stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ஜோர்ஜ் புஸ் உட்பட்ட பல அமரிக்க ஜனாதிபதிகள் போக விரும்பாத சந்து ஹோர்மூஸ்/ஈரான். இராணுவ ஆய்வாளர்கள் கூட சொல்லி உள்ளார்களாம் தரை படையை இறக்காமல் ஹோர்மூசை பாதுகாக்க முடியாது. தரைபடையை இறக்கினால் அது நிரந்தர யுத்தமாக மாறும் என. ஹோர்மூசை அமரிக்காவல் திறக்க முடியாது போனால் - அரபு நாடுகள் ஈரானுடன் ஒத்து போவதை தவிர வேறு வழியில்லை.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
கியூபாவைப் பிடித்து அதை சரி செய்ய முனைகிறார். அதுவும் சரிவராது போல. ரசியா கியூபாவுக்கு உதவி செய்கிறது. Tax செய்து முடிந்துதோ? எல்லோருக்கும் வழமையைவிட கூட வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதன் முழுவிபரம் தெரியவில்லை.
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
அண்ணை, வாசிக்காட்டியும் நடைப்பயிற்சியை விடாதீங்க.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
தம்பரை போல தம்மையும் கொண்டுபோய் ஹோர்மூஸ் சந்தில் சாணி அடி வாங்க வைத்து விட்டு, சமர் நேரம் உக்ரேனில் உள்ளே இறங்கி அடிக்கலாம் என செத்த கிளி கணக்கு போட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் தம்பர் போல் புட்டினின் பொக்கற்றுக்குள் இல்லை என்பதால் ஐரோப்பா, யூகே கழண்டு கொண்டன. இதனால் வீழ்ந்து கொண்டிருந்த ஸ்டாமரின் மக்கள் ஆதரவு கூட ஆரம்பித்த்துள்ளது. மக்ரோன், மேர்சுக்கும் இப்படித்தான் என நினைக்கிறேன்.
-
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி
உலக முடிவு மலைத் தொடரில் 'செல்பி' எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி பாதுகாக்க மீட்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 10:56 AM நுவரெலியாவில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்ற போது சுமார் 50 அடி உயரமுள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தார். வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கீழே விழுந்த மாணவி மரக் கிளை ஒன்றில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை கண்டு கொண்ட ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, கிளையில் தொங்கிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு அருகிலிருந்த பாறையில் அமர்த்தியுள்ளார். பின்னர் பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவு இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணி நேர மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்கா முகாமையாளர் மஞ்சுள மொனரதென்ன தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241437
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
🤣ஈலோன் மஸ்க்கும் ட்ரம்பும் டோஜி-DOGE மூலம் சிக்கனமாகச் சேமித்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தந்த மூவாயிரம் டொலர் இலாபச் செக்கே இன்னும் செலவழித்து முடியவில்லை! இதற்கிடையில் இந்த எண்ணை ஏற்றுமதி இலாபத்தையும் ட்ரம்ப் எங்களுக்குத் தந்தால், கடவுளே எங்க கொண்டே நாங்கள் காசைக் கட்டி வைக்கிறது😂?
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
“ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி டெல் அவிவ்: “ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும். இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?. அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார். அதிபர் ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம். இந்தப் போரில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது. ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு அதிபர் ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். “ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
தற்காலிக இலாபம். ஹோர்மூசை திறக்க அமரிக்கா வளைகுடாவில் இருந்து வெளி ஏற வேண்டும்…. யுவானில் எண்ணை வர்தகம் ஆரம்பம்… தய்வான் இழப்பு… இப்படி நடந்தால் பாரிய நீண்டகால நட்டமும், 1ம் நாடு என்ற நிலை இழப்பும் கிடைக்கும். நான் தம்பர் புட்டினின் ஏஜெண்ட் என ஒரு சதிகொள்கைகை காவி திரிவது தெரிந்திருக்கும். நேட்டோ/அமெரிக்காவினது நலன் பாதுகாப்பது தம்பரின் திட்டம் இல்லை என தெரிந்து கொண்டே - கனடா ஐரோப்பா இவ்வளவு உக்கிரமாக எதிர்கிறார்கள் என நினைக்கிறேன். தம்பர் பதவி விலக முன் நேட்டோவில் இருந்து அமெரிக்காவை வெளியே எடுக்க கூடும். அடுத்த நவம்பரில் வரும் மிட்டேர்மில் காங்கிரஸ் ஆதரவு குறையும் என்பதால் இப்போதே சிலதை செய்ய அவசரப்படுகிறார்.
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் Mar 20, 2026 - 07:42 PM செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது. சர்வதேச ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையிலும் நாம் உறுதியளித்த போதிலும், மனிதப் புதைகுழி விசாரணைகளை நாம் முன்னெடுக்கவில்லை என நீதி அமைச்சரின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் அரசியல் இயக்கம் நாங்கள். உண்மையில் செய்த விடயங்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் செய்தவற்றைத் தெரிந்துகொண்டே விமர்சனம் செய்வதுதான் தவறானது. 1999ஆம் ஆண்டில்தான் இந்தப் புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து 2024 வரை 25 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 25 வருட காலப்பகுதியிலும் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டன. 2015 முதல் 2019 வரையான அரசாங்கத்தின் கீழ், தமிழ் அரசுக்கட்சி மற்றும் அதன் தலைவர்களான சுமந்திரன் போன்றோர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுக்கு விசேட செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் இருந்தது. அப்பகுதியின் பணிகளுக்காகப் பெருமளவு நிதியும் வழங்கப்பட்டது. அதில் நாம் தவறு காணவில்லை. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஏன் செம்மணி புதைகுழி மறந்து போனது? நாம் 2024 செப்டம்பரில் அதிகாரத்தைப் பொறுப்பேற்றோம். பாராளுமன்றப் பெரும்பான்மையை நவம்பரில் பெற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரையிலான இந்த 17 மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 239 ஆகும். இவ்வளவு பணிகளைச் செய்யும் அரசாங்கத்தின் மீதே தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி அமைந்துள்ள தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரே உள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை நாம் அறிவோம். ஆராய்ந்துள்ளோம். இதனை விசாரணை செய்வதற்கு எமக்கு மக்கள் ஆணை உள்ளது. இது மாத்திரமல்ல, மாத்தளை புதைகுழி குறித்தும் நாம் விசாரணை செய்கிறோம். நீதித்துறை பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டும் போது அதற்கு காலம் எடுக்கும். ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmyza50h0008356p2030uayd
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
வாழ்க்கை முடிந்து விடாதவரை ஓக்கே. அண்ணனுக்கே 60+
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
சொந்தக் காசில், தனக்குத் தானே... சூனியம் வைத்த கதையாக போச்சுது. சுவிசில வைத்த நேச நாடுகளுக்கு வைத்து சூட்டில் விலகி நிற்கிறார்கள்.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
சொந்தக் காசில், தனக்குத் தானே... சூனியம் வைத்த கதையாக போச்சுது. 😂
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
சிலவேளை பணக்கார நாடாக வரவும் சந்தர்ப்பம் உண்டு. அமெரிக்க எண்ணெய காஸ் அமோக ஏற்றுமதி நடக்குது. விலையும் ஏத்தி விட்டிருக்கு. போரில் கொஞ்சம் போனாலும் மிகுதி லாபம் தானே?
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
ஓ…வேலையை முடிச்சு கொண்டு வாங்கோ.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
எனக்கென்னமோ இது அமெரிக்காவை தோற்க வைக்க எண்டு தம்பர் தேர்ந்து எடுத்து போன சண்டை போல தெரிகிறது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
காரியம் கை கூடும் நாள் செல்லும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உங்களுக்கு இந்திய அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு😂
-
'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?
'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 20 மார்ச் 2026, 12:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார். உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர். தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர் அங்கே விழுந்து கிடந்த தகவல் வெளியில் தெரியவந்ததாக கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார். இந்த மீட்புப் பணி இரவு முழுவதும் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. மீட்புப் பணியின்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்துள்ளனர். மீட்கப்பட்ட இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லையெனினும், முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து இருப்பதால் அவர் நடப்பதற்கு பல மாதங்களாகும் என்றும், அவருக்கு தற்போது உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தனியாக வந்து தவறி விழுந்த இளைஞர்! நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஊசிமலை காட்சி முனை உள்ளது. இப்பகுதி, கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதியாகவும் இருக்கிறது. சூழல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊசிமலை காட்சி முனை சூழல் சுற்றுலா மையத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இரு புறமும் யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளது. அதனால் அந்த இடத்தில் நின்று சுற்றுலாப் பயணிகள் படமெடுப்பது வழக்கம். அங்கே நிறைய படப்பிடிப்புகளும் நடந்துள்ளன. இதில் ஒரு புறத்தில் மரங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள மலையுச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது, அதற்கும் கீழே உள்ள தவளை மலை, முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளை நன்கு ரசிக்கலாம். இதற்காக ஒரு காட்சி முனையும், படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், கழிப்பறை வசதிகள் என சில கட்டமைப்பு வசதிகளையும் தமிழக வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். ஊசிமலை காட்சி முனைக்கு கடந்த 19-ஆம் தேதியன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். சிவகுருநாதன் (வயது 28) என்ற இளைஞரும் அன்று மாலை ஊசி மலை காட்சி முனைக்கு வந்துள்ளார். தனியாக வந்திருந்த அவர், காட்சி முனைக்கு அருகிலிருந்த இரும்பு வேலி தடுப்பையும் தாண்டி கீழே பாறையில் நடந்துசென்றுள்ளார். அப்போது பாறையிலிருந்து வழுக்கி, 150 அடி ஆழமுள்ள பாறையில் விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக தலையில் எதுவும் அடிபடாமல் உயிர் தப்பியுள்ளார். ஆனால் எழமுடியாமல் பலத்த காயமடைந்திருந்த அவர், தனது போனில் தகவல் தெரிவித்த பின்புதான் அவர் விழுந்தது வெளியே தெரியவந்ததாக கூடலூர் காவல்துறையினர் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சிவகுருநாதன், தற்போது கோவையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருமணமாகாத அவர், காந்திபுரம் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு, உதகைக்கு தனியாக வந்து ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர், மார்ச் 19 அன்று கால் டாக்சி புக் செய்து, ஊசிமலைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்று, அதன்பின் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், ''பாறையைத் தாண்டி அவர் செல்ஃபி எடுக்கப் போனதாகத் தெரிகிறது. அப்போது வழுக்கி 150 அடி ஆழமுள்ள பாறையின் மீது விழுந்திருக்கிறார். அப்போது மாலை 3:30 மணி இருக்கலாம். தலையில் அடிபடாததால் உயிர் தப்பிய அவர் நினைவிழக்காமலும் இருந்துள்ளார். ஆனால் பலத்த காயமடைந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் விழுந்த இடத்தில் அவருக்கு போன் சிக்னல் இருந்துள்ளது. அவர், தான் வந்த வாகன ஓட்டுநர் மற்றும் தங்கியிருந்த இடத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர் விழுந்து கிடந்த லொகேஷனையும் அனுப்பியுள்ளார்.'' என்றார். ''ரிசார்ட்டில் இருந்த ஒருவர், தனக்குத் தெரிந்த ஒரு வனக்காவலருக்குத் தெரிவித்து, அவர் மூலமாக முதலில் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. எங்களுக்கு 5:30 மணிக்குத் தகவல் வந்தது. நாங்களும் தீயணைப்புத் துறையினரும் சென்றோம். அப்போது வெயில் இருந்தது. நாங்கள் தேடிப்பார்த்தபோது அவர் விழுந்த பாறை தெரியவில்லை. அதன்பின்பே யானையைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலமாக வனத்துறையினர் அவர் விழுந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.'' என்றார். படக்குறிப்பு,மீட்புக் குழுவினர் வெலிங்டன் ராணுவ மையத்தின் உதவியை நாடிய நீலகிரி ஆட்சியர் டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்தபோது, 6:45 மணியாகிவிட்டது என்றார் கூடலூர் தீயணைப்பு அலுவலர் சங்கர். தீயணைப்புத்துறைக்கு மாலை 5:15 மணிக்குத் தகவல் தெரிந்து, 5:35 மணிக்குச் சென்று விட்டாலும் அவர் இருந்த இடத்தைக் கண்டறியவே முடியவில்லை என்பதை அவரும் விளக்கினார். டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிக்கு அவர் இருக்குமிடத்தில் தீயணைப்புத் துறையினர் இறங்கிவிட்டதாகவும் தீயணைப்பு அலுவலர் சங்கர் விளக்கினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் அங்கே போனபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரால் அசையக்கூட முடியவில்லை. உடலில் பல எலும்புகள் உடைந்திருந்ததால் கடுமையான வலியில் இருந்தார். ஆனால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து எப்படி மேலே கொண்டு வருவது என்று ஆலோசிப்பதற்குள் நன்கு இருட்டிவிட்டது. அங்கிருந்து மேலே வருவதற்கு பாதை எதுவுமே இல்லை. அந்த இளைஞரின் எலும்புகள் உடைந்து, அவரால் எழவும் முடியாத நிலையில், 80 கிலோவுக்கும் மேலாகவுள்ள அவரை கயிறு கட்டி தூக்குவது பெரும் ரிஸ்க் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.'' என்றார். தீயணைப்புத்துறையில் இருக்கும் உபகரணங்களைக் கொண்டு, அவரை மேலே கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவுக்கு காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விளக்கியுள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ( எம்ஆர்சி ) அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி உதவி கோரியிருக்கிறார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இதற்காக எம்ஆர்சி அதிகாரிகளிடம் பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தகவல் தெரிந்து, முறையான அனுமதி பெற்று, எம்ஆர்சி ராணுவ வீரர்கள் 20 பேர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவும் வந்தபோது நள்ளிரவு 12 மணியாகியிருக்கிறது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் வந்து விட்டதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார். இரவில் 8 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி முழுக்கவும் ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்ததாகக் கூறிய அவர், அதிகாலை 3:30 மணியளவில் அவரை ராணுவத்தினர் மீட்டு மேலே கொண்டுவந்ததாகத் தெரிவித்தார். படக்குறிப்பு,மீட்புப்பணியின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ''ராணுவ வீரர்களுடன் எம்ஆர்சி சிறப்பு மருத்துவக்குழுவினரும் மருத்துவர் கவிதா தலைமையில் வந்தனர். இளைஞர் விழுந்திருந்த இடத்திற்கே சென்று அதே இடத்தில் வைத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி, வலி நிவாரணி ஊசி உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை அளித்தனர். ரத்தக்கசிவையும் நிறுத்தினர். அந்த இடத்தின் ஆழம், சுற்றுப்புறச்சூழல் எல்லாவற்றையும் ஆராய்ந்த ராணுவத்தினர், அவரை எப்படிக் கொண்டு வருவது என்று ஆலோசித்து, கனமான இரும்புக் கம்பிகளால் மேலேயிருந்து அந்த இடம் வரை கன்வேயர் பெல்ட் போன்று வலுவான பாலம் அமைத்தனர். பின்பு ஸ்ரெச்சரில் அவரை இறுக்கமாகக் கட்டி மேலே கொண்டுவந்தனர்.'' என்று அந்த இளைஞரை மீட்ட விதத்தை விளக்கினார் தீயணைப்பு அலுவலர் சங்கர். விழுந்ததிலிருந்து 13 மணி நேரத்துக்குள் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதன்பின் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும், தலையில் அடிபடாததால் அந்த இளைஞர் உயிர் தப்பியிருப்பதாக உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார். சிவகுருநாதனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மருத்துவர் ரவிசங்கர், ''உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். 150 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவருடைய முதுகெலும்பு, இடுப்பு எலும்பு மற்றும் நெஞ்சுக்கூட்டு எலும்புகள் உடைந்துள்ளன. கால் எலும்புகள், கை எலும்புகள் சேரும் இடமும் உடைந்திருப்பதால் அதற்கு முதலில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்பே அவருக்கு எங்கெங்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதை திட்டமிடமுடியும்.'' என்றார். ''இப்போது அவர் நன்றாகவுள்ளார். நன்கு பேசுகிறார். ஆனால் தான் யார் என்பதே தெரியவில்லை என்கிறார். அவருக்கு முதலில் உளவியல் ரீதியான சிகிச்சைதான் அவசியமாகவுள்ளதால் தற்போது உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இடுப்பு, முதுகெலும்பு உட்பட பல எலும்புகள் உடைந்திருப்பதால் அவர் நடப்பதற்கு இன்னும் பல மாதங்களாகும்.'' என்றார் மருத்துவர் ரவிசங்கர். இளைஞர் சிவகுருநாதனின் தாய், தந்தை ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார். இந்த ஊசிமலை காட்சி முனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்றும், இரும்பு வேலி தடுப்பைத் தாண்டிச் சென்ற கேரள இளைஞர்கள் 3 பேர்களில் ஒருவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தேனீக்கள் கொட்டி உயிரிழந்த கேரள இளைஞர் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகிய 3 நண்பர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊசிமலை காட்சி முனையில் இரும்புத் தடுப்பைத் தாண்டிச் சென்றுள்ளனர். தூரமாக பாறையில் இருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் (வயது 23) அதே இடத்தில் உயிரிழந்தார். அந்த சம்பவம் பற்றி விளக்கிய தீயணைப்பு அலுவலர் சங்கர், ''தேனீக்கள் அவர்களைச் சூழ்ந்து தாக்குவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் விரைந்து சென்றோம், கவச உடையணிந்து அங்கே நாங்கள் சென்றபோது அந்த இளைஞர் மரணமடைந்திருந்தார். ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பினோம். இறந்த இளைஞரின் உடலில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை அகற்றுவதே சிரமமாயிருந்தது. பாதை இருந்ததால் அவரை மேலே கொண்டுவந்துவிட்டோம். இந்த இளைஞர் சிவகுருநாதன் விழுந்த இடத்திலிருந்து பாதையே இல்லை. அவர் விழுந்த பாறையிலிருந்து ஓரடி விலகி விழுந்திருந்தாலும் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.'' என்றார். சூழல் சுற்றுலா என்ற பெயரில் ஊசிமலை காட்சி முனைக்குச் செல்ல தமிழக வனத்துறையினர் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அங்கே சுற்றுலாப் பயணிகள் அத்துமீறிச் செல்லாமல் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாமலும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த இளைஞர் விழுந்து மீட்கப்பட்டது குறித்து, 'ஊட்டியில் மீண்டும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ்' என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வனத்துறையையும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி கருத்து கேட்பதற்காக கூடலூர் மாவட்ட வனஅலுவலர் தேவராஜை பலமுறை தொடர்பு கொண்ட போதும், தொடர்ந்து மீட்டிங்கில் இருப்பதாக பதிலளித்தார். கேள்விகளை அனுப்புமாறு கூறிய அவர், அதற்குரிய பதில்களை அனுப்பவில்லை. ஆனால் அந்த இளைஞர் இருந்த இடத்தைக் கண்டறிய டிரோன் அனுப்பியதாகவும், இரவில் புலி, சிறுத்தை உள்ளிட்ட காட்டுயிர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு, அவரைச் சுற்றிலும் தீ மூட்டி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்ததாகவும் கீழ்நிலையிலுள்ள வனத்துறையினர் தகவல் பகிர்ந்தனர். நீலகிரி மண்டல வனப்பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான கிருபா சங்கரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அங்கு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிறைய எச்சரிக்கை, விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் கண்களுக்கும் படாமல் சிலர் இப்படி இரும்பு வேலிகளைத் தாண்டிச் செல்கின்றனர். அதனால் காட்சி முனையைத் தாண்டி யாரும் கீழே செல்லாத வகையில் மேலும் இரும்புத் தடுப்புகளை பலமாக அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2r38y3w9xo
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்தக் குழுவையே வாங்கிவிட்டால் பிரச்சனை முடிந்தது.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
நசுங்க போகுது…அமெரிகாவின் உலக வல்லரசு பிம்பம். ஆப்பு கழன்றிடுச்சோ? இதாலதான் ஐரோப்பாவும் நேட்டோவும் கையை விட்டுட்டார்களோ?
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
மூன்று projects வேலையில் production இற்கு போகிறது இந்த மாதம்..வாசிப்பதற்கும் நடப்பதற்கும் கூட நேரம் கிடைக்கின்றது இல்லை.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
நசுங்க போகுது..… என்று, வேறை எதையோ... சொல்லப் போகிறீர்கள் என நினைத்து விட்டேன். 😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
😂 ஆக இதுவல்லவோ ஜனநாயக நாடு😂.
- Today
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக.. Mar 20, 2026 - 05:31 PM மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். விரைந்து வந்த பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, ரனுஜாவைத் தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmmyulqag0005356pepmf6lew
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
3 கிழமைக்கு முன்பே கருத்தை எதிர்பார்த்தேன்😂