Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஓம் ஸ்டோக்சுக்குத்தான் கார்லோசின் அடி விழுந்தது…. இரெண்டு பேரையும் மாத்தி…மாத்தி அடிச்சானுவளா… நானே கன்பீஸ் ஆயிட்டேன்😂
  3. நாளைக்கு இல‌ங்கை நியுசிலாந்திட‌ம் வேண்டிக் க‌ட்ட‌ போகுது................இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர் க‌மில் மிஸ்ஹாரா இவ‌ரின் விளையாட்டை பார்த்தால் சிரிப்பு தான் வ‌ரும் ப‌ர்த்தும் நிச‌ங்கா இவ‌ர் தான் அன்மைக் கால‌மாய் இல‌ங்கை அணிக்கு பெருமை சேர்க்கிறார் ஜ‌பிஎல்ல‌ டெல்லி அணி இவ‌ரை வேண்டி இருக்கு கிடைச்ச‌ வாய்ப்பை ஜ‌பிஎல்ல‌ ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்துவார் என‌ ந‌ம்புகிறேன்.........................
  4. கார்லோஸ் பிரத்வேய்ட். அடி விழுந்தது பென் ஸ்ரோக்குக்கு ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டாதது யுவராஜ் அடிச்ச ஆறு ஆறு
  5. பாக்கிஸ்தான் என‌க்கு பெரிய‌ ஆப்பு வைத்து விட்ட‌து...................................
  6. இங்லாந் ந‌ல்ல‌ அணி.............இன்னும் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கும் அணி இல‌ங்கை அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை தேடினாலும் கிடைக்க‌ மாட்டின‌ம்................ த‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌டியால் சூப்ப‌ர்8க்கு வ‌ந்த‌வை இதே வேறு நாட்டில் ந‌ட‌ந்து இருந்தால் முத‌ல் சுற்றிலையே வெளிய‌ ஹா ஹா......................
  7. கார்லோஸ் எனும் ஒரு மனித அலுமாரி செய்த வேலையை யார் மறந்தாலும் ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டார்😂 #மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 😂
  8. இங்கிலாந்து, தொடர்ந்து ஐந்தாவது தடவையாக (2016, 2021, 2022, 2024, 2026), அரை இறுதியில் நுழைந்துள்ளது. 2016ல் இறுதிப் போட்டியில் மே.இ இடம் தோத்தார்கள், அந்த நான்கு ஆறுகளை யாரால் மறக்க முடியும். 2022ல் வென்றார்கள்.
  9. எனக்கு பிடிக்காத அரசியல் கட்சியோடு சேர்ந்து பயணிக்கும் ஒருவரை கைக்கூலி என்று நான் எடை போட்டால் உலகத்தில் என்னை தவிர மிகுதி அனைவரும் கைக்கூலிகள்!!!
  10. இல்லை த‌லைவ‌ரே அவ‌ர் அடிச்ச‌து சுழ‌ல் ப‌ந்துக்கு அந்த‌ ப‌ந்து பாக்கிஸ்தான் வீர‌ரின் கால்லுக்கு கீழ‌ போன‌ ப‌ந்தை வில‌கி நின்று அடிச்ச‌வ‌ர் அது எதிர் பார்த்த‌ அள‌வு வேக‌மாக‌ ப‌ட‌ வில்லை ம‌ட்டையில் அதோட‌ இங்லாந் வீர‌ர் நீண்ட‌ தூர‌த்தில் இருந்து ஓடி வ‌ந்து விழுந்து பிடிச்ச‌வ‌ர் ப‌ந்தை................ந‌ல்ல‌ கைச் அருமையாக‌ பிடித்தார்.......................
  11. எல்லாரும் தெளிவாத்தான் இருக்கிறியல். 😉🤣
  12. அந்த வீரர் நின்ற இடத்தில இவர் பந்தை அடிச்சிருக்கக் கூடாது . .......! 😂
  13. தூர‌த்தில் இருந்து ஓடி வ‌ந்து வ‌டிவாய் விழுந்து பிடிச்சார்💪...............
  14. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கைய புடிச்சான் என்னை கைய புடிச்சான் அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன் வா வா என்றான் கூடவே வா வா என்றான் } (2) பெண் : ஊர் அடங்க காத்திருந்தான் ஓய்வில்லாம பார்த்திருந்தான் ஊர் அடங்க காத்திருந்தான் ஓய்வில்லாம பார்த்திருந்தான் பெண் : பால் பழத்தை வாங்கி வந்தான் பள்ளியறையின் வாசல் வந்தான் வெட்கத்திலே நானிருந்தேன் பக்கத்திலே தானிருந்தான் பெண் : கண்ணுறங்க பாய் விரிச்சான் கொடி இடையில் காய் பறிச்சான் கண்ணுறங்க பாய் விரிச்சான் கொடி இடையில் காய் பறிச்சான் பெண் : குத்து விளக்கை கொறச்சி வைச்சான் கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான் வெட்கத்திலே நானிருந்தேன் பக்கத்திலே தானிருந்தான் ஆண் : ஓஓஓ ஓஓ ஓஓ ஓ ….. மண்ணளந்த பார்வை என்ன மயங்க வைத்த வார்த்தை என்ன முத்து நகையின் ஓசை என்ன மூடி வைத்த ஆசை என்ன என்னருகே பெண்ணிருந்தா பெண்ணருகே நானிருந்தேன் ஆண் : அந்த பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா என்ன பார்த்திருந்தா அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன் நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன் ஆண் : கை அருகில் பாவை வந்தால் கண்ணிரண்டில் மாலை இட்டால் முல்லை விரித்தால் வண்ணம் குழைத்தால் முத்து சிரிப்பால் வா வென்று அழைத்தாள் அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல ஆண் : அந்த பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா என்ன பார்த்திருந்தா அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன் நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன் .......! --- அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ---
  15. அவரும் இப்பிடி அடிக்கத்தான் வெளிக்கிட்டவர். என்ன, பந்தைப் பிடிச்சு விட்டாங்கள். 🤣
  16. பாப‌ர் இவ‌ர் பாக்கிஸ்தான் 20 ஓவ‌ர் அணிக்கு தேவையே இல்லை............இவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை விளையாட‌ விட‌னும்........................சிறிது கால‌ம் 20ஓவ‌ர் விளையாட்டில் ஒதுக்க‌ப் ப‌ட்டு மீண்டும் அணிக்குள் வ‌ந்து கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ல‌..........................
  17. தொழுநோய் மறைக்க வேண்டிய நோய் அல்ல – குணப்படுத்தக்கூடியது; தொழுநோயை வென்ற ஒரு குடும்பத்தின் உண்மை கதை 23 Feb, 2026 | 09:57 AM (மனோகரன் பிரியங்கா) எனக்கு இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு முகத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு வித்தியாசமான தேமல் தென்பட்டது. எனது கணவர் அதைப் பார்த்துவிட்டு, இது ஏதோ சாதாரணமாகத் தெரியவில்லை என்று கூறி, எங்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்குதான் அது தொழுநோய் (Leprosy) என்று எங்களுக்குத் தெரியவந்தது. அப்போது பிள்ளைகளுக்கு வெறும் இரண்டரை வயதுதான். "இவ்வளவு சிறிய பிள்ளைகளுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை, உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று பாருங்கள்" என்று மருத்துவர்கள் கூறினார்கள். தேடிப் பார்த்தபோது, என் கணவரின் தந்தைக்கும் இந்த நோய் இருந்ததைக் கண்டறிந்தோம். இறுதியில், நானும் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. எங்கள் குடும்பத்தில் நான்கு பேருமே நோயாளிகளானோம் என்றார் தொழு நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதான இளம் தாய். மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 123 நோயாளிகள் (சுமார் 10%) 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளில் சுமார் 8% பேர் ஏற்கனவே ஊனமுற்ற நிலையில் (Disabilities) இருப்பதும் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் 95% பேருக்கு இந்நோய்க்கு எதிராக இயற்கை எதிர்ப்பு சக்தி உள்ளது. மீதமுள்ள 5% பேருக்கு மட்டுமே இது பரவ வாய்ப்புள்ளது. இலங்கை 1995 ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைப்படி தொழுநோயை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நோய் இன்னும் முழுமையாகத் துடைத்தெறியப்படவில்லை என்பதால், விழிப்புணர்வும் கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது. “ இலங்கையின் தொழுநோய் பாதிப்புப் பட்டியலில் மட்டக்களப்பு இன்று இரண்டாம் இடத்தில் இருப்பதன் பின்னணியில் பல நூற்றாண்டுகால வரலாறும், சமூகப் பயமும், வறுமையும் பின்னிப் பிணைந்துள்ளன. சுமார் 200 - 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பில் உள்ள மாந்தீவு என்ற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒரு காலகட்டத்தில், அங்கிருந்தவர்கள் முறையான மற்றும் முழுமையான மருத்துவ சிகிச்சை பெறாமலேயே வெளியேறி, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்கள் அறியாமலேயே இந்த நோய் பரவுவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தனர். மேலும் வறுமை என்பது வெறும் உணவில்லாமை மட்டுமல்ல. முறையான வீட்டு வசதி மற்றும் ஊட்டச்சத்து இன்மையையும் குறிக்கும். சிறிய வீடுகளில் அதிக எண்ணிக்கையிலானோர் வசிப்பது, சுவாசம் வழியாக இந்நோய் மிக எளிதாகக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பரவக் காரணமாகிறது. போதிய குடிநீர், மலசலக்கூட வசதிகள் இல்லாமை மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை பாக்டீரியாக்கள் வேகமாகத் தாக்க வழிவகுக்கின்றன. மட்டக்களப்பின் பின்தங்கிய கிராமங்களில் நிலவும் நீண்டகால வறுமை தொழுநோய்க்கு முக்கியக் காரணியாகும்.” என்கிறார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் மற்றும் சுகாதார மேம்பாடுகளை மேற்கொண்டுவரும் அமைப்பான இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் வண ரி.எஸ். யோசுவா. “ பயமும் சமூகப் புறக்கணிப்பும் தொழுநோய் என்றாலே கை, கால் அழுகிவிடும் என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. "மாந்தீவு" (தொழுநோயாளிகள் காப்பகம்) பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எங்களையும் அங்கு கொண்டு சென்று பிள்ளைகளிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கடவுளிடம் அழுது வேண்டினேன். சிகிச்சைக்காக மருந்துகள் எடுக்கும்போது முகம் கறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் எதையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னோம். ஆனால், உண்மை தெரிந்ததும் சமூகம் எங்களை விலக்கி வைக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தினார்கள். உறவினர்கள், பெரியம்மா, அக்காமார் என நெருங்கியவர்களே வீட்டிற்கு வருவதையும் பிள்ளைகளைத் தூக்குவதையும் தவிர்த்தார்கள். எந்த நிகழ்வுகளுக்கும் எங்களை அழைப்பதில்லை ” என இளம் தாய் மனக் குமுறலுடன் கூறினார். “ படித்தவர்கள் மத்தியில்கூட இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. தவறான சிகிச்சைகள், ஆரம்பகாலத் தேமல்களைச் சாதாரணமானது அல்லது தோல் நோய் எனக் கருதி, முறையான மருத்துவரை நாடாமல் உள்ளூர் மருந்துகளையோ அல்லது எண்ணெய்களையோ பயன்படுத்துவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. "தொழுநோய் வந்தால் சமூகம் எங்களை ஒதுக்கிவிடும்" என்ற பயத்தால் பலர் நோயை மறைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது. சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் (தாத்தா, பாட்டி) இருந்து குழந்தைகளுக்கு இது பரவுகிறது. பாடசாலை ஆசிரியர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தவறி விடுகின்றனர் ” என்கிறார் ரி.எஸ். யோசுவா. இந்நோய் குறித்த அறியாமையினால் குடும்பங்களில் பிரிவுகள் ஏற்படுதல் மற்றும் திருமணத் தடைகள் போன்ற சமூகப் பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்கின்றனர். ஆரம்ப காலத்தில் மருந்து வசதிகள் இல்லாததால் இந்நோய் குறித்த பயம் மக்களிடையே இருந்தது, ஆனால் தற்போது முறையான மருத்துவ சிகிச்சை மூலம் தொழுநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். உணர்ச்சியற்ற தேமல், தடித்த தேமல், வெளிறிய நிறத்திலான தேமல், ரோமங்கள் வளர்ச்சி இல்லாத தேமல்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையைப் பெற வேண்டும். “ எனது பிள்ளைகளை மூன்று வருடங்களுக்குப் பின்னர் பாடசாலையில் சேர்த்தபோது, ஆசிரியர்களுக்கு எனது பிள்ளைகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல் கிடைத்துவிட்டது. பிள்ளைகளுக்குத் தொழுநோய் இருக்கும்போது ஏனைய பிள்ளைகளுடன் எப்படிப் பழக விடலாம்? என்று ஆசிரியர்கள் என்னிடம் கேட்டனர். நான் மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு, மருந்து எடுக்கத் தொடங்கிய உடனேயே இது மற்றவர்களுக்குத் தொற்றாது என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே பிள்ளைகள் பாடசாலையில் இணைய அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக மருந்து எடுத்த காலத்தில் உடல் சோர்வு, பசியின்மை மற்றும் இரத்தச் சோகை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும், விடாமுயற்சியுடன் மருந்துகளை உட்கொண்டோம். இப்போது நாங்கள் நான்கு பேருமே முழுமையாகக் குணமடைந்து விட்டோம்” என அந்த தாய் மகிழ்ச்சியுடன் கூறினார். தொழுநோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் என்ற கிருமியால் வரும் ஒரு சாதாரண நோயாகும். 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையான மாத்திரைகளை உட்கொண்டால் முழுமையாகக் குணப்படுத்தலாம். மருந்து உட்கொள்ளத் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே உங்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்குத் தொற்றும் வாய்ப்பு 100 வீதம் நீங்கிவிடுகிறது. தோலில் உணர்ச்சியற்ற தேமல், கை-கால்களில் மந்தமான உணர்வு ஆகியவை தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ஊனம் ஏற்படாமல் தடுக்கலாம். தொழு நோய் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது, சிகிச்சை வகை ; PB (Paucibacillary) (குறைந்த பாதிப்பு) நோயாளியின் நிலை ; 3 அல்லது அதற்கும் குறைவான தழும்புகள் உள்ளவர்கள் சிகிச்சைக்கான காலம் 6 மாதங்கள் ஆகும். இரண்டாவது, MB (Multibacillary)(அதிக பாதிப்பு) நோயாளியின் நிலையானது 3-க்கும் மேற்பட்ட தழும்புகள் காணப்படுபவர்கள் சிகிச்சை காலம் 12 மாதங்கள் ஆகும். “ ஒரு மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்படுவது, அங்குக் கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பணிகள் மிகச் சிறப்பாக நடப்பதைக் குறிக்கிறது. இலங்கை சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு (ALC) மற்றும் மாவட்ட ரீதியிலான மருத்துவக் குழுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றன. மட்டக்களப்பில் நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது, அங்கு மருத்துவத் துறை விழிப்புணர்வுடன் இருப்பதையே காட்டுகிறது. மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. ” என இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் ரி. எஸ் யோசுவா தனது கருத்துக்களை முன்வைத்தார். “ சமூகத்திற்குச் சொல்லும் செய்தி தொழுநோய் குறித்துச் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே மக்கள் எங்களை ஓரம் கட்டுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இன்னும் பலர் இந்த நோய்க்குச் சிகிச்சை பெறப் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தொழுநோயைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதற்கான மருந்துகள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. சிகிச்சை எடுக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இது மற்றவர்களுக்குத் தொற்றாது. எனவே, மறைக்காமல் சிகிச்சை பெற்று இயல்பாக வாழுங்கள்” என ஏனையவர்களுக்கு மிகவும் தைரியத்துடன் கூறுகிறார் தொழுநோயை வென்ற இரண்டு பிள்ளைகளின் தாய். “மடக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளாக 608 பேர் உள்ளனர். கடந்த ஆண்டை விட சில மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அல்லது சங்கங்களின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் இந்த நிலைமை எந்தவித மாற்றமுமின்றி கடந்த ஆண்டைப் போலவே சமநிலையில் காணப்படுகிறது. தொழுநோய்க்கான சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிவதற்கும் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிதல் முதல் அவர்களுக்கான மருந்து மற்றும் இதர மருத்துவ சேவைகள் வரை அனைத்தும் அரசின் நேரடி மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறுகின்றன ” என மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்க இயக்குனர் டெபோரா தெரிவித்தார். தொழுநோய்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே என ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை காரணமாக, வைத்தியசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் பலர் உள்ளனர். இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நோயாளிகள் தங்களைத் தாங்களே சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. நோய் குறித்த பயத்தினால் ஏனையவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். தொழுநோயின் தீவிரத்தினால் ஏற்படும் ஊன நிலைகள் (Grade 2 Deformity) சாதாரண பார்வையில் ஒருவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதனால், அவர்கள் மற்றவர்களைப் போல வேலை செய்ய முடியாத நிலை இருந்தாலும், அவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. “புதிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் தொழுநோயாளர் சங்கங்கள் (Leprosy People's Association) முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் மூலம் கண்டறியப்படும் புதிய நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அரசால் வழங்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் தற்போது சுமார் 10 மாவட்டங்களில் மட்டுமே தொழுநோயாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்தச் சேவையை 25 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதே பிரதான இலக்காகும். சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நோய் குறித்த பயம் மற்றும் சமூகப் பாகுபாட்டினால் மறைந்திருக்கும் புதிய நோயாளிகளை வெளிக்கொண்டு வர உதவுகின்றனர். கண்டறியப்படும் நோயாளிகள் உடனடியாகச் சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கான முறையான சிகிச்சைகள் உறுதி செய்யப்படுகின்றன ” எனத் தெரிவித்தார் டெபோரா. மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. அனைத்து தேமல்களும் தொழுநோய் அல்ல, அதனை மருத்துவர்களே உறுதி செய்வார்கள். ஒரு நோயாளி முறையாக மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினால், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்நோய் பரவாது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டத் தேவையில்லை. அவர்கள் மருந்து உட்கொள்ளும் போது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதால், அவர்கள் அனைவரையும் போல இயல்பாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சமூகத்திற்கு ஒரு சுமையாக அல்லாமல், சமூகத்தின் அழகான ஒரு பகுதியாகவே இலங்கையில் கருதப்படுகின்றனர். சமூகத்தில் அல்லது மாவட்டங்களில் தொழுநோய்க்கான அறிகுறிகளுடன் எவரேனும் இனம் காணப்பட்டால், அவர்களை உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வழிகாட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இலங்கையைத் தொழுநோயற்ற நாடாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு , அதனை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும். தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் இதனைத் தடுக்க முடியும். https://www.virakesari.lk/article/238236
  18. ஜக்கம்மா தெலுங்கு தெய்வம்… நீங்கல் தமிழில ஏவ- அவா அதை தலைகீழா விளங்கிட்டா என நினைக்கிறேம். நெஷ்டு டைமு டெலுகுலே மாட்லாடு😂
  19. மனதில் என்ன மயக்கம் .......... ஜெமினி & ராகினி (பத்மினியின் சகோதரி) .......! 😍
  20. வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின் | 23 Feb, 2026 | மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டார் ”2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துக்கொள்ள தமிழர்களுக்கு தனியரசை உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு சிங்கள அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறி விட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்சக் குண்டுகளை வீசினர். ‘நான் பத்திரிகையாளர்’ என்று கத்தினேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனேட் வைத்து தாக்கினார்கள். அந்த இரத்தக் காயத்துடன் முன்னே நடந்து வந்தேன். நிற்க முடியவில்லை. இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அப்போது என் அருகில் வந்த படை வீரர்கள் பலமாகத் தாக்கத் தொடங்கினார்கள். என் உடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கினார்கள். நான் மூச்சுவிடக் கஷ்டப் பட்டுக் கொண்டும், தலையில் கண்ணில் காயத்துடனும் நெஞ்சில் வெடிக்காயத்துடனும் இருந்தேன். அப்படியே தூக்கி கனரக வாகனத்தில் வீசினார்கள். அந்த மக்கள் பட்ட அவலத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் எனது அனுபவம் தமிழர்களின் வேதனையைச் சொல்லப் போதுமானது” என்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் மேரி கொல்வின். தமிழர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை பேசி வந்த போது சொற்பமாக ஒலித்த ஐரோப்பியக் குரல்களில் அழுத்தமானது இவருடையது. எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கொல்வின் சென்று விடுவார். அதனாலேயே ‘போர்ச் செய்தியாளர்’ என்ற பட்டம் தாங்கினார். 2000-ம் ஆண்டில் தான் அவரது பார்வை சிங்கள பேரினவாத அரசின் பக்கமாகவும் திரும்பியது. நேரடியாக தமி ழீ ழம் வந்தார். அப்போது, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தான் அவரது இடது கண்ணின் பார்வை முழுமையாகப் பறிபோனது. அன்று முதல், கறுப்புத் துணியைக் கண்ணில் கட்டிக் கொண்டு நடமாடினார். இந்தத் தாக்குதலை புலிகள் கண்டித்ததால், இவரை ‘புலி ஆதரவாளர்’ என்று சிங்கள அரசாங்கம் குற்றம் சாட்டியது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழர் பிரச்சினையை எழுதுவதில் தொடர்ந்து ஆர்வமாக இருந்தார். நான்காம் கட்ட ஈழப் போர் என்று அழைக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ நேரத்தில் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை, ஐ.நா. அமைப்புக்கும் புலிகளுக்கும் நடந்த போது இணைப்பாளராக இருந்தவர் மேரி கொல்வின் தான். வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களான நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மேரி கொல்வினின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத் தான் வெளியே வந்தார்கள். ஆனால், கோத்தபாய ராஜபக்ச – சரத் பொன்சேகா கூட்டணி, வாக்குறுதியை மீறி அந்த இருவரின் உயிரைக் குடித்தது. அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை…..” என்று தொடங்கி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதன் பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எங்கோ பிறந்து... யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கை, நம் அனைவருக்குமான தூண்டுதல்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமானவரானார் மேற்கத்தைய பெண்மணியான இந்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார். புலேந்திரன் முருகானந்தம்
  21. தேரர்களால் களங்கப்படும் பௌத்தம்! written by Admin July 9, 2023 நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவற்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ காவற்துறை தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  22. அவ‌ரின் விளையாட்டும் ச‌ரி இல்லை இவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ர‌ன்ஸ் அடிக்க‌வே இல்லை............... உல‌க‌ கோப்பை தொட‌ங்க்க‌ முத‌ல் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிச்சு தொட‌ரை வென்ற‌வ‌ர்................ உல‌க‌ கோப்பையில் இவ‌ரின் செய‌ல் பாடு பாராட்டும் ப‌டி இல்லை..................................................
  23. இங்கிலாந்து அரை இறுதியில் தன் காலைப் பதித்து விட்டது. மற்றைய மூன்று அணிகளும் யார் யார்
  24. பாகிஸ்தான் தலைவரை இவரிடம் கொஞ்சம் பாடம் படிக்க அனுப்ப வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.