All Activity
- Past hour
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
கிறிஸ்துவ மாணவர்களிற்கு பைபிளை பாடசாலைக்கு தேடிச்சென்று கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதை அவரவர் செல்கின்ற சேர்ச்சிலேயே கொடுக்கலாம். அப்படித்தான் காலம் காலமாக நடக்கின்றது. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் வார இறுதியில் சமய வகுப்பிற்கு சென்று வருகின்றார்கள். அங்கு தேவையானவற்றை வழங்குகின்றார்கள். இலங்கையிலும் கிறிஸ்துவ மாணவர்கள் யாராவது பைபிள் இல்லாமல் சிரமப்பட்டதாக நான் அறியவில்லை. பைபிளை கொளுத்தும் அளவிற்கு சிந்திப்பது மனப்பிறழ்வு நிலை என்பது ஒருபுறம் அமைய, பாடசாலையை மத பிரச்சார மேடையாக்குவதும் தவறானதே. அவரவர் அவரவர் மதத்தில் அவரவர் விடயங்களை கடைப்பிடிக்கும்போது சச்சரவுகள் வருவதில்லை.
-
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு
கதிர்காம பிரதான வீதியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: நால்வர் பலி; 40 பேர் படுகாயம்! 18 Mar, 2026 | 01:08 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) அம்பாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில 'துருசெவன' சந்தியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பஸ்ஸும், திஸ்ஸமஹாராமவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பஸ்ஸும் இவ்வாறு மோதியுள்ளன. விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், படுகாயமடைந்த சுமார் 40 பயணிகள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/241279
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
முழு நாடுமே ஒன்றாக திட்டத்தில் 124,412 பேர் கைது Mar 18, 2026 - 06:26 PM போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார். அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், 'சமூக சக்தி' வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmw1llbh000p356pzeyifiby
-
இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!
இலங்கைக்கு மற்றுமொரு எரிபொருள் கப்பல் வருகை 18 Mar, 2026 | 12:17 PM (இணையத்தள செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' (Seafrontier) எனும் இந்த எரிபொருள் கப்பல், செவ்வாய்க்கிழமை (17) இலங்கையை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இன்று காலை முதல் கட்டமாக முத்துராஜவெல, கெரவலப்பிட்டி எரிபொருள் முனையத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கப்பலின் எஞ்சிய எரிபொருள் கையிருப்பினை இறக்குவதற்காக இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் 'டொல்பின்' (Dolphin Jetty) இறங்குதுறைக்கு கப்பல் கொண்டு வரப்பட்டதுடன், அங்கிருந்து கொலன்னாவ களஞ்சிய முனையத்திற்கு குழாய் வழியே எரிபொருளைச் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக்கப்பல் மூலம் 17,000 மெட்ரிக் தொன் '92 ஒக்டேன்' பெட்ரோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் 'சூப்பர் டீசல்' ஆகியன நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் சவால்கள் நிலவுகின்ற போதிலும், தற்போதைய இந்த இறக்குமதி நாட்டின் எரிபொருள் தேவையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241274
-
இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,AL-ARAB, AL-AKHBAR படக்குறிப்பு,சில வளைகுடா நாடுகள் இரானின் சக்தியைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை பல அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்டுரை தகவல் பிபிசி மானிடரிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் போரின் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்கா தொடர்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பல்வேறு கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இரானை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் ராய்ட்டர்ஸ் செய்திக்குச் சில ஊடகங்கள் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளன. இதற்கு மாறாக, வேறு சில ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தும், "வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும் சூழலை அமெரிக்கா புறக்கணிப்பதாக" குற்றம் சாட்டியும் செய்திகளை வெளியிட்டுள்ளன. வளைகுடா ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளிவரும் சில தகவல்கள், அமெரிக்கா மீதான தங்களின் நீண்டகால பாதுகாப்புச் சார்புநிலையை வளைகுடா நாடுகள் மறுமதிப்பீடு செய்யும் என்று தெரிவிக்கின்றன. நேட்டோ பாணியிலான ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்புக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. பதற்றத்தைக் குறைப்பதற்கான வளைகுடா நாடுகளின் முயற்சிகள் குறித்து பல ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் ராணுவ மோதல்களைத் தவிர்ப்பதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் விடுக்கப்பட்ட அழைப்புகளும் அடங்கும். 'இரானின் திறன்களை அழிக்க' விடுக்கப்பட்டுள்ள அழைப்பு பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 18 அன்று, இரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைகளை ஏவியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி. மார்ச் 16 அன்று வெளியான இந்த ராய்ட்டர்ஸ் செய்தி, சில அரபு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. பெத்லஹேமைச் சேர்ந்த 'மா-ஆன்' செய்தி இணையதளம், "டிரம்பிற்கு வளைகுடா நாடுகளின் செய்தி: இரானின் திறன்கள் அழிக்கப்படும் வரை நிறுத்தாதீர்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. "இரான் மீதான தாக்குதல்களைத் தொடருமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வளைகுடா நாடுகள் : நாங்கள் மட்டும் தனியாகத் துன்பப்படுமாறு விடப்படுவதை விரும்பவில்லை" என்று லெபனானின் ஹெஸ்பொலா ஆதரவு நாளிதழான 'அல்-அக்பர்' எழுதியுள்ளது. "வளைகுடா நாடுகள் இரானுடன் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவைக் கேட்கவில்லை என்றாலும், இப்போது பல நாடுகள் அமெரிக்கா இந்த வழியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும், வளைகுடா எண்ணெய் விநியோகப் பாதைகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் நிலையில் இரானை விட்டுவிடக் கூடாது என்றும் விரும்புகின்றன"என மூன்று வளைகுடா வட்டாரங்கள் கூறியதாக அந்த செய்தி மேற்கோள் காட்டியுள்ளது. "அமெரிக்கர்கள் தங்கள் பணி முடிவதற்குள் வெளியேறினால், நாங்கள் இரானை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று சௌதி அரேபியாவைச் சேர்ந்த வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் சகிர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அமெரிக்கா அச்சுறுத்தலைப் புறக்கணித்ததா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன. வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன. ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் இரான் வளைகுடா நாடுகளை இலக்கு வைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்திருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா இந்தச் சூழலை 'புறக்கணித்திருக்கலாம்' என்றும் லண்டனைச் சேர்ந்த நாளிதழான 'அல்-அரப்' செய்தி வெளியிட்டுள்ளது. இரானின் எதிர்வினை குறித்த தவறான கணிப்பின் விளைவாகவோ அல்லது அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கைகளை விட தனது அரசியல் கணக்குகளுக்கே முன்னுரிமை அளித்தது என்பதற்கான அறிகுறியாகவோ இது இருக்கலாம் என்று அந்த செய்தி கூறியது. ஓமன் பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான சலீம் அல்-ஜஹோரி எகிப்திய தனியார் சேனலான 'யோம்7'-னிடம் கூறுகையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் அமெரிக்கா மீதான தங்கள் "பாதுகாப்புச் சார்புநிலையை" மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒரு பொதுவான தடுப்பு முறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார். வளைகுடா நாடுகள் "போருக்குள் இழுக்கப்பட்டுள்ளன" என்றும், அவற்றின் எல்லைகளில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் "எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள்" என்றும் அவர் கூறினார். அல் ஜசீராவிடம் அல்-மாதர் அரசியல் ஆய்வு மையத்தின் தலைவர் சலே அல்-முதைரி கூறுகையில், 'அமெரிக்காவை விட வளைகுடா நாடுகள் இந்தப் போருக்கு அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும், குறிப்பாக அதன் நீண்டகால பொருளாதார தாக்கம் காரணமாக இது நிகழும்' என்றார். அல் ஜசீராவிடம் ஓமன் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான முகமது அல்-அரைமி கூறுகையில், அச்சுறுத்தல் என்பது இரானிடமிருந்து மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கான "அபாயகரமான இஸ்ரேலியத் திட்டத்திலிருந்தும்" வருகிறது என்று தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் வேண்டுகோள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய அரபு தேசிய தொலைக்காட்சி சேனல்களும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எதிர்வினைவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக செயல்பாட்டில் வைப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை அவை முன்னிலைப்படுத்தின. பல நாடுகளின் எதிர்வினையானது "சந்தேகத்திலிருந்து நேரடி எதிர்ப்பு வரை" பலவாறாக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 'ஸ்கை நியூஸ் அரேபியா' தெரிவித்தது. பல அமெரிக்க நட்பு நாடுகள் "கவனமாகவோ அல்லது தயக்கமாகவோ" இருப்பதாகத் தெரிவதாகவும், சில நாடுகள் இப்பிரச்னையைத் தீர்க்க மாற்று வழிகளைக் கூட பரிந்துரைத்துள்ளதாகவும் கத்தாரின் 'அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அல் ஜசீரா செய்தியின்படி, லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரைடன், அமெரிக்காவின் 'அழுத்தத்திற்கு' தனது நாடு பணியாது என்று கூறியுள்ளார். இரான் மீது இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற டிரம்பின் கூற்றையும் சில சேனல்கள் முன்னிலைப்படுத்தின. இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் 'அல்-அரேபியா' மற்றும் 'ஸ்கை நியூஸ் அரேபியா' செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், ஆனால் நிபுணர்கள் மற்றும் ஊடக தகவல்கள் அந்நாட்டிடம் பல்வேறு அல்லது நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிப்பதாகவும் ரஷ்யாவின் 'ஆர்டி' ஊடகம் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20l0wng7xqo
-
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா Mar 18, 2026 - 05:13 PM தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் சீனப் பிரஜைகள் உட்பட இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்த அண்மைக்கால அறிக்கைகளைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சீனா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்கள் பாரிய சமூகத் தீங்குகளை விளைவிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சீனா, சட்டத்திற்கு இணங்கச் சந்தேக நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அதிகாரிகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மியன்மார், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளுடன் சீனா அண்மைக்காலமாக விரிவான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பல குற்றக் கும்பல்கள் அழிக்கப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்ட போதிலும், அதன் விளைவாகச் சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மேம்பட்ட தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, மூலோபாய ரீதியிலான புவியியல் இருப்பிடம், ஒப்பீட்டளவில் தளர்வான விசா கொள்கைகள் மற்றும் மக்களின் விருந்தோம்பல் ஆகியவை நாடுகடந்த மோசடி குழுக்களுக்கு இலங்கையை ஒரு இலக்காக மாற்றியுள்ளன. இதன் விளைவாக, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த விடயம் குறித்து சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், இலங்கை சட்ட அமுலாக்க முகவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறது. கூட்டு முயற்சிகளின் பலனாக, 2024 ஆம் ஆண்டில் மோசடியில் ஈடுபட்ட பல சீனப் பிரஜைகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொகுதிகளாக மீண்டும் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான முயற்சிகள் இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்குச் சிறந்த சூழலை உருவாக்கும் என்றும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvz2aqc000l356plghn8l33
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
தமிழ்நாட்டு அரசியலின் ஒரு யதார்த்தமான பிரச்சினை ....... அவர் குடும்பமே அவருக்கு காத்திருந்து சறுகாக் கட்டை போடுது ...... அதற்கேற்றாற் போல் இவரும் நடந்து கொள்கிறார் . .......பார்க்கலாம் வாக்கு சீட்டு என்ன சொல்லுது என்று . .......!
- Today
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
100% உடன்படுகிறேன். பம்மாத்து கதை. நீரிணையினால் போன தாய்லாந்து கப்பலை ஏன் தாக்கினார்கள்? வாதாட்டமா? குத்தாட்டம் எல்லோ போட்டவர். தம்பர் வரக்கூடாது எண்டு எழுதியவை எல்லாம் போர் வெறியராம்…அதாம்…இதாம்😂 பைடன் உக்ரேனுக்கு மட்டுப்பட்ட அளவில் உதவினார்… ஆனால் ஒரு திட்டமும் இல்லாமல் ஈரானுடன் போருக்கு போகிறார், 150 சிறுமிகளை கொல்கிறார் தம்பர்… ஆனால் தம்பரை சமாதான புறா என பிரச்சாரம் செய்தவர்… தன் கருத்து தவறு என மன்னிப்பு கேட்க கூட தயார் இல்லை… ரேகன் திறமா, கென்னடி திறமா, வாசிங்டன் திறமா என சப்பை கட்டு கட்டுகிறார்.
-
குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை
குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்த யாத்திரீகர்கள் சிவனொளிபாத மலையடிவாரத்தை அடைந்தனர் 18 Mar, 2026 | 01:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து சிவனொளிபாத மலை வரை பாத யாத்திரை சென்றவர்கள் புதன்கிழமை (18) மலையடிவாரத்தை அடைந்தனர். கடந்த சனிக்கிழமை (14) முல்லைத்தீவு குருந்தூர் மலையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எலிய பௌத்த விகாரையில் யாத்திரீகர்கள் தங்கியிருந்து, தொடர்ந்து பயணித்து, சிவனொளிபாத மலை அடிவாரத்தை அடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/241268
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோமூஸ் நீரிணை திறந்துதான் உள்ளது!, எம்மீது தாக்கும் எதிரிகளுக்கு மட்டும் மூடப்பட்டுள்ளது - அப்பாஸ் அராக்சி
-
இன்று உலக தாய்மொழி தினம்
பெப்ரவரி 21 உலக தாய்மொழி நாள். https://maniyinpakkam.blogspot.com/2026/02/blog-post_20.html
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு Mar 18, 2026 - 02:54 PM ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை முன்னதாக செய்தி வௌியிட்டிருந்தது. இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvu325c000g356p3ct40hzq
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இரானை தாக்க 2270 கிலோ 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,USAF கட்டுரை தகவல் கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது. அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது. ''இந்த தளங்களில் இருந்த, கப்பல்கள் மீது தாக்கக்கூடிய இரானிய க்ரூஸ் ஏவுகணைகள் இந்த நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரிய ஆபத்தாக இருந்தன," என அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது. உலகின் 20% எண்ணெய் கப்பல்கள் செல்லும் இந்த நீரிணையை இரான் வெற்றிகரமாக மூடியது கடல் போக்குவரத்தை பாதித்ததோடு உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பிலும் பங்கு வகித்துள்ளது. இந்த பெரிய குண்டுகள், கடந்த ஆண்டு இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்திய "பங்கர் பஸ்டர்" குண்டுகளைப் போன்றதே. மற்ற குண்டுகளைப் போல் அல்லாமல், பங்கர் பஸ்டர் குண்டுகள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி வெடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள், கனமாக மற்றும் வலுவான இரும்பால் மூடப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் இரான் நிலத்தடியில் ஆயுதங்களை வைத்திருப்பதாக நினைக்கும் அமெரிக்கா இரான் அதன் பெரும்பாலான ஆயுதங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறது என அமெரிக்கா நம்புவதற்கான மற்றுமொரு உதாரணம், இந்த 2270 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதாக வரும் செய்தி. இரானிய ஏவுகணை தளங்கள் மீது எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அம்சங்களுடன் பொருந்திப் போகும் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஜிபியு - 28 லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் புதிய ஜிபியு-72 மேம்படுத்தப்பட்ட 5கே ஊடுருவும் குண்டு. இந்த இரண்டாவது வகை குண்டை பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது 'இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரான் ஆயுதங்கள்' ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. ஆனால் இரானின் ஆயுதங்கள் தற்போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. நேற்று, இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது. இவை பல வெடி மருந்துகளைக் கொண்ட பகுதிகளைச் சுமந்து செல்லக்கூடியது என அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் உள்ள காணொளிகள், இரானால் க்ளஸ்டர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp323e6y542o
-
வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி! Mar 18, 2026 - 04:10 PM சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கற்கும் மாணவன், மாணவி ஒருவரது புகைப்படத்தையும் மற்றுமொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் டிக்டொக் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தை நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmmvwr4rd000i356p5yii0qf1
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது?
இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் அந்தோனி ஜூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரின் மூன்றாவது வாரத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியின் எஞ்சிய காலத்தை வடிவமைக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எதிர்கொண்டுள்ளார். இந்தப் போர் மேலும் தீவிரமடையக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும் என்ற போதிலும், டிரம்ப் இத்தகைய கவலைகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு உரையில், அவர் இந்தப் போர் குறித்துப் பேசினார். ஆனால், ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள், வெள்ளை மாளிகையில் புதியதொரு நடன அரங்கம் அமைக்கும் திட்டங்கள், இந்த ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பை, ஒரு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலை மற்றும் பிற விவகாரங்கள் எனப் போருடன் தொடர்பில்லாத பல தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். இத்தகைய பரந்த மற்றும் முன்னரே திட்டமிடப்படாத பேச்சுமுறை டிரம்புக்கு இயல்பான ஒன்று. வார இறுதியில், அவர் தனது ஃப்ளோரிடா ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாட்டிலும் ஈடுபட்டார். தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' இரானுடனான போர் குறித்துப் பேசுவதற்கு அவர் செலவிட்ட நேரத்திற்குச் சமமான நேரத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பதிலும் செலவிட்டார். டிரம்ப் பல தலைப்புகளில் கவனம் செலுத்தினாலும், ஒரு தலைவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், போர் என்பது பெரும்பாலும் ஓர் அதிபரின் பதவிக் காலத்தையே முழுமையாக ஆட்கொண்டு விடும் என்று வரலாறு காட்டுகிறது. இந்தப் போர் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. முன்னதாக, இந்தப் போர் "ஏற்கெனவே வெல்லப்பட்டுவிட்டது" என்றும் "முழுமையாக முடிந்துவிட்டது" என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது அது இன்னும் பல வாரங்களுக்கு அல்லது அதற்கும் மேலாகத் தொடரக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது. திங்கட்கிழமை பிற்பகலில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சீன பயணம், இந்தப் போரின் காரணமாக ஒரு மாதம் தாமதமாகும் என்று டிரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் பின்வருமாறு விளக்கினார்: "தற்போதைய சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதியாகிய அதிபரின் தலையாய கடமை, 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' நடவடிக்கையின் தொடர் வெற்றியை உறுதி செய்வதே ஆகும்." இது இரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரைக் குறிக்கிறது. பட மூலாதாரம்,PTI இந்த வார இறுதியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்க உதவும் வகையில், நாடுகளின் ஒரு கூட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். இந்தப் பகுதி உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதுகுறித்துப் பதிவிட்ட டிரம்ப், "இந்தச் செயற்கையான தடையால் பாதிக்கப்படும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பி வைக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார். "எப்படியிருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும், தடையற்ற சூழலுக்கும் நாம் கொண்டு வருவோம்," என்று அவர் எழுதியுள்ளார். இருந்தாலும், அவரது வேண்டுகோளுக்குப் பிறகு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்படப் பல நாடுகள், இந்த முயற்சியில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்தன. "நாங்கள் ஒரு விரிவான போருக்குள் இழுக்கப்பட மாட்டோம்," என்று பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அந்த நீரிணையில் நிலவும் சூழலைக் கையாள்வதற்கு ஏற்றதொரு "செயல்படக்கூடிய கூட்டுத் திட்டத்தை" வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிற நாடுகள் இதில் இணையாத காரணத்தால், குறுகியதாக இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழிப் பாதையைப் பாதுகாக்க, அமெரிக்க கடற்படையின் கூடுதல் படைகளை அனுப்புவதா என்பது குறித்து டிரம்ப் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. திங்கள் கிழமை, கடலில் கண்ணிவெடிகளைப் பதித்து, பிற கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரானிய கப்பல்களை அமெரிக்கா ஏற்கெனவே அழித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அதேவேளையில், ஒரேயொரு கண்ணிவெடி கூடப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்தார். மேலும் அவர், "இது சற்றும் நியாயமற்றது. நாம் போரில் வென்று வருகிறோம். இந்தச் சூழலில் தற்போது செய்துகொண்டிருக்கும் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறினார். காணொளிக் குறிப்பு,கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையங்களில் இரான் கை வைத்தால் வளைகுடா ஸ்தம்பிக்குமா? இரானுடனான மோதலில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை செயல்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 5,000 வீரர்கள் மற்றும் மாலுமிகளை கொண்ட ஒரு கடற்படை பிரிவை ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு நகர்த்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. டிரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தால், அது அமெரிக்க படைகளை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும். ஏனெனில் அவர்கள் இரானுக்கு மிக அருகில் இருப்பார்கள். அவர் நடவடிக்கை எடுக்காமல், மாறாக இரானின் ராணுவத்தைப் பலவீனப்படுத்தும் தனது இலக்கை அமெரிக்கா ஏற்கெனவே அடைந்துவிட்டது என்று கூறினால், நிலைமை நிலையற்றதாகவே நீடிக்கக்கூடும். இரான் தொடர்ந்து கப்பல்களை அச்சுறுத்தலாம். எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கலாம். அப்படியானால், மத்திய கிழக்கில் அதிகாரச் சமநிலையைத் தெளிவாக மாற்றாமலேயே, அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கக்கூடும். இப்சோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிளிஃபோர்ட் யங்கின் கூற்றுப்படி, ஏற்கெனவே மக்கள் ஆதரவு கலவையாக உள்ள நிலையில், டிரம்புக்கு எரிபொருள் விலை அதிகமாக நீண்ட காலம் நீடிப்பது ஒரு கடுமையான அரசியல் பிரச்னையாக மாறக்கூடும். தற்போதைக்கு, இரான் போர், குடியேற்றம், வர்த்தக வரிகள் போன்ற பிற பிரச்னைகள் குறித்து அவர்களில் சிலருக்கு சந்தேகங்கள் இருந்தாலும், டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவளித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆதரவுக் குறைவில் முக்கியமாக மிதவாத குடியரசுக் கட்சியினர் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்கள் பங்கு வகிக்கின்றனர். டிரம்பின் ஏற்பு மதிப்பீடுகள் 40% என்கிற குறைந்த அளவில் உள்ளன. இது குடியரசுக் கட்சியினருக்கு கவலையளிக்கக்கூடும். இருப்பினும், இதுவரை இரான் போர் அவரது செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான, அன்றாட வாழ்க்கையை இந்தப் போர் பாதித்தால் இந்த நிலை மாறக்கூடும். டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்திருந்தாலும், வீட்டு வசதி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்தப் போர் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புகிறது. எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், அது டிரம்பின் அரசியல் நிலையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு 2.94 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.72 டாலராக உயர்ந்துள்ளது. அதன் தாக்கத்தை விளக்கிய யங், "இது எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. குடியரசுக் கட்சியின் பார்வையில் மலிவு விலைத் திட்டம் தகர்க்கப்படுகிறது," என்றார். எளிதாகச் சொல்வதெனில், அதிகரிக்கும் வரும் விலைகள், மக்களின் வாழ்க்கையை இன்னும் இலகுவானதாக மாற்ற அரசு வகுத்துள்ள திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் அரசியல் ஆதரவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,EPA மறுபுறம், அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்தால், ஒரு கடுமையான ஆபத்தும் உள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பது, இரானின் எண்ணெய் ஏற்றுமதிப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது இரானின் அணுசக்தித் திட்டத்தின் பகுதிகளை அழிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகத் தரைப்படைகளைப் பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்யக்கூடும். இருப்பினும், அமெரிக்க வீரர்களை இந்த மோதலுக்கு அனுப்புவது கடுமையான பொது விமர்சனத்திற்கு வழிவகுக்கும். பல அமெரிக்கர்கள் நீண்ட போர்களால் சோர்வடைந்துள்ளனர். மற்றொரு நீடித்த ராணுவ ஈடுபாட்டை அவர்கள் விரும்பவில்லை. வெளிநாட்டுப் போர்களைத் தவிர்ப்பதாக டிரம்ப் உறுதி அளித்ததால், அவரைப் பலரும் ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்வை விளக்கிய கிளிஃபோர்ட் யங்க், "முடிவில்லா போர்ச் சோர்வு நிலை நிலவுவதாக" கூறினார். "நாம் தரைப்படைகளை அனுப்பினால் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதிய ஆபத்து ஏற்படும், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்," என்றார் அவர். இதன் பொருள், மக்கள் நீண்டகாலப் போர்களால் சோர்வடைந்துள்ளனர் என்பதாகும். வீரர்களை அனுப்புவது அரசுக்குப் புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வான்வழித் தாக்குதல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால், டிரம்ப் தனது மக்கள் ஆதரவை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கக்கூடும். அமெரிக்காவில் எரிபொருள் விலை உயரும்போது மக்கள் அடிக்கடி கோபமடைகிறார்கள். ஆனால், விலை மீண்டும் குறைந்தால் அந்தக் கோபமும் பொதுவாகக் குறைந்துவிடும். நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் அவகாசம் இருப்பதால், நிலைமையைச் சமாளித்து, உள்நாட்டில் ஒரு பெரிய பொருளாதாரப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு டிரம்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது. "நமக்கு யாரும் தேவையில்லை. நாம் உலகின் வலிமையான தேசம்" என்று திங்கள் கிழமை டிரம்ப் கூறினார். இருப்பினும், அவரிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே டிரம்புக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy57xzl9v1yo
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஆமா…இந்த எட்டு கோடி உலக தமிழினத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இலக்கியம் படைக்கிறார்😂. இவருக்கு மட்டும்தான் எது இலக்கியம், எது குப்பை என பிரித்தறியும் ஆற்றல் உள்ளது😂. இவர்தான் தமிழ் இலக்கியத்தை காப்பாத்த வேணும் - இந்தியாவிற்கு எடுத்து சொல்ல வேண்டும். போய்யா அந்த பக்கம் எரிச்சல் பிடிச்ச மனுஷா. புளித்த மாவுக்கு தோசை சுடும் அடிதட்டு பெண்ணோடு மல்லுகட்டிய gutter dweller , தமிழனுக்கு பாடம் எடுக்க வந்துட்டார்😂. இந்த அற்பனுக்கு கூஜா தூக்கவும் நம்மில் ஆட்கள் இருப்பதுதான் வேதனை. உலக மொழிகளில் எல்லாம் தமிழர்கள் ஆளுமை செய்கிறார்கள், இலக்கியம் படைக்கிறார்கள், அங்கீகாரமும் பெறுகிறார்கள். ஆனால் எமது தாய் மொழியில் எது இலக்கியம் என்பதை தீர்மானிக்கு அதாரிட்டி தான் தான் என ஒரு நூலிபான் குறுக்க மறுக்க ஓடுகிறது😂. எல்லாமும் தமிழர்கள் கொடுத்த இடம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும் - ஈரான் 18 Mar, 2026 | 04:42 PM ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (18) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் அந்த தகவலை உறுதிப்படுத்தியது. அத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான பசிஜ் படைத் தலைவர் கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதில் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய அந்நாடு, இஸ்ரேலின் தாக்குதலில் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டதில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதோடு, தீவிரமாக தனது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி கூறுகையில், “அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரானின் பதில் எதிரிகளுக்கு தீர்க்கமானதாகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த உயரிய தியாகியின் ரத்தத்துக்கும் பிற மதிப்புக்குரிய தியாகிகளின் ரத்தத்துக்கும் பழிவாங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு இராணுவ தளபதியான அலி அப்துல்லாஹி, “ஆயுதப்படைகளின் பதில் நடவடிக்கை எதிரியின் செயற்பாடுகளையம் கற்பனையையும் விடப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருக்கவேண்டும். எதிரி சரணடையும் வரை இந்தப் பாதை தொடரும்” என்றார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் அரசு என்பது நன்கு நிறுவப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தாக்குதல்களில் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும் எங்களது அரசியல் அமைப்பை சீர்குலைக்க முடியாது. நாட்டின் ஆட்சி முறை தனிநபர்களை சார்ந்திருக்காமல், வலுவான நிறுவனங்களை சார்ந்தே இயங்குகிறது...” என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரான் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/241305
-
நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!
நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்! 18 Mar, 2026 | 11:02 AM நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில் உள்ள தபால் நிலையமொன்றுக்கு அருகில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் அப்பகுதியிலிருந்து வெவ்வேறு திசைக்கு பாதுகாப்பு தேடி ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர் சந்தைப் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. அதனையடுத்து, மைதுகுரி பல்கலைக்கழக வைத்தியசாலை நுழைவாயில் பகுதியிலும் தொடர்ந்து கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மைதுகுரியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு “போகோ ஹரம்” என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது மைதுகுரி நகரம் முழுவதும் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் போகோ ஹரம் என்ற பயங்கர அமைப்பினை ஒடுக்க முன்னதாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241263
-
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு Mar 18, 2026 - 12:28 PM அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvow92m0009356pvjk8amp3
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
ஒற்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்! Mar 18, 2026 - 11:47 AM நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvnfi470007356po4jicnh0
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
போலி அறச்சீற்றம் By ஆர். அபிலாஷ் March 15, 2026 ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள விழைகிறார். சாகித்ய அகாடெமி, ஞான பீடம் ஆகியவற்றில் தீர்மானிக்கும் சக்தியாக தானே இருக்க வேண்டும் எனச் சொல்வதிலும், இவற்றைவிட உயர்ந்த விருதை அளிக்கும் அதிகாரம் மிக்கவர் தாம் எனக் காட்டிக் கொள்வதிலும் அவருக்கு ஒரு சந்தோஷம். ஆனால் இதில் என்ன பெருமை உள்ளது? குருமூர்த்திக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அதிகாரத்தை அதிகாரத்தால் வெல்ல வேண்டும் என்பதே கீழ்மையான பார்வை. இது ஒரு எழுத்தாளரின் வேலை அல்ல. இதனாலே ஜெயமோகனின் அறச்சீற்றம் போலியானது என நினைக்கிறேன். ஒருவர் தான் நம்புகிற ஒன்றுக்காகவோ அதற்கு எதிராகவோ லாபி செய்யும்போது அவர் அந்த ஜனநாயகமான கட்டமைப்பை சிதைக்கிறார். வைரமுத்து வாங்கிவிடக் கூடாது தங்கமுத்து வாங்க வேண்டும், அதற்காக நான் காய் நகர்த்துவேன் என முயல்வதே ஜனநாயக விரோதமான நடவடிக்கைதான். ஏனென்றால் அதன் பிறகு அப்படைப்பாளியே ஒரு தனிநபரின் முயற்சிகளின், ஆளுமையின் செல்வாக்கினால் மதிப்புறுகிறவர் ஆகிறார்; அவர் தன்மதிப்பை இழக்கிறார். ஒருவர் லாபி செய்து ஒன்றைப் பெறுவதைவிட அதை வாங்கித் தருவதைத் தகுதியாக மற்றொருவர் கருதுவது இன்னும் ஆபத்தானது. தனியார் விருதோ அரசு விருதோ ஒரு படைப்பு தன் தகுதியால், தேர்வுக்குழுவின் மதிப்பீட்டால் வெல்ல வேண்டும். அதற்கான இடைஞ்சலற்ற, நியாயமான நடைமுறையை உருவாக்கவே முயல வேண்டும். நம் அதிகார விளையாட்டுக்கு, உட்கட்சி மோதலுக்கு அதை இரையாக்கப் பார்க்கக் கூடாது. https://www.writerabilash.in/2026/03/blog-post_71.html
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணோடு பார்க்கும் மோகம் ....... முத்துராமன் & மஞ்சுளா..........! 😍
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இதென்ன பைபிள் கொடுத்தா இந்திரன், பைபிள் கொடுக்காட்டில் சந்திரன் எண்டு ஒரே தில்லு முல்லா கிடக்கு. இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சில பிரிவுகள் மதம் பரப்புவதை ஒரு கடமையாக சொல்லிறன. இந்த பணிப்பாளர் இப்படி ஒருவராக இருக்கலாம். ஆனால்… அரச கல்விகொள்கைக்கு அப்பால் அதிகாரிகள் விருப்பபடி எல்லாம் பள்ளிகளில் புத்தகம் வினியோகிக்க முடியாது. அப்படி நடந்தாலும் அதை பெற்றோர், பாதுகவலர் சங்கத்தினர் கேட்பார்கள். யார் இந்த் பெயர் தெரியாத இரெண்டு சங்கி மங்கிகள்? ஆட்களும் அவையின்ற பல்லும்😂. பைபிளை கொழுத்துவோம் என்ற சொற்பாவனை, சிவசேனா என்ற பெயர், இவர்களின் நோக்கம் என்ன என்பதை காட்டி நிற்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்குமா ? இது இரெண்டு சங்கி மங்கியள் ஊடக வெளிச்சம் தேடி செய்யும் விடயமாகவே தெரிகிறது. அவரவர் சமய நூல்களை தவிர வேறு ஏதும் வினியோகம் ஆவதில்லை. லைபிரரியில் ஒண்டை வைக்கலாம் - ஆர்வம் உள்ளோர் தேடி வாசிக்க.