All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தற்போதைய தரவரிசையில் உகண்டா 21 ஆம் இடத்தில் இருக்கிறது. முதல் 20 இடங்களில் 19 அணிகள் இம்முறை உலக கிண்ண போட்டி விளையாடவுள்ளது. மற்றைய அணி வங்காளதேசம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் விளையாடவிட்டால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கொழும்பில் நடைபெறவுள்ள ஆரம்ப சுற்று போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக விளையாடும் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெறுமா அல்லது இந்தியாவுக்கு சார்பான ஐசிசி போட்டியை இந்தியாவில் நடாத்துமா?
-
கருத்து படங்கள்
- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
பராசக்தி படம் ஹிந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடுக்கபட்டதால் அதை பயன்படுத்த பாஜக நினைத்து இவர்களை பொங்கல் கொண்டாட அழைத்திருக்கலாம். மிரட்டியும் அழைத்திருக்கலாம். ஆனால் அநுரகுமார திசாநாயக்கவுடன் பொங்கல் கொண்டாடி செல்பி எடுக்க முண்டி அடித்தவர்களை விட அவர்கள் மேல்- யாழில் இந்திய குடியரசு தினம்!
யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533- பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!
பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2026/1461553- இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா! இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார். இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நீண்டிருக்கும் கர்தவ்ய பாதை, விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால பாரம்பரியம், நாட்டின் முன்னோடியில்லாத வளர்ச்சி முன்னேற்றம், வலுவான இராணுவ வலிமை, துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பு குடிமக்களின் தீவிர பங்கேற்பு ஆகியவற்றின் அசாதாரண கலவையைக் கொண்டிருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருவதோடு இது தொடங்கும்அங்கு அவர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற பிரமுகர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்ய பாதையில் உள்ள மரியாதை மேடைக்குச் செல்வார்கள். https://athavannews.com/2026/1461463- Anura.jpg
- பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டம் அதிகமான இடங்களை தவிர்த்தல் (சமூக இடைவெளி) போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Athavan Newsபிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிற- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கருத்தாளர்களுக்கு கருத்துகளால் பதில் கூற முடியாது எப்போதும் இனவாத வக்கிரத்தை கொட்டும் கேவலமான மனிதர்கள் பாடமெடுக்கும் நிலையில் நான் இல்லை. அரசியல் அறிவில் பூச்சியமான, வெறும் தனிமனித தாக்குதல் தான் அரசியல் என்று புரிந்து வைத்திருக்கும் யாழ்கள காமடிபீஸுக்கும் சேர்தது தான் கூறுகிறேன். 😂- Today
- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓம் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையாகும் கார் Dacia என்று தெரிந்து கொண்டேன் பலர் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையாகும் நட்சத்தரம் யேர்மன் வோல்ஸ் வாகன் Golf என்று தான் நினைத்து கொண்டிருக்கின்றனர்- இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
ஒரு டாட் பால் கூட விடாமல் சாதனை ரன் குவித்த அபிஷேக் அதிரடிக்கு கடைபிடித்த 'புது டெக்னிக்' பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 154 என்ற இலக்கை சேஸ் செய்கிறது இந்தியா. முதல் பந்திலேயே விக்கெட் போகிறது. ஆனால், எந்த இடத்திலும் தங்கள் அதிரடியைக் குறைக்காமல், நியூசிலாந்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் விளையாடி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டியது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என ஏற்கெனவே வென்றுவிட்டது இந்தியா. இது, தொடர்ச்சியாக இந்தியா பெற்றுள்ள 11வது டி20 தொடர் வெற்றி. தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை இதன்மூலம் சமன் செய்திருக்கிறது இந்திய அணி. 10 ஓவர்களுக்குள் சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய இலக்கு இதுதான். இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் நேற்றைய ஆட்டத்தில்தான் வந்தது. இந்தியாவின் இந்த சாதனை சேஸின் முக்கிய அங்கமாக இருந்தவர் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. 20 பந்துகளில் 340 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்கள் எடுத்தார் அபிஷேக். அவரும் தன் பங்குக்கு சில தனிநபர் சாதனைகளைப் படைத்தார். 14 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இந்தியர் ஒருவரின் இரண்டாவது அதிவேக டி20 அரைசதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டிகளில் 9 முறை 25 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் அரை சதம் கடந்துள்ளார். இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் - அவர் அடித்திருப்பதே மொத்தம் பத்து 50+ ஸ்கோர்கள் தான். அதில் 9 முறை 25 பந்துகளுக்குள்ளாகவே அவர் அரைசதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். முதல் பந்திலேயே சிக்ஸர் கௌஹாத்தியில் நடந்த இந்தப் போட்டியில், தன்னுடைய அதிரடியை முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டார் அபிஷேக். இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்திக்க தயாரானார் அபிஷேக். பந்து வீசத் தயாராக இருந்தது ஜேக்கப் டஃபி. இரண்டாவது போட்டியில் அபிஷேக் ஷர்மாவை 'கோல்டன் டக்' ஆக்கி வெளியேற்றியவர் அவர். ஆனால், சற்றும் யோசிக்காமல் முதல் பந்திலேயே இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்தார் அபிஷேக். அபிஷேக் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக ஆடிவரும் அணுகுமுறையைப் பார்க்கும்போது, அவர் முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடுவதாகத்தான் வல்லுநர்கள் பலருமே பேசுவார்கள். நேற்று அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தபோது, அந்த வாதத்துக்கு அது வலுசேர்ப்பது போலத்தான் இருந்தது. ஆனால், அப்படியான எண்ணத்தோடு களம் காண்பதில்லை என்கிறார் அபிஷேக். இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய அபிஷேக் ஷர்மா, "முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆடுவதில்லை. களத்தில் இருக்கும்போது என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி செய்கிறேன். அந்த நேரத்தில், என்னை முதல் பந்திலேயே விக்கெட் எடுக்கவேண்டும் என்றால் பௌலர் என்ன யோசித்து, எப்படிப் போடுவார் என்று நான் கணிக்கிட்டு, அதற்கு ஏற்ப ஆடுகிறேன்" என்றார் அவர். டஃபியின் பந்தில் அவர் அந்த சிக்ஸர் அடித்தது அப்படித்தான் இருந்தது. கடந்த போட்டியில், அவரது கால்காப்பை நோக்கி வந்த பந்தை நின்றுகொண்டே அடித்து ஸ்கொயர் லெக் திசையில் கேட்சானார் அபிஷேக். ஆனால், இம்முறை அவர் சில அடிகள் இறங்கி வரவே, அவர் கைகளை பலமாகச் சுழற்றுவதற்கான ஒரு வெளி கிடைத்துவிட்டது. அதனால், பந்து பவுண்டரி எல்லையையும் கடந்துவிட்டது. அதுவும் அந்தப் பந்து 88 மீட்டர் சென்று விழுந்தது. பட மூலாதாரம்,Getty Images அபிஷேக் கடைபிடிக்கும் புது டெக்னிக் அபிஷேக்கின் அதிரடி ஆரம்பம் முதலே பார்த்து வருவது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் தற்போது அந்த பந்துகளை அடிக்கும் முறை கவனம் பெற்றிருக்கிறது. அந்த முதல் பந்தைப் போலவே, பல பந்துகளுக்கு அவர் தனக்கான வெளியை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட்டில் 'making room' என்பார்கள். பேட்டை சுழற்றுவதற்கு ஒரு வெளியை ஏற்படுத்த பேட்டர்கள் நகர்வார்கள். அதை தற்போது அபிஷேக் அதிகமாகவே செய்கிறார். நேற்றைய போட்டியில் பல பந்துகளை அவர் அப்படித்தான் ஆடினார். தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்டு, ஸ்டம்ப் லைனில் வந்து பந்துகளையுமே கூட அவர் ஆஃப் சைடில் கவர், எக்ஸ்டிரா கவர், மிட் ஆன் திசைகளில் பவுண்டரிகள் அடித்தார். இந்த விஷயம் அபிஷேக் தன்னுடைய ஆட்டத்தில் சமீபத்தில் கொண்டுவந்திருக்கும் 'அப்கிரேட்' என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு, இத்தகைய பந்துகளில் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று அவர் அவுட் ஆகியிருக்கிறார். அது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், தற்போது அவர் நன்கு தனக்கான வெளியை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் தன் விக்கெட்டையும் பாதுகாத்துக்கொள்கிறார். கைல் ஜேமீசன் வீசிய மூன்றாவது ஓவரில் அதை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. மிடில் ஸ்டம்ப் லைனில், யார்க்கர் லென்த்தில் வந்த பந்தை, நன்கு லெக் சைட் விலகிச் சென்று ஃபுல் டாஸாக வாங்கி, கவர் திசையில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே லோ ஃபுல் டாஸாக வந்தது. அதை, இன்னும் லெக் திசையில் விலகிச் சென்று பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்தார். பொதுவாக பேட்டர்கள் லெக் சைடில் அடிக்கக் கூடிய பந்துகளை அநாயசமாக ஆஃப் சைடில் அடித்துக்கொண்டிருந்தார் அபிஷேக். அவருடைய இந்த ஆட்டமுறை குறித்து கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷா போக்ளே, "முன்பு அபிஷேக் ஷர்மாவுக்கு உடலுக்கு சற்று வெளியே பவுன்சராக வீசினால் கொஞ்சம் தடுமாறுவார் என்று அனலிடிக்ஸ் கூறியது. ஆனால், அவர் இப்போது ஆடும் விதத்தில், நகர்ந்து வந்து அந்தப் பந்துகளையும் பவுண்டரிகள் ஆக்குகிறாரே... இதற்கு மேல் பௌலர்கள் அவருக்கு எப்படிப் பந்துவீசுவது" என்றார். நியூசிலாந்து பௌலர்கள் அப்படியான பௌன்சர்களை முயற்சி செய்தும் கூட பலன் கிடைக்கவில்லை. அவை சற்று லைனில் பிசக, அவற்றையும் சற்று ஆஃப் சைட் நகர்ந்து லெக் சைடில் சிக்ஸர்கள் ஆக்கினார் அபிஷேக். பட மூலாதாரம்,Getty Images ஒரு டாட் பால் கூட இல்லை அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் இன்னொரு சிறப்பான விஷயம், அவர் சந்தித்த 20 பந்துகளில் ஒரு டாட் பால் கூட இல்லை. ஒவ்வொரு பந்திலுமே அவர் ரன் எடுத்தார். மொத்தம் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தார் அவர். 6 ஒற்றை ரன், 2 இரட்டை ரன் அபிஷேக் ஷர்மாவின் 20 பந்துகளில் எடுக்கப்பட்ட ரன்கள் முறையே 6 1 4 2 4 6 4 2 6 1 4 1 4 6 1 4 6 4 1 1 எனும் வகையில் இருந்தது. அவருடைய அணுகுமுறையும், அவருடைய ஷாட் தேர்வும் ஒவ்வொரு பந்திலுமே அவருக்கு ரன்களை எடுத்துக் கொடுத்தது. குறிப்பாக, முதல் 18 பந்துகளில் அவர் தொடர்ந்து இரண்டு பந்துகளில் பவுண்டரி அடிக்காமல் விடவில்லை. அதாவது, ஒரு பந்தில் ஒற்றை அல்லது இரட்டை ரன் வந்தால், அடுத்த பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. அவருடைய கடைசி இரண்டு பந்துகள் மட்டுமே தொடர்ச்சியாக பவுண்டரி வராத இரு பந்துகள். அந்த அளவுக்கு பவுண்டரிகளும், சிக்ஸர்களாகவும் விளாசினார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள் படி, ஆண்கள் டி20ஐ கிரிக்கெட்டில் டாட் பால்களே ஆடாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் தான். இதற்கு முன் அந்த சாதனை கனடாவின் ஹர்ஷ் தாகெர் (18 பந்துகளில் 53* ரன்கள்) வசம் இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wxq7lxyxlo- நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு Jan 26, 2026 - 11:07 AM சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் தமக்கு இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் இங்கு தெரிவித்தார். வைத்தியத் தொழிலை விசேட சேவைப் பிரிவாகக் கருதி நிபுணத்துவ வைத்தியர்கள், தர வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத் துறையிலுள்ள வைத்தியர்களை இனங்கண்டு அவர்களுக்கு விசேட சம்பளக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்ததாகவும், அது பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டு ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். டெட் கொடுப்பனவை இற்றைப்படுத்தல், மேலதிக கடமைக் கொடுப்பனவை நிரந்தரக் கொடுப்பனவாக மாற்றி அதனை சம்பளத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் திறைசேரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதற்கும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். இரண்டு நாட்கள் இடம்பெற்ற அடையாள பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், தமது சங்கம் இவ்வாறு 05 வழிமுறைகளின் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், தமது சங்கம் நோயாளர்களின் உயிரை ஆபத்தில் வீழ்த்தாது எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார். குறித்த வழிமுறைகள் பின்வருமாறு 01. கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை. 02. வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை. 03. தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை. 04. சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை. 05. ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல். https://adaderanatamil.lk/news/cmkuqkoi404emo29nhwk6zav4- நிபந்தனையின்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
நிபந்தனையின்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு Published By: Vishnu 26 Jan, 2026 | 04:08 AM ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த அமரர்.சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் 113 வது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் வடமாகாணசபை அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,கோடீஸ்வரன்,டாக்டர் சத்தியலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது களுவாஞ்சிகுடி பிரதான வீதியிலுள்ள அமரர்.சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் சிலைக்கு கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பிரதான வீதி வழியாக மேளதாள வாத்தியங்கள் முழங்க அனைவரும் அழைத்து வரப்பட்டு களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் ஜனன தின சிறப்பு நிகழ்வு ஆரம்பமானது. மதகுருமார்களால் மங்கள விளங்கேற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அமரர். சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் உருவப்படத்திற்கு முன்பாக கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் விளங்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நினைவுப்பேருரையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள். மாணவர்களின் வரவேற்பு நடனங்கள் இந்த நிகழ்வின்போது நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர்,தவிசாளர்கள் கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பெருந்திரளான மக்கள் இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அமரரின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் அனைவராலும் நினைவுகூரப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த பதில் தலைவர்; இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் முதன்மைக்கட்சியாக இருந்தாலும் கூட தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டும்.அந்த பொறுப்பினை நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்தோம். கடந்த உள்ளுராட்சிமன்றம்,பாராளுமன்ற தேர்தல்களின்போது எதிரும்புருமாறு நின்ற ஜனநாயக தேசிய கூட்டணியுடனான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப்பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பரந்தமனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள்.அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்த கட்சியும் எங்களுக்கு விடிவுதராது.அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுறுவி பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சிங்கள தலைமைகளுக்கு மேலாக செல்லமுடியாது. https://www.virakesari.lk/article/236998- வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள்
வாட்ஸ்ஆப் மூலம் அரங்கேறும் புதுவித மோசடி - தடுப்பதற்கான 5 எளிய வழிகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை அம்பத்தூரில் வசிக்கும் திரைப்பட உதவி இயக்குநர் ஒருவருக்கு கடந்த வாரம் நேர்ந்த அனுபவம் இது. '50 ஆயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது' என தனக்கு நெருக்கமான அரசு மருத்துவரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து உதவி இயக்குநருக்கு தகவல் வந்துள்ளது. பணத்தை அனுப்பிய அடுத்த நொடி, 'மேலும் 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது' என வாட்ஸ்ஆப் தகவல் தெரிவித்தது. அந்தப் பணத்தையும் அனுப்பிவிட்டு சற்று சந்தேகத்துடன் மருத்துவரின் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். " எனக்கு அப்படி எந்த தேவையும் இல்லையே?" என, மருத்துவர் பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குநர் மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் மேற்கூறிய விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற மோசடியில் சிக்கியதாக கடந்த ஓராண்டில் மட்டும் 3,161 புகார்கள் வந்திருப்பதாகவும் சில நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும்" எனவும் டிஜிபி சந்தீப் மிட்டல் கூறியுள்ளார். வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? உதவி இயக்குநரின் புகாரில் இருந்தது என்ன? சென்னை மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவில் திரைப்பட உதவி இயக்குநர் அளித்துள்ள புகாரில், கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது தனக்கு வேண்டிய அரசு மருத்துவரிடம் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் ஒன்று வந்ததாகக் கூறியுள்ளார். அரசு மருத்துவரின் பெயரைப் பயன்படுத்தி தன்னிடம் இருந்து மர்ம நபர்கள் 65 ஆயிரம் ரூபாயைப் பறித்துவிட்டதாக அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து இணைய குற்றப்பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வழக்கின் விவரங்களை தெரிவிக்க இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார். "இந்த விவகாரத்தில் திரைப்பட உதவி இயக்குநரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். 'தகவலை யாரும் சரிபார்ப்பதில்லை' "செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள தகவல்களை மோசடி நபர்கள் ஆராய்வார்கள். யார் சொன்னால் இந்த நபர் கேட்பார் என்பதைக் கண்டறிந்து பணம் பறிக்கின்றனர்" என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய கார்த்திகேயன், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் பயனருக்கு நெருக்கமான நபரின் பெயரை எவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தும் அவரது வாட்ஸ்ஆப் புகைப்படத்தைப் பயன்படுத்தியும் மோசடி செய்கின்றனர்" எனக் கூறுகிறார். "ஓர் எண்ணில் இருந்து மெசேஜ் வரும்போது அந்த எண்ணை யாரும் சரிபார்ப்பதில்லை" எனக் கூறும் அவர், "தான் பதிவு செய்த எண்ணில் இருந்து வரும் நபரின் புகைப்படத்தைப் பார்த்து ஏமாறுகின்றனர். பண இழப்பு ஏற்பட்ட பிறகு தொடர்பு எண்ணை சரிபார்க்கின்றனர்" என்கிறார். இதே தகவலைக் குறிப்பிடும் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் தகவல்கள், அவர் யாரிடம் எல்லாம் தொடர்பில் இருக்கிறார், யார் சொன்னால் பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக கணித்த பிறகே மோசடி நடக்கிறது" என்கிறார். "வாட்ஸ்ஆப்பை நேரடியாக ஹேக் செய்யாமல் ஆன்டிராய்டு செல்போனை ஹேக் செய்வதன் மூலம் பயனரின் வாட்ஸ்ஆப்பில் உள்ள முழு விவரங்களையும் அவர்களால் எளிதாக அணுக முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Facebook/Karthikeyan படக்குறிப்பு,"செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள தகவல்களை மோசடி நபர்கள் ஆராய்வார்கள். யார் சொன்னால் இந்த நபர் கேட்பார் என்பதைக் கண்டறிந்து பணம் பறிக்கின்றனர்" என்கிறார் கார்த்திகேயன் 'கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகள்' "இது உதாரணம் தான்" என்கிறார், இணைய குற்றப் பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வாட்ஸ்ஆப்பில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை கிளிக் செய்தால் அவற்றின் செயல்பாடு வேறொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடும்" எனக் கூறுகிறார். வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்தி ஹேக்கிங் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். தமிழ்நாடு இணைய குற்றப்பிரிவின் டிஜிபி சந்தீப் மிட்டல் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும் இதைக் குறிப்பிடுகிறார். "கவனக்குறைவாக இருந்தால் பண இழப்பு, மனஅழுத்தம், பெயருக்குக் களங்கம், உயிரிழப்பு எனக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்கிறார் அவர். "வாட்ஸ்ஆப்பில் கிரெடிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகப்பு, தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வைக்கக் கூடாது" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப். "முன்பு கணினியில் வாட்ஸ்ஆப் வெப் தளத்துக்கு பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தது. தற்போது பாஸ்வேர்டு வந்துவிட்டதால் அதைப் பயன்படுத்துவது நல்லது" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,Facebook/Pradeep படக்குறிப்பு,"முன்பு கணினியில் வாட்ஸ்ஆப் வெப் தளத்துக்கு பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தது. தற்போது பாஸ்வேர்டு வந்துவிட்டதால் அதைப் பயன்படுத்துவது நல்லது" என்கிறார் பிரதீப் 'ஒரே ஆண்டில் 3,161 புகார்கள்' வாட்ஸ்ஆப் ஹேக்கிங் மோசடி பற்றி 2025 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு இணைய குற்றப் பிரிவுக்கு 3161 புகார்கள் வந்துள்ளதாகக் கூறுகிறார், டிஜிபி சந்தீப் மிட்டல். சில பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். "வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்பு எண்களை இலக்காக வைத்து தகவல் அனுப்பி மோசடி நடப்பது ஒருபுறம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் பேசுவதுபோல காணொளி தயாரித்து ஏமாற்றும் வேலைகளும் நடக்கின்றன" எனக் கூறுகிறார், இணைய குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோ, இருப்பிடம், மைக்ரோ போன் உள்பட அனைத்துக்கும் அனுமதி அளிக்கிறோம்" என்கிறார். "அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை" எனக் கூறும் அவர், "வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது ஐந்து விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்கிறார். தடுப்பதற்கான 5 எளிய வழிகள் தொடர்பில்லாத எந்த லிங்க் வந்தாலும் அதைத் திறந்து பார்க்கக் கூடாது. வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்ட சாதனங்களை (Linked devices) அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் அந்த இணைப்பை துண்டித்துவிட (log out) வேண்டும். பொது இடங்களில் இலவச வைஃபை கிடைக்கிறது என்பதற்காக பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் உள்ள செல்போன் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது. அது என்ன மாதிரியான சார்ஜர் என்பதை அறியாமல் பயன்படுத்தினால், வெளிநபர்களுக்கு தரவுகள் பரிமாறப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இலவச செயலிகள், இலவச விளையாட்டு செயலிகள் என வந்தால் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது. எதையும் ஒருவர் இலவசமாக கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என உணர வேண்டும். தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன? வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களில் வாட்ஸ்ஆப் மோசடிகள் பெருகிவருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது. ஆதார் அப்டேட், டிராஃபிக் இ-சலான் என நம்பகமான குழுக்கள் போன்று வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி இதனை அனுப்புவதாகக் கூறியுள்ள தூத்துக்குடி காவல்துறை, 'Rewards', 'KYC updates', 'cashback offers' எனக் கூறி APK file அல்லது இணைப்பை (Links) அனுப்புகின்றனர்' எனத் தெரிவித்துள்ளது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்போது செல்போனை ஹேக் செய்யும் மோசடி நபர்கள், அதில் உள்ள வாட்ஸ்ஆப் செய்திகள், வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதாக தூத்துக்குடி காவல்துறை கூறியுள்ளது. ஹேக் செய்யப்பட்ட செல்போனில் உள்ள தொடர்பு எண்களில் புதிய வாட்ஸ்ஆப் கணக்கை உருவாக்கி மோசடி செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ஏபிகே மென்பொருளை வாட்ஸ்ஆப், இமெயில், எஸ்.எம்.எஸ் என எந்த வழியாக வந்தாலும் அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடிகளில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் காவல்துறை பட்டியலிட்டுள்ளது. Apk file அல்லது இணைப்புகளை (link) திறக்கவோ பதிவிறக்கம் செய்யவோ கூடாது. வாட்ஸ்ஆப்பில் இருமுறை உறுதிப்படுத்தல் (Two-Step Verification) நிறுவுவதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்கலாம். நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3683gpj2yno- உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார் Jan 26, 2026 - 10:00 AM 11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார். அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின் OV-437 என்ற இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தாவி சமரவீர ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பஹ்ரைனில் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று, அதில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல், கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். இன்னும் 10 வயதேயான தாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் ஒரு மாணவராவார். தாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார். அவர் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkuo5r0u04eio29nynshv1mn- எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு செய்திகள் எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. களவாடப்பட்ட இவ்விரு சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் எழுவைதீவிற்கு நேரில் சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmkukg8bb04ebo29nr8bgtak0- அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு Jan 26, 2026 - 07:35 AM அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை "உயிருக்கு ஆபத்தான" நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெக்சாஸில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் நேற்று (25) பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmkuiyy2s04eao29npp57r6uo- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்துகிறது அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை சொத்துக்களை மத்திய கிழக்கிற்கு நகர்த்துகிறது: தெரிந்து கொள்ள வேண்டியது என்ன அமெரிக்க 'ஆர்மடா' வளைகுடாவை நோக்கி நகர்கிறது என்று டிரம்ப் கூறுகிறார், இது பிராந்தியத்தில் இராணுவ விரிவாக்கம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது. ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு வளைகுடாவை நோக்கிச் செல்கிறது. அமெரிக்க இராணுவம் கடைசியாக ஜூன் மாதம் மத்திய கிழக்கில் ஒரு பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது இஸ்ரேல் தெஹ்ரானுடனான 12 நாள் போரின் போது மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு. இந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்தார். அரசாங்கம் ஒடுக்கப்பட்டபோது "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் கடந்த வாரம், அவர் இராணுவ சொல்லாட்சியை நிறுத்தினார். அதன் பின்னர் போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க இராணுவ சொத்துக்கள் வளைகுடாவிற்கு நகர்கின்றன என்ன? அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்கத் தயாராகி வருகிறதா? வியாழக்கிழமை டிரம்ப், அமெரிக்காவின் "ஆர்மடா" வளைகுடா பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது, ஈரானை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். வரும் நாட்களில் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு மற்றும் பிற சொத்துக்கள் மத்திய கிழக்கிற்கு வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "நாங்கள் ஈரானை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானை நோக்கி எங்களிடம் ஒரு பெரிய படை செல்கிறது" என்று டிரம்ப் கூறினார். "ஒருவேளை நாம் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்காது. ... அந்த திசையில் நிறைய கப்பல்கள் பயணிக்கின்றன. ஒருவேளை, அந்த திசையில் ஒரு பெரிய கடற்படை எங்களிடம் இருந்தால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் மேலும் கூறினார். ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிக் கப்பல் தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி ஒரு வாரத்திற்கு முன்பு தனது பாதையை மாற்றியது. அதன் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவில் ஈரானுக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட டோமாஹாக் கப்பல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஆர்லீ பர்க்-வகுப்பு அழிப்பாளர்கள் உள்ளனர். மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்கள் ஏஜிஸ் போர் அமைப்பையும் கொண்டுள்ளன, இது பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்க-இராணுவம்-கடற்படை-விமானப்படை-மத்திய-கிழக்கு-நாடுகளுக்கு-நகர்த்துகிறது/50-371568- யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தலைவருடைய மறைவின் பின் த.வி.பு என்ற அமைப்பு இல்லாதுவிடினும் கூட்டமைப்பு எனும் அரசியல் ஒற்றுமைக் கூட்டை கலைத்ததின் பெரும்பழி தமிழரசுக் கட்சியைச் சாரும். ஆனால் தமிழ்த்தேசிய உணர்வென்பது தமிழ் மக்களிடம் ஊறிப்போனது, அவ்வளவு இலகுவில் மறையாது. உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக்காட்டு.- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
இதுவரை காலமும் வேறேதோ சொல்லிக்கொண்டு திரிந்தாரே. இப்போ இப்படி புலம்புகிறார். அமைச்சுப்பதவி கிடைக்காத ஏமாற்றத்தினால் போலும். ஆமா அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் வர இருக்கும் தேர்தல் பற்றி பேசுகிறாரே. அப்படி எதை சாதித்திருக்கப் போகிறார்? கூடிய லஞ்சம் பெற்றிருக்கலாமென்கிறாரோ? ஹிஹி இவரது நேசம் யாருக்கு வேண்டும்? தனக்கு கொடுத்த துப்பாக்கியை கூட பாதாள போதைக்கும்பலுக்கு அடகு வைத்து போதை கடத்தல் நடத்தியவர். மக்களுக்கு எதை சாதித்தார்?- யாழில் இந்திய குடியரசு தினம்!
யாழில் இந்திய குடியரசு தினம்! adminJanuary 26, 2026 இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. https://globaltamilnews.net/2026/227479/- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் விளையாடாவிட்டால் இந்தமுறை போட்டி சுவாரசியமாக இருக்காது.- மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
ஐயா மன்னிக்கவும், நான் எழுதவில்லை. கீதா எனும் சகோதரியின் https://geethajustin.blogspot.com/2014/08/blog-post_20.html வலைப்பக்கத்தில் வாசித்ததை இங்கே எமது உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன்.- யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழரின் ஏகோபித்த குரல் நாங்கள், பேரம் பேசும் சக்தி நாங்கள் என்று சொல்லி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போய் சிங்களத்துக்கு காவடி தூக்கியவர்களை விடவா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவனுக்கு கோபம் வருகுதாம், வந்தால் நமக்கென்ன? அப்படி பயமென்றால் வேறொரு சிங்களக்கட்சியில் சிங்களவரிடம் வாக்கு கேட்டு பாராளுமன்றம் போகவேண்டியது. யார் தடுத்தார்? இவர்களுக்குள் ஒற்றுமையில்லை, ஒருவருக்கொருவர் குழிபறிப்பு. அவர்களே அனுரா வடக்கிற்கு வர சந்தர்ப்பம் அளித்தவர்கள். அனுரா வந்தவுடன் குத்துது குடையுது என்று புலம்பல், ஏளனம். இதுவரை ஆட்சி செய்த சிங்கள ஜனாதிபதிகள் யாருக்கும் இல்லாத எதிர்ப்பலை இவருக்கு மட்டுமேன் என்பதே எனது கேள்வி. அவர் தவறுகளையும் சுட்டிக்காட்டவே செய்கிறோம், அதைப்பற்றி பேசாதது ஏன்? - 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.