stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
திமுகவின் கூட்டணிக்கட்சிகளின் அறிக்கை இதுவென்பதால் அவர்கள்சீமானைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.திராவிடத்தைக்கைவிட்டு தமிழ்த்தேசியத்துக்குள் ஐக்கியமாகி விட்டார்களா?எல்லாம் தேர்தல் நேர சித்து விளையாட்டுக்கள்.திமுக நேரடியாக இறங்காமல் அல்லக்கைகறை வைத்து அரசியல் செய்கிறது.- Today
- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
சுப்பர் சுற்றுக்கு seedings இல் முதல் இரண்டு நிலைகளிலும் இல்லாத அடுத்த இரு அணிகள் தெரிவானால் (சாத்தியம் பூச்சியம்) எப்படி அவைகளின் நிலை தெரிவாகும்?🫣 கேள்விக்கொத்து சிக்கலாக இருக்கும்.. அதற்கு வரும் பதில்கள் இடியப்பச் சிக்கலாக இருக்கும்😬- கருத்து படங்கள்
- கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
தமிழ் டொக்டர்மார் தான் நல்லவர்கள் கெட்டிகாரர்கள் என்று வெளிநாட்டு தமிழர்கள் நம்புகின்றவர்கள்- கற்க கசறும்
வீட்டிலும் ஒரு மிருதங்கம் உறைக்குள் தூசு படியாமல் இருக்கின்றது. இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லை! ஆர்வம் இல்லாதவற்றை திணிப்பது என் வழக்கம் இல்லை. இளைப்பாறும் காலத்தில் நொட்டிப் பழகலாம் என்று வைத்திருக்கின்றேன்😃- கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்!
மோடி சொன்னதாக இயேசுவின் போதனைகள் நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்று செய்தி வந்ததே- “60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்! 25 Dec 2025, 6:57 AM “வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்! 1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள். 2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும். 4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும். 5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல! முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்! https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/- கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்! 25 Dec 2025, 10:55 AM நாட்டின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/hindutva-mob-attacks-on-christmas-celebrations/- ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது
ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை அரசின் கருத்துருவாக்கத்தினை நிராகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது . இங்கு இனப் பிரச்சினை இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே அதன் சாராம்சம். இலங்கை அரசாங்கம் இங்கு பயங்கரவாத பிரச்சினையே உள்ளதென சொன்ன போது சர்வதேச சமூகம் இல்லை, விடுதலைப் புலிகளின் போராட்டம் 70களில் தான் ஆரம்பித்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது 48 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது என்பதை தெரிவித்தது. தமிழ் மக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த அரசியலமைப்பையும் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள், உரிமைகள் அரசியலமைப்பில் நிராகரிக்கப்படுகின்றன என்று சொன்னால் இங்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தம். எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் அந்த நாட்டின் அரசியலமைப்பை நிராகரித்தால் அங்கு இனப் பிரச்சினை உள்ளது என்பதே அர்த்தம். பிரித்தானியாவில் ஐரிஸ் மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இனப் பிரச்சினை இருந்தது. அந்த அரசியலமைப்பை அங்கு திருத்தம் செய்து இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அரசியல் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தான்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையை சர்வதேசம் வழங்குகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் வெளிநாடுகள், சர்வதேசம் பெரிய அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்பாது. இனப்பிரச்சினை திரும்பவும் வந்து வெடிக்கும். ஸ்திரத்தன்மை இன்றி குழம்பும் என்ற நிலை உள்ளது.முதலீடு செய்வதாக இருந்தால் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலைமை வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூட புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பேச்சுக்காகவாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக சொல்ல வேண்டியுள்ளது. இவ்வாறான பின்ணணியில் இந்தியாவினுடைய பங்கு மிக மிக முக்கியம். அயல்நாடு. அயல் வல்லரசு. அந்த நாட்டினுடைய கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் இலகுவில் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்.எதிரி நாடுகள் இந்தியாவை மீறி செயற்படலாம். ஒத்துப் போகக் கூடிய மேற்கு நாடுகள் இந்தியாவுடன் ஒத்துப் போகவே விரும்புவார்கள். இந்தியாவை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டுக்குள் உறுதியாகக் கொண்டு வருவது முக்கியம்.இந்திய -இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதே தமிழ் மக்களுக்காகத் தான். அதற்கு இந்தியாவுக்கும் கடமை இருக்கிறது.அவ்வாறான நிலையில் இந்தியாவிடம் எதைக் கேட்பது என்பது முக்கியம்? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு மட்டுமே தமிழின பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய போது ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பன மாகாண சபை தேர்தலை நடத்துவதும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமே தேவை என வலியுறுத்தின. விசேடமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 13ஆம் திருத்தம் இந்தியாவின் பிள்ளை. அதனை இந்தியா கைவிட விரும்பாது. 13ஆம் திருத்தத்தை நீக்குவதை விரும்பவில்லை. இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நீக்க விரும்புகிறது. இந்தியா கொண்டு வந்த திருத்தம் என்றபடியால் 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் வைத்திருப்பது தான் அவசியம் என்ற அடிப்படையில் தான் பேசினார். 13ஆம் திருத்தத்திற்குள் இருக்கக்கூடிய அம்சங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அதில் உள்ள அதிகாரங்கள் உண்மையில் அனுபவிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைக்குள் 13 ஆம் திருத்தம் முடக்கப்பட்டிருக்கிற வரைக்கும் தமிழ் மக்களுக்கு அதனை அனுபவிக்க முடியாது. இதனை உயர்நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது.. இதற்கு பின்னரும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது, அதில் ஏதோ இருக்கிறது. அதனால் அரசாங்கம் மறுத்து வருகின்றது என்ற பொய்யை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே இது நடக்கின்றது என்பதை தெளிவாக கூறுகின்றோம். 13 ஆம் திருத்தம்தான் தீர்வு என இவர்கள் தேர்தல் காலத்தில் சொல்லி இருந்தால் மக்கள் தக்க பதிலை வழங்கியிருப்பார்கள். தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்கின்ற சமஷ்டி ஆட்சியை விட தீவிர தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு 16 வருடங்களாக வாக்குகளைப் பெறுகின்றார்கள். மிக முக்கியமான சந்திப்பில் சமஷ்டியை வலியுறுத்தாமல் மாகாண சபை தான் வேண்டும் எனச் சொல்வது, தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு நேர் மாறானது. அதனை நிராகரித்து துரோகம் செய்கின்ற வகையில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இதை 2009 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சொன்னோம். அன்று நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போது, போர் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனைய தலைவர்களான தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அன்றைக்கு சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வெளிவார அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு தங்கள் வாயால் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம். தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சொன்னது.. அவர்கள் வந்து அதைச் சொன்னாலும் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு வாக்கை பெற்றவர்களே ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு இணங்குவது தேசிய மக்கள் சக்தி சொன்னது சரியானது என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் தலைவர்களை சந்தித்ததன் முன்னேற்றத்தை கூட இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு உறுப்பினர் தான் உள்ளது. தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளார்கள்.அந்த ஒன்பது உறுப்பினர்களும் மக்கள் தந்த ஆணைக்கேற்ப செயற்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்துக்கு மட்டுமே சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக செயல்படுகிறார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இடத்திலும் அதனை செய்யவில்லை.தமிழகத்தில் தமிழகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தடுப்பதற்கு இவர்கள் செயல்படுகிறார்கள். இந்த போக்கு தொடரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது. ஒற்றையாட்சி முறைதான் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு முறைக்கு அடிப்படை. மாகாண சபை தேர்தல் நடக்காமலே மாகாண சபைகள் எல்லாம் இயங்குகின்றன என்று சொன்னால் மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் ஏமாற்றமே. மாகாண ஆளுநருக்கு தான் சகல அதிகாரமும் உள்ளது. சட்டரீதியாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்களின் பொறுப்பு. அவர்கள் இல்லாமலே ஆளுநர் செயல்பட முடியும். அதுதான் தற்போது நடக்கிறது. தயவுசெய்து மக்கள் ஏமாற்றத்திற்கு விலை போகக்கூடாது. மக்கள் விலை போக, விலை போக கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்து கொண்டு போகிறோம். இதனால் தமிழ் மக்கள் அழிகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் அழிப்பது மட்டுமல்ல நீங்களும் அழிகின்றீர்கள். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=353672- இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா December 25, 2025 பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை’ என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். அதேபோன்று, ‘பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?’ எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். ‘மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன’ என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். https://www.ilakku.org/sanctions-against-sri-lankan-war-criminals-to-continue-britain/- முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.! Vhg டிசம்பர் 24, 2025 விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது. போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23.12.2025) உயிரிழ்நதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) க்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். https://www.battinatham.com/2025/12/blog-post_706.html- கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..! Vhg டிசம்பர் 24, 2025 கனடா ஸ்கார்பரோ ஒரு பல் மருத்துவர் நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும் கென்னடி சாலை பகுதியில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பல் மருத்துவரிடம், 21 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, பாலியல் தாக்குதல் நடந்ததாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். டிசம்பர் 5 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோ காவல்துறையில் சரணடைத்தார். டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான முத்துகுமாரு இளங்கோ என்ற மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்பதுடன் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். பல் மருத்துவமனையின் பெயர் “டொக்டர் இளங்கோ அண்ட் அசோசியேட்ஸ்” என்று பொலிசார் கூறுகின்றனர். இந்நிலையில் சந்தேக நபரான பல் மருத்துவரால் பாதிக்கபப்ட்டவர்கள் 416-808-4200 என்ற எண்ணில் போலீஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அல்லது பெயர் குறிப்பிடாமல் குற்றத் தடுப்பாளர்களை அழைக்கலாம். https://www.battinatham.com/2025/12/blog-post_377.html- தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
பேரிடரின்போது மதம், இனம், கட்சியை பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் வெளிப்படுத்திய அன்பும் தியாகமுமே நத்தாரின் உண்மையான அர்த்தம்! - சபாநாயகர் 25 Dec, 2025 | 11:27 AM “இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்” என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது: "தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அதன்படி, அன்பு, தியாகம் மற்றும் கருணை ஆகியவற்றின் அர்த்தங்களை அடையாளப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நத்தார் காலம், இலங்கை கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அழகான சந்தர்ப்பமாகும். நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மிக பாதைகளைத் திறப்பதுமாகும். இருப்பினும், இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். அதன்படி, உங்கள் அனைவருக்கும் இந்த நத்தார் காலம் அனைத்து சவால்களையும் கடந்து, ஒரு நாடாகவும் தேசமாகவும் மீண்டும் எழுச்சி பெற, இயேசு கிறிஸ்துவால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட மனிதகுல அன்பை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவும், அமைதியை அடையவும் குறிக்கோளாகக் கொண்ட மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் நல்வாழ்த்துக்கள்!” என்றுள்ளது. https://www.virakesari.lk/article/233874- விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம்
விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம் Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 10:32 AM விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து நிலவில் நிறுவவுள்ள கூட்டு ஆய்வு மையத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது. ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தைரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234375- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊🎈- நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
நள்ளிரவு கூட்டுத்திருப்பலி! Dec 25, 2025 - 09:17 AM உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் பிறப்பை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி வரலாற்று சிறப்பு மிக்க யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/top-picture/cmjkwj9yb033io29nb2d6v3jh- தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! - நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 25 Dec, 2025 | 12:49 AM 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல், நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகியவற்றையாகும். அந்த விசுவாசத்துடன், இலங்கையினால் மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலி மிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2025 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம். அந்தப் புயலின் காரணமாக நமது சொந்த நாட்டில் நமது சொந்த மக்களின் உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பலவற்றை இழந்தோம். அவை எல்லாவற்றையும் விட, தங்களது அனைத்தையும் இழந்த மக்களின் கண்ணீரும் வேதனையும் நமது இதயங்களில் பதிந்துள்ளன. கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நத்தார் பண்டிகை என்பது அழிவுகளுக்கிடையே நம்பிக்கை பிறக்கும் காலமாக குறிப்பிடப்படலாம். தீமையை விலக்கி நன்மை ஆட்சி செய்யும் யுகத்தின் விடியலாகும். இருளான இரவுகளில் கூட ஓர் ஒளி பிறக்கிறது. அது நம்பிக்கையின் ஒளி. டித்வா புயலுக்குப் பின் நாம் அனுபவித்த, நாம் கண்ட இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி உயர்ந்து கைகோர்த்த இலங்கையர்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான இதயத்தின் வழியாக நாம் ஒரு நாடாக மீண்டும் ஒரு முறை எழுந்து நிற்கவேண்டும். அந்த ஒற்றுமையை நமது வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையானது பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல, மக்களின் வேதனைக்கு பதிலளிக்கும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும், நீதியான மற்றும் கருணை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகும். எதிர்காலத்தில் நாம் ஒரு நாடாக பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே இந்த அழிவிலிருந்து பாடங்களை கற்று, உதவியற்றவர்களை பாதுகாக்கும், பேரழிவுகளின் முன்னால் மக்களை தனிமைப்படுத்தாத அரசை உருவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். 2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல் மற்றும் நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகும். அந்த விசுவாசத்துடன், இலங்கை மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, இந்த நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இலங்கை கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/234333- பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்!
பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்! Dec 24, 2025 - 11:31 PM யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் தையல் கடையின் முன்னால் நின்றுகொண்டிருந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் துரத்தி வந்தமையாலேயே கார் மிக வேகமாக வந்து விபத்துக்குள்ளானதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjkblp7j033bo29nt9655fwz- நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
மன்னாரில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைகள்! Dec 25, 2025 - 11:45 AM மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு (25) ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர். இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும்,புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் ஆயரினால் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர். இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmjl1tyzt033ro29n0y6g3fpg- தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற நன்னெறியை நாட்டு மக்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்! - பிரதமர் 25 Dec, 2025 | 12:48 AM நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்தக் குளிர்கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை. முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம். எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர். நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம். உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யை உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம். சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடைய அந்த கனவுக்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம். இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/234328- கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி
கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமை மாலை கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலைமைச்சர் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்." என தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் புதன்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு கிகுந்த வேதனையடைந்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலாஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c865xnply30o- தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்
அமைதி, நல்லிணக்கம், தியாகம், இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தார்! - ஜனாதிபதி 25 Dec, 2025 | 12:48 AM யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக மக்களால் குறிப்பாக கிறிஸ்தவர்களால் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கைப் பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும். கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன். இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவவேண்டும். பெத்லகேமில் ஓர் ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது. யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234321- சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?
சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தத்தமது போட்டிகளில் சதங்கள் அடித்தனர் (கோப்புப் படம்). 25 டிசம்பர் 2025, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இதற்கு நட்சத்திர போட்டியாளர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பாக விளையாடுவதும் காரணமாக இருக்கிறது. விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா அல்லது தற்போது கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர். லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியில் 32 பந்துகளில் வேகமாக சதம் அடித்த சாகிப் உல் கனி போன்ற பொதுமக்கள் அதிகம் அறியாத பல கிரிக்கெட் வீரர்களும் இதில் உள்ளனர். டி20 இந்திய அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷானும் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக திறம்பட பேட்டிங் செய்து 33 பந்துகளில் சதம் அடித்தார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தற்போது ஒரு குழுவுக்குள் இடம்பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், போட்டி குறித்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். டெண்டுல்கரை விஞ்சிய கோலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் (கோப்புப் படம்). பெங்களூருவில் நடந்த ஆந்திர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், உள்நாட்டு கிரிக்கெட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. விராட் கோலி 2009-2010ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தான் கடைசியாக பங்கேற்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அவர் உள்நாட்டு போட்டிக்கு திரும்பியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் 299 ரன்கள் எனும் இலக்கை துரத்திய டெல்லி அணி சார்பாக விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் அடித்தார். லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 16,000 ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இதன்மூலம் விராட் கோலி மிஞ்சினார். இந்த சாதனையை தன்னுடைய 330வது இன்னிங்ஸில் அவர் படைத்துள்ளார். கிரிக்கெட் வலைதளமான இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ அளித்துள்ள தகவலின்படி, சச்சின் டெண்டுல்கர் 16,000 ரன்கள் என்ற சாதனையை தன்னுடைய 391வது இன்னிங்ஸில் அடித்தார். டெண்டுல்கர் விளையாடிய 551 லிஸ்ட் ஏ போட்டிகளில் 538வது இன்னிங்ஸ் வரை 21,999 ரன்கள் வைத்திருந்தார். இதில், 452 ஒருநாள் சர்வதேசஇன்னிங்ஸ்களில் அடித்த 18,426 ரன்களும் அடக்கம். ஆனால், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 296 இன்னிங்ஸ்களில் 14,557 ரன்களை அடித்திருந்தார். ரோஹித் ஷர்மாவின் தனித்துவமான சாதனை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோஹித் ஷர்மா டேவிட் வார்னரின் சாதனையையும் சமன் செய்துள்ளார் (கோப்புப் படம்). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நன்றாக விளையாடினார். இவர் இந்த தொடரில் கடைசியாக 2017-2018ம் ஆண்டு சீசனில் பங்கேற்றிருந்தார். இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் ரோஹித் இந்த தொடருக்கு மீண்டும் திரும்பியுள்ளார். சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அவர் சதம் அடித்தார். ஜெய்பூரில் நடந்த அப்போட்டியில் மும்பை, சிக்கிம் அணியை 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது, இதில் 94 பந்துகளில் ரோஹித் ஷர்மா 155 ரன்களை அடித்தார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகளவிலான 150 ரன்களை குவித்த டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்தார். இந்த சாதனையை டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் 9 முறை படைத்துள்ளனர். இதன்மூலம், இந்த தொடரில் சதம் அடித்த இரண்டாவது அதிக வயதுடைய வீரரானார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, ரோஹித் ஷர்மா இந்த சதத்தை தன்னுடைய 38 வயதில் (238 நாட்கள்) அடித்துள்ளார். முன்னதாக, வங்காள அணியின் அனுஸ்டுப் மஜும்தார் 2023-2024ம் ஆண்டு சீசனில், தன்னுடைய 39வது வயதில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார். விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பங்குபெறுவது குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தங்களின் ஆட்டத்திற்காக பாராட்டை பெற்றிருந்தனர். அதிக இலக்கை வைத்த பிகார் அணி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் (கோப்பு படம்) கிரிக்கெட்டில் ஆச்சர்யங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதுதான் பிகார் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதும் நடந்தது. ஒருநாள் போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு 575 என்ற இலக்கை நிர்ணயித்த பிகார், 397 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த அதிக ரன்கள் இலக்குக்கு மூன்று பேட்ஸ்மேன்களின் திறமையான ஆட்டம் காரணமாக இருந்தது. இதில், கிரிக்கெட்டில் தற்போது பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் வைபவ் சூர்யவன்ஷி வ் எறும் 84 பந்துகளில் 190 ரன்களை அடித்திருந்தார். இரண்டாவதாக, சாகிப் உல் கனி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 128 ரன்களையும் ஆயுஷ் லோஹாருகா 116 ரன்களையும் அடித்தனர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, சாகிப் உல் கனி 32 பந்துகளில் சதம் அடித்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களில் மிக வேகமாக சதமடித்தவர் ஆனார். முன்னதாக, இந்த சாதனையை 35 பந்துகளில் சதம் அடித்து அன்மோல்ப்ரீத் சிங் படைத்தார். வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்களை அடித்திருந்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 64 பந்துகளில் 150 ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்தார். மற்றொருபுறம், டி20 அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன், திறம்பட பேட்டிங் செய்தார். கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் அவர் 125 ரன்களை விளாசினார், 33 பந்துகளில் அவர் சதம் அடித்தார். ஆனால், அவருடைய அதிரடியான பேட்டிங்குக்கு மத்தியிலும் கர்நாடகா அணியை அவருடைய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகா அணி 48வது ஓவரில் ஜார்க்கண்டின் 412 ரன்களை தாண்டியது. இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் கர்நாடக அணிக்காக 147 ரன்களை அடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w9xyvg5wro- இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
நியமாய் ஐய்யே😂 - தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.