All Activity
- Past hour
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
RS Vijayakumar ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 · இணையத்தில் பார்த்த புகைப்படம்... இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான். 2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான். நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது. இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது. இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது... இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்.. இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு. உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாராவது சிறுவர்களுக்கு கிரிகெட் பழக்கிறீர்கள் எனில் கனேடியன் பேட்ஸ்மென் தாடிவால் ஓடியதை போல் ஓடாமல் இருக்க சொல்லி பழக்கவும். ரிஸ்க் அதிகமான ஓட்டத்தை அவர் அழைத்தார்… மிக மெதுவாக ஓட ஆடம்பித்தார்… நேராக ஓடாமல் ஒரு கோணத்தில் ஓடினார்… Crease பண்ணும் போது பேட்டை slide in பண்ணாமல் குத்தினார், அது கிரீஸ் கோட்டில் மாட்டி கொண்டது. இதில் ஒன்றஒயாவது சரியாக செய்திருப்பின் அவுட் ஆகாமல் தப்பி இருக்கலாம். முன்பு இதை அம்பயர் அவுட் கொடுத்திருக்க மாட்டார், ஆனால் இப்போதைய கமேரா சூழ் கிரிகெட்டில்…. ஓட வேண்டும், ஒழிய முடியாது😂
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள். கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.
-
குட்டிக் கதைகள்.
oroensptSd7170gamt7i3hi790ti1726f 3fa139lt09lg0l77h9i997uf6u · ராவணனை அழித்த பிறகு., போா்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!! “நீ யாரம்மா?” என்றாா்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!! மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!! ஆச்சாியப்பட்டேன்..!! இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..! என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!! விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!” “அவா் கேட்கவில்லை..!!” “உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!” “அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!” “அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!! அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!! தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!! ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!! அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு., ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!! அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!! உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!! நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!! ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்..!!! ஸ்ரீ ராம ஜெயம்..!!!! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽"
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
பார் சிறிக்கு துணை தூதரை மட்டும்தான் சந்திக்க முடியும் போல😂. கூட ஒரு எம்பியிம் போகவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியாவின் தோல்வி இலங்கை வீரர்களுக்கு சிறு நெருக்கடி...............இலங்கை சூப்பர்8க்கு போவில் சிம்பாவேய வெல்லனும்...............அவுஸ்ரேலியாவிடமும் தோத்து சிம்பாவியிடமும் இலங்கை தோத்தால் அவுஸ்ரேயா மற்றும் சிம்பாவே சூப்பர் 8க்கு போவினம்..................பாப்போம் போட்டி முடிவில்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே அணிக்கு வாழ்த்துக்கள் பாக்கிஸ்தானில் படு தோல்வி அடைஞ்ச்சும் அவுஸ்ரேலியா வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வில்லை உலக கோப்பையிலும்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......! அருமையான பீல்டிங் ........! முன்கூட்டியே கணித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் . ......!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
reotdpnSos9087 :amcctut21ir3u5ggf9uhff1ti aff12,1rv5iémhe6t7 · #ஊசி கீழே விழும் சத்தம் கேட்குமா கேட்க்காதா...? 1) #ஃபீல்ட்_மார்ஷல் மானக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்.. நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன், மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட்டிடம், மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ், பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி, ஏன்... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். "இப்போது தான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று நக்கலாக கேட்டார் அதிகாரி. "இல்லை முன்பு வந்திருக்கிறேன்..." "அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு..." "நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..." "சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." உறுமினார் அதிகாரி. சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை பார்த்தவாறே, அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது, என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: "நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், நேரு பேச அனுமதி அளித்தார். "சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: "முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?" "இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..." இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு.. ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
RESULT ZIM 169/2 AUS (19.3/20 ov, T:170) 146/10 Zimbabwe won by 23 runs- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏனைய யாழ்கள கிரிகெட் ஜாம்பவான்கள்: முடிச்சு விட்டீங்க போங்க 😂- இனித்திடும் இனிய தமிழே....!
Chandra Krishnan poedrstonS8363hmtfi8auc01h8c1cf1lm641hal 053u26081t700l6l3ig · தமிழ் எழுத்து சீர்திருத்தம் அரசு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் அப்போது முதல்வர் MGR இந்த மாற்றங்கள் முதலில் முன்வைத்தவர்: பெரியார் தமிழ் எழுத்து எளிமைப்படுத்த வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே வலியுறுத்தினார். #பெரியார் #வரலாறு #தமிழ் #அரசியல்- இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
எவ்வளவு பெரிய பெயரோடும் புகழோடும் இருந்த மனுஷன் ........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......! அவுஸ் = 69/4=10.3 --- 🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம்
யாழ்.மாநகர சபையில் கடும் அமளி - வெளியேறிய ஈ.பி.டிபி வெள்ளி, 13 பெப்ரவரி 2026 07:20 AM ஆசிரியர் - Editor II பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும். வெளிநடப்புச் செய்தனர். யாழ் மாநகரின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிராரணையை எதிர்த்து யாழ் மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகர சபை முன்பாக போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர். இவ்விடயம் குறித்து இன்றைய சபை அமர்வில் கருத்தை முன்வைத்து, உரிய பொறிமுறையின்றி கொண்டுவரப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் உரிய பொறிமுறை வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்வை உடன் வழங்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி யினர் வலியுறுத்தினர். ஆனால் முதல்வர் அவ்விடையத்தை அலட்சியப்போக்குடன் கையாண்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபையை முன்னெடுத்தமையால் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை கிழித்தெறிந்து சபையை விட்டு வெளியேறினர். https://jaffnazone.com/news/54947- இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.! Vhg பிப்ரவரி 13, 2026 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2026/02/blog-post_87.html- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
22 பேருக்கு முட்டைக் கோப்பியும் நிலாமதி அக்காவிற்கு 2 புள்ளியும் கிடைக்கப் போகிறதா?! Live 19th Match, Group B, Colombo (RPS), February 13, 2026, ICC Men's T20 World Cup Zimbabwe 169/2 Australia (8/20 ov, T:170) 51/4 Australia need 119 runs in 72 balls. Current RR: 6.37 • Required RR: 9.91 • Last 5 ov (RR): 27/2 (5.40) Win Probability AUS 25.46% ZIM 74.54%- இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு 13 Feb, 2026 | 12:24 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியொருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இம்ரான் கானின் நிலை தொடர்பாக அறிவதற்காக உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார், கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை சிறையில் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியதாகவும் இம்ரான் கானின் தடுப்புக்காவல் கள நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையினை மறுநாள் புதன்கிழமை (11) நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே இருப்பதாகவும் அவரது வலது கண்ணில் நரம்பு அடைப்பு எற்பட்டிருப்பதாகவும் பெப்ரவரி 6 என திகதியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாகவே பார்வை மங்கத் தொடங்கியதாகவும் அவரது பார்வைக் குறைபாட்டு பிரச்சினையை சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் இம்ரான் கானுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளிக்காததே அவரது பார்வைக் குறைபாட்டுக்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உடலளவில் அவர் பெரிதளவு பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வானது, சட்டத்தரணியின் அறிக்கையை ஆய்வு செய்ததையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சிறப்பு மருத்துவக் குழுவை நியமித்து, இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும் அவர் தனது குடும்ப மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் அடியாலா சிறை நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238553- வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை 13 Feb, 2026 | 11:50 AM வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார். https://www.virakesari.lk/article/238548- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்கு அதுதானோ. 😜- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ குழு புள்ளிகள் நிலையில் முதலிடம் Published By: Vishnu 12 Feb, 2026 | 11:28 PM (நெவில் அன்தனி) டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நமிபியாவை 93 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிககளைப் பெற்றுள்ள இந்தியா, ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பாக துடுப்பாட்ட வரிசையில் முதல் 6 வீரர்களில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வைத் தவிர மற்றைய ஐவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட 25 ஓட்டங்களில் 22 ஓட்டங்களை சஞ்சு செம்சன் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார். இஷான் கிஷான் 2ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 31 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். திலக் வர்மா 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 205 ஓட்டங்களாக உயர்த்தினர். ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், அவர்கள் இருவர் உட்பட ஐவர் 5 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சர்வதேச அனுபவமற்ற அவர்களால் அவற்றை கணிசமான எண்ணிக்கைகளாக மாற்றமுடியாமல் போனது. லூரென் ஸ்டீன்கேம்ப் (29), ஜனர் ஃப்ரைலின்க் (22), ஜான் நிக்கோல் லொஃப்டி - ஈட்டன் (13), ஜேர்ஹாட் இரேஸ்மஸ் (18), ஸேன் க்றீன் (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஹார்திக் பாண்டியா https://www.virakesari.lk/article/238521- வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!
வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்! Published By: Digital Desk 1 13 Feb, 2026 | 10:14 AM மட்டக்களப்பு - வாழைச்சேனை நகரில், இன்று வியாழக்கிழமை (13) காலை இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மற்றையவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238536 - அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.