Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பாக்கிஸ்தான் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்........................
  3. வாழ்த்துகள். திரு புஷ்பா அவர்கள் தாயகபற்றாளர். ஊர்பற்றாளர். பிறந்த ஊரான குப்பிழான் மண்ணுக்கு உதவி புரிவதற்காக 9 பேருடன் சேர்ந்து குப்பிழான் விக்னேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பினை உருவாக்கினார்.
  4. துரியோதனப் பார்வை மக்களில் பலவகை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கருப்பு வெளுப்பில் 'உண்டு - இல்லை' என்ற அளவில் பிரிக்கும் போது பல வகைகளில் மனிதர்களையும் இரு எதிர் எதிர் வகைகளாகப் பிரிக்கும் நிலை தோன்றுகிறது. அப்படி உள்ளவற்றில் ஒரு எதிர்-எதிர் இருமையைப் பற்றியக கதை இது. *** துரோணருக்கு அருச்சுனன் மேல் தனிப்பட்டப் பாசம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறிது காலமாக தருமனின் மேலும் அதிகப் பாசம் காட்டுவது போல் இருக்கிறது. பாண்டு மகன்களில் மேல் அழுக்காறு கொண்ட துரியோதனனுக்கு இது மேலும் எரிச்சலைத் தந்தது. நேராகச் சென்று பிதாமகர் பீஷ்மரிடம் 'ஐயா. ஆசிரியர் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. அவருக்கு பாண்டவர்கள் என்றால் ஒரு தனிப்பாசம் இருக்கிறது. அதுவும் தருமன் என்றால் தலையில் வைத்து ஆடுகிறார்' என்று முறையிட்டான். பீஷ்மருக்கு நடப்பது என்ன என்பது ஓரளவிற்குத் தெரியும். ஆனாலும் அதனைத் தானே துரியனுக்குச் சொல்வதை விட ஆசிரியர் சொன்னால் நன்று என்றெண்ணி அவனை ஆசிரியர் அழைத்துச் சென்றார். ஆசிரியரும் 'பரத குலத் தோன்றலே. இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது. அதனால் என்னில் குறை காண்கிறார்கள்' என்றார். வீடுமரும் 'ஐயா. நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரும் தருமனையும் துரியனையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி அனுப்பிவைத்தார். தருமனிடம் 'உன்னை விட கீழானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். துரியனிடம் 'உன்னைவிட மேலானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். சிறிது நேரம் சென்று இருவரும் தனித் தனியே வந்தனர். என்ன என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது. தருமன்: ஐயா. நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன். எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் அழைத்து வர முடியவில்லை. துரோணர்: உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா? தருமன்: ஐயா. சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது. துரோணர்: அப்படியென்றால் ஒருவர் கூடவா உன்னை விட கீழானவர் இல்லை? தருமன்: இல்லை ஐயா. துரோணர்: துரியா. நீ ஏன் யாரையும் அழைத்துவரவில்லை? துரியன்: ஐயா. என்னை விட மேலானவர் யாரையும் நான் காணமுடியவில்லை. அதனால் அழைத்து வரவில்லை. துரோணர்: உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் எவருமே இல்லையா? துரியன்: இருக்கிறார்கள் ஐயா. ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. துரோணர்: பார்த்தாயா துரியா?! நீ எல்லாவற்றிலும் தீயதைப் பார்க்கிறாய்; அதனைப் பற்றியே பேசுகிறாய். அவன் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கிறான். அதனைப் பற்றியே பேசுகிறான். வருங்காலம் உன்னைப் போல் எல்லாவற்றிலும் தீயதையே கண்டு அதனையே பேசி வருபவர்களை 'துரியோதனப் பார்வை' கொண்டவர்கள் என்று அழைக்கும். அது மாறவேண்டும் என்றால் நீ மாறவேண்டும். *** துரியோதனனின் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் மாறவில்லை. 'துரியோதனப் பார்வை' கொண்டவர்களும் நிறைய இருக்கிறார்கள். *** இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது. https://koodal1.blogspot.com/2008/04/blog-post.html
  5. மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு Feb 21, 2026 - 12:52 PM 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானத்தை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்பார்த்து, கடந்த 13 ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக இலங்கை மின்சார சபையினால் 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlvzraz5000f356pa6dhqryy
  6. மொழிக்காய் உயிர் தந்தவர்களின் மண் இது... உலக தாய்மொழி தினம் இன்று... Courtesy: தீபச்செல்வன் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள். அப்படிப் பார்த்தால் உலகில் மொழிக்காக ஆயுதம் தரித்துத் தம்முயிர் தந்தவர்களாக எங்கள் மாவீர்ர்கள் புனிதம் பெறுகிறார்கள். உலகில் தாய்மொழிக்காக தமது உயிரை தியாகம் செய்த மண்ணில் இன்று தாய்மொழி பற்றிய விழிப்புணர்வும் பார்வையும் எப்படி இருக்கிறது என்பதை நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் ஊடகச் சூழல் மொழியில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. நவீனத் தொடர்பாடல் சூழலில் தாய்மொழியை காக்கவும் கைவிடவுமான ஒரு சூழல் நிலவுகிறது. இதில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திப்பது அவசியமானது. மாசி 21, உலக தாய் மொழி தினம் தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. அந்நிய மொழியால் நேர்ந்த வீழ்ச்சி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. தனிச் சிங்களச் சட்டம் ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழத்தில் தாய்மொழி தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழால் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? அழிக்கப்படும் தமிழ் இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. காவல் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோயை சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும். அத்துடன் உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதால், விழிப்போடு இருப்போம். https://ibctamil.com/article/international-mother-language-day-february-21-1771651608
  7. அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628 இலங்கை கடற்படை வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக, நன்கொடையாக வழங்கப்பட்ட P628 எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட USCGC Decisive இன்று அமெரிக்காவின் பால்டிமோர் கடற்படை தளத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டது. 14,775 கடல் மைல்கள் தொலைவை உட்படுத்திய இந்தப் பயணம், இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட ஒற்றை கடற்பயணமாகப் பதிவாக உள்ளது. வரலாற்றுச் சாதனை மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்று முதன்முறையாக பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் வரலாற்றுச் சாதனையாகவும் இது அமையும் என கூறப்படுகிறது. இந்த சாதனை, இலங்கை கடற்படையின் மேம்பட்ட வழிசெலுத்தல் திறனை மட்டுமல்லாது, இத்தகைய சிக்கலான கடல் நடவடிக்கைகளை சாத்தியமாக்கும் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. கேப்டன் கயன் விக்ரமசூரியாவின் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 72 கடற்படையினரை உள்ளடக்கிய மொத்தம் 86 பேரைக் கொண்ட திறமையான குழு இந்தக் கப்பலில் பணியாற்றுகிறது. தூதரக உறவுகள் பாதுகாப்பான கடற்பயணத்தையும், பாதையில் உள்ள நாடுகளுடன் தூதரக உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, முக்கிய துறைமுகங்களில் கப்பலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 77 நாட்கள் கடற்பயணத்தை நிறைவு செய்த பின், இந்த வரலாற்றுப் பயணத்தின் இறுதி கட்டமாக 2026 மே 8 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை P628 அடைய உள்ளது. https://ibctamil.com/article/us-donated-cutter-begins-sl-voyage-1771661060
  8. இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 62 கோடி... இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/new-record-in-sri-lankan-lottery-history-62-crore-1771527359
  9. இந்தியா சின்ன‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது வும்ராவுக்கு ஓய்வு........... வும்ரா எல்லா விளையாட்டும் விளையாடி இருந்தால் கூடுத‌ல் விக்கேட் எடுத்து இருப்பார்...................
  10. ரசிகர்களால் வரலாறு படைத்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி! பிரமிப்பில் ஐசிசி ஐசிசி போட்டிகளின் வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி டிஜிட்டல் முறையில் அதிகம் பார்க்கப்பட்ட ரி20 போட்டியாக சாதனை படைத்துள்ளது. கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை 163 மில்லியன் மக்கள் டிஜிட்டல் முறையில் பார்த்ததாக இந்த ஆண்டு உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு கூட்டாளியான ஜியோஸ்டார் அறிவித்துள்ளது. அதன்படி, பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2024 ரி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது. வழமைக்கு மாறான அதிகரிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடி காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான பார்வையாளர்களின் கவனம் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த ரி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்த்த மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 56% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://ibctamil.com/article/record-digital-views-for-ind-pak-t20-world-cup-1771656052
  11. Today
  12. இன்று ந‌ட‌க்கும் ப‌ரிட்சையில் நான் பாஸ் ஆகினால் இர‌ண்டாம் பிடிப்பேன் ஹா ஹா................ அல்லா அக்ப‌ட்........ பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான்😄💪...........................
  13. ரிஷிமூலம் ஆர். வி. “சகதேவன் பணயம்!” வழக்கம் போலவே சகுனி திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். அதே கனவுதான் என்றுதான் உணர வழக்கம் போலவே ஒரு நிமிஷம் ஆனது. அவரது இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பதின்மூன்று வருஷமாக ஒரே கனவைக் கண்டு விழித்துக் கொண்டாலும் அந்தக் கனவு தன் இதயத்தை இன்னும் கிழிப்பதை உணர்ந்ததும் அவரது இதழ்களில் வெறுப்பும் விரக்தியும் கலந்த ஒரு புன்னகை எழுந்தது. பக்கத்திலிருந்த விளக்கைத் தூண்டிவிட்டார். அருகிலிருந்த குடுவையிலிருந்து சிறிது நீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எத்தனை முயன்றாலும் இனி மேல் தூங்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்த விஷயம்தான். அருகிலிருந்த மணல் கடிகையை நோக்கினார். இன்று இரண்டாம் ஜாமம் கூட முடிந்திருக்கவில்லை. இன்னொரு குடுவையிலிருந்து ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் காந்தாரத்தின் கசப்பு நிறைந்த மதுவை சரித்துக் கொண்டார். அவரது கைகள் அனிச்சையாக அவரது கச்சையில் கட்டி இருந்த பகடைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. மதுவைப் பருகிக் கொண்டே தன் அறையை விட்டு வெளியே நடந்தார். அவரது கால்கள் தானாக உலூகனின் மகனும் தன் பன்னிரண்டு வயது பேரனும் ஆன துர்வசுவின் அறைக்குள் நுழைந்தன. உறங்கிக் கொண்டிருந்த துர்வசுவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனது படுக்கையில் உட்கார்ந்தால் அவனது தூக்கம் கெட்டுவிடலாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சியால் நின்று கொண்டே இருந்தார். எத்தனைதான் ஓசை எழுப்பாமல் இருக்க முயற்சி செய்தாலும் அவர் அசையும்போதெல்லாம் பகடைகள் ஒன்றோடொன்று இடித்துக் கொள்ளும் ஒலி அந்த நிசப்தமான இரவில் கேட்கத்தான் செய்தது. துர்வசு முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தான். பகடைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வெளியேறினார். முன்கட்டில் இருந்த தன் அலுவல் அறைக்குள் நுழைந்தார். அவரது அந்தரங்க சேவகனான விப்ரசேனன் அங்கே உட்கார்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தான். கீழ் ஸ்தாயியில் சகுனி உறுமியதும் அவன் விழித்துக் கொண்டான். வேகமாகச் சென்று சில கோதுமை அப்பங்களையும் கொஞ்சம் பழச்சாறையும் கொண்டுவந்தான். அதற்குள் சகுனி ஒரு மஞ்சத்தில் அமர்ந்து ஓலைகளைப் புரட்டத் தொடங்கி இருந்தார். அவரது மனம் கண்ணன், கண்ணனின் தூது, கௌரவ பாண்டவர்கள் சார்பில் எந்தெந்த அரசர்கள் போராடுவார்கள், படை பலம், முக்கிய வீரர்கள், கர்ணனிடம் இருக்கும் சக்தி ஆயுதம் என்று பல நாட்களாகப் போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளை மீண்டும் போடத் தொடங்கியது. பாஞ்சாலமும் யாதவர்களும் விராடனும் சல்யனும் தங்கள் முழு படை பலத்தையும் பாண்டவர்கள் சார்பில் இறக்குவார்கள் என்ற புள்ளியையே அவர் மனம் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. படைபலக் கணக்குகளில் நாழிகைகள் கழிவது தெரியாமல் மூழ்கிக் கிடந்தபோது கதவு மெலிதாகத் தட்டப்பட்டது. அதற்குள் சூர்யோதயமா என்று வியந்து கொண்டே சகுனி நிமிர்ந்தார். அருகே வந்த விப்ரசேனன் “தங்களைப் பார்க்க யாதவத் தலைவரும் பாண்டவத் தூதரும் ஆன…” என்று ஆரம்பித்தான். சகுனி “என்ன! என்ன! என்னை சந்திக்க கண்ணன் வந்திருக்கிறானா?” என்று பெரும் வியப்படைந்தார். “நேரம் என்ன?” என்று கேட்டார். “பிரம்ம முகூர்த்தத்தில் சில நிமிஷங்கள் கழிந்திருக்கின்றன” என்றான் விப்ரசேனன். “இத்தனை காலையில் எழுந்து கண்ணன் என்னைப் பார்க்க ஏன் வர வேண்டும்?” என்று கேட்டார் சகுனி. விப்ரசேனனிடம் அவர் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அறிந்திருந்ததால் அவன் மௌனமாகவே இருந்தான். குறிப்பறிந்து விப்ரசேனன் கொண்டு வந்திருந்த உத்தரீயத்தை அணிந்து கொண்ட சகுனி மேலே அவருக்குப் பிடித்த பழுப்பு நிற சால்வையையும் போர்த்திக் கொண்டார். வாசலை நோக்கி விரையும்போது அவரது கைகள் தன்னிச்சையாக அவரது கச்சையில் இருந்த பகடைகளைத் தொட்டுக் கொண்டன. அவரைக் கண்ட கண்ணன் எழுந்தான். அந்த அதிகாலையிலும் மாலை, மயிற்பீலி, வாசனை திரவியம் என்று கண்ணன் முழு அலங்காரத்தில் இருந்ததை சகுனியின் மனதில் ஒரு பகுதி குறித்துக் கொண்டது. கண்ணன் தன் எதிரி என்ற நினைவு அவர் மனதில் பூரணமாக இருந்தாலும் அவர் முகம் தானாக மலர்ந்தது. எதிரிகளையே இப்படி மனம் மலரச் செய்யும் கண்ணன் தன் நண்பர்களான பாண்டவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவான், அந்த மகிழ்ச்சி தனக்கும் கௌரவர்களுக்கும் கர்ணனுக்கும் இல்லாமல் போய்விட்டதே என்று சகுனி ஒரு நொடி மனதோடு நொந்து கொண்டார். மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் சகுனி கண்ணனை நோக்கி விரைவது நிற்கவே இல்லை. கண்ணனின் அருகே சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். “வர வேண்டும், வர வேண்டும்! கண்ணா, நீ இங்கே எதற்காக வந்திருந்தாலும் உன்னைப் பார்த்ததில் உண்மையாகவே பெருமகிழ்ச்சி!” என்றார். “எனக்கும், காந்தார மன்னரே!” என்று கண்ணன் புன்முறுவல் செய்தான். சகுனியின் முகத்திலும் ஒரு புன்முறுவல் எழுந்தது. “நான் காந்தார மன்னன் மட்டுமல்லவே கண்ணா! உன் மகன் சாம்பனின் மாமனாரின் மாமன், உனக்கும் மாமன் முறை அல்லவா!” “திருத்திக் கொண்டேன், மாமா!” “வா, உள்ளே சென்று பேசுவோம்!” என்று சகுனி கண்ணனை தன் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார். மஞ்சத்தின் மீது சிதறிக் கிடந்த ஓலை நறுக்குகளை ஒரு பக்கம் தள்ளினார். கண்ணன் “ஜாக்கிரதை, மாமா! உங்கள் ரகசியங்கள் ஏதாவது உங்கள் எதிரிக்கு தெரிந்துவிடப் போகிறது!” என்று சிரித்தான். தன் கையாலேயே விப்ரசேனன் புதிதாகக் கொண்டு வந்திருந்த அப்பங்களை பரிமாறியபடி “உனக்குத் தெரியாத ரகசியம், நீ யூகிக்க முடியாத ரகசியம் ஏதும் உண்டா கண்ணா? என் மனம் எப்படி எல்லாம் சிந்திக்கும் என்று என்னை விட உனக்கு அதிகம் தெரியும் என்றுதான் எனக்கு சில சமயம் தோன்றுகிறது” என்று சகுனியும் நகைத்தார். “இல்லை மாமா, அப்படித் தெரிந்திருந்தால் திரௌபதியை மானபங்கம் அடைய விட்டிருப்பேனா என்ன?” என்று கண்ணன் பெருமூச்செறிந்தான். “கண்ணா, உன்னிடம் மனம் திறந்து உண்மையைச் சொல்கிறேன். பாண்டவர்களின் நாட்டைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை துவாரகைக்கோ பாஞ்சாலத்துக்கோ துரத்திவிடுவது மட்டும்தான் என் திட்டம். தம்பிகளையும் மனைவியையும் தன்னையுமே அந்த மூடன் பணயம் வைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு புறம் மூடன், மறுபுறம் மூர்க்கன். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. என்னை யாரும் நம்பப் போவதில்லை, நீ ஒருவனாவது…”. சகுனியின் குரல் அடைத்தது. அவர் மௌனமாக ஜன்னலை நோக்கினார். “நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கக் கூடும்தான் மாமா. எனக்கு விஷயம் தெரிந்தபோது பிதாமகரும் ஆசார்யரும் திருதராஷ்டிரரும் இருந்துமா இந்த அநியாயம் நடந்தது என்ற ஆதங்கத்தை விட கூர்மதியாளர் சகுனி கூடவா இதை தடுக்கவில்லையா, இனி போரை அவரால் கூடத் தவிர்க்க முடியாதே என்ற வியப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என்னால் உங்கள் வார்த்தைகளை முழுவதுமாக நம்ப முடியவில்லை” என்று கண்ணன் கையை விரித்தான். இருவரும் எங்கோ வெறித்தனர். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் சகுனி இன்னும் இரண்டு அப்பங்களை எடுத்து கண்ணனின் தட்டில் வைத்தார். “பாண்டவர்களோடு போரை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஐந்து கிராமங்களையாவது…” என்று கண்ணன் ஆரம்பித்தான். சகுனி அவன இடைமறித்தார். “தான் விரும்பாத அறிவுரைகளை துரியன் காது கொடுத்துக் கேட்பதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் சில காலமாகவே அவன் என்னிடம் துரியனாக அல்ல, ஹஸ்தினபுரி இளவரசனாகத்தான் நடந்து கொள்கிறான். பாண்டவர்களோடு போரிட வேண்டுமென்றால் பதிமூன்று வருஷங்களுக்கு முன்பே போரிட்டிருக்கலாமே கண்ணா! போரில் நாங்கள் வெல்வோம் என்பது நிச்சயமில்லை என்பது கூடவா எனக்குப் புரியாது? துரியனின் அகங்காரம், கர்ணன் மீது அவனுக்கு இருக்கும் முரட்டு நம்பிக்கை, அவன் கண்களை மறைக்கிறது. ஆனால் நான் என்ன கணக்கு போடுவேன் என்று நீ கூடவா யூகிக்கவில்லை?” கண்ணனின் உதட்டில் புன்முறுவல் அரும்பியது. “நாமிருவரும் எப்போதும் மற்றவர் போடும் கணக்கு என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம் இல்லையா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ருக்மணியை விட உங்களைப் பற்றி நினைக்கும் நேரம்தான் அதிகம்” என்று கண்ணன் மெதுவாக நகைத்தான். சகுனியின் உடலில் இருந்த இறுக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. அவரும் புன்முறுவல் புரிந்தார். “ஆம் கண்ணா! நான் அனிச்சையாக செய்யும் செயல்கள் இரண்டுதான் – ஒன்று பகடைகளை உருட்டுவது, இன்னொன்று கண்ணன், கண்ணன் என்று உன் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பது! உண்மையைச் சொல்லப் போனால் நான்தான் உன் முதன்மை பக்தன்!” என்று சகுனியும் சிரித்தார். கண்ணன் ஒரு மஞ்சத்தில் அப்பத் தட்டை எடுத்துக் கொண்டு ஒரு மஞ்சத்தில் உட்கார்ந்தான். அப்பத்தை உடைத்தான். ஆனால் அப்பத்தை ஒரு விள்ளலுக்கு மேல் கண்ணன் உண்ணவில்லை. “இத்தனை காலையில் அப்பங்களை சாப்பிட முடிவதில்லை மாமா, வயதாகிறதே” என்று சொல்லிக் கொண்டே தட்டை ஒரு புறம் தள்ளினான். சகுனி “இந்தப் பழச்சாறையாவது கொஞ்சம் அருந்து கண்ணா” என்று ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் கொஞ்சம் பழச்சாறை ஊற்றினார். கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு கண்ணன் சகுனியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். “பாண்டவர்கள் ஐவரும் முற்றிலும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா, மாமா?” என்று நேரடியாகக் கேட்டான். சகுனி கண்ணனின் கண்களைத் தவிர்த்தார். நிலத்தை நோக்கினார். “அர்ஜுனன், அர்ஜுனன் ஒரு வருஷ அஞ்ஞாதவாசம் முடிவதற்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டான், அவர்கள் மீண்டும் காட்டுக்குப் போவதுதான் நியாயம்” என்று மெதுவான குரலில் சொன்னார். கண்ணன் கடகடவென்று பெரிதாக நகைத்தான். “நியாயம்! நியாயம்! அரக்கு மாளிகை நியாயம்!” பின்னர் கொஞ்சம் இருமினான். பழச்சாறை மீண்டும் கொஞ்சம் பருகிக் கொண்டான். மீண்டும் சகுனியை புன்முறுவலோடு நோக்கினான். “இங்கே நாமிருவர் மட்டுமே இருக்கிறோம், வெளிப்படையாகவே பேசுவோமே!” என்றான். ஒரு நிமிஷம் இருவரும் மௌனமாக இருந்தனர். பிறகு கண்ணன் லேசாக செருமிக் கொண்டான். “இரவு அமைதியாகத் தூங்குகிறீர்களா? இன்னும் எத்தனை காலம் இப்படி அமைதி இழந்து மகிழ்ச்சி இழந்து இரவுகளைக் கழிக்கப் போகிறீர்கள்?” என்றான். “மாமா, இந்தப் போர் தவிர்க்க முடியாதது. பதின்மூன்று வருஷங்களுக்கு முன் சகதேவன் பணயமாக வைக்கப்பட்டபோதே போர் தொடங்கிவிட்டது. இப்போது பீஷ்ம துரோண பீமார்ஜுனர்கள் தங்கள் அம்புகள் மூலம் போராடப் போகிறார்கள், அவ்வளவுதான். ஆனால் போர் உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் மத்தியில்தான். என்னால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும், ஆனால் அர்ஜுனனின் அழிவை எப்படித் தவிர்ப்பது என்று எனக்கே தெரியவில்லை.” அரக்கு மாளிகை என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கண்ணன் சொன்ன வேறு எதுவுமே சகுனியின் காதில் ஏறவில்லை. சாளரத்தின் வெளியே இன்னும் இருளாக இருந்த ராஜவீதியை பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணன் எதிரில் இருப்பதையே மறந்துவிட்டது போல இருந்தது. கண்ணனும் எதுவும் பேசாமல் அவர் நிகழ்காலத்துக்கு வருவது வரை காத்திருந்தான். அதற்கு சில நிமிஷங்கள் ஆயிற்று. கம்மிய குரலில் சகுனி சொன்னார் – “கண்ணா, ஒரு காலத்தில் சகதேவனும் உலூகனும் நெருங்கிய தோழர்கள், சகதேவன் இந்த மாளிகையில்தான் பாதி நேரத்தைக் கழிப்பான். ஏன் அவனுக்கு நிமித்தக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தந்தவனே நான்தான். இன்று அவன் என்னைத் தாண்டி வெகு தூரம் போய்விட்டான்” என்று பெருமூச்செறிந்தார். சகுனி தொடர்ந்தார் – “என் வாழ்வில் நான் செய்த தவறு என்பது அரக்கு மாளிகை விவகாரம்தான். பாண்டவர்கள் எரிந்து போனார்கள் என்று நம்பிய நாட்களில் இந்த மூர்க்கன் அரசனான பிறகு தற்கொலை செய்து கொள்வதாகவே முடிவெடுத்திருந்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ பாண்டவர்கள் இறக்கவில்லை. நீ மஹா அறிவாளிதான், ஆனால் உனக்கும் தெரியாத ரகசியங்கள் உண்டு.” கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான். சகுனி தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கண்ணன் சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். ஆனால் கண்ணன் எதிர்பார்த்தற்கு மாறாக சகுனி அவன் கண்களை நேராகப் பார்த்தார். “வாரணாவதம் முடிந்து போன கதை மாமா. இப்போது அர்ஜுனனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டும். உங்களால்தான் இதை செய்ய முடியும்.” சகுனியின் உடலில் சிறு நடுக்கம் இன்னும் இருந்தாலும் அவர் குரல் உறுதியாக இருந்தது. “பாண்டவர்களின் முதல் எதிரி துரியோதனன் அல்ல, நான்தான் என்பது நீ அறியாததா? உன் கணக்கு எனக்கே புரியவில்லையே!” “உங்களுக்குத் தெரியாததை நான் சொல்லிவிடப் போவதில்லை. பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும் அவர்கள் எல்லாரும் இறந்த மாதிரிதான். அதை உங்கள் ஆழ்மனதில் நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என்று கண்ணன் மெதுவான குரலில் முணுமுணுத்தான். சகுனியின் குரல் தழுதழுத்து மீண்டும் உறுதி கொண்டது. “துரியனின் மேலாண்மைக்காகத்தான், அவன் உண்மையிலேயே பாரதத்தின் சக்ரவர்த்தி ஆகும் நாளைப் பார்க்கத்தான், நான் உயிர் தரித்திருக்கிறேன். என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இந்த அரசியல் மற்றும் போரில் இடமில்லை கிருஷ்ணா!” என்றார். “எல்லா விதத்திலும் துரியோதனனுக்காக ஆடுங்கள். ஆனால் நான் அஞ்சும் அர்ஜுனன் அழிவை மட்டும் பத்து நாட்கள் தள்ளிப் போடுங்கள். மற்றவற்றை நான் சமாளித்துக் கொள்கிறேன்.” சகுனி இப்போது விட்டத்தை வெறித்தார். “கண்ணா, என்னால் பாண்டவர்களின் வீரத்த்துக்கு அணை போட முடியும். ஆனால் பாண்டவர்களோடு உன்னையும் சேர்த்து எதிர்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அர்ஜுனன் அழிந்தாலும் சுதர்சன சக்ரமும் சார்ங்க வில்லும் கௌரவர்களை அழித்துவிடும் என்றுதான் பயப்படுகிறேன் கிருஷ்ணா!” “உங்கள் ஆட்டத்தை என்னிடமே ஆரம்பித்துவிட்டீர்களா? நான் பாண்டவர்கள் பக்கம்தான். ஆனால் கௌரவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான் மாமா! பிதாமகருக்கும் ஆசார்யருக்கும் ஏன் துரியோதனனுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்க எனக்கு விருப்பமில்லைதான். ஆனால் நான் எப்படி போராடாமல் இருக்க முடியும், என்ன காரணம் சொல்ல முடியும்?” சகுனி புன்முறுவலித்தார். கண்ணன் கொஞ்சம் திகைத்து அவரை மீண்டும் உற்று நோக்கினான். சில நொடிகளில் அவன் திகைப்பு அகன்றது. “வருகிறேன் மாமா! அடுத்த சந்திப்பு போர்க்களத்தில்தான். எனக்கு ஆசி அளியுங்கள்” என்றபடி சகுனியின் தாள் பணிந்தான். சகுனி அவனைத் தடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் வாய்க்குள்ளாகவே “அர்ஜுனன் மட்டுமல்ல, பாண்டவர்கள் ஐவருக்கும் கவசமாக இரு” என்று முணுமுணுத்தார். “இன்னும் கொஞ்ச நாளாவது நிம்மதியாக உறங்குங்கள் மாமா!” என்றபடியே கண்ணன் விடை பெற்றான். கண்ணனை வாசல் வரை வந்து வழியனுப்பிய சகுனி கடைசியாகச் சொன்னார் – “ஐந்து நாட்கள்!” கண்ணனை சந்தித்த பின்னர் சகுனி ஒரு புது மனிதராக மாறினார். உற்சாகம் அவரது ஒவ்வொரு செயலிலும் ததும்பியது. படை திரட்டும்போது துரியோதனனை துவாரகை சென்று கண்ணனிடம் உதவி கேட்குமாறு வற்புறுத்தியது அவர்தான். கர்ணன் நேரடியாகவே “மாமா, உங்களுக்கு மூளை கெட்டுவிட்டதா? தூது வந்த கிருஷ்ணனை நாம் கொல்லப் பார்த்தோம், அர்ஜுனனின் மைத்துனன் நமக்கெப்படி உதவுவான்?” என்று கேட்டான். சகுனி கண்ணன் மறுத்தால் நமக்கென்ன நஷ்டம் என்று திருப்பிக் கேட்டார். போர் என்று வந்தாகிவிட்டது, எந்த சிறு வாய்ப்பையும் நாம் விட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். அவரது வற்புறுத்தலால்தான் துரியோதனன் துவாரகை சென்று கண்ணனின் உதவியைக் கேட்டதும், யாதவ சேனையைப் பெற்றதும். அதே போல சல்லியனுக்கு விருந்தோம்பி அவனையும் கௌரவர்கள் பக்கம் திருப்பும் யோசனையும் அவர் மூளையில் உதித்ததுதான். இரு புறமும் ஒன்பது அக்ரோணி சேனை இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கௌரவர்கள், இப்போது யாதவ சேனையும், சல்லியனின் சேனையும் தங்கள் பக்கம் சேர்ந்ததால் பதினோரு அக்ரோணி சேனையைக் கொண்டு ஏழு அக்ரோணி சேனையோடு போரிடும் மகிழ்ச்சியான நிலைக்குக் காரணம் சகுனிதான் என்பதை உணர்ந்திருந்தார்கள். கண்ணன் வெறும் தேரோட்டியாகத்தான் இருப்பான், போரிடமாட்டான் என்பதும் அவர்கள் மகிழ்ச்சியை அதிகரித்தது. சகுனியே தங்கள் பிரதம ஆலோசகர் என்று துரியோதனன் வெளிப்படையாக அறிவித்திருந்தான். தங்கள் சேனைக்கு கர்ணனை தலைவனாக நியமிக்க வேண்டும் என்று துரியோதனன் சொன்னபோது அவனை மறுத்துப் பேசியது சகுனி மட்டுமே. கர்ணனின் தலைமையில் பீஷ்மரும் துரோணரும் முழு மனதோடு போரிடமாட்டார்கள் என்று அவர் சொன்னதை ஏற்றுத்தான் பீஷ்மர் தலைமை சேனாபதியாக நியமிக்கப்பட்டார். பீஷ்மரை முழு மனதோடுதான் தலைமை சேனாபதியாக நியமித்திருக்கிறோம் என்று அவரும் நினைக்க வேண்டும், அதற்காக மன்னர்களையும் பெருவீரர்களையும் அவர் தலைமையில் அணிவகுத்து நிற்கச் செய்வோம், ஒவ்வொருவரையும் மரியாதை நிமித்தம் உனக்கு அறிமுகம் செய்யச் சொல்வோம் என்று அறிவுரை சொன்னதும் அவர்தான். ஆனால் அது ஒன்றுதான் தப்புக் கணக்காக முடிந்தது, கர்ணன் பீஷ்மரின் தலைமையில் போரிட மறுத்து வெளியேறினான். பீஷ்மருக்குப் பிறகு கர்ணனை தலைமை சேனாபதியாக ஆக்க வேண்டும் என்று சொன்னபோது துரோணரின் பேரை முன் வைத்ததும் சகுனிதான். துரோணரை யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்துத் தருவேன் என்று வாக்குத் தர வைத்ததும் அவர் சூழ்ச்சிதான். பதினோராம் நாள் போரில் கர்ணன் அர்ஜுனனை எதிர்ப்பேன் என்று சொன்னபோது சகுனி அதை மறுத்துப் பேசினார். அர்ஜுனனை கர்ணன் தன் சக்தி ஆயுதத்தால் கொன்றுவிட்டால் யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்தாலும் போர் நிற்காது என்று அவர் சுட்டிக் காட்டினார். யுதிஷ்டிரனைப் பிடிக்க முடியவில்லை என்றால்தான் கர்ணன் அர்ஜுனனை எதிர்க்க வேண்டும் என்று சொன்னபோது அவரது புத்தி கூர்மையை துரியோதனன் மிகவும் சிலாகித்தான். அதே காரணத்தால்தான் அர்ஜுனனுக்கு எதிராக சம்சப்தகனாக – அர்ஜுனனோ தானோ ஒருவர் இறக்கும் வரை போரிட – கர்ணன் போகவில்லை. பதினான்காம் நாள் போரிலோ பீமன் கர்ணனோடு போர் நீண்ட நேரம் நடந்ததால் கர்ணனுக்கு அர்ஜுனனோடு போரிடும் வாய்ப்பே இல்லாமல் போனது. அன்று இரவில் கர்ணனின் வெல்ல முடியாத சக்தி ஆயுதத்தால் கடோத்கஜன் வீழ்ந்தான். சகுனி பல வருஷங்களுக்குப் பிறகு அன்றுதான் நிம்மதியாக உறங்கினார். சகுனியின் மைந்தன் உலூகனும் சகதேவனும் சிறு வயதில் விளையாட்டுத் தோழர்கள். அதனால் பதினேழு நாட்களும் அவனைத் தவிர்த்தே வந்த சகதேவன் பதினெட்டாம் நாள் போரில் உலூகனோடு முதல் முறையாகப் போரிட்டான். சகதேவனுக்கு உலூகன் எந்த விதத்திலும் சமமான வீரனல்லன் என்று உணர்ந்திருந்த சகுனி இதைக் கேள்விப்பட்டு அங்கே விரைந்தார். அதற்குள் உலூகன் இறந்திருந்தான். ஆத்திரம் தலைக்கேறிய சகுனி “உன் தோழனடா!” என்று உறுமியபடியே தன் வில்லை எடுத்தார். ஆனால் ஓரிரு நிமிஷங்களில் அவரது வேகம் குறைந்தது. அவர் இறக்கும்போதும் அவர் முகம் மலர்ந்தே இருந்தது. சகதேவனே “சகுனி என்னுடன் போரிடவே இல்லை, என் கை மூலம் இறக்கவே விரும்பியது போல இருந்தது” என்று கண்ணனிடம் வியந்தான். கண்ணனின் புன்னகை வழக்கம் போலவே ஒரு விடுகதையாகவே இருந்தது. போர் முடிந்தபின் கர்ணனுக்கு நீத்தார் கடன் செலுத்துமாறு யுதிஷ்டிரனை குந்தி கேட்டது பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஹஸ்தினபுரத்துக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அண்ணனைக் கொன்றவன் அரியணை ஏறுவதா என்று ஹஸ்தினபுரத்தின் பல குலக்குழுத் தலைவர்கள் முணுமுணுத்தனர். அதனால்தானோ என்னவோ குந்தி நகுல சகதேவனிடம் சகுனிக்கு ரகசியமாகவே நீத்தார் கடன் செலுத்துமாறு ஆணை இட்டாள். ************ பின்குறிப்புகள்: விளக்கம் #1: ஒரு அக்ரோணி சேனை என்பது 21,870 ரதப்படை, 21,870 யானைப்படை, 65,610 குதிரைப்படை, மற்றும் 109,350 காலாட்படை கொண்டது. விளக்கம் #2: சம்சப்தகர்கள் எதிரிப் படையின் வீரன் ஒருவனுக்கு இறக்கும் வரை போரிட சவால் விடுபவர்கள். அர்ஜுனனோடு போரிடும் சம்சப்தக வீரர்கள் ஏறக்குறைய தற்கொலைப் படைதான். அர்ஜுன்னை போர்க்களத்திலிருந்து வெகு தூரம் பிரிக்க துரோணர் செய்த தந்திரம் இது. விளக்கம் #3: கர்ணனின் முதல் எதிரி அர்ஜுனன்தான் என்றாலும் கர்ணன் அர்ஜுனனோடு நேருக்கு நேராக நின்று போரிடுவது பதினாறாம் நாளில்தான். அதிலும் 12, 13 நாட்கள் போரில் அர்ஜுனனால் தவிர்க்க முடியாத சவாலை விடுத்து அவனோடு நேருக்கு நேர் நின்று போரிட துரோணரும் கௌரவப் படையும் சம்சப்தக வீரர்களைத் தேடும்போது கூட கர்ணன் முன்வருவதில்லை. பதினான்காம் நாள் போரில் அபிமன்யுவுக்காக பழி வாங்க அர்ஜுனன் கௌரவர்களின் வியூகத்திற்குள் ஊடுருவிச் சென்று ஜயத்ரதனைத் தேடும்போது கூட கர்ணன் முன்னின்று அர்ஜுனனினடம் போரிடவில்லை. அப்போது துரியோதனன் கூட அர்ஜுனனை தேடிச் சென்று போரிடுகிறான், ஆனால் கர்ணன் அர்ஜுனனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இத்தனைக்கும் கர்ணனிடம் யாரையும் கொல்லக் கூடிய சக்தி ஆயுதம் இருக்கிறது, அர்ஜுனன் இறந்தால் பாண்டவர்கள் தோற்பது உறுதி. கடோத்கஜன் கௌரவ சேனையை அழிக்கும்போது சக்தி ஆயுதத்தை பிரயோகிக்கும்படி சொல்லும் துரோணரும் துரியோதனனும் அதற்கு முன் அவனிடம் அப்படி வலியுறுத்துவதில்லை. ஏன்? கிருஷ்ணன் தன் மாயையால் கர்ணன் அர்ஜுனனோடு போரிடுவதைத் தவிர்த்தான், கடோத்கஜன் சக்தி ஆயுதத்தால் இறந்தபோது கடோத்கஜனை தியாகம் செய்து அர்ஜுனனைக் காப்பாற்றிவிட்டோம் என்று மகிழ்ந்தான் என்று சொல்வதுண்டு. இது என்னுடைய கற்பனைத் தீர்வு. https://tamilhindu.com/2015/03/ரிஷிமூலம்-சிறுகதை/
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  15. சித்தாந்த வினா விடை- தொடர் 5 - அருணைவடிவேல் முதலியார் அளவைகளும் மதங்களும் 'காட்சி, கருதல், உரை' என்னும் மூவகை அளவைகளில், உலகாயதர் காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்வர். ஏனைய அளவைகளை ஏற்க மாட்டார்கள். மாணவன்: 'உலகாயதர்' எனப்படுவோர் யார்? ஆசிரியர்: 'உலகம் ஒன்றே உண்டு; ஏனைய உயிர், இறைவன் முதலிய பொருள்களுள் ஒன்றும் இல்லை' என்போரே உலகாயதர். முதன்மையான பொருள்களை, 'இல்லை' எனக் கூறுதலால், இவர் 'நாத்திகர்' எனப்படுவர். மாணவன்: உலகாயதர் உரையளவையேயன்றி அனுமான அளவையைத் தானும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், புகையைக் கண்டபோது, 'இங்கு நெருப்பு உண்டு' என்று, அதனைப் பாராமலே இவர் உணரமாட்டாரோ? ஆசிரியர்: உணர்வர், ஆயினும் அவ்வாறு உணர்வதையும் அவர், 'காட்சி' எனக் கொள்வர், 'அனுமானம்' எனக் கொள்வதில்லை. மாணவன்: அனுமானத்தை, அவர், 'காட்சி' என்பது எவ்வாறு? ஆசிரியர்: புகையுள்ள இடத்திலெல்லாம் நெருப்பு இருப்பது பல இடங்களில் காட்சியால் உணரப்பட்டதே, ஆகையால், ஓர் இடத்தில் நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு நெருப்பு உண்டு எனத் துணிதலும் காட்சி பற்றித் துணிதலே என்பர் அவர். மாணவன்: அப்படி கூறுதலில் தவறு என்ன? ஆசிரியர்: அதில் தவறு யாதும் இல்லையோ? ஓர் இடத்தில் நெருப்பைக் கண்ணாறகண்டு, 'இங்கு நெருப்பு உள்ளது' என உணர்வதும், நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு இங்கும் நெருப்பு உள்ளது' என்று உணர்வதும் ஆகிய இரண்டும் ஒன்றுதானோ? 'ஒன்றுதான்” என்றால், விளக்கை ஓர் இடத்தில் அதன் ஒளியினால் மனங்கவரப்பட்டுத் தீண்டி, அது சுடுதலை மெய்யினால் உற்றறிந்த ஒருவன், பிறிதோர் இடத்தில் விளக்கைக் வெறும் கண்களால் மட்டும் கண்டு அதை பற்றித் தீண்டாது, அதன் முன் நின்றே இது சுடும் எனத் துணியுமிடத்தும் முன் தீண்டியது போல அந்தச் சூட்டினால் தாக்குண்டது போல அவன் தாக்குண்ணுதல் வேண்டும். அவ்வான்றி, 'தீண்டியறிந்ததும் வேறே; தீண்டாது கருதி அறிந்ததும் வேறே என்பது அவர்களுக்கு இரண்டும் ஒன்று தான் என்பது போல. ஆகவே, பொருள்களை நேரே காணாமல், ஓர் ஏதுவைக்கொண்டு கருதியுணரும் உணர்வையும் 'காட்சியுணர்வே' எனக் கூறுவது, கூற்றுப் போலியே என்பது தெளிவாகின்றதா? மாணவன்: ஆம்! ஆம்!! நன்கு தெளிவித்தருளினீர்கள்! கருதலளவையையும், 'காட்சியளவையே' எனக் கூறுதல் அறிவுடையோர்க்கு சிரிப்பு வரவழைப்பது என்பதை இப்போது நன்கு உணர்கின்றேன். ஆகவே, உலகாயதர் கருதலளவை பற்றி அறியாது, அதை ஏற்றுக்கொண்டு, 'யாம்' கருதலளவையை ஏற்பதில்லை' எனக் கூறுகின்றனர் என்பது விளங்குகின்றது. உரையளவையையும் இவ்வாறு தம்மை அறியாது அவர் ஏற்றுக்கொள்கின்றனரோ? ஆசிரியர்: 'ஆகமப் பிரமாணம்' எனப்படும் உரையளவையை உலகாயதர் இவ்வளவு தெளிவாக உடன்படவில்லை" ஆயினும், ஒருவாறு உடன்பட்டே வருகின்றனர். மாணவன்: அது எவ்வாறு? ஆசிரியர்: 'கடவுள் உண்டு; நல்வினை தீவினை உண்டு; சுவர்க்கம் நரகங்கள் உண்டு; மறுபிறப்பு உண்டு' என்பன போலக் கூறும் வாக்கியங்களை உலகாயதர் ஏற்றுக் கொள்ளாது இகழ்ந்தாலும், சோதிட நூல், மாந்திரீக நூல், மருத்துவ நூல் (வைத்திய சாத்திரம்) முதலியவற்றை ஓர் அளவிலேனும் உடன் படவேண்டியவராகின்றனர். ஏனெனில், அவற்றில் சொல்லப் பட்டவை பயன்தருதல் அவர்க்கும் சில சில சமயங்களில் அனுபவமாகின்றது. அப்பொருள்கள் 'காட்சி கருதல்களால் அறிய வராது' என்பதை அவரும் உணர்வர். ஆகவே, அனுபவத்தில் மெய்யாகக் காணப்படுவதை மெய்யல்ல என்று கூறினால், அவர்கள் உண்மைகள் பலவற்றை இழப்பர். இனி, பௌத்தர் மூன்று அளவைகளையும் உடன்பட்டே, உரையளவை வேறு அளவையன்று, அனுமானமே' என்பர். ஆகவே, அவர் 'காட்சி, கருதல் என அளவை இரண்டே' எனக் கொள்வர். மாணவன்: உரையளவையாகிய ஆகமப் பிரமாணத்தை அவர் அனுமானப் பிரமாணம் என்பது எவ்வாறு? ஆசிரியர்: அதாவது, நாம் 'மரம் பூத்தது' என்ற சொற்கள் மூலம் இயல்பு ஏதுவைக் கொண்டு, அப்பொருளைக் காணாமலே உணர்வதை அனுமானம் எனக் கூறியதுபோல, பௌத்தர்கள், 'நூலை, ஏதுவாகக் கொண்டு நூற்பொருளை உணர்தலும் அனுமானமே' என்பர். மாணவன்: அவர் கூற்றுப் பொருந்தாதவாறு இருப்பது எப்படி? ஆசிரியர்: அனுமானமாவது, துணியப்படும் பொருளோடு அதனைத் துணிதற்கு ஏதுவாய் உள்ளபொருள் எவ்விடத்தும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை உணர்ந்த பின் நிகழ்வது. ஆனால், காட்சி என்பது கருதல்களால் அறியப்படாது. உரையளவையினாலே அறியப்படுவனவாகிய மேலுலகம் கீழுலகம் முதலிய வற்றோடு, நூலாகிய ஏதுப்பொருள் உடன் நிகழ்தலை நாம் நூலையுணர்தற்கு முன்னர் உணருமாறில்லை; நூலால் அவற்றை உணர்ந்து, உணர்ந்தவாறே துணிகின்றோம்; ஆகையால், நூல் ஏதுவும், அதிற்சொல்லப்படும் பொருள் துணிபொருளும் ஆகாது. ஆகவே, உரையளவை அனுமான அளவை இல்லை. இனி, மரம் முதலிய பொருள்களையும், அவை 'மரம்' முதலிய பெயர்களாலேயே குறிக்கப்படுவன என்பதையும் முன்னர் உணர்ந்து, அதன்பின்னே, 'மரம்' முதலிய சொற்களை பொருளாகக் கொண்டு அப்பொருள்களை உணர்தலால், அது அனுமானமாம். எனவே, 'காட்சி, கருதல், உரை என்னும் மூன்றளவைகளும் இன்றிமையாத அளவைகளாகும். உலகாயதரும், பௌத்தரும் தவிர ஏனையோர் அனைவரும் எல்லா அளவைகளையும் உடன்படுவர். இங்கு மற்றொன்றை உணர்தல் வேண்டும். அதாவது, பௌத்தர் ஆகமப்பிரமாணத்தையும் அனுமானம் என்பர். அதுபோலத் தார்க்கிகர், மரம் முதலிய சொற்கள் பற்றி மரம் முதலிய பொருள்களை உணர்தலாகிய அனுமானத்தையும் உரையளவை; அஃதாவது 'சத்தப் பிரமாணம்' என்பர். காட்சியளவையினாலும், கருதலளவையினாலும் அறிய முடியாத பொருள்களை அறிவிப்பதே உரையளவை ஆகையால், மரம் முதலியன காட்சி முதலியவற்றால் அறியப்படுவனவாய் இருந்தாலும், மரம் முதலிய பொருள்களை மரம் முதலிய சொற்களைச் கொண்டு உணர்தல் உரையளவையாகாது; அனுமான அளவையாகும். மாணவன்: அளவைகள் பற்றி அறியவேண்டியது இவ்வளவுதானா? அளக்கப்படும் பொருளியல்பு ஆசிரியர்: இல்லை, இன்னும் சில உள்ளன; இதுவரை அளவைகள் பற்றிச் சில கூறினோம்; இனி அளக்கப்படும் பொருள்களது (பிரமேயங்களது) இயல்பு பற்றிச் சில கூறுதல் வேண்டும். மாணவன்: அவை இன்றியமையாதனவாயின், அவைகளையும் தெரிவித்தருளல் வேண்டும். ஆசிரியர்: மேற்கூறிய அளவைகளைக்கொண்டு பொருள்களை அறியுமிடத்து அப்பொருள்கள் இருவகையில் அறியப்படும். அவை, 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பன. மாணவன்: பொதுவியல்பு, சிறப்பியல்பு என்பன யாவை? ஆசிரியர்: பொருள்களின் இனம், 'தன்னினம்' வேற்றினம்' என இரண்டு உண்டு. எடுத்துக்காட்டாக 'மாமரம்' என்னும் பொருளுக்கு, 'பலா, புளி' முதலிய மரங்கள் யாவும் தன்னினம்; விலங்கு, பறவை, மக்கள் முதலிய பொருள்கள் யாவும் வேற்றினம். இவற்றுள், வேற்றினத்தில் இல்லாது தன் இனம் முழுவதிலும் உள்ள தன்மை பொதுவியல்பு; வேற்றினத்திலும் இல்லாது, தன் இனத்திலும் இல்லாது தன்னிடத்தில் மட்டும் உள்ள தன்மை சிறப்பியல்பு. எடுத்துக்காட்டாக:- 'மாமரம்' என்னும் பொருளில் 'மா' என்னும் தன்மையும், 'மரம்' என்னும் தன்மையும் ஆக இரு தன்மைகள் உள்ளன: அவற்றுள் 'மரம்' என்னும் தன்மை விலங்கு, பறவை, முதலிய வேற்றினங்களில் இல்லாது 'பலா, புளி' முதலிய தன் இனம் எல்லாவற்றிலும் இருப்பதால், அது பொதுவியல்பு. 'மா' என்னும் தன்மை, 'விலங்கு, பறவை' முதலிய வேற்றினத்திலும் இல்லாது, 'பலா புளி' முதலிய தன் இனத்திலும் இல்லாது, தன்னிடத்தில் மட்டும் இருத்தலால், அது சிறப்பியல்பு. ஆகவே, 'மாமரம்' என்னும் பொருளை நாம் அறியுமிடத்து முதற்கண் 'மரம்' என்னும் பொதுத்தன்மையும், பின்னர் 'மா, என்னும் சிறப்புத் தன்மையும் ஆகிய இருவகையில் அறிகின்றோம். இதையே சிறப்பியல்பு, தன்னியல்பு' என்று சொல்லப்படும். இவ்வாறு, ஒரு பொருளை, பொதுவியல்பு வகையிலும், சிறப்பியல்பு வகையிலும் அறியும் அறிவே பிரமாணமாகும். இவ்விரண்டு வகையிலும் அன்றி 'மாமரத்தை' 'மனிதன்' முதலியன போல, வேற்றியல்பு வகையில் ஒருவனது அறிவு அறியுமாயின் அவ்வறிவு சிறிதும் பிரமாணமாகாது, முற்றிலும் "அப்பிரமாணமேயாம்". மாமரத்தை 'புளியமரம்' என்பதுபோலப் பொது வியல்பை உள்ளவாறு அறிந்து, சிறப்பியல்பைப் பிறழ அறியுமாயின், அவ்வறிவு, ஒரு வகையில் (பொதுவியல்பில்) பிரமாணமாயும், ஒரு வகையில் (சிறப்பியல்பில்) பிரமாணம் அன்றியும் இருக்கும். மாணவன்: ஒருவன் தனது அறிவினால் ஒரு பொருளை அறியுமிடத்து, அவ்வறிவைத் தவிர அவனுக்கு வேறு கருவி இல்லாமையால், அவ்வறிவு அப்பொருளை உள்ளவாறு அறிகின்றது அல்லது தவறாக அறிகின்றது என்பதை அறிவது எப்படி? ஆசிரியர்: இது அளவை இயலில் ஒரு முதன்மையான வினா. இதற்குத் தார்க்கிகர் முதலியோர், 'ஒருவனது அறிவு பொருள்களை அறியுமிடத்து, அது உண்மையறிவு அல்லது பொய்யறிவு என்பது, அவ்வறிவின் வழியே முயன்று, குறித்த பயனை அடைதல் அல்லது அடையாமையால் பின்னர் அறியப்படும்' என்பர். அப்படிக் கூறின், 'அப்பயன்தானும் உண்மை அல்லது பொய் என்பது எவ்வாறறியப்படும்?' என்னும் வினா எழும். அங்ஙனம் எழும் வினாவிற்கு, 'அதுவும் வேறொரு வகையாலே அறியப்படும்' என விடை கூற வேண்டிவரும்; அவ்வாறு கூறின், மேலும் அவ்வினா நிகழ, இப்படி வரம்பின்றி வினா எழுந்து கொண்டே இருக்கும். ஆதலால், ஓர் அறிவு, தான் பிரமாணம் என்பதைத் தானே அறியும்; பிரமாணம் இல்லையென்பதை மட்டும் வேறொன்றால் அறியும் என்பதே சித்தாந்தமாகும். 'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பன பொருள்களை நுனித்து நோக்கும் வகைக்கேற்ப வேறு வேறாய் நுணுகிச் செல்லும். எடுத்துக்காட்டாக, 'இது மாமரம்; அது பலாமரம்' என உணருமிடத்து, மரத்தன்மை பொதுவியல்பு; மாத் தன்மையும் பலாத் தன்மையும் சிறப்பியல்பு. 'இது தேமாமரம், அது புளிமா மரம்' என உணருமிடத்து; மாமரத் தன்மை பொது வியல்பு; தேத் தன்மையும் புளித் தன்மையும் சிறப்பியல்பு. 'இத்தேமா மரம் நன்று; அத்தே மாமரம் தீது' மிடத்து தேமாமரம் முழுவதும் பொதுவியல்பு; 'இது அது எனச் சுட்டுதற்கு ஏதுவாய் நின்ற தன்மை சிறப்பியல்பு. தார்க்கிகர், பொதுவியல்பை, 'சாமானியம் அல்லது சாதி' என்றும், சிறப்பியல்பை, 'விசேடம் அல்லது இலக்கணம்' என்றும் கூறுவர். இவ்விடத்தில் ஒன்றை இன்றியமையாது உணர்தல் வேண்டும். அளவை நூல் முறைப்படி கூறப்படும் 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பது வேறு! சைவசித்தாந்தம் தனது நெறியிலே தான் கூறும் 'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பது வேறு; அவற்றுள் அளவை நூல் முறைப்படி சொல்லப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளே இங்குச் சொல்லப்பட்டன; சைவசித்தாந்தம் கூறும் பொதுவியல்பு சிறப்பியல்புகளைப் பின்னர்க் கூறுவோம். https://www.siddhantham.in/2025/09/5_16.html
  16. மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.! Vhg பிப்ரவரி 21, 2026 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20.02.2026) உயிரிழந்துள்ளார் . மட்டக்களப்பு வைத்தியசாலையில் திறமையான ஒரு மருத்துவர் அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவர் ஆவார். இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். https://www.battinatham.com/2026/02/blog-post_115.html
  17. "மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 21 Feb, 2026 | 04:19 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார். நாம் யுத்தம் செய்தது தமிழ் மக்களுடன் அல்ல, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுடனேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். புலம்பெயர் அமைப்புகளும் ஜே.வி.பி அரசாங்கமும் கூறுவது போல மஹிந்த ராஜபக்ஷ இரத்த தாகம் கொண்டவர் அல்ல என்பதை பொன்சேகா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர். அதேபோல், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை 'ராஜபக்ஷ நிக்காய' (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது. பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும். மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்" என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239238
  18. யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 21 February 2026 ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் எங்கே ? அரசே பதில் சொல் , ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் , நீதி எங்கே ? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியுமே அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/448005/attention-grabbing-demonstration-in-jaffna
  19. செய்தி - மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க 10,000 கட்டணம் - மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்! ############################################ Sundarampillai Jeyaratnam உது நடக்கற காரியமோ வெடி கொளுத்தற காவாலிகளை உவையளாலை கட்டப்படுத்த முடியுமோ உவையும் தேர்தல்லை வெண்டா வெடியல்லே கொளுத்திகினம். ######## Vinothan Kandasamy வலி மேற்கு பிரதேச இடுகாடுகள்( சுடலை) திருத்தி அமைக்க இவ்வாறான வருவாய் பயன் படும். ######## Sritharan Rajathurai மிக வேகமாகச் செய்த வேண்டிய இரண்டு செயற்பாடுகள்: வெடி கொளுத்துவதை தடுத்தல், மற்றும் ஒலிபெருக்கி பாவனைகளை இல்லாது செய்தல். நிறையப் பேருக்கு நன்மை கிடைக்கும். ######## பக்திப் பரவசம். இனி எங்க செத்த வீடு நடக்குது, வெடி கொழுத்திறிங்களா எண்டு கேட்டு பிரதேச உறுப்பினர் காசுக்கு போவினம் போல..😆😆😝காசைக்கட்டிப்போட்டுத்தான் வெடி கொடுத்த சொல்லுவினம்...Body எரிச்சாப்பிறகுதான் காசே குடுக்கிறது... இனி சாக முதலே வெடி கொழுத்த அனுமதி எடுத்து காசு கட்டணும் போல. ######## SK Handee Babu Babugi இரண்டு இலட்சுத்துக்கு மேல் வெடி வெடிக்கிறவங்களுக்கு.. அந்த காசு எல்லாம் பிச்சைக்காசு. ##################### Priyanthini Sasitharan கல்யாண வீட்டுக்கும் வெடி செத்த வீட்டுக்கும் வெடி வெடி எதுக்கு என்றே தெரியவில்லை என்ன நிகழ்வென்றே கண்டு பிடிக்க முடியவில்லை 😊
  20. அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா. தமிழின் மிகச்சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இக்காலகட்டத்தில் ஆன்மீகத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிழையான எண்ணப் போக்குகளை மாற்றி இதுதான் சரியான ஆன்மீக எண்ணம் என்பதை உலகுக்கு சொல்ல நினைக்கின்ற அற்புதமான நூல்..... உண்மையான ஆன்மீகம் எது என கூறுகின்ற ஒப்பற்ற ஆன்மீக செய்திகள் அடங்கியிருக்கின்ற நூல் இந்த நூல்.,... ஆன்மீகத்தில் கரை கண்ட நபர்கள் இல்லை எனலாம். அதனை மாற்றுவதற்கு முயற்சி செய்த நபராக இந்த நூலின் ஆசிரியர் மரியாதைக்குரிய நாகரத்தினம் புஷ்பநாதன் அவர்கள் இருக்கின்றார்கள்...... திருநின்றவூர் #கவியமுதுபதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தற்பொழுது லண்டனில் வெளியிடப்படுகிறது.....
  21. காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ? adminFebruary 20, 2026 ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்தப் பாலத்தை அமைப்பதற்கு ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி கணிசமான நிதி தேவைப்படும். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அல்லது நட்பு நாடுகளின் நீண்டகால சலுகைக்கடன் உதவியைப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கான (Feasibility Study) நிதி ஒதுக்கப்படவுள்ளது. கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான நிதி, துறைமுக அதிகார சபையின் (SLPA) சொந்த நிதி மற்றும் அரசாங்கத்தின் “நீலப் பொருளாதார” (Blue Economy) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படவுள்ளது. அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் அறிவிப்பின்படி, பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச தரத்திலான கேள்வி மனுக்கள் கோரப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்படுவர்.பாலத்திற்கான அடிக்கல் நடும் விழா மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் கடற்கோட்டைப் பகுதிகளை ஒரு விசேட சுற்றுலா வலயங்களாக பிரகடனப்படுத்த சுற்றுலா அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே நவீன மின்சார படகுச் சேவைகளை (Electric Ferries) அறிமுகப்படுத்தவும் அமைச்சர்கள் குழு ஆர்வம் காட்டியுள்ளது. https://globaltamilnews.net/2026/229447/
  22. பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம். adminFebruary 21, 2026 மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர். தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர் மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/229476/
  23. உலக அரசியலில் தமக்கு தாமே உதவுபவர்களுக்கே கடவுள் உதவுவார் என கூறுகிறார்கள். ஈரானின் உள்ளக அரசியல் நிலை உறுதித்தன்மையில் இல்லாமையால் அந்த ஆட்சி பீடத்தினை ஆதரிக்கும் தரப்பு ஒரு மதில் மேல் பூனை நிலையில் உள்ளதாக கருதுகிறேன். அமெரிக்க படை நகர்வுகள் பில்லியஙளை இழக்கின்ற நிலையில் இந்த நிகழ்வு வெறும் அச்சுறுத்தல் நடவடிக்கையாக முடிவடைந்து போக ப்போவதில்லை, ஆனால் பலரது கேள்வியாக இருப்பது அமெரிக்க இராணுவத்தினால் ஒரு முழுமையான மரபு வழிப்போருக்கு அமெரிக்கா தயாராகவுள்ளதா? என்பதாகும், நிச்சயமாக அமெரிக்காவிற்கு அந்த பலம் தற்போது இல்லை என்றே கருதுகிறேன், அமெரிக்காவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கலாம். ஒரு நாட்டின் பலமே அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது, வட கொரியாவிடம் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல, ஈரான் இந்த சமரசத்தினை ஏற்றுக்கொள்ளாது (எந்த ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடும் ஏற்காது). ஈரானிற்கு சமாதானமாக செல்ல முயன்றாலும் அழிவே கிடைக்கும் அந்த நிலையில் ஈரானுக்கு போர் ஒரு சிறிய சாதக நிலையினை கொண்டதாகவுள்ளது. இலங்கை உள்நாட்டு போரில் உலக தரப்புக்கள் அனைத்தும் ஒன்றினைந்து ஒரே கோட்டில் இருந்த நிலை இப்போது இல்லை (1990 -2017 Unipolar world order), உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்திலும் அதே போல உலக சக்திகள் பெரும்பாலானவை ஒரு தரப்பில் நிற்க முற்பட்டாலும் பலதுருவ உலக யதார்த்தம் அதனை கேள்வி குறியாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த போர் முயற்சி அமெரிக்காவினை ஒரு மீழ முடியா சிக்கலில் மாட்டி விடலாம். போர்களுக்கான காரணங்களில் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது, அதிபர் ட்ரம்பிற்கு உள்நாட்டில் ஏற்படும் அழுத்தங்களின் விழைவாக இந்த போரினை அமெரிக்கா தொடங்க முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.
  24. சில நாட்களுக்கு முன்பு USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டில் விமான தள செயல்பாடுகள். அமெரிக்க கடற்படை புகைப்படம். ஈரானுடனான ஒரு குறிப்பிடத்தக்க போருக்கு அமெரிக்கா தயாராக இல்லை. பதிவிட்டவர்மேத்யூ வாலின்பிப்ரவரி 20, 2026 அன்று பிப்ரவரி 19 ஆம் தேதி ஜனாதிபதி டிரம்ப் ஈரான் தொடர்பான தனது நடவடிக்கையை 10 நாட்களுக்குள் தீர்மானிப்பதாகக் கூறிய நிலையில் , அமெரிக்கா போருக்குச் செல்கிறதா என்று பலர் யோசித்து வருகின்றனர். நாடு முழுவதும் தற்போதைய படை நிலைப்பாட்டை ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியும், இது அமெரிக்கா நீண்டகாலப் போருக்கு நிலைநிறுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் ஒரு சாத்தியமான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு சமீபத்தில்தான் மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது , மேலும் அது நேரடியாக ஒரு இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கக்கூடிய நிலையை அடைய நேரம் எடுக்கும். அது அந்த நிலையை அடையும் போது, அடுத்த கேள்வி: ஒரு இராணுவ நடவடிக்கை சரியாக என்ன சாதிக்க வேண்டும்? தரையில் எந்த சாத்தியமான ஆயுதமேந்திய எதிர்ப்பும் இல்லாததாலும், பிராந்தியத்தை உடல் ரீதியாகக் கைப்பற்ற அமெரிக்க துருப்புக்களும் இல்லாததாலும், 93 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டிற்கு எதிரான வான்வழித் தாக்குதல் இன்னும் வகுக்கப்படாத இலக்குகளை எவ்வாறு அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "நடக்கக்கூடிய சிறந்த விஷயம்" என்று டிரம்ப் விவரித்த ஆட்சி மாற்றம் அசாதாரணமாக கடினமாக இருக்கும். ஈரான் வெனிசுலா அல்ல, மேலும் தெஹ்ரான் அமெரிக்க கடற்படைப் படைகளிலிருந்து கராகஸை விட மிகவும் உள்நாட்டில் உள்ளது, இதனால் திறமையான கொல்ல அல்லது கைப்பற்றும் நடவடிக்கை சாத்தியமில்லை. ஆனால் ஒரு நேரடி படையெடுப்பு அட்டைகளில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 2003 ஈராக் படையெடுப்பில் அமெரிக்க போர் வரிசையில் ஐந்து கேரியர் போர் குழுக்கள் மற்றும் 170,000 படையெடுக்கும் துருப்புக்கள் இருந்தன , மேலும் அந்த நிலையை நெருங்கும் எதுவும் இன்று தியேட்டரில் இல்லை. அந்த வகையான படையை உருவாக்குவதற்கு பல மாதங்களாக வேண்டுமென்றே முயற்சி எடுக்கப்படுகிறது. அமெரிக்காவால் எல்லை மற்றும் கால அளவு இரண்டிலும் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை எடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. ஜூன் 2025 இல் ஈரானின் அணுசக்தி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல் நிச்சயமாக அந்தத் திறனை நிரூபித்தது. ஆனால் "ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக அழித்தல்" என்று விவரிக்கப்பட்ட அந்தத் தாக்குதல்களின் அறிவிக்கப்பட்ட வெற்றியைக் கருத்தில் கொண்டு, வரையறுக்கப்பட்ட தொடர் தாக்குதல்கள் சரியாக என்ன சாதிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை - டிரம்ப் நிர்வாகம் 2025 தாக்குதல்கள் விவரிக்கப்பட்டதை நிறைவேற்றத் தவறிவிட்டன என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாவிட்டால். பெரும்பாலும், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஒரு ஆக்ரோஷமான ஆனால் குறுகிய கால தாக்குதலைக் காண்போம், அதைத் தொடர்ந்து "என்ன நடக்கிறது என்று காத்திருந்து பாருங்கள்" என்ற காலகட்டம் இருக்கும். கோட்பாட்டில், அத்தகைய தாக்குதல் ஈரானை அதன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் அதிக சலுகைகளை வழங்க கட்டாயப்படுத்துவதற்காகவும் , அதே நேரத்தில் அணுசக்தித் தடுப்பை விரும்புவதற்கான உள் நியாயத்தை உருவாக்குவதற்காகவும் இருக்கலாம். இந்த இராணுவத் தாக்குதல்கள் அழுத்தத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஈரானிய ஆட்சி அதன் உயிர்வாழ்வு அச்சுறுத்தலைக் காண வேண்டும், பின்னர் சலுகைகளை வழங்குவதன் மூலம் பாதுகாப்பாக உணர வேண்டும் - அந்த சலுகைகள் தற்போதைய மற்றும் எதிர்கால அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறும் என்ற உத்தரவாதங்களுடன். அதிபர் டிரம்பின் கீழ் அமெரிக்காவுடனான ஈரானின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால், ஆயத்துல்லாவை நம்புவதற்கு எந்த ஊக்கமும் இல்லை. இது தற்செயலாக மிக நீண்ட போருக்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமாக சாத்தியமாகும். முழுமையான ஆட்சி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ஆயத்துல்லா புரட்சியை விரிவாக நிறுவனமயமாக்கியதன் அர்த்தம், தெளிவான தலைமைத்துவ வழிகாட்டுதல் இல்லாத நிலையில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் கூறுகள் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஈரானின் வன்முறை துணை ராணுவப் படையான பாசிஜ் மிலிஷியாவின் உறுப்பினர்கள், உள் எதிர்ப்பை நசுக்க விரைவாகச் செயல்படுவார்கள், மேலும் மில்லியன் கணக்கான ஈரானிய குடிமக்கள் தெருக்களில் அவர்களைக் கைப்பற்றாவிட்டால் அவ்வாறு செய்ய முடியும். இருப்பினும், நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடந்தாலும், குறிப்பாக, ஜனாதிபதி டிரம்ப் கூறுவது போல், சமீபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் 32,000 பேர் கொல்லப்பட்ட பிறகு, நாட்டின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றக்கூடிய ஒரு சாத்தியமான எதிர்க்கட்சி இயக்கத்தைக் குறிக்கவில்லை . எதிர்க்கட்சி குழுக்கள் இராணுவ ஆயுதக் கிடங்குகளை சூறையாடுவதில் வெற்றி பெற்றாலும், அமைப்பு மற்றும் ஒற்றுமை இல்லாதது லிபியா பாணியிலான போராளிகளின் குழப்பத்திற்கு வழிவகுக்கும், மேலும் ஆயத்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அமைதியின் பெயரில் தங்கள் ஆயுதங்களை கைவிட வாய்ப்பில்லை. நீண்ட கால மோதலுக்கு, குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்காக பாடுபடும் மோதலுக்கு அமெரிக்கா வெறுமனே தயாராக இல்லை. அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதற்கான எந்த திட்டமும் இல்லை, நாட்டை நிலைப்படுத்தக்கூடிய எந்த அமெரிக்காவோ அல்லது சர்வதேசப் படையோ இல்லை, மேலும் அத்தகைய நடவடிக்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை நமக்குத் தெரிவிக்க கடந்த பல தசாப்தங்களிலிருந்து எந்தப் பாடங்களும் இல்லை. எந்த பெரிய சர்வதேச கூட்டணியும் கூடவில்லை. உண்மையில், அமெரிக்காவின் தீவிர நட்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய இராச்சியம், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்த டியாகோ கார்சியாவில் உள்ள அதன் விமானத் தளத்தை வழங்க மறுத்துவிட்டது . உலகளாவிய ஆதரவை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை, ஈரானை தாக்க அமெரிக்க மக்களிடம் குறிப்பிடத்தக்க விருப்பமும் இல்லை . அமெரிக்க இராணுவமும் பலவீனமாக உள்ளது. தற்போது பயணத்தில் உள்ள ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, அமெரிக்காவின் புதிய விமானம் மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாகும், ஆனால் கரீபியனில் நடவடிக்கைகளை நடத்திய பிறகு அதன் கடமை சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கடலில் 8 மாதங்களை நெருங்குகிறது, இந்த கால அளவு அதில் பணியாற்றும் மக்களை பாதிக்கிறது. அமெரிக்காவின் பதினொரு செயலில் உள்ள கடமை தாங்கி கப்பலில் ஆறு தற்போது பராமரிப்பில் உள்ளன , அதாவது அமெரிக்கா தனது கிடைக்கக்கூடிய சொத்துக்களை எங்கு அனுப்புகிறது என்பதை விவேகத்துடன் தேர்வு செய்ய வேண்டும். சீனாவிலிருந்து அச்சுறுத்தல்கள், உக்ரைனில் நடந்து வரும் மோதல் மற்றும் வட கொரியா இன்னும் ஆபத்தை ஏற்படுத்துவதால், அமெரிக்கா ஒரு நெருக்கடியைத் தடுக்க அல்லது பதிலளிக்க பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற சில மூலதனக் கப்பல்களைக் கொண்டுள்ளது - இவை அனைத்தும் விருப்ப இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது. மேலும், சில கப்பல்கள், தீர்ந்துபோன பணியாளர்கள் மற்றும் தேய்ந்த உபகரணங்கள் என்பது விபத்துகளுக்கான அதிக வாய்ப்பைக் குறிக்கிறது. USS ஹாரி எஸ். ட்ரூமனின் 2025 வரிசைப்படுத்தல் பல ஆபத்தான சம்பவங்களைக் காட்டியது . இந்த மாதம் மட்டும், ஒரு அமெரிக்க நாசகார மற்றும் கடற்படை மறுவிநியோகக் கப்பல் மோதியது . ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல தசாப்தங்களாக நடந்த மோதல்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அமெரிக்காவின் தலைமைக்கு உடனடியாகத் தெளிவாகத் தெரியும். இந்த நாடு தான் ஈடுபட்ட மோதல்களின் பின்விளைவுகளைக் கையாள்வதில் மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை, ஈரான் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை, மேலும் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கும்போது "நாங்கள் கண்டுபிடிப்போம்" என்ற அணுகுமுறை போதுமானதாக இல்லை. உண்மையில் குழப்பம் என்பது விரும்பிய முடிவா? இல்லையென்றால், வேறுவிதமாக உறுதி செய்வதற்கான திட்டம் என்ன? American Security ProjectThe U.S. is Unprepared for a Significant War with Iran.
  25. ஆறுதல் அளிக்கும் வெற்றியுடன் நாடு திரும்புகிறது முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா Published By: Vishnu 20 Feb, 2026 | 10:32 PM (நெவில் அன்தனி) இந்த வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றை தவறவிட்ட முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா, கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஓமானுக்கு எதிரான கடைசி பி குழு லீக் போட்டியில் 9 விக்கெட்களால் ஈட்டிய ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. அதேவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் ஒரு வெற்றியைத் தானும் பெற முடியாமல் ஓமான் சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ளது. இந்தப் போட்டியுடன் ரி20 உலகக் கிண்ண முதல் சுற்று நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது. வசிம் அலி ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 32 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட அணித் தலைவர் ஜட்டிந்தர் சிங் (17), ஹம்மாத் மிர்ஸா (16), கரன் சோனவாலே (12) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் க்லென் மெக்ஸ்வெல் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சேவியர் பாட்லெட் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. மிச்செல் மார்ஷ் 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் ஆரம்ப விக்கெட்டில் 49 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்த ட்ரவிஸ் ஹெட் 32 ஓட்டங்களைப் பெற்றார். ஜொஷ் இங்லிஸ் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா. https://www.virakesari.lk/article/239193

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.