Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை Mar 3, 2026 - 07:23 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். "அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான "ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு" (The birth of the Trump Doctrine) என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது!’ என்று கூறினேன்" எனப் பதிவிட்டுள்ளார். பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில், ட்ரம்பின் இந்த அறிக்கை ஈரான் விவகாரத்தில் அவர் மிகவும் கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதையே காட்டுகிறது. ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை
  3. போனமாதம் சந்தித்தார்கள், இந்த மாதம் சந்திக்கிறார்கள், வாற மாதமும் சந்திப்பார்கள். சுமந்திரனும், சாணக்கியனும்.... பல வருடங்களாக வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, பத்திரிகைகளில் படம் போடுகின்றார்கள். இந்த சந்திப்புக்களால் இதுவரை ஏதாவது ஒரு பலன் கிடைத்ததா? வெளிநாட்டு தூதுவர்களுக்கு... தமிழ் மக்களின் பிரச்சினை இதுவரை என்ன என்று தெரியாதா? அதை... வருடக் கணக்கில் இவர்கள் அவர்களுக்கு விளங்கப் படுத்தியும் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்றால்... இந்த படம் காட்டும் குரூப்புக்கு விளங்கப் படுத்த தெரியவில்லையா... முதலில்... இவங்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று ஆரும் சொல்லிக் கொடுங்கப்பா. 😂
  4. இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 05:13 PM இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சட்டத்தரணியும், கண்டியில் மதிப்புமிக்க சட்ட நிபுணராகவும் அறியப்பட்ட சங்கக்கார, தனது தொழில்முறை பணிகளால் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். அன்னாரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு 2026 மார்ச் 4 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கண்டி மஹியாவ சேமக்காலையில் நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் மாலை 4.30 மணிக்கு இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்
  5. 1970, 1980 களில் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை விதைத்ததே ஈரான் தான். முஸ்லீம் அரசியல்வாதிகளினூடாக பள்ளிவாசல் முதல் பள்ளியறை வரை அபாய முதல் ஹலால் வரை மத அடிப்படை சிந்தனையை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள் தான்.
  6. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு Mar 3, 2026 - 07:06 PM ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். "ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையில், இந்தப் போரை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதானமான மற்றும் ஒரே காரணமும் அதுவேயாகும்," என லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார். ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் தற்போது பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், குறிப்பாக அரபு நாடுகள் இதற்கான பொருளாதார ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மோதல்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் காரணமாக அண்டை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு
  7. ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர் 03 Mar, 2026 | 03:47 PM ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கியூபாவின் புதிய தூதுவர் பட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (03) முற்பகல் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துதல், கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பி க்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வளர்த்தெடுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் இடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கியூபா தூதுவர் இதன்போது கருத்து வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது, ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதிய தூதுவரின் இலங்கையுடனான இராஜதந்திர பணிகள் வெற்றியளிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர்
  8. இந்த அவுஸ்திரேலியக்காரனை நம்பினதுக்கு...என்னை செருப்பாலை அடிச்சிருக்கணும்.. நலமா சுவைப்பிரியன்
  9. இனவாதம், வன்முறை மற்றும் யுத்தம் ஆகியவற்றுக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம். சகல விதமான வன்முறைகளையும் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கு நாடுகளும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆயுதங்களை கைவிட்டு சமாதானத்தை கையில் எடுக்க வேண்டும். நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல். Ceylon Focus News ·
  10. சுப்பரப்பு...அமெரிக்கக் காரன் கண்டுபிடிக்கிற காரணம் மாதிரி ....பழைய நேர்ஸ்மாரை சந்திக்கிறதுக்கு ரோசா முள்ளை கண்டுபிடிச்சிருக்கிறியள் .... பரவாயில்லை எனக்கும் இடது ஆட்காட்டி விரல் மொழியிலை ஒருகாய் வளர்ந்திருக்கு...சிறியரைப்போல ஒரு கை பார்ப்பம் என்று மனிசியையும் கூட்டிக்கொண்டு தமிழ் பெண்வைத்தியரிடம் போனேன் .. அவ சிரித்தபடி வேறை வருத்தம் இருந்தால் சொல்லுங்கோ என்று கேட்டா...இதுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும்...
  11. காமனெயி கொலைக்குப் பிறகு இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்? பட மூலாதாரம்,Getty Images 6 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக இரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் காமனெயியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும், இரானின் இஸ்லாமிய ஆட்சியின் பிற மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த 86 வயதான காமனெயியின் மரணத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இரானிய அரசு தொலைக்காட்சியால் உறுதிப்படுத்தப்பட்டது. காமனெயி உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவர். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானில் இரண்டு உச்ச தலைவர்கள் மட்டுமே உள்ளனர்: ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி மற்றும் ஆயதுல்லா அலி காமனெயி. இரானில் அதிஉயர் தலைவர் மிகவும் சக்திவாய்ந்த பதவியை வகிக்கிறார். அவர் நாட்டின் தலைவராகவும், இரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படை (IRGC) உட்பட ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார். காமனெயியின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசு யார், இரானின் எதிர்காலம் என்ன என்பதுதான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி. பட மூலாதாரம்,Reuters இரான் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி இறந்ததைத் தொடர்ந்து, அவரது துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அப்படி நடந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று டிரம்ப் பதிலளித்தார். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வியூக விவகார நிபுணர் பிரம்மா செல்லானி தனது எக்ஸ் பதிவில், "பழிவாங்கும் உணர்வு மத்திய கிழக்கு கலாசாரங்களில் ஆழமாக ஓடுகிறது, அது சுன்னி அல்லது ஷியாவாக இருந்தாலும் சரி. இரானின் அதிஉயர் தலைவரை படுகொலை செய்ததன் மூலம், டிரம்ப் மற்றும் நெதன்யாகு அங்கு ஆட்சி மாற்றத்திற்கான தங்கள் முயற்சியை மேலும் சிக்கலாக்கியுள்ளனர். ஆயதுல்லா அலி காமனெயியின் படுகொலை மிகவும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, இது ஷியா சமூகத்தின் தியாகம் மற்றும் எதிர்ப்பு தத்துவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஷியா அரசியல் கலாசாரத்தில், ஓர் அதிஉயர் தலைவர் வெளிநாட்டு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டால், அது உடனடியாக ஆஷுராவின் (Ashura) கதையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. அதாவது, கர்பலாவில் இமாம் ஹுசைன் உயிர்த்தியாகம் செய்த நிகழ்வுடன் இணைக்கப்படுகிறது. பொதுவாக தலைமைத்துவ செயலாகக் கருதப்படுவது இப்போது புனிதமான தியாகமாக முன்வைக்கப்படுகிறது." என்று அவர் எழுதினார். "40 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, காமனெயியின் மரணத்தை தியாகமாக விவரிப்பதன் மூலம், அரசாங்கம் "அடக்குமுறை" கொள்கையை ஊக்குவிக்கிறது, துக்கம் என்பது பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழியாக மாற்றப்படுகிறது. டெஹ்ரான் மக்களின் துக்கத்தை "பழிவாங்க வேண்டிய கடமை" என்ற உணர்வாக" மாற்ற முயற்சிக்கிறது. மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரான சுபாதா சௌத்ரி, இந்தத் தாக்குதலுக்கு இரான் நிச்சயமாகப் பழிவாங்கும் என்று நம்புகிறார். "ஊடுருவல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இரான் முதலில் அதன் புரட்சிகர காவல் படையை பாதுகாக்கும். வளைகுடா நாடுகளில் உள்ள செவ்ரான் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இரான் குறிவைக்கலாம். வளைகுடா நாடுகளில் அமெரிக்கா 19 ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. இரான் ஏற்கெனவே இவற்றை குறிவைத்துள்ளது, தொடர்ந்து அவ்வாறு செய்யக்கூடும். இது ஒரு பெரிய பிராந்தியப் போராக அதிகரிக்கும் என்றும் நான் நம்புகிறேன்." என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images ரியாத் மீதான தாக்குதலை இரான் நடத்தியதாக சௌதி அரேபியாவும் கூறியுள்ளது . இரானும் சௌதி அரேபியாவும் பிராந்திய போட்டியாளர்களாக இருந்தன, ஆனால் சீனாவின் மத்தியஸ்தம் மூலம் 2023 இல் ராஜ்ஜீய உறவுகள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால், சௌதி அரேபியாவும் அமெரிக்காவை அதிகாரபூர்வமற்ற, ரகசியமான வழியில் இரானை தாக்குமாறு கேட்டுக்கொண்டதாக சுபாதா சௌத்ரி கூறுகிறார். "சௌதி அரேபியா இரட்டை வேடம் போடுகிறது. ராஜ்ஜீய ரீதியாக அதன் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய அதே வேளையில், இரானைத் தாக்க அமெரிக்காவிடம் கூறுவதற்கு பின்வாயில் வழிகளையும் பயன்படுத்துகிறது. இது வெறும் ஷியா-சுன்னி மோதல் மட்டுமல்ல. ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதால், சௌதி அரேபியா உடனடியாக பதிலடி கொடுக்க முடியாது, ஏனெனில் அதன் சொந்த நாட்டிலும் ஷியா மக்கள் உள்ளனர். சௌதி அரேபியாவும் முகமது பின் சல்மானும் காத்திருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்," என்று சுபாதா சௌத்ரி கூறினார். இந்திய உலக விவகார மன்றத்தின் உறுப்பினரும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணருமான ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக், இந்த தாக்குதலின் மூலம், இரான் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன என்று கூறினார். "ஆயதுல்லா அலி காமனெயி கொலை நேரடியான அரசியல் கொலை அல்ல. இது, மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர், ஷியா சித்தாந்தத்தின் பிரமுகர், புரட்சிகர கருத்துக்கள், இரானின் அரசியல் அடித்தளத்தின் சின்னம் ஆகியவற்றின் கொலை. இதன் விளைவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது இரானுடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடிவிட்டன. அதே நேரத்தில், இரான் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு எழுந்துள்ள சவால் இரானின் அரசு தொலைக்காட்சி ஆயதுல்லா அலி காமனெயியின் ஒவ்வொரு அசைவையும் முக்கியமாக ஒளிபரப்பியது. பொது இடங்களில் உள்ள விளம்பரப் பலகைகளில் அவரது படங்கள் இடம்பெற்றன, மேலும் அவரது புகைப்படம் கடைகளில் ஒரு பொதுவான அங்கமாக இருந்தது. இத்தகைய வன்முறை சூழ்நிலையில் அவரது மரணம் இரானுக்கும் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் ஒரு புதிய மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் அடையாளமாக நிபுணர்கள் பார்க்கிறார்கள். சுன்னி மற்றும் ஷியா அமைப்புகளுக்கிடையே இப்போது ஒரு புதிய பிளவு தோன்றக்கூடும் என்று ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக் கூறுகிறார். இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகள் மீண்டும் தொடங்கிய பிறகு சற்று தணிந்ததாகத் தோன்றிய வேறுபாடுகள் இப்போது மீண்டும் வெளிப்படும். "அரபு நாடுகளில் இரான் தாக்கிய அனைத்து தளங்களும் அமெரிக்க நட்பு நாடுகளாகும், மேலும் அமெரிக்கா அங்கு ராணுவ தளங்களைப் பயன்படுத்துகிறது. இரான் தலைமையிலான 'எதிர்ப்பின் அச்சு' (அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் குழுக்களின் அமைப்பு) ஒரு புதிய வகையான பலத்தைப் பெறும். இப்போது, பேச்சுவார்த்தையின்போது நாட்டின் சின்னத்தை (காமனெயி) நீங்கள் அகற்றிவிட்டீர்கள் என்று சொல்லும் தற்காப்பு அதற்கு உள்ளது. இரான் வைத்திருக்கும் ஆயுதக்குழுக்கள் புதிய வழியில் எழுவார்கள். இரான் அவர்களுக்கு சுதந்திரமான கட்டுப்பாட்டை வழங்கும். காஸா பிரச்னை காரணமாக சௌதி அழுத்தத்தின் கீழ் இரான் செய்த குறைவான பின்வாங்கலும் ஒரு கட்டாயமாகும், ஏனெனில் அது பலவீனமாகிவிட்டது. ஆனால், இப்போது இந்த ஆயுதக்குழுக்கள் ஒரு புதிய வழியில் தங்கள் தலைகளை உயர்த்துவதைக் காணலாம், அவர்களுக்குள் ஒரு புதிய வகையான வாழ்க்கை உருவாகும். மேலும், அவர்கள் முழு பிராந்தியத்திலும் மீண்டும் தீவிரமாக செயல்படுவார்கள்." பட மூலாதாரம்,ATTA KENARE/AFP via Getty Images பொருளாதார பலம் இருந்தபோதிலும் அரசியல் செல்வாக்கு இல்லாத வளைகுடாவின் பொருளாதார சக்திகளுக்கு நிலைமை சவாலானது என்று சித்திக் கூறினார். "கடந்த ஒரு வருடத்தில், டொனால்ட் டிரம்ப் 9 டிரில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு வந்துள்ளார். இந்த 9 டிரில்லியன் டாலர்களில், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளிலிருந்து நான்கரை டிரில்லியன் டாலர்களை அவர் கொண்டு வந்துள்ளார். ஆனால், இவ்வளவு முதலீடுகளை வழங்கிய போதிலும், இரானுக்கு எதிரான போரை நிறுத்த அமெரிக்காவை இந்த நாடுகள் சமாதானப்படுத்தத் தவறிவிட்டன. எந்தவொரு போர் நடந்தாலும், நாமும் அதனால் பாதிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்திருந்ததால், இந்த நாடுகள் போரைத் தவிர்ப்பது பற்றி தொடர்ந்து பேசின. அவர்களின் புரிதல் பெரிய அளவில் சரியாக இருந்தது. இரான் சௌதியைத் தாக்குவதால், நடுநிலை நாடுகளான குவைத் போன்ற நாடுகள் தாக்கப்படுகின்றன, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் தாக்கப்படுகின்றன." காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, ஏமனில் ஹூத்திகள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களை இரான் 'எதிர்ப்பின் அச்சு' என்று அழைக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தக் குழுக்கள் அனைத்தும் மீண்டும் வலுவடையும் என்றும் சுபாதா சௌத்ரி கூறுகிறார். இரான் இப்போது எப்படி இருக்கும்? காமனெயி ஒரு சிக்கலான மரபை விட்டுச் செல்கிறார். இரான் ஒரு வலுவான மத அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த துணை ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடு. பல்வேறு இரானிய அதிபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர், ஆனால் நாட்டுக்குள், உண்மையான கட்டுப்பாடு காமனெயியிடம் இருந்தது. காமனெயிக்குப் பிறகு இரானின் அரசியல் எந்தத் திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து ஃபஸூர் சித்திக் கூறுகையில், "இந்தத் தாக்குதல் இரானுக்கு நல்லது, ஏனெனில் அங்கு எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை, குறைந்தபட்சம் சிறிது காலத்திற்கு". "இரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் அங்குள்ள மக்களால் நடத்தப்பட்டன, அவர்கள் அங்குள்ள பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தனர், அது அரசியல் ரீதியில் இல்லை. இந்த போராட்டம் காமனெயிக்கு எதிரானது அல்ல. மக்கள் காமனெயிக்கு எதிரானவர்கள் என்பது அமெரிக்கா கூறிவருவது." "சாதாரண ஷியாக்கள் இன்னும் காமனெயியை போற்றுதலுக்குரிய நபராகவே பார்க்கிறார்கள். இப்போதைக்கு, இரானில் உள்ள அனைத்து எதிர்ப்புகளும் அடக்கப்படும். அங்கு எந்த எதிர்ப்பும் இருக்காது. இப்போதைக்கு, காமனெயியின் கொலை இரானை ஒன்றிணைக்கும்" என்று அவர் கூறுகிறார். "காமனெயியின் இடத்தை, அவரைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவர் பிடிப்பார். இதன் பொருள் அவர் அவரைப் போலவே சிந்திப்பார், அவரைப் போலவே தீவிரமானவராக இருப்பார், அதே சித்தாந்தத்தைக் கொண்டிருப்பார். காமனெயி இல்லாத நிலையில், மதச்சார்பற்ற அரசியலுக்கு இடமில்லை. அமெரிக்கா அங்கு முழு அமைப்பையும் மாற்றும் என்று நினைத்தால், அங்கு ஆன்மிகத் தலைமைக்கு இடமில்லை, அங்குள்ள அரசியல் படிநிலை முடிவுக்கு வரும், அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காமனெயி கொலைக்குப் பிறகு இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்?
  12. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள். ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது. இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்... சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.
  13. நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..! Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 03:10 PM நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) சந்தித்துள்ளனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் கலந்துரையாடப்பட்டதாக இரா.சணக்கியன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீடித்து வரும் அரசின் பொறுப்புணர்வு தொடர்பான கேள்விகள், நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது, மற்றும் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டிய சூழல் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. அத்துடன், அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம், மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மேலும், நோர்வே நாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஜனநாயக மதிப்புகள், மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. எமது பிரச்சினைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகிற நோர்வே அரசாங்கத்திற்கும், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பணியில் செயற்பட்டு வரும் தூதர் மே–எலின் ஸ்டெனெரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி கூறியதாக இரா.சணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!
  14. உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை கிடுகிடு உயர்வு! Mar 3, 2026 - 05:50 PM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் ஐரோப்பாவில் எரிவாயு விலை 33 வீதத்தாலும், பிரிட்டனில் 30 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இது 2023 ஜனவரி மாதத்தின் பின்னர் பதிவான அதிகபட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கட்டார் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதால், நேற்றையதினம் எரிவாயு விலை சுமார் 50 வீதத்தால் அதிகரித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் நிறுவனமான 'Trading Economics' இன் தரவுகளின்படி, இந்த நிலைமை காரணமாக ஐக்கிய இராச்சியம் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இதற்கு சில முக்கிய காரணங்கள் செல்வாக்கு செலுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்: எரிவாயு சேமிப்புத் திறன் குறைவாக இருத்தல். இறக்குமதியில் அதிகளவாக தங்கியிருக்க வேண்டிய நிலை. பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உள்ளூர் கையிருப்பு 30 வீதத்திற்கும் குறைவாகக் காணப்படுதல். இந்த விலை உயர்வு காரணமாக எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிசக்தி செலவுகள் அதிகரிப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஓமானின் 'Duqm' துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கிகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், கடந்த வார இறுதியிலும் இதே துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஊழியர் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த தொடர்ச்சியான தாக்குதல்களால் பிராந்தியத்தின் எரிசக்தித் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் கட்டாரில் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை கிடுகிடு உயர்வு!
  15. ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் - UNESCO கவலை! Mar 3, 2026 - 03:15 PM யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரண்மனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து, யுனெஸ்கோ அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த அரண்மனை, ஈரானிய கலாச்சார அடையாளத்தின் முக்கியக் குறியீடாகும். மேலும், சர்வதேச சட்டத்தின்படி இவ்வாறான இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள தெஹ்ரானின் ஆர்க் சதுக்கத்திலும் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜார் வம்சத்தைச் சேர்ந்த ஈரானிய மன்னர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தப்பட்ட கோலஸ்தான் அரண்மனை, பின்னர் பஹ்லவி வம்சத்தின் அதிகாரப்பூர்வ தலைமையகமாக மாறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரண்மனையில் உள்ள கண்கவர் கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் பழங்காலக் கண்ணாடி வடிவமைப்புகள், வெடிப்பின் அதிர்வலைகள் காரணமாக உடைந்து நொறுங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ச் சூழலின் மத்தியில், விலைமதிக்க முடியாத இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்கள் ஆபத்தில் சிக்குவது சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் - UNESCO கவலை!
  16. நான் கடந்த சனி வைத்pய சாலை போய் இன்று தான் வீடு வந்தேன்.என்டாலும் புள்ளி கிடைக்காது என்டதுக்குமா அறிவிப்பாங்கள்.☹️🤣மற்றது றோய் டயஸ் எனக்கு பிடித்த ஸ்ரிலிஸ் பிளையர்.
  17. எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம் Mar 3, 2026 - 02:47 PM தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனத் தெரிவித்த ஜனாதிபதி, மார்ச் 12ஆம் திகதியளவில் ஒரு இலட்சம் புதிய எரிவாயு சிலிண்டர்களுடன் கப்பல் ஒன்று நாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறினார். "நாம் எதிர்கொள்ளும் ஒரு விசேட பிரச்சினை எரிவாயு பிரச்சினை. எமது முழுமையான சேமிப்புத் திறன் 8,000 மெட்ரிக் தொன்களாகும். லிட்ரோ நிறுவனத்தின் எமது தினசரி எரிவாயு தேவை 1,000 முதல் 1,200 மெட்ரிக் தொன்களுக்கு இடைப்பட்டதாகும். எம்மால் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமிக்க முடியும். எனவே, கையிருப்பு முடியும் வரை காத்திருந்து எரிவாயுவைக் கொண்டுவர முடியாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 8,000 மெட்ரிக் தொன் வீதம் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இதுதான் நிலைமை. இதனை மாற்ற வேண்டும். தற்போதும் மாலைதீவில் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் 8,000 மெட்ரிக் தொன் வீதம் கொண்டு வரப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். லிட்ரோ எரிவாயு ஒரு இலட்சம் புதிய சிலிண்டர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் திகதி அந்த கப்பல் வருகிறது. ஏனெனில் சிலிண்டர் தட்டுப்பாடும் நிலவியது. மஞ்சள் நிற சிலிண்டர் வைத்திருப்பவர்கள் நீல நிறத்திற்கு மாற விரும்பினர். ஆனால் போதிய சிலிண்டர்கள் இல்லை. இப்படியேதான் இதனைச் சரிசெய்கிறோம். எரிவாயு தட்டுப்பாடு என்று கூச்சலிட்டார்கள், முதலில் இந்த நெருக்கடியைப் புரிந்துகொள்ளுங்கள்... 8,000 மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் இருந்து, லிட்ரோவால் 1,000 - 1,200 வரை வழங்க முடியுமான நிலையில், திடீரென தேவை 1,800 ஆக அதிகரித்தால், எஞ்சியுள்ள கையிருப்பை 5 நாட்களுக்கும் குறைவாகவே வழங்க முடியும். அப்போது ஒரு நெருக்கடி ஏற்படலாம். அந்த நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண முடியும்." என்றார். எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்
  18. பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 02:33 PM (அட்டன் கிளை) டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர். இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது. இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார். இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘ எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர். பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?;
  19. இன்று பகுதி அளவு சந்திர கிரகணம்: இலங்கையர்களுக்குப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு! 03 Mar, 2026 | 10:33 AM 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தென்படும் ஒரேயொரு சந்திர கிரகணம் இன்று (03) நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6:21 மணி முதல் இலங்கையர்கள் இந்தச் சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும். இது ஒரு முழு சந்திர கிரகணமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கையில் உள்ள அவதானிப்பாளர்களுக்கு இது ஒரு பகுதி அளவு சந்திர கிரகணமாகவே தென்படும். மாலை 6:21 மணிக்கு சந்திரன் கிழக்குத் திசையில் உதிக்கும் போது, அதன் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படுவதை அவதானிக்க முடியும் என வானியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று பகுதி அளவு சந்திர கிரகணம்: இலங்கையர்களுக்குப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு!
  20. Today
  21. கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்! 03 Mar, 2026 | 09:35 AM கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றை 183 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் அடிக்கல் நாட்டி வைத்தார். மத்திய மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தை, சிறுவர் பராமதரிப்பு திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் மூடப்பட்ட ஒரு பாடசாலையே இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெப்புல்வத்த என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக இருமாடிக்கட்டிடம் மற்றும் சுற்று மதில்கள் என்பன அமைப்பதற்கான அடிக்ல் நாட்டு விழாவில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!
  22. ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் 'வில் ஜேக்ஸ்' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 3 மார்ச் 2026, 04:58 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்தியா, இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் அரையிறுதியில் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். வில் ஜேக்ஸ் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர்தான் சிறந்த வீரர் என்று கூட சொல்லலாம். நான் அவரது செயல்பாட்டை வெறுமனே எண்களால் பார்க்கவில்லை. இலங்கையில் உள்ள பெரிய, மெதுவான ஆடுகளங்களில் நிறைய போட்டிகளை விளையாடியிருக்கிறார்கள் எனும் போது அங்கு பெரிய எண்களைப் பார்க்க முடியாது. நெறுக்கடியான நேரத்தில் இங்கிலாந்தை எத்தனை போட்டிகளில் அவர் காப்பாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன். நெருக்கடியான நேரத்தில் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தவர் ஜேக்ஸ் தான். இந்த உலகக் கோப்பையில் (இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டி வரை) அவர் 191 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் அது 12-வது இடம். 7 விக்கெட் வீழ்த்தி அந்தப் பட்டியலில் 23-வது இடத்தில் இருக்கிறார். இதையெல்லாம் விட என்னை அதிகம் கவர்ந்திருக்கும் எண் - அவர் 7 ஆட்டங்களில் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். வில் ஜேக்ஸின் பங்களிப்பு இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய முதல் போட்டியில் இருந்தே தொடங்கிவிட்டது. நேபாளத்துக்கு எதிராக அவர் 18 பந்துகளில் அடித்த 39 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை) தான் பெரிய வித்தியாசமாக இருந்தது. அது இல்லாவிட்டால் நிச்சயம் அந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றிருக்கும். அதேபோலத்தான் இத்தாலிக்கு எதிரான அரைசதம், இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் வீசிய 4 ஓவர் ஸ்பெல், நியூசிலாந்துக்கு எதிராக அவர் (ஆட்டமிழக்காமல்) அடித்த 32 ரன்கள் எல்லாமே. "பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடுகிறார்" இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஜேக்ஸ் நெருக்கடியான நேரத்தில் தான் களமிறங்கியிருக்கிறார். அந்தப் போட்டிகளில் மிகச் சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். சொல்லப்போனால், பெரும்பாலான இங்கிலாந்து பேட்டர்கள் இந்த உலகக் கோப்பையில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. ஃபில் சால்ட், டாம் பேன்டன், சாம் கரண் என அனைவரின் சராசரியுமே 25க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக பட்லர் இரட்டை இலக்க ஸ்கோரை எடுக்கவே தடுமாறுகிறார். அதனால்தான், ஜேக்ஸின் பங்களிப்பு இன்னும் பெரிதாக இருக்கிறது. இங்கிலாந்து விரைவாக 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு தான் களமிறங்குகிறார். அங்கிருந்து அணியைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு வீரரின் திறமையைக் காட்டும். நீங்கள் 140/4 என்ற நிலையில் களமிறங்கி கடைசியில் அதிரடியாக ஆடி 180 என்ற ஸ்கோருக்குக் கொண்டுவருவது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஆனால், 40/5, 50/4 என்ற நிலையில் இறங்கி 170, 180 கொண்டுவருவது சாதாரண விஷயம் இல்லை. கடினமான சூழ்நிலைகளில் மற்ற வீரர்கள் சுழலுக்கு எதிராகத் தடுமாறும் போது இவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அந்த இலங்கை ஆடுகளங்களில் பந்து சற்று நின்று மெதுவாக வரும். நன்கு திரும்பும். அதனாலேயே பேட்டர்கள் சிரமப்படுவார்கள். பொதுவாக முன்பே முடிவுசெய்து ஒரு பெரிய ஷாட் ஆடப் போகும்போது மாட்டிக்கொள்வார்கள். ஆனால், ஜேக்ஸ் தன் ஆட்டத்தை அதற்கு ஏற்றதுபோல் சற்று மாற்றியிருக்கிறார். அவர் நன்கு காத்திருந்து விளையாடுகிறார். பேக் ஃபூட்டில் காத்திருக்கும் அவர், பந்து தனக்கு வரும் வரை நிதானமாக இருக்கிறார். அதனால் பந்தை நன்கு கணித்து, அதற்கு ஏற்ப அவர் ஷாட்டை முடிவுசெய்கிறார். டி20 கிரிக்கெட்டில் இப்படி ஆடுவது எளிதான விஷயம் இல்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் வில் ஜேக்ஸின் பேட்டிங் சராசரி 63.66 அதுமட்டுமல்லாமல் இலங்கை ஆடுகளங்களில் சேஸ் செய்வது எளிதான விஷயம் இல்லை. அங்கு டாட் பால் சதவீதம் அதிகமாக இருக்கும். அது மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். ஜேக்ஸ் அந்த நெருக்கடியான நேரங்களில் பொறுப்பை தன் தோள்களில் ஏற்றுக்கொண்டு அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தடுமாறிவிடுவார்கள். ஆனால், ஜேக்ஸ் பொறுப்பை சிறப்பாக சுமந்திருக்கிறார். பெரிய ஷாட்கள் ஆடுவது, ஸ்டிரைக் ரொடேட் செய்வது என அனைத்தையும் சிறப்பாகச் செய்திருக்கிறார். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங் இப்படியான ஒரு செயல்பாட்டைத் தான் கொடுத்தார். அதைத்தான் இந்தத் தொடரில் ஜேக்ஸ் செய்துகொண்டிருக்கிறார். 'கடினமான இடத்திலும் ஜொலிக்கிறார்' என்னைப் பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான இடம் என்றால் அது நம்பர் 6,7 தான். உங்களுக்கு அவகாசமே கிடைக்காது. அந்த இடத்தில் இருக்கும்போது முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும் என்ற தேவை ஏற்படும். அது எளிதான காரியமில்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் ஆடும் ஒவ்வொரு டாட் பாலுமே நெருக்கடியை அதிகரிக்கும். அதுவே ஓப்பனர்கள், நம்பர் 3 பேட்டர்கள் எனும்போது அந்த அவகாசம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பவர்பிளேவில் நிறைய ஃபீல்டர்கள் வட்டத்துக்கு உள்ளேதான் இருப்பார்கள். அதனால், 2,3 டாட் பால்கள் ஆடினால் கூட உடனடியாக 2,3 பவுண்டரிகள் அடித்துவிட முடியும். அதிலும் இலங்கை ஆடுகளங்களில் பந்து நின்றுவரும்போது பவுண்டரிகள் அடிப்பது எளிதே இல்லை. இந்தியாவில் இருக்கும் 'flat' ஆடுகளங்களில் அப்படி முதல் பந்தில் இருந்தே அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படி அடித்திட முடியாது. அப்படியொரு இடத்தில், அந்த பேட்டிங் பொசிஷனில் இறங்கி ஆடியதால் தான் வில் ஜேக்ஸ் தனித்துத் தெரிந்திருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நேபாளம், இத்தாலி, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். இப்படியான சூழ்நிலைகளில் ஒரு மிடில் ஆர்டர் பேட்டரால், ஒரு ஃபினிஷரால் அந்த பெரிய ஷாட்களை எளிதாக முடிவு செய்து அடித்துவிட முடியாது. நீங்கள் எந்த பௌலரை டார்கெட் செய்து ஆடப் போகிறீர்கள், எந்த பவுண்டரியை, எந்த ஏரியாவை டார்கெட் செய்யப்போகிறீர்கள், உங்களின் பிரதான ஷாட்டாக என்ன இருக்கப்போகிறது என்பது போன்ற பல விஷயங்களை நீங்கள் முடிவு செய்து அதற்கேற்பத்தான் ஆடவேண்டும். இதை மகேந்திர சிங் தோனி நிறைய செய்து பார்த்திருக்கிறோம். ஓரிரு டாட் பால்கள் ஆடினாலும் அவர் அதன்பிறகு பவுண்டரிகள் அடித்து சரிசெய்வார். அந்த அளவுக்கு துல்லியமாகக் கணக்கிடவேண்டும். இந்த இடத்தில் தான் ஜேக்ஸ் பற்றிய இன்னொரு விஷயம் என்னை மிகவும் கவர்கிறது - அவர் தற்போது தன் ரோல் மாறித்தான் இந்தக் கடினமான ஃபினிஷர் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். முன்பு டாப் ஆர்டர் பேட்டராக ஆடியவர் அவர். நீங்கள் ஒரு ஓப்பனராக, டாப் ஆர்டர் பேட்டராக ஆடிவிட்டு அதன்பிறகு வந்து மிடில் ஆர்டரில் ஆடுவது என்பது எளிதல்ல. டெஸ்ட் போட்டிகளில் கூட அது கடினம்தான். டி20 பற்றி சொல்லவே தேவையில்லை. ஓப்பனர்களுக்குக் கிடைக்கும் அவகாசம், ஃபீல்ட் செட் அப் எல்லாம் கடைசியில் வருபவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும், ஓடவேண்டும் என்ற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் தோனி, ஆந்த்ரே ரஸல் போன்றவர்களின் செயல்பாடுகள் கூடுதல் கவனம் பெறுகின்றன. அதனால் தான் அணிகள் அவர்கள் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் அணிகளுக்குச் செய்த வேலையைத்தான் ஜேக்ஸ் தற்போது இங்கிலாந்துக்கு செய்துகொண்டிருகிறார். பந்துவீச்சிலும் சிறப்பான செயல்பாடு பந்துவீச்சைப் பொருத்தவரை ஜேக்ஸ் அவ்வளவாக பந்தை தூக்கிப் போடவில்லை. மேலும், பந்தின் வேகத்தை நன்றாக மாற்றிக்கொண்டேயிருக்கிறார். இந்த வேகத்தில் தான் வரும் என்று பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. பெரும்பாலும் 'அரவுண்ட் தி ஸ்டம்ப்' வந்து பந்துவீசும் அவர், கோணங்களை (angle) மாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இலங்கையின் பெரிய மைதானங்களைக் கருத்தில் கொண்டு பந்துக்கு நிறைய சுழற்சியைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவ்வப்போது பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகியிருக்கிறது. அங்குதான் அவர் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். மிடில் ஓவர்கள் பந்துவீசுவது ஓரளவு எளிதுதான். ஆனால், பவர்பிளேவிலும் ஜேக்ஸ் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அங்குதான் இங்கிலாந்துக்கு பொட்டிகளையும் வென்று கொடுத்திருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு 14 பந்துக்கும் ஒரு விக்கெட் எடுக்கிறார் ஜேக்ஸ் பெரும் மாற்றம் ஒரு வீரராக, ஒரு ஆல்ரவுண்டராக அவர் நன்கு மெருகேறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தன் ஆட்டத்தை மாற்றியிருக்கும் விதம் அசாத்தியமானது. வில் ஜேக்ஸ் திறமை பற்றி அவர் கரியரின் ஆரம்பத்தில் இருந்தே நிறைய பேசப்பட்டது. இப்போது ஜேக்கப் பெத்தல் பற்றி எப்படிப் பேசுகிறார்களோ அதுபோல் தான் சில ஆண்டுகள் முன்பு ஜேக்ஸ் பற்றிப் பேசினார்கள். ஆனால், அது அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்தது. 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஒரு சதம் அடித்தார். ஆமதாபாத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் ரஷீத் கான் உள்பட அனைவரின் பந்துவீச்சையும் வெளுத்துக்கட்டி 41 பந்துகளில் சதமடித்தார். அப்போதுதான் அவரால் என்ன செய்ய முடியும் என்று நான் பார்த்தேன். அதேசமயம் அவரது பயணம் எளிதாகவும் இருக்கவில்லை. 2023-ல் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தம் கிடைக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டம் அவர் கற்றுக்கொள்வதற்கு நல்லதாக அமைந்திருக்கவேண்டும். அவர் அதன்பிறகு தன் சிறப்பான ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்த, இங்கிலாந்து தேர்வாளர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கான பலனை அவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். சொல்லப்போனால் அவருக்கு ஆஷஸ் தொடரில் கூட சில வாய்ப்புகள் கொடுத்தார்கள். நெருக்கடியான நேரத்தில் அங்கும் சில செயல்பாடுகளைக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற சுபாவத்தைக் காட்டினார். அந்த ஆஷஸ் செயல்பாடு அவர் இப்படி உலகக் கோப்பையில் ஜொலிப்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கேப்டன் & நிர்வாகத்தின் பங்கு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நம்பிக்கையோடு வில் ஜேக்ஸை பவர்பிளேவிலும் பந்துவீச வைக்கிறார் கேப்டன் ஹேரி ப்ரூக். ப்ரூக்கின் இந்த செயல்பாட்டுக்கு இங்கிலாந்து நிர்வாகத்தையும் கேப்டன் ஹேரி ப்ரூக்கையும் பாராட்டவேண்டும். ப்ரூக் எந்த அளவுக்கு ஜேக்ஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், அதை எந்த அளவுக்குக் காட்டுகிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் ஆஷஸ் தொடரில் இருந்தே நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் கூட பட்லர் சொதப்புவதால், அவர் இடத்தில் ஜேக்ஸை ஓப்பனராக இறக்கலாமோ என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஆனால், அப்படிச் செய்யாமல் தொடர்ந்து ஜேக்ஸை அவருக்கு முன்பு கொடுத்த ஃபினிஷர் ரோலிலேயே பயன்படுத்துகிறார்கள். அணி நிர்வாகமும், கேப்டனும் ஒரு வீரர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அது அந்த வீரரின் செயல்பாட்டில் பெருமளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது வில் ஜேக்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இங்கிலாந்தின் துருப்புச்சீட்டு உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரை வெல்லவேண்டும் என்றால் எந்தவொரு அணிக்குமே இப்படியொரு வீரர் தேவை. இங்கு நீங்கள் அடிக்கும் சதங்களோ, அரைசதங்களோ, 5 விக்கெட் 'ஹால்'கள் இங்கு முக்கியமே இல்லை. ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய, ஆட்டத்தை மாற்றக்கூடிய அந்த 30 ரன்கள், 2 விக்கெட்டுகள், மிடில் ஓவர்களில் பந்துவீசி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை மிக மிக முக்கியமானவை. இங்கிலாந்து அணிக்கு அப்படியொரு வீரர் ஜேக்ஸ் மூலமாகக் கிடைத்திருக்கிறார். இதுவரை அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தியதுபோல் இனியும் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். கிரிக்கெட் ஒரு 'கான்ஃபிடன்ஸ் கேம்' என்று சொல்வார்கள். நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சிறப்பாக ஜொலிக்க முடியும் என்பார்கள். ஜேக்ஸின் நம்பிக்கை தற்போது வானளவு இருக்கிறது. முக்கியமான நாக் அவுட் சுற்றில் இவர்தான் இங்கிலாந்தின் துருப்புச் சீட்டாக விளங்கப்போகிறார். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் 'வில் ஜேக்ஸ்'
  23. இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது? படக்குறிப்பு,இரானின் உச்ச தலைவர் மீதான இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் மற்றும் அவரது படுகொலையை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் "கடுமையான மீறல்" என்று சீனா வர்ணித்துள்ளது. கட்டுரை தகவல் பிரேர்ணா பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல்கள் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இந்த நெருக்கடியான நேரத்தில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் இரானுடன் நிற்க முடிவு செய்துள்ளன என்பதையும் உலகம் உற்று நோக்குகிறது. இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளின் ஒவ்வோர் அறிக்கையும், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், ஒவ்வொரு ராஜ்ஜீய சமிக்ஞையும் கவனமாக ஆராயப்படுகின்றன. இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களை 'ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது' என்று சீனா விவரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "இரானின் உயர்மட்டத் தலைவரின் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும்" என்று கூறியுள்ளது. "இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கவும் செய்கிறது." அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் முழு உலகிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது. சீனா தனது எதிர்வினையில் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிற்கு எதிராக எந்த இடத்திலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. சீனாவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து, நிபுணர்களும் சர்வதேச விவகார வல்லுநர்களும் இதன் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கி கட்டுரைகளை எழுதி வருகின்றனர். இந்தக் காரணங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு முன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே இதேபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது சீனா எப்படி, எந்த வார்த்தைகளில் எதிர்வினையாற்றியது என்பதைத் தெரிந்து கொள்வோம். முந்தைய மோதலில் சீனாவின் நிலைப்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சீனா தனது முதல் எதிர்வினையில் இஸ்ரேல் 'சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டது' என்று கூறியிருந்தது. ஒரு நாள் கழித்து, ஜூன் 14 அன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) இரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஜூன் 15 அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் பேசினார். சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது இரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று குறிப்பிட்டதுடன், இரானிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களையும் பொதுமக்களின் மரணங்களையும் கடுமையாகக் கண்டித்தது. சீனா தனது அறிக்கையில், "இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவை. குறிப்பாக, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது" என்று கூறியிருந்தது. அதாவது, கடந்த ஆண்டும் சீனாவின் எதிர்வினையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பது நாம் கடந்த முறையைத் திரும்பிப் பார்க்கும்போது தெரியவருகிறது. இதனால் தான் கடந்த ஆண்டும் சீனா ஏன் இவ்வாறான பதிலை அளித்தது என்ற கேள்வி விவாதப் பொருளானது. அப்போது, புது டெல்லியைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான 'அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின்' சிறப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி ஒரு கட்டுரையில், இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருந்த போதிலும், சீனா எச்சரிக்கையான மற்றும் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக எழுதினார். சீனாவின் சமநிலையான எதிர்வினைக்கான காரணங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங். தற்போது நடந்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனைக் குழுவான 'சாதம் ஹவுஸின்', மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் இணை ஆய்வாளர் அகமது அபுது, சீனாவின் இந்த கட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், "இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலுக்கு சீனாவின் எதிர்வினை, சீனா இரானைக் கைவிட்டுவிட்டது அல்லது கடினமான காலங்களில் இரானுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக அது இல்லை என்று சிலரை நம்ப வைக்கக்கூடும்" என்றும், "ஆனால் வெனிசுவேலாவில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மூலம் எண்ணெய் துறையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சீனாவின் நெருங்கிய கூட்டாளியான நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியபோது கூட, சீனா எந்தவொரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. எனவே இது சீனாவிற்குப் புதியதல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரான் குறித்து அவர் எழுதுகையில், "இரானுக்கு நேரடி ராணுவ ஆதரவை வழங்குவதை சீனா எப்போதும் தவிர்த்தே வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் 12 நாள் போரின் போது கூட, சீனா இரானுக்கு எந்தவொரு உண்மையான ராணுவ அல்லது பெரிய பொருளாதார உதவிகளையும் வழங்கவில்லை" என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னால் உள்ள இரண்டு முக்கிய காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். இரான் அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பாத சீனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானும் சீனாவும் 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சீனாவும் இரானும் விரிவான மூலோபாய பங்காளிகள் என்றும் , இருப்பினும் 2015 இரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (ஜேசிபிஓஏ) முன்னதாக இரான் மீதான ஐ.நா தலைமையிலான பொருளாதாரத் தடைகளை சீனா ஆதரித்தது என்றும் அகமது அபுது எழுதுகிறார். இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தான் எதிர்ப்பதாக சீனா பகிரங்கமாகத் தெரிவிக்கிறது. இரான் அணுசக்தி நாடாக மாறினால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கக்கூடும் என்று அது கவலைப்படுகிறது. இது நடந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கியமான கடல் வழிகள் மூடப்படலாம், இது சீனாவின் எண்ணெய் இறக்குமதியை பாதிப்பது மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் அதன் பொருளாதார நலன்களையும் பாதிக்கும். இரான் அணுசக்தி நாடாக மாறினால், சீனாவின் மற்ற போட்டியாளர்களான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்கப் போட்டியிடும், இது சீனாவிற்கு ஒரு புதிய பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தும். 'அமெரிக்காவுடன் சமநிலையான உறவுகளைப் பேண சீனா முயற்சிக்கிறது' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் செய்யக்கூடும். இரண்டாவது காரணத்தை முன்னிலைப்படுத்தி அவர் எழுதுகையில், இரானில் உள்ள ஒரு பலவீனமான ஆட்சியை சீனா தனக்கான அச்சுறுத்தலாகவும் அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான அரசாங்கம் இங்கு ஆட்சிக்கு வருவதை சீனா விரும்பவில்லை, ஆனால் தற்போதைய ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, இரானை தன்னை மேலும் சார்ந்திருக்கச் செய்ய முடியும் என்று அது கருதுகிறது. சீனா தனது நீண்டகால உத்தி சார்ந்த இலக்குகளை அடையவும் முயற்சிக்கிறது, ஆனால் அவ்வாறு செய்யும்போது, அது அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்வதில்லை. குறிப்பாக, ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமநிலையையும் நிலைத்தன்மையையும் பேண சீனா விரும்புகிறது. பிப்ரவரி 4 அன்று, டிரம்ப் மற்றும் ஜின்பிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதில் இரான், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இரான் விவகாரத்தில் ஒப்பீட்டளவில் மென்மையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற தனது முக்கிய நலன்களில் அமெரிக்காவிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கான உத்தியை சீனா பின்பற்றி வருவதை இது உணர்த்துகிறது. சீனாவின் சிக்கலான வெளியுறவுக் கொள்கை சீனா வெளியுறவுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பது இப்போது மிகவும் கடினமாகியுள்ளது என்று கூறுகிறார் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் எலாரி. இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரே கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ள அமைப்பின் கீழ் சீனா இயங்குகிறது. இத்தகைய அமைப்பில் வெளியுறவுக் கொள்கை என்பது மிகவும் சிக்கலானது" என்கிறார். "இரான் மீதான சீனாவின் அணுகுமுறை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இது பேச்சுவார்த்தை, இறையாண்மை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால், கொள்கை ரீதியான வலியுறுத்தல் மட்டுமே பிராந்திய நெருக்கடிகளைத் தீர்த்துவிடுமா? என்பது தான் கேள்வி." "கடந்த 30–35 ஆண்டுகளாக, சீனா தன்னை ஒரு பன்முனை உலக ஒழுங்கின் ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தனக்கு வேறுபட்ட உலக ஒழுங்கு வேண்டும் என்று அது மீண்டும்மீண்டும் கூறி வருகிறது. ஆனால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்படும் போது, அதன் செயல்பாடு வரம்புக்குட்பட்டதாகவே தோன்றுகிறது." "இரான் விவகாரம் இந்த வரம்பை எடுத்துக் காட்டுகிறது, அங்கு சீனாவின் பொருளாதார நலன்கள் பெரியவை, ஆனால் அரசியல் செல்வாக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது"என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீபத்திய ஆண்டுகளில் இரான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சீனா முயற்சித்துள்ளது (சீன அதிபர் ஜின்பிங்கின் கோப்புப் புகைப்படம்) தற்போது, சர்வதேசத் தடைகளால் தத்தளிக்கும் இரானிய பொருளாதாரத்திற்கு சீனா ஒரு பெரிய ஆதரவாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியை சீனா வாங்கியது. இருப்பினும், சீனாவுக்கு மலிவான விலையில் எண்ணெய் கிடைப்பதால், இதன் நன்மைகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல. ஆனால் பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இரான் உறுப்பினராவதை ஆதரித்ததன் மூலம் சர்வதேச அளவில் இரான் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா முயன்றுள்ளது. கூடுதலாக, 2021இல் இரு நாடுகளுக்கும் இடையே 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தம் கையெழுத்தானது. அரவிந்த் எலாரியின் கூற்றுப்படி, சீனா இரானுக்கு ஏவுகணை பாகங்கள் மற்றும் எரிபொருளை வழங்கி வருகிறது. பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்திலும் சீனா இரானுக்கு உதவியுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டங்கள் அணு ஆயுதங்களை மட்டுமல்லாமல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரான் நேரடி ராணுவ அழுத்தத்தையும் பிராந்திய பதற்றங்களையும் எதிர்கொள்ளும் சூழலில், சீனாவின் பங்கு ஒப்பீட்டளவில் வரம்புக்குட்பட்டதாகவும் எச்சரிக்கையுடனும் காணப்படுகிறது. சீனா தொடர்ந்து பொருளாதார மற்றும் ராஜ்ஜீய ஆதரவை வழங்குகிறது, ஆனால் வெளிப்படையான ராணுவ ஆதரவையோ அல்லது நேரடி மோதலையோ தவிர்க்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது?
  24. உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழ‌க்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.
  25. இத்தாக்குதலைப் பார்க்கும்போது செஞ்சோலைதான் மனதில் வருகிறது. இஸ்லாமியப் புரட்சிகர ராணுவ முகாமிற்கு அருகில் பாடசாலை இருந்தது, அதனாலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் அபிமானிகளோ ஈரானின் ஏவுகணையொன்று இலக்கை விட்டு விலகிச் சென்று சொந்த நிலப்பகுதியில் வீழ்ந்தபோதே இது நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது இஸ்ரேலின் தாக்குதலலாகத்தான் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  26. ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி! Mar 3, 2026 - 04:57 PM அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.