Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. 19 Mar, 2026 | 04:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்) யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதது என இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஜீ.சிறிநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இப்போது அந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முற்போக்கான சிந்தனையில் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார். யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு : வடக்கில் மீண்டும் அச்சம் – சிறிநேசன் தெரிவிப்பு | Virakesari.lk
  3. யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - பல்கலை முன் மாணவர்கள் போராட்டம் 19 Mar, 2026 | 01:39 PM சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10ஆம் திகதி , பொலிஸ் வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து , துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் , துணைவேந்தர் , பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்றவருக்கு எதிராக மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பதிவாளர் ஊடாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர். குறித்த விசாரணைக்கு மாணவர்கள் அன்றைய தினம் செல்லாத நிலையில் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புக்கு அமைய , பல்கலைக்கழக மட்டத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , எமது தரப்பு நியாயங்களை தெளிவாக விசாரணை குழு முன் தெரியப்படுத்தியுள்ளோம். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிறிதொரு தரப்பினராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு எம்மை விசாரணைக்கு அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். எனவே குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அலைக்கும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வியாழக்கிழமை விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம். விசாரணைகளை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்து , மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என மாணவர்கள் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/241357
  4. 19 Mar, 2026 | 04:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் சத்தியப்பிரமாணம் அவரது வழக்கறிஞர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏயார் பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிதிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கபில சந்திரசேனவை ஏப்ரல் 2 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ஏயார்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமெரிக்க டொலர் 2 மில்லியன் இலஞ்சம் கோரல் மற்றும் பெற்றுக்கொண்டதாக அவர் முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் | Virakesari.lk
  5. 19 Mar, 2026 | 05:05 PM வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது. வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் 91 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த முன்மொழிவின் நோக்கம் வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் வகையில் அமைக்கபடுவதால் சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம் | Virakesari.lk
  6. கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையதத்தையும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 100 வருட குத்தகையில் விடலாம். அவர்கள் அந்த நிலத்தில் மாடிவீடுகள், வர்தக நிலையங்கள் அமைக்கலாம். ரயில் நிலையம், மேடைகள் புனரமைக்கப்பட்டு அரசிடம் கொடுக்க வேண்டும். வருடாவருடம் குறித்த அளவு நில வாடகையும் அரசுக்கு செலுத்த வேண்டும். ஐடியா இல்லாத பசங்க.
  7. “ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரான் மீது போரைத் தொடங்கியது என்று அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜோ கென்ட், தனது ராஜினாமா கடிதத்தில் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதிபர் ட்ரம்ப், மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் விலகுகிறேன். ஈரானில் நடக்கும் இந்தப் போரை எனது மனசாட்சியின்படி என்னால் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளியுறவுக் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஜூன் 2025 வரை, மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் அமெரிக்க வீரர்களின் உயிரையும் செல்வத்தையும் வீணடிக்கும் ஒரு வலை என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். உங்கள் முதல் ஆட்சியில், ஒரு முடிவில்லாத போருக்குள் சிக்காமல் ராணுவ பலத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் சிறந்த அதிபராக இருந்தீர்கள். ஆனால், இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் அமெரிக்க ஊடகங்களும் சேர்ந்து ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்பவைத்து, போருக்குத் தூண்டினர். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தி நம்மை ஏமாற்றியுள்ளனர். போர்க்களத்திற்கு 11 முறை சென்ற ஒரு வீரனாகவும், இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போரில் தனது மனைவியைத் தொலைத்தவனாகவும், அமெரிக்க மக்களுக்குப் பயன் தராத இந்தப் போருக்கு அடுத்த தலைமுறையை அனுப்ப என்னால் முடியாது. ஈரானில் நாம் யாருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தத் தவறான பாதையை இப்போதே மாற்றி நாட்டைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடியும். உங்கள் ஆட்சியில் பணியாற்றியதை கவுரமாக கருதுகிறேன்” இவ்வாறு ஜோசப் கென்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரே போரின் நியாயத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா
  8. 19 Mar, 2026 | 05:26 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk
  9. ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 03:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்களைத் தணித்து, பிராந்திய போர் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்காக ஜீ -7 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு இராஜதந்திர முயற்சியை கனடா முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒரு “கொள்கை ஆவணத்தை” (Document of Principles) தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆவணம், பிராந்தியத்தில் போர் பரவுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர் (Yvette Cooper) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் பேசிய அனிதா ஆனந்த், பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த ஜீ -7 கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அதில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அனிதா ஆனந்த், “மத்திய சக்திகள் (Middle Powers)” ஒன்றிணைந்து செயல்பட்டால் உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரான் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற உறுதியை கோரினாலும், தற்போதைய சூழலில் அத்தகைய உத்தரவாதம் வழங்குவது சிக்கலானதாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியமான சவால்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/241376
  10. நாதகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம் பிடிக்கும் உச்சபட்ச முட்டாள்தனமான கொள்கை. முன்பே பலமுறை இதை யாழில் கிழித்து தொங்கவிட்டாகிற்று. இதைவிட புதியதொரு நகரை தலைநகராக தமிழ் நாட்டின் மத்தியில் நிர்ணயிக்கலாம். புதிய சூழலியல், கட்டுமான வசதிகளோடு.
  11. நல்ல கொள்கை. சீமான் தனது சாதி வாக்குகளை கவர உள்ளீர்கப்பட்ட திட்டம். இது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும் அளவு பெரிய விடயம் இல்லை. இது மிகவும் வலதுசாரி தனமான, இடைத்தரகர்களுக்கு இலாபம் கொடுக்கும், முதலாளிதுவ கொள்கை. நிர்ணயிக்க பட்ட குறைந்த விலை இல்லாமல் போகும் போது, நிரம்பல் கூடிய பொருட்கள், உற்பத்தி செலவுக்கும் கீழே விற்கும் நிலைக்கு விவசாயிகள் உள்ளாவர்.
  12. ஏலவே சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைவதாக முடிவாகி விட்டது. முன்னர் ஒரு முறை நான் நாஜிகளோடு நாதக வை ஒப்பீடு செய்தபோது பலர் எதிர்த்தனர். இப்போ அதே வழியில் வருகிறார் சீமான். இதை ஆங்கிலத்தில் benevolent dictatorship என்பார்கள். ஆனால் அன்பானதோ, இல்லையோ சர்வாதிகார ஆட்சியை ஒரு மாநிலத்தில் ஒரு நாள் கூட அனுமதிக்காது இந்திய மத்திய அரசு/ நீதிமன்று. இரெண்டுமே தமிழக அரசால் செய்ய கூடியன அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவின் மக்கள் பிரதிநிதிதுவ சட்டத்தினை மாற்ற வேண்டும். ஒன்றில் மத்திய அரசில் நாதக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது பிஜேபி கூட்டணியில் சேர்ந்து இதை வலியுறுத்த வேண்டும். மேலே சொன்னது போலவே இதுவும். தனியே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியால் இதை செய்ய முடியாது. இன்றுவரை நாதக யார் தமிழர் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. சீமானிடம் நேரடியாக கேட்டபோது கூட பதில் இல்லை. எனவே இதுவும் செயல்படல்டுத்த முடியாத கற்பனை கோஷம்.
  13. ஊரான் துறையில உள்பாவாடை காணாமல் போனாலும் சுமந்திரனே பொறுப்பு😂
  14. ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதல் மேற்கொண்டதால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி இப்போது இந்திய தேசத்தின் சமையலறையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகுகளுக்கு மாறியுள்ளன. இந்த நிலை தற்போது சீரடையத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில் புதுச்சேரிக்கு அருகே தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரில் சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் கிச்சன்’ இயங்கி வருகிறது. இதன் செயல்பாடு குறித்து பார்ப்போம். நவீன வடிவிலான சோலார் பேனல்கள் இல்லாமல் ‘சோலார் Bowl’ மூலம் சூரிய ஒளி மூலம் நீரினை வெப்பமடைய செய்து, அதைக் கொண்டு இந்த சோலார் கிச்சனில் சுமார் 80 சதவீத உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் செயல்பாடு குறித்து சோலார் கிச்சனில் பணியாற்றி வரும் ரஜினிகாந்த் விவரித்தார். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோவில் நகரில் சோலார் கிச்சன் நிறுவப்பட்டது. ஆரோவில் நகரில் வசிக்கும் சமூக மக்கள் மற்றும் ஆரோவில் அறக்கட்டளையும் இணைந்து இதனை நிறுவினர். இதன் நிர்வாகத்தை ஆரோவில் அறக்கட்டளை கவனித்து வருகிறது. இங்கு இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை கொண்டு இந்த சமையலறையை இயக்க செய்ய வேண்டுமென்ற முடிவில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. இந்த சோலார் கிச்சனில் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள அமைக்கப்பட்டுள்ள சோலார் Bowl தான். இதில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் சூரிய ஒளி படர்ந்து மேற்புறம் உள்ள ரிப்ளக்டரில் விழும். அந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிப்ளக்டர் வெப்பமடைந்து அதனோடு இணைக்கப்பட்டுள்ள குழாய் வெப்பமடையும். அந்த வெப்பம் உணவகத்தின் கீழ் பக்கம் உள்ள கொதிப்பானுக்கு கடத்தப்படும். அதன் மூலம் அதில் உள்ள நீர் வெப்பமாகும். அதை கொண்டு நாங்கள் இந்த உணவகத்துக்கு தேவையான 80 சதவீத உணவுகளை தயாரிக்கிறோம். இதர சமையல் பணிகளுக்கு விறகுகளை பயன்படுத்துகிறோம். இதன் பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனால் சீரான இடைவெளியில் அதற்கான பணிகளை மேற்கொள்வோம். அதனால் எங்கள் உணவகத்தில் காஸ் சிலிண்டர் தேவை என்பது இல்லை. முழுவதும் ஆரோவில்லில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு இங்கு உணவு தயார் செய்கிறோம். மதியம் மற்றும் மாலை உணவு இங்கு கிடைக்கும். இது ஆரோவில் சமூக மக்களுக்கான உணவுக்கூடம். வெளிநபர்கள் இங்கு வந்து உணவு சாப்பிட முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கிறோம். இதில் சரிபாதிக்கும் மேலான உணவு இங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவகமாக உள்ளது. இதோடு ஆரோவில் நகரில் உள்ள மூத்த குடிமக்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கேற்ற பிரத்யேக உணவுகளும் (டயட்) தயாரிக்கப்படுகிறது. இந்த உணவகம் மூலம் ஆரோவில்லை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் மக்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவினாலும் எங்களுக்கு அதனால் பாதிப்பில்லை” என அவர் தெரிவித்தார். சாதம், சாம்பார், வேகவைத்த காய்கறிகள், இட்லி, சாலட், பாஸ்தா உள்ளிட்ட உணவுகள் சோலார் கிச்சனின் மெனுவில் இடம்பெற்றுள்ளது. முழுவதும் சைவ உணவு மட்டுமே இந்த சோலார் கிச்சனில் தயாரிக்கப்படுகிறது. ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட்
  15. 5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள் சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026 சென்னை: அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்: தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்: சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும். தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்: தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும். பெண்களுக்குத் தனித்தொகுதி: உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும். மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது. இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது. எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம். தமிழர்களுக்கு முன்னுரிமை: தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும். தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை: தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை: தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும். மணல் கொள்ளைத் தடுப்பு: அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும். பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம். வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்: குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும். ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி: ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்
  16. Today
  17. ‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’ யுவேந்திர சாஹல் ஆர்.முத்துக்குமார் Updated on: 19 Mar 2026, 11:45 am 1 min read இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் தன் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், குடிபோதை அவதி போன்றவை பற்றி மனம் திறந்துள்ளார். மதுபான பழக்கத்தை முழுமையாக கைவிட்டது தனது உடல் மற்றும் மனநிலைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். 2023 முதல் ஐபிஎல் தொடரில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான பவுலராகத் திகழ்கிறார் யுவேந்திர சாஹல். 2005 ஆஷஸ் தொடரை இழந்த பிறகு கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் ‘ஆல்கஹால் எனக்குப் பெரிய பிரச்சனை தான்’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அது போன்ற ஒரு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் மனநிலை துணைக்கண்டத்தின் வீரர்களுக்குக் கிடையாது, இப்பகுதி சமூகம், கலாச்சாரம் அத்தகைய ஏற்புடைமை கொண்டதல்ல. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், இறுதிப்போட்டியில் பட்டத்தை வெல்ல முடியாதது இன்னும் மனதில் ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மன வருத்தத்தை அளிக்கிறது என்றார். அந்த இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்சென் இல்லாதது அணிக்கு பெரிய பாதிப்பாக இருந்ததாக சாஹல் கூறினார். “அவர் இருந்திருந்தால், முடிவை மாற்றியிருக்க முடியும்” என்ற நம்பிக்கையையும் யான்சென் வெளிப்படுத்தினார் என்கிறார் சாஹல். மேலும் தொடரின் முக்கியக் கட்டத்தில் தான் காயமடைந்ததும் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்றார். மேலும், 35 வயதில் தனது உடல்நலத்திற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் மதுபானத்தை 6 மாதங்களாக கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “சிறந்த உடல்நிலை மற்றும் கட்டுப்பாடு இருந்தால் தான் அணிக்கு 150% கொடுக்க முடியும்” என்றார். ஏ.பி.டிவில்லியர்ஸ் யூடியூப் சேனலில் சாஹல், கூறியதாவது, “அந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் யான்சென் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையைத் தூக்கியிருப்போம். அந்தத் தொடர் முழுதுமே யான்சென் அற்புதமாக வீசினார். பேட்டிங்கிலும் கடைசியில் இறங்கி 2-3 சிக்சர்களை அவர் அடிக்கக் கூடியவர். வரும் ஐபிஎல்-ல் அவர் சக்தியாகத் திகழ்வார், இப்போது இன்னும் பிரமாதமாக வீசுகிறார். கேகேஆர் மேட்சுக்குப் பிறகு நான் காயமடைந்தது எனக்கே ஏமாற்றமளித்தது. அரைஇறுதி, இறுதிப் போட்டிகளில் என்னால் லெக்ஸ்பின் வீச முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நன் என் உடல் நிலை மீது அக்கறை செலுத்த முடிவெடுத்தேன். உங்களுக்கு ஒரு நற்செய்தியும் கூறுகிறேன். நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டேன். 6 மாதமாகிறது. இப்போது எனக்கு வயது 35, நான் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க விரும்புகிறேன்.” என்றார். ‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’
  18. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன? 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
  19. வளைகுடா நாடுகளில் ஈரான் தீவிரத் தாக்குதல் ; பற்றி எரியும் எரிவாயு நிலையங்கள் Published By: Digital Desk 1 19 Mar, 2026 | 03:58 PM மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் இன்று தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கத்தாரின் முக்கிய எல்.என்.ஜி முனையங்கள் தீப்பிடித்து எரிந்தன. ஏற்கனவே நடந்த தாக்குதல்களால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய ஏவுகணை வீச்சினால் அந்தத் தளம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் முடிந்த பிறகும்கூட, சர்வதேச சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் இந்தச் சேதங்கள் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஹப்ஷன் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எண்ணெய் வயல் ஆகியவற்றின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் இந்த இரவு நேரத் தாக்குதலை ஆபத்தான போர் விரிவாக்கம் என்று அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அருகாமையில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததோடு, கத்தார் அருகே மற்றொரு கப்பலும் சேதமடைந்தது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' ஈரானின் பிடியில் உள்ளதால், அந்தப் பாதையில் செல்லும் கப்பல்களுக்குத் தொடர் ஆபத்து நிலவி வருகிறது. தற்போது அந்த வழித்தடம் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெப்ரவரி 28அம் திகதி ஆரம்பித்த இந்தப் போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் குறிவைக்கப்படுவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. https://www.virakesari.lk/article/241374
  20. 'வெறும் வேடிக்கைக்காக' தாக்குதல் நடத்தக் கூடிய சூழலில் புதிய உலக ஒழுங்கு - இரான் போர் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அமீர் அசிமி பிபிசி நியூஸ் பெர்சியன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்த விதிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருவதாகத் தோன்றும், ஒரு வளர்ந்து வரும் உலக ஒழுங்கின் கீழ் நடந்த முதல் பெரிய மோதல்களில் ஒன்றாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் கருதப்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து நீண்ட காலத்திற்கு, போரும் ராஜதந்திரமும் முறையாக சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் மற்றும் பிற உடன்படிக்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் செயல்பட்டன. அந்த விதிகள் வளைக்கப்பட்ட போதோ அல்லது அவர்களுக்கு விருப்பமான வகையில் புரிந்துகொள்ளப்பட்டபோதோ கூட, அரசுகள் பொதுவாக தங்கள் செயல்களை அந்த அமைப்புக்கு உட்பட்டு நியாயப்படுத்த முயன்றன. ராணுவ நடவடிக்கைகள் பொதுவாக சட்ட ரீதியான வாதங்கள், ராஜீய ஆலோசனைகள் அல்லது சர்வதேச கூட்டணிகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்தே இருந்தன. தற்போதைய போரில், அந்த பரிசீலனைகள் மிகவும் குறைந்த அளவிலான பங்கையே வகிப்பதாகத் தெரிகிறது. உத்திரீதியான முடிவுகள் சர்வதேச சட்டக் கட்டமைப்புகள் அல்லது பலதரப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்டு இருப்பதை விட, பெரும்பாலும் உடனடி ராணுவ மற்றும் அரசியல் அல்லது பாதுகாப்பு கணக்கீடுகளால் இயக்கப்படுவதாகத் தெரிகிறது. இரான் நாட்டைப் பொறுத்தவரை, இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் செயல்படுவது முற்றிலும் புதியதல்ல. பல தசாப்தங்களாக, அந்த நாடு விரிவான சர்வதேச தடைகள் மற்றும் அரசியல் தனிமைப்படுத்தலின் கீழ் வாழ்ந்து வருகிறது. காலப்போக்கில், அந்தத் தீர்மானங்களை (பலதரப்பு அல்லது ஒருதலைப்பட்சமானவை) தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பின்னல்கள் மற்றும் பொருளாதார வழிமுறைகளை அது உருவாக்கியுள்ளது. உலகில் மிகவும் விரிவான தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், இரான் தொடர்ந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து வருவதுடன் பிராந்திய செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த மூலோபாய கலாச்சாரத்துக்குள், மோதல் அதிகரிப்பு பெரும்பாலும் அளவிடப்பட்டே இருந்தது. கடந்தகால நெருக்கடிகளில் இரான் அளித்த பதில்கள் பொதுவாக ஒரு பரந்த பிராந்திய போரைத் தூண்டாமல், தனது எதிரிகளுக்கு மோதலுக்கான விலையை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. வெளி சக்திகள் பதற்றத்தைக் குறைக்க அழுத்தம் கொடுக்கும் வரை, எதிரிகள் மீது பொருளாதார அல்லது அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதே இதன் பரந்த நோக்கமாக இருந்து வந்தது. படக்குறிப்பு,ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம். சர்வதேச உடன்படிக்கைகள் உடனடியாகச் செயல்பாட்டு எல்லைகளாக மாற வேண்டிய அவசியமில்லாத ஒரு சூழலில் செயல்பட இஸ்ரேலும் பழகியுள்ளது. ஒரு கடுமையான அச்சுறுத்தல் உருவாவதாகத் தலைவர்கள் நம்பும்போது, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுப்பதையே இஸ்ரேலிய ராணுவக் கோட்பாடு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது மற்றும் அதீத பலத்தைப் பயன்படுத்துவது ஆகியவை அந்த அணுகுமுறையின் மீண்டும் மீண்டும் நிகழும் கூறுகளாக இருந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், காஸா போர் போன்ற மோதல்களில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச சட்டமன்றங்களில் ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளன. அதே நேரத்தில், குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து வலுவான உத்தி ரீதியான ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், தனது பாதுகாப்பு முன்னுரிமைகள் தீர்க்கமான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து கணக்கிட்டு வருகிறது. இந்த அமைப்புக்குள் அமெரிக்கா ஒரு வித்தியாசமான நிலையில் உள்ளது. வாஷிங்டன் 1945-க்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கில் மற்றொரு பங்கேற்பாளர் மட்டுமல்ல - அதை வடிவமைப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் அது ஒரு முக்கியப் பங்கை வகித்தது. போருக்குப் பிறகு உருவான கூட்டணிகள், நிறுவனங்கள் மற்றும் சட்ட விதிமுறைகளின் வலைப்பின்னல் பெரும்பாலும் உலகளவில் அமெரிக்க செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்கா அந்த அமைப்பை வெளிப்படையாக தவிர்ப்பதற்கு மிக நெருக்கமாக வந்தது 2003-ஆம் ஆண்டு இராக் படையெடுப்பின் போதுதான். அப்போதும் கூட, வாஷிங்டன் அந்தத் தலையீட்டை ஒரு பரந்த கூட்டணி முயற்சியின் ஒரு பகுதியாகக் காட்ட முயன்றது. "விருப்பமுள்ளவர்களின் கூட்டணி" என்று அழைக்கப்பட்ட இதில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற கூட்டாளிகளுடன் பல்வேறு அளவிலான ஆதரவை வழங்கிய டஜன் கணக்கான பிற அரசுகளும் இடம்பெற்றிருந்தன. போருக்கான சட்டபூர்வமான நியாயம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அமெரிக்கா இன்னும் அந்த நடவடிக்கையைப் பலதரப்பு சூழலில் நிலைநிறுத்த முயன்றது. இருப்பினும், தற்போதைய மோதலில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சர்வதேச சட்டபூர்வமான தன்மைக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்படுகிறது. உயர்மட்ட அதிகாரிகளின் அறிக்கைகள் வேறுபட்ட தொனியைப் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, மார்ச் 14 சனிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொடர்ச்சியான தாக்குதல்கள் இரான் நாட்டின் கார்க் தீவின் பெரும்பகுதியை "முற்றிலும் தரைமட்டமாக்கியுள்ளன" என்று கூறினார், மேலும் என்பிசி நியூஸிடம்: "நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்" என்றும் தெரிவித்தார். இத்தகைய கருத்துக்கள், அமெரிக்காவின் பெரிய ராணுவ நடவடிக்கைகளுடன் பாரம்பரியமாகத் தொடரும் ராஜீய ரீதியான கட்டமைப்பை விட நேரடியான அணுகுமுறையை விளக்குகின்றன. இந்த புதிய அணுகுமுறையில், பொருளாதாரக் கருவிகளும் கொள்கையின் கருவிகளாக மிகவும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரிகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் பெருகிய முறையில் எதிரிகளுக்கு மட்டுமல்லாமல், நீண்டகால கூட்டாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன் மற்றும் இதர நேட்டோ கூட்டாளிகள் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள், பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் புலம்பெயர்வு கொள்கை முதல் வர்த்தக நடைமுறைகள் மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் வரையிலான பிரச்னைகளில் வாஷிங்டனிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய கொள்கைகள் குறுகிய காலத்தில் பயனுள்ளதாகத் தோன்றலாம், குறிப்பாக மற்ற நாடுகள் நிறுவப்பட்ட சர்வதேச விதிமுறைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டால். இருப்பினும், நீண்ட கால விளைவுகள் தெளிவாக இல்லை. விதிகளின் அடிப்படையில் அமைந்த அமைப்பின் முதன்மை வடிவமைப்பாளரே அந்த விதிகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், மற்ற அரசுகளும் அவற்றால் கட்டுப்படுத்தப்படுவதை குறைவாகவே உணரக்கூடும். கடந்தகால மோதல்களில் இரான் நடந்துகொண்ட விதம், இத்தகைய எல்லைகள் ஒரு காலத்தில் அதன் தலைமையால் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பதை விளக்குகிறது. 2025 கோடையில் நடந்த 12 நாள் போர் உள்ளிட்ட முந்தைய நெருக்கடிகளின் போது, தெஹ்ரான் ராணுவ ரீதியாகப் பதிலளித்தபோதும் பெரும்பாலும் தனது சொந்த உத்தி ரீதியான சிவப்புக் கோடுகளைக் கடைப்பிடித்தது. அந்த மோதலே வழக்கமான சர்வதேச சட்டக் கட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றதாக இருந்தபோதிலும், இரான் நாட்டின் பதிலடி அளவிடப்பட்டதாகவே இருந்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதித் (Al Udeid) விமான தளத்தின் மீது இரான் ஏவுகணைகளை ஏவியபோது, அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு முறைசாரா எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகத் தெரிந்தது. இதேபோன்ற சமிக்கைகள் முன்னதாக இராக்கில் நடந்த இரானிய தாக்குதல்களின் போதும் கவனிக்கப்பட்டன. கணிசமான சேதத்தைச் சந்தித்த பிறகும், தெஹ்ரானின் பதிலடி ஒரு பரந்த மோதலைத் தவிர்க்கும் வகையில் கவனமாக அளவிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய மோதலில் அந்த கட்டுப்பாடுகள் பலவீனமடைந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் அலைத் தாக்குதல்களில் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரான் அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியது, ராணுவத் தளங்கள் மற்றும் சிவிலியன் இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்தது. அதே நேரத்தில், இரானிய நடவடிக்கைகள் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை சீர்குலைத்தன. இதன் விளைவுகள் உடனடியாகத் தெரிந்தன. எரிசக்தி சந்தைகள் கடுமையாக எதிர்வினையாற்றின மற்றும் குறுகிய நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்தது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியது. சர்வதேச வணிகங்கள் மற்றும் அரசுகளுக்கு ஒரு பிராந்திய மோதலானது, மோதல் அதிகரிப்பு மீதான நீண்டகாலக் கட்டுப்பாடுகள் அரிக்கப்படத் தொடங்கும்போது எவ்வளவு விரைவாக உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை உருவாக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டியது. மற்ற பெரிய வல்லரசுகள் இந்த முன்னேற்றங்களிலிருந்து தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா அதிக எரிசக்தி விலையால் பயனடையக்கூடும், அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி மாஸ்கோ மீதான தடைகளின் அழுத்தம் குறைகிறது. இதற்கிடையில், சர்வதேச விதிமுறைகள் எவ்வளவு தூரம் மாறக்கூடும் மற்றும் எந்த திசைகளில் மாறக்கூடும் என்பதை சீனா ஒருவேளை உன்னிப்பாகக் கவனிக்கும். நிகழ்வுகளின் போக்கில் ஐரோப்பா தற்போது குறைந்த செல்வாக்கையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராஜீய ரீதியிலான முயற்சிகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியவை பெரும்பாலும் முன்னேற்றங்களை வடிவமைப்பதை விட கவனிப்பவர்களாகவே தங்களை காண்கின்றன. எனவே, மத்திய கிழக்கில் நடக்கும் போரால் எழுப்பப்படும் பரந்த கேள்வி ஓர் ஒற்றை மோதலின் முடிவைத் தாண்டியது. இது 1945 முதல் உலகளாவிய உறவுகள் மற்றும் அரசியலை வடிவமைத்த சர்வதேச அமைப்பின் நீடித்த தன்மையைப் பற்றியது. அந்த அமைப்பு ஒருபோதும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அது அதிகாரம் செலுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பை வழங்கியது. அந்தக் கட்டமைப்பு தொடர்ந்து பலவீனமடைந்தால், அதன் விளைவு கணிக்க முடியாத ஒரு சர்வதேச சூழலாக இருக்கலாம், அதில் நாடுகள் பகிரப்பட்ட விதிகளை குறைவாகவும், நேரடித் திறனை (raw capability) அதிகமாகவும் நம்பியிருக்கும். அத்தகைய ஒரு நிலப்பரப்பில், முதலில் அந்த அமைப்பை வடிவமைத்த நாடுகள் கூட அதன் அரிப்பு எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கொண்டிருப்பதை உணரக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v7gq7q1ywo
  21. அடங் கொக்கா மக்கா!! யார்... யார், மேல்... போரைத் தொடுத்தார்கள் என்றே தெரியாமல் தம்பர் குழம்பிப் போயிருக்கிறார்!
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  23. இந்த பைபிள் விநியோகத்தைப் பற்றி…. ஆபிரகாம் சுமந்திரன் தனது திருவாயை திறந்து, கருத்து ஒன்றும் கூறவில்லை என்ற படியால்… சுத்துமாத்து சுமந்திரன் பம்மிக் கொண்டு இருக்கிறதை பார்க்க.... அவருக்கும் உள்ளுக்கு நல்ல விருப்பம் போல் தெரிகிறது. 😂 “மௌனம்… சம்மதத்துக்கு அறிகுறி” 🤣
  24. இரானின் பந்தயம் - அமெரிக்கா படை பல செலவு மாடல் ஐயே ஆயுதமாக்குவது - சரிவருகிறதோ? ஏறத்தாழ, அமெரிக்கா ஓரிரண்டு பாதுகாப்பு பாதீட்டின் 1/5.
  25. இவை இவளவு கொடுமையாக முன்பு இருந்தது. ஆயினும், கிம் சுவிஸில் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு சிலவற்றை சீரமைத்ததாக. அனால், அரசு என்ற அடிபணியில், ஈராக், லிபிய, தற்போது இரான் .. வடகொரியா எடுத்த போக்கு சரி என்றே பெரும்பாலான அரசியல் / இராணுவ ஆய்வாளர் ... நிபுணர்கள் (அமெரிக்காவில் கூட) ஏற்றுக்கொள்வது. அனால், கிம்மை பொறுத்தவரை வடகொரிய அரசு என்ற அமைப்பை பாதுகாப்பதே முன்னுரிமை ... ஏனெனில் கிம்மின் அரை சகோதரத்தை, மாமனாரை கூட விட்ட வைக்கவில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.