Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இரு வேறு நபர்கள். இலண்டன் டாக்டர் அமரர் சத்யமூர்த்தி புலிகளுகாக செயற்பட்டவர். வயது மூத்தவர். Tamil Heritage -வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 – 27.02.20...மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 - 27.02.2013 இன்று நினைவு நாள். சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வயதில் குறைந்தவர். முள்ளிவாய்க்காலில் அரும்பணி செய்து, உலகிற்கு உண்மையை சொன்னவர். பின்னாளில் ஆமியின் கைக்கு போய், இப்போ, அரசியல் சர்ச்சைகளில் சிக்குபவர், அதிகாரத்தில் இருப்பவர்.
  3. 🤣................. உங்களையும், நிலாமதி அக்காவையும் ஆப்கான் குரூப்பில் சேர்த்து இருக்க வேண்டும் என்று பிற்பாடு தோன்றியது.....................🤣.
  4. Today
  5. இங்கே முல்லாக்களுக்கு என்ன டப்பாங்குத்து ஆடி முட்டு கொடுத்தாலும்😂…. அதை எல்லாம் உடைக்க ஒரு படம் போதும்…. அவுசில் அடைக்கலம் கிடைத்த மறு நொடியே ஹிஜாபை தூக்கி முல்லாக்கள் மூஞ்சியில் வீசிய ஈரானிய சகோதரிகள். ஈரான் கறுப்பா, வெழுப்பா என்பது கூட தெரியாமல்…கார்ள்சன் போன்ற பொக்ஸ் நியூசே துரத்தி விட்ட பைத்தியங்களை எல்லாம் வல்லுனர் என்பதெல்லாம் அடுத்த லெவல் டப்பாங்குத்து. புலம்பெயர் தேசம் எங்கும் ஈரானியர்கள், இஸ்ரேல் கொடி தூக்கி ஆர்பரிக்கிறார்கள். அரபிகள் கூட ஆதரிக்கிறார்கள். தெற்காசிய வழிவந்த “Temu” முஸ்லிம்களும் 😂, மேற்கு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட சிலருமே முல்லாக்களை ஆதரிக்கிறனர்😂.
  6. ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂
  7. இரண்டு அடுக்கு தலைவர்களை அழித்துவிட்டோம், விரைவில் யுத்தம் முடிவிற்கு வரும் - ட்ரம்ப்.
  8. கடவுள் என்ற கருத்தியலை விட விடவா ஒரு பெரிய மூடநம்பிக்கை இருந்து விட போகிறது? அமெரிக்காவின் in god we trust மகுட வாக்கியம் தொட்டு, அதிகப்படியான நாடுகளின் அடிப்படையே கூறுகளில் ஒன்றே இறை நம்பிக்கைதான். ஆனால் இந்து திருமணத்தை சட்டத்தில் ஏற்க கட்டாயாம் பத்து பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது அல்ல. ஒரு இந்து திருமணத்துக்குரிய அடிப்படைகளை (தாலி, கோவிலில், ஐயர் முன், அக்னி சாட்சி) பூர்த்தி செய்தால் போதும். இவை நம்பிக்கை இல்லாத ஒருவர் செய்தாலும் ஏற்கப்படும். இங்கே முக்கியமாவது சடங்கே, நம்பிக்கை அல்ல.
  9. ‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர் ஜெருசலேம்: ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானின் தற்போதைய அரசியல் தலைமையின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. தற்போதைய ஆட்சியை, அடக்குமுறை ஆட்சி என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்கும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தே ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது இருக்கும். ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம். ஈரானிய மக்களுடன் சேர்ந்து நாம் வெற்றி பெற்றால், அவர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும். நாம் மாற்றத்தை உருவாக்குவோம். இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிலும் நாம் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார். ‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர்
  10. ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம் - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் 10 Mar, 2026 | 04:45 PM (எம்.நியூட்டன்) ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம் பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் அலுவலகத்தில் நைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநர் சுட்டிக்காட்டிய விடயங்களுடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாகவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மணல் மாபியாக்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் - பூநகரி வீதியில் கடல்நீரேரிக்கு அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதைக் கண்ணுற்றோம். நாம் அங்கு நேரடியாகச் சென்றபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். வடக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு மாவட்டக் குழுக்களின் ஊடாக அனுமதிகளை வழங்குவதன் மூலம் மணல், கிரவல் விநியோகம் மற்றும் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அத்துடன், எதிர்காலத்தில் எமது பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம். 2027ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/240643
  11. லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த பெய்ரூட் நகரில் அமைந்துள்ள விடுதி வேட்டையன் பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி இருந்ததாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், போர் குற்றம் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதை புவியியல் சார்ந்த படங்கள் மூலம் சரிபார்த்து உறுதி செய்துள்ளதாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. காற்றில் வெள்ளை பாஸ்பரஸ் படிமங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரில் நடந்துள்ளது. இதில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அணைக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் ஈடுபட்டதாகவும் ஹெச்.ஆர்.டபிள்யூ கூறியுள்ளது. ஆக்ஸிஜனுடன் வெள்ளை பாஸ்பரஸ் தொடர்பு கொள்ளும்போது தீ பற்றும் என தகவல். இது போர் களத்தில் புகைத்திரை மற்றும் இருள் கொண்ட வானை ஒளிரச் செய்யவும் பயன்படுத்தப்படும் என தகவல். இதனால் பயங்கரமான தீக்காயங்கள், சுவாசக்கோளாறு, உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இது நச்சுத்தன்மை மிகுந்தது என தகவல். “குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது சட்ட விரோதமானது. இது பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகை தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், இஸ்ரேலுக்கு வெள்ளை பாஸ்பரஸ் கலந்த வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு விநியோகிக்கும் அரசுகள் அதைக் கைவிட வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இந்த தாக்குதல் கூடாது என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்று லெபனானை சேர்ந்த ஹெச்.ஆர்.டபிள்யூ ஆய்வாளர் ராம்ஸி கைஸ் கூறியுள்ளார். கடந்த 2024-ல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் மேற்கொண்டது. தற்போது இது போராக மேற்கு ஆசியாவில் தொடர்கிறது. இந்த சூழலில் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள லித்தானி ஆற்றின் தெற்கு பகுதியில் வசித்து வரும் மக்கள் இடம் பெயர்ந்து செல்லுமாறு தொடர்ச்சியாக இஸ்ரேல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி இஸ்ரேலின் வட திசை எல்லை பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
  12. மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 10 Mar, 2026 | 04:53 PM மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , 'மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர். மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது. ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார். இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், 'சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுற்றிவளைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், பொலிஸாரால் மாத்திரம் இதனை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியாது. மாவட்டக் குழுக்களின் ஊடாகப் பொது அமைப்புகளுக்கு அனுமதிகளை வழங்குவது மிகவும் காத்திரமான செயன்முறையாக அமையும்,' என்றார். இதன்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர்களால் பல்வேறு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மணல் அகழ்வு, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய மூன்று வகையான அனுமதிப்பத்திரங்களும் ஒரே நபர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்துக்கோ வழங்கப்படுகின்றமையும், அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 குளங்களில் மணலைக் கழுவி எடுத்து, அதனை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டது. இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு டிப்பர் மணலை சுமார் 60,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. 'தூய இலங்கை' செயலணியின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உண்மையான மணல் தேவையைக் கணிப்பிடுவது அவசியம் எனவும், அதன் ஊடாகவே விநியோகத்தையும் விலையையும் சீராகப் பேண முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.Geographic Reference பொதுமக்களின் சிறிய தேவைகளுக்கான மணலை, சிமெந்து விற்பனை போன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் அதனை எடுத்துச் செல்லும்போது பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட மாவட்ட மட்டக் குழுவில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளீர்த்தல். மணல் மற்றும் கிரவல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் கள ஆய்வு செய்து அடையாளப்படுத்துதல். விநியோகப் பணிகளைப் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஊடாக மாத்திரம் முன்னெடுத்தல். இந்தப் புதிய பொறிமுறையின் தொடர் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, மாகாண மட்டத்திலான மீளாய்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது. இவ்விசேட கூட்டத்தில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவளத் திணைக்களம், நிலஅளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240638
  13. குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு 10 Mar, 2026 | 02:20 PM குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம். இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது. இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். 30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/240627
  14. விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது! 10 Mar, 2026 | 05:16 PM கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் கனடாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என்பதும், அவரது மனைவி தொழில் தேடும் நிலையில் உள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) காலை 10.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்-403 (UL-403) என்ற விமானத்தின் ஊடாக இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/240647
  15. எந்த உணர்ச்சியும் அற்ற புவிஅமைப்பு பட அமெரிக்கா அமெரிக்கா தள அழிவு ஆய்வு. ஈரான் பொதுவாக இராணுவ இலக்குகள் மீது தாக்குதல். (அனால், விவிலிய பிரளயக் கிருமிகளின் நோக்கம் சமூகத்தை அழிப்பது, அததையே இரானுக்கு செய்கின்றன) இது வரையில் இரானின் பெரும்பகுதி கவனம் அமெரிக்கா தளங்களை அழிப்பது. ஏனெனில், இவற்றை அழிப்பது ஏவுகணை பாதையில் தடைகளை அகற்றுவது. அனால், பொதுவாக இந்த தளங்கள் தொலை தூர பார்வை உள்ள கண்கள், கேட்கும் செவிகள் மற்றும் தாக்குதலை நெறிப்படுத்தும் நிலைகள். உ.ம். இஸ்ரேல் இல் நேற்றும், இரானில் எண்ணை குதம் தாக்கப்பட்டதுக்கு பதிலாக, ஹைபா எண்ணை சுத்திகரிப்பு நிலை (ரத்த தடையும் இல்லாமல் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.
  16. இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம் Published By: Vishnu 09 Mar, 2026 | 07:42 PM தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டனை இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும். முன்னதாக அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி (2008–2011) மற்றும் தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி (2011–2013) ஆகிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சியில் இந்தியா ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 பட்டத்தை வென்றதுடன், தென்னாபிரிக்கா 2013ஆம் ஆண்டு அனைத்து வடிவங்களிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றது. 1993 முதல் 2004 வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் கீழ், 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெறவுள்ளஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 போட்டிக்கான இலங்கை அணியின் தயாரிப்பை வழிநடத்துவது அவரது முக்கியப் பொறுப்பாக இருக்கும். இந்த நியமனம், தேசிய உயர் செயல்திறன் மையத்தின் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240572
  17. மின்சார சபை நெருக்கடிக்குத் தீர்வு? 62 கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் இணக்கம்! Mar 10, 2026 - 09:13 PM இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை வழங்க பணிப்பாளர் சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அந்த நான்கு நிறுவனங்களினதும் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நான்கு நிறுவனத் தலைவர்களும் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிக்குத் திரும்பும் பட்சத்தில், எஞ்சியுள்ள 2 கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmks2eqb0019356psoakyoj7
  18. சுரேஷ் சாலேக்குள் மறைந்துள்ள பல மர்மங்கள் - கைது தொடர்பில் அரசு வெளியிட்ட தகவல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சாலே கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு முன்கூட்டியே முழுமையான தகவல்கள் கிடைத்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தீர்மானிக்கப்படும். எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது. இங்கு அத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். சுரேஷ் சாலேக்குள் மறைந்துள்ள பல மர்மங்கள்
  19. '110 குழந்தைகள் பலி'- இரானில் பள்ளிக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது யார்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மெர்லின் தாமஸ் மற்றும் ஷயான் சர்தாரிசாதே பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு இரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது. இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என 'பிபிசி வெரிஃபை' உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அடுத்துள்ள இரானிய புரட்சிகர காவல் படை தளத்தை ஓர் ஏவுகணை தாக்குவதற்கு முந்தைய தருணங்கள் பதிவாகியுள்ளன. செயற்கைக்கோள் படங்கள், சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு மூலம் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பிபிசி ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இந்த சமீபத்திய வீடியோவைப் பார்த்த நிபுணர்கள், டோமாஹாக் ஏவுகணை இருப்பதும், அந்தப் பகுதி பலமுறை தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இது அமெரிக்காவின் நடவடிக்கை என்பதைக் காட்டுகின்றன என்று எங்களிடம் தெரிவித்தனர். இஸ்ரேல் அல்லது இரான் ஆகிய இரு நாடுகளிடமும் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Getty Images 'சாத்தியமற்றது' ஒரே ஓர் இரானிய ஏவுகணை அந்த இடத்தைத் தாக்கி, இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற வாதம் சாத்தியமற்றது என்று ஒரு நிபுணர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பள்ளி மீதான தாக்குதலுக்கு இரான்தான் காரணம் என்று கூறினார். "இரான் இதைச் செய்ததாக நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், அவர்களின் ஆயுதங்கள் துல்லியமானவை அல்ல." என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார். பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் வழங்கியுள்ள தகவல்படி, இந்தச் சம்பவம் குறித்த அமெரிக்காவின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, இந்த கொடிய தாக்குதலுக்கு அமெரிக்கா "அநேகமாக" பொறுப்பாக இருக்கலாம். ஆனால் பள்ளியை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்றும், தவறுதலாக அது தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிபிஎஸ் நியூஸிடம் பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு வட்டாரம், அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல என்றும், பள்ளிக்கு அருகில் அதன் ராணுவம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று இரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இக்கருத்தை பகிரங்கமாக ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. புதிய வீடியோ குறித்த நிபுணர்களின் மதிப்பீடு பற்றி கருத்து தெரிவிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் பிபிசி கேட்டுள்ளது. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,சரிபார்க்கப்பட்ட வீடியோவில், டோமாஹாக் ஏவுகணை தெரிவதற்கு முன்பே பள்ளிக்கு அருகில் பெரிய புகை மூட்டங்கள் காணப்படுகின்றன. பெரிய புகை மூட்டம் வீடியோ குறித்த பிபிசி வெரிஃபை பகுப்பாய்வின்படி, தளத்தில் ஒரு மருத்துவ கிளினிக் உள்ளது. அது இரான் புரட்சிகர காவல் படையின் கடற்படைக்குச் சொந்தமானது என்று இரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அப்பகுதி வீடியோவில் காணப்படும் டோமாஹாக் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த கிளினிக் பள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வீடியோவை பெல்லிங்கேட் என்ற ஆன்லைன் புலனாய்வுக் குழு முதலில் பகுப்பாய்வு செய்தது. சரிபார்க்கப்பட்ட வீடியோவில், டோமாஹாக் ஏவுகணை தெரிவதற்கு முன்பே பள்ளிக்கு அருகில் பெரிய புகை மூட்டங்கள் காணப்படுகின்றன. வீடியோவில் காணப்படும் ஏவுகணை ராணுவத் தளத்தில் வெடிப்பதற்கு முன்பே, பள்ளி தாக்கப்பட்டிருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. இரான் புரட்சிகர காவல் படையின் தளத்தில் உள்ள மற்ற கட்டடங்கள் தாக்கப்பட்ட அதே நேரத்தில்தான் பள்ளியும் தாக்கப்பட்டது என்ற பிபிசி வெரிஃபையின் முந்தைய பகுப்பாய்வுடன் இக்கருத்தும் ஒத்துப்போகிறது. பட மூலாதாரம்,Getty Images நீண்ட தூரம் பாயும் குரூஸ் ஏவுகணை சரிபார்க்கப்பட்ட வீடியோவில் உள்ள ஆயுதத்தை அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை என மூன்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மெக்கென்சி இன்டெலிஜென்ஸ் சர்வீசஸின் மூத்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வீடியோவில் உள்ள ஆயுதம், ''இலக்கை தாக்கும் முன் அதன் இறுதி கட்டத்தில் பறக்கும் அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை போலவே தென்படுகிறது.'' என்று தெரிவித்தார். டோமாஹாக் என்பது ஒரு வகை நீண்ட தூரம் பாயும் குரூஸ் ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடியது. இது பல ஆண்டுகாலமாக அமெரிக்காவிடம் உள்ளது. அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வெஸ் பிரையன்ட், இது ஒரு டோமாஹாக் ஏவுகணைதான் என்பதை உறுதிப்படுத்தினார். இரான் புரட்சிகர காவல் படையின் முழு வளாகத்தின் மீதும் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், இது அமெரிக்காவின் "திட்டமிடப்பட்ட மற்றும் துல்லியமான" நடவடிக்கை என்பதைக் காட்டுகிறது என்று பிரையன்ட் மேலும் கூறினார். ஆயுத ஆராய்ச்சி சேவையின் இயக்குநர் என்.ஆர். ஜென்சன் ஜோன்ஸ் முன்னதாக பிபிசி வெரிஃபையிடம் கூறுகையில், பள்ளியில் காணப்படும் இவ்வளவு பெரிய சேதத்தை இரானிய ஏவுகணை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். ஏனெனில் அவை "ஒப்பீட்டளவில் சிறிய வெடிபொருள் முனைகளையே" கொண்டுள்ளன என்றார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன், மார்ச் 2 அன்று கூறுகையில், "தெற்குப் பகுதி முழுவதிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின்" ஒரு பகுதியாக அமெரிக்க கடற்படையால் இரான் மீது ஏவப்பட்ட முதல் ஏவுகணைகள் டோமாஹாக் ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்தார். மார்ச் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை போரின் முதல் 100 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விளக்கும் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அது மினாப் பகுதி இலக்கு வைக்கப்பட்டதைக் காட்டுகிறது. இரானில் தொடர்ந்து இணையத் தடை உள்ளதால், இந்தச் சம்பவம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது. இரானில் சர்வதேச பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செய்தி சேகரிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, பிப்ரவரி 28 அன்று மினாப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg3e35wr2vo
  20. இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு --- --- --- *அமெரிக்கவுக்கான ஏற்றுமதி சரிவு *ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி உயர்வு --- --- --- சீனாவின் வர்த்தகம் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்தில் ஒரு பங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வை மக்குப்பிஸ்னஸ் (macaubusiness) என்ற சீன அரச செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்துள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், 2026 ஆம் வருடத்தின், முதல் இரண்டு மாதங்களுக்கான அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள், ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன் வலுவானதாக இருந்தது. இந்த மதிப்பீட்டின் படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் சரிவு உள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களிலும் சீனாவின் வர்த்தகம் உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 21.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 7.2 சதவீதத்தை முறியடித்துள்ளதாக சீன சுங்கத்தின் பொது நிர்வாகம் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்ட ஏழு சதவீதத்தை விடவும் இறக்குமதிகள் 19.8 சதவீதம் உயர்ந்துள்ளன. 9 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் பிரகாரம், இறக்குமதி அதிகரிப்பு நுகர்வோர் விலைகள் மூன்று ஆண்டுகளில் மிக விரைவான வேகத்தில் உயர்ந்ததைக் காட்டுகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 11.0 சதவீதம் சரிந்தன, வோஷிங்டனுடனான வர்த்தக முரண்பாடுகள் நீடித்தமை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டண பிரச்சாரத்தை (tariff campaign) முன்னெடுத்தமை ஆகிய காரணங்களினால் இச் சரிவு ஏற்பட்டது. சென்ற ஜனவரி - பெப்ரவரி மாதங்களில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் $67.24 பில்லியன்களாக இருந்தாக புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் $75.56 பில்லியனாக இருந்தது. அதேநேரம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 27.8 சதவீதம் உயர்ந்ததுள்ளது. ஆசியான் (ASEAN )நாடுகளுக்கான ஏற்றுமதி 29.2 சதவீதம் உயர்ந்ததுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid03aNB2LprEEtWR64HRvRXDXptHyASdPpMmtbTHCuQ9y2kV4CgPaWu71cfMwJgEmT7l/?mibextid=wwXIfr
  21. வான்வழி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காயம்? Published By: Vishnu 10 Mar, 2026 | 08:56 PM மத்திய கிழக்கில் தொடரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் நாட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவரான மொஜ்தபா காமெனி வான்வழி தாக்குதலில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் Israel இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழி நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏற்பட்ட மோதலில் அவர் காயமடைந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு அவரை “ஜான்பாஸ்” (எதிரி தாக்குதலில் காயமடைந்தவர்) என குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் உச்ச தலைவரான Ali Khamenei உயிரிழந்த தாக்குதலுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 28 அன்று மொஜ்தபா கமேனி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். அந்த தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் நேரம், தன்மை மற்றும் அளவு தொடர்பான தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/240664
  22. அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! Published By: Digital Desk 1 10 Mar, 2026 | 11:36 AM மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். இதற்கான கையெழுத்துகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டவுடன், அடுத்த வாரம் சபாநாயகரிடம் இந்தத் தீர்மானம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/240606
  23. அண்ணை, அப்ப ஸ்மார்ட் போன் இல்லாதபடியால் சாப்பிட்டிட்டியள். இப்ப படமெடுத்து PHI, மீடியா என ஒரு வாங்கு வாங்கியிருப்பியள்!
  24. அதெப்ப தொடங்குது. ஒரு தகவலையும் காணேல.
  25. பொள்ளாச்சியில் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் 'உயிருடன்' திரும்பி வந்த நபர் - என்ன நடந்தது? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பொள்ளாச்சியில் ஒருவர் தன் தந்தை இறந்து போனதாக இறுதிச்சடங்குகள் செய்த நிலையில், அவருடைய தந்தை உயிருடன் திரும்ப வந்துள்ளார். அதனால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவருடைய தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த குழப்பம் நடந்துள்ளதாக தெரிவித்த மகனின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கிற்காக பல ஆயிரம் வரை செலவழித்துள்ளதாகக் கூறினர். இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது அடையாளம் தெரியவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர். திட்டமிட்டு இது நடக்கவில்லை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அப்படி நடந்திருந்தால் சட்டரீதியான ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். உருவ ஒற்றுமையால் ஏற்பட்ட குழப்பம்! பொள்ளாச்சி பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த காளிதாஸ், தனது தந்தை மருதமுத்துவை காணவில்லை என்று கடந்த சனிக்கிழமையன்று பல இடங்களிலும் தேடியுள்ளார். சாலையோரத்தில் விழுந்து கிடந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கே சேர்த்தனர் என்று கண்டறிய முடியவில்லை. காளிதாஸ் குடும்பத்தினர் தெரிவித்த தகவலின்படி, மருதமுத்துவுக்கு காளிதாஸ் உட்பட 3 மகன்கள் உள்ளனர். ஆனால் யாருடைய வீட்டிலும் நிரந்தரமாகத் தங்காமல், கெங்கம்பாளையத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். அடிக்கடி தன் வீட்டிற்கு வந்து செல்லும் தன் தந்தையை காணாமல் காளிதாஸ் தேடிக்கொண்டிருந்தபோது, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து அவரை அழைத்துள்ளனர். அங்கு சென்றபோது, ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, அந்த நபர் இறந்து அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர் யாராவது இறந்தால் அவருடைய புகைப்படத்தை எடுத்து, பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அதை மக்கள் பார்க்கும்படி காவல் நிலையங்களில் அறிவிப்புப் பலகைகளில் ஒட்டுவது காவல்துறையில் வழக்கமாகவுள்ளது. அப்படி கோட்டூர் காவல் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த சிலர், இவர் கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த மருதமுத்து என்று காவலர்களிடம் கூறியுள்ளனர். அதன்பின்பே காளிதாசை காவல்துறையினர் அழைத்துள்ளனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் அந்த சடலத்தைப் பெறுவதற்கு, காவல்துறையிடமிருந்து பெறவேண்டிய ஆவணங்களை திங்கள்கிழமையன்று வாங்கிக்கொண்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு காளிதாஸ் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு முறைப்படி எல்லா ஆவணங்களையும் ஒப்படைத்து, அந்த சடலத்தைப் பெற்றுக்கொண்டு பெத்த நாயக்கனூருக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர். ''இறப்புத் தகவல் கேட்டு பொள்ளாச்சியிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த உறவினர் ஒருவர், சமத்தூர் அருகே எனது மாமனார் நடந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் இறந்துவிட்டதாகத்தானே நமக்கு தகவல் வந்தது என்று நினைத்த அவர், அவரை வீடியோ எடுத்து அனுப்பினார். நாங்கள் அதைப் பார்த்தும் நம்பவில்லை. ஆனால் எங்கள் மாமனாரை கையோடு ஆட்டோவிலேயே வீட்டுக்குக் கூப்பிட்டும் வந்துவிட்டார்.'' என்றார் காளிதாஸின் மனைவி வைதேகி. ''அவர் வரும் வரை எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. வந்தபின்பே எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. உண்மையில் கோட்டூர் காவல் நிலையத்தில் எனது மாமனாரின் புகைப்படத்தைக் காண்பித்துத் தகவல் சொன்னதால்தான் எனது கணவர் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே ஐஸ்பெட்டியில் அவர்கள் காட்டிய சடலத்தைப் பார்த்து முகம் மாறியிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கு இறந்து 3 நாட்களாகிவிட்டதால் முகம் மாறி விட்டதாகக் கூறியுள்ளனர். ஆடை மாறியிருந்தது பற்றிக் கேட்டபோது, மிகவும் அழுக்கானதால் மற்றவர்கள் ஆடை கொடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளனர். அதை அவர் நம்பிவிட்டார்.'' என்றார் வைதேகி. சாலையில் விழுந்து கிடந்து, ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட மருதமுத்து, ஓரளவு உடல் நலம் பெற்றதும் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பாமல் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்துள்ளார். அவரிடம் மொபைல் போன் எதுவும் இல்லாததால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அவருடைய மகன்களின் குடும்பத்தினர் தேடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மருதமுத்துவிடம் பேசுவதற்கு முயன்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய மகன் காளிதாஸ், ''கடுமையான மன உளைச்சலில் இருப்பதால் எதுவும் பேச விரும்பவில்லை.'' என்று தெரிவித்தார். உடல் எரிக்கப்பட்டிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்? பட மூலாதாரம்,Getty Images காளிதாஸ், தேங்காய் உரிக்கும் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் நிலையில், தந்தையின் இறுதிச் சடங்கு செய்வதற்காக பல ஆயிரம் வரை செலவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார் அவருடைய மனைவி வைதேகி. இறந்தது மருதமுத்து இல்லை என்று தெரிந்ததும் காவல்துறையில் தகவல் தெரிவித்து, அந்த சடலத்தை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோட்டூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ''இதில் காவல்துறையின் தவறு என்று எதுவுமில்லை. பெற்ற மகன்களே இது எங்கள் தந்தையின் உடல் என்று சொன்னதால்தான் அந்த உடலைப் பெறுவதற்கான காவல்துறையின் சட்டப்பூர்வமான ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்தோம். அது அவர்களின் தந்தை இல்லை என்று தெரிந்ததும், அடையாளம் தெரியாத சடலம் என்று பதிவு செய்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டோம்.'' என்றார். மருதமுத்துவின் சடலம் என்று நினைத்து அவர்கள் பெற்றுவந்த சடலம், கோவை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது அவருடைய சடலம் இல்லை என்று தெரிந்தபின்பு அடையாளம் தெரியாத நபரின் உடல் என்று கோட்டூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் மணிவண்ணன், ''அந்த உடல் மார்ச் 9 அன்று இரவு 7 மணிக்கு மேல்தான் அடையாளம் தெரியாத நபரின் சடலம் என்று குறிப்பிடப்பட்டு, கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு ஆய்வு இன்று நடந்துள்ளது. இதுபோன்ற அடையாளம் தெரியாத நபரின் சடலங்களை ஒரு வாரம் அல்லது 2 வாரம் வரை பாதுகாத்து வைப்போம். அதன்பின் உடற்கூறு ஆய்வு செய்துவிட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம்.'' என்றார். இறுதிச்சடங்கு செய்யப்பட்டவரின் சடலம் யாருடையது என்பது இப்போது வரை கண்டறியப்படவில்லை. அது தெருவோரத்தில் வசிக்கும் யாசகர் ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர். ஒரு வேளை மருதமுத்துவின் சடலம் என்று அதை நினைத்து, அவருடைய குடும்பத்தினர் அதை எரித்திருந்தால் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ''நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி ஒரு வேளை நடந்திருந்தால், சட்டப்பூர்வமான ஆலோசனை பெற்று அதன்படி காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். உருவ ஒற்றுமையின் காரணமாக இப்படி ஒரு குழப்பம் நடந்துள்ளதே தவிர, வேறொருவரின் சடலத்தைப் பெற்றுவந்து இறுதிச்சடங்கு செய்ததில், அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.'' என்றார். https://www.bbc.com/tamil/articles/cpv83e04gxgo
  26. உங்களுக்கு வேறு ஒரு இடம் பார்த்து வைத்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.