Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம் Published By: Vishnu 27 Feb, 2026 | 09:18 PM கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239755
  3. பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை! Published By: Digital Desk 1 27 Feb, 2026 | 04:13 PM நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். இதனூடாக, திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், ஊழல் மோசடிகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் குறித்துத் தெரிவிக்கலாம். இதன்மூலம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அத்தியட்சகர்கள் ஊடாக உரிய பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அத்துடன், இங்கு வழங்கப்பட்ட தீர்வுகளில் திருப்தி இல்லையெனில், மீண்டும் இணையவழியில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முறைப்பாடுகளை https://telligp.police.lk இணையத்தளத்தினுடாகவும் telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும், தெரிவிக்கமுடியும். ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/239728
  4. வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான அம்மன் கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை! 27 Feb, 2026 | 01:20 PM வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினையடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது. இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல் விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார். பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல் இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள் சமூக அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் பெப்ரவரி 16ஆம் திகதி பணியை ஆரம்பித்த இராணுவம், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார். இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார். வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றுமாறும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்குமாறும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை விடுவிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இது கோவிலுக்குச் செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும். அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்கவேண்டும்" என்றார். இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியால் சில தனியார் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொது பிரதிநிதிகள் கூறுகின்றனர். மேலும், தற்காலிக வீதியை நிரந்தரமாக மாற்றினால், மக்கள் தமது காணி மீதான உரிமையை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். https://www.virakesari.lk/article/239717
  5. 'நேரடிப் போர்': ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - நிலவரம் என்ன? பட மூலாதாரம்,Pakistani Security Forces handout via Reuters 27 பிப்ரவரி 2026, 04:27 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஆப்கன் தாலிபன்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் 'நேரடிப் போர்' பிரகடனம் செய்துள்ளார். "இனியும் பொறுக்க முடியாது, அடுத்து இது நேரடிப் போராக இருக்கும்" என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கன் தாலிபன்களை எச்சரித்துள்ளார். சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கன் தாலிபன்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தானில் திரட்டுவதாக" அவர் குற்றம் சாட்டினார். மேலும் காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கம் "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக" அவர் கூறியதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆப்கன் தாலிபன்கள் "தங்கள் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மறுப்பதாக" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார். நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images பிபிசி உருது சேவை செய்தியின்படி, தங்களது ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 133 ஆப்கன் தாலிபன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் தனது எக்ஸ் பதிவில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள ஆப்கன் தாலிபன் பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்துள்ளதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளில் இரண்டு கார்ப்ஸ் தலைமையகங்கள், இரண்டு ஆயுதக் கிடங்குகள், ஒரு தளவாடக் கிடங்கு, மூன்று பட்டாலியன் தலைமையகங்கள், இரண்டு செக்டார் தலைமையகங்கள், 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். பிபிசியால் இந்தத் தகவல்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ பீரங்கி இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் அதாவுல்லா தரார் கூறுகிறார். ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையின்படி, இன்று (பிப்ரவரி 27) அதிகாலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அதிகாலை 1:50 மணியளவில் நகரம் முழுவதும் போர் விமானங்களின் சத்தத்துடன் வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாகவும், அதிகாலை 2:30 மணி வரை மத்திய காபூலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீதான இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சில காலமாக நடந்து வரும் தொடர் மோதல்களின் சமீபத்திய பகுதியாகும். இரண்டு நாடுகளும் அக்டோபர் 2025-இல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இரவு முழுவதும் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகத் தாலிபன்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் சமீபகாலமாக நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது. மறுபுறம், தாலிபன் நிர்வாகம் பொது மக்களின் வீடுகள் மற்றும் ஒரு மதப் பள்ளி (madrasa) இலக்கு வைக்கப்பட்டதாகவும், பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாகவும் கூறியது. பட மூலாதாரம்,Getty Images இருதரப்பு குற்றச்சாட்டுகள் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையிலான முந்தைய மோதல்களைப் போலவே, இந்த முறையும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முதலில் தாக்கியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். "தூண்டுதல் இல்லாத ஆப்கன் தாக்குதல்களுக்கு" பதிலடியாக காபூல் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட நகரங்களில் "எதிர் தாக்குதல்களை" நடத்தியதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். முன்னதாக, இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கன் தாலிபன்கள் தெரிவித்தனர். தாலிபன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹிதுல்லா முகமதி, இந்த "எதிர் நடவடிக்கை" வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்டதாகக் கூறினார். தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தத் தாக்குதலில் "பல" பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறினார் - ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். பகிரப்பட்ட எல்லையில் ராணுவ நிலைகளுக்கு எதிராக ஆப்கன் தாலிபன்கள் நடவடிக்கை எடுத்ததில் வியாழக்கிழமை இரவு தங்களது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. முன்னதாக இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக "பெரிய அளவிலான" நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கான் தலிபான்கள் தெரிவித்தனர். பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறியது. புதிய மோதலின் தொடக்கம் முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், காபூல், கந்தஹார் மற்றும் பக்திகாவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். "ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நிலத்தை முழு ஒற்றுமையுடன் பாதுகாப்பார்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தைரியத்துடன் பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கு இடையிலான தற்போதைய மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-8 தேதிகளில் தொடங்கியது. அப்போது ஒராக்சாயில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது. அக்டோபர் 8 அன்றே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் பொறுமை எல்லை கடந்துவிட்டது என்றும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இனி அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் கூறினார். பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்திடம் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு (TTP) எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருகிறது, மேலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது, இந்தப் பதற்றத்தைக் குறைக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நடத்தப்பட்ட போதிலும், மோதல் முடிவுக்கு வரவில்லை. துரந்த் கோடு உண்மையில், 133 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட துரந்த் கோடு தான் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரான சர் ஹென்றி மோர்டிமர் துரந்த் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த கோட்டின் மேற்கு முனை இரானிய எல்லையையும், கிழக்கு முனை சீன எல்லையையும் தொடுகிறது. ரஷ்யாவின் தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்க, பிரிட்டன் 1839-இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது, அதில் பிரிட்டிஷ் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் 1849-இல் பஞ்சாபை இணைத்த பிரிட்டன், சிந்து நதிக்கு மேற்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமித்தது. இந்தப் பகுதியில் ஏராளமான பஷ்தூன் (Pashtun) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் நிர்வாகம் பிரிட்டிஷாருக்குப் பிரச்னையாக இருந்தது. ஒரு காலத்தில், 'துரந்த் கோடு' தொடர்பான ஒப்பந்தம் பல ஆப்கான் ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. காலப்போக்கில், இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரியதாக மாறியது மற்றும் ஆப்கன் ஆட்சியாளர்கள் இதை பாகிஸ்தானுடனான எல்லையாக அங்கீகரிக்க மறுத்தனர். 1893-இல், வடமேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த, 2640 கிமீ நீளமுள்ள எல்லை ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானுடன் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்டது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்களும், மறுபக்கம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கித்-பல்டிஸ்தான் பகுதிகளும் உள்ளன. இருபுறமும் உள்ள மக்கள் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் துரந்த் கோட்டைத் தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாகக் கருதி, அதை அங்கீகரிக்க மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தனது கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கக்கூடிய பஷ்தூன் தேசியவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் இக்கோட்டை அங்கீகரிக்கிறது. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இதை ஒரு நிஜமான (de-facto) எல்லையாக அங்கீகரிக்கின்றன. ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் அழுத்தத்தின் கீழ் இதை ஏற்றுக்கொண்டாலும், ஆப்கன் குடிமக்கள் இதைத் தங்களது பஷ்தூன் நிலத்தின் தன்னிச்சையான பிரிவினையாகக் கருதி இன்றும் போராடி வருகின்றனர். 1894 மற்றும் 1896-க்கு இடையில் இக்கோடு உருவாக்கப்பட்டது, ஆனால் பல கடினமான பகுதிகளில் இது இன்றும் தெளிவற்றதாகவே உள்ளது. பாகிஸ்தான் கூறியது என்ன? பட மூலாதாரம்,FAYEZ NURELDINE/AFP via Getty படக்குறிப்பு,இதுவரை 133 ஆப்கானிஸ்தான் தாலிபன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் (கோப்பு புகைப்படம்) பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 27 ராணுவ நிலைகளை அழித்துள்ளதாகவும், ஒன்பதைக் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் முஷாரப் ஜைதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை பாகிஸ்தான் ராணுவம் அழித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:45 மணி நிலவரப்படி முஷாரப் ஜைதி ஒரு புதிய தகவலை வழங்கினார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஆக்கிரமிப்புக்கு எதிராக பாகிஸ்தானின் உடனடி மற்றும் பயனுள்ள பதிலடி நடவடிக்கை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முஷாரப் ஜைதி கூறியுள்ளார். இதற்கிடையில், வியாழக்கிழமை இரவு 19 பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் இரண்டு தளங்களையும் கைப்பற்றியதாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின்படி, மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களைச் சுயாதீனமாக சரிபார்ப்பது கடினம். சமீபத்திய மோதல்களின் போது இரு தரப்பினருமே ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். பதிவை நீக்கிய ஆப்கானிஸ்தான் தாலிபன் செய்தித் தொடர்பாளர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எக்ஸ் தள பதிவு ஜபிஹுல்லா முஜாஹித்தின் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது (கோப்பு படம்) ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், கந்தஹார் மற்றும் ஹெல்மாண்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது தாங்கள் "பதிலடித் தாக்குதல்களை" நடத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தார். தற்போது ,ஜபிஹுல்லா முஜாஹித்தின் எக்ஸ் கணக்கிலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. பிபிசி உருது செய்தியின்படி, தாலிபன்களின் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகத் தங்களது தாக்குதல்கள் நள்ளிரவு 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது. ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தான் தாலிபன்களுடனான பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன? பட மூலாதாரம்,Sean Gallup/Getty படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு உள் மற்றும் வெளிப்புற சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார் (கோப்பு படம்) நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என பிபிசி உருது செய்தி கூறியுள்ளது. "பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே ஊக்குவித்து வருகிறது, ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யப்படாது. பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உறுதியாக எதிர்கொள்ளும்" என்று வியாழன்-வெள்ளி நள்ளிரவில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , தனது அறிக்கையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களைக் கையாளும் திறன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருப்பதாக ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு இடையே எல்லை மோதல்கள் தொடர்கின்றன, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இந்தக் கூற்றுக்களை சுயாதீனமாகச் சரிபார்ப்பது கடினம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9m7x4l5n9o
  6. விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - ஏப்ரல் 20 வழக்கு விசாரணை! 27 Feb, 2026 | 05:34 PM நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த விவாகரத்து மனுவை ஏற்ற தமிழ்நாட்டின் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 20ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வழக்கில் விஜய் நேரடியாக ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சங்கீதா விஜய்யை காதலித்து 1999ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். விஜய், சங்கீதா இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சினிமாவில் வலம் வந்த விஜய் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்களில் அதிகமாக பங்கேற்று வருகிறார். இந்த சூழலில் விஜய்யும் சங்கீதாவும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239747
  7. சுரேஷ் சலேயின் கைது - அது வேறு! இது வேறு! அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையை தற்போதைய கைதுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் முழுமையாக முடக்கப்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் கூட சி.ஐ.டி விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் நீண்டகாலக் கோரிக்கையாகும். தற்போது புதிய அரசு பதவியேற்ற பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் மீண்டும் ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 16 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விரிவான விசாரணைகளின் ஒரு முடிவாகவே, தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான போதுமான ஆதாரங்கள் அதிகாரிகளிடம் உள்ளதாக நாம் நம்புகிறோம். இந்தத் தாக்குதலுடன் அவருக்கு ஏதேனும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் ஒரு இராணுவ அதிகாரி என்பதால் அவரைத் தொடக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அவர் செய்த சேவைகள் எவையும் தற்போதைய குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்காது. எனவே,சி.ஐ.டி சுயாதீனமாகச் செயல்பட நாம் இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இது ஒரு அரசியல் நாடகம் என்று கூறுகிறார்கள். ஆனால், மொட்டுக்கட்சி குறிப்பிட்டதா என நினைவில்லை மாறாக அனைத்து கட்சிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவோம் என அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தனர்.ஆகவே அவர்கள் இப்போது அது நடக்கும்போது முட்டுக்கட்டை போடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊடகங்கள் உண்மையை பக்கச்சார்பின்றி வழங்க வேண்டும்.நாம் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். இந்த விசாரணையின் முடிவைச் சிலர் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கைகள் எங்கே அம்பலமாகிவிடுமோ என்ற அச்சமே ஆகும். சஹ்ரான் போன்றவர்களை வழிநடத்தியது யார்? விசாரணைகளை விடுதலை புலிகளின் பக்கம் திசைதிருப்ப முயன்றது யார்? போன்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த உண்மைகள் கண்டறியப்படுவது மிக அவசியமாகும். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக நடமாடுவது அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் விடயமாகும். என அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/449256/suresh-salehs-arrest-thats-different-this-is-different
  8. 6 பந்தில் 5 ஓட்டங்கள். ஏதாவது கடைசி நிமிட.... இதை எழுதி முடிக்க முதல் முடிச்சு விட்டாங்கள்.
  9. குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 27 Feb, 2026 | 05:08 PM இத்தாலியின் சிசிலி மாகாணத்தில் உள்ள கட்டானியா நகரில், தனது வளர்ப்பு நாயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வீதியோரத்தில் குப்பைகளைக் கொட்டிய நபரொருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கட்டானியாவின் சான் ஜோர்ஜியோ மாவட்டத்தில் உள்ள வீதி ஒன்றில், நாய் ஒன்று தனது வாயில் ஒரு குப்பை பையை கவ்விக்கொண்டு நிதானமாக நடந்து சென்று வீதியோரம் அந்தப் பையைப் போட்டுவிட்டுச் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. ஒரே நாய், தொடர்ந்து இரண்டு நாட்களாக இதேபோல் குப்பைகளைக் கொண்டு வந்து போடுவது காணொளியில் உறுதியாகியுள்ளது. குப்பை கொட்டுபவர்களைப் பிடிக்க கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்த அதன் உரிமையாளர், தான் சிக்காமல் இருக்க நாய்க்கு இதற்காகப் பிரத்யேகமாகப் பயிற்சி அளித்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். "இந்தக் காட்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரங்களாக உள்ளன" என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் வீதிகளில் குப்பை கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவம் குறித்து கட்டானியா நகராட்சி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் நாகரீகமற்ற செயலுக்கு சாக்காகிவிட முடியாது. நகர்ப்புற ஒழுக்கத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் மதிப்பது அனைவரது கடமையாகும்" என பதிவிட்டுள்ளது. குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு!
  10. 12 பந்தில் 21. இது இப்பிடிவந்தமையும் என்று யார் நினைச்சா.
  11. எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை Published By: Digital Desk 3 27 Feb, 2026 | 09:42 AM அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று வியாழக்கிழமை (26) நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விசாரணை வெறும் "அரசியல் நாடகம்" எனவும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நெருங்கிய தொடர்புகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குடியரசுக் கட்சியினர் தன்னை விசாரணை செய்வதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையின் போது, குடியரசுக் கட்சி எம்.பி. லாரன் போபர்ட் விதிமுறைகளை மீறி ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கசியவிட்டதால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஹிலாரியைத் தொடர்ந்து, அவரது கணவரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனிடம் இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றக் குழுவினால் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது 2019-ல் தற்கொலை செய்து கொண்டார். தற்போது 2026 இல் அமெரிக்க அரசு எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
  12. Today
  13. காலி குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்ட பொடி லெசி! Feb 27, 2026 - 11:54 AM இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று காலை சந்தேக நபர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு 'பொடி லெசி' முதன் முதலில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார். பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார். நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர். இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmm4i57ml000b356pzyf51vm0
  14. "சட்டத்தரணி என்னை அடையாளம் கண்டுவிடுவார் என்பதால் சுட்டோம்" - அக்குரேகொட கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்! 27 Feb, 2026 | 09:31 AM அக்குரேகொட சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரிக்கு மொனராகலையில் தங்குமிட வசதி செய்துகொடுத்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று விாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை,படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொலிஸ் விசாரணைகளின் போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் 72 மணிநேர தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதான துப்பாக்கிதாரி, தான் முன்னதாக இரு வழக்குகளுக்காக உயிரிழந்த சட்டத்தரணி புத்திகவிடம் முன்னிலையாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற போது, "புத்திக எனது இரு வழக்குகளில் முன்னிலையாகியவர், அவர் என்னை அடையாளம் கண்டுவிடுவார்" எனத் தனது கூட்டாளியிடம் கூறிவிட்டு, காரை ஒருபுறமாக நிறுத்திவிட்டு சட்டத்தரணிக்கு மிக அருகில் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக அவர்களைக் கொலை செய்வதற்கு 'கரந்தெனிய சுத்தா' என்பவரே தனக்கு உத்தரவிட்டதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். இதன்போது 'லலா' என்பவருடன் இணைந்து சென்ற தான், சிறைச்சாலை அதிகாரி மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், தென் மாகாணத்தில் இடம்பெற்ற முப்பரிமாணக் கொலை ஒன்றிலும் தனக்குப் பங்குள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைகளுக்குப் பின்னர் துப்பாக்கிதாரிக்கு மொனராகலை - மெதகம, நன்னபுராவ பகுதியில் உள்ள தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் இன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைக்காக மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். கொலைக்கு முன்னர் பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தங்குமிடமொன்றிற்கு, ஏற்கனவே கைதான 'ஜானக' என்பவரால் இந்தத் துப்பாக்கிதாரி அழைத்து வரப்படும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இது விசாரணையில் மிக முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239694
  15. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published By: Vishnu 27 Feb, 2026 | 04:59 AM (செ. சுபதர்ஷனி) பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; "இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும். சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார். https://www.virakesari.lk/article/239680
  16. இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்..! சரத்வீரசேகர கேள்வி சுரேஷ் சலே என்ற உளவுத்துறை அதிகாரி 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை. அப்படியானால், இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என அவர் தெரிவித்துள்ளார். கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது. சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அசாத் மௌலானாவும் சனல் 4 ஊடகமும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் பிள்ளையானின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா என்ற நபர் சனல் 4 ஊடகத்திடம், 2018ஆம் ஆண்டு சுரேஷ் சலே, சஹ்ரானை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் அவர் இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது கூறப்பட்டது, இந்த நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக முடியும் என்று. நாம் அறிந்திருப்பது போல, சனல் 4 என்பது இராணுவத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை முழுமையாக முன்வைக்கும் ஊடகம். அதனால் தான் சுரேஷ் சலேவை கைது செய்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இந்தியாவில் இருந்த சுரேஷ் சலே சஹ்ரானை சந்திக்க இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/how-suresh-saleh-who-not-in-sri-lanka-met-zahran-1772122055
  17. முன்னர் காமராஜரைக் குறிப்பிடுவர். நம்முன் வாழ்ந்து வரலாறாக இருக்கிறார் தோழர் நல்லகண்ணு ஐயா.
  18. விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................ ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣. சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................
  19. இங்கிலாந்தின் ஆரம்பம் நியூசிலாந்தை விட மோசமாக இருக்கின்றது. அணித் தலைவர் மீண்டும் அணியை கரை சேர்ப்பாரா
  20. 159 அடிச்சார்கள். நியுசிலாந்து தோத்தால் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக பெரிய வெற்றி ஒன்றைப் பெறவேண்டும். பாகிஸ்தான் வென்றால், நியுசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளி. ஓட்ட விகிதம் முக்கியம். நியுசிலாந்து வென்றால், பாகிஸ்தானின் பயணம் முடிவடையும்.
  21. சொல்றேன் கேட்டுகோங்கோ… பெண் என்பதும்… நடிகை என்பதும்தான்… ஏனையவருக்கும் திரிஷாவுக்கும் வித்தியாசம். எம் ஜி ஆர் தாதா தான்… ஆனால் கருணாநிதி, காஞ்சி காம கேடி என பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட… படா தாதா ஜெ…. யாருக்குள்ளும் எந்த திறமையிம் இருக்கலாம்…
  22. இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் இந்தத் தொடரின் சகலதுறை ஆட்டக்காரன். பந்தப் போடனுமா. போட்டுக்க. பந்தப் பிடிக்கனுமா. பிடிச்சுக்க. பந்த அடிக்கனுமா. அடிச்சுக்க.
  23. நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.