Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி adminMarch 28, 2026 தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231152/
  3. தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு! வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம்வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்ததுதான் இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் படும் துன்பத்திற்கு காரணமென சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை அச்சப்படுத்துகின்றார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தேசிய பூங்கா தொடர்பில் மக்களுடன் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது குறித்த கருத்தரங்கில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அபிவிருத்தி எங்களுக்கு வேண்டும் தேசிய பூங்கா கட்டாயம் எங்களுக்கு தேவை என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் அப்போது அந்தக் கருத்தரங்கில் இருந்த நான் உட்பட ஒரு சிலர் சுமந்திரனின் கருத்தை கடுமையாக எதிர்த்தோம் தேசிய பூங்காக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்பதனை கூறும்போது சுமந்திரன் அவர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை இன்று யானைகளை கொண்டுவந்து எமது பகுதிக்குள் விட்டு தேசிய பூங்காவென கூறி எமது மக்களை தமது காணிகளை விட்டு விரட்டியடிக்க பார்க்கின்றார்கள்.அன்று தமிழ் அரசுக் கட்சி இதனை எதிர்த்திருந்தால் இன்று இந்த நிலை மக்களுக்கு வந்திருக்காது அப்போதைய காலத்தில் இந்த வர்த்தமானியை நீக்குவதாக கூறினார்கள் அவர்களிடம் பெரும்பாண்மை இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கின்றது. தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியை அவர்களால் நீக்க முடியும் பெரும்பான்மையை கொண்டு நீக்குவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் https://athavannews.com/2026/1470248
  4. போன வாரம் ஈரானுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது என்று... தம்பர் சொன்னார். அவ்வளவும் பொய்யா.. கோபால்.
  5. அமெரிக்காவும், இஸ்ரேலும்... லண்டனில் குண்டு போட்டுவிட்டு, ஈரானில்.. பழி போடப் போகிறார்கள் போலுள்ளது. இவங்கள... அப்பிடி செய்யக் கூடிய ஆட்கள். லண்டன் உறவுகள்... பஞ்சியை பார்க்காமல், இப்பவே "பங்கர்" வெட்டி வைப்பது நல்லது.
  6. ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.- ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff )தெரிவித்துள்ளார். அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ‘எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,’ என்று தெரிவித்தார். ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff ) உறுதிப்படுத்தினார். ‘கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்’ என்று அவர் மேலும் கூறினார். ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும்,, வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார் ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470260
  7. லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா. ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை. இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை கூறியதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து லண்டன் 4, 000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3, 300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார். இதனால்,ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப், பிரித்தானிய போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்றார். https://athavannews.com/2026/1470257
  8. தமிழ் நாட்டில் உள்ள... மணல் கொள்ளைக்காரர்களின், செயலை... யாழ்ப்பாணத்திலும் செய்கின்றார்கள். சிலகாலத்துக்கு முன்பும் மணல் லாரிகளால் சிலர் கொல்லப்பட்டு இருந்தார்கள். மணல் மாஃபியாக்களின் செயலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல், போதைக் கும்பல் மாதிரி... பலம் பெற்று விடுவார்கள்.
  9. முஸ்லிம் மதம் சொல்லிவிட்டது என்பதால் முஸ்லிம்கள் யூத வெறுப்பைகடமையாக கடைபிடிக்கின்றார்கள். பின்பு ஹிட்லரின் யூத வெறுப்பு படுகொலைகள் இப்போது மேற்குலகில் உள்ள ஈழ தமிழர்கள் சிலர் யூத வெறுப்பிலா 🙄 முஸ்லிம் மத ஈரான் அமைப்பின் அம்புலன்ஸ் எரிப்பு மனித விரோத குற்ற செயல் .
  10. Today
  11. புரிகிறது தம்பி. சகலவிதமா கருத்துக்களையும் பகிரத்தான் வேண்டும். இதுவும் உண்மையாக இருக்கலாம். குற்ற விசாரணை முடியட்டும்.
  12. யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு Mar 28, 2026 - 11:01 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9w5z35000a356pv48tkfkz
  13. திருநங்கைகளுக்கு LA28 ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை; பெண்கள் பாதுகாப்பு குறித்த கொள்கையை IOC அறிவித்தது 27 Mar, 2026 | 01:24 PM (நெவில் அன்தனி) ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெணகள் (மகளிர்) பிரிவின் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கான வழிகாட்டி கரிசனைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கைக்கு அமைய லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அதற்கு பின்னரான விளையாட்டு விழாக்களிலும் திருநங்கைகளுக்கு பங்குபற்ற தடை விதிக்கப்படவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் இந்தக் கொள்கைக்கு வியாழனன்று (26) ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அது நடைமுறைக்கு வருவதுடன் முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்றி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்ற பின்னர், தனது முதலாவது மிக முக்கிய மற்றும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முடிவாக 'பெண்கள் பிரிவின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான இந்தக் கொள்கையை வெளியிட்டார். இதற்கு அமைய பாலின வளர்ச்சி குறைபாடுகள் (SRY) உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும். தனிப்பட்ட மற்றும் குழுநிலை போட்டி நிகழ்ச்சிகள் உட்பட ஒலிம்பிக் விளையாட்டு விழாக்கள் அல்லது வெறு எந்த சரவ்தேச ஒலிம்பிக் குழு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் பிரிவுகளில் பாலினத்தை உறுதிசெய்யும் மரபணு (SRY) பரிசோதனையின் மூலம் உயிரியல் ரீதியாக பெண்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பங்குபற்ற முடியும் என இந்தக் கொள்கை விளக்குகிறது. சான்றுகளின் அடிப்படையிலும் நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரிலும் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை லொஸ் ஏஞ்சலிஸ் (LA28) ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அமுலுக்கு வரும். இது மகளிர் பிரிவில் நியாயம், பாதுகாப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை நிலைநிறுத்துகிறது. இது முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது என்பதுடன் எந்தவொரு அடிமட்ட அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுத் திட்டங்களுக்கு இது பொருந்தாது. 'இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் உயிரியல் ரீதியாக ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது,' என உலக விளையாட்டின் உயர் பதவியை வகிக்கும் முதலாவது ஆபிரிக்கரும் பெண் தலைவருமான கிறிஸ்டி கொவென்ட்றி, வியாழக்கிழமை ஒரு காணொளிச் செய்தியில் கூறினார். அந்த செய்தியில், 'இனிமேல் பெண்கள் பிரிவில் போட்டியிட விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களும், அவர்களின் சரியான உயிரியல் பாலினத்தைத் தீர்மானிப்பதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் பாலின நிர்ணயப் பகுதி மரபணுப் பரிசோதனைக்கு ( Sex Determining Region Y) உட்படுத்தப்படுவார்கள் என அவர் விளக்கினார். 'ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் மிகச் சிறிய வித்தியாசங்கள் கூட வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வேறுபாடாக அமையலாம். எனவே, அது நியாயமானதாக இருக்காது என்பது முற்றிலும் தெளிவாகிறது. மேலும், சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பானதாக இருக்காது' என நிறைவேற்றுச் சபை கூட்டத்திற்குப் பின்னர் கோவென்ட்றி விளக்கினார். அதேவேளை, தனிநபர் அல்லது குழுநிலை விளையாட்டுக்கள் உட்பட ஒலிம்பிக்கிலோ அல்லது வேறு எந்த பெண் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறுவது, இனி உயிரியல் ரீதியாகப் பெண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது. 'ஒரு முன்னாள் தடகள வீராங்கனையாக, நியாயமான முறையில் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து ஒலிம்பிக் வீரர்களின் உரிமைகளையும் நான் உணர்வுபூர்மாக நம்புகிறேன். நாங்கள் அறிவித்துள்ள இந்தக் கொள்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் மருத்துவ நிபுணர்களின் தலைமையிலும் வழிகாட்டல்களிலும் தயாரிக்கபட்டுள்ளது' என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றி மேலும் தெளிவுபடுத்தினார். 'ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த செயல்முறை தொடர்பாக நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையுடன் தெளிவான கல்வி மற்றும் அறிவுரைகள் கிடைக்க வேண்டும்.' கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களின் உரிமைகளை மீறுவதாகக் கருதியதால், கட்டாயப் பாலினப் பரிசோதனையை நீண்ட காலமாக எதிர்த்து வந்த சர்வதேச ஒலிம்பிக் குழு, இப்போது இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புதிய கொள்கையை பெண் தலைமையில் துணிந்து வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242076
  14. இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது Mar 28, 2026 - 08:46 AM இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று (27) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த விடுதி ஒன்றில் வைத்து சந்தேகநபர்களுடன் பெருமளவிலான கணினிகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2026.04.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmn9rd93h0005356p2uq6zsd2
  15. அண்ணை, பாதிக்கப்பட்ட தரப்புடன் இருப்பது தான் அறம் என கூறுகிறார்கள். வேறொரு கோணத்திலும் சம்பவத்தை நோக்கியதால் இதனை பகிர்ந்தேன்.
  16. ஒரு இனம் இப்படித்தான் என முன் முடிவு செய்து அதன் படி கருத்து நிலை எடுப்பது…பச்சை இனவாதம். இப்படி ஒரு போலிக்கொடி நடவடிக்கை நடந்தது என்பதற்கு இனவாத மனங்களில் ஏற்பட்ட ஊகங்களை தவிர வேறு ஆதாரம் ஏதும் இதுவரை இல்லை. இரெண்டு பேரை பிடித்து விசாரித்து பிணையில் விட்டுள்ளது பொலிஸ். விசாரணை முடிவுக்கு பொறுத்திருப்போம். இயல்பில் எழுந்த, புகட்டப்பட்ட யூத வெறுப்பில் நாமாக முடிவுகளை எடுக்காமல்.
  17. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது : கப்பல்கள் மீது ‘கடுமையான நடவடிக்கை’ – ஈரான் எச்சரிக்கை 27 Mar, 2026 | 05:29 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (Islamic Revolutionary Guard Corps -IRGC) ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக அறிவித்து, அந்தப் பகுதியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது “கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அரசின் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணியை ஆதரிக்கும் நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தக் கப்பல்களும் இந்நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கை ஏற்றுச் செல்லும் முக்கிய கடற்பாதையாகும். இந்த நீரிணை மூடப்பட்டதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று கொள்கலன் கப்பல்கள் எச்சரிக்கையினால் திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மேலும் 10,000 அமெரிக்கப் படைகளை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படைகள் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) அருகே நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என அமெரிக்கா ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலும், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததன்படி, அமெரிக்காவும் ஈரானும் இடைமுக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, போரினை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தை ஈரான் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பொருளாதாரம், குறிப்பாக எரிசக்தி சந்தை மற்றும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், மத்திய கிழக்கில் பெரிய அளவிலான இராணுவ மோதலாக மாறும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/242113
  18. அவரவர் உடை என்ன என அவரவர் தீர்மானிப்பதே ஆடை சுதந்திரம். ஆம் சொந்த வாழ்வில் எப்போதும் அப்படித்தான்.
  19. நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு 27 Mar, 2026 | 03:01 PM நேபாளத்தின் 47வது பிரதமராக பாலேந்திர ஷா இன்று வெள்ளிக்கிழமை (27) பதவியேற்றார். அந்நாட்டின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ள இவர், முன்னாள் மேயரும் ராப் பாடகரும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய முக்கியஸ்தரும் ஆவார். நேபாளத்தில் புதிய அரசினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி 275 இடங்களில் 182 இடங்களை கைப்பற்றி பெருவாரியான வெற்றி பெற்றது. ஜாபா 5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகமாக பெற்றார். பாலேந்திர ஷா 1990இல் காத்மண்டுவில் பிறந்தார். அவர் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் கட்டமைப்பு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242087
  20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. பாரைக் கருவாடுதான் வாங்கவே இல்லை. நீங்கள் வேறை.😃
  21. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல் Mar 28, 2026 - 06:53 AM மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://adaderanatamil.lk/news/cmn9nb4dg0002356ppsya4mhe
  22. வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் Published By: Vishnu 27 Mar, 2026 | 10:36 PM பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள், ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள், அரசியல் நாகரீகத்தை பேணவும் போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242125
  23. இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும். 2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. யாழ் மக்களும் சுயநலவாதிகளா? எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்
  24. முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு Mar 27, 2026 - 11:55 PM நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்கள் 91.03 சதவிகிதமாகவும் உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்கள் 75.14 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் 72.25 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 92.47 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 76.45 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 80.17 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொலன்னறுவையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 86.55 சதவீதமும், புத்தளத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் 55.98 சதவீதமும் நீரின் கொள்ளளவு உள்ளது. திருகோணமலையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களில் 95.62 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 59.97 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. https://adaderanatamil.lk/news/cmn98es4v0007356po4c1a4vf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.