்தரிசியோடு எல்லா வகை மரக்கறிகளையும் இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுவதில்லை) நீருணவாக வழங்கப்படுவதாகும். 2) ஏனைய நேர்த்திகள் – தமது விருப்பங்கள் நிறைவேறிய காலத்தில் முன்சொன்னது போல குத்தரிசியோடு மரக்கறிகளை ஒன்றாக இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுபவரும் உண்டு, இடாதவரும் உண்டு) குழைசாதமாக வழங்குவர். தவிர அன்னதானமாக கறி, சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் உண்டு. துடக்குப் படையல் தமது காணிக்குள் இருக்கும் குலதெய்வமான செவ்வாச்சிக்கு தமது வீட்டில் சமைக்கும் சிறப்புணவைப் படையலிட்டு உண்ணும் வழக்கம் காணப்பட்டுள்ளது. வீட்டில் நடைபெறும் திருமணம், குடிபுகுதல் விழா போன்றவற்றோடு, பிள்ளைப்பேறு, சாமத்தியவீடு (பூப்புனித நிகழ்வு) என்பவற்றுக்கான சமையலில் இருந்து யாவற்றையும் எடுத்துத் தெய்வத்துக்குப் படைத்து வழிபட்ட பின்னரே தாம் உண்பர். அதிலும் குறிப்பாக அரைத்த கறியை (மட்ச, மாமிசமுமோ மரக்கறியோ எதுவாயினும்) செவ்வாச்சிக்குப் படைத்த பின்னரே குறித்த பெண்ணுக்கு உண்ணக் கொடுப்பர். நற்சீரகம், மிளகு, உள்ளி, மஞ்சள், வேர்க்கொம்பு அல்லது இஞ்சி, தேங்காய்ச் சொட்டு (சிலர் மல்லியும் சேர்த்துக் கொள்வர்) இடப்பட்டு பட்டுப்போல அம்மியில் அரைத்து அதனை இட்டு வைக்கப்படும் கறியே அரைத்த கறி எனப்படுகிறது. இதனைப் பிறசமூகங்களில் சாமத்தியம் அடைந்த சிறுமியும் பிள்ளை பெற்ற தாயுமே உண்ணுவர். அதாவது யாருக்காக அரைத்த கறி வைக்கப்பட்டதோ அவர் மட்டுமே உண்பர். மிஞ்சிய கறியைச் சில இடங்களில் நிலத்தை வெட்டி அதனுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும் உண்டு. இம்மக்களிடம் செவ்வாச்சிக்குப் படைத்ததன் பின்பே உண்ணும் வழக்கம் காணப்படுதல் இவ்வழிபாட்டின் தனித்துவம் எனலாம். அதேவேளை இன்பிலன் பிரதேச அம்மன் கோயிலில் மரணவீட்டு உணவை – படையலை இத்தெய்வத்துக்குப் படைத்த பின்பே உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. இது ‘துடக்குச் சாப்பாடு’ (தீட்டு உணவு) என்று கூறப்பட்டாலும், தெய்வத்துக்குப் படைக்கப்படுதல் தம் இன்பத்திலும் துன்பத்திலும் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகிறது. அதிலும் குறிப்பாக மரணம் நடந்து எட்டாம் நாள் இறந்தவரின் விருப்பத்திற்குரிய அனைத்து வகையான சுவைகளையும் உடைய உணவுப்பண்டங்கள், குடிபான வகைகள், சுருட்டு எனப் படைக்கப்படும் அனைத்தையும் இத்தெய்வத்துக்கு இன்றும் படைத்து வருகின்றனர். மற்றைய செவ்வாச்சி ஆலயங்களில் இவ்வழக்கம் இல்லை. முதல் விளைச்சலைப் படைத்தல் தங்கள் வீட்டு வளவில் – விவசாய நிலத்தில் விளைகின்ற முதல் விளைச்சலை இத்தெய்வத்துக்கே வழங்குவர். தேங்காய், மாங்காயிலிருந்து தோட்டத்தில் விளையும் மிளகாய், வெங்காயம் வரை இது பொருந்தும். அதேபோல சீவல்தொழில் செய்யும் ஒருவர் கள்ளிறக்கும் போது அதனை விற்க முன் சிறிது கள்ளை எடுத்து தெய்வத்தின் வாசலில் சிந்தும் வழக்கம் காணப்படுகிறது. அதேபோல பதநீர், கருப்பணி முதலியனவும் முதற் படையலாக்கப்படுகின்றன. பசு கன்று ஈன்ற பின் பாலைத் தாம் குடிக்கவோ விற்கவோ தொடங்கமுன் கறந்து தெய்வத்துக்கு அர்ப்பணமாக்குவர். அதேபோல கோழியின் முதல் முட்டையும் படையலாக்கப்படும். இத்தெய்வத்துக்கு முதல் விளைச்சலை வழங்காதுவிடின் விளைச்சல் அழிந்துவிடும், கள் வற்றிவிடும், பசுவில் பால் அற்றுப்போய்விடும் முதலான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. நிறைவாக ஈழத்துச் சூழலில் பெரும்பாலும் கல், சூலம், மரம் உள்ளிட்ட பொருட்களே வழிபடப்பட்டு வந்துள்ளன. வடமராட்சி செவ்வாச்சியம்மன், பூச்சி வடிவிலான தெய்வமாக வழிபடப்படுதல் தனித்துவம் வாய்ந்த வழிபாடெனினும், அது தொடர்பான தொன்மக்கதைகள் பேணப்படாமை துரதிர்ஷ்டமேயாகும். மக்கள் தாம் வாழும் சூழமைவை அடிப்படையாகக் கொண்டே வழிபாட்டு முறைமையையும் படையல், பாத்திரங்கள், பண்டங்கள் வரை அனைத்தையும் கட்டமைத்திருந்துள்ளனர். கால்நடை, கடலுணவு, தானியங்கள், மரக்கறிகள், பழங்கள் என பல்வகைச் சத்துணவுகளைப் படையலாக்கியுள்ளனர். வெப்பம் நிறைந்த சூழலில் வரும் அம்மன் வருத்தத்தின் நேர்த்திக்கடனாக நீர்க்கஞ்சியையும் குழைசாதத்தையும் வழங்கி வருகின்றனர். இது ஈழத்து வடபுல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற, குறித்த காலத்துக்கான சிறந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இயந்திர வாழ்வினாலும் விலைவாசிகளாலும் படையல் பொருட்கள் குறைவடைந்து வருகின்றன. சாதிய நீக்கம், தொழில்சார் கௌரவம், கல்வி, பொருளாதார விருத்தி என்பவற்றால் பலர் சீவல்தொழில் செய்வதில்லை. பனம் பொருட் பயன்பாடும் குறைவடைந்து தட்டுவம், ஓலைப்பாய் என்பவற்றுக்குப் பதிலாக வாழையிலையும், பின்னர் இன்று பிளாஸ்ரிக், சில்வர் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டாரியல் பண்பு மாறாத வழிபாடாக இன்றும் மக்களால் மக்களுக்காகவே ஜனநாயகப் பண்போடு பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றதாக செவ்வாச்சியம்மன் வழிபாடு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/worship-of-goddess-sevvachi-amman/
-
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் January 8, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் முதல் வருடத்தைக் கடந்து வந்திருக்கும் நிலையில், இயற்கை அனர்த்தத்தின் விளைவாக சமாளிக்க முடியாத கடமைப் பொறுப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சூறாவளியின் பாதிப்புக்களை முன்கூட்டியே தணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும் அனர்த்தத்துக்கு பின்னரான நிவாரண உதவிப் பணிகளிலும் புனரமைப்பு நடவடிக்கைகளிலும் காணப்படும் குறைபாடுகளையும் கண்டனம் செய்து கொண்டிருக்கும் எதிரணிக் கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு ஆட்சி முறையில் அனுபவமும் தகுதியும் இல்லை என்று ஏற்கெனவே முன்வைத்து வந்த விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. பரந்தளவிலான கலந்தாலோசனையின் அடிப்படையிலான தீர்வுகளை வேண்டி நிற்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளாக இருந்தாலென்ன, இயற்கையின் சீற்றம் ஏற்படுத்தும் பேரழிவாக இருந்தாலென்ன தேசிய அனர்த்தங்களின்போது சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலமாக நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் அரசியல் சக்திகள் செயற்பட முன்வராத சாபக்கேடான கலாசாரம் ஒன்று இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டது. 2024 ஆகஸ்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்ட வேளையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை குறித்து எதிரணி அரசியல்வாதிகள் அக்கறை காட்டிய போதிலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட காரணங்களை அவர்களினால் முன்வைக்க முடியவில்லை. அதேபோன்றே சூறாவளியின் விளைவான நெருக்கடியையும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திருப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக நம்பியதில் அவர்கள் மீண்டும் தவறிழைத்துவிட்டனர். அதேவேளை, சகல தரப்புகளையும் ஈடுபடுத்தி அழிபாடுகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதில் அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி, அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பாரதூரமான குறைபாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த செயலணியில் அரசாங்கத் தரப்பைச் சாராத சகல உறுப்பினர்களுமே அனர்த்த முகாமைத்துவத்தில் அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கையாளுவதில் அனுபவத்தை அல்லது நிபுணத்துவத்தை கொண்டவர்கள் என்று அறியப்படவில்லை என்ற விமர்சனம் சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து வந்திருக்கிறது. ஒரு இடதுசாரிக் கூட்டணியாக இருக்கின்ற போதிலும் கூட, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்கிறது. பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர்தான் ஜனாதிபதி செயலணியில் குறைந்தபட்சம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையாவது சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாக தெரியவருகிறது. கொள்கைகளை வகுக்கும் செயன்முறைகளில் பரந்தளவிலான தரப்புகளின் பங்கேற்பை குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களை திட்டமிட்ட முறையில் புறக்கணித்த கடந்தகால அணுகுமுறைகளின் விளைவாக நாடு அனுபவித்த அவலங்களில் இருந்து தேசிய மக்கள் சக்தி எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளின் விளைவாக தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளுடனும் ஆசியாவின் பெரிய நாடுகளுடனுமான உறவுகளில் ஒரு சமநிலையை அவர்கள் பேணுகிறார்கள். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சூறாவளியின் பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் மேற்குலக நாடுகளிடமிருந்து இருந்து கிடைத்த எதிர்பார்த்திராத வகையிலான பேரளவு உதவிகளும் இதற்கு சான்று. குறிப்பாக, இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் சாதுரியமாகக் கையாளுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) நீண்டகாலமாக இருந்து வரும் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும் அதன் கடந்தகால இந்திய விரோத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அதன் தலைமையிலான ஆட்சியில் புதுடில்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பெய்ஜிங்குடனான உறவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சகல எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கி ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய உறவுகளை அன்றைய வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ‘மாற்றியமைக்கமுடியாத அளவுக்கு மகோன்னதமானவை’ என்று வர்ணித்தார். ஆனால், இன்று திசநாயக்கவின் ஆட்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு வர்ணிப்பது என்றே தெரியவில்லை. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் வல்லாதிக்க நாடுகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவந்ததை இந்து சமுத்திரத்தில் புவிசார் நலன்களின் மறைமுகமான ‘காட்சிப்படுத்தல்’ என்று கூறமுடியும். அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவது ஒரு நல்லெண்ணச் செயற்பாடு மாத்திரமல்ல, இராஜதந்திர நகர்வுமாகும். நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பை வல்லாதிக்க நாடுகள் கொழும்புடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையில் அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளைகளில் எல்லாம் முதலில் உதவிக்கு விரைகின்ற நாடான இந்தியா இந்த தடவை கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் சகிதம் அதிவிசேடமான அக்கறையை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு வந்து இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவித்திட்டத்தை அறிவித்தார். அவர் ஊடாக மோடி ஜனாதிபதி திசநாயக்கவுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் ‘இலங்கையின் பக்கத்தில் இந்தியா எப்போதும் நிற்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய்சங்கரின் விஜயத்தின்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட திசநாயக்க ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு புதிய யுகம்’ என்று வர்ணித்திருந்தார். ஜெய்சங்கர் புதுடில்லி திரும்பிய உடனடியாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கேந்திரமுக்கியத்துவ போட்டிக்குரிய ஒரு பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை மீளஉறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை வல்லாதிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையை போன்று காலநிலை மாற்றத்தின் விளைவான இயற்கை அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் ஆபத்தைக்கொண்ட நாடுகள், சகல நாடுகளுடனும் நல்லுறவைப் பேணவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்கும் போக்கு அதிகரிக்கும்போது வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டாபோட்டியின் மைதானமாக மாறுகின்ற ஆபத்தும் அதிகரிக்கிறது. உதவிகளைப் பெறுகின்ற அதேவேளை, முக்கியமான நாடுகளுடனான உறவுகளில் சமநிலை ஒன்றைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாகும். ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் இலங்கை, இயற்கையின் சீற்றத்தின் அழிபாடுகளில் இருந்து மீட்சிபெறுவதற்கும் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருப்பதால் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். இதுகாலவரை அந்த நாடுகளுடனான உறவுகளில் பேணிவந்த சமநிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இயலுமாக இருக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதனிடையே, நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் அரசாங்கத்தினால் போதியளவுக்கு கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைக்குமா? https://arangamnews.com/?p=12578
-
சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது
சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது Mano ShangarJanuary 9, 2026 12:27 pm 0 பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ் பங்களாதேஷ் ஏற்கனவே கடனில் சிக்கியுள்ளது என்றும், உண்மையை தொடர்ந்து புறக்கணித்தால் பொருளாதார மீட்சி சாத்தியமற்றது என்றும் அந்நாட்டு தேசிய வருவாய் சபைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் கான் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இணைந்த பின்னர் பங்களாதேஷின் கடன் சுமை வேகமாக அதிகரித்தது. சீனாவிடமிருந்து 40 பில்லியன் டொலர் வரை நிதி உறுதிமொழிகளை பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது. இதில் கூட்டுத் திட்டங்களில் 14 பில்லியன் டொலர்களும் அடங்கும். இதன் விளைவாக, நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2025 இன் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களாதேஷின் வெளிநாட்டுக் கடன் 42 சதவீதம் அதிகரித்து தோராயமாக 105 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இப்போது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் தோராயமாக 192 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதிகளில் தோராயமாக 16 சதவீதம் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது. புலம்பிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் இலங்கை ஏற்கனவே சர்வதேச அளவில் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலும் சீனாவின் சுமார் 30 பில்லியன் டொலர் கடனிலும் தவித்து வருகிறது. பங்களாதேஷ் உடனடியாக அதன் கடன் வாங்கும் கொள்கை, சீன திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் கடன் விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால், அதன் பொருளாதாரக் கதை இலங்கையை விட வேதனையானது மற்றும் பாகிஸ்தானை விட நீடித்த ஒரு சோகமாக மாறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/
-
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி, சொந்த ஊரான யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=355426
-
மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!
மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.! ஜனவரி 09, 2026 இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2026/01/blog-post_09.html
-
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது 09 Jan, 2026 | 05:05 AM ( செ.சுபதர்ஷனி) 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து 'சண்டே லீடர்' பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு 'உலக ஊடக சுதந்திர விருது' வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய "And Then They Came For Me" எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன. அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235566
-
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு 09 Jan, 2026 | 12:33 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார். இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/235562
-
தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்!
தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்! 09 Jan, 2026 | 08:43 AM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். 'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.' என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235570
-
உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு
உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு 09 Jan, 2026 | 09:00 AM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார். https://www.virakesari.lk/article/235573
-
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/439766/land-route-to-india-what-is-the-governments-position
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended
-
டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5
-
முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmk6i602n03pqo29nyrs6tzmb