Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂 போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்... அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள். சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣 பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது. அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு, "எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க.
  3. சம்பவம் நடந்தபோது சலே இந்தியாவில் இருந்ததாக அரசியல்வாதி கூறுகிறார், சலேயின் சட்டத்தரணி, அவர் மலேசியாவில் இருந்ததாக கூறுகிறார். ஏன் ஒரே சம்பவத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள்? சலேக்கு இருந்த பதவி நிமித்தம் அவர் கடவுச்சீட்டு இல்லாமலே பணி நிமித்தம் பயணம் செய்யும் வசதியிருந்ததாக சொல்லப்பட்டது, அது நிஜமாக இருக்கும் பட்ஷத்தில் சலே இலங்கையிலேயே இருந்திருக்க வாய்ப்பிருக்கலாம் அல்லது அவர் வேண்டுமென்றே மலேசியாவிற்கோ இந்தியாவிற்கோ அனுப்பப்படிருக்கலாம். இருந்தாலும் தொழில் நுட்ப மூலம் எந்த நாட்டிலிருந்தும் தாக்குதலை நடத்துவிக்க வாய்ப்புள்ளது. தாக்குதலுடன் இவர் நேரடியாக சம்பந்தப்படவில்லையானாலும் அதன் மூளையாக செயற்பட்டிருக்கிறார். அதற்கு அவர் சம்பவ இடத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை, தற்போது வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு இலங்கையில் கொலைகள், கடத்தல்கள் நடத்தப்படுகின்றன, அங்கே என்ன நடக்கின்றது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்புக்கூட உள்ளது என்பதை சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அறிந்திருக்கவில்லைப்போலும். கொலையாளி அணிந்திருந்த மேலங்கி, முன்னாள் போராளி வீட்டுக்கருகில் திட்டமிட்டே போடப்பட்டது ஏன்? தன் இனத்தையே பலி கொடுத்துள்ளான் இந்த சலே என்னும் சாத்தான்! கம்மன் பில என்பவர் சொல்கிறார், சலேவின் சிறைக்கூடத்தில் எலிகள் இருக்கின்றனவாம், அவருக்கு வேறு வசதியான அறை அளிக்கப்பட வேண்டுமாம், வீட்டிலிருந்து உணவு கொடுக்கப்படவேண்டுமாம். ஏன் இதுவரை இந்த அறையில் கைதிகள் இருக்கவில்லையா? அப்போ ஏன் இந்தகவனம் செலுத்தப்படவில்லை? அவர்கள் மனிதர்கள் இல்லையா? அல்லது அவருக்கு உணவில் விஷம் அல்லது வேறு வகையில் கொலை செய்து பிரதான சூத்திரதாரியை காப்பாற்ற முயற்சிக்கின்றனரா? பிக்குகளை போலீசார் காவி உடை கலைய தாக்கினர் என்று சொன்னதுபோல் பல கற்பனைகதைகளை உருவாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர் பின்னால் உள்ள திருடர். இவர்களுக்கே தமது போலீசார் மீதும் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையில்லை, இதில போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை செய்யபோகினமாம்.
  4. தம்பரின் உலகு தனி உலகு… அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂 தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂 தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂 ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை. இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂
  5. பல சிங்கள அமைச்சர்களை விட தமிழ் அரசாங்க அதிபர்களின், அமைச்சு செயல்லாளர்களின் சொத்து பலமடங்கு. வீடுகள் எல்லாம் மினிமம் 3 மாடி, மாட மாளிகைகள். யார் அமைச்சரா வந்தாலும்…சேர்…சேர்… எண்டு குழையடித்து சேத்து விடுவார்கள், சொத்தை. பதவியை விட்டு போகும் போது கூட அமைச்சருக்கு தெரியவராது தான் அடித்ததை விட இவர்கள் அடித்தது அதிகம் என்பது.
  6. போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்! மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது. அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மீறி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் எச்சரித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், இதுவரை சுமார் 2,000 பேரைக் கொன்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும் போக்குவரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதுடன், 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எரிபொருள் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சாதனை அளவில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தூண்டியுள்ளது. இதனிடைடேய அண்மைய மோதலினால் 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள்/குழந்தைகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியம் (UNICEF), தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (12) நடந்த பிரச்சார பாணி பேரணியில் டொனால் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக கூறினார். வாரத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு சுமார் $120 ஆக உயர்ந்து பின்னர் $90 ஆக நிலைபெற்ற எண்ணெய் விலை, புதன்கிழமை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது. வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு குறியீடுகள் சரிந்தன, ஆசியாவில் பங்குகளும் வீழ்ச்சி கண்டன. இவ்வாறான நிலையில் ஈரான் நீண்டகால பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளது. ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அமெரிக்காவை நோக்கி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் எண்ணெய் விலை எமது பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது, அதை நீங்கள் நிலைகுலைத்துவிட்டீர்கள் என்று கூறினார். ஈரானிய வெடிபொருட்கள் நிறைந்த படகுகள் ஈராக்கிய நீரில் இரண்டு எரிபொருள் டேங்கர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது. வளைகுடா நீரில் மூன்று வணிகக் கப்பல்களைத் தாக்கிய பின்னர் அவை தீப்பிடித்து எரிந்தன. இதில், ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாக துறைமுக அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து நிறுவனங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்தன. இது தவிர ஈரான் பஹ்ரைனின் முஹாரக்கில் உள்ள ஒரு நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், முக்கிய எண்ணெய் நுகர் நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம், புதன்கிழமை, 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எண்ணெய் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க, உலகளாவிய மூலோபாய இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பரிந்துரைத்தது – இது வரலாற்றில் மிகப்பெரிய தலையீடு ஆகும். இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிப்பதாகக் கூறியுள்ளது. திட்டமிடப்பட்ட வெளியேற்ற விகிதங்களின் அடிப்படையில் இது வழங்க சுமார் 120 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1468065
  7. மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு! மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை கு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது எண்ணெய் துறைமுக செயல்பாடுகளை முற்றாக நிறுத்தியுள்ளது. இதேவேளை, மத்திய கிழக்கு போரினால் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ரஷ்யாவிற்கு பெரும் நிதி நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் (Chris Weafer) கிறிஸ் வீஃபர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடைகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரஷ்ய எண்ணெய், தற்போது உலகச் சந்தையில் நிலவும் அதிக விலைக்கு ஆசிய நாடுகளால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்படுகிறது. ரஷ்யா மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியாளர்களும் இந்த விலை உயர்வால் லாபமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களைப் பாதுகாப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 200 அமெரிக்க டொலரை எட்டும் என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடைமறித்து அழித்துள்ளன. இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் , ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் நடக்காது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என மூன்று முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. https://athavannews.com/2026/1468173
  8. இப்போதைய யாழ் அரச அதிபர் பிரதீபனின் மகன் 20 -25 வயதுகளை நெருங்கியவர். அண்மையில் பல கோடி ரூபா பெறுமதியான நவீன உணவகம் ஒன்றினை திறந்துள்ளாராம். இந்த இளம் வயது உள்ளவருக்கு... இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துள்ளது. நான் இந்த வயதில்... 200 ரூபாவை கூட கண்டத்தில்லை. சில காலத்துக்கு முன் இந்த மகன், தனது நண்பருடன்... தகப்பனின் அரச வாகனத்தை எடுத்துக் கொண்டு மிக வேகமாக ஓடி...கந்தர்மட சந்திக்கு அண்மையில் மிகப் பெரிய விபத்தை சந்தித்து இருந்தார்கள். விலை உயர்ந்த வாகனம் பெருமளவு சேதத்துக்கு உள்ளாகி இருந்தது. அந்த விடயத்தை... காதும்,காதும் வைத்த மாதிரி அமுக்கி விட்டார்கள். பொதுவாக இலங்கையில்... உத்தியோகங்களை பார்த்துத்தான், வழக்குப் போடுவார்கள் போலுள்ளது. அப்பாவி மக்கள்தான்... பாவம்.
  9. வாழ்வு சதமென .......... நாகேஸ்வரராவ் & ஸ்ரீ ரஞ்சனி ........! 😂
  10. ஈரான் மகளிர் கால்பந்தாட்ட அணியே எதிர்ப்பை காட்டுகிறது…. முல்லாக்கள் வந்து லத்தியை தொண்டையில் விட்டு அடிக்கும் வரை இந்த அரை லூசுகளுக்கு யார் நவ நாஜிகள் என்பது உறைக்காது😂.
  11. வணக்கம் வாத்தியார் . .........! என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு நான் வயாகரா பெண் : யுத்தம் செய்யாத நேரம் நீ மோகம் கொண்டு போராடு முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும் நீராடு எந்தப் பூவில் என்ன வாசம் மன்னன் போலே நீ தேடு கையில் கோப்பை பெண்ணை ஏந்து கண்ணதாசன் போல் பாடு கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு நீயும் என்னோடு தேடுவது நூறு வாவா வாவா வாரேவா பெண் : செவ்வாய் மீதேறி நாமே அதை காதல் தேசம் செய்வோமே பூமி உள்ளே போய் நாமே ஒரு ஆசை தீயாய் ஆவோமே மேகம் ஆகி வானம் போவோம் மீண்டும் நீராய் நாம் மாற மண்ணின் மீது தூரல் ஆவோம் மீண்டும் ஆறாய் நாம் ஓட காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா காற்றே தீயோடு மோதிக் கொள்ள வாவா வாவா வாரேவா ......! --- என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா ---
  12. தம்பர் யுத்தத்தை விரும்பாதவர்… யேசு…புத்தர்….தம்பர் தான்… எண்டு பைடன் காலத்தில் ஒரு அண்ணை யாழில் சலங்கை கட்டி ஆடினவர்😂 மானஸ்தன் எங்க எண்டு தேடிப்பார்த்தால்….. ஐயோ அமெரிக்கா ஈரானை அடிக்குது எண்டு ஒரு திரில நிண்டு கொண்டு மூக்கால அழுகிறார்😂…. தோசையை திருப்பி போடுவதில் யாழ்கள அண்ணைமார் தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுப்பார்கள்.
  13. அனுரவின் ஆளுனர் செய்த களவுக்கு கவர் எடுக்கும் அந்தரிப்பில் அவர் முன்னர் யாழ்பாண ஜி ஏ என்பது கூட மறந்து போச்சு 😂. ஜெயக்கொடி, வேதநாயகன் என கள்ளர்கள் என குற்றம் சாட்டபட்டவர்கலால் நிரம்பி வழிகிறது ஜேவிபி. இந்த வேதநாயகன் பற்றி ஆரம்பம் முதலே நான் யாழில் எச்சரித்துள்ளேன்.
  14. Today
  15. நோபல் பரிசை தனக்கு தரும்படி வாயால் கேட்கும் மனிதரல்லவா அவர்? ஈரான் போர், டிரம்புக்கு தீராத வடுவையும் வலியையும் தரப்போகிறது.
  16. ஓ! அவர்தான் இவரா? நான் கவனிக்கவில்லை. இந்த நாட்டில் இதெல்லாம் சகஜம். சுனாமி நிதியை காளவாடியபின், கொலை, கொள்ளை செய்த பின் அதை செய்த திருடர், கொலைகாரர் ஜனாதிபதியாகிற நாடல்லவா இது!
  17. doornSstpet521g515h9i63c0l9ha10868h4f1it 1ggfgi3fgaaauf0m1l3 · இந்த டோர்னமென்ட் முழுக்கத் தண்ணி தூக்குன ஒரு பிளேயர், இந்தியா T20 வேர்ல்ட் கப் ஜெயிச்சதுக்கு அப்புறமா சொன்ன வார்த்தைகள் இந்தியன் ஃபேன்ஸ் எல்லாரையுமே ரொம்ப எமோஷனலாக்கிருக்கு...🫶 அதாவது இந்தியா T20 வேர்ல்ட் கப் ஜெயிச்சதுக்கு அப்புறமா, சிராஜ்கிட்ட உங்களோட ஃபீலிங்ஸ் எப்படி இருக்குன்னு ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் கேட்டாரு.. அதுக்கு சிராஜ் என்ன சொன்னாருன்னா... 'எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இந்த டோர்னமென்ட் முழுக்கத் தண்ணி தூக்கிருக்கேன், நெட் பவுலிங் போட்டுருக்கேன். ஆனா அந்த ரோல் கூட டீமுக்கு ரொம்ப முக்கியம் தான். டீம் ஜெயிச்சதுக்கு பின்னால நானும் இருக்கேன்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' அப்படின்னு சிராஜ் சொன்னாரு...!!!❣️" இவருதாங்க உண்மையான டீம் பிளேயர்! ஹீரோஸ் எல்லாரும் நம்ம கண்ணுக்கு முன்னாடி மட்டும் தான் இருப்பாங்கன்னு இல்ல, நம்ம கண்ணுக்குப் பின்னாடியும் இருப்பாங்க." முகமது சிராஜின் இந்த முதிர்ச்சியான குணம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது...!!!❤️"
  18. தேசிய இலங்கையில் ஏன் பிரிவினை ?தெற்கின் விளைச்சலை வடக்கு தராமல் விடுவார்களா? 🤣 என்னப்பா யாழ்ப்பாணம் தனிநாடா? அதற்கு ஒர் தூதுவரா....சொல்லவே இல்லை🤣
  19. ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடிய டிரம்ப் Mar 12, 2026 - 06:54 AM இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து தான் கேள்வி எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கென்டக்கி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், குறித்த கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அதனை ஏன் அழித்தீர்கள் என்று தான் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். "நாம் ஏன் அவர்களைக் கொன்றோம்? அவர்களைக் கைது செய்து நமது கடற்படையில் சேர்த்திருக்க முடியாதா?" என்று தான் அதிகாரிகளிடம் கேட்டதாக அவர் அங்கு தெரிவித்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது என்று தனது ஜெனரல் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், அவர் அதனை "ஐயா, அதுதான் அதிக வினோதமானது" என்று விவரித்ததாகவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார். கடந்த வாரம் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட டார்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'Frigate' ரகத்தைச் சேர்ந்த IRIS Dena என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 கடற்படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmms8xo60001356p83nq6j96
  20. ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் – CID தகவல் Published By: Vishnu 12 Mar, 2026 | 05:11 AM சுரேஷ் சலே மீது 2019 இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில், 2018 வவுணதீவு இரு பொலிஸ் அதிகாரிகள் கொலை மற்றும் 2019 சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவங்களின் விசாரணைகளை திட்டமிட்டு திசைதிருப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தைத் தாக்குதலுக்கான இலக்காக அடையாளம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, தாக்குதல் நடைபெறலாம் என்ற முன்னறிவிப்பு கிடைத்திருந்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் CID குறிப்பிட்டது. இதற்கு எதிராக சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பவம் நடந்த காலத்தில் அவர் மலேசியாவில் இருந்ததாகவும், பல விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் புதிய குற்றச்சாட்டுகள் முன்வைப்பது பக்கச்சார்பானது எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், மேலதிக விசாரணைகள் அவசியம் எனக் குறிப்பிட்டு வழக்கை மார்ச் 25ஆம் தேதி வரை ஒத்திவைத்தார். https://www.virakesari.lk/article/240758
  21. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி ; 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது - வடக்கு ஆளுநர் 11 Mar, 2026 | 07:18 PM (எம்.நியூட்டன்) இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - 2025' வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (10) கொக்குவிலுள்ள செல்வாபலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்: வடக்கு மாகாணத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தாங்குதிறன் ஆகியவற்றைக் கொண்டாடும் இந்த விசேட நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெருமையடைகின்றேன். எழுச்சிபெறும் வடக்கு மாகாணத்தின் வாழும் சாட்சிகளாகத் திகழும் வெற்றியாளர்களைக் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகவே இது அமைந்துள்ளது. புதிய விடயங்களை உருவாக்குவதற்கும், புத்தாக்கங்களைப் புகுத்துவதற்கும், சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தொழில்முனைவோராகிய உங்களுக்கு இருக்கும் தைரியத்தை நாம் மனதாரக் கௌரவிக்கின்றோம். தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளமையானது, பிராந்திய சுபீட்சத்தின் மீதான எமது கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. வடக்கு மாகாணம் முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதிலும், உள்ளூர் வர்த்தகங்கள் செழித்தோங்குவதற்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை வழங்குவதிலும் அதிகார சபையின் அசைக்க முடியாத ஆதரவு மிக முக்கியமானது. தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவானது, ஒரு மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக நாம் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த சான்றாகும். ஆளுமை விருத்தி, நிலைபேறான வளர்ச்சி மற்றும் உள்ளூர், உலகளாவிய சந்தைகளில் போட்டியிடுவதற்குத் தேவையான வளங்களை எமது தொழில்முனைவோருக்கு இணைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய பாலமாக இது அமைந்துள்ளது. இன்று விருதுகளை வென்றவர்களே, நீங்கள்தான் எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள். யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகச் சந்தை போன்ற முன்னெடுப்புகள், யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றம் மற்றும் தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவுடன் நீங்கள் அடைந்துள்ள வெற்றியானது, அடுத்த தலைமுறையினரின் இலட்சியங்களுக்குப் பெரும் உந்துசக்தியாக அமையும். இலங்கைத் தீவின் செழிப்பான பொருளாதார மையமாக ஒருகாலத்தில் விளங்கிய வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பெருமையை நீங்கள் மீண்டும் நிலைநாட்டுகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் ஆற்றல் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதுடன், உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாம் உங்களுக்குத் துணையாக நிற்போம் என உறுதியளிக்கின்றேன்,' என்றார். இவ்விசேட நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய்முரளி, தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/240747
  22. தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் காது கேளாதோரால் விமர்சிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரஹாம் பெல் 1847ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடியேறினார்; மேலும், அவருக்கு 30 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே, அவரைப் புகழ்பெற்றவராக்கவிருந்த தொலைபேசியை அவர் உருவாக்கியிருந்தார். கட்டுரை தகவல் டாலியா வென்ச்சுரா பிபிசி நியூஸ் முண்டோ 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார். இருப்பினும் உலகின் காது கேளாதோர் சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு அவரது பெயர் போற்றுதலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகிறது. கண்டுபிடிப்புகளின் வரலாற்றைப் பற்றிய கவர்ச்சிகரமான விஷயங்களில் ஒன்று, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இலக்கை நோக்கி எத்தனை முறை பணியாற்றியுள்ளனர் என்பதுதான். இது அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், அந்த இலக்கு தொலைபேசி இல்லை என்பதுதான் சுவாரஸ்யம். கடந்த 1870களில், மின்சாரத் தந்தி ஏற்கெனவே மக்கள் ஒளியின் வேகத்தில் உலகளவில் தொடர்புகொள்வதைச் சாத்தியமாக்கி இருந்தது. இதுவொரு பெரிய திருப்புமுனையாக இருந்தாலும், அதில் சில அடிப்படை குறைபாடுகள் இருந்தன. அது விலை உயர்ந்ததாகவும், ஒரு நேரத்திற்கு ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப முடியும் என்பதுமே அந்தக் குறைபாடுகள். அப்போது ஒரே நேரத்தில் பல செய்திகளை அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. மேலும், அதற்கான வெகுமதி சிறப்பாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. கிரஹாம் பெல் 1871இல் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவர் ஏற்கெனவே தந்தி மற்றும் கண்முன் இருந்த சவாலால் ஈர்க்கப்பட்டார். அதற்கும் மேலாக, அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணின் தந்தை பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தார். ஏனெனில், அவர் அதைச் சாத்தியமாக்கினால் அதன்மூலம் தான் நிதிரீதியாகப் பலனடைய முடியும் என்று அவர் கருதினார். கிரஹாம் பெல் ஒரு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் அல்ல, மேலும் மின்சாரம் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும், அவருக்கு வேறு அறிவும் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விருப்பமும் இருந்தது. ஆனால், அதே விஷயத்தை அடைய முயன்று கொண்டிருந்த மற்ற பலரும் இருந்தனர். சிலர் அந்தப் பணிக்கு மிகவும் தகுதியானவர்களாக இருந்தனர். அவருக்கு மிக முக்கியமான போட்டியாளராக இருந்தவர் எலிஷா கிரே என்ற தொழில்முறை கண்டுபிடிப்பாளர். அவர் அந்தத் துறையில் மதிக்கப்பட்டார். அதோடு, இருமுறை தந்தியின் மேம்பாடுகளை உருவாக்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் முன்னேற்றம் மட்டுமின்றி, பிறரின் சாதனைகளையும் அறிந்திருந்தனர். இதில் இத்தாலிய குடியேறியான அன்டோனியோ மியூசி, 2002இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தொலைபேசியின் உண்மையான கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏனெனில், 1860இல் நியூயார்க்கில் அவர் உருவாக்கிய "டெலிட்ரோஃபோனோ" அவரை இந்த சர்ச்சைக்குரிய பட்டத்திற்குத் தகுதியுடையவராக்கியதாக அவர்கள் கருதினர். ஆனால், 19ஆம் நூற்றாண்டில், சர்ச்சையின் மையத்தில் மியூசி இருக்கவில்லை. அதேநேரத்தில், அவர்கள் பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் தந்தியைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது, கிரஹாம் பெல் மற்றும் கிரே, குரல் மூலம் செய்திகளை அனுப்பும் சாத்தியத்தைக் கண்டுபிடித்திருந்தனர். இருவருமே இதனால் கவரப்பட்டாலும், கிரே தொலைபேசியைவிட தந்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார். இதன் மூலம் அவரால் செல்வம் ஈட்ட முடியுமென உறுதியாக நம்பினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் தந்தித் தொழில்நுட்பக் காப்புரிமை வரைபடம், மார்ச் 7, 1876. அதே காரணத்திற்காக, கிரஹாம் பெல்லின் மாமனார் அவரையும் அதையே செய்யும்படி அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவரால் பெல்லின் சோதனையை எதிர்க்க முடியவில்லை. காதலர் தினமான பிப்ரவரி 14, 1876 அன்று, தொலைபேசிக்கான காப்புரிமைக்கான விண்ணப்பத்தை பெல் தாக்கல் செய்தார். அவருக்குத் தெரியாமல், இரண்டு மணிநேரம் கழித்து, கிரே தனது சொந்த யோசனையை காப்புரிமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அவர் மிகவும் தாமதமாகச் செய்தார். மார்ச் 7, 1876 அன்று, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்று, அதன் கண்டுபிடிப்புக்கான உரிமைகளைப் பெற்றார். உண்மையான நோக்கம் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்ற தலைப்பு இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலானோர் அத்தகைய சாதனங்களை "நேரடி நடைமுறை பயன்பாடு" இல்லாமல் "ஓர் அறிவியல் ஆர்வம்" என்று மட்டும் கருதியபோது, கிரஹாம் பெல் ஒன்றை உருவாக்கியது மட்டுமின்றி, அதன் திறனைக் கண்டறிந்து, அதை நிரூபிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். (தி டெலிகிராஃபர், 1869). அவரது அடிப்படைக் கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து பெருகியது. இன்று கிட்டத்தட்ட 9 பில்லியன் மொபைல் போன்கள் உள்ளன. அசலுடன் ஒப்பிடும்போது அவை முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், இன்னும் அதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இதன்மூலம் அவரது பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்பு, விமானப் போக்குவரத்து, வழிசெலுத்தல் மற்றும் ஒளி மூலம் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் அவர் உருவாக்கிய பிற கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவற்றைவிட இது நிலைத்து நின்றது. கடந்த 1875ஆம் ஆண்டில், தொலைபேசிக்கு வழிவகுக்கும் சோதனைகளில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது தனது உண்மையான நோக்கம் இல்லையென்று பெல் வலியுறுத்தினார். "ஒவ்வொரு நாளும் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்: காது கேளாதோர் மீதான என் ஆர்வம் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும். நான் இந்த வேலையை (ஓர் ஆசிரியராக) ஒருபோதும் கைவிட மாட்டேன். மேலும் வாழ்வில் நான் எவ்வளவு வெற்றிகளைப் பெற்றாலும், உனது கணவர் எப்போதும் காது கேளாதோருக்கான ஆசிரியராக அறியப்படுவார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று பெல் வலியுறுத்தினார். பின்னர், தொலைபேசி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததற்கு வருத்தப்பட்டு, அவர் தனது காதலிக்கு எழுதினார்: "காது கேளாதோருக்கு கல்வி கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் குழுவை உருவாக்க முடிந்தால், என் கண்டுபிடிப்பு வழங்கக்கூடிய அனைத்து மரியாதைகளையும் பெற்றதைவிட நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பேன்." அவரது தொழில், ஒரு வகையில், மரபுரிமையாக வந்தது. ஒரு கட்டத்தில் அவரது குடும்பம் அவருக்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்திருந்தாலும், அவரது சிறு வயதில் இருந்தே, அவரைச் சுற்றியிருந்த விஷயங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுவதில் தன்னை அர்ப்பணிக்க அவரை ஊக்குவித்தன. அவரது தாத்தாவும் தந்தையும் சொற்பொழிவு, உச்சரிப்பு ஆகியவற்றைக் கற்பிப்பதில் புகழ்பெற்ற ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். தனது தாயிடம் இருந்து, இசை மீதான பற்றை அவர் வளர்த்துக் கொண்டார். அவரது தாயார் ஏறக்குறைய செவித்திறனை இழந்திருந்தபோதிலும், தனது செவி கேட்கும் கருவியின் குழாயை பியானோவுடன் ஒட்டி வைத்துக்கொள்வதன் மூலம், பியானோ வாசிப்பதை அவரால் கேட்க முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பெல்லின் தாயார், எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் பெல். ஒரு திறமையான பியானோ கலைஞரான அவர் காது கேளாதவராக ஆனார். நீண்ட காலமாக, அவர் தொடர்புகொள்ள ஒரு கேட்கும் கருவியைப் பயன்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் தாமே அறியாமலேயே, ஒலியை எவ்வாறு அதிக சத்தமாக மாற்றலாம் என்பதற்கான அடிப்படைத் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டிருந்தார். இது 'ஒலிப்பெருக்கம்' (Amplification) என்று அழைக்கப்படுகிறது. அவரது வாழ்வின் நோக்கம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டது: அதாவது அவரது தாயைப் போன்றவர்கள் பேச உதவுவது. தனது 16 வயதில், அவர் ஏற்கெனவே பேச்சின் இயக்கவியலை ஆராய்ந்து கொண்டிருந்தார். 18 வயதில், அவர் கற்பிக்கவும், பேச்சு நுட்பங்களை ஆழமாக ஆராயவும் தொடங்கினார். அனால், அவரது இரண்டு சகோதரர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது பெற்றோர் தங்கள் மீதமுள்ள ஒரே மகனுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்வதற்காக ஸ்காட்லாந்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர். அவர்கள் 1870இல் அங்கு சென்றடைந்தனர். அடுத்த ஆண்டு கிரஹாம் பெல் அமெரிக்காவின் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் காது கேளாதோருக்கான பாஸ்டன் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார். அங்குதான் அவர் தன்னைக் கவர்ந்த பெண்ணைச் சந்தித்தார். புத்திசாலியும் துடிப்பிமிக்கவருமான மேபல், ஐந்து வயதில் கேட்கும் திறனை இழந்திருந்தார். மேலும் 1877இல் அவர் பெல்லின் மனைவியானார். அவரது தொழில் காது கேளாதோர் சமூகத்திற்கு ஒரு நீடித்த மரபாக மாறியது அமெரிக்காவில்தான். காது கேட்காமல் பேசுதல் தொலைபேசியின் வெற்றியுடன், கிரஹாம் பெல்லின் நற்பெயரும் புகழும் அவரை மிகவும் மதிக்கப்படும் நபராக மாற்றியது. அவர் தனது உண்மையான ஆர்வமான காது கேளாதோர் கல்வியில் தனது வருவாயை முதலீடு செய்தார். ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது. அவர்களின் பார்வையில், அவர்களுடைய சமூக மற்றும் தொழில்முறை ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி பேச்சு மூலமானது மட்டுமே. இந்த யோசனை திடீரென வரவில்லை. குரல் மற்றும் பேச்சு பற்றிய ஆய்வு மற்றும் அவரது சொந்த குடும்பத்தில் காது கேளாமையின் அனுபவத்தால் ஆழமாகத் தாக்கம் செலுத்தப்பட்ட சூழலில் பெல் வளர்ந்தார். அவரது தாயார் பல ஆண்டுகளாகத் தனது செவித்திறனை இழந்திருந்தார். ஆனால் அவர் பேசும் திறனைத் தக்கவைத்துக் கொண்டார். கிரஹாம் பெல்லை பொறுத்தவரை, பேச்சு ஒரு குறிப்பிட்ட சுயாட்சியையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் என்பதை இது நிரூபிப்பதாகத் தோன்றியது. பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான கேட்டி பூத், தி இன்வென்ஷன் ஆஃப் மிராக்கிள்ஸ்: லாங்குவேஜ், பவர் அண்ட் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்'ஸ் க்வெஸ்ட் டு எண்ட் டெஃப்னெஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். அவரது கூற்றுப்படி, பெல் தான் உண்மையில் உதவுவதாக நம்பினார். "காது கேளாதோருக்கு பேச்சு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கருதினார்" என்று கேட்டி பூத் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். அவரது கல்வி முன்மொழிவு, காது கேளாத குழந்தைகளுக்குப் பேசவும் உதட்டசைவுகள் மூலம் புரிந்துகொள்ளவும் (lip reading) கற்றுக் கொடுப்பது, சைகை மொழியை பயன்படுத்துவதைக் குறைப்பது அல்லது நீக்குவதாக இருந்தது. இதில் பிரச்னை என்னவெனில், இந்த முறை மிகப்பெரிய வரம்புகளைக் கொண்டிருந்தது. பெல் சில காது கேளாதோருக்கு பேசக் கற்றுக் கொடுப்பதில் விதிவிலக்கான திறமையைக் கொண்டிருப்பவராகத் தோன்றினார். ஆனால், கிட்டத்தட்ட யாராலும் அவரை நகலெடுக்க முடியவில்லை என்று பூத் சுட்டிக்காட்டுகிறார். "அவர் மிகவும் திறமையான ஆசிரியர். ஆனால், அவரது முறையை பிறர் பின்பற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவரது சொந்த ஆசிரியர்களுக்குக்கூட அதைக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது," என்று அவர் கூறுகிறார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒலிகளைக் கேட்காமல் பேசக் கற்றுக்கொள்வது அசாதாரணமானது. "ஒலி ஒருபோதும் உங்கள் உலகின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றால், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பெல் ஒரு காது கேளாத பெண்ணுக்கு பேசக் கற்றுக்கொடுக்கிறார். 1872ஆம் ஆண்டில், குறிப்பாக காது கேளாத மாணவர்களுக்கு உச்சரிப்பு முறைகளைக் கற்பிப்பதற்காக பாஸ்டனில் குரல் உடலியல் மற்றும் பேச்சு இயக்கவியல் பள்ளியைத் திறந்தார். அப்படியிருந்தும், கிரஹாம் பெல்லின் மகத்தான பொது நற்பெயர் இந்த முறையை மேம்படுத்தியது. இது உலகளாவிய கல்வி உலகில் ஏற்கெனவே பரவி வந்த ஒரு விஷயமாகும். மேலும் அது பல தசாப்தங்களாக காது கேளாதோருக்கான கற்பித்தலில் ஆதிக்கம் செலுத்தியது. அவரது கருத்துகள் அவரது காலத்தின் பரந்த போக்குகளுடன் எதிரொலித்தன என்பதன் தாக்கத்தால் இது நிகழ்ந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அமெரிக்கா ஒரு தீவிரமான சமூக மாற்றத்திற்கு உட்பட்டது. திரளாக வந்த குடியேறிகளால் புதிதாக இணைக்கப்பட்ட பிரதேசங்கள், ஏற்கெனவே நிறுவப்பட்ட மக்களை, பூர்வீகவாசிகள், மெக்சிகன்கள் மற்றும் பிற சமூகங்களை ஒருங்கிணைத்தபோது, 'அமெரிக்கராக இருப்பது' என்றால் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டது. ஆதிக்க ரீதியிலான பதில் சீரான தன்மையை நோக்கிச் சென்றது. ஆங்கிலத்தைப் பொதுவான மொழியாகக் கொண்டு, அனைவரும் ஒரே கலாசாரம் மற்றும் மொழியியல் மாதிரிக்கு ஏற்ப மாற வேண்டுமென்ற கருத்து ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சூழலில் சைகை மொழி பெரும்பாலும் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு வேறுபாடாகக் காணப்பட்டது. அதே நேரத்தில், யுஜெனிக்ஸ் போன்ற இயக்கங்கள் சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தின. மேலும், கல்வி, உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்துவது காது கேளாதோர் உள்பட சில குழுக்களை "மேம்படுத்த முடியும்" என்ற நம்பிக்கையைத் தூண்டின. "அமெரிக்க சமூகம் ஏற்கெனவே வித்தியாசத்தைப் பற்றிய பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தது. அது இயல்புநிலை என்ற எண்ணத்தினுடைய வெறித்தனமான சகாப்தம்," என்று பூத் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், அந்தக் காலகட்டத்தில்தான் 'இயல்பு' என்ற சொல் ஒரு கணிதச் சொல்லாக இல்லாமல் மக்களுடைய பொதுப் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். கிரஹாம் பெல்லின் புதிய வாய்மொழி, அந்த கலாசார சூழலுக்கு சரியாகப் பொருந்துகிறது: காது கேளாதோரை பெரும்பான்மையினரின் தொடர்பு மாதிரிக்கு இயன்றவரை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு அந்த முறை விரும்பியது. ஆனால் விஷயங்கள் ஒருபோதும் அவ்வளவு எளிமையாக இருந்ததில்லை. கிரஹாம் பெல்லின் முயற்சிக்கு வந்த எதிர்ப்புகள் கிரஹாம் பெல்லின் காலத்திலும்கூட, அவரது இந்தப் பார்வையை எதிர்க்கும் குரல்கள் எழுந்தன. காது கேளாத கல்வியாளர்களும் தலைவர்களும் சைகை மொழியைப் பாதுகாத்துப் பேசி, அதை நீக்குவது ஆழமான தீங்கு விளைவிக்கும் செயல் என்று எச்சரித்தனர். "பெல் அவரது கால மனிதர் என்பது உண்மைதான். ஆனால், அவரது காலத்தில் காது கேளாதோர்கள் இருந்தார்கள் என்பதும் உண்மை. அவரது முன்மொழிவு அனைவரிடமும் வேலை செய்யவில்லை என்றும் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அவருக்கு அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்," என்கிறார் பூத். எடுத்துக்காட்டாக, 1869ஆம் ஆண்டில், ஹார்ட்ஃபோர்டில் உள்ள அமெரிக்க காது கேளாதோர் பள்ளியின் இயக்குநர், "கடவுள் கண்ணை நோக்கி இயக்கப்பட்ட ஒரு மொழியை வழங்கியுள்ளார். காது கேளாதவர்களுக்கு, அதுதான் இயல்பான மொழி. அது மட்டுமே ஒரே இயல்பான மொழி," என்று எழுதினார். இந்த மோதல் ஆழமானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவின் தேசிய காது கேளாதோர் கல்லூரியைச் சேர்ந்த — சைகை மொழி எழுத்துகளின் விளக்கப்படம் சைகைமுறையை ஆதரிப்போருக்கு, சைகை மொழி ஒரு தாழ்ந்த மொழி அல்ல, மாறாக ஒரு முழுமையான மொழி. வாய்மொழிவாதத்தை ஆதரிப்போருக்கு, பேச்சு என்பது மனித தொடர்புக்கான "சாதாரண", "உலகளாவிய" வடிவத்தைக் குறிக்கிறது. காலப்போக்கில், மேற்கத்திய உலகின் பெரும்பகுதியில் பெல்லின் வாய்மொழி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, 1880ஆம் ஆண்டு மிலன் நாடாளுமன்றத்திற்குப் பிறகு, காது கேளாதோருக்கான கல்வியாளர்கள் கற்பித்தல் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதன் விளைவுகள் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது. மேலும் தனது அன்புக்குரியவர்களின் வாழ்க்கையில் அவை பிரதிபலிப்பதை பூத் கண்டார். அவரது தாத்தா சைகை மொழி தெரியாத குடும்பத்தில் காது கேளாதவராகப் பிறந்தார். அவர் புரிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலோ மொழி இல்லாமல் வளர்ந்தார். அவரது குழந்தைப் பருவம், அமைதியாகக் கழிந்தது. அவரைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதற்கான மிக அடிப்படையான திறவுகோல் இல்லாமல் அவர் இருந்ததை பூத் நினைவுகூர்ந்தார். இறுதியாக அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டபோது, அவர்கள் அவருக்கு சைகை மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. சைகை மொழியைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர் பேச முயல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "அவருக்குக் கட்டமைத்துக்கொள்ள எதுவும் இல்லை. மேலும் அவர் தொடர்புகொள்ள ஒரு மொழி இல்லாமல் பள்ளியை முடித்தார்," என்கிறார் பூத். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'Picture Post' இதழின் முகப்புப் பக்கம், ஏப்ரல் 3, 1948. அக்காலகட்டத்தில் நிலவிய 'வாய்மொழி கற்பித்தல்' அணுகுமுறையின் முக்கியத்துவத்திற்கு இணங்க, காது கேளாத ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வதை, இடர்களைக் கடந்து வெல்லும் ஒரு வெற்றிக் கதையாகச் சித்தரிக்கும் புகைப்படக் கட்டுரையை இது காட்சிப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வுக்கு ஒரு பெயர் உண்டு: மொழி இழப்பு. ஒரு குழந்தை எந்த மொழியையும் சீக்கிரமே அணுகாமல் வளரும்போது, சில அறிவாற்றல் திறன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம். "காது கேட்பவர்களின் உலகில் இது மிகவும் அரிதானது. ஆனால் காது கேளாதோர் உலகில் இது பல தசாப்தங்களாக மிகவும் பொதுவாக நடந்து வருகிறது," என்கிறார் பூத். அவருடைய பாட்டியின் கதை இதிலிருந்து வேறுபட்டது, ஆனால் சிறப்பானதாக இருக்கவில்லை. அவர் ஒரு காது கேளாதோர் இருந்த குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதில் இருந்தே சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, அவர் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் தண்டிக்கப்பட்டார். "அவர்களுக்கு மொழியை அணுகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது மட்டுமல்ல. தங்கள் இயல்பான தகவல் தொடர்பு முறை அவமானகரமானது, தாழ்வானது என்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது," என்று விளக்குகிறார் பூத். தலைமுறை தலைமுறையாக, செவித்திறன் குறைபாடுடைய பல மாணவர்கள் இந்த இரு அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்து வாழ்ந்து வந்துள்ளனர். பெல்லினுடைய சிந்தனையில் நுணுக்கங்கள் இருந்தன. ஆரம்பத்தில், சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டினார். ஆனால், காலப்போக்கில் அவர் காது கேளாதோர் சமூகத்தில் இருந்தும் அதன் விமர்சனங்களில் இருந்தும் அதிகளவில் விலகிக் கொண்டார். "அவரது மனதை மாற்றும்படி, அவரை நம்ப வைக்க, காது கேளாதோர் முயன்றனர். அவரது சொந்தப் பள்ளியிலேயேகூட, இந்த அமைப்பு செயல்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அவருக்கு முன்பாக இருந்தன. ஆனாலும் அவர் அதைத் தொடர்ந்தார்," என்கிறார் பூத். மேலும் அவர், "காது கேளாதோர் கலாசாரம் பற்றிய அறிவை அவர் வேண்டுமென்றே புறக்கணித்து, இறுதியில் அதை நசுக்கும் ஓர் இயக்கத்தை ஊக்குவிக்க உதவினார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் குறிப்பிட்டார். காது கேளாமை பற்றிய ஆதிக்கக் கருத்து மாற கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் ஆனது. நீண்ட காலமாக இதுவொரு சரிசெய்யப்பட வேண்டிய மருத்துவக் குறைபாடாகக் கருதப்பட்டது. ஆனால் 1960களில், மொழியியலாளர் வில்லியம் ஸ்டோகோ, பலர் ஒப்புக்கொள்ள மறுத்ததை நிரூபித்தார்: சைகை மொழி ஒரு சிக்கலான மற்றும் முழுமையான இலக்கண அமைப்பைக் கொண்டிருந்தது. அதுவொரு மொழி. அறிவியல் சான்றுகளுடன் அதை நிறுவுவதன் மூலம், அவரது பணி காது கேளாமை ஆய்வுத் துறையை மாற்றத் தொடங்கியது மற்றும் அதுகுறித்த பார்வையில் ஆழமான மாற்றத்திற்குப் பங்களித்தது. காது கேளாதோர் மறுவாழ்வு தேவைப்படும் நோயாளிகளாக அல்ல, மாறாக அவர்களின் சொந்த மொழி மற்றும் கூட்டு அடையாளத்துடன் கூடிய மொழியியல் மற்றும் கலாசார சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படத் தொடங்கினர். இன்று, காது கேளாதோர் கலாசாரம் என்று அழைக்கப்படுவது அதன் சொந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் தொடர்பு வடிவங்களைக் கொண்ட ஒரு சமூகமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும் அந்த மாற்றம் பெல்லின் மரபை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் போற்றத்தக்கவை. ஆனால் பலருக்கு, அவரது கல்விச் சிந்தனைகளின் விளைவுகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஆழமான அடையாளத்தை விட்டுச் சென்றன. பூத் சொல்வது போல: வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம், ஆனால் அவை அவரை இந்த விமர்சனத்தில் இருந்து விடுவிக்கப் போதுமானதாக இல்லை. "எதுவுமே அவரை மன்னிக்கவில்லை." https://www.bbc.com/tamil/articles/c1781rvdy8yo
  23. மலர் ......... 3. விநோதன், மணிமேகலை சிறுவர்கள் சுஜிதா மற்றும் யுகேந்திரன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தமது துன்பங்களை மறந்து சாதுக்கள் அமைத்துக் கொடுத்த கடை சாமான்களை விற்று வாழ ஆரம்பிக்கின்றனர்…….. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அங்கே தரித்து நின்று செல்ல ஆரம்பிக்கின்றன . அப்போது அங்கு அண்ணாதுரையின் லொறி வந்து கடையின் முன்னால் நிற்கின்றது. அண்ணாதுரையை கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிள்ளைகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விநோதனும் மணிமேகலையும் அவருக்கும் ரமேஷ்சுக்கும் முகமன் கூறி கடைக்குள் அழைத்து செல்கின்றனர்…… அவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்து அவர்களது சுகதுக்கங்களை விசாரித்து அறிந்து கொள்கின்றார்…… அப்போது அங்கு பல வாகனங்களும் வந்து நின்று கடையில் பலவிதமான பழங்கள் மரக்கறி வகைகளை வாங்கி செல்கின்றனர். அவை எல்லாவற்றையும் கவனித்த அண்ணாத்துரையும் அவர்களிடம் இங்கு நிறைய வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதால், நீங்கள் ஏன் தேநீர் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்…..! அதுக்கு மணிமேகலையும் எங்கை அண்ணை இப்ப இந்தப் பிள்ளைகளும் வினோத்தும் ஊருக்குள் நடந்து போய்த்தான் பழங்கள், மரக்கறிகள் என்று வாங்கி கைகளிலும் தோளிலும் சுமந்து வருகின்றார்கள் என்று சொல்கிறாள். அவரும் சரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, நாங்கள் இந்த வழியால் போகும் போதும் வரும் போதும் உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து தருகிறோம். இப்போதைக்கு நீங்கள் காசு ஒன்றும் தரவேண்டாம். இந்தப் பிக்குகள் மிகவும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள். கையில் இருக்கிறதையும் பிடுங்கி தூசண வார்த்தைகள் பேசி அடாவடி செய்யும் காவி உடையில் இருக்கும் போலிப் பிக்குகளையும் நான் பத்திரிகைகளிலும் செய்திகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் போன்ற தூய்மையான சாதுக்களால்தான் இந்த நாட்டில் கொஞ்சமாவது காருண்யமும் அன்பும் நிலைத்திருக்கின்றது என்று சொல்லி அவரும் ரமேசும் சிற்சில பழங்களை வாங்கிக் கொண்டு அவர்களின் மறுப்பையும் பொருட்படுத்தாது அதிகமாகவே பணத்தைக் கொடுத்து விட்டு செல்கின்றனர். நாளடைவில் அவர்கள் கடையையும் பெருப்பித்து தேநீர், பலகாரங்கள், சாப்பாடு என்று விற்கத் தொடங்கி விட்டனர். அதற்கான பாய்லர்,பாத்திரங்களை அண்ணாத்துரையே கொண்டுவந்து குடுத்ததுடன் தன்னிடமிருந்த பெரிய கேரியர் கொண்ட சைக்கிளையும் வினோதனிடம் குடுத்திருந்தார். அது ஊருக்குள்ளும் பக்கத்து நகரங்களுக்குள்ளும் சென்று சாமான்கள் வாங்கிவர ரொம்ப உதவியாய் இருக்குது. கடை வேலை முடிந்ததும் அவர்கள் பின்னால் உள்ள குளத்தை அண்மித்த இடத்தில் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்கக் கூடியதாக கழிவறையும் கட்டி விட்டு அதற்கு அப்பாலும் காடழித்து தமக்காக ஒரு சிறிய வீடும் கட்டி பயிர்செய்கைக்கு ஏற்றவாறு காணியும் வைத்திருந்தனர். இரவில் மணிமேகலையும் சுஜிதாவும் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். வியாபாரத்தை விநோதனும் யுகேந்திரனும் பார்த்துக் கொள்வார்கள். கால ஒட்டத்தில் சுஜிதாவும் பெரியவளாக வளர்ந்து நிக்கிறாள்.யுகேந்திரனுக்கும் பூனை மீசை அரும்பியிருக்கு. சாதுக்களும் அவ்வழியே வரும்போது இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனநிறைவுடன் இவர்களிடமும் பிக்ஷை ஏற்று ஆசி வழங்கிச் செல்கின்றனர். யுகேந்திரனும் சுஜிதாவும் இப்பவும் தொடர்ந்து விகாரைக்கு சென்று கழுவுதல், துடைத்தல் போன்ற உதவிகளை செய்வதுடன் அங்குள்ள பாடசாலையில் பெரிய வகுப்பில் படிக்கின்றனர் கூடவே பிக்குகளுடன் சேர்ந்து தியானப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பல கலைகள் கற்பதும் சிறுவர்களுக்கு கற்பிப்பதுமாக இருக்கின்றனர். இவர்களது கடையும் விளம்பரம் இல்லாமலே “வீதியோரக்கடை” என்று பிரபலமாகி இருந்தது. அதற்கு மணிமேகலையின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சுவையான சுத்தமான உணவு வகைகளும் மலிவான விலைகளுமே காரணம். வருபவர்கள் தாங்களும் சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு போகிறார்கள். முன்பு ஐந்தாறு லாந்தர் விளக்குகள் இருந்த இடத்தில் இப்பொழுது சில பெற்றோல்மாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தருகின்றன. அடர்ந்த காட்டின் நடுவே வீதியோரத்தில் இப்படியொரு பிரபலமான கடை இருந்தால் கூடவே சில தவறான வியாபாரங்களும் அங்கு உருவாகி விடுவது இயல்புதானே. முதலில் சில சாரதிகளும் கிளீனர்களும் சாராயம் போன்ற குடிவகைகளை தெரிந்தும் தெரியாமலும் கடைக்கு அருகில் வைத்து குடிக்க ஆரம்பித்தனர். பின் சில நாளில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் சிலரால் சில்லறை வியாபாரமாகவும் புழக்கத்துக்கு வந்தன. அவர்களின் தேவைக்காக இவர்களும் உறைப்பான மாமிச கறிவகைகள், முட்டை பரோட்டாக்கள், கொத்து ரொட்டி போன்றவையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து எங்கோ தூரத்தில் இரவுகளில் தொழில் செய்யும் சில பெண்கள் இப்பொழுது கடைக்கு அண்மையில் தமது வாடிக்கையாளர்களுடன் காட்டுக்குள் செல்வதும் வருவதுமாய் தொழில் செய்து வருகின்றனர். தாங்கள் தங்குவதற்கு முன்பு யாரோ பழுதாகி விட்டுப் போன ஒரு லொறியை பாவிக்கின்றார்கள். சாராயம் மற்றும் போதைவஸ்துகள் விற்பவன் லொறியின் முன்பக்கத்தில் தனது சாமான்களுடன் தங்கிக் கொள்கிறான். அவர்களும் கடை வாடிக்கையாளர்களாய் இருப்பதாலும் அதனாலும் கடைக்கு வருமானம் பெருகி வருவதாலும் எல்லாமே ஒரு தொடர் சங்கிலியாய் மாறிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் இவர்களால் கூட இங்கு நடக்கும் தப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது......! மலர் ..............🌸 🌸 🌸
  24. ஐக்கிய நாடுகள் சபை… எப்போதும், அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பக்கமே நிற்கும். இந்தச் சபை இதுவரை… பாதிக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கியதே இல்லை. இதனை இழுத்து மூடி விடுவது நல்லது. 😂
  25. போரை முடிக்க தயார் - ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்! Mar 12, 2026 - 07:09 AM போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை அளித்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmmmsuulr0002356pxb19qa4s

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.