All Activity
- Past hour
-
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்? Mar 2, 2026 - 05:58 PM ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தினர் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அலி கமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பஹ்ரைன், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அதே போல், இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல்கள் கெய்பர் ஷேகான் பெலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிட்டுள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?- ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? - அதிர்வூட்டும் சமூக ஊடக பதிவுகள் 02 Mar, 2026 | 05:12 PM ஈரானின் இடைக்கால உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலிரேசா அராஃபி, தனது கடமையை பொறுப்பேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்னரே, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, சரிபார்க்கப்படாத சில சமூக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வைரலாகி, சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அலிரேசா அராஃபி கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தி, ஈரானிய அரசு ஊடகங்களாலோ சர்வதேச செய்தி நிறுவனங்களாலோ உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரானின் உயர் தலைவரான அலி காமேனி இஸ்ரேல் - அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அலிரேசா அராஃபி இடைக்கால உயர் தலைவராக நேற்று (1) நியமிக்கப்பட்டார். மேலும், அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரெடிட் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தி, தெஹ்ரானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேசம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், லெபனான் முதலான நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள், தாக்குதல்களுக்கு மத்தியில் வெளிக்கிளம்பியுள்ள, ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி தொடர்பான கூற்று, உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது, வதந்தியாகவே இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? - அதிர்வூட்டும் சமூக ஊடக பதிவுகள்- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 31 பேர் பலி; 149 பேர் காயம் 02 Mar, 2026 | 01:56 PM லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பு செயற்பட்டு வரும் லெபனான் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டது. ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவே லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அலி காமேனி தூய இரத்தம் சிந்தியதற்கு பழிவாங்கும் விதமாகவும் லெபனான் மற்றும் அதன் மக்களை பாதுகாப்பதற்காகவும் மீண்டும் மீண்டும் தாக்குகின்ற இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்குதல் நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 31 பேர் பலி; 149 பேர் காயம்- தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
ஈரானில் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்வு 02 Mar, 2026 | 12:29 PM தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தாக்குதலில் சிக்கி 96 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (28) ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்திருக்கும் இந்த பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின்போது 85 மாணவிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைவரப்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாடசாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் “காட்டுமிராண்டித்தனமான செயல்” என ஈரான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானில் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்வு- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உங்களுக்கு திருமணம் செய்யும் போது.... சாத்திரம், சாதகம், நல்ல நாள், வளர்பிறை, முகூர்த்தம் எல்லாம் பார்த்துத்தானே திருமணம் செய்தீர்கள். பிறகு என்னத்துக்கு... உங்களுக்கு ஒரு ஞாயம், மற்றவனுக்கு ஒரு ஞாயம். 😂- ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு
ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு 02 Mar, 2026 | 10:17 AM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய பாரிய இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கப் பொதுமக்களிடையே மிகக் குறைந்த அளவிலான ஆதரவே கிடைத்துள்ளதாக அண்மைக்காலக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ரீதியான பதிலடித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (01) வெளியாகின. கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் (25%) மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 43 சதவீதம் பேர் இந்த இராணுவ நடவடிக்கையை எதிர்த்துள்ளனர். மேலும் 29 சதவீதம் பேர் இது குறித்து உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை. குடியரசுக் கட்சியினர்: 55% பேர் தாக்குதலுக்கு ஆதரவு அளித்துள்ளனர், 13% பேர் எதிர்த்துள்ளனர். ஜனநாயகக் கட்சியினர்: 74% பேர் இந்தத் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கையில் முதல்முறையாக மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை இந்த நீதி மிக்க பணி தொடரும்" என்று உறுதிபடக் கூறினார். மேலும், "மோதல் முடிவதற்குள் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்றும் அவர் எச்சரித்தார். ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் நாகரிகத்திற்கு எதிரான போரைத் தொடுத்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இருப்பினும், அமெரிக்கப் பொதுமக்கள் ஈரானை ஒரு நேரடி அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்பதை இந்தக் கருத்துக்கணிப்பு உணர்த்துகிறது. எரிபொருள் விலை அதிகரித்தால் இந்தத் தாக்குதலுக்கான ஆதரவு மேலும் குறையும் என 45% பேர் தெரிவித்துள்ளனர். "முடிவில்லாப் போர்களை நிறுத்துவேன்" என்ற டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதால், அவரது MAGA (Make America Great Again) ஆதரவாளர்களிடையேயும் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தாக்குதலைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். "டிரம்ப் போரைத் தவிர்ப்பதாகக் கூறினார். ஆனால் இது அவராகத் தேடிக்கொண்ட போர்" என்று செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் பதிவிட்டுள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரும் "யுத்த அதிகாரத் தீர்மானம்" (War Powers Resolution) மீதான வாக்கெடுப்பு இந்த வார தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்புஏராளன் started following பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல் , ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு and புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்! Mar 2, 2026 - 05:39 PM ஈரானுக்கு எதிரான 'Operation Epic Fury' இராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்கள் நட்புமுறைத் தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது. ஈரானிய விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானங்களில் இருந்த 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது சீரான உடல்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதைய இராணுவ நடவடிக்கையில் குவைத் பாதுகாப்புப் படைகள் வழங்கி வரும் ஆதரவிற்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. குறித்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டமைக்கு இதுவா காரணம்!- பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை - முன்னிலை சோசலிசக் கட்சி மாநாட்டில் குமார் குணரத்தினம் குற்றச்சாட்டு Published By: Vishnu 02 Mar, 2026 | 04:12 AM (க.சிவலிங்கமூர்த்தி) உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி" எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் போதே குமார் குணரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். Beaches & Islands அங்கு அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்; இன்று இந்நாட்டை ஆட்சி செய்யும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை மிக மோசமான முறையில் மீறி வருகின்றது. வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு கட்சி இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதனை விடவும் பாரதூரமான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு எனும் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக நின்றவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நவ தாராளவாதக் கொள்கைகளை எவ்வித தயக்கமுமின்றி அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர். அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது மாத்திரமன்றி மோடி மற்றும் ட்ரம்ப் போன்றோரின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக முழு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வெறியில் மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றது. இஸ்ரேல் எனும் பொம்மை அரசை முன்னிறுத்தி காசா பகுதியில் பெரும் இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. வெனிசுலாவின் ஜனாதிபதி கடத்தப்பட்டமை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களைக் குறிவைத்துள்ளமை என அமெரிக்கப் பேரரசுவாதம் தனது மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டி நிற்கின்றது.Politics மத்திய கிழக்கில் நடக்கும் போர்களுக்குப் பின்னால் அமெரிக்க மூலதனத்தின் தேவைகளே ஒளிந்துள்ளன. உலகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டி இலாபம் ஈட்டிய பெரு மூலதன உரிமையாளர்கள் இன்று அதிகார போதையில் உள்ளனர். அமெரிக்காவின் இந்த பேரரசுவாத அதிகார வெறிக்கு எதிராக எமக்குள்ள ஒரே மாற்று வழி சோசலிசம் மாத்திரமேயாகும். சர்வதேச ரீதியிலான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மூலமே இதனைத் தோற்கடிக்க முடியும். கியூபா இன்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. உலகில் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள கியூபா கொரோனா காலப்பகுதியில் பல நாடுகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியது. பேரரசுவாத இருளுக்கு மத்தியில் கியூபா இன்றும் சிவப்புக்கொடியை ஏந்தி மனிதாபிமானத்தை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று சிதைந்து போயுள்ளன. அந்தச் சிதைவுகளுக்குள் இனியும் மாற்றத்தைத் தேடுவது முட்டாள்தனமானது. ஜே.வி.பி அரசாங்கம் இன்று திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் தேவைக்காக இந்நாட்டின் நிலங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகின்றது. எனவே முகங்களை மாற்றுவதால் அல்லது கட்சிகளை மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார். அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை- புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு 02 Mar, 2026 | 10:16 AM அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதை அவதானித்தும், தமிழ் மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானம் காலத்தின் அவசியமாகியுள்ளது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்தேசியத்தை பலவீனப்படுத்தக்கூடிய அக மற்றும் புறச் சூழல்கள் பலமடைவதையும், கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுநிலைப்பாட்டை எடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் அதன் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ் மக்களை ஒருமுக தீர்மானத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்றத்தில் தமிழ்தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்தேசிய பரப்பில் செயற்படும் பொது அமைப்புக்கள் ஆகியவை ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்காலத் தீர்மானங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகளின் பொதுநிலைப்பாடு, நீண்டகால அரசியல் எண்ணக்கோட்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை விடுத்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், இன்று திங்கட்கிழமை ( 02.03.2026 ) பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா வரவேற்பு மண்டபத்தில் ( Dwaraka Restaurant Reception Hall, Bambalapitiya) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் Mar 2, 2026 - 03:15 PM பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது. 2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள். ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். நாங்களும் இப்படித்தான் கதறினோம். மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல. சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள். எங்கள் மாவீரச் செல்வங்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது. நம்ம யாழ்ப்பாணம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- Today
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது. 2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள். ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். நாங்களும் இப்படித்தான் கதறினோம். மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல. சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள். எங்கள் மாவீரச் செல்வங்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது. நம்ம யாழ்ப்பாணம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
70 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்! @வாதவூரான் சுமைதாங்கிக் கல்லில் @நிலாமதி அக்கா குந்தவிடாமல் தடுப்பதில் வெற்றிகண்டுள்ளார்!- குட்டிக் கதைகள்.
ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான். " டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. " டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!" "ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?" " ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. " " ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன். " ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு. " அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? " "அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு." " ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? " " நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். " டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! " " அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "😄 ஓம் மணிகண்டன்- ஆடுகளம்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இங்கு அந்த நாட்டவர்கள் போரட்டத்தில் இறங்கி உள்ளதாக காலையில் அறிந்தேன்.நான் அடிக்கடி டவுண்ரவுன் பக்கம் போவதால் யாராவது ஏதாச்சும் எடுத்து சொல்வார்கள். பொருட்களின் விலைகளும் கூடலாம்.✍- ரோஜா முள்.
பாகம் 2 எப்போ வரும்..🤭- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 68) - 70) க்குமான புள்ளிகள்: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து - 17 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. நியூஸிலாந்து - 12 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. போட்டியாளர் Y1 Y2 Y3 Y4 செம்பாட்டான் ENG NZ ஏராளன் ENG PAK வசீ ENG NZ புலவர் ENG NZ சுவைப்பிரியன் ENG NZ அல்வாயன் ENG PAK ஈழப்பிரியன் ENG PAK நியூ பலன்ஸ் ENG NZ வாத்தியார் NZ SL கறுப்பி ENG PAK வாதவூரான் ENG SL வீரப் பையன்26 NZ PAK சுவி ENG PAK கிருபன் NZ PAK கோஷான் சே ENG NZ அஹஸ்தியன் ENG PAK கந்தப்பு ENG PAK நியாயம் ENG NZ எப்போதும் தமிழன் NZ PAK ரசோதரன் AFG SL பிரபா ENG PAK நிலாமதி AFG SL நந்தன் ENG NZ 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) 13 பேர் இங்கிலாந்து அணி முதலாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படும். 10 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டியாளர் சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக செம்பாட்டான் ENG NZ ஏராளன் PAK ENG வசீ ENG NZ புலவர் ENG NZ சுவைப்பிரியன் ENG NZ அல்வாயன் PAK ENG ஈழப்பிரியன் PAK ENG நியூ பலன்ஸ் ENG NZ வாத்தியார் NZ SL கறுப்பி ENG PAK வாதவூரான் ENG SL வீரப் பையன்26 PAK NZ சுவி ENG PAK கிருபன் PAK NZ கோஷான் சே ENG NZ அஹஸ்தியன் ENG PAK கந்தப்பு ENG PAK நியாயம் ENG NZ எப்போதும் தமிழன் NZ PAK ரசோதரன் AFG SL பிரபா ENG PAK நிலாமதி AFG SL நந்தன் PAK NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 12 பேர் சிறிலங்கா அணி இறுதியாக வரும் எனக் கணித்தமையால் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் SL வசீ SL புலவர் SL சுவைப்பிரியன் IRE அல்வாயன் SL ஈழப்பிரியன் SL நியூ பலன்ஸ் SL வாத்தியார் ENG கறுப்பி SL வாதவூரான் NZ வீரப் பையன்26 SL சுவி SL கிருபன் ENG கோஷான் சே PAK அஹஸ்தியன் SL கந்தப்பு NZ நியாயம் PAK எப்போதும் தமிழன் SL ரசோதரன் ENG பிரபா SL நிலாமதி ENG நந்தன் IRE- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 65) - 67) க்குமான புள்ளிகள்: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தென்னாபிரிக்கா - 04 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. போட்டியாளர் X1 X2 X3 X4 செம்பாட்டான் IND AUS ஏராளன் IND AUS வசீ IND AUS புலவர் IND AUS சுவைப்பிரியன் IND AUS அல்வாயன் IND AUS ஈழப்பிரியன் IND AUS நியூ பலன்ஸ் IND AUS வாத்தியார் IND AUS கறுப்பி IND AUS வாதவூரான் IND AUS வீரப் பையன்26 IND AUS சுவி IND AUS கிருபன் IND SA கோஷான் சே IND SA அஹஸ்தியன் IND SA கந்தப்பு IND AUS நியாயம் IND AUS எப்போதும் தமிழன் IND SA ரசோதரன் IND AUS பிரபா IND AUS நிலாமதி IND AUS நந்தன் IND AUS 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் தென்னாபிரிக்கா அணி முதலாவதாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே மூன்று புள்ளிகள் ஒருவருக்கும் கிடையாது. 09 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டியாளர் சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக செம்பாட்டான் AUS IND ஏராளன் AUS IND வசீ AUS IND புலவர் AUS IND சுவைப்பிரியன் AUS IND அல்வாயன் AUS IND ஈழப்பிரியன் AUS IND நியூ பலன்ஸ் IND AUS வாத்தியார் AUS IND கறுப்பி AUS IND வாதவூரான் IND AUS வீரப் பையன்26 IND AUS சுவி IND AUS கிருபன் IND SA கோஷான் சே IND SA அஹஸ்தியன் IND SA கந்தப்பு IND AUS நியாயம் IND AUS எப்போதும் தமிழன் IND SA ரசோதரன் IND AUS பிரபா IND AUS நிலாமதி IND AUS நந்தன் IND AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஒருவரும் ஸிம்பாப்வே அணி இறுதியாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் செம்பாட்டான் SA ஏராளன் WI வசீ WI புலவர் WI சுவைப்பிரியன் WI அல்வாயன் WI ஈழப்பிரியன் WI நியூ பலன்ஸ் SL வாத்தியார் WI கறுப்பி WI வாதவூரான் WI வீரப் பையன்26 SA சுவி WI கிருபன் WI கோஷான் சே ITA அஹஸ்தியன் WI கந்தப்பு WI நியாயம் WI எப்போதும் தமிழன் WI ரசோதரன் WI பிரபா WI நிலாமதி WI நந்தன் SCOT- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது தவறான தகவல். அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான மூன்று எப் 15 ரக தாக்குதல் விமானங்களை குவைத்தின் விமான எதிர்ப்புப் படையனி சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்பதே சரியான தகவல். ஈரானின் விமானங்கள் குவைத்தின் வான்பரப்பிற்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது தாக்குதலை நிறைவுசெய்து தளம் திரும்பிக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களை குவைத் விமான எதிர்ப்புப் படையணி ஈரானின் விமானங்கள் என்று தவறுதலாகக் கணித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தாக்கப்பட்ட விமானங்களில் இருந்த ஆறு விமானமோட்டிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் நலமுடன் இருப்பதாக குவைத் அரசு தெரிவித்திருக்கிறது. தனது தவற்றிற்காக அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள குவைத் அரசு, இத்தாக்குதல் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறது.- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
காமனெயியை பல மாதங்கள் வேவு பார்த்து துல்லியமாக தாக்கி கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கோர்டோன் கோரேரா பாதுகாப்பு ஆய்வாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட நள்ளிரவு நேரத்தில் அல்லாமல், காலை வேளையில் நடந்துள்ளது. ஏனெனில், அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக கிடைத்த முக்கியமான உளவுத்துறைத் தகவலை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் முடிவு செய்திருந்தன. இரானிய மூத்த அதிகாரிகள் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக பல மாதங்களாக அவர்கள் காத்திருந்தனர். அதிஉயர் தலைவர் அலி காமனெயி சனிக்கிழமை காலை மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்திற்கு செல்வார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அதே சமயத்தில், மற்ற மூத்த ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சந்திக்கும் இடத்தையும் தாக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக அதிஉயர் தலைவரின் நகர்வுகளை கண்காணித்து வந்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய முறைகள் ரகசியமானவை என்றாலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் அதுகுறித்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார். "எங்களின் உளவுத்துறை மற்றும் மிகவும் நவீனமான கண்காணிப்பு அமைப்பை அவரால் (காமனெயி) தடுக்க இயலவில்லை." இது நேரடியாக ஒருவர் அளித்த தகவலாக இருக்கலாம். ஆனால் இரானிய தனிநபர்கள் குறித்து தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மார் எ லாகோவில் உள்ள ஒரு தற்காலிக போர் அறையில் இருந்து டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் நிகழ்வுகளைக் கண்காணித்தனர் கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனிநபர்களின் நகர்வுகளை அறிய அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போன் சாதனங்களை ஊடுருவியதாக கூறப்படுகிறது. இதில், சில சமயங்களில் முக்கிய அதிகாரிகளுடைய மெய்க்காப்பாளர்களின் நகர்வுகளை கண்காணிப்பதும் அடங்கும். நீண்ட காலமாக இவ்வாறு தகவல்களைச் சேகரிக்கும் போது, வழக்கமான நடத்தை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், அவர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கவும், பலவீனமான தருணங்களை கண்டறியவும் முடியும். இரான் தனது எதிரிகள் அதிஉயர் தலைவரைப் பின்தொடர்வதை அறிந்திருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த பலவீனங்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய இரான் தவறியது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவலை தடுப்பதில் இரானின் தோல்வியையோ அல்லது புதிய கண்காணிப்பு வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் திறனையோ குறிக்கிறது. பகல் நேரத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு என்று இரானியர்கள் கணித்திருக்கலாம். இந்த சூழலில், அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.விடம் இருந்து உளவுத்தகவல் கிடைத்ததாகவும், தாக்குதல் நடத்த அந்த தகவல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டதாகவும் நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. தலைவர்களின் இடங்களை தாக்குவதில் இஸ்ரேலும், ராணுவ இலக்குகளைத் தாக்குவதில் அமெரிக்காவும் கவனம் செலுத்தும் வகையில் தங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்டதாக அறிகுறிகள் தென்படுகின்றன. முக்கியமாக, நீண்ட தூர ஏவுகணைகளை ஏவக் கூடிய போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் திட்டமிடக்கூடிய வகையில், காமனெயி-யின் நகர்வுகள் மற்றும் பிற அதிகாரிகளின் நகர்வுகள் குறித்து போதுமான தகவல்களை உளவுத்துறை முன்கூட்டியே வழங்கியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் ஒரே ஒருவரை குறிவைத்து தலைமையை அழிக்கும் தாக்குதலாக அல்லாமல், இந்தத் தாக்குதல் விரிவான ஒரு பெரிய நடவடிக்கையின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதற்கான சாதகமான வாய்ப்பு கிடைத்ததால், அந்தத் திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய போர் விமானங்கள் டெஹ்ரானை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம். அவை எவ்வளவு தூரத்தில் இருந்து தங்கள் ஆயுதங்களை செலுத்தின என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதலுக்கான முடிவு எடுக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி காலை 9:40 மணியளவில் காமனெயி வளாகத்தைத் தாக்க இஸ்ரேலிய போர் விமானங்கள் 30 குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய உச்ச தலைவர் காமனெயியின் வளாகத்தை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. இரான் அதிஉயர் தலைவர் காமனெயி தன்னை பாதுகாத்துக் கொள்ள அந்த வளாகத்திற்கு கீழேயுள்ள பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம் என்பதால் இந்த அளவு குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம். இலக்கு(காமனெயி) தாக்கப்படுவதை உறுதிசெய்ய, பதுங்கு குழியை தகர்க்க பல குண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிற இடங்களும் தாக்கப்பட்டன, அதில் அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் அலுவலகமும் அடங்கும். அவர் தான் பாதுகாப்பாக இருப்பதாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். கொல்லப்பட்டவர்களில் இரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷம்கானி, பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்ஸாதே மற்றும் ஐஆர்ஜிசி (இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தளபதி ஜெனரல் முகமது பாக்பூர் உள்ளிட்ட ஏழு மூத்த இரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இரானில் போர் விமானங்கள் தாக்கிய போது, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள மார் எ லாகோவில் நள்ளிரவு நேரத்தில் அதிபர் டிரம்ப் தனது உயர் அதிகாரிகள் சிலருடன் நிகழ்வுகளைக் கண்காணிக்கக் கூடியிருந்தார். இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த சில மணிநேரம் ஆனது. இருப்பினும், இரான் இந்த சாத்தியத்திற்கும் தயாராகவே இருந்தது, அதிஉயர் தலைவருக்கு மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளின் இடத்திற்கும் அடுத்து வரக்கூடியவர்கள் குறித்த திட்டங்கள் தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த மோதலின் போக்கில் இந்தக் கொலை என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காமனெயியை பல மாதங்கள் வேவு பார்த்து துல்லியமாக தாக்கி கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல்- பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல் Published By: Vishnu 02 Mar, 2026 | 04:04 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்திய புதிய அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னிறுத்தி முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) எழுச்சியுடன் நடைபெற்றது. வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆர்வலர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது.South Asians & Diaspora இந்த மாநாட்டில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு ஒன்பது பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. மக்கள் போராட்ட அனுபவத்தைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்திற்கான பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்புதல்Politics 2. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிடியில் இருந்து பொருளாதாரத்தை விடுவித்தல் 3. நவதாராளவாதத்திற்கு மாற்றாக சோசலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தல் 4. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துதல் 5. நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்ட சபைகளை நிறுவி மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துதல்Beaches & Islands 6. இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் இந்திய மேலாதிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்தல் 7. திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் 8. ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைதல் 9. முதலாளித்துவத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுதல் ஆகிய ஒன்பது கோரிக்கைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.South Asians & Diaspora மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான சேனாதீர குணதிலக்க புபுது ஜயகொட நிரோஷா குருகே ரவிந்து முதலகே குமார் குணரத்னம் சமீர கொஸ்வத்த ஹேமமாலி அபேரத்ன மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி சார்பில் எஸ்.கே. செந்திவேல் மற்றும் சோசலிச மக்கள் சம்மேளனம் சார்பில் கல்ப ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச ரீதியில் பல நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கினர். இத்தாலியின் பிரான்டே பொப்பலாரே அமைப்பின் சார்பில் அலேசியோ அரேனா அர்ஜென்டினாவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் லூசியானோ ரவனெட்டி பங்களாதேஷின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷோயப் பச்சாவார்ஜி பிரான்சின் புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியின் சுலைமான் ஸ்டானிஸ்லாஸ் நேபாளத்தின் விஞ்ஞான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகத் ரமாலி மற்றும் சர்வதேச சோசலிச லீக்கின் ஸ்டீவ் மேக்ஸ்வினி ஆகியோர் நேரடியாகவும் காணொளி மூலமும் உரையாற்றினர். கியூபா தூதுவர் பட்ரிசியா லசாரா பெகோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஜெர்மனியின் ஹான்ஸ் பீட்டர் அன்டன் ஸ்பெக்ட் நேபாளத்தின் வின்சென்சோ வசாலோ இத்தாலியின் நிக்கோலோ சகேட்டி யேமன் நாட்டின் மவுரிக் மிலியா இந்தியா சார்பில் சுபாஷ் தர்ஷ்குப்தா இங்கிலாந்தின் ரோஜர் சில்வர்மேன் மற்றும் துருக்கியின் அமினா ஆகியோர் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். மாநாட்டின் இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்- TIN இலக்கம் கட்டாயமாகிறது!
TIN இலக்கம் கட்டாயமாகிறது! Mar 2, 2026 - 03:46 PM தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல். கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல். மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல். காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல். வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல். கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. TIN இலக்கம் கட்டாயமாகிறது! - இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.