stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
எண்ணிமசாராக செம்மையாக்கிய படிமம் | Digitally Improved Image: செம்மைப்படுத்தியவர்: நன்னிச் சோழன் நேற்றையில இருந்து தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அம்மாணை சொல்லுறன். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. திரும்பத் திரும்ப இந்த வரலாற்றை ஒரு 20 தடவை வாசித்துவிட்டேன். அவ்வளவு குதூகலம். 😍😍😍 குறிப்பு: மரத்தாலை கட்டியிருக்கிறாங்கள். அந்த மாதிரி இருக்கு. வாயெல்லாம் முத்தாய் இருக்கு😀😁
-
என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:
-
digitally improved image by Nane Chozhan.jpg
-
First aircraft - but failed to fly, as per Time.jpg
-
time enna.jpg
-
The Nagapooshani Boat - 60.5.31.jpg
-
early flag of TE.jpg
-
lights and flags on top of the Wave Rider class vessels.jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (7).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (6).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (5).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (4).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (3).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (2).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (1).jpg
-
sdfsd.png
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (3).jpg
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (2).jpg
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (1).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (3).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (2).jpg
-
WHATS THE NAME OF THIS STATUE (1).jpg
-
- Today
-
புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
87இல் புலிகளின் விமானம் வாரமலர் தினமுரசு, நவம்பர் 26-திசம்பர் 2, 1995 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பாகம் 54 | அற்புதன் யாழ்-குடாநாட்டில் நீர்வேலியில் புலிகளது விமானத் தளம் ஒன்று பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1987 இல் புலிகளது விமானம் பற்றி அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை படத்தோடு வெளியிட்ட செய்தி ஒன்று: “அரச இலக்குகளை தாக்குவதற்காக புலிகள் ஒரு சிறிய ரக விமானத்தைத் தயாரித்துப் பார்த்திருக்கிறார்கள். இரண்டு ஆசனங்களைக் கொண்ட அந்த மென்ரக விமானம் உலோகக் குழாய்களாலும், அலுமினியத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டது. ஜனவரி 1987 இல் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. பத்தடி உயரம் வரை எழுந்து விட்டுத் தரையில் விழுந்து மோதியது. அதனால் இறக்கைகளும், சக்கரங்களும் சேதமாகின. பின்னர் அவற்றை திருத்தி மீண்டும் பறக்கவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது இயங்க மறுத்துவிட்டது. எனினும் புலிகளால் விமான தயாரிப்பில் வெற்றி காணக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை.” தொகுப்பாளர் குறிப்பு: மேலுள்ளதின் முதல் பறப்பு பற்றித்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னரும் (1984) புலிகள் ஓர் விமானத்தை உருவாக்கி (அது ஒரு இருக்கை கொண்டது. இதில் கூறப்பட்டுள்ளது இரு இருக்கைகள் கொண்டது) சோதித்துள்ளதை சாத்திரியாரின் கட்டுரை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே ஒரு இருக்கை கொண்டது ஒன்றும் இரு இருக்கைகள் கொண்டது ஒன்றும் ஆக இரு விமானங்களை அவர்கள் சோதனை முயற்சியாக தயாரித்திருக்கிறார்கள். எழுதும் போதே பெருமையாக இருக்கிறது.
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
- யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன் யாழ்ப்பாணத்துக்கு வந்த அனுர குமார காலால் நடந்தார்; கைகளால் உணவை எடுத்தார்; வாயால் சாப்பிட்டார்; கண்களால் பார்த்தார்; வாயால் சிரித்தார்… என்று சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனப் பதிவுகள் உலாவுகின்றன. ஏன் இந்தப் பதிவுகள் என்றால், ஜனாதிபதியின் ஒவ்வொரு அசைவையும் அசாதாரணமானதாக, அபூர்வமானதாக, எளிமையானதாகச் சித்திரித்து, அவருடைய ஊடகப்பிரிவு குறிப்பாக டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக கவர்ச்சியான காணொளிகளாக வெளியிட்டு வருகிறது. ரிக்ரொக் தலைமுறையின் ஒருபகுதி அதனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பார்க்கின்றது. அனுர பலாலியில் நடந்ததால் அவருக்குப் பிறஷர் குறைந்ததோ இல்லையோ, தமிழ் அரசியற் பரப்பில் ஓர் பகுதியினருக்குப் பிறஷர் ஏறுகிறது. அனுரவை கதாநாயகராக கட்டமைக்கும் காணொளிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சார விளம்பரங்கள்தான். எல்லாரும் செய்வதைத்தான் அனுரவும் செய்கிறார். ஆனால் அவருடைய ஊடகப் பிரச்சார அணி அதனை ஒரு செயற்கரிய செயலாக சித்திரிக்கின்றது. அதைத்தான் மேற்கண்டவாறு தமிழ் தேசிய ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். தமிழ்த் தேசிய தரப்புகள் குறிப்பாக மேற்கண்ட பதிவுகளைப் போடுபவர்களும் உட்பட பெரும்பாலானவர்கள், ஒருவர் மற்றவரை அல்லது ஒரு கட்சி மற்றக் கட்சியை வில்லன் ஆக்கி, துரோகி ஆக்கி ஒருவர் மற்றவர் மீது மலத்தை அள்ளி வீசும்போது. இரண்டு தரப்பிலும் மலம் படுகிறது. இரண்டு தரப்புமே நாறுகின்றன. இதனால் தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. இந்த வெற்றிடத்திற்குள் அனுர ஒரு கதாநாயகராக இறக்கப்படுகிறார். தமிழ்த் திரை நாயகர்களின் எழுச்சியான பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். இது தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட வெற்றிடத்தை அரசாங்கம் திட்டமிட்டு நிரப்பும் ஒரு பிரச்சார உத்தி. ஆனால் இது தனிய ஒரு பிரச்சார உத்தி மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஆபத்தான ஓர் அரசியல் வியூகம் அங்கே உண்டு. அனுர கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் வைத்து பின்வருமாறு கூறினார் ”முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.. ஆனால் முதன் முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்.. அவர் பயன்படுத்திய சொற்களுக்கு அரசியல் பரிமாணம் உண்டு என்று எடுத்துக் கொண்டால், அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை வடக்குக்குள் மட்டும் சுருக்குகிறார். அது வடக்கின் பிரச்சினை என்று காட்டப் பார்க்கிறார். கிழக்கில் அந்தப் பிரச்சினை இல்லை என்றும் அங்கே பொருள் கொள்ளலாம். அவர் மட்டுமல்ல கோத்தபாய ராஜபக்சவும் இனப்பிரச்சினையை வடக்குக்கு மட்டுமான பிரச்சினையாக, ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கப் பார்த்தார். இது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல். கிழக்கில் பிரச்சினை இல்லை என்று காட்டுவது. அல்லது வடக்கை மட்டும் ஃபோக்கஸ் பண்ணுவதன்மூலம் வடக்கையும் கிழக்கையும் தெளிவாகப் பிரிப்பது. இங்கு மேலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. ஒரு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறுகிய காலகட்டத்துள் வடக்கிற்கு அதிகம் வருகை தந்தவர் அனுரதான். அதுமட்டுமல்ல, அவருடைய வருகைகளின்போது அவரை நோக்கித் திட்டமிட்டு மக்கள் குவிக்கப்படுகிறார்கள். அது தானாகத் திரண்ட கூட்டம் என்று அவருடைய ஊடகப்பிரிவு சொல்லலாம். ஆனால் அரச பேருந்துகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பொங்கல் விழாவின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால் இதேயளவு கவனக்குவிப்பு கிழக்கை நோக்கி இல்லை. வடக்கோடு ஒப்பிடுகையில் கிழக்கில் “செல்பி அரசியல்” பெரிய அளவில் இல்லை. கடந்த வாரம் பொங்கல் விழாவில் அனுர பின்வருமாறும் பேசினார்… ”பார்க்காத பழகாத எங்களை நம்பினீர்கள். உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி. ஆனால் உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சி குறிப்பாக சுமந்திரன் கடுமையாக உழைத்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பருமனைக் குறைத்தார். ஆனால் மாகாண சபையில் மீண்டும் தன் மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது. அதை நோக்கி அவர்கள் ஏற்கனவே உழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடக்கை நோக்கி அதிகமாக வருவது அந்த நோக்கத்தோடுதான். ஜனாதிபதியை தமிழ்மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகக் கட்டியெழுப்புவதும் அந்த நோக்கத்தோடுதான். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்படும் பிடுங்குப்பாடு அரசாங்கத்துக்கு அனுகூலமானது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளையும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் குழு மோதல்களையும் சுட்டிக்காட்டி அமைச்சர் சந்திரசேகரன் அண்மைக் காலங்களில் பேசி வருகிறார். அதற்கு சிவஞானம் பதில் சொல்லுகிறார். சிவஞானத்தின் பதில் ஒலிவாங்கிகளுக்கு முன்னுக்கு கூறப்படுவதாக இருக்கக் கூடாது. அது செயலில் காட்டப்பட வேண்டும். அடுத்த மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைப்பதை இந்தியா விரும்புகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எனவே மாகாண சபைத் தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது. ஏற்கனவே கிராம மட்டங்களில் அவர்கள் உருவாக்கி வரும் “பிரஜா சக்தி” என்ற கட்டமைப்புக்கு அவர்கள் வறுமை ஒழிப்பு என்ற கவர்ச்சியான நிறத்தைப் பூசலாம். ஆனால் நடைமுறையில் அது பிரதேச சபைகளுக்குச் சமாந்தரமானது. பிரதேச அதிகாரங்களைக் கவரும் நோக்கிலானது. அதைவிட முக்கியமாக அரச கட்டமைப்பு ஒன்றுக்கூடாக, அரச வளங்களைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியின் அடிமட்ட வலையமைப்பைப் பலப்படுத்தும் கட்சி அரசியல் உள்நோக்கம் அங்கே உண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுதொடர்பாக அண்மையில் நல்லூர், திவ்வியஜீவன சங்க மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் ஐங்கரநேசசன் பேசினார், பிரஜா சக்திக்கு எதிராகத் தான் நீதிமன்றம் செல்லப்போவதாக சுமந்திரன் கூறியிருக்கிறார். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த மாகாண சபையை இலக்கு வைத்து இயங்குகின்றது. ஆனால் வடக்கை அவர்கள் குறிவைப்பது அதற்காக மட்டும் அல்ல.அது அதைவிட ஆழமானது. வடக்கை வென்றெடுத்தால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வடக்குத்தான் பிரச்சனை. எனவே அங்கே அடிக்க வேண்டும். அங்கே வெல்ல வேண்டும். என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். இது ஒருவிதத்தில் முதலாம் கட்ட ஈழப்போரின் போது ஜெயவர்த்தன வகுத்த வியூகத்தின் மறுவளமான வடிவம் ஆகும். ஜெயவர்த்தனாவின் தளபதியாக இருந்த சிறில் ரணதூங்க ஒரு நேர்காணலில் கூறியதுபோல, வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டித்து விட்டால், அதாவது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசத்தை குடியேற்றங்களின் மூலம் துண்டித்து விட்டால், தாயகக் கோட்பாடு புவியியல் ரீதியாக சிதைக்கப்படும். அடுத்ததாக கிழக்கை படை நடவடிக்கைகள், திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் மூலமும் தமிழ் -முஸ்லீம் முரண்பாடுகளை, வடக்குக்-கிழக்கு முரண்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் தோற்கடித்து விட்டால்,தாயகம் நடைமுறையில் பலவீனமடைந்துவிடும். கிழக்கை வென்றெடுத்தால், வடக்கு மட்டும் தாயகமாக நின்று பிடிக்காது என்று ஜெயவர்த்தன கணக்குப் போட்டார். இப்பொழுது தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தின் அடுத்த கட்டத்தைப் பரிசோதிக்கின்றதா? வடக்கை வீழ்த்தினால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே ஒரு வழக்கின்மூலம் வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாகப் பிரித்தது ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே வடக்கு-கிழக்கு அதாவது தாயகத்தைத் துண்டாடும் வியூகம் இதில் உண்டு. இந்த வியூகத்தை எதிர்கொள்ள வேண்டும். பிரஜா சக்திக்கு எதிராக வழக்குப் போடுவதால் மட்டும் இந்த வியூகத்தைத் தோற்கடித்துவிட முடியாது. பலமான தமிழ்த் தேசியப் பதில் வியூகம் ஒன்று வேண்டும். https://www.nillanthan.com/8091/- மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
2018 ல் தான் நான் யாழில் இணைந்தேன். அதற்கு முன் யாழ் இணையத்தை அறியாமல் போனதற்கு வருந்துகிறேன். 2014 ல் நீங்கள் எழுதிய இச்சிறிய (அளவில் சிறிய) கட்டுரைப் பதிவைத் தற்செயலாகக் கண்ணுற்றேன். கணியன் பூங்குன்றனார் பாடலுக்குச் சிறிய, சீரிய விளக்கவுரை வாசித்து அகமகிழ்ந்தேன். பாராட்டும் வாழ்த்தும் திரு.ஏராளன்.- புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது: பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்! – அம்பிகா சுட்டிக்காட்டு!
புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது: பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்! – அம்பிகா சுட்டிக்காட்டு! தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் (PSTA) தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை. தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்த்தால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அநேகமானவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இலங்கைச் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. உதாரணமாக கூறினால் 18 வருடங்கள் சிறையில் இருந்த சந்திர போஸ் என்ற நபர் தன்னை சிறையில் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார்கள் என 2021 ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்த நிலையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் உடல் பகுதிகளில் அனேகமான இடங்களில் தழும்புகள் காணப்பட்டமை, சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை காட்டுவதாக அமைந்தது. 2018 ல் கொண்டுவரப்பட்ட வரைவில் நீதித்துறையை பலவீனப்படுத்தி பொலிசாரின் அதிகாரங்களை உயர்த்துவதான சட்ட வரைப்பு தயாரிக்கப்பட்டது. இந்த புதிய சட்ட விரைவில் ஒரு மனிதனுடைய நடமாடம் சுதந்திரத்தை பொலிசார் தீர்மானிப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான ஒரு உத்தியாகும். அதேபோன்று பயங்கரவாதம் என்ற சொல் வரையறுக்கப்படாத நிலையில் குற்றம் ஒன்றை ஒருவர் செய்ய பார்க்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. கைது செய்யும் அதிகாரம் புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளிடம் காணப்படுகின்ற நிலையில் 24 மணித்தியாலங்கள் வரை அவருக்குரிய பாதுகாப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவதாக அமைகிறது. ஏனெனில் ஆயுதப் படைகளால் கைது செய்யப்படும் நபர் ஒருவரை 24 மணித்தியாலத்திற்கு முன்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. புதிய சட்ட வரைவில் ஏற்கனவே தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீதித்துறையில் இருந்து நிர்வாகத்துறை தீர்மானித்த நிலையில் சிறு திருத்தமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் விடுவிக்கலாம் என்ற ஒரு விடயத்தை சேர்த்திருக்கிறார்கள். அதேபோன்று குற்றம் ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிசார் தாங்கள் நினைத்தவாறு எழுதி வாங்கும் நிலையை மாற்றி நீதிமன்றத்தின் முன் வரவேண்டும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இது எவ்வாறாக இருந்தாலும் புதிய சட்டத்தில் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே அல்லாமல் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அற்ற நீதித்துறையாகவே காணப்படுகிறது. ஆகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் அடிப்படை உரிமை மீறல்களை புரிவதற்கான ஒரு வரைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=357390- அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு அமெரிக்கப் பிரஜையை சுட்டுக் கொன்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் - போராட்டம் வெடித்தது!
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு அமெரிக்கப் பிரஜையை சுட்டுக் கொன்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் - போராட்டம் வெடித்தது! 25 Jan, 2026 | 02:25 PM அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் அமெரிக்கப் பிரஜை ஒருவரை குடியேற்றத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, அங்கு பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒரே மாதத்தில் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும். சுட்டுக் கொல்லப்பட்டவர் 37 வயதான அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் தாதியராகப் பணியாற்றி வந்தவர். அவர் தற்காப்புக்காகவே சுடப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் கையில் துப்பாக்கி இருந்ததாகவும், அதை பிடுங்க முயன்றபோது அவர் எதிர்த்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் அலெக்ஸ் தனது கைபேசியில் அதிகாரிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அவர் மீது மிளகுத் தூள் தெளித்து, கீழே தள்ளித் தாக்கிய பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அப்பகுதியில் குவிந்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகை மற்றும் 'பிளாஷ்பேங்' (flashbang) குண்டுகளைப் பயன்படுத்தினர். ஜனவரி மாதம் 07 ஆம் திகதி ஏற்கனவே ஒரு அமெரிக்கப் பிரஜை (ரெனே குட்) இவ்வாறே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த விசாரணைகளில் உள்ளூர் அதிகாரிகளை அனுமதிக்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/236956- சட்ட சிக்கல் தீர்வின் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்
சட்ட சிக்கல் தீர்வின் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் 25 Jan, 2026 | 05:00 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் முறைமையில் ஆராய்வதற்கு பாராளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். தேர்தல் சட்டத்தில் உள்ள சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் பாராளுமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையிலோ அல்லது புதிய தேர்தல் முறையிலோ நடத்த வேண்டும் என்று அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அதிக கரிசணை கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததொரு தீர்மானமாகும். பாராளுமன்ற உத்தேச தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை தொடர்பிலும், மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்த யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். இந்த குழு ஊடாக ஒரு தீர்வு எட்டப்பட்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டசிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வோம். மாகாணசபைத் தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236990- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கிவுல் ஓயா திட்டம்: இனவாத நோக்கங்கள் இல்லை; குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் சந்திரசேகர்! 25 January 2026 கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்திட்டமானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என வலியுறுத்திய அமைச்சர், தேசிய அபிவிருத்தி மற்றும் விவசாய வளர்ச்சியை இலக்காகக் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "இந்த ஆட்சியின் கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை. முந்தைய காலங்களில் அடக்குமுறைகளுக்குத் துணையாக இருந்த கட்சிகள், இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும்போது தமது அரசியல் இருப்புக்காக இந்த திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுகின்றன" என்று அவர் சாடினார். பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் இந்தத் திட்டத்தின் மூலம் நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட மக்கள் தொகை மாற்றத்தை அரசாங்கம் முன்னெடுக்க முயல்வதாகத் தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை முறையாக மதிப்பிடாமல் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், தமிழ் மக்களின் நில மற்றும் சமூக உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் சட்டத்துக்கு முரணான நிலக் கையகப்படுத்துதல் எதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார். வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காணி அளவீட்டுப் பணிகளுக்கு அரசியல் சாயம் பூசி குழப்பம் விளைவித்ததைப் போன்றே தற்போதும் விசமத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழ் மக்கள் தற்போது உண்மையை உணர்ந்துள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். "எந்தவொரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்படுவதை இந்த அரசாங்கம் அனுமதிக்காது என்றும் இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகாலத் தேவையாகக் கருதி அணுக வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். https://hirunews.lk/tm/442719/kivu-oya-project-no-communal-motives-chandrashekhar-denies-allegations- பயங்கரவாதத்திலிருந்து – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்? - நிலாந்தன்
பயங்கரவாதத்திலிருந்து – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்? - நிலாந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர இருக்கும் பின்னணியில் அந்த சட்டமூலத்தின் வரைவை குறித்த ஒரு கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது. சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தின் பணிப்பாளர், குருபரன், ”பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” புதிய சட்ட வரைபை அதன் ஒவ்வொரு பகுதியாக விரிவாக எடுத்துக் கூறினார். அதன்பின் அது தொடர்பாக அங்கு வந்திருந்தவர்கள் கருத்து தெரிவித்தார்கள். அரசாங்கம் புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிக்கும் பின்னணியில், அது தொடர்பான குடிமக்கள் சமூகங்களின் கருத்தை கேட்டு தொகுத்து அனுப்புவதும் அக்கருத்தரங்கின் நோக்கங்களில் ஒன்று என்று கூறப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக கூறி வருகிறார்கள்; போராடி வருகிறார்கள். அதற்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருமாறு கேட்கவில்லை. இன்று இக்கட்டுரையானது புதிய சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஆராயப்போவதில்லை. மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், ஒரு புதிய சட்டம் ஏன் அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கிறது? அதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏன் தேவையாக இருக்கிறது? என்பதைச் சற்று ஆழமாகப் பார்ப்பதுதான். சட்டம் என்பது தேவ சபையில் நிறைவேற்றப்படும் புனிதமான ஆவணம் அல்ல. அதை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். யார் அந்த மனிதர்கள் என்றால்,ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான். இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், அந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறார்கள். எனவே அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுதான் சட்டமாக நிறைவேற்றப்படும். அரசு நிரந்தரமானது. அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தெரிவு செய்யப்படுவது. இதில் அரசுக் கொள்கையை மீறி அரசாங்கம் போக முடியாது. எனவே அரசின் கொள்கை எதுவோ அதை அரசாங்கம் தன்னுடைய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சட்டமாக நிறைவேற்றுகின்றது. அல்லது ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்துகின்றது. இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பு எனப்படுவது சிங்கள பௌத்த உணர்வுகளை அதிகம் பாதுகாக்கும் ஒரு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். அந்த சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் கொள்கைகள் எவையோ அவைதான் சட்டமாக்கப்படும். இந்த அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் உளவியலை விளங்கிக் கொள்ள வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கும் அரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்திரித்து அதனை ஓடுக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் அங்கே உண்டு. எனினும் பின்னர் அது சிங்கள,முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்பட்டது. ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது, ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தன, தமிழ் ஆயுதப் போராளிகளை “பயங்கரவாதிகள்”என்று அழைத்தார். ஆனால் ஜேவிபியினரை “நாசகார சக்திகள்”என்று அழைத்தார். வார்த்தைகளுக்குள்ளும் நுட்பமாக இன முரண்பாடு? கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெவ்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கிறார்கள். போராடி வருகிறார்கள். தொடக்கத்தில் கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்கள் சத்யாக்கிரக வழியில் போராடினார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை அரச வன்முறைகளின் மூலம் தோற்கடித்தது. அறவழிப் போராட்டத்தை தமிழ் தலைவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னெடுக்கவில்லை. ஆனால் மேற்படி தலைவர்களால் உருவேற்றப்பட்ட தமிழ் இளையவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அதுவும் பின்னர் 2009இல் தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் அறவழியில் போராடி வருகிறார்கள். தமிழ் மக்கள் அறவழியில் போராடியபோது அதை சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு தன் போலீசார் மற்றும் படையினரின் மூலம் நசுக்கியது. அவசர காலச் சடடத்தைக் கையில் எடுத்து பின்னர் ஆயுதம் போராட்டம் தொடங்கிய பொழுது அதனை நசுக்குவதற்கு சட்டரீதியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. பயங்கரவாத தடை சட்டத்தைக் குறித்த விமர்சன பூர்வமான கட்டுரைகளை தொகுத்து “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (CHRD)” 2009ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டது. இந்நூலின் அறிமுக உரையில்,பேராசிரியர். ஜெயதேவா உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்…. “இலங்கையின் காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது. 1971 முதல் பெரும்பாலான ஆண்டுகளில் நாடு ஏதேனும் ஒரு வகையான விதிவிலக்குச் சட்டதின் கீழ் – அவசரகாலச் சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்- ஆளப்பட்டுள்ளது. 1971மார்ச்சில் அவசர நிலை அமலுக்கு வந்தது. அது 1976 வரை தொடர்ந்தது. ஒரு குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, 1978 இல் அவசரநிலை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு PTA அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில்,இலங்கை மக்கள் அவசரகாலச் சட்டம் அல்லது PTA இல்லாமல், அவ்வப்போது, மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே சாதாரண சட்டத்தின் கீழ் வாழ வாய்ப்புக் கிடைத்தது, இவ்வாறு,சாதாரண சட்டம் விதிவிலக்காக இருந்து வருகிறது. இந்தக் கதையை சற்று நாடகத்தனமான மொழியில் மீண்டும் கூறினால், 1971 முதல். இலங்கையில் அவசரகாலச் சட்டம் ‘சாதாரண’ சட்டமாக இருந்துவருகிறது. மேலும் சாதாரண சட்டமானது,’அவசரகாலச் சட்டத்தின்’நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது”. இது எதைக் காட்டுகிறது? சாதாரண சட்டங்களின் மூலம் இந்த நாட்டை ஆள முடியாத ஓர் அரசியல் சூழல் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதைத்தான். அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்களைப்போல தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுவது, இந்த நாட்டின் சட்டச் சூழலை, ஜனநாயகச் சூழலை கேள்விக்கு உள்ளாக்குவது. குறிப்பாக 2009இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொள்ளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது, தொடர்ந்து எதற்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஒரு சட்டத்தை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் தலைக்கு மேல் தொங்க விடுவதன் மூலம், அவர்களைத் தொடர்ந்தும் ஒரு கட்டத்துக்கு மேல் போராட விடாமல் தடுக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சித்தரிக்கக் கூடிய சட்ட வாய்ப்புகளை அது எப்பொழுதும் பேணும். எனவே இங்குள்ள அரசியல், இராணுவ நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை போராட முடியாத மக்களாகத் தொடர்ந்து பேணுவதுதான். தமிழ் மக்களைப் போராடாமல் வைத்திருப்பதற்கு காலத்துக்கு காலம் பொருத்தமான சட்டங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதற்கு இங்கு மற்றொரு உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்தப்பட்டது. காலத்துக்கு காலம் அவர்களுக்கு தமிழ் மக்களை அச்சுறுத்த, போராட விடாமல் தடுக்க ஏதாவது ஒரு சட்டம் தேவை. பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக பேணப்பட்டு வரும் இந்த அரசியல் பாரம்பரியத்தில் அனுரவும் மாற்றங்களை செய்யத் தயார் இல்லை என்பதைதான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விடயத்தில் அதாவது தமிழ் மக்களை ஒடுக்கும் சட்ட ஏற்பாடுகளின் விடயத்தில் திருப்பகரமான மாற்றம் எதையும் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது. இத்தனைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அதுவும் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கம். இரண்டு தடவைகள் கொடூரமான விதங்களில் நசுக்கப்பட்ட ஓர் இயக்கம். 75 ஆயிரத்திற்கும் குறையாத அதன் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக் கொடூரமான, மனித குலத்தை அவமானப்படுத்தும் சித்திரவதைகளின் மூலம் அவர்கள் விசாரிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள். எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ருசி எத்தகையது என்பது ஜேவிபிக்கு நன்கு விளங்கும். அதுமட்டுமல்ல,சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜேவிபி எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழரசு கட்சி முன்னெடுத்த போராட்டங்களில் ஜேவிபியும் பங்குபற்றியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியாக வந்ததும் அவர்கள் தங்களுடைய முன்னைய வாக்குறுதிகள் அனைத்தையுமே கைவிட்டு விட்டார்களா? இந்த அரசாங்கம் அரகலய போராட்டத்தின் விளைவு. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகள் அண்மையில் ஒன்று கூடி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. ஆனால் அந்தப் போராட்டத்தின் கனிகளை தேர்தல் வெற்றியாக மாற்றிய தேசிய மக்கள் சக்தியானது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றது. மாற்றம் என்பது, ஜனாதிபதி அரைக்கால் சட்டையோடு யாழ்ப்பாணத்தின் தெரு ஒன்றில் உடற்பயிற்சி செய்வதோ, அல்லது தமிழ் மக்களோடு செல்பி எடுப்பதோ அல்ல. மாறாக தமிழ் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தலின் கீழ் வைத்திருக்கும் விடயங்களில் நிர்ணயகரமாக அரசியல் தீர்மானங்களை எடுப்பதுதான். https://athavannews.com/2026/1461419- கல்முனையில், மலையக சிறுமி வன்புணர்வு
கல்முனையில், மலையக சிறுமி வன்புணர்வு வீட்டுப் பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மலையக பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் வீடொன்றில் பணிப்பெண்ணாக செயற்பட்டு வந்துள்ளதுடன் கடந்த 15 ஆம் திகதியன்று இரவு சந்தேக நபர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மலையகம்/கல்முனையில்-மலையக-சிறுமி-வன்புணர்வு/76-371528- 🏗️ யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! 🏛️
🏗️ யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! 🏛️ adminJanuary 25, 2026 யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையிலான குழுவினர் இன்று நேரடி கள பயணமொன்றை மேற்கொண்டனர். இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர். ஒப்பந்ததாரர் பிரதிநிதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) அதிகாரிகள், செலவிடப்பட்ட நிதி மற்றும் இன்னும் எஞ்சியுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினர். எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதிப்பற்றாக்குறை மற்றும் இடர்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில், மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்யக்கோரி நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் துறைசார் அமைச்சுகளுக்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். மாநகரத்தின் அடையாளமாகவும், நிர்வாக மையமாகவும் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட கட்டடத் தொகுதியை விரைவில் திறப்பதே எமது இலக்காகும். https://globaltamilnews.net/2026/227456/- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். adminJanuary 25, 2026 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது. எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது. அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும். “கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2026/227462/- 📍 நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு!
📍 நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு! adminJanuary 25, 2026 கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திஅண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். 🧵 நெடுந்தீவில் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ள இயந்திரக் கட்டமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தார். பணியாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் பணி அனுபவங்கள், மேலதிக தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறிந்தார். 🤝 நெடுந்தீவின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் பின்வரும் தரப்பினரை அமைச்சர் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்தல் சிக்கல்கள் குறித்து பேசப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. “உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே தீவகப் மக்களின் வாழ்வாதாரத்தை நிலையானதாக மாற்ற முடியும்” என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 🏛️ தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு சென்ற அமைச்சர், அங்குள்ள நிர்வாகச் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். அலுவலகத்தில் நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார். நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்யவும், அப்பகுதியை ஒரு முக்கிய கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என இவ்விஜயத்தின் இறுதியில் உறுதி அளிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/227465/- 🛑 இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️
🛑 இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️ January 25, 2026 இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மட்டக்களப்புபாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில்பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 🔍 இன்று (25) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார். அரசியலமைப்புச்சபை உறுப்பினர் பதவியிலிருந்து சிறீதரன் விலக வேண்டும் என கட்சியின் அரசியல் குழு இருமுறைஆலோசனை வழங்கியும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். “பதவியை வழங்கிய அதே அரசியல் குழுவிற்கு, வழங்கப்பட்ட பதவியை மீளப் பெறும் அதிகாரமும்உண்டு” என சுமந்திரன் தெளிவுபடுத்தினார். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற சுமார் 4 மணிநேரக் கூட்டத்திலும் அவர் கட்சியின் முடிவுக்கு செவிமடுக்கவில்லை என்பதே இந்தத்தீர்மானத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 🤔இருப்பினும், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரைஎடுக்கப்படவில்லை எனக் கூறி நிலைமையை மென்படுத்தியுள்ளார். கட்சிக்குள்ளான இந்த அதிகாரப் போட்டி தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சிக்குள் நிலவும் இந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகள் தமிழ் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது கட்சியின் எதிர்கால ஒற்றுமையைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. https://globaltamilnews.net/2026/227477/- அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
ஏன் இஸ்ரேல் செய்யும் 100 கணக்கான குண்டுவீச்சு, யுத்தநிறுத்தம் என்று செய்த பின்பும். இங்கே கண்ணுக்கு தெரியவில்லை போல் உள்ளது. நாதியற்ற பெரும்பான்மை முஸ்லீம் பல்ஸதெனியர், சிறப்பு இயற்கை நிலை உள்ள கிறிஸ்தவ வெள்ளை உக்கிரேனியர்? இதில் உண்மையில் ருசியா தான் பாகுபாடு இல்லாதது.- முன்பள்ளிகளின் கற்பித்தல் முறைகள் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - வடக்கு மாகாண ஆளுநர்
முன்பள்ளிகளின் கற்பித்தல் முறைகள் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - வடக்கு மாகாண ஆளுநர் Published By: Vishnu 25 Jan, 2026 | 09:52 PM இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும். பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும். இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும். 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்முன்பள்ளி, இன்று மக்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எப்போதும் நிலைத்து நிற்கும். காரைநகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் அமைந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். முன்பள்ளியின் எஞ்சியுள்ள தேவைகளை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பிள்ளையார் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், சனசமூக நிலையத் தலைவர் நா.பாலகிருஷ;ணன் தலைமையில் இந் நிகழ்வில் நடைபெற்றது. 107 பேரின் 142 லட்சம் ரூபா பங்களிப்பில் இந்த முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236996- புதிய பயங்கரவாத தடைச் சட்டம்.
புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம் - அம்பிகா சுட்டிக்காட்டு! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 03:05 PM தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் (PSTA) தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டுவருகிறோம் எனக்கூறி கொண்டுவரப்பட்டாலும் 1982 இல் நிரந்தரமாக்கப்பட்டு இன்று வரை பயங்கரவாத தடைச் சட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் சரியான வரவிலக்கணம் தெரியாத ஒரு சட்டமாக பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற அரகளையை அடக்குவதற்காக கடந்த அரசாங்கத்தில் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை. தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்த்தால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அநேகமானவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இலங்கைச் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. உதாரணமாக கூறினால் 18 வருடங்கள் சிறையில் இருந்த சந்திர போஸ் என்ற நபர் தன்னை சிறையில் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார்கள் என 2021 ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்த நிலையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் உடல் பகுதிகளில் அனேகமான இடங்களில் தழும்புகள் காணப்பட்டமை சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை காட்டுவதாக அமைந்தது. பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) பின்னர் 2018 (CTA) , பின்னர் (ATA) வரைபுகள் கொண்டுவரப்பட்டு எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது (PSTA) அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றப்படவில்லை. 2018 ல் கொண்டுவரப்பட்ட வரைவில் நீதித்துறையை பலவீனப்படுத்தி பொலிசாரின் அதிகாரங்களை உயர்த்துவதான சட்ட வரைப்பு தயாரிக்கப்பட்டது. அதேபோன்று தற்போது தயாரிக்கப்பட்ட புதிய சட்ட விரைவில் தடை செய்யப்படும் ஒரு இடத்தினை அறிக்கும் அதிகாரம் ஜனாதிபதியைத் தாண்டி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சட்ட விரைவில் ஒரு மனிதனுடைய நடமாடம் சுதந்திரத்தை பொலிசார் தீர்மானிப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான ஒரு உத்தியாகும் அதேபோன்று பயங்கரவாதம் என்ற சொல் வரையறுக்கப்படாத நிலையில் குற்றம் ஒன்றை ஒருவர் செய்ய பார்க்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. கைது செய்யும் அதிகாரம் புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளிடம் காணப்படுகின்ற நிலையில் 24 மணித்தியாலங்கள் வரை அவருக்குரிய பாதுகாப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவதாக அமைகிறது. ஏனெனில் ஆயுதப் படைகளால் கைது செய்யப்படும் நபர் ஒருவரை 24 மணித்தியாலத்திற்கு முன்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. புதிய சட்ட வரைவில் ஏற்கனவே தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீதித்துறையில் இருந்து நிர்வாகத்துறை தீர்மானித்த நிலையில் சிறு திருத்தமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் விடுவிக்கலாம் என்ற ஒரு விடயத்தை சேர்த்திருக்கிறார்கள். அதேபோன்று குற்றம் ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிசார் தாங்கள் நினைத்தவாறு எழுதி வாங்கும் நிலையை மாற்றி நீதிமன்றத்தின் முன் வரவேண்டும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இது எவ்வாறாக இருந்தாலும் புதிய சட்டத்தில் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே அல்லாமல் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அற்ற நீதித்துறையாகவே காணப்படுகிறது. ஆகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் அடிப்படை உரிமை மீறல்களை புரிவதற்கான ஒரு வரைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்கா, சுவிஸ் , ஆஸ்திரேலியா மற்றும் ஐநாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/236959- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையின் ஐந்தாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் மூத்தோர் சங்கத்தில் 25/01/2026 நடைபெற்றது தொடர்புகளுக்கு +94 77 777 5448 இந்நிகழ்வில் நிர்வாகிகள் தலைவர் திரு தேவகுமாரன், செயலாளர் திரு மோகனறூபன், பொருளாளர் திரு பாலகிஸ்ணா, திருமதி அபிராமி சிவபவன், திரு இராமலிங்கம், திரு சிவறூபன், திரு இந்திரகுமார் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் திரு ஜெகஜீவகன், திரு அமிர்தகணேசன், திரு சிறீதரன், திரு ரஞ்சித், திரு கோகிலராஜன், திரு சேந்தன், திரு கரிதாசன், திரு சிறீரங்கன், வீடமைப்பு அதிகாரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு சுரேஸ்குமார், திரு சுரேன் தொண்டர்கள் திரு அறிவுக்குமரன், திரு மகிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு எமது நன்றிகள்.- மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க
மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 01:50 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கண்டிக்கு விஷயம் செய்து மல்வத்தை பீடம் மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார். மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள் தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின்மகாநாயக்கர் வண. வரகாகொடை ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/236952- "இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன?
"இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன? பட மூலாதாரம்,UNHR கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார். அதேபோன்று, ராணுவம் இத்தகைய குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன? "இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தில் சரணடைந்த பின்னரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய நான் பின்னர் எனது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்ட போது அந்த வேதனையில் பல தடவைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் " என, இறுதிக்கட்ட போரின் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முன்னாள் போராளி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட அமைப்புடன் இணைந்து மருத்துவ போராளியாக செயற்பட்ட பெண்ணொருவர் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார். அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த வேதனையான சம்பவத்தால் பல ஆண்டுகள் நான் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்" என்றார். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டும் அவர், தமது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்டதாக தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பாகிஸ்தானில் தயாராகும் போர் விமானத்தை வாங்க இந்த நாடுகள் ஆர்வம் காட்டுவது ஏன்? "கடன் வாங்கி வீடு கட்டினோம்" கோவையில் இந்த நிலங்களை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? டிரம்பின் அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? அணு ஆயுத சூட்கேசை செயல்படுத்திய ரஷ்ய அதிபர் - உலகம் பேரழிவின் விளிம்பு வரை சென்ற திகில் நிமிடங்கள் End of அதிகம் படிக்கப்பட்டது உயர்தரம் படிக்கும்போது வடக்கு கிழக்கில் அப்போது நிகழ்ந்த போர்க்கால சூழ்நிலைகள் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவ போராளியாக இணைந்துகொண்டதாக தெரிவித்தார். நேரடியாக போராட்ட களத்தில் இருக்காவிட்டாலும் போராளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்து தன்னை ஒரு மருத்துவ போராளியாக மாற்றிக்கொண்டதாக கூறுகிறார் அவர். பின்னர் இறுதிக்கட்ட போர் முடிவில் ராணுவத்திடம் சரணடைந்தபோது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக தெரிவித்த அவர், வாழ்நாளில் முகங்கொடுக்க முடியாத வேதனையான நாட்களை ராணுவ முகாமில் கடத்தியதாகவும் கூறினார். "புனர்வாழ்வின் பின்னர் வெளியில் வந்தபோதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன், பின்னர் உறவினரின் உதவியுடன் லண்டனுக்கு வந்த பின்னர் நீண்ட நாட்களாக இந்த மன வேதனையுடன் காலத்தை கடத்திய நிலையில், இப்போது எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றேன்" என கூறினார். "வடக்கு-கிழக்கில் திட்டமிட்டே பாலியல் வன்கொடுமைகள்" - ஐ.நா பட மூலாதாரம்,Getty Images ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. "அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக அடையாளப்படுத்தப்படக்கூடியவையாகும்" என அதில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், இவை அந்தந்த நபர்களின் ஊடாக தகவல்களைத் சேகரிப்பதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை அந்த சமூகத்திடையே வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வன்முறை சம்பவங்கள் கட்டமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதனூடாக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. "இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் நீண்டகாலமாகப் பேணப்பட்டாலும், இலங்கை அரசாங்கங்கள் மோதலின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தவறியிருப்பதுடன், வன்முறைகளின் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கூறி அல்லது மறுத்து வந்திருக்கின்றன." எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் இதுபற்றி தீவிர கரிசனையை வெளிப்படுத்தி, நம்பத்தகுந்த பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், "மோதலின் போதான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு இந்த ஆட்சியிலும் தொடர்வதுடன், இந்த விவகாரங்களில் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. இந்த மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தகைய மீறல்களுக்கு இடமளித்த கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன" எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது. மிக மோசமான பாலியல் வன்முறை சம்பவங்கள் தற்போது வரை கவனத்தில்கொள்ளப்படாமலும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமலும் இருப்பதானது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களைப் பெரிதும் நலிவடையச் செய்திருக்கிறது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தவறியிருப்பது பாலியல் வன்முறைகளிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசுகள் அடைந்திருக்கும் தோல்வியையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதையுமே பிரதிபலிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. "அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, 'கடந்த காலங்களில் அரச படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன' என்ற விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, பொறுப்புக்கூறலை இலக்காகக்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் முகங்கொடுத்துவரும் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை மேலும் மன உளைச்சலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள யுத்த வெற்றிச்சின்னங்களை அகற்ற வேண்டும்" என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம்" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ், "யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன உறுதி செய்யப்படாமையானது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களின்படி மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குவதற்குமான சட்டக்கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். "தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட அநீதி" இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை, மோதல் கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமைய வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச்சபையும் வலியுறுத்தியுள்ளது. மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான தூண்டுதலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங். "தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றில் சில சம்பவங்களை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப்படுத்த முடியும்" எனவும் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார். "நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்ட பின்னர் அகதிகளாக லண்டனில் வசிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் முடிவுகளே இந்த அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அத்துடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர், போர் முடிந்த பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், முழுமையான உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவு, பாதுகாப்பான குடியிருப்பு, சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள், சட்ட ரீதியான தீர்வுகள், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவை இதில் அடங்குவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் இருந்தபோதும் அல்லது வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்தபோதும், பயம், அவமானம், தனிமை ஆகியவை தங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டதாக சாட்சியமளித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைகள் தமிழர்களின் தனித்துவம், கலாசாரம், மனநிலை ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,SALP படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட ஒருவர் நெருக்கடிக்கு முன்பாகவும், நெருக்கடி காலகட்டம் மற்றும் அதற்கு பின்பு தன் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை வரைந்துள்ளார். தன் உடலில் உள்ள காயங்களைப் பற்றி குழந்தை கேட்டபோது என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என ஒரு தந்தை வேதனையுடன் பகிர்ந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறகு, பாலியல் வன்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். இது மிக முக்கியமான உண்மை," என ஒருவர் கூறியுள்ளார் என பல சாட்சியங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அமைப்புகள், முழுமையான இழப்பீட்டு திட்டங்கள், நீடித்த மனநல ஆதரவு ஆகியவை அவசியம் என வலியுறுத்தியுள்ளது. "தொடர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றனர்" பட மூலாதாரம்,AMBIKA படக்குறிப்பு,அம்பிகா சற்குணநாதன் இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில், "இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுளார். மேலும், " மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் அம்பிகா. "யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும்" அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் 'இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா?" படக்குறிப்பு,வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி 'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான அட்டூழியங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால், இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது உறுதியாகின்றது,' என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேவேளை, "இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தப் போகிறோமா? அப்படி என்றால் அதனை எவ்வாறு செய்வது என்பன தொடர்பில் ஆராய வேண்டும்" எனவும் லீலாதேவி குறிப்பிட்டார். 'ராணுவம் ஒருபோதும் குற்றங்களில் ஈடுபடவில்லை' - ஜெனரல் சவேந்திர சில்வா படக்குறிப்பு,ஜெனரல் சவேந்திர சில்வா தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தவரும் முன்னாள் ராணுவத் தளபதியும், பின்னர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே இலங்கை அரசாங்கம் மீதும், ராணுவம் மீதும் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவது புதிதல்ல. இலங்கை ராணுவம் மீதான போர் குற்றச்சாட்டுகள் இன்னமும் நீங்கவில்லை என தெரிவித்த அவர், ராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றார். புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவும், வேறு சில செயற்பாடுகளுக்காகவும் தொடர்ச்சியாக முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேபோல், ராணுவம் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை தான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றும் எப்போதும் தான் ராணுவத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். "குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம்" - ராணுவ ஊடகப்பேச்சாளர் படக்குறிப்பு,ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார். "இதுவொரு பாரதூரமான குற்றச்சாட்டாகும், ஆனால் எந்தவித அடிப்படையும் இல்லாத முழுக்க முழுக்க போலியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றே நாம் கூறுவோம். முதலில் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது" என்றார் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலகட்டத்தில் ராணுவத்தினால் திட்டமிடப்பட்டு இவ்வாறான பாலியல் கொடுமைகள் இடம்பெற்றதாக எந்தவித வழக்கு விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை என்றார். "சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, அவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை, அதேநேரம் இலங்கைக்குள் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்ற நிலையில் அதனை குழப்பவும் நாம் இடமளிக்க மாட்டோம்" என தெரிவித்த ராணுவ பேச்சாளர் வருண கமகே இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். முக்கிய குறிப்பு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன. 707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும். இந்தியாவில் உதவியை நாடுபவர்கள் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5731rdpeo- வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்
சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள்இ மற்றும் சரசீஜா ராமன் ஆகியோரின் இந்த முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.- அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; மின்சாரம் துண்டிப்பு ; 14,000 விமானங்கள் இரத்து Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 11:34 AM அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் நியூயோர்க் வரை பரவியுள்ள 'ஃபெர்ன்' பனிப்புயல் காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுமார் 23 கோடி மக்கள் (அமெரிக்க மக்கள் தொகையில் 40%) இந்தப் பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் கடும் காற்றினால் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 14,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர். கடும் பனிக்கட்டிகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், டெக்சாஸ் மற்றும் லூசியானா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 1,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, ஜோர்ஜியா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மத்திய அவசர கால நிதி உதவியை (Federal Disaster Assistance) வழங்க அனுமதி அளித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 21 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே (மைனஸ் டிகிரி) சென்றுள்ளது. பனிப்புயலுடன் சேர்ந்து 'உறைபனி மழை' பெய்வதால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. மீட்புப் பணிகளுக்காக 12 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/236938- வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்
வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம் Published By: Vishnu 25 Jan, 2026 | 07:38 PM வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள சுமார் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திடத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சு.முரளிதரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார பொறிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. கடந்தகால போர்சூழ்நிலை காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள், மற்றும் சரசீஜா ராமன் உள்ளிட்டோர் வழங்க முன்வந்துள்ளனர். இலங்கையில் அதிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் கிளிநொச்சி, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு, ஐந்தாவது இடத்தில் மன்னார் மற்றும் பதினொன்றாவது இடத்தில் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அறிகிறோம். அந்த வகையில் உதவித் திட்டம் முதலில் கிளிநொச்சி, இரண்டாவது முல்லைத்தீவு, அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் வழங்கப்படவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236993 - யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.