All Activity
- Past hour
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
😂 ஏதோ பெரிய போதை கும்பலை பிடித்த மாதிரி டொபிகளை வைத்து கொண்டு போஸ் கொடுத்து போட்டோ வேற… 40,000 என்பதும் பொய்யாகவே இருக்கும். அதுகள் கொஞ்சத்தை எடுக்க, மிச்சம் எல்லாத்தையும் பெரியவர்கள் எடுத்து போட்டு கணக்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
பொலிஸ் குழுவினர்… மிகுந்த சிரமப் பட்டு இந்தக் குற்றவாளிகளை கண்டு பிடித்தமைக்கு, பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
சரி அண்ணை. உங்கள் அண்மைய இழப்புகளுக்கு அனுதாபங்கள். பத்திரமாக போய் வாருங்கள். பிகு வந்து கட்டாயம் எழுத வேணும்🙏. நான் எனக்காக மட்டுமே கதைக்க முடியும், நான் சொன்னது விமர்சனமே அல்ல, விதந்துரைப்பு மட்டுமே. அதை சொன்ன விதம் பிழை எண்டால் மன்னித்து கொள்ளவும்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
பரவாயில்லை கோஷான் சே ......நான் யார்மீதும் குறை சொல்லவில்லை .... நீங்கள் உட்பட ........விமர்சனங்களை ஏற்கத்தான் விடும் . ......அதிகம் எழுத நேரமில்லை . ....எனது மைத்துனர் ஜெர்மனியில் இன்று அதிகாலை காலமாகி விட்டார். 3 நாட்களுக்கு முன் தம்பி முறையானவர் டென்மார்க்கில் காலமாகி விட்டார். இன்னும் எடுக்கவில்லை ..... அதுதான் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் ......சரி போகட்டும் விடுங்கோ . ........ பின்பு சந்திக்கலாம் ......!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கிந்திய தீவுகள் 47-4 5.2 ஓவர்களில்
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
இவரைத்தொடர்ந்து பல இராணுவ அதிகாரிகள், அரசியல் தலைகள் உருளும்போலுள்ளதே. அதற்கிடையில் சுரேஷ் சலே மேலே போகவைக்க முயற்சிகளும் இடம்பெறும்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
ஓம்…இது பெரும்பாலும் கடல் அரிப்பால் நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் நாங்கள் கிரிகெட் விளையாட கூடிய அளவு மணல் இருந்த இடமெல்லாம் இப்போ கடல்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
ஐயோ அண்ணை… முற்றிலும் தவறாக விளங்கி கொண்டுள்ளீர்கள். நீங்கள் எழுதியது அறவே விரசம் அற்றது… மிக அப்பட்டமாக எழுதியிருக்க கூடியதை அற்புதமாக அதே நேரம் அதன் பொருட்சுவை குன்றாமல் எழுதி உள்ளீர்கள். உண்மையில் அதை 18+ என எழுதியது தப்புத்தான். நீங்கள் எழுதியதன் முழு கனபரிமாணத்தையும் கிரகிக்க ஒருவர் குறைந்தது 35+ ஆகவாவது இருக்க வேண்டும். இப்படி நான் சொல்ல வரும் விடயத்தை என்னால் எழுத முடியுமா என்பதே என் தயக்கத்துக்கு காரணம். என்னை போல் நேரடியாக எழுத தமிழில் எழுத தெரிந்தால் போதும். ஆனால் (யாரின் பாதிப்போ இல்லையோ) உங்களின் இது போன்ற எழுத்துக்கள்தான் அதை “இலக்கியம்” என்ற அடுத்த படி நிலைக்கு உயர்த்துவன. தயவு செய்து தொடர்ந்து “இதே போல்” எழுதுங்கள்🙏 பிகு ஏனைய கள உறவுகள் பார்வையிம் என்னை போலவே என நம்புகிறேன். விரசமான படைப்பு என நான் கருதி இருப்பின் அதை முதலாம் பதிவிலே நேரடியாக சொல்லி இருப்பேன் அண்ணை.
- Today
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
பலே பலே... ஜேவிபி சட்டம் ஒழுங்கை சொன்னபடி நிலைநிறுத்துகிறார்கள்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
இந்தக் கவிதையில் என்ன விரசம். மனச்சாட்ச்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதன் முதல் பந்தியிலேயே நான்கு திருத்தலங்களின் தரிசனம் உண்டே அது ஏன் யார் கண்ணிலும் படவில்லை . .......! தலைப்பு கொஞ்சம் கவர்ச்சிதான் - மறுக்கவில்லை துள்ளி வந்து விழும் வார்த்தைகளின் துடுக்கு அடக்கித்தான் எழுதுவது ஆயினும் என்ன எழுதுவது ஏன் இனி எழுதுவது ....... கருத்துக்களை எழுதிப் போட்டு கை தட்டிவிட்டுப் போகலாம் .......! ( கோஷான் - சே இது உங்களுக்கானது அல்ல , பொதுவானது என் மனக்குமுறல் மட்டுமே..... நான் என்ன செய்வது எவ்வளவோ வருடத்து வாசிப்பு பழக்கம் , ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பரிட்சயம் எழுதினால் அப்படித்தான் வருகின்றது. அந்தக் கவிதைகூட அந்த நிமிடத்தில் எழுதியதுதான். கதையோ , கவிதையோ எண்ணி வைத்திருந்து எழுதியதில்லை. எண்ணம் கூடிவரும்போது எழுதுவதே அவ்வளவுதான். தயவுசெய்து யாரும் குறைநினைக்க வேண்டாம் ) .......!
-
கருத்து படங்கள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதெல்லாம் பையனுக்கு கால் தூசு. வேறு ஏதோ விடயத்தில் சுணங்குகிறார். பையன் எல்லாம் ஓக்கே?- சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது! களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடிவிட்டு, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையின் முன் பக்க கண்ணாடியைத் தடியால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இனிப்பு வகைகளை பொலித்தீன் பைகளில் நிரப்பிக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அவற்றை மறைத்து வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இவ்வாறான திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2026/1466375- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
இலங்கையில் நடைபெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் கைதாகும் கொலையாளிகள் பலர் முன்பு இராணுவம், கடற்படையில் இருந்தவர்களாக உள்ளனர். இவர் அரச படைகளில் சேர்ந்து... தமிழர்களை சுட்டுக் கொன்று பயிற்சி எடுத்த பின், இப்போ... தம் இனத்தவர்களை கொலை செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். "எதை விதைத்தாயோ... அதனைத்தான் அறுவடை செய்ய முடியும்."- தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் February 24, 2026 — கருணாகரன் — தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்டு தமிழ்த்தரப்புப் பேசுகிறது; எழுதுகிறது; தீர்மானங்களை எடுக்கிறது; போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இது தவறான ஒரு வழிமுறை – அணுகுமுறை ஆகும். என்பதால் தமிழ்த்தரப்பு மேலும் பின்னடைவையும் தோல்வியையுமே சந்திக்கப்போகிறது என உறுதியாகச் சொல்ல முடிகிறது. எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை) முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும். இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். சுலபமாக ஒன்றைச் சொல்லி இதை விளக்கவும் நிரூபிக்கவும் முடியும். உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, மிகச் செல்வாக்கான – நம்பிக்கைத் தோற்றமுடைய முகம் அநுரகுமார திசநாயக்கவினுடையது. ‘மக்களின் நாயகன்’ என்று சொல்லக் கூடிய இன்றைய தலைவர் அநுரகுமார திசநாயக்க. இதை யாரும் மறுக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை உட்பட எதையும் வெளிப்படையாக உரத்துச் சொல்லாத, இனவாதத்தை வெளிக்காட்டாத செல்வாக்கான இந்த முகத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அநுரகுமார முதலில் ஓரிடத்துக்குச் செல்வார். அடுத்ததாக அவரைத் தொடர்ந்து ஏனைய அரசுப் பிரதிநிதிகள் அந்த இடங்களுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செல்வார். உள்நாட்டிலும் இதுதான் நடக்கிறது. வெளிநாடுகளிலும் இதுவே நிகழ்கிறது. அநுர முதலில் இந்தியாவுக்குச் சென்றார். இப்பொழுது ரில்வின் சென்று திரும்பியிருக்கிறார். அநுர முதலில் சீனாவுக்குச் சென்றார். ரில்வின் பிறகு சீனாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றார். ரில்வின் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் வடக்குக் கிழக்கிற்கு வந்து சென்றார். ரில்வின் அதற்குப் பிறகு வடக்குக் கிழக்குக்குச் சென்று திரும்பினார். இந்தப் பயண ஒழுங்கினை யாரும் மீள நினைவு கொண்டு நோக்கலாம். அநுரகுமார திசநாயக்க தன்னுடைய செல்வாக்கான அடையாளத்தைக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்தி, ஏனையவர்கள் தங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஆக ஜே.வி.பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை நட்சத்திரமும் அரசியல் முதலீடும் அநுரகுமார திசநாயக்கவே. அதை அவரும் மிகச் சரியாகப் பேணிக்கொள்கிறார். மிகச் சாதாரணரைப் போன்ற ஒரு தோற்றத்தில் மிக வலிமையான மனிதராக – தலைவராக அநுர தொழிற்படுகிறார். அநுரகுமார திசநாயக்கவுக்கு துணை செய்வதைப்போல அல்லது தேசிய மக்கள் சக்தியின் பயணத்துக்கு வலுச்சேர்ப்பதைப்போல கூடவே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விஜித ஹேரத்தும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டைக் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியாக வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறது. நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஒரு வகையான நூதனமான அரசியலைக் கையாண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்செல்கிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு இசைவாகத் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஜே. வி. பி. ஆனால், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி. பிக்கும் இடையில் பெரியதொரு உட்போர் நடந்து கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியின் இன்றைய போக்கையும் புரிந்து கொள்ளத் தவறுவதன் விளைவு. இந்த இரண்டினாலும் தேசிய மக்கள் சக்திக்கோ ஜே.வி.பிக்கோ எந்தப் பாதிப்புமில்லை. இங்கே வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய கட்சிக்குள் அல்லது அரசியற் கூட்டுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. தேசிய மக்கள் சக்திக்குள்தான் குத்து வெட்டுகளும் இழுபறிகளும் என்பதைப்போல கதை விடுவதுதான். எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்முரண்பாடுகளும் கொதி நிலைகளும் இருப்பது வழமை. உள் முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்திலேயே போய் நிற்கிறது. ஐ.தே.க உள்முரண்பாட்டினால் நீண்டகாலம் இழுபறிப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இனித் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்தான் ரணில் – சஜித் அணி என்று பிளவு ஏற்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் உட்கொதிப்புகளும் உலகறிந்தவை. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள், முஸ்லிம் காங்கிரசுக்குள் எல்லாம் உள் முரண்பாடுகள் அல்லது கொதிப்பான நிலை இருந்தபடியால்தான் அவற்றிலிருந்து சிலர் வெளியேறும் நிலை உருவானது. விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்த உள்முரண்பாடுகள் பல. உமா மகேஸ்வரன் – பிரபாரன் முரண்பாடு, மாத்தயா – பிரபாகரன் முரண்பாடு, கருணா – பிரபாகரன் முரண்பாடு என பல அடுக்குகள் உண்டு. முரண்பாடும் கொதிப்புகளும் எந்தக் கட்சியிலும் எந்தக் கூட்டிலும் இருக்கும். அதைக் கடந்து, தமது அரசியல் முன்னெடுப்பில் குறித்த தரப்பு எப்படிச் செயற்படுகிறது? எப்படி வெற்றிகளைப் பெறுகிறது? எப்படி முன்செல்கிறது என்பதே அரசியல் பெறுமானமும் அரசியல் வெற்றியுமாகும். தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தமக்குள் உள்ள முரண்பாடுகளை எப்படித் தீர்த்துக் கொள்கின்றன என்று வெளியே தெரியவில்லை. அவற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்புகளின் தன்மையைச் சரியாக உணர முடியவில்லை. நிச்சயமாக புகைச்சல்களும் முரண்களும் இருந்தே தீரும். ஆனால், அரசியல் ரீதியாக இரண்டும் முன்செல்வதை யாரும் மறுக்கவே முடியாது. இதையே நாம் கவனிக்க வேண்டும். இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். இது எதைக்காட்டுகிறது? முந்திய ஜே.வி.பி யிடமிருந்து இப்படி ஒரு சொல் வருமா? அதைப்போல இன்றைய ஜே.வி.பியிடமிருந்து முன்பைப்போலக் கடுமையான ஒரு வார்த்தை வரவே வராது. இதுதான் படிப்பினை. இதுதான் மாற்றம். இதுதான் விவேகம். இதுதான் வெற்றிக்கான வழிமுறை. புறச் சூழலின் யதார்த்தத்தை ஜே.வி.பி கற்றுத் தேர்ந்துள்ளது. அதனால்தான் ரில்வின் இந்தியாவைக் குறித்து அவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் பயணம் செய்தது கூட யதார்த்தத்தை உணர்ந்ததன் விளைவே. இந்தியாவை தூர வைத்துக் கையாள முடியாது என்று அவருக்குத் தெரியும். மட்டுமல்ல, ரில்வினின் இந்தியப் பயணம் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகப் பெரிய வெற்றியே. ஒன்று, நல்லுறவை வலுப்படுத்துவதில். இரண்டாவது, பொருளாதார உதவி மற்றும் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில். மூன்றாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் அழுத்தத்தைக் குறைப்பதில். ஏற்கனவே அநுரகுமார திசநாயக்க, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் சென்று நிலைமையைச் சுமுகமாக்கியிருந்தனர். இப்பொழுது ரில்வின் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கிறார். இப்படிப் பல உயர்மட்டத் தலைவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை இந்தியாவும் வரவேற்கிறது. இதில் இரண்டு தரப்புக்கும் வெற்றியே உண்டு. இந்திய எதிர்ப்பைத் தன்னுடைய வரலாறாகக் கொண்ட ஒரு இயக்கத்தை – அதனுடைய ஆட்சியைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்தியா. அதைப்போல, தான் முந்திய நிலைப்பாட்டைப்போல இந்திய எதிர்ப்பில் தான் இல்லை என்று காட்டுவதன் மூலம் இந்தியாவின் சந்தேகத்தையும் பகைமையையும் இல்லாமற் செய்துள்ளது ஜே.வி.பி. கூடவே தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் அழுத்தத்தையும் குறைத்துள்ளது அல்லது இல்லாமற் செய்துள்ளது. ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன. ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. இப்படியெல்லாம் சொல்லும்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் விழுந்தடித்துக் கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. அதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள், இந்தக் கட்டுரை தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது என்று கொதிக்கவும் தேவையில்லை. அப்படியான எந்த ஆபத்தையும் இந்தக் கட்டுரை உருவாக்கவில்லை. ஏனெனில் நாம் மேலும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சங்கதிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்டவையெல்லாம் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி ஆகியவற்றின் புதிய தோற்றமும் புதிய அணுகுமுறைகளும் என்பது உண்மையே. அதே அளவுக்கு இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு. முக்கியமாக வெளிநாட்டில் தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை. ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவும் ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தியுள்ளது. ‘ரில்வின் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்’ என்றுகூடச் சிலர் கடுந்தொனியில் பேசலாம். கைகொட்டிச் சிரிக்கலாம். அரசியலில் என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதிகாரத்துக்கு வேண்டியவை எவையோ அவற்றைச் செய்ய வேண்டும் என்ற யதார்த்தமே இங்கே முக்கியமானது. அதையே ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் செய்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். ‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. தமிழர்களோ??? https://arangamnews.com/?p=12696- இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!
இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு! பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவ பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு தொகுதிகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 60 பேர் கலந்துகொண்டனர். உலகளாவிய ஊடக நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறைகளில் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். பயிற்சி நெறியின் முக்கிய அம்சங்கள் இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சி நெறியில், ஊடக தொழில்நுட்பத்தின் அண்மைக்கால வளர்ச்சி, செய்தி அறை மாற்றம் (Newsroom Transformation), ஆளுகை சார் தொடர்பாடல் மற்றும் அறநெறி சார்ந்த ஊடகவியல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அடிப்படையிலான அறிக்கையிடல், போலிச் செய்திகள் மற்றும் பரப்புரைகளை எதிர்கொள்ளுதல், நெருக்கடி கால முகாமைத்துவ தொடர்பாடல் போன்ற சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் நிபுணர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனுபவப் பகிர்வும் கலாசாரச் சுற்றுலாவும் ஊடகவியலாளர்கள் வெறும் தத்துவார்த்த அறிவை மட்டும் பெறாமல், நடைமுறைத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் மற்றும் இந்தியாவின் முன்னணி புத்தாக்க மையமான ‘T-Hub’ ஆகிய இடங்களுக்கு அவர்கள் கள விஜயம் மேற்கொண்டனர். இந்தச் சுற்றுப்பயணங்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரியம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பௌத்த மரபுகள் குறித்த ஆழமான புரிதலை அவர்களுக்கு வழங்கின. இருதரப்பு உறவும் எதிர்காலத் திட்டமும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் இலங்கையர்களுக்காக மேலதிகமாக 700 பயிற்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ITEC’ போன்ற திட்டங்கள் ஊடாக ஆண்டுக்கு சுமார் 1,000 இலங்கையர்கள் இந்தியாவின் இத்தகைய திறன் மேம்பாட்டுப் பங்களிப்பினால் நன்மையடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466290- பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!
பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை! அரசு அளித்துள்ள சம்மனுக்கு பதிலளிக்கும் வரை, அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திக்க முடியாது, என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் (Jean Noel Parrot) ஜீன் நோல் பரோட் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் (Jared Kushner) ஜாரெட் குஷ்னரின் தந்தையான, (Charles Kushner) சார்லஸ் குஷ்னர் ஐரோப்பிய நாடான பிரான்சுக்கான அமெரிக்க துாதராக உள்ளார். பிரான்சின் லியோன் நகரில், 23 வயது இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை பிரான்ஸ் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய சார்லஸ் குஷ்னருக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை, சம்மன் விடுத்திருந்தது. ஆனால் அவர் முன்னிலையாகவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோல் பரோட், ”சம்மனுக்கு மதிப்பளித்து அவர் நேரில் ஆஜராகாதவரை, பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அவரை சந்திக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1466266- ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும். இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால், சிலர் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும், கைது செய்யப்படுவதற்குப் பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது. அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே, நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம். இதன் மூலம், பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா என்பதையும், அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின், அதனைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே நாம் கருதுகிறோம். எனவே, தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது. கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, Gaitana (கைடானா) என பெயரிட்டுள்ளார். கைடானா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் தலைவி ஆவார். இந்த கைடானா ரோபோவின் குரல் மற்றும் நீல நிற தோலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கைடானாவிற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சீட்டில் “IA” என்ற பெயரை தேட வேண்டும். இது “Inteligencia Artificial” என்பதன் ஸ்பானிஷ் சுருக்கம் ஆகும். கொலம்பிய சட்டம் மனிதரல்லாத வேட்பாளரை முறையாகப் பதிவு செய்ய அனுமதிக்காததால், கைடானா வெற்றி பெற்றால், கைதானாவின் உத்தரவுகளின்படி செயல்படும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். உதாரணமாக, 200 பக்க மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், கைடனா அதை முக்கிய தரவுகளைச் சுருக்கமாக மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Info Graphics வடிவத்திற்கு மாற்றி, 10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட தனது சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும். பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை, “ஆம்” மற்றும் “இல்லை” என்ற நிலைப்பாடுகளாக வடிகட்டி கைடனா அவற்றை எண்ணுவார். எந்தப் பக்கம் 50 சதவீதத்திற்கும்அதிகமான ஆதரவை பெறுகிறதோ அதுவே நாடாளுமன்றத்தில் அது எவ்வாறு வாக்களிக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது. தரவு பாதுகாப்பு மற்றும் மாறுபட்ட கருத்துகளின் ஒருங்கிணைப்பு போன்ற பகுதிகளில் இந்த கைடானாவை இன்னும் மேம்படுத்த வேண்டியது உள்ளதாக அதை உருவாக்கிய ரெடோண்டோ ஒப்புக்கொள்கிறார். இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், ஜனநாயக நடைமுறையில் AIயின் நேரடி பங்களிப்பு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். https://athavannews.com/2026/1466304- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இப்போதான் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருக்கிறார், அதற்குள் ஏன் இவர்கள் எல்லாம் பதறியடிக்கிறார்கள்? அவர் கைது செய்யப்பட்டது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு, அவரை அனுரா ஜனாதிபதியானவுடன் கைது செய்யவில்லையே, எப்படி அரசியல் பழிவாங்கல் என்று கூறமுடியும்? பல சாட்சியங்கள், ஆதாரங்கள் மூலமே கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒத்துழைப்புக்கொடுத்து நிரபராதியென்றால் விடுவிக்கப்படுவார். முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு இது தெரியாமற்போனது ஆச்சரியமே! அதற்குள் ஏன் இத்தனை கலவரம், காரணங்கள் கண்டுபிடிப்பு? நாளைக்கு சுரேஷ் சாலே உண்மையை கூறி, ராஜபக்ச குடும்பத்தை கைது செய்தால், இதே கருத்தையே வைப்பார்கள். புலிகளுடன் போரிட்டால் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையில்லையா? அப்படியாயின் புலிகள் செய்தது எப்படி தவறாகும்?பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோத்தா, பத்திரிகை ஆசிரியர்களை கொலை செய்விக்கவில்லையா, லலித், குகனை கொலை செய்யவில்லையா, திரிபோலி இராணுவக்குழுவை அமைத்து அரசியல் எதிரிகளை கொலை செய்விக்கவில்லையா? இவர்கள் அரசியல் பழிவாங்கல் செய்ததனாலேயே யாரை கைது செய்தவுடன் அரசியல் பழிவாங்கல் என்று கூவுகிறார்கள். இராணுவத்தை போர்க்குற்ற விசாரணை செய்யக்கூடாது என்று ஏன் தடுக்க வேண்டும்? அவர்கள் போர்க்குற்ற மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதனாலேயே. விசாரணையை தடுத்தார்கள், இன்று போதைப்பொருள் வணிக தகராறில் அவர்களை அவர்களே கொலை செய்கிறார்கள் இராணுவத்தினர். சுரேஷ் சாலேயை விசாரணை செய்யக்கூடாது என்று இவர்கள் கதறுவதிலிருந்து தெரிவதென்னவென்றால்; சுரேஷ் சாலேயே கொலைகளின் உண்மையான சூத்திரதாரி, இல்லையேல் இவர்கள் ஏன் பதற வேண்டும்? "மடியில கனமுள்ளவனுக்கு வழிப்பயணத்தில் பயமிருக்கும்."- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
அக்குரேகொடயில் சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை: கைது செய்யப்பட்டவர்கள் குறித்து பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல் ! 26 Feb, 2026 | 10:29 AM அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பாதாள உலகக் குழுத் தலைவன் 'கரந்தெனிய சுத்தாவின்' மிக நெருக்கமான மற்றும் திறமையான துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர் கனங்கே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மனோஜ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடற்படையில் 11 ஆண்டுகள் பணியாற்றி சட்டப்பூர்வமாக விலகியவர் என்பதுடன், 'ரூபஸ் ரமேஷ்' என்ற பெயரில் போலி கடவுச்சீட்டையும் வைத்திருந்துள்ளார். சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உட்பட இதுவரை 6 கொலைச் சம்பவங்களில் இவர் துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரி புகைப்படம் வெளியிட்டிருந்தனர். இதற்கமைய, மொனராகலை - நக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இவர் மறைந்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், மொனராகலை பொலிஸார் நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை (24) இரவு அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். தினுஜன சந்தருவன்: அம்பலாங்கொடையைச் சேர்ந்த இவர், கொலைச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயணித்த காரைச் செலுத்தியவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் 'கரந்தெனிய சுத்தாவின்' உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கெலும் சுஜீவ: அங்கொடை பகுதியைச் சேர்ந்த இவர், சந்தேகநபர்களுக்கு மொனராகலையில் தங்குமிட வசதி செய்துகொடுத்துள்ளார். கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் இருந்த காலப்பகுதியிலேயே மனோஜ் உதயங்கவுக்கும் 'கரந்தெனிய சுத்தாவிற்கும்' இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வந்த கெலும் சுஜீவ என்பவரை தொலைபேசியில் அழைத்த பாதாள உலகக் குற்றவாளியான 'பெத்தியாகொட சங்க', "ஒரு பையன் இருக்கிறான், வேலைக்கு எடுத்துக் கொள்" எனக் கூறி முதலில் சாரதியையும், பின்னர் 5 நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிதாரியையும் அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/239610- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி 26 Feb, 2026 | 10:31 AM இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25) காலமானார். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகை நல்லக்கண்ணு ஐயாவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார். அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/239611- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
பல ஆதாரங்களுடன் சிக்கிய சுரேஷ் சாலே: அச்சத்தில் ராஜபக்சர்கள் - அடுத்த முக்கிய இலக்கு...! தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே என்பவர், வெறும் ஒரு புலனாய்வு அதிகாரி மட்டுமல்லஅவர் ராஜபக்ச குடும்பத்தின், குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நிழல் அதிகாரியாகவே பார்க்கப்பட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளமை, ராஜபக்சக்கள் மீதான ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது. இது ராஜபக்சக்களுக்குப் பாரிய அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் அவரது குழுவினருக்கும், சுரேஷ் சாலே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் இருந்த மர்மமான தொடர்புகள் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரியவை. இது குறித்துப் பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா, சர்வதேச ஊடகமான செனல்-4 (Channel 4) இல் வழங்கிய சாட்சியத்தின்படி, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையிலான சந்திப்புகளை ஒருங்கிணைத்ததில் பிள்ளையான் தரப்புக்கும் சாலேக்கும் முக்கிய பங்கு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற கேள்விக்கு விடை தேடும் பயணத்தில், சுரேஷ் சாலே ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். இதுமட்டுமன்றி, தர்கா நகரில் நடந்த தாக்குதல்கள் மற்றும் வவுணத்தீவில் காவல்துறையினரைக் கொலை செய்தமை போன்ற விடயங்களிலும் சுரேஷ் சாலேவின் தலையீடு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ராஜபக்சர்களை ஆட்சிபீடம் ஏற்றவேண்டிய ஒரு கட்டாய சூழலில் அவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அவரது கைது இடம்பெற்றிருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் முக்கிய கருவியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இது ராஜபக்சர்களின் அரசியல் செல்வாக்கிற்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களின் அரசியல் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனடிப்படையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார்? திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட அந்தப் பயங்கரமான அரசியல் சதித்திட்டங்கள் என்ன? சுரேஷ் சாலேயின் கைதுக்குப் பிறகு விசாரணை வளையத்திற்குள் சிக்கப்போகும் அந்த அடுத்தடுத்த அரசியல் புள்ளிகள் யார்? இந்தக் கொடூரத் தாக்குதல் விவகாரத்தின் ஆரம்பகட்டத் திட்டமிடல் முதல், தற்போது சுரேஷ் சாலே பிடிபட்டிருக்கும் பரபரப்பான நிலவரம் வரை அனைத்தையும் விரிவாகத் தொகுத்து வழங்குகிறது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி..... https://ibctamil.com/article/suresh-salley-arrested-easter-attack-investigation-1772063038- வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
சிறுநீரகத்தை விற்ற பெண் போராளி… மரணமும் வறுமையுமாகத் தொடர்கிற வாழ்வு… ஈழத்தில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் இன்று தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் இன்னமும் சமராடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் கடனை அடைக்கத் தன்னுடைய சிறுநீரகத்தை விற்கத் தீர்மானித்த முன்னாள் பெண் போராளியின் சம்பவம், மேற்குறித்த துயர நிலையை வெளிப்படுத்துகிறது. இது வெளியில் தெரிந்திருக்கும் ஒரு கதை. ஆனால் நிறைய முன்னாள் போராளிகள் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மீன்விற்கும் போராளி இப் பதிவை எழுதுகின்ற நாளில் சில என் சிங்கள வாசகர்கள் சிலர் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். இவர்களை அழைத்துக்கொண்டு சில முன்னாள் போராளிகளிடத்திலும் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளின் தாய்மார்களிடத்திலும் அழைத்துச் சென்றேன். சிறுநீரகத்தை விற்ற முன்னாள் போராளியின் கதையைக் கேட்டு சிங்கள நண்பர்கள் அதிர்ந்து போயினர். அத்துடன் எனது மாணவனின் தந்தையான ஒரு முன்னாள் போராளி மீன் விற்றுக்கொண்டு வரும்போது அவரை அறிமுகப்படுத்தினேன். உண்மையான கதாநாயகர்கள் இவர்கள்தான் என்று சிங்கள நண்பர்கள் கூறினர். அத்துடன் அவர்களின் இன்றைய போராட்ட நிலையை நேரடியாகவும் பார்த்தனர். இனப்படுகொலைப் போர் முடிவடைந்தது 2009ஆம் ஆண்டில். அப்போது ஆயுதம் ஏந்திய பல ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். போருக்குப் பிறகு புதிய வாழ்க்கையை உருவாக்குவது மிகவும் போராட்டமானதாக மாறியது. கல்வி இடைநிறுத்தம், தொழில் வாய்ப்பு இன்மை, சமூக சந்தேகம், அரச படைகளின் கண்காணிப்பு, குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சுமை என்று பல்வெறு பக்கங்களாலும் முன்னாள் போராளிகள் சிக்கலை எதிர்கொண்டனர். காவலாளியாக போராளி அண்மையில் ஒரு போராளி அண்ணா (கிளிநொச்சியில் பிரபலமான உணவகம் ஒன்றில் காவலாளியாக பணிசெய்து வருகிறார்) தொலைபேசியில் அழைத்தார். தமிழீழ காவல்துறை உறுப்பினராக இருந்த அவரது மனைவிக்கு இதய நோய். பொருளை அடகு வைத்து பணத்துடன் கொழும்புக்கு சிகிச்சைக்காக பேருந்தில் பயணத்திற்குக் கொண்டிருந்த வேளையில் ஓமந்தை தாண்டியதும் அவரது மனைவி நெஞ்சடைத்து மயங்கி விழுந்துள்ளார். வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவேளையில் அவர் உயிர் பிரிந்தது தெரிய வந்தது. இப்படித்தான் ஒரு புறம் பொருளாதார நெருக்கடி மறுபுறம் கடுமையான நோய்கள் என முன்னாள் போராளிகளின் சமர்க்களம் இன்று நீள்கிறது. பெண் போராளிகளின் நிலை அதைவிடவும் சிக்கலானது. போரின்போது அவர்கள் பல முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், போருக்குப் பிறகு சமூகத்தில் அவர்களுக்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லை. பலர் வேலை வாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறுகின்றனர். சிலர் திருமணம், குடும்ப வாழ்க்கை, சமூக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றிலும் தடைகளை சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்கள். கடன் வாங்கி வாழ வேண்டிய நிலை உருவாகிறது. அந்தக் கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலையில், உடலையே ஒரு பொருளாக மாற்றும் நிலைக்கு தள்ளப்படுவதெல்லாம் எவ்வளவு கொடுமையானது? போரின் முடிவென்பது இக் கதைகள், போரின் முடிவு என்பது வெறும் ஆயுதங்கள் மௌனிப்பதுடன் நின்றுவிடுவதில்லை என்பதை நினைவூட்டுகின்றன. உண்மையான சமாதானம் என்பது மனிதர்களின் வாழ்க்கை மீள்கட்டமைக்கப்படும்போது தான் உருவாகும். முன்னாள் போராளிகளுக்கு தொழில் பயிற்சி, கல்வி வாய்ப்புகள், மனநல ஆதரவு, சமூக இணைப்பு போன்றவற்றை வழங்கும் நீடித்த திட்டங்கள் மிகவும் அவசியமாகின்றன. சில அரசாங்க மற்றும் அரசு அல்லாத அமைப்புகள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை அனைவர் வாழ்க்கையையும் நிலைநிறுத்தும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றம் மெல்ல நகர்வதும் ஒரு காரணமாகும். வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பது, சிறிய தொழில்கள் வளர முடியாத நிலை, கடன் சுமைகள் அதிகரித்தல் ஆகியவை முன்னாள் போராளிகளை மேலும் துன்புறுத்துகின்றன. குறிப்பாக பெண்கள், தனியாக குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் இருந்தால், இந்தப் பிரச்சினைகள் இன்னும் கடுமையாக மாறுகின்றன. மர்ம மரணங்கள் போருக்குப் பிறகு முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் இன்னொரு அதிர்ச்சியான விசயம் போராளிகளின் மர்மமான மரணங்கள். பல ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில முன்னாள் போராளிகள் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் சலசலப்பின்றி இடம்பெற்று வருகின்றன. சில தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதனையும் வெறும் தற்கொலைகளாக மாத்திரம் கருதிவிட இயலாது. தொடர்ந்து இடம்பெறும் இந்த மரணங்கள் குறித்து எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. போருக்குப் பிறகு முன்னாள் போராளிகள் பல்வேறு மன அழுத்தங்களிலும் சமூக அழுத்தங்களிலும் வாழ்ந்தனர். தொடர்ந்து கண்காணிப்பு உணர்வு, வேலை இல்லாமை, கடன் சுமை, சமூக ஒதுக்கல் ஆகியவை அவர்களின் மனநிலையை பாதித்துள்ளன. இத்தகைய சூழலில் நிகழும் மரணங்கள் இயல்பானவையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பதை தெளிவுபடுத்தாத நிலை குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. தமிழினியின் மரணம் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி புற்றுநோயால் இறந்தார். அவரது மரணச் சடங்களில் கலந்துகொண்டு அதேநாளில் இன்னொரு பெண் போராளி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். பேருந்தில் காத்திருந்த போராளி திடீரென நின்ற இடத்திலேயே இறந்தார் என்ற செய்தியையும் அறிந்தோம். இன்று முன்னாள் போராளிகள் நலன்புரிக் காப்பகத்தின் முகநூலில் அடிக்கடி இறக்கும் முன்னாள் போராளிகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. தமிழினி அவர்கள் மரணித்த நாட்களில் நூற்றுக்கணக்காக இருந்த மரணங்கள் இன்று பல நூறுகளை கடந்து நீள்கின்றன. இன்று நாம் சந்தித்த வேளையிலும் தமிழினி அவர்களை இழந்த நிலையில் அவரது தாயார் கண்ணீருடன் பேசினார். புனர்வாழ்வு முகாம் என அரசால் அழைக்கப்பட்ட தடுப்பு முகாங்களில் இருந்த வெளியே வந்த பின்னர், தமது உடலில் நிறைய மாற்றங்களை உணர்வாதாகவும் உடல் வலுவிழந்து பாரங்களை தூக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் நோயாளியாக மாறிவிட்டதாகவும் முன்னாள் போராளிகள் இலங்கை அரசின் ஆணைக்குழுக்களின் முன்பாகவே சொல்லியுள்ளனர். உணவில் விசம் அல்லது தமக்கு ஏற்ப்பட்ட ஊசிகளில் விசம் கலந்திருக்கலாம் என்றும் அஞ்சுகிறார்கள். உடலுக்குள்ளும் போராட்டம், உடலுக்கு வெளியிலும் போராட்டம். மனத்திற்குள்ளும் போராட்டம். எங்கள் விடுதலைக்காகப் போராடி இன்று எம்மில் பலர் கௌரவத்துடன் வாழப் பல பணிகளை கடந்த காலத்தில் செய்த போராளிகளின் வாழ்வு இன்றும் மரணமும் வறுமையும் என்று பெரும் சமர்க்களமாகவே நீள்கின்றது. இதனைத் தடுத்த நாம் அனைவரும் தொடர்ந்தும் விரைந்தும் செயலாற்ற வேண்டும். https://ibctamil.com/article/female-fighter-who-sold-her-kidney-1772082533- அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு; 04 பேர் உயிரிழப்பு; 06 பேர் காயம்!
அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு; 04 பேர் உயிரிழப்பு; 06 பேர் காயம்! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 09:34 AM கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கியூபாவின் உள்நாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள காயோ பால்கோனஸ் அருகே புதன்கிழமை (25) காலை இந்தப் படகு கண்டறியப்பட்டது. கியூப எல்லைப் பாதுகாப்புப் படையினர் அடையாளத்தைக் கண்டறியப் படகை நெருங்கியபோது, அதிலிருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாவும், அதில் கியூப கமாண்டர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலடியாகக் கியூப படையினர் நடத்திய தாக்குதலில் படகில் இருந்த 04 பேர் உயிரிழந்துள்ளனர். 06 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரும் அமெரிக்காவில் வசிக்கும் கியூப நாட்டவர்கள் என கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ , "கடல் பகுதியில் இத்தகைய துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அசாதாரணமானது. படகில் இருந்தவர்களின் விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. கியூப அரசு வழங்கும் தகவல்களை மட்டும் நாங்கள் நம்பப்போவதில்லை. அமெரிக்கா இது குறித்துத் தனிப்பட்ட முறையில் தீர விசாரணை நடத்தும்," எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கடலோரக் காவற்படை தற்போது அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/239607 - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.